பாசன மேலாண்மை

தென்னங்கன்று நட்டதிலிருந்து இரண்டு வருடங்கள் வரை,  ஒரு கன்றுக்கு 45  லிட்டர் வீதம்  கோடை காலங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
ஏதேனும்  ஒன்றை "கிளிக்" செய்யவும்...

தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளுக்கான நீர்பாசன  முறை:

மாதங்கள்

சாதாரண நிலை
(நல்ல மகசூல் பெற)

மிதமான நீர்த்தட்டுப்பாடு நிலை

அதிகமான நீர்த் தட்டுப்பாடு நிலை

(அ) சொட்டு நீர்ப் பாசனம்:

பிப்ரவரி-மே

ஜனவரி, ஆகஸட் மற்றும் செப்டம்பர்
 
ஜுன் மற்றும் ஜுலை அக்டோபர்-டிசம்பர்

(ஆ) தொட்டி நீர் பாசன முறை:
பிப்ரவரி -மே
 

ஜனவரி,  ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்
 
ஜுன் மற்றும் ஜுலை அக்டோபர் மற்றும் டிசம்பர்

 

65 லி/ நாள்

55 லி/ நாள்

 

45 லி / நாள்



410 லி/ 6 நாட்களுக்கு


410 லி/ 7 நாட்களுக்கு


410 லி/ 9 நாட்களுக்கு

 

45 லி /நாள்
 

35லி/நாள்

 

30 லி /நாள்

 

22 லி/ நாள்
 

18 லி/ நாள்

 

15 லி /நாள்

 

 

 

தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதிக்கான நீர்பாசன முறை:

 மாதங்கள்

சாதாரண நிலை
(நல்ல மகசூல் பெற)

மிதமான நீர்த்தட்டுபாடு நிலை

அதிகமான நீர்த்தட்டுப்பாடு நிலை

அ) சொட்டு நீர்ப் பாசன முறை:
மார்ச்-செப்டம்பர்

அக்டோபர்-பிப்ரவரி

ஆ) தொட்டி நீர்ப் பாசன முறை:

 மார்ச்-செப்டம்பர்

 

அக்டோபர்-பிப்ரவரி

 

80 லிட்டர்/ நாள்

50 லிட்டர்/ நாள்

  


410 லிட்டர்/ 5 நாட்களுக்கு


410  லிட்டர் /5 நாட்களுக்கு

 

55 லிட்டர்/ நாள்

35 லிட்டர்/ நாள்

 

 

27 லிட்டர்/ நாள்

18 லிட்டர்/ நாள்

       

தொட்டியில் பாய்ச்சக் கூடிய நீரின் அளவிலிருந்து கொண்டே இருந்து இழப்பை தடுக்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள நீரின் அளவிலிருந்து 30 முதல் 40 சதவீகித அளவு நீரை பாய்ச்ச வேண்டும்

ஒற்றை வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சுவது தவறான முறை ஆகும்.  முதன்மை மற்றும் பக்க வாய்க்கால் மூலம் நீர்பாய்ச்சுவதே சரியான முறையாகும்.

கோடை காலங்களில்/ மாதங்களில் மரத்தைச் சுற்றியுள்ள தொட்டியில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு நீர் பாய்ச்ச வேண்டும்.

தென்னைக்கு தேவையான நீரின் அளவு:

அளவியல் பண்புகள்

 

மண் நயம்/ மண் பதம்

மணற்
பாங்கான
 மண்

மணல் கலந்த
பசலை மண்

வண்டல்மண்

வண்டல்
களிமண்

பயிருக்கு கிடைக்கும்
நீர் (செ.மீ/மீ)  


ஒரு மரத்திற்கு ஒரு பாய்ச்சலுக்குத் தேவையான நீரின் அளவு (1.8மீ ஆழமுள்ள தொட்டியில் உள்ள மரத்திற்கு தேவையான நீரின் அளவு லிட்டரில்)

நீர்ப்பாசன இடைவெளி:

திருசூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களின் வடகிழக்கு பகுதி தவிர கேரளாவின் அனைத்துப் பகுதிகள்.

திருச்சூர் மற்றும் பாலக்காட்டின் வடகிழக்குப் பகுதிகள்

8

 

      
600

 

 

3-4

 

2-3

12

 

       
900

 

 

5

 

3-4

17

 
    

1300

 

 

7-8

 

5-6

21

 

 
1600

 

 

9

 

6-7

 குறிப்பு: கடற்கரை மணற்பாங்கான பகுதியில் நீர்ப்பாய்ச்சுவதற்கு கடல் நீர் உபயோகிக்கப்படுகிறது.

  • இளம் நாற்றுகள் மற்றும் இளம் தென்னங்கன்றுகளுக்கு இரண்டு வருடங்கள் வரை கடல்நீரை பாய்ச்சக்கூடாது.
  • இறவைப் பயிர் தோட்டங்களில் நீர்ப்பாசனத்திற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது மகசூலின் அளவு வெகுவாக குறைவதோடு தென்னைகளின் இயற்கை நிலையையும் பாதிக்கிறது.  ஆகவே நல்ல மகசூலுக்கு முறையான மற்றும் ஒழுங்கான நீர்ப்பாசனம் அவசியமாகும்.
  • தென்னைக்கு சொட்டு நீர்ப்பாசனமே மிக உகந்த பாசன முறையாகும். இம்முறை நீரின் அளவு,  ஆட்களின் தேவை மற்றும் ஆற்றலின் அளவைக் குறைக்கிறது.

நீர்ப்பாசனம் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் முறைகள்:

  • கோடை நீர்ப்பாசனத்திற்கு தென்னை மரங்கள் நல்ல பலனை தரும்.  பெண் மலர்களின் எண்ணிக்கை (அ) பெருக்கம் மற்றும் காய் பிடிப்புத் தன்மை  நீர்ப்பாசனத்தைப் பொருத்து  அதிகரிக்கும்.  மடற்பூங்கொத்து உருவாகுவதிலிருந்து தென்னை கொப்பரைகள் முதிர்வதற்கு சுமார் 42 மாதங்கள் ஆகும்.  ஆகவே நீர்ப் பாசனத்தின் நன்மையை நம்மால் மூன்று வருடங்களுக்கு பிறகே உணர முடியும்.
  • தென்னை நார் மற்றும் தென்னை நார்க்கழிவுகளை மரக்குழியில் இடுவது, நீரை சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
  • தென்னை நார் மற்றும் தென்னை நார்க்கழிவுகள் பஞ்சு போன்று நீரினை உறிஞ்சி மண்ணின் ஈரப்பதத்தை அதன் எடையை போன்று 6 முதல் பத்து மடங்கு வரை தக்க வைத்துக் கொண்டு வறண்ட சூழ்நிலையில் மெதுவாக தென்னை மரங்களின் வளர்ச்சிக்கு இந்த நீரை வெளிக் கொணர்வதன் மூலம் உதவுகிறது.
  • தென்னை நார் மற்றும் தென்னை நார்க்கழிவுகளின் மக்கும் தன்மை தாமதமாக இருப்பதால் அதன் பயன் குறைவதற்கு முறையே 4-6 வருடங்கள் மற்றும் 8-10 வருடங்களாகும்.  இவை மட்கும்போது மண்ணின் சாம்பல் சத்தின் அளவு அதிகரிக்கிறது.  இந்த தென்னை நார்க்கழிவுகளை தென்னை மரங்களுக்கிடையே தோண்டப்பட்ட குழி/அகண்ட பள்ளங்களில் மரத்திலிருந்து சுமார் 0.6 மீ மற்றும் 1.8 மீ துாரத்தில் சமமான உயரத்தில் இட வேண்டும்.  இந்த தென்னை நார் மற்றும் தென்னை நார்க் கழிவுகளை ஒன்றுவிட்ட ஒன்று அடுக்குகளில் இட வேண்டும்.      
  • ஒரு தென்னை மரத்திற்கு ஒரு நாளைக்கு தேவையான நீரின் அளவு சுமார் 55 முதல் 120 லிட்டராகும்.  ஆனால் நீர்ப்பாசனத்துக்கு தேவையான நீரின் அளவு மிகக் குறைவாக உள்ள காரணத்தினால்,  சொட்டு நீர்ப்பாசனத்தை பின்பற்றுவதே இயற்கை ஆதாரத்தை சிக்கனமாகவும் சிறந்த முறையிலும் உபயோகிப்பதற்கு உரிய வழியாகும்.
  • சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 30-40 சதவிகித நீரை சேமிப்பதோடு பாத்தி பாசனத்தை ஒப்பிடுகையில் 30-40 சதவிகிதம் அதிக மகசூலை பெற முடியும்.   அது மட்டுமல்லாமல் களைப்பயிர்களின் நீர் மற்றும் உரச்சத்துகளுக்கான போட்டியும் குறைக்கப்படுகிறது.  ஆகவே சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை சிக்கனமாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பலனையும் அடைய முடியும்.

 சொட்டு நீர்ப் பாசனம்:


  • பழமையான நீர்ப்பாசன முறைகளான பரவல் நீர் பாசனம் மற்றும் பாத்தி பாசனம் ஆகியவற்றின் மூலம் நிறைய தண்ணீர் விரையமாகுவதால் பயன்தரத்தக்க நீர்ப்பாசனத்தின் அளவு வெறும் 30 முதல் 50 சதவிகிதமே ஆகும்.  அது  மட்டுமல்லாமல் இந்த நீர்ப்பாசனத்திற்குத் தேவையான வேலையாட்கள்  மற்றும் ஆற்றலின் அளவு மிக அதிகமாகும்.
  • இந்த பழமையான நீர்ப்பாசன முறையில் நீரின் பற்றாக்குறை, வேலையட்களின் சம்பள உயர்வு  மற்றும் ஆற்றல் ஆகியவை தடையாக உள்ளன.

சொட்டு நீர்ப் பாசனத்தின் பயன்கள்:

  • நீர் வீணாவதை தடுக்கலாம்.
  • சொட்டு நீர்ப்பாசனம் மூலம் மரத்தின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.
  • சொட்டு நீர்ப்பாசனம் வேலையாட்களின் தேவை மற்றும் ஆற்றலின் அளவை குறைக்கிறது.  சொட்டு நீர்ப்பாசனமானது குறைந்த நீர்பிடிப்புத் திறன் கொண்ட நிலங்கள்,  சரிவான நிலப்பகுதிகள்,  சமதள மற்றம் மணற்பாங்கான நிலப் பகுதிகளும் மிகவும் ஏற்றதாகும்.
  • களைகளை கட்டுப்படுத்துவதுடன் பயன்தரத்தக்க உரத்தின் அளவு அதிகரிக்கிறது.
  • தென்னைக்கு சுமார் 3-4 நீர் சொட்டிகள் தேவைப்படுகிறது. தென்னை மரத்தின் நான்கு திசைகளிலும் ஒரு மீட்டர் துாரத்தில் 30 செ.மீ நீள,  அகல,  ஆழ குழிகளை எடுத்து அதில் சிறிதளவு மக்கிய தென்னை நார்க்கழிவு (அ)      நெற்பதரை இட வேண்டும்.  அதில் 40 செ.மீ நீளம் மற்றும் 16 மி.மீ விட்டம் கொண்ட பி.வி.சி குழாயினை சாய்வான கிடை மட்டத்தில் வைத்து அதில் சொட்டு நீர்ப்பாசன சொட்டிகளை வைத்து நீர் சொட்டுவதை 30 செ,மீ ஆழத்திற்கு செல்லும்படி அமைக்க வேண்டும்.
  • சொட்டு நீர்ப்பாசனத்தை அமைப்பதற்கான ஆரம்ப கால செலவு ஒரு மரத்திற்கு சுமார் 130 முதல் 150 ரூபாய் ஆகும்.  இதே போல் ஒரு ஹெக்டேருக்கு சொட்டு நீர்ப்பாசனத்தை அமைக்க சுமார் 23000 முதல் 26000 ரூபாய் செலவாகும்.

நீர்வழி உரமிடல்:

  • நீருடன் (அ) நீரின்  வழியே உரமளிக்கும் முறை ஒரு வகையான உரமிடும் முறையாகும்.  இதில் சொட்டு நீர் அமைப்பின் மூலம் உரமானது சொட்டு நீருடன் கலந்து அளிக்கப்படுகிறது. 
  • இம்முறையின் மூலம் உரக்கரைசலானது சமமாக (அ) சரிசமமாக கிடைக்கிறது. 
  • இம்முறையில் திரவ உரக்கரைசல்,  நீரில் கரையும் தன்மை கொண்ட உரக் கலவைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 
  • இதனால் விரையம் தவிர்க்கப்படுவதுடன், நுண்ணுாட்டத்தின் அளவு அதிகரிப்பதுடன் உரக் கொள்திறன் சுமார் 80-90 சதவிகிதம் அதிகரிக்கிறது.

வெவ்வேறு உரமிடுதல் முறைகளின் பயன்தரத் தக்க உரத்தின் அளவு:

ஊட்டச் சத்துக்கள்

உர உபயோக திறன்

 

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

மண்ணில் இடுதல்

நீர்வழி இடுதல்


30-50

20

50


95

45

80

 

நீர்வழி உரமிடுதலின் பயன்கள்:

  • நீர்வழி உரமிடுதலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரானது செயல்திறன் மிக்க வேர்ப்பகுதியில் கிடைப்பதால் தென்னையின் உறிஞ்சும்/உட்கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
  • நீர் மற்றும் உரங்கள் மூலம் சரிவிகிதமான அளவில் எல்லா மரங்களுக்கும் கிடைக்கிறது.  இதனால் மகசூல் சுமார் 25-50 சதவிகிதம் அதிகரிக்கிறது.
  • உரக் கொள்திறனானது நீர்வழி உரமிடுதலின் மூலம் சுமார் 80-90 சதவிகிதம் அதிகரிக்கிறது.  இதன்மூலம் சுமார் 25 சதவிகித ஊட்டச்சத்து வீணாவதை தடுக்கலாம்.
  • இம்முறையின் மூலம் குறைந்த அளவு நீர்,  உரம்,  நேரம்,  வேலையாட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை சேமிக்கலாம்.

நீர்வழி உரமிடுதலில் பயன்படுத்தப்படும் உரங்கள்:

  • யூரியா, பொட்டாஷ் மற்றும்  எளிதில்/விரைவில் நீரில் கரையக்கூடிய உரக் கலவைகளை உபயோகிக்கலாம்.  
  • சூப்பர் பாஸ்பேட் உரங்களை நீர்வழி உரமிடுதலுக்கு உபயோகிக்கக் கூடாது.  ஏனெனில் இந்த உரமானது படியும் தன்மை கொண்டது.  ஆகையால் நீர்வழி உரமிடுதலுக்கு பாஸ்பாரிக் அமிலம் மிகவும்  ஏற்றதாகும்.
  • சிறப்பு உரங்களான மோனோ அம்மோனியம் பாஸ்பேட், பாலிஃபீட் (தழை,  மணி மற்றும் சாம்பல் சத்து) மல்டி.கே (தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து) பொட்டாசியம் சல்பேட் (சாம்பல் சத்து மற்றும் கந்தகம்) ஆகியவை நீர்வழி உரமிடுதலுக்கு மிகவும் உகந்ததாகும்.  இரும்பு,  மாங்கனீசு,  தாமிரம்,  துத்தநாகம், போரான் மற்றும் மாலிப்பிடினம் ஆகியவை சிறப்பு உரங்கள் மூலம் அளிக்கப்படுகிறது.

 நீர்வழி உரமிடுதலுக்கு பொதுவாக உபயோகிக்கப்படும் உரங்கள்:

பெயர்

தழை, மணி மற்றும் சாம்பல் சத்தின் அளவு

கரையும் தன்மை (கிராம்/லிட்) 20 செல்சியஸ் வெப்ப நிலையில்

அம்மோனியம் நைட்ரேட்

அம்மோனியம் சல்பேட்

யூரியா

மோனோ அம்மோனியம் பாஸ்பேட்

டை அம்மோனியம்
பாஸ்பேட்

பொட்டாஷியம் குளோரைடு

பொட்டாஷியம் நைட்ரேட்

பொட்டாஷியம் சல்பேட்

மோனோ பொட்டாஷியம் பாஸ்பேட்

பாஸ்பாரிக் அமிலம்

34-0-0

21-0-0

46-0-0

12-61-0

18-46-0


0-0-60

13-0-44

0-0-50

0-52-34

0-52-0

1830

760

1100

282

575


347

316

110

230

457


நீரில் கரையக்கூடிய சிறப்பான உரங்கள்

பெயர்

தழைச் சத்து
%

மணிச் சத்து
%

சாம்பல் சத்து
%

பாலி பீட்
பாலி பீட்
பாலி பீட்
 பாலி பீட்
 பாலி பீட்
பாலி பீட்
எம்.ஓ.பி
மல்டி.கே
எஸ்.எஸ்.பி
எஸ்.எஸ்.பி

19
20
11
16
19
15
12
13
0

19
20
42
8
19
15
61
0
52
0

19
20
11
24
19
30
0
46
34
50

        
நீர்வழி உரமிடுதலுக்கு பயன்படும் உபகரணங்கள்:

  • வென்சுரி (உரநீர் செல்லும் குழாய்)
  • உரக்கலவைத் தொட்டிகள்
  • உரக்கலவை பம்புகள்

வென்சுரி (உரநீர் செல்லும் குழாய்):

  • நீர் அழுத்த வேறுபாடானது முதன்மை நீர்க் குழாயின் கட்டமைப்பின் மூலம் ஏற்படும்.  இதன் மூலம் தேவையான அளவு உரக்கலவையானது திறந்த வெளித் தொட்டியில் இருந்து நீரோட்டப் பாதையின் வழி உறிஞ்சப்படுகின்றது.
  • இதனைக் கையாளுவது மிக எளிதாக இருப்பதுடன்  சிறு விவசாயிகள் கூட இதனை வாங்கி பயன்படுத்துவதற்கு ஏதுவாக குறைந்த விலையில் கிடைக்கிறது.  இந்த உபகரணம் மிகச்சிறிய பரப்பளவில் உபயோகிப்பதற்கு கூட ஏதுவாக உள்ளது.

உரக்கலவைத் தொட்டிகள்:

  • உரக்கலவையை கொண்ட தொட்டியானது நீர் செல்லும் குழாயுடன் அதன் வாய்ப் பகுதியில் இணைந்துள்ளது.
  • நீர்ப்பாசனத்தின் ஒரு பகுதி நீரானது தொட்டியிலுள்ள உரக்கரைசலுடன் கலக்கப்பட்டு மீண்டும் முதன்மை நீர்க்குழாய் வழியாக இணைக்கப்படுகிறது.
  • நீர்த்தொட்டியிலுள்ள உரத்தின் பரிமான அளவு படிப்படியாக குறைகிறது.

 உரக்கலவை பம்புகள்:

  • உரக்கலவை பம்புகள் உரக்கட்டுப்பாட்டு அமைப்பின்  நியம்/திட்டக் காரணிகள் ஆகும்.
  • உரக்கரைசலானது சீரழுத்தமற்ற தொட்டியில் காணப்படும்.  இது நீர்ப்பாசன நீருடன் சரியான/தேவையான விகிதத்தில் கலக்கப்படுகிறது.
  • இதன்மூலம் ஒவ்வொரு மரத்திற்கும் தேவையான உரத்தின் அளவு சரியான விகிதத்தில் கிடைக்க ஏதுவாக வழிவகை செய்யப்படுகின்றது.

நீர்ப்பாசன உபகரணங்களின் விலை விபரம்:

வ.எண்

உரப்  பாசன உபகரணங்கள்

விலை

1.
2.
3.

வென்சுரி வகை
உரக்கலவை தொட்டிகள்
உரக்கலவை பம்பு - உட்செலுத்திகள்

1250
3500
12000

 

  • ஒவ்வொரு  தென்னை மரத்திற்கும் ஆண்டிற்கு தழை,  மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 560:320:1200 கிராம் என்ற அளவில் ஒரு மாத இடைவெளியில் அளிப்பது அவசியம். நீரில் கரையக்கூடிய உரங்களை உரப்பாசனம் மூலம் அளிப்பதால் மகசூல் கூடுகிறது.
  • தென்னைக்குத் தேவையான உர அளவிலிருந்து 50 சதவீகித உரத்தை உரப் பாசனத்தின் மூலம் கொடுப்பதால் 100 சதவிகித மகசூலை பெறலாம்.
  • தென்னைக்கு தேவையான உரமானது பக்க வழித் தொட்டி வழியாக கொடுக்கப்படுகிறது.
  • உரங்கள் முறையே 70 கி யூரியா,  60 கிராம் அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் 170 கி மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகியவை ஒரு மரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களாகும்.  (இதேபோல் இந்த உரங்களானது கேரளப் பகுதிகளுக்கு சுமார் 6 முறை மாத இடைவெளியில் டிசம்பர்-மே மாதம் வரை கொடுக்கப்படுகிறது).
  • பாஸ்பரஸிற்கு பதிலாக பாஸ்பாரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.


வறட்சி நிர்வாகம் மற்றும் மண்ணின் ஈரப்பதப் பாதுகாப்பு:

  • தென்னை வருடம் முழுவதும் காய்க்கக்கூடிய பயிராகும்.  ஆகவே தென்னையின் வளர்ச்சிக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது.
  • வேர்கள் ஊட்டச்சத்தை உறுஞ்சுவதற்கு மண்ணின் ஈரப்பதம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
  • மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க நிலப்போர்வை  ஒரு முக்கியமான முறையாகும். வடகிழக்குப் பருவ மழைக்கு தென்னை மரத்தின் வட்டப்பாத்தியில் பசுந்தாழ் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களையிட்டு/உலர்ந்த இலைகளையிட்டு மூடவேண்டும்.  நிலப்போர்வையானது மண்ணின் அங்ககப் பொருளை அதிகப்படுத்துவதுடன் மண்ணின் வெப்பத்தைத்தன்மையையும் குறைக்கிறது.  கோடை காலங்களில் தென்னந்தோப்பிலுள்ள மண்ணில் எந்த பணியையும் செய்யாமல் அப்படியே பாதுகாக்க வேண்டும்.
  • சமமான நிலங்களில் மழைக்காலங்களில் பண்ணைக் குளங்கள் அமைத்து மழைநீரை சேமிப்பதால் நிலத்தடி  நீரின்  அளவு அதிகரிக்கிறது.
  • தாழ்வான பகுதிகளில் சமவாய்ப்பு வரப்பு அமைத்து அதன் மூலம் பண்ணைக்குளங்கள் அமைத்து நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கலாம்.
  • மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வயதான ஓலைகளை ஏறத்தாழ உச்சியில் உள்ள மூன்று (மட்டை) ஓலைகளை விடுத்து மீதமுள்ள ஓலைகளை வெட்டிவிடுவதால் இலைகள் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்.  முதல் இரு வருடங்களுக்கு போதுமான அளவு நிழலை தர வேண்டும்.  மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்புக் கரைசலை சுமார் 2-3 மீட்டர் உயரம் வரை இடுவதன் மூலம் கோடை காலங்களில் கோடை வெப்பத்தினை குறைக்க முடியும்.

தென்னை ஓலைகள்,  உரிமட்டைகள், நார்க்கழிவுகளைக் கொண்டு நிலப்போர்வை அமைத்தல்: தென்னை மரத்தைச் சுற்றி 1.8 மீட்டர் ஆரவட்டப்பாத்தியில் தென்னையிலிருந்து கிடைக்கக் கூடிய ஓலைகள்,  உரிமட்டைகள்,  நார்க்கழிவுகள் மற்றும் மட்டைகளை சிறு துண்டுகளாக மண்ணிலிட்டு மூட வேண்டும்.  இதில் உரிமட்டையின் குழிப்பகுதி மேல் நோக்கியவாறு சுமார் 100 மட்டைகள்,  15 தென்னை ஓலைகள் மற்றும் தென்னை நார்க் கழிவுகளை சுமார்  10 செ,மீ உயரத்திற்கு இடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை கோடைக்காலங்களில் பாதுகாக்கலாம்.

உரிமட்டை மற்றும் தென்னை நார்க்கழிவுகளை மண்ணிலிட்டு மூடுதல்/புதைத்தல்: தென்னையில் வறட்சியைக் கட்டுப்படுத்த மற்றும் குரும்பை உதிர்வதை தடுக்க 100 உரிமட்டைகளின் குழிப்பகுதி மேல் நோக்கியவாறும் மேலும் 25 கிலோ தென்னை நார்க்கழிவுகளையும் வட்டப்பாத்தி வெளிப்புறத்தில் சுமார் 30 செ.மீ அகலம், 60 செ.மீ ஆழம் மற்றும் 1.5-2.0 மீட்டர் ஆழமுள்ள குழியில் இட வேண்டும்.  இந்த உரிமட்டைகளை தென்னை மரங்களின்  இருவரிசைகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சுமார் 45 செ.மீ ஆழம் மற்றும் 150 செ.மீ அகலமுள்ள ஆரவட்டப் பாத்தியில் இடும்போது இந்த மட்டைகள் மழைநீரை உறுஞ்சி சேகரித்து பின்னர் மரத்திற்கு கொடுக்கிறது.  இவ்வாறு செய்வதன் மூலம் சுமார் 5-7 வருடங்கள் வரை பயனடைய முடியும்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்