தென்னை - சாகுபடி முறைகள்

ஏதேனும்  ஒன்றை "கிளிக்" செய்யவும்...

 

செம்பொறை மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் உகந்தவை. ஆழமான (அதாவது 1.5 மீ ஆழத்திற்கு குறைவின்றி) வடிகால் வசதியுடன் கூடிய கடின மண்ணினை/மண்னுள்ள பகுதியை தேர்வு செய்ய வேண்டும். வடிகால் வசதியற்ற மண்ணினை தேர்வு செய்யக்கூடாது. மேற்புற மண்ணுடன் கூடிய கடின பாறை, நீர் தேங்கும் மற்றும் கடின களிமண் வகைகளை தவிர்ப்பது நல்லது. தென்னை சாகுபடிக்கு குறைந்தபட்ச ஆழமான (1.2மீ) மற்றும் ஓரளவு நன்கு நீரை தக்க வைக்கும் திறன் கொண்ட மண்வகையானது உகந்தது.

மேலும் நிலத்தின் நீரை தக்க வைக்கும் திறன் மணல் மற்றும் களிமண்ணை அடுத்தடுத்த அடுக்குகளாக குவிப்பதனால் அதிகரிக்கிறது. சீரான (அ) பரவலான மழை அல்லது நீர்ப்பாசனத்துடன் கூடிய முறையான ஈரப்பதம் மற்றும் போதுமான அளவு வடிகால் வசதி ஆகியவை தென்னைக்கு இன்றியமையாதவை. அமிலக்காரத் தன்மை 5.2 முதல் 8.6 வரை கொண்ட மண்ணில் தென்னை நன்கு வளரக்கூடியது.

மேலே செல்கமேலே செல்க

நடவிற்கு முன் நிலம் தயாரித்தலானது நில அமைப்பு, மண்னின் வகை மற்றும் இதர சுற்றுப்புற சூழ்நிலைக் காரணிகளை பொறுத்தது. நடவிற்கு ஏற்ற இடமானது சுத்தப்படுத்தப்பட்டு, உரிய இடங்களில் நடவிற்கான குழிகளை குறியிட்டு இருத்தல் வேண்டும். சரிவான நிலமாக இருந்தால், மண் அரிப்பை தடுப்பதற்கான மற்றும் மண்ணை பாதுகாக்கும் முறைகளை கையாள வேண்டும். உயர்மட்ட நிலத்தடி நீராக இருப்பின் சிறு குன்று/மண்மேடுகளில் கன்றுகளை நடுவது சிறந்தது. சரிவு அல்லது சமச்சீரற்ற நிலங்களில் சமதள வரப்புகளை அமைத்தல் வேண்டும். கீழ்மட்ட மற்றும் நெல் வயல்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் மேல் குறைந்த பட்சம் 1மீ உயரம் வரை மணல் மேடுகளை உருவாக்குதல் வேண்டும். சீர்படுத்தப்பட்ட கயல் இடங்களில் நடவானது நிலவரப்புகளில் செய்யப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

பல்வேறு முறையான நடவினை பின்பற்றினாலும் தகுந்த முறையினை தேர்ந்தெடுத்தல் மண், காலநிலை, கன்றுகளின் வகையைச் சார்ந்தது. தகாத முறையை பின்பற்றினால் செடியின் பாகங்கள் மற்றொன்றின் மீது சாய்ந்தும் செடிகளுக்கிடையே நீர், ஓளி, ஊட்டச்சத்திற்காக போட்டியும் நீரின் சமச்சீரற்ற பகிர்ந்தளிப்பும் உருவாகி அதன் விளைவாக செயல்பாடு குறைந்து காணப்படும். சதுர முறை, செவ்வக முறை, முக்கோண முறை, வேலி முறை, சமவாய்ப்பு முறை ஆகிய நிலம் வடிவமைத்தல் முறைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பின்படுத்தப்பட்டு வருகின்றன.

1.சதுர நில வடிவமைப்பு = S/L2
S -  ஓரலகு மேற்பரப்பு
L -  சதுரமாதிரியின் ஒரு பக்கம்

2. செவ்வக நில வடிவமைப்பு = S/L1 x L2
இங்கு S - ஓரலகு மேற்பரப்பு
L1-செவ்வகத்தின் குட்டையான பக்கம்
L2-செவ்வகத்தின் நீளமான பக்கம்

3. முக்கோண நில வடிவமைப்பு = S/d2 x 0.866
S - ஓரலகு மேற்பரப்பு
d - முக்கோண அமைப்பின் பக்க நீளம்

4. வேலி முறை = N x 100,000,000/Y (x +z)
N - ஒரு வேலியில் உள்ள வரிசை எண்ணிக்கை
Y - ஒரு வரிசையில் தென்னங்கன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி
x - வேலிகளுக்கு இடையே உள்ள இடைவெளி
z - வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளி

குறிப்பு: இடைவெளி செ.மீட்டரில்

மேலே செல்கமேலே செல்க

1. தமிழ்நாடு: நெட்டை இரகங்களுக்கு 25 x 25 அங்குலம் (7.5 x 7.5 மீ) என்ற  இடைவெளியுடன் ஒரு எக்டருக்கு 175 கன்றுகள் என்ற விகிதத்திலும் வீரிய ஒட்டு இரகங்களுக்கு (8.5 x 8.5 மீ) என்ற இடைவெளியும் சிறந்தது. குட்டை இரகங்களுக்கு (6.5 x 6.5 மீ) உகந்ததாகும். நிலத்தின் ஓரங்களில் கன்றுகளுக்கிடையே 20 அங்குலம் என்ற இடைவெளிகளில் ஒரு வரிசையில் நட வேண்டும்.

          குறிப்புகள்

        இடைவெளி

1. குட்டை இரகங்கள்
2. நெட்டை இரகங்கள்
3. வீரிய ஒட்டு இரகங்கள்

6.5 x 6.5 மீ  (20’ x  20’)
7.5 x 7.5 மீ   (25’ x 25’)
8.5 x 8.5 மீ   (26’ x 26’)


2. கேரளம்

        நடவு முறை

       இடைவெளி

தோராயமான கன்றுகளின்
எண்ணிக்கை\ எக்டர்

1. முக்கோண முறை

2. சதுர முறை


3. ஒற்றை வேலி
முறை

 

  


4. இரட்டை வேலி
முறை

7.6 மீ

7.6 x 9 மீ  (7.6 x 7.6 மீ,
8 x 8 மீ, 9 x 9 மீ)

கன்றுகளுக்கிடையே 5 மீ
மற்றும் வரிசைகளுக்கிடையே
9 மீ இடைவெளி (அ)
கன்றுகளுக்கிடையே 6.5 மீ,
வரிசைகளுக்கிடையே 9 மீ
இடைவெளி

கன்றுகளுக்கிடையே 5 மீ
ஜோடி வரிசைகளுக்கிடையே
9 மீ இடைவெளி (அ)
கன்றுகளுக்கிடையே 6.5 மீ மற்றும்
ஜோடி வரிசை களுக்கிடையே 9 மீ

198

120-170

 

220

 

 

 

-


குறிப்பு: வேலி முறையிலான நடவில் வரிசைகளை வடக்கு தெற்கு திசைகளிலும்,  கன்றுகளை முக்கோண முறையிலும் நடுதல் வேண்டும்

3. கர்நாடகா:

கன்றுகளின் எண்ணிக்கை

இடைவெளி

கன்றுகள்/ எக்டர்

1. நெட்டை இரகங்கள்
(தெற்கு மற்றும் மலைப்பிரதேசம்)


2. நெட்டை இரகங்கள் (கடற்கரை பகுதி)

3. குட்டை மற்றும் வீரிய ஒட்டு
இரகங்கள்  (தென் உலர் பிரதேசம் மற்றும
் மலைப்பிரதேசம்)

4. குட்டை மற்றும் வீரிய ஒட்டு
இரகங்கள்   (கடற்கரைப் பகுதி)

9 x 9 மீ

 

8.2 x 8.2 மீ


7.5 x 7.5 மீ

 

7 x 7 மீ

 

125

 

149


178

 

204


மேலே செல்கமேலே செல்க

Planting 1 Planting 2 Planting 3
தமிழ்நாடு:
 3' x 3' x 3' என்ற அளவில் குழிகள் தோண்ட வேண்டும். வெள்ளை எறும்பின் தாக்கத்தை குறைக்க லிண்டேன் 1.3 சதவிகிதத்தை குழிகளில் தெளிக்க வேண்டும். இவ்வாறு எடுத்த குழிகளில் 60 செ.மீ வரை மக்கிய தொழு உரம் செம்மண் மற்றும் மணலை சமமான விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். குழியின் நடுவில் மண் கலவையை நீக்கி வேர்களை நீக்கி கன்றினை நடவேண்டும். தேங்காய் மண்ணில் புதைத்து காணும் வகையில் நட்டு மண்ணை கெட்டியாக காலில் மிதித்து பின்னர் தென்னங்கீற்றை அல்லது பனைக்கீற்றை கொண்டு நிழலிடுதல் வேண்டும். தென்னங்கீற்றின் கழுத்துப்பகுதியில் உள்ள மண்ணிணை நீக்கி விடுதல் வேண்டும். தென்னங்கன்று வளர்ந்து தண்டு உருவானதும் ஓரங்களை குறைப்பதன் மூலம் குழிகளை நிரப்பலாம். 

கேரளா: நடவிற்கான குழிகளின் அளவு மண் வகையையும் நிலத்தடி நீரின் உயரத்தையும் பொறுத்தது. வண்டல் மண்ணில் நிலத்தடி நீர் குறைந்து காணப்படின் 1 x 1 x 1 மீ என்ற அளவில் குழி எடுக்க பரிந்துரைக்கலாம். (செம்புறை மண்ணில் மேற்பரப்புக்கு அடியில் பாறை காணப்படின்) படிவுப்பாறையுடன் கூடிய செம்புறை மண்ணில் 1.2  x 1.2 x 1.2 மீ என்ற அளவில் பெரிய குழிகளை எடுக்கலாம். மணற்பாங்கான நிலங்களில் 0.75  x 0.75 x 0.75 மீ என்ற அளவில் குழிகளை எடுக்கலாம்.

குழியில் 60 செ.மீ உயரம் வரை குழிகளை மேற்புற மண் மற்றும் சாணத்துகள்கள் அல்லது தொழு உரத்தினை கலந்து நிரப்ப வேண்டும். நீர் தேங்குவதை தடுக்க நிரப்பிய மண்ணை நன்கு காலால் மிதிக்க வேண்டும். சதுப்பு நிலங்களில், தேங்காயின் முழுப்பகுதியையும் வண்டல் மற்றும் மணலைக் கொண்டே மூட நிலத்தடி நீரின் மட்டத்தையும் உயர்த்தலாம். நிலத்தடி நீர் உயர்ந்து காணப்படின் மேற்பரப்பு அல்லது மணற் குன்றுகள் அமைத்து நடவு செய்தல் அவசியம்.

ஈரபதத்தை தக்க வைக்க குழியின் மேற்புறத்தில் இரண்டு அடுக்கு உரிமட்டைகளை புதைக்க வேண்டும். உரிமட்டையின் குழிந்த பகுதி கீழ் நோக்கி இருக்கமாறு புதைக்க வேண்டும். இவ்வாறு அடுக்கிய பின் கரையான் பிடிப்பதை தடுக்க கார்பரில் 10% துகள்களை உரிமட்டையின் மீது தெளிக்க வேண்டும்.

குறிப்பு: செம்புறை மண் பகுதிகளில் மண்ணின் தன்மையை அதிகரிக்க குழியின் மேற்பரப்பில் சாதாரண உப்பு குழிக்கு 2 கிலோ என்ற வீதத்தில் இட வேண்டும். நடவிற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே சாதாரண உப்பை இட வேண்டும். வெள்ளை எறும்பின் தாக்குதல் இருப்பின் நடவிற்கு முன்பே சிறுகுழியிட்டு அதில் செவிடால் 8.5 கிராம் இட வேண்டும்.

கர்நாடகா: உழுதல் மற்றும் பழகுதல் மூலம் நிலத்தை தயார் செய்ய வேண்டும். இரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் 1 x 1 x 1 மீ (அ) 3.3 அடி என்ற அளவில் நடவிற்கு முன்பாகவே குழியிட்டு தட்ப வெப்பத்திற்கு வெளிகாட்டி வைக்க வேண்டும். பின்னர் குழிகளை பசுந்தாள் உரம், தொழு உரம்/மக்கிய தொழு உரம் மற்றும் மேற்புற மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும். குழியின் நடுவில் தென்னங்கன்றினை நட்டு, கன்றினைச் சுற்றி மண்ணினை மெதுவாக அழுத்த வேண்டும். இதனால் கன்று உறுதியாக நிற்க ஏதுவாகும். கோடை காலங்களில் தென்னங்கன்றுக்கு நிழலுாட்டம் அவசியம். நடவின் போது 45 செ.மீ ஆழத்தில் தேங்காயை வைக்க வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க



நட்ட  முதல் இரண்டு வருடங்களுக்கு உலர் கோடை மாதங்களில் 4 நாட்களுக்கு கன்றுக்கு 45 லிட்டர் என்ற வீதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். நாற்று நடும் முறையில் நட்ட கன்றுகளுக்கு போதுமான அளவு நிழல் அளித்தல் அவசியம். கன்ற நட்ட பின் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் ஒரு குச்சியை ஊன்றி அதனை சேர்த்து கட்ட வேண்டும். இதனால் வேகமான காற்றினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க இயலும். நீர் தேங்கக் கூடிய இடங்களில் சரியான வடிகால் வசதி அமைத்தல் அவசியம். இலைச்சருகு அதிகமுள்ள பகுதிகளில் கன்றுகளை நடும் போது செம்மண்ணை 0.14 என்ற அளவில் இடுதல் வேண்டும். குழிகளிலிருந்து களைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். ேமலும் கழுத்துப் பகுதியில் மழையினால் அடித்து வரப்பட்ட மண்ணின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அவ்வப்போது அதனை நீக்கிவிட வேண்டும். எரு இடுவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும். கன்றுகள் வளர வளர குழிகளை சீராக நிரப்பி வர வேண்டும். தென்னங்கன்றுகளில் ஏதேனும் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தின் தாக்குதல் காணப்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மேலம் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை குறைக்கத் தேவையான உத்திகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

மேலே செல்கமேலே செல்க

முன்னுரை: 7.5மீ முதல் 9மீ இடைவெளியில் பயிரிடப்பட்டுள்ள தென்னங்கன்றுகளுகு இடையேயான நீண்ட இடைவெளியானது மற்ற பயிர்கள் பயிர் செய்வதற்கு வழி வகுக்கிறது ஓராண்டு அல்லது பல்லாண்டுத் தாவரங்களை ஊடுபயிராகவோ (அ) கலப்புப் பயிராக பயிரிடுவதின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் (அ) கலப்புப்பயிர் சாகுபடி முறையில் தென்னங்கன்றிலிருந்து சுமார் 2 மீட்டர் வரை மற்ற பயிர்கள் மற்றும் களைப் பயிர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதன் மூலம் உரமிடுதல் மற்றும் பிற சாகுபடி முறையில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். வெவ்வேறு வகையான பயிர்களை உள்ளடக்கிய பயிர் சாகுபடி முறையின் மூலம் ஓராண்டு (அ) பருவகாலப் பயிர்களை பயிரிடுவதால் நமக்கு பணம், உணவு, பழங்கள், எரிபொருள், தீவனம் ஆகியவை கிடைக்கிறது. இதற்கு ஊடுபயிர் சாகுபடி முறை என்று பெயர். கலப்பு பயிர் மற்றும் ஊடு பயிர் இரண்டையும் சேர்த்து பயிரிடும் முறைக்கு பல அடுக்கு பல பயிர் சாகுபடி முறை என்று பெயர். தென்னை மரங்களின் வயது மற்றும் மரத்தின் மேல் கட்டு அமைப்பின் பரவல் தன்மை ஆகியவற்றை பொறுத்து கலப்பு பயிர் மற்றும் ஊடு பயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

தென்னையில் ஊடுபயிர் சாகுபடி முறை: தமிழ்நாடு கலப்பு பயிர் (அ) ஊடுபயிர் சாகுபடி முறையானது அப்பயிர்களுக்குத் தேவையான  கால நிலைகள், நீர்ப்பாசன வசதி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து செய்யப்படுகிறது. தென்னை மரங்களின் மேல்கட்டு அமைப்பின் பருமன், தென்னை மரங்களின் வயது மற்றும் தென்னை மரங்களுக்கிடையேயுள்ள இடைவெளி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வியாபாரத் தேவைக்கேற்ப ஊடுபயிர்களை தேர்வு செய்ய வேண்டும்.

(அ) 7 வயதுக்க குறைவான வயதுடைய தென்னந்தோப்பு
ஐந்து வருடங்களுக்கு மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கேற்ப ஓராண்டுத் தாவரங்களை தென்னை மரங்களின் மேல் கட்டு அமைப்பின் பரவலுக்கு ஏற்ப ஊடுபயிராக பயிரிடலாம். நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். நெல், மற்றும் கரும்பு ஆகியவை ஊடுபயிராக பயிரிட ஏற்றவை அல்ல.

(ஆ) 7-20 வயதுடைய தென்னைகளைக் கொண்ட தென்னந்தோப்பு
பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் தீவனம் பயிர்கள் (நேப்பியர் மற்றும் கினியா புல் இரகங்கள் ஏற்றவை.

(இ) 20 வயதுக்கு அதிகமான வயதுடைய மரங்களைக் கொண்ட தென்னந்தோப்பு
சூரிய ஓளி புகுதலைப் பொறுத்து ஊடுபயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
பின்வரும் ஊடுபயிர்களானது மண், மற்றும் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்து ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.

ஓராண்டுத் தாவரங்கள்
நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைகிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி.

ஈராண்டுத் தாவரங்கள்
பூவன் மற்றும் மொந்தன் வாழை இரகங்கள்

பல்லாண்டுத் தாவரங்கள்
கொக்கோ, மிளகு, பன்னியூர்.1, (அ) பன்னியூர்.2 (அ) பன்னியூர்.5 (அ) கரிமுண்டா, சாதிக்காய் மற்றும் வென்னிலா ஆகியவை.

கர்நாடகா மாநிலங்களில் மானாவாரி தென்னந்தோப்பில் மே மாதக் கோடை மழையையும் ஜூன் மாதத்தில் கிடைக்கும் மழையையும் பயன்படுத்தி ஊடுபயிர் பயிரிடப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது முதன்மைப் பயிரான தென்னை மற்றும் ஊடுபயிர்கள் தேவையான மேலாண்மை உத்திகளை பெறுவதோடு இந்த ஊடுபயிர்களின் மகசூலும் அதிகரிக்கிறது.

  • இளம் பருவத்தில் மற்றும் காய்ப்பதற்கு முன் பயிரிட ஏற்ற ஊடுபயிர்கள் முறையே மானாவாரி நெல், சிறு கோதுமை, உருளைக்கிழங்கு பிற கிழங்கு வகை பயிர்களாகும்.
  • உற்பத்தி திறன் குறைந்து நீண்டகாலமாக உள்ள தென்னந்தோப்புகளில் பெரும்பாலும் கிழங்கு வகைப் பயிர்களே பயிரிடப்படுகின்றன. கிழங்கு வகைப் பயிர்கள் முறையே சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கருணை கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை பயிரிடப்படுகிறது. இவற்றுள் சேனைக்கிழங்கு மிகவும் ஏற்ற அதிக மகசூல் தரும் ஊடுபயிராகும். இதைத் தொடர்ந்து இஞ்சி, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், அவரை மற்றும் தீவனப்பயிர்கள் (கம்பு நேப்பியர் வீரிய இரகங்கள், ஸ்டைலோசாந்தஸ் கிேரசிலிஸ்) சூரிய காந்தி மற்றம் ராகி ஆகியவை மானாவாரியாக மானாவாரிப்பகுதியில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது.
  • கேரளா தேன்னையில் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி மரத்தின் மேல்கட்டு அமைப்பு, மரத்தின் வயது மற்றம் இரு மரங்களுக்கிடையே உள்ள இடைவெளியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
  • 8- 25 வயதுடைய தென்னை மரங்களுள்ள தோப்புகள் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடிக்கு ஏற்றதல்ல. இளம் தென்னம்பிள்ளைகளைக் கொண்ட தோப்புகளில் தானியங்கள் மற்றும் மரவள்ளி ஆகியவை சுமார் 3-4 வருடங்களுக்கு ஊடுபயிராக பயரிடப்படுகிறது. மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவை நிழலைத் தாங்கி வளரும் சல்லி வேர் கொண்ட பயிர்களாகும். இவை 15-25 வயதுள்ள தென்னை மரங்களைக் கொண்ட தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் சிறந்த நீர்ப்பாசனம், மண்ணின் ஊட்டச்சத்துகள், அதிக இலாபம் ஆகியவை கிடைக்கிறது. 7.6 மீட்டர் இடைவெளியில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ள தோப்புகளே ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றதாகும்.

கீழ்கண்ட பயிர்களே ஊடுபயிர் செய்வதற்கு மிகவும் ஏற்றதாகும்:-

  • தானியங்கள்: நெல் மற்றும் சோளம்
  • பருப்பு வகைத் தானியங்கள்: நிலக்கடலை, கொள்ளு மற்றும் தட்டைப்பயறு
  • கிழங்கு வகைப் பயிர்கள்: மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மற்றும் சேப்பங்கிழங்கு
  • வாசனைப்பயிர்கள்: இஞ்சி, மஞ்சள், மிளகாய், மிளகு, சாதிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு
  • பழப்பயிர்கள்: வாழை, அன்னாசி, பப்பாளி (பாலாயக் கோடர்ன் இரகங்கள் குட்டநாடு பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது. ஒரு குன்றுக்கு மூன்று பக்கக் கன்றுகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது)
  • திரவியப் பயிர்கள்: கொக்கோ
  • தீவனப் பயிர்கள்: நேப்பியர் வீரிய இரகங்கள், கினியா புல்


ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு, தனித்தனியாக உரமளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். தீவனப் பயிர்கள் முறையே நேப்பியர் வீரிய இரகங்கள், கினியா புல் இதனுடன் பருப்பு வகை தீவனப் பயிர்களான ஸ்டைலோசான்தஸ் ஆகியவை அதிக இலாபத்தை தருகின்றன. ஒரு ஹெக்டரில் பயிரிடப்படும் தீவனப் பயிர்களானது மூன்று பால் மாடுகளுக்குத் தேவையான தீவனப்பயிரை தருகிறது. இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் எருவினை மண்ணில் இடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இவ்வகையான கலப்புப் பயிர் சாகுபடி முறை அதிக இலாபம் மற்றும் மகசூல் பெறுவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

தென்னையில் பல அடுக்கு பயிர்கள் சாகுபடி முறை:

Multistoried

இதன் முக்கிய நோக்கம் பல்வேறு உயரங்களில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியை முழுமையாக பயன்படுத்துவதாகும். அது போலவே பல்வேறு மட்ட மண் அடுக்ககளில் வெவ்வேறு ஆழத்தில் உள்ள பல்வேறு உரச் சத்துக்களும் கலப்பு பயிர்களால் முழுமையாக பயன்படுததப்படுகிறது. இப்பயிர் சாகுபடிக்கு வேர் அமைப்பை பற்றிய அனுபவம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்த பல அடுக்கு பயிர் சாகுபடியில் தென்னை, மிளகு, கொக்கோ மற்றும் அன்னாசி ஆகிய பயிர்கள் அடங்கும். பல அடுக்கு பயிர் சாகுபடி முறையின் சாத்தியம் மற்றும் வெற்றி மரத்தின் உயர்மட்ட கட்டமைப்பின் பை/உச்சிககட்டமைப்பைப் பொறுத்ததாகும். இதில் முதல் அடுக்கு அல்லது தரைத்தளத்தில் அன்னாசிச் செடியும், இரண்டாம் அடுக்கில் கொக்கோ தரை மட்டதிலிருந்து சமார் 3.5 மீட்டர் உயரம் வளரக்கூடியது. மூன்றாம் அடுக்கில் மிளகு தென்னை மீது சுமார் 8 மீ வரை படர விடப்படும். நான்காம் அடுக்கில் தென்னை மரங்கள் காணப்படும்.

இந்த நான்கு பயிர்களின் வேர்பப்குதிகள் ஒன்றன் மீது மற்றொன்று ஆக்ரமிப்பு செய்வதில்லை. இதனால் பல்வேறு உயரங்களில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. கொக்கோ செடி ஒரு நிழல் விரும்பித் தாவரமாகும். இது தென்னை மரங்களின் நிழல் பகுதியில் நன்கு வளர்கிறது. அன்னாசியானது குறைந்த நிழல் பகுதியில் நன்கு வளரக்கூடியது. மேலும் நுண் தட்ப வெப்பநிலைகளான நீராவி போக்கு, மண்ணின் வெப்பநிலை ஒப்பு ஈரப்பதம் மற்றும் வளி மண்டல வெப்ப நிலை போன்றவையும் அப்பயிர்கள் வளர்வதற்கு மிகவும் துணை புரிகிறது.

தென்னை சார்ந்த கலப்பு பயிர் சாகுபடி : தென்னைந்தோப்புகளில் ஈராண்டு, பல்லாண்டு காலப்பயிர்களை சாகுபடி செய்வதே கலப்புப் பயிர்கள் எனப்படும். ஓராண்டு மற்றும் பல்லாண்டு காலம் வளரக்கூடிய பயிர்கள் முறையே வா, பப்பாளி, அன்னாசி, பாக்கு, மா, பலா ஆகியவற்றை தென்னந் தோப்புகளில் கலப்பு பயிர்களாக பயிரிடுவது மிகவும் ஏற்றதாகும். தென்னை மரங்களுக்கிடையே ரப்பர் சாகுபடி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் மர வகைகளான கிராம்பு, சாதிக்காய் மற்றும் இலவங்கம் ஆகிய 7.5 X 7.5 மீ இடைவெளியில் நடப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கிடையே வளர்க்கப்படுகிறது. மேலும் காபிச் செடிகள் மற்றும் காட்டில் வளரக்கூடிய பக்கக் கிளைகளற்ற மரங்களையும் தென்னை மரங்களுக்கிடையே வளர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கலப்புப் பயிர் சாகுபடிக்குகந்த பயிர்களை தேர்ந்தெடுத்து பயிரிட வேண்டும். இல்லையெனில் வறட்சிகாலங்களில் தண்ணீருக்கு பயிர்களுக்கிடையே போட்டி, கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு குறைதல் மற்றும் நோய்த் தாக்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கலப்புப் பயிர் சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பயிர்கள் ஓரளவு நிழலை தாங்கி வளரக்கூடிய பயிர்களாகவும் ஒன்றோடொன்று நல்ல இணக்கம் கொண்ட பயிர்களாக இருப்பது அவசியம்.

தென்னைக்கேற்ற கலப்புப் பயிர்கள்:


வாழை கலப்புப் பயிர்களுள் வாழை தென்னந்தோப்புகளில் கலப்புப் பயிராக வளர்வதற்கு மிகவும் ஏற்றதாகும். வாழையில் நீர்ப்பாசனம் மற்றும் உரமிடும் முறைகள் தென்னையைப் பொன்றே இருப்பதோடு பூச்சிகள் மற்றும் நோய் தாக்கத்தின் அளவும் குறைவாகவே உள்ளது. வாழை மானாவாரி தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடுவதற்க மிகவும் ஏற்றதாகும். 125 தென்னை மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டரில் சுமார் 1000 வாழைகள் பயிரிடலாம்.

அன்னாசி மானாவாரி மற்றும் பாசனம் என இருவகை நிலங்களிலும் ஊடுபயிராக பயிரிடலம்.  நீர்பாசன மிக்க பகுதியில் ஒரு பழங்களின் எடை 1.5 கி.கி. ஆனால் மானாவாரிப் பயிரில் பழங்களின் எடை 1 கி.கி ஆக குறைந்துள்ளது. பல அடுக்கு பயிர்கள் சாகுபடி முறையில் ஒரு ஹெக்டரில் சுமார் 4000 கிலோ அன்னாசிப் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. அன்னாசிபழம் பயிரிடப்படும் பகுதிகளில் மகசூல் இதைவிட பலமடங்கு அதிகமாக கிடைக்கிறது.

தென்னையில் கலப்புப் பயிர் பயிரிடுவதற்கு தேவையான சாகுபடி முறைகள் -

பயிர்கள்

பயிர் பெருக்கம்

கன்று நடும் குழியின் அளவு

இடைவெளி

கன்றுகளின் எண்ணிக்கை/ஹெக்டரில்

கொக்கோ

நெருக்கு ஒட்டு

75X75X75
செ.மீ

3.3X3.3 (ஒற்றை வேலிமுறை)

450

மிளகு

வேர்க்கட்டை வெட்டுதல்

50X75X75
செ.மீ

7.5X7.5 மீ (தென்னை மரத்தின் அடிப்பரப்பில்

175

கிராம்பு

நாற்றுகள்

75X75XX75
செ.மீ

60X60 மீ (தென்னை மரங்களின் நடுப்பகுதியில்)

148

சாதிக்காய்

நெருக்கு ஒட்டு

75X75XX75
செ.மீ

7.5X7.5 மீ (தென்னை மரங்களின் நடுப்பகுதியில்)

148

 

பல பயிர் சாகுபடி முறைகள் : தென்னை + வாழை + சிறு கிழங்கு +  வெண்டை பல பயிர் சாகுபடி முறையானது கிழக்குப் பகுதிக்கு மிகவும் ஏற்றது. மேற்குப் பகுதிகளில் வாழை, மிளகு, கொக்கோ, சாதிக்காய் மற்றும் வென்னிலா போன்றவைகளை வளர்ப்பதற்கு உகந்த பகுதியில் பல பயிர் சாகுபடி முறையில் பயிர் செய்ய முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு பயிர்க்குத் தேவையான நீர், எரு மற்றும் உரங்கள் ஆகியவற்றை தனித்தனியாக கொடுக்க வேண்டும். பல்லாண்டுத் தாவரங்கள் கொக்கோ, சாதிக்காய், மிளகு, இலவங்கம் மற்றும் கற்பூரப்புல்

ஓராண்டுத் தாவரங்கள் : காரீப் பருவம் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, இஞ்சி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, துவரை, காய்கறிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக், வாழை, அன்னாசி, பப்பாளி மற்றும் தீவனப்பயிர்கள்

ரபிப்பருவம் எள், கொள்ளு, துவரை, காய்கறிகள், தட்டைப்பயிறு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் வாழை.

கோடைகாலம்: காய்கறிகள் வயதான மரங்களையுடைய தென்னந்தோப்புகளில் கொக்கோ, மிளகு, கிராம்பு, இலவங்கம் சாதிக்காய் கோன்றவைகள் கலப்புப் பயிர்களாக பயிரிடப்படுகிறது. மேலும் ஊடுபயிர்கள் மற்றும் கலப்புப் பயிர்களுக்கு தனித்தனியாக அதிக அளவு உரங்களை இட வேண்டும்.

பசுந்தாள் உரம் மற்றும் மூடு பயிர்கள்: தென்னந்தோப்பில் பசுந்தாள் உரங்கள் மற்றும்
மூடுபயிர்களும் வளர்க்கப்படுகின்றன.

அ) பசுந்தாள் உரப்பயிர்கள் சணப்பை (குரோட்டலேரியா சன்சியா), கொலுஞ்சி (தெப்ரஸ் பப்பூரியா), கிளைரிசீடியா மேகலேட்டா) (இன்டிகோபெரா கிர்சூட்டா), பியூரேரியா பேசியோவாய்ப்ஸ

ஆ) மூடுபயிர்கள் கலப்பகோனியம் மீயூகனாய்டஸ்,மைமோசா இன்விசா, ஸ்டைலோசாந்தஸ் கிரேசிலிஸ்

இ) நிழல் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்கள்


தெப்ரோசியா கேன்டிடா : பசுந்தாள் மற்றும் பயிர்களை ஏப்ரல்-மே மாதங்களில் பருவ மழைக்கு முன்பு பயிரிட வேண்டும். ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதங்களில் இந்த பசுந்தாள் உரப்பயிர்

  • மண் அரிப்பு மிகுந்த பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மண்ணை குவித்து பின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சமப்படுத்த வேண்டும்.
  • அகன்ற இலை கொண்ட களைப் பயிர்களை முளைமுன்களைக் கொள்ளியான அட்ரசினை சுமார் ஒரு ஹெக்டேருக்கு ஒரு கிலோ என்ற வீதம் உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம்.
  • புல் மற்றும் கோரை இனங்களை கட்டுப்படுத்த முளை பின் களைக் கொல்லியான 10 மில்லி கிளைபோசேட் மற்றும் 20 கிராம் அம்மோனியம் சல்பேட்/1லிட்டர் என்ற வீதம் தேவைப்படுகிறது.

மறு பயிரிடல் : குறைந்த அளவு மகசூல் தரும் வயதான மரங்களைக் கொண்ட தென்னந்தோப்புகளில் மறுபயிரிடுதல் ஒரு மிக முக்கியமானதாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்யப்படுகிறது.

  • மறுபயிர் செய்ய வேண்டிய பரப்பினை குறித்துக் கொள்ள வேண்டும்
  • மிகக் குறைந்த அளவு மகசூல் தரும் கன்டு நடுவதற்கு தோண்டப்பட்ட குழிக்கு அருகாமையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
  • அதன் பின் இளம் தென்னம்பிள்ளை நட வேண்டும். மீதமுள்ள மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மரங்களை நட்டதிலிருந்து 2ஆம் 3 ஆம் மற்றும் நான்காம் ஆண்டிற்கு பின் அகற்ற வேண்டும்.
  • ஏற்கனேவ உள்ள மரங்கள் சரியான இடைவெளியில் பயிரிடப்படவில்லையெனில் வயதான மரங்களை முதல் வருடம் ஒரு மீட்டர் ஆரத்தில் உள்ளவற்றை நீக்க வேண்டும். இதே போல் 2 மீட்டர் ஆரத்தில் துாரத்தில் உள்ளவற்றை 3ஆம் வருடமும் மேலும் 4 மீட்டர் துாரத்தில் உள்ளவற்றை 4ஆம் வருடமும் அகற்ற வேண்டும்.
  • மறு பயிரிடும் போது பூக்கள் தோன்றுவதற்கான காலம் அதிகரிக்கிறது. கள் மற்றும் மூடுபயிர்களை அப்படியே உழுது எருவாக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. கலப்ப கோனியமானது பசுந்தாள் உரமாகவோ அல்லது மூடுபயிராகவோ பயிரிடப்படுகிறது. தெபரசியாவானது கோடைகாலங்களில் நிழலுக்குகாகவும் மழைக்காலங்க்ளில் பசுந்தாள் உரமாகவும் பயிரிடப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க


Weed management 1 Weed management 2 Weed management 3


களை எடுத்தல் மற்றும் இடை உழவு முறைகள்:

  • குறிப்பிட்ட கால இடைவெளிகளில் களை எடுப்பதன் மூலம் தென்னங்குழிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • நிலப்போர்வைகளை தென்னங்கன்றின் கழுத்துப் பகுதியில் நீக்க வேண்டும். இக்கன்று மரமாக வளர்ந்தவுடன் குழிகளை பக்கவாட்டில் உள்ள மண்ணை வைத்து நிரப்ப வேண்டாம்.
  • முறையான  இடை உழவு முறைகளின் மூலம் களைகளை கட்டுப்படுத்தி அக்களைகளையே நிலப்போர்வையாக பயன் படுத்தலாம். சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற வகையில் களைகளை கட்டுப்படுத்த மற்றும் நிலப் போர்வையாக அவற்றை பயன்படுத்த உழவு முறைகளை முறையே உழுதல், தோண்டுதல், துார்வாருதல், மண் குவித்தல் கோன்றவற்றில் ஏதேனும் ஒரு முறையை கையாளலாம்.
  • மரங்களுக்கிடையேயுள்ள இடைவெளியானது வருடத்திற்கு இரு முறை ஜூன் ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் உழவு செய்யப் படுகிறது.
  • செம்புறை மண், மணல் மற்றும் மணல் கலந்த பசலை மண் பகுதிகளில் இரண்டு உழவுகள் அல்லது இரண்டு கொத்துகள் முறையே மே - ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மேற் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஜனவரி மாதத்தில் தூர்வாருதல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்