தென்னை அறுவடை, அறுவடை பின்சார்  தொழிற்நுட்பங்கள்

(ஏதேனும்  ஒன்றை "கிளிக்" செய்யவும்)...

  • 12 மாதங்களான நன்கு முற்றிய தேங்காயனது 30 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை விதைக்காகவும் கொப்பரைத் தேங்காய்க்காகவும் அறுவடை செய்யப்படுகிறது.
  • வீட்டு உபயோகத்திற்கு தேவையான தேங்காய்களை செங்குத்தாக வைக்க வேண்டும்.  இளநீருக்கு 7-8 மாதத்தில் அறுவடை செய்யலாம்.  தேங்காய்யானது மரம் ஏறியோ (அ) மரம் ஏறும் கருவி மூலமோ பறிக்கப்படுகிறது
  • 11 மாதங்களான தேங்காயிலிருந்து கிடைக்கும் நாரானது தரம் வாய்ந்ததாகும்.  இதுவே தென்னை நார் எடுப்பதற்கு மிகவும் ஏற்றதாகும்.
  • உயரமான மரங்களில் இருந்து விதைக்காக தேர்ந்தெடுக்கப்படும் கொப்பரை தேங்காய்கள் 2-3 மாதங்கள் விதைப்பதற்கு முன் குவித்து வைக்கப்படுகிறது.  குட்டையான அல்லது வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து எடுக்கப்படும் விதைத் தேங்காய்கள் அறுவடை செய்ததிலிருந்து 10-15 நாட்கள் குவித்து வைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் பாலையிடும் தென்னையில் சராசரியாக 8 அறுவடை செய்யப்படும்.

அறுவடை செய்யும் முறைகள்:
குச்சி/கம்பு:
இதுவே இந்தியாவில் பின்பற்றப்படும் பொதுவான முறையாகும்.  நல்ல உயரமான மூங்கிலில் கத்தியை இணைத்து அறுவடை செய்யப்படுகிறது.

மரம் ஏறும் கருவி:
மரம் ஏறுவதற்கு மரம் ஏறும் கருவி உபயோகிக்கப்படுகிறது.  இம்முறை மூலம் மற்ற முறைகளைக் காட்டிலும் வேகமாகவும் எளிதாகவும் காய்களை பறிக்க முடிகிறது.  இந்த கருவியின் மூலம் நாள் ஒன்றுக்கு 80 மரங்களிலிருந்து அறுவடை செய்யலாம்.

இம்முறையின் மூலம் மரத்திலிருந்து கீழே விழுந்து அடிபடுவது/வீண் விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.  ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் விதை மையங்களில் பயிர் பெருக்கத்திற்கு உபயோகிக்கப்படுகிறது.

மகசூல்:

சராசரி மகசூல் - 80-100 தேங்காய்கள்/மரம்/வருடம் (இரகத்தைப் பொறுத்து)
குட்டை இரகங்கள் - 70-80 தேங்காய்/மரம்/வருடம்
நெட்டை இரகங்கள் - 80-100 தேங்காய்/மரம்/வருடம்
வீரிய இரகங்கள் - 100-130 தேங்காய்/மரம்/வருடம்

அறுவடை செய்யும் முறை: சாதாரணமாக கயிரைப் பயன்படுத்தி மரத்தின் மீது ஏறித்தான் முதிர்ந்த காய்களை பறிக்க வேண்டும்.  மேலும் ஏணிகளும் உபயோகிக்கப்படுகிறது.
    
மரத்தின் உச்சியை அடைந்த உடன் மரத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள குலைகளில் உள்ள தேங்காயை அறுவடை செய்யும் கத்தியின் மூலம் தட்டி பார்க்கப்படும்.
       
இந்த காய்கள் முற்றியிருந்தால் அறுவடை கத்தியின் மூலம் குலைகளின் அடிப்பகுதி வெட்டப்படும்.
       
இளநீருக்காக அறுவடை செய்யப்படும் குலைகள், தரைப்பகுதி கடினமாக இருந்தால் கயிற்றின் மூலம் கீழே இறக்கப்படும்.  தேங்காய் அறுவடை செய்பவர்கள் அறுவடை செய்வதோடு மரத்தின் உச்சியில் உள்ள காய்ந்த ஓலைகள், மட்டைகள் மற்றும் பாலைகளை அகற்றி மரத்தை சுத்தம் செய்வர்.
       
கிழக்கு கடற்கரை பகுதிகளில் தென்னை ஓலைகள் மட்டை பின்னுவதற்கு பயன்படுவதால் கீழிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மட்டைகள் அறுவடை செய்யும்போது வெட்டப்படுகிறது.
       
இவ்வாறு மட்டைகள் வெட்டப்படுவதால் மகசூல் குறைகிறது.
       
ஒருசில இடங்களில் குட்டையான மரங்களில் தென்னங்குலைகளானது உயரமான மூங்கிலில் கத்தியை இணைத்து அதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது.

அறுவடை முறைகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்: குச்சி மற்றும் அறுவடை செய்யும் கருவியின் மூலம் பாதுகாப்பாகவும் பயன்தரத்தக்க வகையிலும் அறுவடை செய்வதற்கு போதுமான அளவு நுண்ணறிவு மற்றும்  அனுபவம் தேவைப்படுகிறது.  ஒவ்வொரு முறையிலும் ஒருசில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.
       
மூங்கிலில் இணைக்கப்பட்ட கத்தியின் மூலம் வேகமாகவும், எளிதாகவும் எந்த ஆபத்துமின்றி மிகவும் பயனுள்ள வகையில் அறுவடை செய்யலாம்.
       
இந்தக் கருவியின் மூலம் குறைந்த நேரத்தில் அதிக அளவு தேங்காய்களை அறுவடை செய்ய முடிகிறது.

மரம் ஏறி அறுவடை செய்யும் முறையில் அறுவடையாள் தேங்காய் அறுவடை செய்வதோடு மரத்தை சுத்தம் செய்வதால் நோய்த்தாக்கத்தின் அளவு குறைகிறது.
       
எனினும் ஒரு சில நாடுகளில் மரம் ஏறுவதற்காக ஏற்றவாறு தாரைகள் ஏற்படுத்துவதால் இந்த மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகப்படுத்த முடியாமல் வீணாகின்றன.  இவ்வாறு செய்வதால் நோய்த்தாக்கத்தின் அளவும் அதிகரிக்கிறது.

மேலே செல்கமேலே செல்க

  • தேங்காயானது மட்டைகள் நீக்கப்பட்டு கொப்பரைத் தேங்காயாகவோ அல்லது முழுத் தேங்காயாகவோ பரவலாக விற்கப்படுகிறது.
  • இந்த தேங்காய்கள் இரண்டு அரை மூடிகளாக வெட்டி உள்ளே உள்ள நீரை வடிகட்டிய பின் வெயிலில் காய வைக்கப்படுகிறது.
  • முளைசூழ்தசைய்யின் ஈரப்பதத்தில் அளவு 5-6% குறையும்போது தேங்காயானது தொட்டியிலிருந்து தோண்டடி எடுக்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது.
  • சாதகமில்லாத வானிலைக் காலங்களில் புகை மூலம் காயவைக்க படுகிறது

அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள்:
மட்டையை உரித்தல்:
தேங்காயின் மேலுள்ள மட்டையானது ஆட்கள் மூலம் உலோகக்கம்பிகளைக் கொண்டு உரித்தெடுக்கப்படுகிறது.  இதற்கு அதிக அளவு நுணுக்கங்கள் அவசியம்.   தற்போதைய காலங்களில் இயந்திரங்களை உபயோகிக்கின்றனர்.

கொப்பரைத் தேங்காய்களை பதப்படுத்துதல்: கொப்பரைத் தேங்காயில் இருக்க வேண்டிய சராசரியான ஈரப்பதத்தின் அளவு 5-6% ஆகும்.  ஈரப்பதத்தின் அளவை குறைப்பதற்கு சூரிய வெப்பத்தின் மூலம் காய வைத்தல், புகை வெப்பத்தின் மூலம் காய வைத்தல், சூலைகளின் மூலம் காய வைத்தல் மற்றும் மறைமுக சூடான காற்றின் மூலம் காய வைத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன.

சூரிய ஒளியில் உலர்த்துதல்: பழமையான இம்முறையின் மூலம் தேங்காயின் இரண்டு அரை மூடிகள் திறந்த வெளித்தரையில் உலர்த்தப்படுகிறது.  இம்முறையில் சுமார் 8 நாட்கள் வரை உலர்த்த வேண்டும்.  இவ்வாறு  உலர்த்தும் போது குப்பைகள் மற்றும் புழுதிகள் தேங்காய் பருப்புகளில் படிவதால் கொப்பரைத் தேங்காய்களின் தரம் குறைகிறது.  மேலும் மேகமூட்டமான காலநிலை மற்றும் குறைந்த வளி மண்டல வெப்பம் ஆகியவையும் கொப்பரைத் தேங்காயின் தரத்தைக் குறைக்கிறது.

சூரிய உலர்த்தி: மூடிய வகை சூரிய உலர்த்தியை கொண்டு உலர்த்தும்போது குப்பைகள் படிவது தவிர்க்கப்படுவதால் நல்ல தரமான கொப்பரைத் தேங்காய்களை பெற முடிகிறது.  உலர்த்தும் நேரமும் 3-4 நாட்கள் வரை குறைகிறது.  100 கொப்பரைத் தேங்காய் கொள்திறன் கொண்ட சூரிய பகுப்பு உலர்த்தியின் மூலம் சுமார் மூன்றே நாட்களில் பகுதி பகுதியாக உலர்த்த முடியும்.  இந்த உலர்த்தியானது சி.பி.சி.ஆர்.ஐ மையத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு விவசாயிகளுக்கான தேங்காய் உலர்த்தி: சி.பி.சி.ஆர்.ஐ மையத்தின் மூலம் கண்டறியப்பட்ட 400 தேங்காய் கொள்திறன் கொண்ட மறைமுக தேங்காய் உலர்த்தியானது தென்னை விவசாயிகளுக்கு மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த இயந்திரத்தை வைப்பதற்கு 3 சதுர அடி இடம் தேவைப்படுகிறது.  இதனை இயக்க சுமார் 2-3 வேலையாட்கள் தேவைப்படும்.  உலர்த்தும் நேரமானது ஒரு பகுதிக்கு சுமார் 36 மணி நேரம் என்ற அளவில் நான்கு நாட்களுக்கு உலர்த்தப்படுகிறது.  கேரளா வேளாண்மை இயந்திர நிறுவனம் இந்த உலர்த்தியை உற்பத்தி செய்கிறது.

பெருவிவசாயிகளுக்குகந்த தேங்காய் உலர்த்தி: 3500-4000 தேங்காய்கள் கொள்திறன் கொண்ட பெரிய அளவிலான தேங்காய் உலர்த்தியானது சி.பி.சி.ஆர்.ஐ நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது.  இந்த இயந்திரமானது பெரு விவசாயிகள் மற்றும் தேங்காய் பதப்படுத்தும் அமைப்பிற்கு உபயோகப்படுகிறது.

நடுத்தர விவசாயிகளுக்குகந்த புகையற்ற தேங்காய் உர்த்தி: சி.பி.சி.ஆர்.ஐ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலர்த்தியானது ஒரு பகுதிக்கு சுமார் 1000 தேங்காய் கொள்திறன் கொண்டது.  இந்த உலர்த்தியானது சுமார் 24 மணி நேரத்தில் தேங்காய்களை உலர்த்தி விடும்.  தேங்காய் சிரட்டைகளை எரிப்பொருளாக பயன்படுவதற்கு ஏற்றவாறு தனித்தன்மை வாய்ந்த சூலைகளை கொண்டுள்ளது.

பொருட்கள் மற்றும் பதப்படுத்துதல்: தென்னை பல பயன்பாடுகளை உடையது.  இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் உணவுப்பொருள், சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.  தேங்காயிலிருந்து கிடைக்கும் நாரிலிருந்து மிதியடிகள், கயிறு மற்றும் துடைப்பம் (அ) துாரிகைகள் செய்யப்படுகிறது.

தேங்காய்யானது கத்தியின் மூலம் உடைத்து உரிமட்டைகள் அகற்றப்படுகிறது.
       
கைகளால் இயக்குவதற்கு உகந்த கையாள்வதற்கு உகந்த கருவிகளைக் கொண்டு தேங்காய் பருப்புகள் எடுக்கப்படுகிறது.
       
மோட்டார் இயந்திரங்களை உபயோகிப்பதன் மூலம் தேங்காயானது நன்கு துாளாக்கப்படுவதால்/பொடியாக்கப்படுவதால் அதிக அளவு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. 
       
இந்தப் பருப்புகள் எண்ணெய் எடுப்பதற்கு தேவையான கொப்பரையாக காய வைக்கப்படுகிறது.  சூரிய உலர்த்தி, புகையற்ற நேரடி வெப்ப உலர்த்தி மற்றும் நேரடி வெப்ப புகை உலர்த்தி என வெவ்வேறு முறைகளில் உலர்த்தப்படுகிறது.
       
இந்த கொப்பரையானது “சல்பரிங்” முறையின் மூலம் பதப்படுத்தப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

கொப்பரை தயார் செய்தல்:
தொன்மையான/பழமையான முறை: தேங்காய் எண்ணெய்யானது கொப்பரை தேங்காயிலிருந்து பழமையான முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
       
தேங்காய் சதைப்பகுதியை தேங்காய் சிரட்டையிலிருந்து பிரித்தெடுத்து 6-8 நாட்களுக்கு வெயிலில் உலர்த்துவதன் மூலமோ (அ) நீராவி உலர்த்தியில் உலர்த்துவதன் மூலமோ கொப்பரை தேங்காய் பெறப்படுகிறது.
       
எண்ணெய் எடுப்பதற்கு தேவையான கொப்பரையானது சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு 30 நிமிடங்களுக்கு வேக வைக்கப்படுகிறது.
       
பிறகு கொப்பரையிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்க இயந்திர செக்கு உபயோகிக்கப்படுகிறது.  இந்த எண்ணெயானது வடிகட்டியின் மூலம் வடிகட்டி உபயோகிக்கப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

அறுவடை செய்யப்பட்ட தேங்காயிலிருந்து இயந்திரச் செக்கின் மூலம் எண்ணெய் பிரித்தெடுத்தல்: தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கான நவீன தொழில் நுட்ப வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
       
தேங்காய்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து தேங்காயின் சதைப் பகுதியை பிரித்தெடுக்க வேண்டும்.
       
இந்த சதைப்பகுதி சிறு துண்டுகளாக தேவையான பருமனில்வெட்டப்படுகிறது.
இந்த மென்மையான/மெல்லிய துண்டுகள் சுமார் 90 நிமிடங்களுக்கு வேக வைக்கப்படுகிறது.
       
பிறகு வேகவைக்கப்பட்ட தேங்காய் துண்டிலிருந்து இயந்திரச் செக்கின் மூலம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
       
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்யானது காற்று புகா டின்களில் அடைக்கப்பட்டு குளிர்ச்சியான  மற்றும் இருட்டான பகுதியில் பல வருடங்களுக்கு வைக்கப்படுகிறது.
       
இதிலிருந்து கிடைக்கும் புண்ணாக்குகள் உணவுப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

தேங்காயிலிருந்து கிடைக்கும் பொருட்கள்:
தென்னை ஓலைகள்:


தென்னை ஓலைகள் கூரைகள் வேய்வதற்கு கிராமப் புறங்களில் பயன்படுத்தப்படுகிறது.  மேலும் இதிலிருந்து கூடைகள், வேலிகள் போன்றவை செய்யப்படுகிறது. 
       
பெரும்பாலான மாநிலங்களில் ஓலை பின்னுதல் குடிசை தொழிலாக செய்யப்படுகிறது.
தென்னை ஓலையின் நடு நரம்பைக் கொண்டு துடைப்பங்கள் செய்யப்படுகிறது.
       
துடைப்பங்கள் தயாரித்தல் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெரும் அளவில் செய்யப்படுகிறது.

தேங்காய் பருப்பு:

அறுவடை செய்த தேங்காய் பருப்பை சுமார் 3-6 மாதங்களுக்கு துண்டுகளாகவோ (அ) உலர் தேங்காய் பூவாக பதப்படுத்தி பாதுகாக்கலாம்.  அவ்வாறு பதப்படுத்த 4% உப்பு, அசிட்டிக் அமிலம், சல்பர்-டை-ஆக்ஸைடு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை உபயோகிக்கப்படுகிறது.  இதனை உபயோகிப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும்.

உலர்தேங்காய் பூ (அ) உலர் தேங்காய் பொடி: உலர் தேங்காய் பூவானது நன்கு முதிர்ந்த பருப்பில் உள்ள வெள்ளை நிறப்பகுதியை இயந்திரம் மூலம் வெட்டி நசுக்கி கிடைக்கும் சதைப்பகுதியில் இருந்து கிடைக்கிறது.  இந்த தேங்காய் பொடியானது மூன்று தரமாக பிரிக்கப்படுகிறது.  அவை முறையே (1) மாவு போன்ற வெண்மை நிறப் பொடி (2) சிறிய நடுத்தர வெண்மைப்  நிறப்பொடி (3) நாட்டுத்திருவலில் கிடைக்கும் அளவிற்கு சற்று பெரிய வெண்மை நிறப்பொடி.
       
இந்த பருப்பானது இயந்திரத்தின் மூலம் வெட்டி நசுக்கி கிடைக்கும் சதைப்பகுதியானது சுமார் 140-170 பாரன்ஹீட் வெப்பநிலையில் உயர் வெப்ப உலர்த்தியில் உலர்த்தப்படுகிறது.  இதன் ஈரப்பதம் சுமார் 2% ஆகும்.  இதில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு 65-68 சதவிகிதம் மேலும் மற்றவை சுமார் 30-32% ஆகும்.
       
இந்த உலர் தேங்காய் பூவின் பெரும்பகுதி இனிப்பு மிட்டாய் தயாரிப்பிலும் பேக்கரிகளில் தயார் செய்யப்படும் பல்வேறு பதார்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் சீவல்: தேங்காய் சீவலானது நன்கு காய வைக்கப்பட்ட முதிர்ந்த வெண்மை நிறப் பகுதியை மெல்லிய துண்டாக நசுக்கி உப்பு (அ) இனிப்பு சேர்த்து கைவினை உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
       
9-10 மாதங்கள் முதிர்ந்த தேங்காயின் வெண்மைநிறப் பகுதியை மெல்லிய துண்டாக நறுக்கி சர்க்கரை பாகில் ஊற வைத்து பின் வடிகட்டி உலர்த்தியில் உலர்த்துவதால் தேங்காய் சீவல்கள் கிடைக்கிறது.

தேங்காய் கிரிஸ்ப்ஸ்: 9-10 மாதங்களான இளம் முளைசூல்தசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  இது வெண்மை நிறத்தில் தேங்காயின் நறுமணத்துடன் எந்தவித நார்ச்சத்துமின்றி சுவையாக இருக்கும். 
       
இது தேங்காயின் வெண்மை நிறப் பகுதியை சுமார் 0.6-0.7 மி.மீ தடிமனில் நறுக்கி சூடான நீரில் போட்டு பின் மிதமான சர்க்கரை பாகில் வேகவைத்து அதன்பின் உலர வைத்து பெறப்படுகிறது.  இது அதிக ஆற்றல் தரக்கூடிய உணவாகும்.

வறுத்த இளம் தேங்காய்: இளநீர் மற்றும் இளம் தேங்காயின் சுவையை அதிகரித்தும் நறுமணமூட்டும் வகையிலும் பதப்படுத்தப்படுகிறது.
       
இளநீரானது 2% சோடியம் மெட்டா பை சல்பேட் உடன் சேர்த்து 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து உலர்த்தி ஒரு நிமிடத்துக்கோ அல்லது சிரட்டை எரியும் வரையோ விட வேண்டும்.
       
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தேங்காயை அறையின் வெப்பத்தில் 3 நாட்களுக்கோ (அ) குளிர்பதன பெட்டியில் பல நாட்களுக்கோ பதப்படுத்தலாம்.

உலர்த்தப்பட்ட இனிப்பு தேங்காய்: இளம் தேங்காயானது உலர் இனிப்பு தேங்காய் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
       
தேங்காயின் சதைப்பகுதியை தண்ணீரில் கழுவி பின் இளநீரில் ஊறவைத்து மீண்டும் துாய்மையான நீரை ஊற்றி கழுவ வேண்டும்.
       
அதன்பின் சிறுதுண்டுகளாக நறுக்கி சுத்தமான சர்க்கரை மற்றும் நீருடன் 6:3:1 என்ற விகிதத்தில் கலந்து பின் ஒரு மணிநேரத்திற்கு வேகவைத்து உலர்த்த வேண்டும்.

பின் குளிரவைத்து பின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.

தேங்காய் கற்கண்டு: தேங்காய் கற்கண்டு தீய்க்கப்பட்ட தேங்காய் சதையை தேங்காய் பாலில் ஊறவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
       
தீய்க்கப்பட்ட தேங்காயில் தேங்காய் பாலுடன் சேர்த்து ஈரப்பதப்படுத்தப்படுகிறது.
       
மீதமுள்ள பால் மற்றும் வெல்லப்பாகு ஆகியவற்றை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
         
இத்துடன் சுத்தமான சர்க்கரையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
       
பின் இதை வெண்ணை தடவிய பாத்திரத்தில் ஊற்றி குளிர  வைத்து சிறு துண்டுகளாக தேவையான பருமனில் வெட்டி ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக அலுமினிய காகிதத்தை சுற்றி கட்ட வேண்டும்.

தேங்காய் பால் பவுடர்: தேங்காய் பாலை கட்டுப்பாடான சூழ்நிலையில் உலர்த்தி மற்றும் நீர்நீக்கப்பட்டு தேங்காய் பால் பவுடராக மாற்றப்படுகிறது.
       
திடநிலையில் 50-60 சதவிகித கொழுப்புச்சத்து உள்ளவாறு தேங்காய் பால் பவுடராக மாற்றப்படுகிறது.  இத்துடன் குழம்பாக்கும் பொருள் மற்றும் நிலைநிறுத்தும் பொருள் ஆகியவை சேர்க்கப்படுகிறது.
       
திவலை உலர்த்தியில் சுமார் 180 சி  வெப்பநிலையில் உலர்த்துவதே முக்கிய கட்டமாகும்.  சிறிய திவலைகளை எண்ணெய் துளியுடன் சேர்த்து தற்காலிகமாக உலர்த்தப்படுகிறது.

தேங்காய் மாவு: தேங்காய் சக்கையிலிருந்து தயார் செய்யப்படும் தேங்காய் மாவானது தனித்தன்மை வாய்ந்த பொருளாகும்.
       
தேங்காய் மாவானது தேங்காய் பால் தயார் செய்யும் போது கிடைக்கும் சக்கையிலிருந்து தயார் செய்யப்படும் நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள உணவுப் பொருளாகும்.
       
இதன்மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் நல்ல வருமானம் கிடைக்கிறது.

வெல்லம்: சுவையான தென்னங்கள்ளை துாய்மையான பாத்திரத்தில் இட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.

பின் வடிகட்டி 12-15 சதவிகித திடமான வெல்லமாக மாறும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.  இந்த வெல்லம் மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
       
இதிலுள்ள குறைந்த சர்க்கரை மற்றும் தாதுக்கள் இதனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக மாற்றப்படுகிறது.

தென்னைந்தேன்: தென்னந்தேன் ஒரு பிசுபிசுப்பான பாலேடு போன்ற திரவமாகும்.
ஒரு  பகுதி சுத்தம் செய்யப்பட்ட பகுதி வெண்ணை எடுக்கப்பட்ட பாலுடன்   பகுதி குளுக்கோஸ் சேர்த்து நன்கு கலக்கி இதனுடன் சோடியம் அல்ஜினேட் 0.5 சதவிகிதம் சர்க்கரை மற்றும்  சேர்த்து நிலைநிறுத்தும் பொருள் தயார் செய்ய வேண்டும்.

நறுமணத்தை அதிகரிக்க இதனுடன் தேங்காய் க்ரீம் சேர்க்க வேண்டும்.  இந்த கலவையை சுமார் 15 நிமிடத்திற்கு வேக வைத்து நன்கு கலக்கும்படி கிளறி விட வேண்டும்.  இதன் கரையக்கூடிய முழுமையான சர்க்கரையின் அளவு சுமார் 75 சதவிகிதமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
       
இதனை சுத்தமான பாத்திரத்தில் சுற்றி மூடி வைக்க வேண்டும்.

தேங்காய் குழம்பு: தேங்காய் குழம்பானது இளநீருடன் மிளகாய், வெங்காயப்பொடி மற்றும் வினிகர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் லெமனேடு:

  • இளநீரை கொதிக்க வைத்து அத்துடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
  • இது கேரளாவில் பாரம்பரிய பானமாக உபயோகிக்கப்படுகிறது.

தேங்காய் பால்: நன்கு முதிர்ந்த தேங்காய் பருப்பில் இருந்து தேங்காய் பால் எடுக்கப்படுகிறது.  இதனுடன் நீர் சேர்த்தோ சேர்க்காமலோ தேங்காய்ப்பால் எடுக்கப்படுகிறது.  இதிலிருந்து கொழுப்புச்சத்து நிறைந்த தேங்காய் க்ரீம் எடுக்கப்படுகிறது.

தேங்காய் க்ரீம்:

  • நன்கு முதிர்ந்த தேங்காயிலிருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் க்ரீம் ஆனது நீருடன் சேர்த்தோ (அ) சேர்க்காமலோ பல்வேறு வகையான இனிப்புகள், க்ரீம், பிஸ்கட், ரொட்டி ஆகியவற்றில் உயோகிக்கப்படுகிறது.
  • பதப்படுத்தப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேங்காய் க்ரீம் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.  உபயோகப்படுத்திய பின்பு இந்த பாட்டில்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து நாளடைவில் உயோகிக்க வேண்டும்.
  • தேங்காய் க்ரீம் தேங்காய் பாலின் திரண்ட நிலையாகும்.  இது நன்கு முதிர்ந்த மற்றும் புதிதாக அறுடை செய்யப்பட்ட தேங்காயிலிருந்து தயார் செய்யப்பட்ட இந்த க்ரீம் அனவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது.

தேங்காய்ச் சாறு:

  • தேங்காய்ச் சாறு ஒரு தெளிவான, எளிதாக பாயக்கூடிய திரவமாகும்.  இந்த சாறானது,  தேங்காய் பாலை அதே அளவு சுத்தமான சர்க்கரை மற்றும் டைசோடியம் பாஸ்பேட் சேர்த்து அதனுடைய அளவு 0.25 சதவிகிதத்திற்கு வரும்படி கொதிக்க வைத்து கிடைக்க்கூடியது ஆகும்.  இந்நிலையில் முழுமையாக கரையக் கூடிய சர்க்கரையின் அளவு சுமார் 68-70 சதவிகிதமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த சூடான கலவையை சுத்தமான பாத்திரத்தில்  ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
  • இந்த தேங்காய் சாறானது பேக்கரிகளில் தயார் செய்யப்படும் பல்வேறு பதார்த்தங்களிலும் ஆல்கஹால் நிறைந்த பானங்களிலும் நீருடன் கலந்து உபயோகிக்கப்படுகிறது.  மேலும் அரிசி மாவிலிருந்து தயார் செய்யப்படும் கேக் மற்றும் மற்ற உணவுப் பண்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பான திடநிலையிலுள்ள தேங்காய்ப்பால்: இனிப்பான திடநிலையிலுள்ள தேங்காய்பால் தயார் செய்யப் தேங்காய் க்ரீம் எடுக்கப்பட்ட தேங்காய் பாலானது பயன்படுகிறது.  இதற்கு வெண்ணையெடுக்கப்பட்ட பால்பவுடர், தேங்காய் க்ரீம், சர்க்கரை மற்றும் மக்காசோள எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
       
வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலானது சுமார் 80-90 செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடத்திற்கு பாஸ்டுரைசேசன் செய்யப்படுகிறது.
       
இந்தக் கலவையை கூழ்மம் செய்யும் கருவியின் வழியே செலுத்தப்பட்டு பின் அவி பாத்திரம்/கொள்கலனில் கொதிக்க வைக்க வேண்டும்.  பின் நன்கு கிளறிவிட்டு அதன் முழுமையாக கரையக் கூடிய சர்க்கரையின் அளவு சுமார் 68 சதவிகிதமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
       
பின் இதனை சுத்தமான டின்களில் சுத்தமாக இருக்கும் போதே ஊற்றி பின் குளிரவைக்க வேண்டும்.

இளநீர்: இளநீர் ஒரு உற்சாகப்படுத்தக்கூடிய பானமாகும்.  இதன் மெல்லிய தேங்காய் ஒரு நல்ல உணவாகும்.
       
இந்த இளநீரானது பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்த பானம் ஆகும்.
       
ஏழு மாதமான இளநீரில் குளுக்கோஸின் அளவு மிக அதிகமாக இருப்பதால் இது இளநீருக்கு மிகவும் ஏற்ற பருவமாகும்.
       
இதற்கு குட்டை இரகமான செளகாட் ஆரஞ்சு டிவார்ஃப் மிகவும் ஏற்ற இரகமாகும்.

கள்: தென்னங்கள்ளானது முழுவதும் விரியாத பூம்பாலையிலிருந்து பெறப்படுகிறது. இனிப்பான கள்ளானது மரத்தில் இருந்து இறக்கப்பட்ட புளிக்காத திரவமாகும். புளிக்க வைக்கப்பட்ட கள்ளானது ஆல்கஹால் நிறைந்த பானமாகும்.

தென்னை வினிகர்: தென்னை வினிகரானது தென்னங்கள்ளை புளிக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது.  இது மீன் மற்றும் மாமிச உணவுகள் தயார் செய்யப்படுகிறது

இந்த தென்னங்கள்ளை சுமார் 24 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.  இந்த ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக மாறுவதற்கு சுமார் 10-14 வாரங்கள் வைக்கப்படுவதால் வினிகர் கிடைக்கிறது.

நயம் தேங்காய் எண்ணெய்: நயம் தேங்காய் எண்ணெய் ஆனது நன்கு முதிர்ந்த தேங்காயிலிருந்து எந்த வித இரசாயணப் பொருள்களின் கலப்படமின்றி தயாரிக்கப்படுகிறது.   இது “எண்ணெய்களின் தாய்” என்றழைக்கப்படுகிறது.
       
இதில் ஃபேட்டி அசிட்ஸ், லாரிக் அமிலம், தாதுக்கள், வைட்டமின்கள் ஆன்டி அக்ஸிடன்டுகள் நிறைந்த மருத்துவ குணம் மிகுந்தவை.
       
இதிலுள்ள 50% லெளரிக் அமிலமானது தாய்ப்பாலுக்கு இணையாக இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்ததாகும். இது வைட்டமின் இ நிறைந்த கரையும் தன்மையற்ற எண்ணெய் பசை கொண்டது. இது சோப்பு, லோசன், க்ரீம் மற்றும் லிப் பாம் தயாரிக்க பயன்படுகிறது.

இளநீர் ஷேக்ஸ: இது இளநீரை பருப்பு வகைகளோடு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். பிஸ்தா, பேரிச்சம்பழம் மற்றும் பழவகைகள் (மாம்பழம், அன்னாசி, தர்பூசணி, பப்பாளி) மற்றும் ஏலக்காய், சாதிக்காய் சேர்த்து வெவ்வேறு சுவைகள் மற்றும் நறுமணங்களோடு தயார் செய்யப்படுகிறது.

இளநீர் ஜாம்: 7-8 மாதங்களான இளநீரிலிருந்து இந்த இளநீர் ஜாம் தயார் செய்யப்படுகிறது. நசுக்கப்பட்ட தேங்காய் பருப்பானது 80% சர்க்கரை மற்றும் தேவையான அளவு பதப்படுத்தும் பொருள் சேர்த்து ஜாமாக  மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். வெவ்வேறு விதமான சுவை மற்றும் நிறத்திற்காக வெவ்வேறு வகையான பழச்சாறானது இந்த தேங்காய் பருப்புடன் சேர்க்கப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

தேங்காயிலிருந்து கிடைக்கும் நார்ப்பொருட்கள்:
தேங்காய் நார்:

தேங்காயிலிருந்து உரித்தெடுக்கப்படும் நார் பகுதியான தேங்காய் நாராக உபயோகிக்கப்படுகிறது.  இது 30 மற்றும் 50 கிலோ, 100 (அ) 125 கிலோ மூட்டையாக தயார் செய்யப்படுகிறது.  இதில் 200 மி.மீ நீளமுள்ள தடிப்பான நார், 1செ.மீ முதல் 2செ.மீ நீளமுள்ள துண்டு நார் மற்றும் பல்வேறு தரமான நார் மற்றும் பல்வேறு தரமான நார்ப்பகுதிகள் உள்ளன.

தடிமனான நார்:

தடிமனான நாரானது உரிமட்டையிலிருந்து எடுக்கப்படும் நீளமான மற்றும் வலிமையான நாராகும்.  இந்த நாரானது 250 பாக்கெட்டுகளாகவோ (அ) வேறு அளவிலோ பாக்கெட் செய்யப்பட்டு பின் 100 கிலோ மூட்டையாக விற்கப்படுகிறது.  இது பிரஸ், மிதியடிகள் மற்றும் மெத்தை விரிப்புகள் செய்யப்பயன்படுகிறது.  ஒவ்வொரு நாரின் நீளம் சுமார் 200 மி.மீ ஆகும்.

கதம்பைத்தூள் எனப்படும் நார்ப்பொடி:

உரிமட்டையிலிருந்து எடுக்கப்படும் கதம்பைத்துாள் ஒரு இயற்கையான நார் ஆகும்.  இதில் காணப்படும் நீண்ட நார்களை இணைப்பது சக்கை எனப்படும் நார்ப்பொடியாகும்.  இது 100 சதவிகித இயற்கையான  வளர் ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.  இந்த பொடியானது சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டு பல்வேறு செயல்முறைகளுக்கு பின் முறையே கதம்பைத்துண்டு மற்றும் கதம்பை மாத்திரைகள் ஆகியவை செய்யப்படுகிறது.  நீரில் தாவரங்கள் வளர்ப்பு முறை, தொட்டி வளர்ப்பில் ஒரு சிறந்த வளர் ஊடகமாக பயன்படுகிறது.  இதில் இயற்கையான வளர் ஊக்கிகள் மற்றும் எதிர்ப்பு தன்மை பண்புகள் அதிகமாக காணப்படும்.

உரிமட்டை சீவல்கள்:

husk chips

முதல் 1 இன்ச் அளவில் துண்டுகளாகஇயற்கையான உரிமட்டை சீவல்கள் முறையே  வெட்டப்படுகிறது.  இது 10 மடங்கு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.  இந்த நீரை நீண்ட காலத்திற்கு தாவரங்களுக்கும் தருகிறது.  இது 100 சதவிகித இயற்கையான அங்கக பொருளாகும்.  உரிமட்டை சீவல்கள் 100 சதவிகித உரத்தை பயிர்களுக்கு எல்லா சூழல்களிலும் கொடுக்க வல்லது.  இந்த உரிமட்டை சீவல்கள், களைப்பயிர், பூச்சிகள் மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதலின்றி காணப்படும்.  மணற்பாங்கான மற்றும் கடினமான மண்ணில் விதை முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.

கொட்டாங்குச்சி ஐஸ்கீரிம் கப்:

ice cream cup

கொட்டாங்குச்சியை (தேங்காய் தொட்டியை) பக்கவாட்டில் வெட்டி உற்புறத்தையும் வெளிப்புறத்தையும் நன்கு சுரண்டி குளோரின் நீரில் சுத்தம் செய்து பின் காய வைத்து ஐஸ்கிரீம் கப்புகளாக உபயோகிக்கலாம்.  பொதுவாக 185 மி.லி முதல் 200 மி.லி  அளவுள்ள ஐஸ்கிரிம் கப்புகள் முறையே 200 எண்ணிகையில் அட்டைப்பெட்டியில் அடுக்கப்பட்டு விற்கப்படுகிறது.

சிரட்டையிலிருந்து செய்யப்பட்ட தேங்காய் கூடைகள்:

pot

சிரட்டையிலிருந்து செய்யப்பட்ட தேங்காய் கூடைகள் ஒரு சிறந்த தாவர வளர் ஊடகமாகும்.  இந்த வளர் ஊடகத்தில் நிறைய துளைகள் இருப்பதால் காற்றோட்டத் தன்மை அதிகரித்து காணப்படுவதோடு தாவரங்கள் வேகமாக வளர்கிறது.  தாவரங்கள் வளர்வதற்கு குறைவான அளவு நீரே தேவைப்படுகிறது.

சிரட்டை புன்னட்:

punnet

இது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது.  இது செவ்வக வடிவ நாற்றங்கால் சிரட்டை புன்னட் ஆகும்.

சிரட்டை குச்சிகள்:

சிரட்டைத் துாளானது பி.வி.சி குழாய்கள் (அ) மரக்குச்சியின் மேல் பொருத்தப்பட்டு தாவரங்கள் இதன் மீது வளர்வதற்கு இது ஒரு தாங்கியாக செயல்படுகிறது.  இது 1மீட்டர், 1.5 மீ (அ) 2 மீட்டர் நீளங்களில் பழமையான தென்னங்குச்சியாக பயன்படுத்தப்படுகிறது.

சிரட்டைத்தூள்:

 

சிரட்டைத் துாளானது 25 கிலோ மூட்டைகளாக 1:2 என்ற விகிதத்தில் அழுதப்பட்ட நார்பொடி துண்டுகளாகவோ அல்லது பொடியாகவோ வெவ்வேறு அளவுகளில் விற்கப்படுகிறது.


இயற்கையான தேங்காய்த் தொட்டி:

இயற்கையான தேங்காய் தொட்டியில் அங்கக மண் நிரப்பப்பட்டு வீடுகளினுள் செடிகள் வளர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.





தேங்காய் நார்ப்பாய்கள்:

தோட்டம் அமைத்தலில் பயன்படுகிறது.





சூடு ஏறாத விரிப்புகள்:

இவ்விரிப்புகள் கைத்தறி நெசவு அல்லது இயந்திரத்தினால் நெய்யப்படுகின்றது.  இயற்கையான கடற்கரை ஓரங்களில், பல வண்ணங்கள் கலந்து வெவ்வேறு வடிவங்களில் இழைக்கப்படுகிறது.  இவை மரப்பாலில் தோய்த்தும் அல்லது சாதாரணமாகவும் சாயங்கள் பூசப்படுகின்றது.  இதன் தரமானது, பயன்படுத்தப்படும் நுால் மற்றும் இழைக்கப்படும் முறையைப் பொறுத்து வேறுபடுகிறது.  பெரும்பாலும் வீட்டு வாசற்படியிலும், தரை விரிப்புகளாக ஓரங்களிலும் பயன்படுகின்றது.  அதோடு, சுவர் அடைப்புகள் மற்றும் பூசப்பட்டுள்ள இடங்களை அழகுபடுத்தவும், இயற்கைப் பொருளான இத்தேங்காய் நார் விரிப்புகள் பயன்படுகின்றன.

நெய்யப்பட்ட (நெசவு) நார்-ஜியோ:

ஜியோ நார்கள் நிலத்தின் மேற்பரப்பைப் பாதுகாத்துத் தாவர வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன.  இயற்கையின் நண்பனான இந்த ஜியோ நார்ப் போர்வைகள் நெய்யப்பட்டோ அல்லது சாதாரணமாகவோ தயார் செய்யப்படுகின்றன.  இவ்வற்புத நார்கள் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகின்றன.  நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைக்கப்படக்கூடிய இது பலவகையான சரிவுகளில் மண்ணின் நிலைப்புத் தன்மைக்கும், தாவரங்கள் பல வளர்வதற்கும் பெரிதும் உதவுகின்றது.

மீன்பிடி விரிப்புகள்:

இவை கைத்தறி நெசவு அல்லது இயந்திரத்தினாலும் நெய்யப்படுகின்றன.  இவை தனது மெல்லிய (உயரம்) தடிப்பிற்குப் பெயர் பெற்றவை. நெசவின்போது கற்றைகளாக இந்த இழைகள் வெளியிடப்படுகிறன்து. தேங்காய் நாரின் சரடானது, நீண்ட குறுகிய (தடி) கம்பி போன்ற அமைப்புடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.  இக்கம்பியின் ஒரு முனை கத்தி போன்று கூராக அமைந்திருக்கும்.  சரடானது இக்கம்பி வழியே செலுத்தப்படும்போது, மிக மெல்லிய இழைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை திடமான விரிப்புகள், கீறல் போன்ற கோடு அமைப்புகள், அட்டைத் தகடுகள், ஓடுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.  2 இழை மற்றும் 3 இழை மீன்பிடி விரிப்புகள் உள்ளன.  இரண்டு இழையை விட 3 இழை வகை விரிப்புகள் மிக மென்தன்மை கொண்டவை.  இவைத்தவிர ‘கார்னடிக் விரிப்புகள்’ எனப்படும் சணல் நார்களினால் ஆன சிறப்பு வகை விரிப்புகளும் காணப்படுகின்றன.

தென்னைநார் ஜமுக்காளங்கள்:

தென்னை நார்கள் ஜமுகாள விரிப்பு அளவிற்கு ஏற்றவாறு நறுக்கப்பட்டு அதன் ஓரங்கள் மடித்துத் தைக்கப்படுகின்றன.  அதோடு இரப்பர் மற்றும் மரப்பால் கொண்டு காய்ச்சப்பட்டு, சாயமிடப்பட்ட இவ்விரிப்புகள் கண்ணைக் கவரும் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.  இவை அழகூட்டும் நெய்யப்பட்ட விரிப்புகளாக கடைகளில் கிடைக்கின்றன.

கிரிக்கெட் ஆடுகள பாய்கள்:

3 அல்லது 4 வரிசைகளில் பின்னப்பட்ட இந்த பாய்கள் கிரிக்கெட் ஆடுகளங்களில் உபயோகிக்கப்படுகிறது.


கயிற்றுப்பாய்கள்:

இது கடின நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட காதலர்களின் முடிச்சு என  என அழைக்கப்படுகிறது.  இது நீள்வட்ட செவ்வக மற்றும் வட்ட வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.  இயற்கையான நிறங்களிலோ (அ) பல்வேறு நிறங்களிலோ திடமாக காணப்படும்.

சின்னட்பாய்கள்:

இவை நார்ப்பின்னல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபுறமும் பிரஸ் அற்ற பாய்கள்.  இவை தனியாகவோ அல்லது இரட்டையாகவோ பல்வேறு வகையான நிறங்களில் கிடைக்கும்.

பின்னப்பட்ட பாய்கள்:

இது இரண்டு வரிகளில் பின்னப்பட்ட பாய்கள்.  இது இருபக்கங்களிலும் கடினமாகவும் அடர்த்தியாகவும் காணப்படும்.  இது இயற்கையான நிறத்திலோ (அ) வெளிர்க்கச் செய்யப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது.  இது கம்பளி வடிவிலோ உருளை வடிவிலோ (அ) பாய் அளவிலோ காணப்படும்.

தென்னை நார் சரடு:

நீரில் அமிழ்த்தப்பட்ட கட்டுகளைத் தவிர, பந்து, உருளை மற்றும் நுால் சுற்றும் கம்பி வடிவிலும், வேளாண்மைப் பயன்பாடுகளுக்காக சிறுசிறு துண்டுகளாகவும் இத்தென்னை நார் சரடுகள் கிடைக்கின்றன.


ஒட்டுக்சுவர் விரிப்புகள்:

இரப்பர் (மரப்பால்) கொண்டு காய்ச்சப்பட்ட தென்னை நார் சுவர் விரிப்புகள் முனைகளுடனும் முனைகள் அற்றும் தேவைக்கு ஏற்றார் போல் கிடைக்கிறது.  ஒரு சுவரிலிருந்து மறுபுறம் சுவர் வரை விரிப்புக்கு ஏற்றவை.  விரிப்புகள் நறுக்கப்பட்டு இரப்பர் கொண்டு முனைகள் குறுகளாகவும், ஓடுகள்/சுவர்களுக்கு ஏற்ற அளவிலும் இவை தயாரிக்கப்படுகின்றன.

வலை விரிப்புகள்:

இவை இயற்கையாகவே, பல வண்ணங்களில் நம் விருப்பத்திற்கேற்ற வகைகளில் கிடைக்கின்றன.  இவ்வலை விரிப்புகள் புதுவித முடிச்சுகளுடன சாதாரண வலைப்பின்னல் போன்ற துாரிகை அற்றவாறு எளிமையாகக் காணப்படுகின்றன.


தென்னை நார் ஜமுக்காள வரிப்புகள்:

நார்கள் ஜமுகாள விரிப்பு அளவிற்கு ஏற்றவாறு நறுக்கப்பட்டு, முனைகள் கூர்மையற்று மடித்துத் தைக்கப்பட்டும் காய்ச்சிய மரப்பால் கொண்டு ஒட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.


தரை விரிப்புகள்:

அழகிய வேலைப்பாடுகளுடன், கண்ணைக் கவரும் வண்ணங்களில் தரைக்கு ஏற்றவாறு பல்வேறு அளவுகளில் நெய்யப்படுகின்றன.


நடைபாதை விரிப்புகள்:

இருபுறமும் கம்பிகளுடன் கூடிய, துாரிகையற்றவாறு இவை உருவாக்கப்படுகின்றன.  நெய்யப்பட்டும் பின் ஓரங்கள் காய்ச்சிய மரப்பால் கொண்டு ஒட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

முயரள்: தென்னை நார்களைக் கொண்டு உருவாக்கப்படும் அழகுப் பொருட்கள் ஆகும்.

மேலே செல்கமேலே செல்க

தென்னை நார் இயந்திரங்கள்: தென்னை நாரைப் பிரித்தெடுக்கப்படும் இயந்திரங்கள்: -

  • நன்கு நசுக்கப்பட்டு, தண்ணீரில் ஊறவைக்கப்பட்ட உரிமட்டையானது நார் பிரித்தெடுப்பதற்கென டி.எப் (DF)  எனப்படும் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.
  • ஒன்றுபடுத்தும் முறை மூலம் நார் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • நீண்ட நேரான உரோமங்கள் முக்கியப் பகுதி வழியாகவும், சராசரி, சிறிய மற்றும் துண்டுகளான நார் மரச்சோற்றுடன் கலந்து அதற்கென இணைக்கப்பட்டுள்ள உருளை போன்ற அமைப்பு வழியே வெளியேற்றப்படுகின்றது.

2 மடிப்பு தென்னை நார் நூற்பு இயந்திரம்:

  • 2 மடிப்பு கொண்ட தென்னை நார் நுாற்பு இயந்திரங்கள் நேரடியாக மட்டைகளை உட்செலுத்த ஒரு வாய்ப்பகுதி கொண்ட குறைந்த விலையில் கிடைக்கும் இயந்திரங்கள் ஆகும்.  மேலும் இது மரச்சிராய்களை உள்ளேயே நீக்கி சுத்தமான நாரினைக் கொடுக்கிறது.
  • இவ்வியந்திரமானது 2 மடிப்பு நார்களை 100 ஒட்டுதலுக்கு (8 மி.மீ தடிமன்) முதல் 260 ஒட்டுதலுக்கு (3 மி.மீ தடிமன்) வரை நுாற்றுத் தருகின்றது.  நாரினை கடத்தி வழியே செலுத்தும் போதே நமக்குத் தேவையான தடிமனுக்கு ஏற்றவாறு அமைத்து கொள்ளலாம்.
  • அதிக தடிமன் கொண்ட மட்டை நார்களுக்கு 60 கி.கி மென் தடிமன் கொண்ட இரகங்களுக்கு 160 கி.கி வரையிலும் உற்பத்திக் கொள்ளளவு இருக்கும்.
  • 0.75 குதிரைத்திறன் (HP) கொண்ட ஒற்றை மோட்டார் இயக்குபவர் மட்டுமே இதை இயக்கப் போதுமானவர்.

தென்னை நார் அச்சுகள்/கட்டைகள் உருவாக்கும் இயந்திரம்:
கொள்ளளவு:  2000 கி.கி/8 மணிக்கு
அச்சின் அளவு (கட்டை) : 30 செ.மீ x 30 செ.மீ x 10 செ.மீ = 5 கி.கி அச்சு/கட்டை
20 (HP) குதிரைத் திறன் கொண்ட மோட்டாரில் இயங்கக்கூடியது.

கோகோ தாவர மட்கு (கரி) எரிபொருள் தயாரிக்கும் இயந்திரம்: (தானியங்கி இயந்திரம்)
கொள்ளளவு: 2000 கி.கி/8 மணிக்கு
அச்சு (கட்டை) அளவு:  20 செ.மீ x 10 செ.மீ x 5 செ.மீ= 650 கி கரி
20 (HP) குதிரைத்திறன் மோட்டாரில் இயங்கக் கூடியது.

கோகோ தாவரமட்கு கரிக்கட்டை தயாரிக்கும் இயந்திரம்:

  • 5 கி.கி கட்டை 30 செ.மீ x 30 செ.மீ x 12 செ.மீ என்ற அளவில் உற்பத்தி 5 டன்கள்/8 மணி
  • 650 கி கரிக்கட்டையை 20 செ.மீ x 10செ.மீ x 5 செ.மீ என்ற அளவில் 3 டன்கள்/ 8 மணி உற்பத்தி செய்யலாம்.
  • மின்சார திறன்: 25 (HP)  குதிரைத்திறன் மோட்டார்.
  • மேற்கண்ட 5 கி.கி மற்றும் 650 கி அளவுகள் கொண்ட கரிக்கட்டைகள் ஒரே இயந்திரத்திலும் அல்லது தனித்தனி இயந்திரத்தில் தயாரிக்கவும் முடியும்.

இயந்திர விற்பனையாளர்கள்: -
http://www.coconutboard.nic.in/dynamic/dirinfo/frmproductquery.aspx?id=prod

(கீழ்கண்ட இயந்திரங்களைத் தவிர...

தேங்காய் துவையல்
தேங்காய் தொட்டி (சார்கோல்) கரி
தேங்காய் பருப்பு வேகவைப்பான்
(DC) டிசி இயந்திரம்
அச்சு வடிகட்டி
நுண் வடிகட்டி
எண்ணெய் (நீக்கி) பிரித்தெடுக்கும் இயந்திரம்
அடைப்பான்
பவர் டில்லர் மற்றும் கலப்பை
ேராட்டரி இயந்திரம்
ஆவிக்கொப்பரை
இளநீர்த் தேங்காய்களை வண்டி ஏற்றும் இயந்திரம்)

இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள்:

மேலே செல்க

 

 

 

 

 

 

#6FC061அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்