ஊட்டச்சத்து மேலாண்மை

ஊட்டச்சத்து மற்றும் அதன் தேவைகள்
- ஊட்டச்சத்தின் செயல்பாடுகள்
- தமிழ்நாட்டில் இடப்படும் உரங்கள்: TNAU
- கர்நாடகவில் இடப்படும் உரங்கள்
- கேரளாவில் இடப்படும் உரங்கள்
- நன்கு வளர்ச்சியடைந்த தென்னை மரங்களுக்கு தேவையான உர அளவுகள்
- உரம் இடும் முறைகள்
- உயிர் உரங்கள்
- மண் புழு உரம்
- தேங்காய் நார் கழிவு
- தென்னைக் கழிவு மறு சுழற்சி
- TNAU தென்னை “ஊக்கமருந்து”
- இயற்கை வழி மறு சுழற்சி

பயிர் வினையியல் குறைபாடுகள்
1. முக்கிய குறைபாடுகள்
- தழைச்சத்து பற்றாக்குறை
- மணிச்சத்து பற்றாக்குறை
- சாம்பல் சத்து பற்றாக்குறை
- போரான் சத்து பற்றாக்குறை
- மாங்கனீசு பற்றாக்குறை
- மெக்னீசிய சத்து பற்றாக்குறை

2. இதர பற்றாக்குறைகள்
- கந்தக சத்து பற்றாக்குறை
- இரும்பு சத்து பற்றாக்குறை
- துத்தநாக சத்து பற்றாக்குறை
- கால்சியம் பற்றாக்குறை
- தாமிரச்சத்து பற்றாக்குறை

தென்னையின் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள்

தென்னை ஊட்டச்சத்துக்கு தேவையான தனிமங்கள்:

  • முதன்மை ஊட்டச்சத்துக்களில், தென்னை உற்பத்திக்கு சாம்பல் சத்து மிகவும் முக்கியமானது.  அதனைத் தொடர்ந்து தழைச்சத்து ஆகும்.  பொதுவாக சாம்பல்சத்து மற்றும் தழைச்சத்து இடுவதற்கு நல்ல செயல்பாடு இருக்கும்.  ஆனால் மணிச்சத்தின் செயல்பாடு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் இருக்கும்.
  • இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களில், மெக்னீசியம் மற்றும் குளோரின் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.  அதனைத் தொடர்ந்து கால்சியம், கந்தகம் மற்றும் சோடியம் ஆகும்.  நுண்ணுட்டச்சத்துக்களில் துத்தநாகம், போரான் மற்றும் மாங்கனீசு சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் தேவைப்படுகிறது.
ஊட்டச்சத்தின் செயல்பாடுகள்:

நைட்ரஜன் (தழைச்சத்து):

தாவர செல்லிற்கும், இலைகளின் பச்சை நிறத்திற்கும் தழைச்சத்து மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.  தென்னை மரத்தின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு முக்கியமானதாகும்.  தழைச்சத்தானது தாவர பாகங்களான இலைகள் மற்றும் குருத்துக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  மேலும் இலைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்துகிறது.

பாஸ்பரஸ்  (மணிச்சத்து): பாஸ்பரஸ் இலைகள் மற்றம் விதைகளில் அதிகமாக இருக்கும்.  மேலும் செல்பிளவு நடக்கும் பகுதிகளிலும் அதிகமாக இருக்கும். இது வேர்களின் வளர்ச்சி மற்றும் அதிக மகசூலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டாஷியம் (சாம்பல் சத்து):



சாம்பல் சத்து மிகவும் இன்றியமையாத ஒன்று ஆகும்.  இது பாஸ்பரசுடன் இணைந்து செயலாற்றுகிறது.  இது தாவரங்களில் தண்ணீர் பொருளாதாரத்தை சரி செய்கிறது.  ஆகவே,  சாம்பல் சத்தானது, தேவைப்படும் அளவிற்கு மட்டும் நீரை தாவரங்களால் எடுக்கச் செய்து, அதிக மகசூலுக்கு  வழிவகை செய்கிறது.  இது தாவரத்திற்கு வளர்ச்சியைத் தாங்கி வளர உதவுகிறது.  வேர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.  அதிக ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ள மரங்களுக்கு உதவுகிறது.  சர்க்கரை, கொழுப்பு, மற்றும் நார்ப்பொருட்கள்  உருவாவதற்கு பொட்டாஷியம் தேவையாகும்.  ஆகவே தென்னை மரத்திற்கு சாம்பல்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது.

மாங்கனீசு:


இலைகளில் பச்சையம் உருவாதற்கு இது முக்கியம் ஆகும்.  இது கீழ் இலைகளின் அதிகம் இருக்கும்.  மேலும் மாங்கனீசு தென்னை மரங்களின் இளம் நிலைகளில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மெக்னீசியம்:

மெக்னீசியம், மரத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.  அதிக அளவில் பெண் பூக்கள் உருவாக்கம்,  காய்பிடிப்பு சதவீதம் அதிகரித்தல் மற்றும் குலைகளில் காய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற செயல்களை செய்கிறது.  இது  ஒளிச்சேர்க்கை மற்றும் இலைகளின் பச்சை நிறத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

கந்தகம்:


கந்தகச்சத்தானது, ஆறாவது முக்கியமான சத்தாகும்.  பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை போன்றே தாவரங்களால் வழக்கமாக எடுத்து கொள்ளப்படும் சத்தாகும்.  மொத்த கந்தகத்தின் அளவு தாவரங்களில் 0.25% முதல் 0.5% வரை வேறுபடும்.

 உதாரணமாக,  ஒளிச்சேர்க்கை,  சர்க்கரை மற்றும் மாசத்து,  அமினோ அமிலம் மற்றும் புரதம், போன்றவை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  எண்ணெய் மற்றும் கொழுப்பு கூட்டிணைவு செயல்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

மேலே செல்கமேலே செல்க

தமிழ்நாட்டில் இடப்படும் உரங்கள்:
இரசாயன உரமானது இரண்டு சமபாகங்களாக ஜுன்-ஜுலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இடப்படுகிறது.  எரு மற்றும் இரசாயன உரங்களை தென்னை மரத்தின் அடியிலிருந்து 1.8 மீ துாரத்தில் வட்டப்பாத்திகளில் இட வேண்டும்.  மேலும் உரம் இடும்போது அவை நன்கு மண்ணில் கலக்க, போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு நீரை பாய்ச்ச வேண்டும். மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாகவோ அல்லது டிஎபி -யை நல்ல நீர் கிடைக்கும்போது நீர்வழி ஊட்டமாகவோ இடவேண்டும்.

தென்னை மரத்திற்கு தேவையான உர அளவுகள் - தமிழ்நாடு

நடவு நட்ட
பிறகு உரம் இடும் காலம்

தொழு உரம்
(கி.கி/தென்னை/
வருடம்)

பொதுவான பரிந்துரை
கிராம்/தென்னை

நேரடி இரசாயன உரம்
1 கிராம்/1 தென்னை 

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர்
பாஸ்பேட்

மியூரெட் ஆப்
பொட்டாஷ்

நடவு நட்ட 6 மாதத்திற்கு பிறகு

10

-

-

-

-

-

-

இரண்டாம்
வருடம்

 

20

 

140

 

80

 

300

 

300

 

500

 

500

மூன்றாம்
வருடம்

 

30

 

280

 

160

 

600

 

610

 

1000

 

1000

நான்காம்
வருடம்

40

420

240

900

910

1500

1500

ஐந்தாம்
வருடம்

 

50

 

560

 

320

 

1200

 

1300

 

2000

 

2000

 

அரைவட்ட குழிகளில் உரமிடுதல் - பழைய முறை

 

நடவிற்கு
பிறகு உரம்
இடும் காலம்

 

டிஏபி மற்றும் மற்ற உரங்கள் 1 கிராம் வீதம் 1 மரம்

17:17:17 கலப்பு உரம் கிராம்/மரம்

20:20:0 கலப்பு உரம் கிராம்/மரம்

டிஏபி

யூரியா

எம்.ஓ.பி

17:17:17
கலப்பு உரம்

யூரியா

எம்.ஓ.பி

20:20:0
கலப்பு உரம்

யூரியா

எம்.ஓ.பி

இரண்டாம்
வருடம்

174

235

500

470

130

365

400

130

500

மூன்றாம் வருடம்

348

470

1000

940

260

730

800

260

1000

நான்காம்
வருடம்

522

700

1500

1410

390

1095

1200

390

1500

ஐந்தாம்
வருடம்

696

940

2000

1880

520

1460

1600

520

2000


நீர்பாசனத்தின் கீழ் உரங்களை இடும்போது 3-4 சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.
       
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள வீரிய இரக தென்னை மரங்களுக்கு 1000:500:2000 கிராம் தழை:மணி:சாம்பல் சத்துக்கள் வருடத்திற்கு மரம் ஒன்றிற்கான அளவுகள் என பரிந்துரை செய்யப்படுகிறது.
       
பரிந்துரைக்கப்பட்ட மேற்கூறிய உர அளவுகளிலிருந்து 75% உரங்களை நீர்வழி உரமிடுதல் மூலமாக ஒரு மாத இடைவெளிகளில் இடப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுட்டச் சத்துக்களின் கலவை - தமிழ்நாடு
பரிந்துரை செய்யப்பட்ட அளவுகள் - 1 கிலோ / 1 மரத்திற்கு/ ஒரு வருடத்திற்கு ( பெரஸ், மாங்கனீசு,  துத்தநாகம் , போரான் மற்றும் தாமிரம்)
உரம் இடும் முறைகள்: மண்ணில் அடியுரமாக தொழு எருவுடன் கலந்து இட வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

கர்நாடகாவில் இடப்படும் உரங்கள்:
தொழுவுரம்:
நடுவதற்கு முன் ; 12.5 டன்\ எக்டர்
ஒவ்வொரு வருடமும் – 50 கிலோ \ மரத்திற்கு

பருவகாலத்திற்கு முந்தைய நிலையில் தேவையான உர அளவுகள்: -

  நடவிற்கு பிறகு உரம்
இடும் காலம் 

 

பொதுவாக பரிந்துரைக்கப்படும்
உர அளவுகள் (கிராம்/தென்னை/வருடம்)

நேரடி இரசாயன உரம்
(கிராம்/தென்னை/வருடம்)

பருவகாலத்திற்கு
முன்பு

பருவகாலத்திற்கு
பின்பு

பருவகாலத்திற்கு
முன்பு

பருவகாலத்திற்கு
பின்பு

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

எஸ்.எஸ்.பி

எம்.ஓ.பி

யூரியா

எஸ்.எஸ்.பி

எம்.ஓ.பி

நடவு நட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு

நடவின் காலம்
மே-ஜுன்

50

 

40

 

135

 

-

 

-

 

-

 

110

 

250

 

225

 

நடவு நட்ட 2 வருடத்திற்குப் பிறகு

50

 

40

135

110

80

270

110

250

225

240

 

500

 

450

நடவு நட்ட 3 வருடத்திற்குப் பிறகு

110

 

80

 

270

 

220

160

540

240

500

450

480

1000

900

நடவு நட்ட 4 வருடத்திற்குப் பிறகு

170

120

400

330

200

800

370

750

670

720

1250

1335


நடவிற்கு பிறகுஉரம் இடும்காலம் டிஏபி உரங்கள் மற்றும் மற்ற உரங்கள்
( கிராம்/1 மரம்/1 வருடம்)
பருவ காலத்திற்கு முன்பு பருவ காலத்திற்கு பின்பு
  டிஏபி யூரியா எம்.ஓ.பி டிஏபி யூரியா எம்.ஓ.பி
நடவு நட்ட ஒரு வருடத்திற்கு பின்பு - - - 87 75 225
நடவு நட்ட இரண்டு வருடத்திற்கு பின்பு 87 75 225 175 170 450
நடவு நட்ட மூன்று வருடத்திற்கு பின்பு 175 170 450 348 340 900
நடவு நட்ட நான்கு வருடத்திற்கு பிறகு 260 267 670 435 545 1335


நடவிற்கு பிறகு உரம் இடும் காலம் 17 :7 :17 கலப்பு உரம் 1 கிராம்/1 மரம்
பருவ காலத்திகு முன்பு பருவ காலத்திற்கு பின்பு
17:17:17 கலப்பு உரம் யூரியா எம்.ஓ.பி 17:17:17 கலப்பு உரம் யூரியா எம்.ஓ.பி
நடவு நட்ட 1 வருடத்திற்குப் பிறகு _ _ _ 235 22 158
நடவு நட்ட 2 வருடத்திற்குப் பிறகு 235 22 158 470 65 315
நடவு நட்ட 3 வருடத்திற்குப் பிறகு 470 65 315 941 130 630
நடவு நட்ட 4 வருடத்திற்குப் பிறகு 705 110 465 1176 282 664

நடவிற்கு பிறகு உரம் இடும் காலம் 20:20:0 கலப்பு உரம்  (கிராம்|மரம்)
பருவகாலத்திற்கு முன்பு பருவகாலத்திற்கு பின்பு
20:20:0 கலப்பு உரம் யூரியா எம்.ஓ.பி 20:20:0 கலப்பு உரம் யூரியா எம்.ஓ.பி
நடவு நட்ட 1 வருடத்திற்கு பிறகு _ _ _ 200 22 225
நடவு நட்ட 2 வருடத்திற்கு பிறகு 200 22 225 400 65 450
நடவு நட்ட 3 வருடத்திற்கு பிறகு 400 65 450 800 130 900
நடவு நட்ட 4 வருடத்திற்கு பிறகு 600 110 670 1000 282 1335

கடற்கரை ஒரங்களில் உள்ள காய்க்கும் மரங்களுக்கு மெக்னீசியம் சல்பேட்டை  ஐ 0.5 கிலோ என்ற வீதத்தில் மரம் ஒன்றிற்கு இட வேண்டும். (செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சுண்ணாம்புச் சத்து உரத்தை உரமிடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக மண்ணில் கலக்க வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

கேரளாவில் இடப்படும் உரங்கள் -
இளம் தென்னைக்கு இடப்படும் உரங்கள்: நடவு நட்ட பிறகு முதல் இரண்டு வருடங்களில் மானாவாரி நிலங்களில் உரங்களை  இரு சம அளவுகளில் பிரித்து இட வேண்டும்.  உர அளவுகள் கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இளம் தென்னை மற்றும் நன்கு வளர்ந்த தென்னை மரங்களுக்கு தேவையான உர அளவுகள் - கேரளா.
மானாவாரி நிலங்களில்:

நடவிற்கு பிறகு உரம் இடும் காலம்

பொதுவாக பரிந்துரைக்கப்படும்
உரம்(கிராம்/தென்னை)

நேரடியான இரசாயன உரம் (கிராம்/தென்னை)

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரெட் பொட்டாஷ்

3 மாதங்களில்

 50

 32

120

110

200

 200

முதல் வருடத்தில்

 167

 107

 400

 360

670

660

2ஆம்  வருடத்தில்

 334

214

800

720

1340

1330


நடவிற்கு பிறகு உரம் இடும் காலம் டி.ஏ.பி மற்றும் பிற உரங்கள்(கிராம்/தென்னை) 17:17:17 கலப்பு உரம் (கிராம்/தென்னை) 20:20:0 கலப்பு உரம் (கிராம்/தென்னை)
டி.ஏ.பி யூரியா மியூரெட் பொட்டாஷ் 17:17:17 கலப்பு உரம் யூரியா மியூரெட் பொட்டாஷ் 20:20:0 கலப்பு உரம் யூரியா மியூரெட் பொட்டாஷ்
3 மாதங்களில் 70 81 200 188 40 146 160 40 200
முதல் வருடத்தில் 232 271 660 630 130 486 535 130 660
2 ஆம் வருடத்தில் 464 545 1330 1258 260 973 1070 260 1330

 

மேலே செல்கமேலே செல்க

நன்கு வளர்ச்சியடைந்த தென்னை மரங்களுக்கு தேவையான உர அளவுகள் -
கேரளா மாநிலத்தில்...

  பொதுவான பரிந்துரை (கிராம்/தென்னை) நேரடி இரசாயன உரம் (கிராம்/தென்னை)
தழைச் சத்து  மணிச் சத்து சாம்பல் சத்து யூரியா அமோனியம் சல்பேட் சூப்பர் பாஸ்பேட் ராக் பாஸ்பேட் மியூரெட் பொட்டாஷ்
a) சராசரியான உர மேலாண்மை 340 170 680 750 1650 1060 570 1130
b) சிறந்த உர மேலாண்மை 500 320 1200 1080 2000 2000 1070 1990
சீர் செய்யப்பட்ட களிமண் வகைகளுக்காக (குட்டநாடு) 250 350 900 540 1190 2190 1170 1495
சிவப்பு வண்டல் மண்ணில் (தென் கேரளா) 680 230 900 1480 3240 1440 770 1495
வீரிய ஒட்டு மற்றும் உயர் விளைச்சல் ரக தென்னைகள் 
a) பாசன நீர் பகுதிகளுக்கு 1000 500 2000 2170 4880 3130 1670 3320
b) மானாவாரி நிலைகளுக்கு 500 320 1200 1090 2380 2000 1070 1990


நடவிற்கு பிறகு உரம் இடும் காலம் டி.ஏ.பி மற்றும் பிற உரங்கள் கிராம்/தென்னை 17:17:17 கலப்பு உரம் கிராம்/தென்னை 20:20:0 கலப்பு உரம் கிராம்/தென்னை
டி.ஏ.பி யூரியா மியூரெட் பொட்டாஷ் 17:17:17 கலப்பு உரம் யூரியா மியூரெட்டல் பொட்டாஷ் 20:20:0 கலப்பு உரம் யூரியா மியூரெட் பொட்டாஷ்
அ) சராசரியான உர மேலாண்மை 370 595 1130 1000 370 847 850 370 1130
ஆ) சிறந்த உர மேலாண்மை 695 814 1990 1882 390 1460 1600 390 1990
சரிசெய்யப்பட்ட களிமண் வகைகளுக்காக (குட்ட நாடு) 760 297 1495 1470 625 (எஸ்.எஸ்.பி) 1080 1250 625  (எஸ்.எஸ்.பி) 1495
சிவப்பு வண்டல் மண்ணில் (தென் கேரளா) 500 1280 1495 1353 977 1112 1150 977 1495
வீரிய ஒட்டு மற்றும் உயர் விளைச்சல் ரக தென்னைகள்
அ) பாசன நீர் பகுதிகளுக்கு 1085 1750 3320 2940 1085 2490 2500 1085 3320
ஆ)  மானாவாரி நிலைகளுக்கு 695 814 1990 1882 390 1460 1600 390 1990

 

  1. நீர் பாசன நிலைகளில் உரங்களை 3 முதல் 4 சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.

  2. தாழ்வான பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைவான பின்பு ஒரு தடவை மட்டும் உரம் இட வேண்டும். அல்லது சூழ்நிலை ஏதுவாக இருப்பின் இரு தடவை பிரித்து இட வேண்டும்.

  3. முதல் மூன்று வருடகளுக்கு ஒரு குழிக்கு 10 கிலோ வீதம் அங்கக பொருள்களான மர இலைகள், மாட்டுச்சாணம், தேங்காய் நார் கழிவு, அல்லது சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட தென்னை கழிவுகளை இட வேண்டும்.  அதன் பிறகு 15-25 கிலோ வீதம் இந்த அங்கக பொருட்களை இடுவதன் மூலம் தென்னை மரங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்.  இது மணல் சார்ந்த கடலோர பகுதிகளுக்கு மிகவும் உகந்ததாகும்.

  4. மண்ணில் கிடைக்கக் கூடிய பாஸ்பரஸின் அளவு 10 ppm- க்கு அதிகமாக இருக்கும் பொழுது பாஸ்பரஸ் சார்ந்த உரங்கள் இடுவதை சில வருடங்களுக்கு தவிர்க்க வேண்டும்.  அதாவது பாஸ்பரஸின் அளவு  10 ppm ஐ அடையும் வரையாகும்.

  5. மணல் மற்றும் மணல் கலந்த பசலை மண் உள்ள ஒட்டுனுகரா மற்றும் அதே போன்ற பகுதிகள் மற்றும் வேர் வாடல் நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் கலப்பின இரக தென்னை மரங்களுக்கு முறையே 500 கிராம் தழைசத்து+ 300 கிராம் மணிசத்து + 1000 கிராம் சாம்பல் சத்து மேலும் அதனுடன் 500 கி மெக்னீசியம் சல்பேட் போன்றவற்றை மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு இட வேண்டும்.

  6. வேர் வாடல் நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் மக்னீசியம் சல்பேட்டை தென்னை மரங்களுக்கு மாநிலம் முழுவதும் பரிந்துரை செய்யப்பட்டது. (அட் ஹாக் பரிந்துரை)

  7. பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்துகள்  மரங்களில் மகசூலை அதிகப்படுத்தும் .  அதாவது ஒரு மரத்திற்கு வருடம் ஒன்றிற்கு 100 காய்கள் கிடைக்கும். வருடம் ஒன்றிற்கு ஒரு மரத்திற்கு 100 காய்களுக்கு மேல் கிடைக்க வேண்டுமெனில், கூடுதல் உரமாக 10 கிராம் தழைசத்து, 5 கிராம் மணி சத்து, மற்றும் 15 கிராம் சாம்பல் சத்து இட வேண்டும்.  (அட் ஹாக் பரிந்துரை)

  8. செம்பொறை மண்ணில் சோடியம் ஆக்ஸைடை சோடியம் குளோரைடு வடிவில் இடுவதன் மூலம் 50% சாம்பல் சத்தின் தேவையானது பூர்த்தி செய்யப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

உரம் இடும் முறைகள்: மண்ணில் ஈரப்பதம் போதுமானதாக உள்ள நிலையே உரம் இடுவதற்கு ஏற்ற தருணமாகும்.  மானாவாரி நிலங்களில் உரங்களை இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும்.  தென் மேற்கு பருவக்காற்றின் தொடக்கத்தில் 3ல் ஒரு பங்கு உரத்தை ஏப்ரல்-ஜுன் மாதங்களிலும், 3ல் இரண்டு பங்கு உரத்தை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் இட வேண்டும்.  நீர்பாசன நிலங்களில் உரத்தை மூன்று அல்லது நான்கு தடவைகள் சம பாகுகளாய்ப் பிரித்து ஏப்ரல்-மே, ஆகஸ்ட்-செப்டம்பர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இட வேண்டும்.
    
சுண்ணாம்பு சத்தை ஏப்ரல்-மே மாதங்களிலும், மெக்னீசியம் சல்பேட்டை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களிலும், கரிம பொருள் சார்ந்த உரங்களை ஜுன்-ஜுலை மாதங்களிலும் இட வேண்டும்.  நன்கு வளர்ச்சியடைந்த தென்னை மரத்திற்கு 1 கிலோ டோலமைட் (அ) 1 கிலோ சுண்ணாம்பு சத்து + அரை கிலோ மெக்னீசியம் சல்பேட் ஆகியவை ஆண்டு ஒன்றிற்கு தேவைப்படுகிறது.
    
எரு மற்றும் உரங்களை மரத்தின் அடியிலிருந்து 2 மீ தள்ளி, 10 செ.மீ ஆழத்தில் வட்டப்பாத்திகளில், தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தவுடன் இடவேண்டும்.  கோடைகாலத்தில் உரங்களைப் பிரித்து தண்ணீருடன் கலந்து இட வேண்டும்.
நன்கு வளர்ச்சியடைந்த தென்னந்தோப்பிற்கு, வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 500 கிராம் மெக்னீசியம் சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது.
    
போரான் பற்றாக்குறைவினால் ஓலைகள் உருமாற்றம் அடைந்து,  கொக்கி இலைகள் போல காணப்படும். மற்றும் காய் வெடிப்பு, பெண் மலர்கள் கருகுதல் போன்றவை ஏற்படுகின்றன.  இவற்றை சரிசெய்ய முதல் அறிகுறி தோற்றத்தின் போதே 50 கிராம் போராக்ஸை மரம் ஒன்றிற்கு மாதம் ஒரு முறை மூன்று சம அளவுகளில் மண்ணில் இட வேண்டும்.  வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட நிலங்களில், நாற்றாங்காலுக்கு 300 கிராம் போராக்சும்,  நன்கு வளர்ச்சியடந்த மரங்களுக்கு 500 கிராம் போராக்சும் பரிந்துரை செய்யப்படுகிறது.

தேவையான உரங்கள்: தென்னைக்குத் தேவையான உரங்கள் (ஒரு ஹெக்டருக்கு 156 மரங்கள்)
ஒரு ஹெக்டருக்கு தேவையான உரங்கள்: மரம் ஒன்றிற்கு தழை-மணி-சாம்பல் சத்து 560-320-1200 கிராம் ஆகும்.
நீர்பாசனத்தின் மூலம் இடும் உர அளவுகள்: ஒரு ஹெக்டருக்கு தழை, மணி, சாம்பல் சத்து 88-50-87 கிராம் ஆகும்.

வ.எண்

உரங்கள்

அளவுகள் (கி/கி ஹெக்டர்)

1.

சூப்பர் பாஸ்பேட்

312 கி. கி (மரம் ஒன்றிற்கு 2 கிலோ)

2.

மியூரேட் ஆப் பொட்டாஷ்

416 கி. கி (மரம் ஒன்றிற்கு 2.6 கிலோ)

3.

யூரியா

74 கி. கி (மரம் ஒன்றிற்கு 0.5 கிலோ)

சூப்பர் பாஸ்பேட் அடி உரமாக ஒரு ஹெக்டருக்கு 312 கி .கி என்ற வீதத்தில் நான்கு சம பாகங்களாக ஜுலை, அக்டோபர், ஜுன் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இட வேண்டும்.

பயிர் வளர்ச்சி
நிலைகள்

நீர்வழி உரமிடுவதற்கான
சரியான இடைவெளி

தேவையான
உரங்கள்

உரம் இடுதலின்
எண்ணிக்கை

அளவு கிலோ/ஒரு
தடவைக்கு)

ஜுலை-ஆகஸ்ட்

வாரம் ஒருமுறை

13-00-45

8 தடவைகள்

13.00

 

 

யூரியா

8 தடவைகள்

2.3

ஆகஸ்ட்-நவம்பர்

வாரம்-ஒருமுறை

13-00-45

8 தடவைகள்

13.00

 

 

யூரியா

8 தடவைகள்

2.3

ஜனவரி-பிப்ரவரி

வாரம் ஒரு முறை

13-00-45

8 தடவைகள்

13.00  

 

 

யூரியா

8 தடவைகள்

2.3

ஏப்ரல்-மே

வாரம் ஒரு முறை

13-00-45

8 தடவைகள்

13.00

 

 

யூரியா

8 தடவைகள்

2.3

மேலே கொடுக்கப்பட்டுள்ள உர அளவுகள் நான்கு வருடம் ஆகிய (அ) அதற்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஆகும்.   இளம் தென்னை மரங்களுக்கு தேவையான நீர்பாசன வழி உரமிடுதல் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நடவு நட்ட மூன்று மாதத்திற்கு பிறகு: 10ல் ஒரு பங்கு அளவு
இரண்டு வருட மரத்திற்கு: 3 ல்  1 பங்கு அளவு
மூன்று வருட மரத்திற்கு: 3 ல் 2 பங்கு அளவு
நான்கு வருட மரத்திற்கு: முழு அளவுகளும்

மேலே செல்கமேலே செல்க

உயிர் உரங்கள்: தென்னை மரங்களின் வேர் பகுதிகளில் தனித்த வாழ்திறன் கொண்ட மற்றும் நைட்ரோஜினஸ் செயல் திறன் கொண்ட தழைச்சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் அனைத்தும் மரத்தின் வேர்களை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.   தற்போது தென்னை மரத்தின் வேர்களில் தழைச்சத்தை நிலைப்படுத்தும் அசோஸ்பைரில்லம் அமசோநென்ஸ் தொகுப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.   தாவர வளர்ச்சியை அதிகரிக்க இந்த நுண்ணுயிரிகளின் கலவையானது மிகச்சிறந்த ஆற்றல் மிக்கவையாக செயல்படுகிறது.  தென்னங்கன்றுகளை, தேங்காய் நார் கழிவு மண்-கலவையில் வளர்க்கும்போது, பிஜரின்கியா இண்டிகா மற்றும் சார்ந்து வாழும் நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், ஆர்த்தோ பாக்டர், அசார்கஸ், ஹெர்பஸ்பைரில்லம், பேசில்லஸ், பர்கோடேரியா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவை முக்கியமாக காணப்படும் வளர் நுண்ணுயிரிகளாகும்.  இவை தென்னங்கன்றுகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரங்கள்:
-      50 கிராம் அசோஸ்பைரில்லம்
-      50 கிராம் பாஸ்போபாக்டீரியா (அ) 100 கிராம் அசோபாஸ்
-      50 கிராம் வேம் (VAM)

இந்த உயிர் உரங்கள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்து மக்கிய குப்பையில் அல்லது தொழு எருவுடன் கலந்து மரத்தின் வேர்பகுதிக்கு மிக அருகில், 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தென்னை நடவு செய்த தொடக்கத்திலிருந்தோ இட வேண்டும்.  வேதியல் உரங்களுடனோ அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளுடனோ கலத்தல் கூடாது.

மேலே செல்கமேலே செல்க

மண் புழு உரம்:

மக்கிய தென்னந்தோப்புகளின் கழிவிலிருந்து பெறப்பட்ட சிற்றினங்களைக் காட்டிலும், தென்னந் தோட்டத்தில் கண்டறியப்பட்ட யூட்ரிலஸ் வகையானது தனிசிறப்பு வாய்ந்ததாக உள்ளது.  1 : 1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட சாணம் மற்றும் இயற்கை கழிவுகளில் இந்த மண்புழுக்கள் நன்கு பெருக்கமடைகின்றன.  இந்த கலவையிலிருந்து 10 கிலோவை ஒரு வாலியில் எடுத்து அதில் 50 முதல் 100 மண் புழுக்களை இட வேண்டும்.  அதன்பிறகு இந்த கலவையை  புல்லைக் கொண்டு நிலப்போர்வை அமைத்து, பிறகு அதை வலையால் மூடி வைக்க வேண்டும்.  சரியான ஈரப்பதத்தை நிலைப்படுத்த  வேண்டும்.  இக்கலவையிலிருந்து 1 - 2 மாதங்களில் 150 முதல் 300 கிராம் வரையிலான மண்புழுக்கள் உற்பத்தியாகும்.

மேலே செல்கமேலே செல்க

தேங்காய் நார் கழிவு: தேங்காய் நாரில் குறைந்த அளவு தழைச்சத்து மற்றும் அதிக அளவு லிக்னின் மற்றும் பாலிபினைல் இருக்கும்.  மேலும் இதை உரமாகப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு மட்கச் செய்ய வேண்டும். பல வருடங்களுக்கு மழை மற்றும் வெயில் போன்ற தட்ப வெப்ப நிலைக்கு வெளிப்படுத்துவதால் இடர்பாடுள்ள வேதிப்பொருள்கள் நீங்கி விடும்.  இவ்வாறு பெறப்படும் நார்கழிவு பயனுள்ளதாக இருக்கும்.  இந்த நார் கழிவில் கார்பன்: நைட்ரஜன் விகிதம் அதிகமாக இருக்கும்.  (அதாவது 100:1) ,  மேலும் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்க அங்கக மற்றும் அனங்க நைட்ரோஜினஸ் பொருட்கள் சேர்கப்படுகிறது.  இவற்றுடன், 1 டன் நார்கழிவுக்கு  10 கிலோ ராக் பாஸ்பேட்டை சேர்ப்பதன் மூலம் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.  தேங்காய் நார் கழிவுகளை மட்கச் செய்ய புளுரோட்டஸ் சஜார் கஜி பயன்படுத்தப்படுகிறது.  இதன் மூலம் பெரும் அளவில் கழிவுப்பொருட்களை மட்கச் செய்ய முடிகிறது. (கலப்பு) மக்கிய உரம் தயாரிப்பதற்கு 1 டன் தேங்காய் நார், 5 கிலோ யூரியா மற்றம் 5 குப்பிகள் புளுரோட்டஸ் விதை தேவைப்படுகிறது.  100 கிலோ தேங்காய் நாரை நிழலான பகுதியில் மட்டமாக பரப்ப வேண்டும்.  அதன்மீது 1 குப்பி புளுரோட்டஸ் விதையை துாவ வேண்டும். மறுபடியும் இதன்மீது 100 கிலோ தேங்காய் நாரை பரப்ப வேண்டும்.  அதன்மீது 1 கிலோ யூரியாவை துாவ வேண்டும்.  இதேபோல் 5 தடவைகள் செய்ய,  குவியலாக அமைக்க வேண்டும்.  இதை நேரடி சூரிய ஒளி மற்றும் மழைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.  இந்த குவியலில் சரியான ஈரப்பதத்தை நிலைப்படுத்த வேண்டும்.  பிறகு ஒரு மாத காலத்தில் இந்த குவியல் சிதைவுற்று மக்கிய கலப்பு உரம் கிடைக்கும்.  இந்த உரத்தை தென்னை மரங்களுக்கு எருவாக பயன்படுத்தப்படுகிறது.

மேலே செல்கமேலே செல்க

தென்னைக் கழிவு மறு சுழற்சி: தென்னைக் கழிவு மறுசுழற்சியானது மிகவும் பயனுள்ளதாகும்.  குறிப்பாக இவை நுண்ணுட்டச்சத்துக்கள் மற்றும் சிறிய மூலக்கூறுகளின் தேவைகளின் தரத்தை நிலைநிறுத்த பயனுள்ளதாக உள்ளது.  தென்னைக் கழிவுகளான, தென்னை ஓலைகள் காய்ந்த மட்டைகள்,  நுனிப்பகுதி கழிவுகள்,  மஞ்சி ஆகியவற்றை ஒரு சிறிய குழியில் இட வேண்டும்.  இந்த குழியானது மரத்திலிருந்து 2-2.5 மீ தள்ளி,  0.3-0.5 மீ ஆழத்தில், 0.5-0.7 மீ அகலத்தில் போதுமான நீளத்தில் அமைக்க வேண்டும்.  முதல் வருடத்தில் மரத்தின் ஒரு பக்கத்தில் (வடக்கு) உள்ள இந்த குழியில் கழிவுப்பொருட்களை நிரப்ப வேண்டும்.  அடுத்த வருடத்தில் அதற்கு எதிராக (தெற்கு) உள்ள குழியில் கழிவுப்பொருட்களை நிரப்ப வேண்டும்.  மூன்றாவது வருடத்தில் கிழக்கில் மற்றும் நான்காவது வருடத்தில் மேற்கில்,  இது போன்று செய்ய வேண்டும்.  இந்த அங்கக கழிவு மறு சுழற்சியானது  தென்னை மரத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

மேலே செல்கமேலே செல்க

“TNAU  தென்னை “ஊக்கமருந்து”: கோவை,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்கவும்,  காய்களின் அளவை அதிகரிக்கவும், “TNAU தென்னை ஊக்கமருந்து” என்ற பெயரில் டானிக் தயாரித்துள்ளது.

இலைகளின் பச்சையத்தின் அளவை அதிகரித்தல்,  ஒளிச்சேர்க்கை திறனை அதிகரித்தல்,  குரும்பை உதிர்வதை தடுத்தல்,  காய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் அளவை அதிகப்படுத்துதல்,  காய்களின் மகசூலை 20 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்தல்,  வாழ்நாள் மற்றும் மரத்தின் வீரியத்தை அதிகப்படுத்துல்,  நோய்,  பூச்சி மற்றும் தட்ப வெப்ப காரணிகளை எதிர்கொள்ளும் திறனை ஏற்படுத்துதல் இதன் சிறப்பாகும்.

  • வருடத்திற்கு இரண்டு முறை,  ஆறு மாத  இடைவெளியில் மரம் ஒன்றிற்கு 200 மி.லி என்ற அளவில் ஊக்க மருந்தை செலுத்த வேண்டும்.
  • இந்த ஊக்க மருந்தானது தேவையான சத்துக்களை வழங்கியும்,  மரங்களை பல்வேறு பூச்சிகளிலிருந்து இயற்கை முறையில் பாதுகாக்கவும் செய்கிறது.
  • இந்த கரைசலானது 1:4 என்ற வீதத்தில் தண்ணீருடன் கலக்கப்படுகிறது.
  • மரத்தின் அடியிலிருந்து மூன்று அடி தள்ளி பென்சில் அளவுள்ள வேரானது தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  • இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட வேரின் நுனியை கூர்மையான கத்திகொண்டு சாய்வாக சீவ வேண்டும்.  இந்த வேரை பாலித்தீன் பையில் உள்ள மருந்தில் மூழ்கி இருக்குமாறு வைத்து கட்டிவிட வேண்டும்
  • மண் மற்றும் வளிமண்டல காற்று ஈரப்பதம் அற்றநிலையில் இருக்கும் போது,  மருந்தானது, வேர்களினால் மிக வேகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • இந்த ஊக்கியானது 200 மி.லி பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.  ஒரு பாக்கெட்டின் விலை ரூ.5.  ஒரு மரத்திற்கு ஒரு பாக்கெட்டானது பயன்படுத்தப்படுகிறது.   இதை தயாரித்த நாளிலிருந்து ஒரு மாத காலம் வரை வைத்திருக்கலாம்.

மேலே செல்கமேலே செல்க

இயற்கை வழி மறு சுழற்சி: உரமிடுதலுக்கு பதிலாக பசுந்தாள் உரப்பயிரை  (சணப்பு,  அவுரி, கலப்பகோனியம் மற்றும் தக்கைப் பூண்டு) நிலத்திலேயே வளர்த்து, அதன்  பூ பருவத்தில் அவற்றை நிலத்திலேயே உழுதுவிட வேண்டும்.  தென்னை மரத்தை சுற்றி வட்டப்பாத்தியில் 50 கிராம் சணப்பையை விதைத்து,  பூ பருவத்திற்கு முன்பே மண்ணுடன் ஒன்றாக கலக்குமாறு செய்ய வேண்டும்.  தென்னை நார்-கழிவு தொழு உரம்,  தென்னை நாரிலிருந்து பெறப்பட்ட மண்புழு உரம், தென்னை ஓலைகள்,  தென்னையிலிருந்து பெறப்பட்ட இதர கழிவுப் பொருட்களையும் உரமாக பயன்படுத்தலாம்.

மேலே செல்கமேலே செல்க

தென்னை உற்பத்தியில் தழை,  மணி,  சாம்பல் சத்து மற்றும் நுண்ணுட்டச்சத்துக்களின் குறைபாடுகள் பொதுவாக காணப்படும்.  முறையாக உரமிடப்படாத தென்னை மரங்களில் (குறிப்பாக இயற்கை உரங்கள்) பாதிப்பின் அறிகுறிகளை எளிதில் கண்டறியலாம்.

(i). முக்கிய குறைபாடுகள்:

தழைச்சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்:
இது மண்ணில் சரியான அளவு தழைச்சத்து இல்லாததால் ஏற்படுகிறது. தழைச்சத்து பற்றாக்குறையானது,  முதிர்ந்த ஓலைகளில் பச்சையம் இழந்து,  மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  இந்த மஞ்சள் நிற அறிகுறியானது ஓலையின் நுனியிலிருந்து ஆரம்பித்து,  அடிபகுதி வரை பரவி காணப்படும்.  இதன் விளைவாக இளம் ஓலைகள் நிறமிழந்தும்,  முதிர்ந்த ஓலைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.  தழைச்சத்து பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும்போது மரத்தின் வளர்ச்சி தடைப்பட்டு, ஓலைகள் உதிர்ந்துவிடும்.
கண்டறியும் முறைகள்
    
தழைச்சத்து பற்றாகுறையை அறிகுறிகளைக் கொண்டே எளிதில் கண்டறியலாம்.  இலை ஊட்டச்சத்து சோதனை மூலமும் கண்டறியலாம்.  இதன் அறிகுறிகள்,  இரும்பு மற்றும் கந்தகச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகளைப் போன்றே காணப்படும்.  இரும்பு மற்றும் கந்தகச் சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் இளம் ஓலைகளில் காணப்படும்.  ஆனால் தழைச்சத்து பற்றாக்குறையானது இதற்கு எதிர்மாறாக முதிர் இலைகளில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:
    
2% யூரியாவை,இலை வழி தெளிப்பானாக 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்தல் அல்லது மரம் ஒன்றிற்கு 1-2 கிலோ யூரியாவை மண்ணில் இடுதல் அல்லது 1% (200 மி)  யூரியாவை வேர்வழி ஊட்டமாக வருடத்திற்கு  இருமுறை செலுத்துதல்.

மேலே செல்கமேலே செல்க

மணிசத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்:

இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.  (இப்பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது இலை மஞ்சள் நிறத்தில் மாறி முதிர்வதற்கு முன்பாகவே காய்ந்து காணப்படும்.)

  • வளர்ச்சி மந்த நிலையில் இருக்கும்.
  • ஒலைகள் மேல்நோக்கி இருக்கும்.
  • இலைகள் முதிர்வதற்கு முன்பாகவே உதிர்ந்து விடும்.
  • ஒலையின் வளர்ச்சி,  அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்து விடும்.
  • மணிச்சத்து பற்றாக்குறை இருப்பின் வேரின் வளர்ச்சி தடைபடும்.
  • வளர்ச்சி குன்றுதல் மற்றும் மகசூல் குறைபாடு தவிர வேறு அறிகுறிகளை பார்வையில் கண்டறிய இயலாது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

2% டி.ஏ.பி- யை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைவழி தெளிப்பானாக தெளிக்க வேண்டும்.  அல்லது மரம் ஒன்றிற்கு 5 கிலோ தொழு எருவை மண்ணில் இடவேண்டும்.  வருடத்திற்கு 2 முறை 1% (2 மில்லி லிட்டர்) டி ஏ பி கரைசலை வேர்வழியாக செலுத்த வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

சாம்பல் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்:

  • இந்த சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி அதன் பிறகு இளம் இலைகளுக்கு பரவுகிறது.
  • வெளிரிய மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப்புள்ளிகள் சிற்றிலைகளில் காணப்படும். (இலை ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்).
  • முதிர்ந்து இலைகள் காய்ந்த புள்ளிகளுடன் நுனியில் சுருண்டும் காணப்படும்.
  • இவ்வாறு இலைகளின் ஓரங்களில் காய்ந்து காணப்படும்.  இலைகள் பிறகு உதிர்ந்து விடும்.
  • இந்த மரமானது மஞ்சள் நிறத்தில்,  தண்டு மெலிந்து சில ஓலைகள் சிறுத்தும், காணப்படும்.

கண்டறியும் முறைகள்:
    பார்வையில் தென்படும் அறிகுறிகளை கொண்டே எளிதில் கண்டறியலாம்.  மேலும் இலை ஊட்டச்சத்து சோதனை மூலமூம் கண்டறியலாம். முதிர்ந்த நிலையில் சாம்பல் சத்து பற்றாக்குறையை மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறியிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினம்.  இந்த இரு பற்றாக்குறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும்.  கூர்ந்து கவனிப்பதன் மூலம் இந்த இரு ஊட்டச்சத்து பற்றாக்குறைகளை வேறுபடுத்தி அறிய முடியும்.  Êசாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறியானது இலை நுனிகள் காய்ந்த புள்ளிகளைக் கொண்டும் மாங்கனீசு பற்றாக்குறையானது காய்ந்த கோடுகளைக் கொண்டு காணப்படும்.   சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறியானது ஓலையின் அடிப்பகுதி காட்டிலும் நுனியில் அதிகமாகக் காணப்படும்.  இதற்கு நேர்மாறாக மாங்கனீசு பற்றாக்குறையில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
     வழக்கமாக பொட்டாஷியம் உரங்களை இடுவதன் மூலம் பொட்டாசியம் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.  மணல் சார்ந்த பகுதி அல்லது அணுக்களை மாற்றிக் கொள்ளும் திறன் குறைவாக உள்ள பகுதிகளில் எளிதில் நீரில் கரையும் பொட்டாசியம் உரத்தைக் காட்டிலும் மெதுவாக கரையும் பொட்டாசியம் உரம் மிகவும் உகந்ததாக இருக்கும்.
     பசையூட்டப்பட்ட பொட்டாசியம் சல்பேட் 3.4 கிலோ அதனுடன் 2 கிலோ மெக்னீசியம் சல்பேட்  சேர்த்து வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு நான்கு தடவை இட வேண்டும்.
     1% பொட்டாசியம் குளோரைடு 200 மி கரைசலை வேர்வழி ஊட்டமாக வருடத்திற்கு மூன்று முறை செலுத்த வேண்டும்.

போரான் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்:

  • இதன் அறிகுறிகள் புதிதாக தோன்றிய ஓலைகளில் இருக்கும்.  இந்த ஓலைகள் முதிர்ந்த பின்பும் அறிகுறிகள் காணப்படும்.
  • போரான் பற்றாக்குறையின் தொடக்க நிலையில்,  தென்னையின் ஓலைகளில் சிற்றிலைகளின் நுனிகள் வளைந்து இருக்கும்.  இவைகள் கொக்கி ஓலைகள் என்று அழைக்கப்படுகிறது.  ஓலைகளின் ஓரங்களில் கூரிய பற்களைப் போன்று வளைந்து காணப்படும்
  • மற்ற பொதுவான அறிகுறியானது,  புதிதாக தோன்றும் ஓலைகள் நன்கு விரிவடையாது.  சீர்கேடுற்ற நிலையில்,  மரத்தின் நுனியில் நிறைய விரிவடையாத ஓலைகள் காணப்படும்.
  • போரான் பற்றாக்குறையானது,  பூங்கொத்து மற்றும் காய்களிலும் காணப்படும்.  பூங்கொத்து மற்றும் காய்கள் காய்ந்து காணப்படும்.

கண்டறியும் முறைகள்: போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள் நன்கு தெரியும்.  இந்தப் பற்றாக்குறையை கண்டறிய இதன் அறிகுறிகளே போதுமானது.  மாங்கனீஸ் பற்றாக்குறையின் அறிகுறியும் இது போன்றே இருக்கும்.  போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள் நிலையற்ற தன்மையைக் கொண்டது.  இந்த மூலக்கூறானது மரத்தின் உள்ள ஓரிடத்திலிருந்து,  மற்றொரு இடத்திற்கு செல்லாது.  இந்த பற்றாக்குறையானது மொட்டுப்பகுதியின் உள்ளே காணப்படும்.  ஓலையின் அடிக்குருத்து வளர்ச்சியை மட்டும் பாதிக்கிறது.  இலைச் சோதனையானது இதை கண்டறிய உதவாது.

கட்டுப்படுத்தும் முறைகள்:


இலைவழித்தெளிப்பானால் 0.2% (1லி தண்ணீருக்கு 2 கிராம்) போராக்ஸை ஒரு நாற்றுக்கு 75-100 மி.லி தெளிக்க வேண்டும்.  பொதுவாக தென்னங்கன்றுகளுக்கு நாற்றங்கால் நிலையில் தெளித்தல் முறையானது கடைபிடிக்கப்படுகிறது.

  • 1 வருட மரம் - போராக்ஸ் 5-10 கிராம்/மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு
  • 2-3 வருட மரம் - போராக்ஸ் 15-20 கி/மரம் ஒன்றிற்கு/ ஒரு வருடத்திற்கு
  • 4 வருட மரம் மற்றும் அதற்கு மேலாக உள்ள மரங்களுக்கு 30-50 கிராம் போராக்ஸ் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு இட வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

மாங்கனீசு பற்றாக்குறை:
அறிகுறிகள்:

மாங்கனீசு பற்றாக்குறையானது களர் மண்ணில் பொதுவாக காணப்படும்.  இளம் ஓலைகளில் பச்சையம் குன்றி நீண்ட காய்ந்த கோடுகள் காணப்படும்.  இந்த பற்றாக்குறையின் தொடர்ச்சியாக புதிதாக தோன்றும் சிற்றிலைகள் காணப்படும்.   மேலும் சிற்றிலையின் அடிப்பகுதி வாடி இருக்கும்.  இந்த வாடுதல் காரணமாக இளம் இலைகள் சுருண்டு மரத்தின் நுனியில் சுருட்டையாக காணப்படும். (நுனிசுருட்டை)

மாங்கனீசு அதிக பற்றாக்குறையின் காரணமாக மரத்தின் வளர்ச்சி தடைப்பட்டு புதிதாக தோன்றும் இலைகளின் அடித்துாறு காய்ந்தும் காணப்படும்.

கண்டறியும் முறைகள்: இந்த குறைபாட்டை பார்வையில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டு எளிதில் கண்டறியலாம்.  ஆனால் இலை ஊட்டச்சத்து சோதனையும் இதைக் கண்டறிய பரிந்துரைக்கப்படுகிறது.   ஏனெனில் இதன் அறிகுறிகளானது போரான் பற்றாக்குறையை போன்றே காணப்படுகிறது.  காலம் கடந்த நிலையில் பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியை மாங்கனீஸ் பற்றாக்குறையின் அறிகுறியிலிருந்து பேறுபடுத்தி அறிவது கடினம்.   கூர்ந்து கவனிப்பதன் மூலம் இலைகளில் காணப்படும் நீண்ட கோடுகள் மற்றும் அடிப்பகுதி அறிகுறிகளையும் கண்டறியலாம்.

கட்டுப்படுத்தும் முறை:

ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட்-யை மண்ணில் இடவேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

மெக்னீசிய சத்து  பற்றாக்குறை:

மெக்னீசியம்  பற்றாக்குறையானது முதிர்ந்த ஓலைகளில் தோன்றும் பரந்த மஞ்சள் நிறப்பட்டைகள் ஓலையின் நுனி மற்றும் நடுப்பகுதியில் காணப்படும்.  ஓலையின் மற்றப் பகுதிகள் பச்சையாக இருக்கும்.  இந்த பற்றாக்குறை முற்றிய நிலையில் இலையின் நுனிப்பகுதிகள் காய்ந்து காணப்படலாம்..  முதிர்ந்த ஓலைகள் வெண்கல நிறத்தில் காய்ந்து காணப்படும்.  ஓலைகள் பார்ப்பதற்கு காய்ந்து பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் தெளிவான புள்ளிகளைக் கொண்டு காணப்படும்.  மஞ்சள் நிறமானது இலையின் நுனியில் தொடங்கி அதன் அடிப்பகுதிக்கு பரவும்.

கண்டறியும் முறை:
மெக்னீசியம் பற்றாக்குறையை பார்வையில் தென்படும் அறிகுறிகளைக் கொண்டே  எளிதில் கண்டறியலாம்.  மெக்னீசியம் பற்றாக்குறையின் அறிகுறியானது பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியிலிருந்து வேறுபட்டு இருக்கும்.  பொட்டாசியம் பற்றாக்குறையின் அறிகுறியானது ஆரஞ்சு வெண்கல நிறத்துடன்  இலையின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் காணப்படும்.  ஆனால் மெக்னீசியம் பற்றாக்குறை உள்ள ஓலையின் நடுப்பகுதி பச்சையாகவும் ஓரங்களில் அதிக எலுமிச்சை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 1-2 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை மண்ணில் இடுதல்,  200 மில்லி லிட்டர் அல்லது 2% மெக்னீசியம் சல்பேட் வருடத்திற்கு இரண்டு முறை வேர்வழியாக செலுத்துதல்.

மேலே செல்கமேலே செல்க

(ii). இதர பற்றாக்குறைகள்:

கந்தக சத்து பற்றாக்குறை:

அறிகுறிகள்:
சிற்றிலைகள் பசும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் இருக்கும் முதிர்ந்த ஓலைகள் பச்சையாகவே இருக்கும். தண்டுகள் பலவீனமாக இருப்பதால் ஓலைகள் தொங்கி காணப்படும்.  சில நேரங்களில் மரத்தைச் சுற்றி தண்டின் பலவீனத்தால் வறண்ட ஓலைகள் காணப்படும்.  காய்கள் முதிர்வதற்கு முன்பாகவே உதிர்ந்துவிடும்.  கொப்பரை தேங்காய் குறைந்த தரத்துடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 2-5 கிலோ ஜிப்சத்தை மண்ணில் இடுதல் 0.2% (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) ஜிப்சத்தை வேர் வழியாக செலுத்த வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

இரும்பு சத்து பற்றாக்குறை:

இரும்புசத்து பற்றாக்குறையானது,  குறைந்த காற்றோட்டமுள்ள மண்ணில் பொதுவாக காணப்படும்.  அல்லது அதிக ஆழங்களில் நடப்பட்ட பகுதிகளில் காணப்படும்.  தண்ணீர் தேக்கம் உள்ள மண்ணில் மற்றும் ஆழமாக நடப்பட்ட பகுதிகளில், வேரின் சுவாசமானது தடைப்பட்டு இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் வீரியம் குறைந்து காணப்படும்.
    
இதனுடைய முக்கியமான அறிகுறியானது பச்சையம் அற்ற (அல்லது) புதிய ஓலைகளில் நரம்புகளுக்கிடையில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  (ஒரே மாதிரியான பச்சையமற்ற புதிய இலைகள்,  நுனிகள் காய்ந்து மற்றும் இலைகளின் அளவு குறைக்கப்பட்டு இருக்கும்)

கட்டுப்படுத்தும் முறை: பெர்ரஸ் சல்பேட்டை 0.25-0.5 % என்ற விகிதத்தில் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு இட வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

துத்தநாக சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்:


இளம் இலைகளில் காணப்படும்.  இலைகளின் அளவானது 50% ஆக குறைந்து காணப்படும்.  சிற்றிலைகள் பச்சையம் இழந்து சிறுத்து காணப்படும்.  பற்றாக்குறையின் தாக்குதலால் பூப்பது காலதாமதப்படும்.  மேலும் இதனால் குரும்பை உதிர்வதும் ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறை:
ஜிங்க் சல்பேட்டை ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற விகிதம் மண்ணில் இடுதல்.

மேலே செல்கமேலே செல்க

கால்சியம் பற்றாக்குறை:
அறிகுறிகள்:


  • இளம் இலைகளின் ஓரங்களில் குறுகிய வெள்ளைநிறப்பட்டைகள் வெளிப்படுத்துதல்
  • நரம்பு இடைவெளிப்பகுதி பச்சையமற்று காணப்படும். 
  • இலை நுனி துருப்பிடித்து காணப்படுதல்
  • இலைகள் சுருண்டு காணப்படுதல்
  • அமிலத்தன்மை கொண்ட மண்ணில் மட்டும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை: சுண்ணாம்பு சத்தின் தேவையை பொறுத்து சுண்ணாம்புச்சத்தை மண்ணில் இடுதல் 1% கால்சியம் நைட்ரேட் கரைசலை வேர் வழியாக செலுத்த வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

தாமிரச்சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்:


  • வெண்கல நீல நிற ஓலைகள்
  • விறைப்புத் தன்மை குறைவால், நுனி ஓலைகள் சுருண்டு காணப்படுதல்.
  • ஓலைகள் பார்ப்பதற்கு வெண் சாம்பல் நிறத்தில் காணப்படும்.
  • பூக்கள் உற்பத்தி இல்லாமல் இருத்தல்

கட்டுப்படுத்தும் முறை: ஒரு ஹெக்டருக்கு, 25 கிலோ காப்பர் சல்பேட்டை மண்ணில் இடுதல்.

மேலே செல்கமேலே செல்க

தென்னையின் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள்:

  • பசுந்தாள் உரப்பயிர்களை ஊடுபயிராக வளர்த்து,  நிலத்திலேயே உழுதல்
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு 650 கிராம் யூரியா,  1 கிலோ சூப்பர் பாஸ்பேட்,  மற்றும் 1 கிலோ பொட்டாசியம் இட வேண்டும்.  இதனுடன் 25 கிலோ தொழு உரமும் இட வேண்டும்.  இந்த உரக்கலவைகளை ஜுன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இட வேண்டும்.
  • “TNAU தென்னை ஊக்கமருந்து”  200 மி.லி-ஐ ஒரு மரத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வேர் வழியாக செலுத்த பரிந்துரைக்கப்படுதல்.
  • இந்த முறைகளானது ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து,  மரத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்