தாய் தென்னை தேர்வு மற்றும் நாற்றங்கால் மேலாண்மை

தென்னையின் கன்றுகளில் வீரியத்தன்மை, தாய்தென்னையின் விரைவில் பூக்கும் தன்மை, மகசூல் மற்றும் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது. தென்னை, கலப்பு மகரந்த சேர்க்கையின் காரணமாக தாய்தென்னையை போல் இருப்பதில்லை. ஆகையால் வெவ்வேறு நிலைகளில் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளை பெற முடியும்.

ஏதேனும்  ஒன்றை "கிளிக்" செய்யவும்...







 

விதைப் பண்ணை தேர்வு

  • பண்ணையானது அதிக எண்ணிக்கையில் நன்கு காய்க்கும் மரங்களை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் அது அதிக சாதகமான சூழலில் இருக்க கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்கின்றி இருக்க வேண்டும்.

  • வீடு, மாட்டுத் தொழுவம், மாட்டு எருக்குழிகள் அருகில் உள்ள மரங்களை தவிர்க்கவும்

  • தரமான விதைத் தேங்காய் மற்றும் கன்றுகளுக்கு பெயர் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. எ.கா-கேரளா, கோழிக்கோட்டில் உள்ள குட்டியடி, திருச்சுரில் உள்ள சாவக்காடு

மேலே செல்கமேலே செல்க

தாய் தென்னை தேர்வு

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

நல்ல தரமான நாற்றுகள் உற்பத்திக்கு, தகுந்த இரகத்திலிருந்து தரமான தாய்தென்னையை தேர்வு செய்வது முக்கியமானதாகும். தகுந்த விதையில்லா இனப்பெருக்க முறை இல்லாத நிலையில் விதை இனப்பெருக்கமே சிறந்த வழி. எனவே தாய்தென்னையை தேர்வு செய்வதே தென்னங்கன்றுகள் உற்பத்திக்கு முக்கிய காரணி ஆகும்.

ஒரு உயரிய தாய் மரத்தின் இயல்புகள்
1) நிரந்தர காய்ப்பு தன்மை: ஒரு சிறந்த நிரந்தர காய்ப்பு தன்மையுள்ள தென்னை மரத்திலிருந்து சுமார் ஒரு ஓலை மற்றும் ஒரு பாளை வீதம் ஒவ்வொரு மாதமும் வரும். எனவே ஒவ்வொரு முறையம் 12 குலைகள் வெவ்வேறு வளர்ச்சி பருவத்திலும், வலுவான குலைக் காம்புகளுடனும் காணப்படும். வெற்றுக் காய்களை தரும் மரங்களை தவிர்க்கவும்.

  • நேரான பருத்த தண்டு பகுதியானது சீரான வளர்ச்சியுடனும் மற்றும் நெருக்கமான ஓலை இடுக்குகளுடனும் காணப்படும்
  • வட்டம் அல்லது அரைவட்ட வடிவிலான தலைப்பாகம்
  • அதிக எண்ணிக்கையில் ஓலைகள் (30க்கும் அதிகமான முழுவதும் திறந்த ஓலைகள்) மற்றும் பாளைகள் விடுதல் (12 பாளைகள்)
  • கட்டையான, தடித்த குலைக்காம்பு, மற்றும் தண்டுடன் உறுதியாக இணைந்துள்ள அகன்ற அடிமட்டை.
  • கட்டையான, தடித்த பாளை காம்புள்ள குலைகள்,  இலைக் காம்பின் கீழ்ச் சுருள் மீது அமர்ந்த வண்ணமும், மற்றும் அதிக எண்ணிக்கையிலான பெண் மலர்கள் உடனும் (25க்கும் அதிகமாக) இருக்க வேண்டும்.
  • நடுத்தர வயதுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும். எ.கா. 25 மதல் 40 வரை. 15 வயதுள்ள அதிக, நிலைத்த மகசூல் தருகின்ற மரங்களைக் கூட தேர்வு செய்யலாம். (எ.கா) செளகாட் குட்டை. 60 வயதுக்கு மேல் உள்ள மரங்களை தவிர்க்கவும்.
  • அதிக மகசூல் தருகின்ற தாய் மரங்கள். பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் குறைந்தது ஆண்டிற்கு மரமொன்றிற்கு 100 காய்கள் வீதம் தருகின்ற மரங்களை தேர்வு செய்யலாம் மாணாவாரி நிலத்தில் ஆண்டிற்கு 70-80 காய்கள் தரும் மரங்களை தேர்வு செய்யலாம்.
  • மட்டையுடன் கூடிய காயின் எடை 600 கிராமிற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
  • சராசரி கொப்பரை தேங்காயின் அளவு காய் ஒன்றிற்கு 150 கிராம் அல்லது அதிகமாக இருக்க வேண்டும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்கின்றி இருக்க வேண்டும்.

கீழ்கண்ட தன்மையுள்ள மரங்களை தவிர்க்கவும்

1. நீண்ட, ஒல்லியான பாளைக் காம்புள்ள மரங்கள்
2.  நீண்ட, ஓல்லியான, சிறிய காய்கள் அல்லது வெற்றுக் காயுள்ள மரங்கள்
3. மாற்றுக் காய்ப்பு தன்மையுள்ள மரங்களைத் தவிர்க்கவும்
4. அதிக குருத்து உதிர்வு தன்மையுள்ள மரங்கள்
5. தகுந்த சூழலில் வளராத மரங்கள் எ.கா.எருக்குழி அருகில் உள்ள மரங்கள்


வேர்வாடல் நோய் பாதித்த பகுதிகளுக்கான யுத்திகள்: வேர்வாடல் நோய் அதிகமுள்ள பகுதிகளில், அதிக நோய் பாதித்த மரங்களுக்கிடையில் அதிக மகசூல் தரக்கூடிய மேற்கு கடற்கரை நெட்டை, செளகாட் பச்சைக் குட்டை மற்றும் செளகாட் ஆரஞ்சு குட்டை ஆகியன காணப்படும். அத்தகைய மரங்களை தாய்த் தென்னை மரங்களாக தேர்வு செய்து, அதிலிருந்து அயல் மகரந்த சேர்க்கை மூலம் உருவான காய்களிலிருந்து பெறப்பட்ட நாற்றுகள் அதிக மகசூல் தரக்கூடியனவாகவும், நோய் எதிர்ப்பு தன்மை உடையனவாகவும் இருக்கலாம்.

மேலே செல்கமேலே செல்க

தமிழ்நாட்டில் விதைத் தேங்காயை பிப்ரவரி -  ஆகஸ்ட் மாதங்களிலும், கேரளாவில் டிசம்பர் முதல் மே வரை அறுவடை செய்வதன் மூலம், அதிக முளைப்புதிறன் மற்றும் நல்ல தரமான நாற்றுகளையும் பெற முடியும். நெட்டை ரகங்கள் 1 அல்லது 2 மாதங்களுக்கு பிறகு நட வேண்டும். குட்டை ரகங்கள் உடனடியாக நடப்பட வேண்டும் (10-15 நாட்கள்)

விதைத் தேங்காய் தேர்வு

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

விதைத் தேங்காய் முதிர்ச்சி: முதிர்ந்த காய்கள், வயதான குலையில்  குறைந்தது ஏதேனும் ஒரு காயாவது காய ஆரம்பித்தவுடன் அறுவடை செய்யப்படுகிறது. நெட்டை ரகங்களில் 11-12 மாதங்களில் முதிர்ந்த விதை தேங்காய் கிடைக்கிறது. குட்டை ரகங்களில் பாளை வந்து 10-11 மாதங்களில் காய்கள் முதிர்கின்றன. முதிர்ந்த காய்கள் மட்டை உலர்ந்துவிட்டதை குறிக்கும் வகையில் விரல் அல்லது அரிவாளால் தட்டும் போது கணீரென்ற ஒலி எழுப்பும். மரங்கள் உயரமாகவோ அல்லது நிலம் கடினமாகவோ இருப்பின் விதைக் காய்க்கான குலைகளை கயிறு கட்டி கீழிறக்குவதால், குலைகள் காயப்படுவதை தடுக்கலாம். விதைத் தேங்காய் நடுத்தர அளவுடையதாகவும், உருண்டை அல்லது கோள வடிவத்தில் இருக்க வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க

விதைத் தேங்காயை குவித்து வைத்தல்

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

நல்ல தரமான கன்றுகளை பெறுவதற்கு, நெட்டை ரகங்களின் விதைகாய்கள் காற்றில் 1 மாதம் உலர்த்தப்பட்ட பின் மணலில் 2 மாதங்கள் வரை உலர்த்தப்பட வேண்டும். குட்டை ரகங்களின் விதைக் காய்கள் 1 மாதத்திற்கும் குறைவாக காற்றில் உலர்த்தப்பட்ட பின் 2 மாதத்திற்கு மணலில் உலர்த்தப்பட வேண்டும். பொதுவாக நெட்டை ரக காய்கள் அறுவடைக்குபின் 2 மாதங்கள் வரை குவித்து வைக்கப்படுகின்றன. ஆனால் குட்டை ரக காய்கள் 15 நாட்களுக்குள் விதைக்கப்படுகின்றன. குவித்து வைப்பதற்காக விதைத் தேங்காயை கட்டி மேலே இருக்கும் படி அடுக்கி 8 செ.மீ. உயரத்திற்கு மணலால் நிரப்ப வேண்டும். இது காயில் தண்ணீர் வற்றுவதை தடுக்கும். இது போல் 5 வரிசைகளில் காய்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கலாம்.

மணற்பாங்கான, போதுமான நிழலுள்ள இடங்களில் காய்களை குவித்து வைக்கலாம். காய்கள் மே மாதத்தில் அறுவடை செய்தால், அதன் மட்டை காயும் வரை பகுதி நிழலில் குவித்து வைத்த பின் நாற்றங்காலில் நட வேண்டும். தண்ணீர் தெறிக்கும் ஒலி எழப்பாத காய்களில் தண்ணீர் வற்றிப் போயிருக்கலாம், எனவே அதனை விதைக்க பயன்படுத்த கூடாது.

மேலே செல்கமேலே செல்க

1. நாற்றங்காலுக்கு எவ்வகை மண் சிறந்தது?

  • நல்ல வடிகால் வசதியுள்ள, உலர்ந்த மணற்பாங்கான இடமே நாற்றங்காலுக்கு உகந்தது, ஏனெனில் நாற்றுகளை அகற்ற எளிதாக இருக்கும்.
  • செம்பொறை மண்ணில், நாற்றங்கால் பாத்திகளுக்கு மணல் இட வேண்டும்.
  • களிமண் மற்றும் தண்ணீர் தேங்கும் மண் வகைகளை தவிர்க்கவும்.
  • மண்ணின் அமில காரநிலை 5.5 முதல் 7.0 வரை இருப்பது சிறந்தது. கன்றுகள் 4.5 முதல் 8.5 வரை தாங்கும் திறனுடையவை.
  • பாசன வசதியுள்ள நிலத்தில் கன்றுகள் உளர் மண் மற்றும் களர் மண்ணில் கூட வளரும் திறனுடையவை.

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

2.  சிறந்த தோப்புக்கான நாற்றங்கால் வடிவமைப்பை எவ்வாறு உருவாக்குவது? தென்னந் தோப்பிற்கு நடுவே நாற்றங்கால் ஏற்படுத்தலாம். திறந்த வெளி நாற்றங்காலுக்கு 50-75 % நிழலமைப்பு அமைத்து நிழலை ஏற்படுத்த வேண்டும். 120 சதுரமீட்டர் இடத்தில் 1000 காய்களை மட்ட அல்லது உயர் பாத்திகளில் நடலாம். அது போல் 200 சதுர மீட்டர் இடம் 1000 பாலீத்தீன் பை தென்னங் கன்றுகளுக்கு தேவைப்படுகிறது.

3.  எந்த மாதத்தில் தேங்காய் விதைப்பது உகந்தது?

  • மழை வரும் பருவத்தில் காய்களை நடுவது தண்ணீர் பாய்ச்சும் இடைவேளியை குறைக்கும். மேலும் முளைப்புத் திறனும் நன்றாக இருக்கும்
  • பொதுவாக மேற்கு கடற்கரை பகுதிகளில் விதை தேங்காய்கள் ஏப்ரல்-மே மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதத்தில் நடப்படுகின்றன. ஆனால் கிழக்கு கடற்கரையில் அக்டோபர்-நவம்பரில் நடப்படுகின்றன.
  • நன்கு பாசன வசதியுடன் கூடிய சாதகமான சூழலில் ஆண்டு முழுவதும் நடலாம்.

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

 

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

4. தேங்காயை விதைக்க நாற்றங்கால் பாத்திகளை தயார் செய்வது எப்படி?

  • 1-1.5 மீ அகன்ற பாத்திகளை போதுமான நீளத்திற்கு 75 செ.மீ. இடைவெளியில் அமைக்கவும்.
  • வடிகால் வசதி இல்லாத இடங்களில் 10-20 செ.மீ  உயரமான பாத்திகளை அமைக்கவும்.
  • கரையான் தொந்தரவு உள்ள இடங்களில், விதைத் தேங்காயை விதைப்பதற்கு முன் குளோர்பைரிபாஸ் 0.05% வீதம் பாத்திகளில் நனைக்க வேண்டும்.
  • குருத்து அழுகல் நோய் நிரந்தரமாக உள்ள பகுதிகளில், கன்றுகளில் குருத்து அழுகல் நொய் வராமல் தடுக்க 1 % போர்டாக்ஸ் கலவை இடவும்.

5. நல்ல விதைத் தேங்காயை தேர்வு செய்வது எப்படி?

  • நடுவதற்கு முன்னால் காய்களை ஆய்ந்து தண்ணீர் இல்லாத, அழுகிய பருப்புள்ள காய்களை நீக்கவும்
  • சில காய்கள், தண்ணீர் இல்லா விட்டாலும் கூட வளரலாம். அவ்வகை காய்களை விதைப்பதற்கு 24-26 மணி நேரத்திற்கு முன் தண்ணீரில் ஊற வைக்கவும்.

6.  விதை தேங்காயை நட இடைவெளி என்ன?

விதைக்கான 30 x 30 செ.மீ இடைவேளி விட்டு 20-25 செ.மீ  ஆழத்தில் படுக்கை வசமாகவோ அல்லது செங்குத்தாகவோ நடலாம்.

7. விதைத் தேங்காயை நாற்றங்காலில் நடுவது எப்படி?

  • காய்களை அதன் அகன்ற பகுதி மேலே இருக்கும் படி படுக்கை வசமாகவோ, காம்பு மேலே இருக்கும்படி செங்குத்தாகவோ நடலாம்.
  • செங்குத்தாக விதைக்கப்படும் நாற்றுகள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் வளர்ச்சி குன்றியும் உள்ளன. இம்முறையில் பெறப்படும் நாற்றுகள் நடவின் போது அதிகம் சேதம் ஆகாது. ஏனெனில் காய் மற்றும் தண்டுப்பகுதி இணைப்பு பட்டையால் பாதுகாக்கப்படுகிறது.
  • படுக்கைவச நடவில் முளைப்புத்திறன் மற்றும் நாற்றுகளின் வளர்ச்சி செங்குத்து நடவுடன் ஒப்பிடும் போது வேகமாக உள்ளது. செங்குத்தாக நடப்படும் காய்களில் வடிவ வெட்டு முளைப்பை துரிதப்படுத்துகிறது.
  • முளைக்கும நாற்றுகளின் கழுத்துப்பகுதியில் நோய்த்தொற்றை தடுக்க மட்டையின் மேல் பகுதி வரை மண்ணால் மூடவும். ஒவ்வொரு பாத்திகளிலும் 50 காய்கள் ஒரு வரிசை வீதம் 5 வரிசைகளில் நடலாம்.

நாற்றங்கால் மேலாண்மை செய்வது எப்படி?
நீர் மேலாண்மை: தென்னை மரத்திற்கு வற்றாத நீர் ஆதாரம் தேவைப்படுகிறது. மேலும் நல்ல மகசூல் பெற பாசன வசதி இன்றியமையாதது ஆகும். தெளிப்பான்/நுண் தெளிப்பான்/குழாய் நீர்ப்பாசன முறைகள் தென்னை நாற்றங்காலுக்கு உகந்தவை. காய்களை விதைத்த பின் நன்கு செறிவு அளவிற்கு தண்ணீரை பாய்ச்ச வேண்டும். பாத்திகளுக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி மண்ணை ஈரமாகவே வைத்திருக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சுமார் 10 மி.மீ, தண்ணீரை ஒவ்வொரு முறையும் பாய்ச்ச வேண்டும்.

பாசன வாய்க்கால்
பாசன வாய்க்கால

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

நிலப் போர்வை இடுதல்:

  • பருவமழை நின்றபிறகு பாத்திகளை தகுந்த மூடகத்தினால் மூட வேண்டும். தென்னை ஒலைகள், வைக்கோல் அல்லது பச்சை இலைகளை பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு செய்வது ஈரத்தை பேணுவதுடன் களைகளை  கட்டுபடுத்தவும் முடியும்.
  • திறந்த வெளியாக இருப்பின் பாதுகாப்பு வேலி இட வேண்டும். குறித்த கால இடைவெளியில் களைகளை நீக்கி பாத்திகளை களைகளின்றி வைத்திருக்க வேண்டும்.
  • பாத்திகளுக்கு பக்கவாட்டில் செஸ்பேனியா அல்லது லியூசியானாவை நட்டு நிழலினை எற்படுத்த வேண்டும்.

களை எடுத்தல்: கன்றுகள் நன்கு வளர நாற்றங்கால்களில் களையின்றி வைத்திருக்க வேண்டும்.

கன்றுகள் முளைத்தல்:
நெட்டைரக காய்கள் விதைத்து 60-130 நாட்களுக்குள் முளைக்கும், குட்டைரக காய்கள் பொதுவாக 30-95 நாட்களுக்கு பிறகு முளைக்கும். பொதுவாக விதைத்து 5 மாதங்கள் வரை முளைப்புத்தன்மை பதிவு செய்யப்படுகிறது. சிறந்த விதை குவியல் ஆனது, 80-90% முளைப்புத் திறனடையதாக இருக்கும். 5 மாதங்களுக்குள் முளைக்காத காய்கள் நாற்றங்காலில் இருந்து நீக்கப்பட்டு கொப்பரைத் தேங்காய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.

நாற்றுகளுக்கு சத்துக்கள் அளித்தல்: வேதி உரங்களை நாற்றங்காலில் உள்ள நாற்றுகளுக்கு அளிக்க தேவையில்லை ஏனெனில் கரு சூழ் தசையானது சத்துக்களை அளிக்கிறது. மேலும் வேதி உரம் இடுவது நாற்றுகளின் உண்மையான மரபுத்திறனை மறைக்கலாம்.

பாலீத்தீன் பை நாற்றுகளை தயார் செய்வது எப்படி?
பாலீத்தீன் பை நாற்றங்கால் பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது...

  • வீரியமான, சிறந்த வேர் அமைப்பு உடைய கன்றுகளை உற்பத்தி செய்வதற்கும்.
  • சிறந்த நிலை நிற்கும் தன்மைக்காகவும், விரைவில் காய்க்கும் திறனுக்காகவும்.
  • வேர் சேதத்தை தடுத்து நடவு சேதத்தை குறைக்கவும்
  • களை எடுக்க தண்ணீர் ஊற்ற எளிதாக உள்ளதாலும் மற்றும் விரும்பத்தகாத நாற்றுகளை எளிதில் நீக்கவும் முடிகிறது.

பாலீத்தீன் பைகன்றுகளை உற்பத்தி செய்ய, விதைக்காய்கள் முதலில் முதல்நிலை நாற்றங்கால் பாத்திகளில் நெருக்கமாக விதைத்து, 8-10 செ.மீ நீள துளிர் வரும் வரை முளைக்க விடப்படுகிறது. அவ்வாறு 80% காய்கள் முளைத்தபின் அல்லது விதைத்து 5 மாதங்களுக்கு பின் அல்லது இரண்டில் எது விரைவில் நடக்கிறதோ, அப்போது முளைத்த கன்றுகள் நாற்றங்காலில் இருந்து பறிக்கப்படுகின்றன. முளைத்த காய்கள் 500 காஜ் தடிமனுள்ள 60* 45 செ.மீ பாலீத்தீன் பைகளில் பெரிய காய்களும், 45 * 45 செ.மீ பாலீத்தீன் பைகளில் சிறிய காய்களும் நடப்படுகின்றன. பெரிய பையில் 13-16 கிலோ மேல் மண்ணை மூன்றில் இரண்டு பகுதி நிரப்ப வேண்டும். பைகளுக்கு அடியில் 8-10 துளைகளுள்ள அதிகப்படியான தண்ணீர் வடிவதற்காக இட வேண்டும். முளைத்த காய்கள் பகுதி நிரம்பிய பாலீத்தீன் பைகளில் துளிர் மேல் நோக்கி இருக்குமாறு நடுவில் நடப்படுகிறது. போதுமான தொட்டி கலவையை மூன்றில் இரண்டு பகுதி இட்டு லேசாக அழுத்த வேண்டும். இது காயை உறுதியாக வைக்க உதவும்.

பொதுவாக பயன்படுத்தும் தொட்டில் கலவையானது மேல் மண்ணை மணலுடன் 3:1 என்ற விகிதத்தில் கலந்தோ அல்லது மேல் மண் மணல் மற்றும் தொழுஉரம்/மண்புழுஉரம் ஆகியவற்றை 3:1:1 என்ற விகிதத்திலோ பயன்படுத்தப்படுகிறது.

செம்மண், மணல் மற்றும் தொழுஉரம்/மண்புழுஉரம் 1:1:1 விகிதத்திலும் பயன்படுத்தலாம். பாலீத்தீன் பையில் உரங்களை அம்மோனியம் சல்பேட் 20 கிராம், மியூரேட் ஆப் பொட்டாஷ் 25 கிராம் என்ற வீதம் பை ஒன்றுக்கு கன்று முளைத்து 4 மாதத்திற்கு பிறகும் இடலாம். உரம் இட்ட பிறகு கன்றுகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

இம்முறையில் உள்ள குறைகளாவது, இடமாற்றுவதில் சிரத்தை மற்றும் கன்று உற்பத்திக்கு ஆகும் அதிக செலவு ஆகும்.

கன்றுகளுக்கு 1 % போர்டாக்ஸ் அல்லது ஏதேனும் காப்பர் பூஞ்சைக் கொல்லியை தெளிப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்கை தவிர்க்கலாம்.

நல்ல தரமான கன்றுகளை தேர்வு செய்வது எப்படி?
விதைத்து 6 மாதங்களுக்குள் வளராத மற்றும் இறந்த துளிர் உள்ள காய்களை அகற்றவும், 9-12 மாதங்களான தரமான கன்றுகளை பின்வரும் இயல்புகளை பயன்படுத்தி தேர்வு செய்யலாம்.

மேலும் படங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்... 

  • விரைவில் முளைத்தல், விரைந்த வளர்ச்சி மற்றும் கன்றுகள் வீரிய தன்மை
  • 6 முதல் 8 ஓலைகள் உள்ள 10-12 மாதங்கள் ஆன அல்லது குறைந்தது நான்கு ஓலையுள்ள 9 மாத கன்றுகள்
  • கழுத்து தடிமன் 10-12 செ.மீ
  • விரைந்து பிளக்கும் இலைகள், விரைந்து வளரும் மற்றும் விரைந்து காய்க்கும் திறனை குறிக்கிறது.

இலைக்காம்பின் நிறம் மற்றும் கன்றுகளின் வீரியம் ஆகியன குட்டை மற்றம் ஒட்டு ரகங்கள் தேர்வு செய்வதற்கான அளவீடு ஆகும். குட்டை ரகங்கள் தாய் மரத்தின் நிறத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒட்டு ரகங்கள் அதன் வீரியத் தன்மையை கன்றுப் பருவத்திலேயே வெயிப்படுத்துகின்றன. குட்டை ரக கன்றுகள் விரைந்து முளைக்கும் திறன், குறைந்த உயரம், சிறுத்த மற்றும் திடமான கூரிய துளிர் இலைகள் ஆகியவற்றை கொண்டு எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்படுகின்றன. நெட்டை ரகங்கள் பொதுவாக நீண்ட இலைகள் மற்றும் நீண்ட பருத்த துளிர் இலைகளுடனும் காணப்படும்.

குறிப்பு:  60-65% வரை தரமான கன்றுகள் கிடைக்கும். விரைந்து முளைக்கும் தன்மை கன்றுகளை தேர்வு செய்ய அளவீடு என்பதால் விதை காய்களை குவித்தல் மற்றும் விதைத்தல் இங்கொன்றும் அங்கொன்றும் இருப்பதை விட குவியலாக இருக்க வேண்டும்.

  • தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நட 1 முதல் 2 வயதுள்ள கன்றுகள் விரும்பப்படுகின்றன
  • உருக்குலைந்த அல்லது குட்டையான வளர்ச்சியுடைய கன்றுகளை நீக்கி விட வேண்டும்.

நாற்றங்காலில் நோய் மற்றும் பூச்சிகளை நிர்வகிப்பது எப்படி?
குருத்து அழுகல் : பைட்டோப்தோரா பால்மிவோரா என்னும் பூஞ்சாணத்தால் இந்நோய் ஏற்படுகின்றது. இந்நோயின் அறிகுறிகள் மஞ்சள் நிறமாதல், குருத்து வாடுதல் அதைத் தொடர்ந்து கன்றுகள் வாடி இறந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட கன்றின் குருத்தினை இழுத்தால் வெளி வந்து விடும். நீக்கப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும். தென்னை நாற்றங்காலில் இது முக்கிய பிரச்சினை இல்லை எனினும் பாதிக்கப்பட்ட கன்றுகள் அகற்றப்பட்டு, அதனை சுற்றியுள்ள கன்றுகளுக்கு 1% போர்டாக்ஸ் கலவை இட வேண்டும்.

குருத்து அழுகல்


செதில் பூச்சி (ஆஸ்பிடைடேபாடஸ் டெஸ்ட்ரக்டர்):
இந்நோயின் அறிகுறிகள் ஓலைகள் மஞ்சள் நிறமடைதல் மற்றும் ஓலைகளுக்கு அடியில் செதில் பூச்சிகள் காணப்படும். கன்றுகளுக்க இவை அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், நாற்றங்காலில் டைமித்தேபயேட்ஐ 0.05 % வீதம் கொண்டு நனைக்க வேண்டும். இதன் மூலம் தரமான ஆரோக்கியமான இலைகள் உள்ள கன்றுகளை பெற முடியும்.

செதில் பூச்சி


கரையான்: துளிர் வாடல் மற்றும் இலை வாடல் ஆகியன நாற்றங்காலில் கரையான் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். கரையான் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 செ.மீ. ஆழத்திற்கு மண்ணை அகற்றி, மண் மற்றும காய்களின் மீது கார்பரில் அல்லது குளோர்பைரிபாஸ் (குளோர்டேன் 5 துகள் 120 கி.கி/ஹெக்டர்) அல்லது குளோர்பைரிபாஸ் 0.05% வீதம் கொண்டு நாற்றங்காலை நனைப்பது கரையானை கட்டுப்படுத்தும். பாதிப்பு தொடர்ந்தால் மேற்கண்ட முறையை மீண்டும் பின்பற்றவும். 1% போர்டாக்ஸ் கலவை அல்லது காப்பர் பூஞ்சைக் கொல்லியை குறிப்பிட்ட கால இடைவெளியில் தெளிப்து பூஞ்சைக் தொற்றை தடுக்க உதவும்.

வெள்ளை வேர்ப்புழு (லீயூ கோபோலிஸ் கோணியோபோரா):
இது மணற்பாங்கான மண்ணில் காணப்படுகிறது. முக்கிய அறிகுறிகள் ஓலைகள் மஞ்சள் நிறமடைதல் மற்றும் கடுமையான வேர் சேதத்தின் காரணமாக ஓலைகள் வாடி கன்றுகள் மடியும்.

ஃபோரேட்டை கன்று ஒன்றுற்கு 15 கிராம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை வேர்ப்புழு

நாற்றங்காலில் இருந்து கன்றுகள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?

வீடியோ : நாற்றங்காலில் இருந்து கன்றுகள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?

 

  • கன்றுகளை நாற்றங்காலில் இருந்து மம்மட்டியால் உயர்த்தி அகற்றி, வேர்களை வெட்ட வேண்டும் ஓலை அல்லது தண்டை இடித்து அகற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
  • கன்றுகளை நாற்றங்காலில் இருந்து அகற்றிய உடன் நட வேண்டும். நான்கு வாரங்கள் வரை கன்றுகளை பாதுகாப்பாக வைக்கலாம். அவ்வாறெனில் நிழலில் வைத்திருக்க வேண்டும். சூரிய ஒளி படக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி ஈரத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • கன்றுகளை நெருக்கமாக கட்டி எடுத்து செல்லலாம். நீண்ட தூரம் எடுத்துச் செல்ல, தனிக் கவனம் செலுத்தி கன்றுகளை பாய் அல்லது தேங்காய் நார் அல்லது மற்ற ஈரம் காக்கும் பொருட்களின் துணை கொண்டு கட்ட வேண்டும். பாலீத்தீன் பை கன்றுடன் அப்படியே எடுத்து செல்லப்பட்டு தோப்பில் உடனடியாக நடவு செய்யலாம். வேர்கள் நன்றாக வளர்வதற்கு ஏற்ப பாலித்தீன்பையின் அடிப்புறத்தை வெட்டி எடுத்து அகற்றி விட்டு நட வேண்டும்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்