தென்னை சாகுபடியாளர்களுக்கான இயந்திரங்கள் மற்றும் கருவிகள்

1. தென்னை மரம் ஏறும் கருவி
2. மட்டை உரிக்கும் கருவி
3. வேளாண் கழிவு எரிப்பொருள் மூலம் உலர்த்தும் இயந்திரம்
4. பவர் டில்லர் மூலம் செயல்படும் ‘ஆகர்’ தோண்டும் இயந்திரம்
5. எரிபொருள் கரி (தயாரிக்கும்) இயந்திரம்
6. தென்னை நார்க்குப்பை இடுவான்
7. மட்கிய உரத்தினை உருண்டைகளாக்கும் கருவி
8. தென்னை மரங்களுக்கான (மருந்து) தெளிப்பான்
9.விசைக் களை எடுப்பான்
10. விசையினால் இயங்கும் தென்னை மட்டை உரிப்புகள்


சிறப்புப் பண்புகள்: தென்னை மரங்களில் காய்களைப் பறிக்கவும், சுத்தம் செய்வதற்காகவும், மரங்களில் தாவி ஏறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும. இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏறிப் பழக்கமில்லாதவர்கள், பெண்களும் கூட எளிதில் தென்னை மரத்தில் ஏற முடியும். 30-40 அடி உயரமுள்ள ஒரு மரத்தில் ஏற 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ஒரு கருவியின் விலை: ரூ. 2,000/-
கொள்ளளவு: 50-60 மரங்கள்/நாளொன்றுக்கு
பயன்படுத்த ஆகும் செலவு: ரூ.1.50/மரம் ஒன்றுக்கு
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,  கோயம்புத்தூர்

 

மேலே செல்கமேலே செல்க

கேரள வேளாண் பல்கலைக்கழகமானது எளிதில் நல்ல திறனுடன் தென்னை மட்டை உரிக்க ஒரு கருவியை உருவாக்கி உள்ளது.  தேங்காயின் முதிர்ச்சியையும்,  அதன் விதத்தையும் பொறுத்து 8-12 நொடிகளில் ஒரு தேங்காயின் மட்டையினை உரித்துவிடலாம்.  குறைவான எடை கொண்ட இதனைக் கையாளுவது எளிது.  கைக்கடக்கமான இதனை வீட்டிலும் மற்றும் வெளியில் எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம்.

 

மேலே செல்கமேலே செல்க

பயன்பாடு :   வேளாண் கழிவுகளை எரித்து சூடான காற்றை உற்பத்தி செய்தல்
சிறப்பியல்புகள் :
     அ) மொத்த: 3100 x 890 x 200 மி.மீ
     ஆ) கொள்ளளவு: 1 டன்/நாளொன்றுக்கு
     இ) ஆற்றல் தேவை: 2 (hp)  குதிரைத் திறன் மின்சார மோட்டார்.

பொதுவான தகவல்: இவ்வியந்திரம் தானியங்களைப் போடுவதற்கென செவ்வக வடிவ, உலோகத்தாலான கொப்பரை, காற்று ஊதுவான், வேளாண் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்பு போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.  சுற்றிலுமுள்ள காற்றைக் கலந்து 80 ºC வரை சூடான வாயுவை உற்பத்தி செய்யக்கூடியது.  இதற்குத் தேவையான காற்றளவைச் சரிசெய்து கொள்ள பட்டாம்பூச்சி போன்ற வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு வளையும் தன்மை கொண்ட குழாய் வழியே இச்சூடான காற்று கொப்பரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

கருவியின் விலை : ரூ. 1,00,000/-
பயன்படுத்த ஆகும் செலவு: ரூ.20/மணிக்கு
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,  கோயம்புத்தூர்


மேலே செல்கமேலே செல்க

செயல்பாடு/பயன்பாடு : மரக்கன்றுகளை நட குழி தோண்ட, பயன்படுகிறது.
பண்புகள்:

வகை: சுழலும் திருகாணி ஆகர் வகையைச் சார்ந்தது.
ஆற்றல் தேவை : 8-10 குதிரைத் திறன் (hp) பவர் டில்லர்.
மொத்த அளவுகள்: 400 x 635 x 1635 மி.மீ
எடை: 50 கி.கி
கொள்ளளவு: 25 முதல் 30 குழிகள்/மணிக்கு

பொதுவான தகவல்: 225 மி.மீ விட்டம் கொண்ட வட்ட வடிவ ஆகர் கருவியானது 100 மி.மீ இடைவெளியுடன் இறக்கை அல்லது அலமாரி போன்ற அமைப்பினால் இயக்கப்படுகின்றது.  ஆகரின் வட்டவடிவ இயக்கமானது, பட்டைக்கம்பி மற்றும் சாய்வுப் பல்சக்கரத்தினால் நடைபெறுகிறது.  இக்கம்பி மற்றும் சாய்வுப் பல்சக்கரம் பவர் டில்லரின் என்ஜின் கம்பியுன் 1:1 என்ற விகிதத்தில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு முழுவதும் செவ்வக வடிவ தளத்தில் நன்கு இணைத்து நிறுவப்பட்டுள்ளது.  இதன் ஒரு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கைச்சக்கரத்தின் மூலம் துளையிடும் ஆழத்தை மாற்றிக் கொள்ளலாம்.  பெரிய அளவிலான ஓட்டைகள் இட வேண்டுமாயின் 250, 275 மற்றும் 300 மி.மீ அளவு விட்டமுள்ள ஆகரின் இயந்திரத்தில் மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம்.    பின்பகுதியில் சமநிலைக்கு தரப்பட்டுள்ள நெம்பு தாங்கி, அதேபோல் முன் பகுதியில் தரப்பட்டுள்ள தாங்கும் சக்கரம் போன்றவை ஆகர் துளையிடும்போது அதை நன்கு சுழலச் செய்வதோடு, கடின இயக்கத் தன்மையைக் குறைக்கவும், இயந்திரத்தை எளிதாகக் கையாள்வதிலும் உதவி புரிகின்றன.

விலை : ரூ. 20,000/-
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

 

மேலே செல்கமேலே செல்க

செயல்பாட: தென்னை நாரிலிருந்து எரிகரி தயாரித்தல்

பண்புகள்:
மொத்த அளவுகள்:
765 x 350 x 990 மி.மீ
கொள்ளளவு: 125 கி.கி/மணிக்கு
தேவைப்படும் ஆற்றல்: 5  குதிரைத்திறன் (hp) மின்சார மோட்டார்.

பொதுவான தகவல்:  இந்த இயந்திரம் உட்செலுத்துவான், தொங்கும் கம்பித் திருகாணி, உருளை அமைப்பு, வெளிநோக்கிய அச்சுக்குழாய் போன்ற அமைப்புக்களைப் பெற்றிருக்கும்.  கம்பித் திருகாணியின் ஒரு முனை பந்து அமைப்பில் இணைக்கப்பட்டும் மற்றொரு முனை சாதாரணமாகத் தொங்கியவாறு விடப்பட்டிருக்கும்.  தாங்கியில் பொருத்தப்பட்டுள்ள உருளையினுள் இத்தொங்கும் கம்பித்திருகாணி விடப்பட்டிருக்கும்.  தொங்கும் திருகாணியின் சரிவான 30 செ.மீ முனையானது, அதே அளவுள்ள வெளிநோக்குக் குழாயினுள் செலுத்தப்பட்டிருக்கும்.  இத்திருகாணி வேகத்தடைப் பல்சக்கரத்துடன் (10:1) இரட்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  இது 5 (hp) குதிரைத் திறன் மோட்டாரால் இயக்கப்படுகின்றது.  நார்த்தன்மை அற்ற தென்னை நார்க்கழிவுகளைப் பசுந் சாணத்துடன் 6:1 என்ற விகிதத்தில் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து உலர வைத்தபின் கரியாக (எரிபொருள்) அவை பயன்படுத்தப்படுகின்றன. 

விலை: ரூ. 30,000/-
ஒரு முறைக்கான பயன்பாட்டுச் செலவு: ரூ 20/மணிக்கு

மேலே செல்கமேலே செல்க

செயல்பாடு :  மேற்புற மண் மூடுதல்

பண்புகள்:

வகை: டிராக்டரால் செயல்படுவது உளிக்கலப்பையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆற்றல் வகை: 35 முதல் 45 (hp) குதிரைத்திறன்  டிராக்டர்
சராசரி அளவுகள் :  840 x 1000 x 12390 மி.
எடை: 50 கி.கி
கொள்ளளவு: 0.5 ஹெ/நாளொன்றுக்கு


பொதுவான தகவல்: நார்க்குப்பை இடும் கருவியானது உளிக்கலப்பையைச் சுற்றி அமைந்துள்ளது.  இந்த உளிக்கலப்பை மண்ணை இயக்கி விடப் பயன்படுகிறது.  இது சற்று (உயர்ந்தவாறு) மேலெழுந்தவாறு உள்ள அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தென்னை நார்க் குப்பையானது காற்றுத் திசைகாட்டி போன்ற சுழலும் பகுதி வழியே அடிப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.  ஒரு ஜோடி பாத்தி தோண்டும் கருவிகளை உளிக்கலப்பையின் பின்புறம் இறகுபோன்ற அமைப்பு  தாங்கிக் கொண்டுள்ளது.  இப்பாத்தி அமைப்பானே,  பாத்தியினுள் நார்க்குப்பையை இடும்.  சுழலக்கூடிய காற்றுத் திசைகாட்டி வடிவ அளவீட்டுக் கருவி இயக்குவதற்கு எளிதாக இருப்பதோடு ஒரே மாதிரியான சராசரி  அளவில் நார்க்குப்பையைப் பாத்தியினுள் இட உதவுகிறது.  இந்த அமைப்பில் மண் தன்மைக்கேற்ற அதாவது செம்மண் வகைக்கு 500 கிலோவும், கரிசல் மண்ணிற்கு 600 கிலோவும் குப்பை இடுவதற்குத் தேவையான சேமிப்பு அமைப்புகள் உள்ளன.

ஒரு கருவியின் விலை : ரூ. 8,500/-
சிறப்புப் பண்பு: குப்பையிடும் சீரான அளவு 90%
தயாரிப்பாளர்: தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம், கோயம்புத்துார்

மேலே செல்கமேலே செல்க

செயல்பாடு:   மட்கிய உரத்திலிருந்து உருண்டைகள் தயாரித்தல்

அ) சராசரி அளவுகள்: 1000 x 900 x 900 மி.மீ
ஆ) கொள்ளவு: 100 கி.கி/மணி
இ) ஆற்றல் தேவை:   5 (hp) குதிரைத்திறன் மோட்டார்

பொதுவான தகவல்: மட்கிய எருவானது துளையிடும் திருகாணி அமைப்புள்ள உருளையினுள் அனுப்பப்படுகிறது.  இந்த திருகாணி மட்கிய எருவினை  சிறு துளை போன்ற அச்சினுள் அனுப்பி அதனை உருண்டையாக வெளித்தள்ளுகிறது.  சுழன்று கொண்டிருக்கும் கத்தியானது இவ்வுருண்டைகளை சிறு சிறு (அளவு) பகுதிகளாக நறுக்கிக் கொடுக்கின்றது.  இந்த உருண்டைகள் அதிர்வுடன் ஆடிக்கொண்டிருக்கும் தட்டு வழியே சென்று அடியில் சிறு (சிறு) உருண்டைகளாக சேகரிக்கப்படுகின்றன.

ஒரு கருவியின் விலை : ரூ.25,000/-
ஒரு முறை பயன்படுத்தும் செலவு : ரூ.15 \ மணிக்கு
தயாரிப்பாளர்:   தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.

மேலே செல்கமேலே செல்க

செயல்பாடு: தோப்பிலுள்ள தென்னை மரங்களுக்கு (இராசாயன) மருந்து  தெளித்தல்
பண்புகள் : 

  • வகை    :  உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள கருவி.
  • ஆற்றல் தேவை:  35 (hp) குதிரைத் திறன் டிராக்டர்.
  • மொத்த அளவுகள்:  65 x 65 x 1950 மி.மீ
  • எடை :  200 கி.கி.
  • கொள்ளளவு :  35 மரங்கள்/மணிக்கு

பொதுவான தகவல்கள்: இந்த அமைப்பு 9 மீ - 14 மீ உயரம் வரை நீளக்கூடிய (சுற்றி வைத்துக் கொள்ளக் கூடிய தொலைநோக்கு 162 & 37 மி.மீ)  G.I. பைப்புகளால் ஆனது.  இத் தொலைநோக்கு G.I. (பைப்) குழாயானது  ‘L’ கோணத்தில் ஒரு அமைப்பின் மீது பொருத்தப்பட்டுள்ளது.  இதன் 3 முனை இணைப்பு வளையம் மூலம் டிராக்டரால் நெம்பப்படுகிறது.  37 மி.மீ G.I. குழாயின் தலைப்பகுதியில் இரண்டு தெளிக்கும் துப்பாக்கிகள் தெளிப்பு முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  கூம்பு அல்லது ஜெட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இம்முனைகள் கீழிருந்து கயிற்றை அசைக்கும்போது, தலைப்பகுதியும் (பற்றுகோல்) அசையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  அதோடு இத்தெளிப்பான்கள் தொலைநோக்குக் குழாயின் செங்குத்தாகச் சுழலும் வகையில் அமைந்துள்ளது.

விலை : ரூ. 45.000/-
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

 

 

மேலே செல்கமேலே செல்க

சுழலும், மூடும் அமைப்புகள் கொண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின். விசைக் களை எடுப்பான் கோயம்புத்துாரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.

இக்கருவி 5.4 (hp) குதிரைத் திறன் மோட்டார், 34  கி.கி இலகு எடை கொண்ட டீசல் என்ஜினால் இயங்கக்கூடியது.

ஆற்றலானது என்ஜினிலிருந்து மாற்றுப் பல்சக்கரக் கடத்திப் பெட்டிக்கு கடத்தப்பட்டு தரைப்பகுதியிலிருக்கும் சக்கரம் வழியே சுழலும் களை எடுப்பானுக்கு அனுப்பப்படுகிறது.
அதிக இடைவெளியுடன் பயிரிடும் பயிர்களான பருத்தி, மரவள்ளி, கரும்பு, திராட்சை, தென்னை, பாக்கு மற்றும் இதுபோன்ற பழத்தோட்ட, மலைத்தோட்டப் பயிர்களில் களை எடுக்க  இவ்வியந்திரம் பயன்படுகிறது.

இவ்வமைப்பில் வரிசை உயர்த்தி அமைக்கப்பட்ட களைக்கொத்தியும் பயிர் வரிசை இடைவெளிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துகொள்ளக் கூடிய கோணல் மானலாக அமைந்த களைகளை அகற்றி வரும் டைன் (tynes) போன்றவையும் காணப்படுகின்றன.

இயக்குபவரின் இருக்கையின் முன், என்ஜின், இயந்திரத்தின் சமநிலைக்காக பொருத்தப்பட்டுள்ளது.
இயந்திரத்தின் விலை ரூ.50,000/-.  ஒருமுறை பயன்படுத்த ஆகும் செலவு ரூ. 380/- ஹெ.

மேலே செல்கமேலே செல்க

ஆதாரம்: http://agricoop.nic.in/

பண்புகள்: இவ்வியந்திரம் தென்னை மட்டையினை உரிக்கப் பயன்படுகிறது.  இது அரைவட்டத்தில் நிலையான குவி அமைப்பும், சுழலும் வகையில் கத்திகளுடன் கூடிய உருளைப் பாத்திரத்தையும் கொண்டுள்ளது.  3 hp (மின்சார மோட்டார் 10:1 என்ற வேகம் குறைக்கும் அமைப்பு இவ்வுருளையினை இயக்குகின்றது. V வடிவ பட்டையின் மூலம் ஆற்றல் மோட்டாரிலிருந்து குறைப்பானுக்குக் கடத்தப்படுகிறது.  தொடர்ச்சியாக குறைக்கும் அமைப்பிலிருந்து சங்கிலி அல்லது பல்சக்கர இணைப்பு வழியே சுழலும் உருளைக்கு கடத்தப்படுகிறது.  இவ்வாறு சுழலும்போது உள்ளே அனுப்பப்படும் தேங்காயின் மட்டையை உள்ளிருக்கும் கத்திகள் கடிக்கும்.  மட்டை உரிக்கப்பட்டு வெளிவரும் தேங்காயானது மீதமிருக்கும் உமிகளை நீக்குவதற்காக ஒரு உருளும் அமைப்புகள் வழி அனுப்பப்பட்டுச் சுத்தமான தேங்காயாக வெளிவருகிறது.

அமைப்புகள்:

நிலைத்த குவியின் அகலம் (rom)

250

சுழலும் உருளையின் அகலம் (rom)

250

உருளையின் எண்ணிக்கை

2

உருளையின் அளவு (1 x விட்டம்) (rom)

280 x 955

உருளையில் உள்ள பற்களின் எண்ணிக்கை

15

அமைவிடம் (நீளம் x அகலம் x உயரம்) (rom)

1020 x 380 x 970

கத்திகளின் நீளம் (rom)

12

ஆற்றல் ஆதாரம் (குதிரைத்திறன்)

 மின்சார மோட்டார்

 

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்