தென்னையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

செய்ய வேண்டியவை:

  1. தரமான தாய் மரத் தேர்வு
  2. சரியான பருவத்தில் கன்றுகளை நடவும்
  3. 5 மாதத்திற்குள் முளைக்காத கன்றுகளை அகற்றவும்
  4. 9-12 மாத வயதுடைய கன்றுகளை நடவும்
  5. குழிகளின் பக்கவாட்டில் மண்ணை அகற்றி, கன்றுகள் வளர வளர புதிய மண் இடவும்
  6. மழைக்காலத்தில், கன்றின் அடித்தண்டில் ஒட்டியிருக்கும் மண்ணை அகற்றவும்
  7. சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றி நீர் மூலம் உரமிடவும்
  8. மண் சோதனை மதிப்பீட்டு அளவுகளைக் கொண்டு சரியான, தேவையான அளவு தொழு உரம், உரமிடவும்
  9. குருத்து அழுகலைத் தடுக்க, சரியான வடிகால் வசதி செய்யவும்
  10. அடித்தண்டு அழுகலைக் கட்டுப்படுத்த, சொட்டு நீர் பாசனம் செய்யவும்
  11. பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் போது, 45 நாட்கள் கழித்து காய் பறிக்கவும்
  12. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டிற்கு, இயற்கை வழி பொருட்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தவும்
  13. வீரிய ஒட்டுக் கன்றுகளை, நல்ல நீர் வசதியுடன் நன்றாக பராமரித்து வளர்க்கவும்.

செய்யக் கூடாதவை:

  1. வீட்டுக்கு அருகாமையில், மாட்டுத் தொழுவம், குப்பைக் குழிக்கு பக்கத்தில் மற்றும் பிற வசதியான இடங்களில் வளரும் தென்னை மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக் கூடாது.
  2. அதிகமான மகசூல் கொடுத்தாலும், ஒல்லி தேங்காய்களை உற்பத்தி செய்யும் மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக் கூடாது.
  3. முதிர்ச்சி அடையாத காய்களை விதைக் காய்களாக தேர்வு செய்யக் கூடாது
  4. சேமிக்கும் போது ரொம்பவும் அடைத்து வைக்க கூடாது
  5. தாழ்வான பகுதிகளில், மழை நேரத்தில் நடவு செய்வதைத் தவிர்க்கவும்
  6. திறந்த வெளியில் நாற்றங்கால் அமைக்கக் கூடாது
  7. சாய்வாக நடுவதைத் தவிர்க்கவும்.  மிக பக்கமாகவோ தூரமாகவோ நடவு செய்யக் கூடாது.
  8. 9மாதத்திற்கு கீழ் வயதான கன்றுகளையும், 12 மாதத்திற்கு மேல் வயதான கன்றுகளை நடக் கூடாது
  9. தென்னந்தோப்பை அடிக்கடி உழ வேண்டாம்
  10. அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்
  11. பரிந்துரைக்கப்படாத உரங்களை இட வேண்டாம். 
  12. வேர்கள் மற்றும் தண்டுகளில் காயம் ஏற்படுத்தக் கூடாது
  13. பச்சை இலைகளை வெட்டக் கூடாது.
  14. பரவல் பாசன முறையை பின்பற்ற வேண்டாம்
  15. இனக்கவர்ச்சி பொறிகளை நேரான சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது
  16. பிரச்சினையுள்ள மண் மற்றும் நீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வீரிய ஒட்டுக்களை வளர்க்கக் கூடாது.







 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்