தென்னை - நிறுவனங்கள் மற்றும் சேவைகள்

1. நிறுவனங்கள்

- தேசிய நிறுவனங்கள்
- சர்வதேச நிறுவனங்கள்

வேளாண் ஆராய்ச்சி நிலையம், ஆழியார்


இவ்வாராய்ச்சி நிலையம் 1963 இல் தொடங்கப்பட்டது.  பின்னர் 2002 இல் தென்னை ஆராய்ச்சி நிலையமாக மறுபெயரிடப்பட்டது.




ஆராய்ச்சி
நிலையத்தின் அடிப்படை நோக்கங்கள்:

  1. பொள்ளாச்சி மண்டலம் மற்றும் தமிழகத்திற்கு ஏற்ற புதிய தென்னை மற்றும் நிலக்கடலை இரகங்களை உருவாக்குதல்.
  2. பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் தென்னை சார்ந்த பயிர் சாகுபடி ஏற்ற பயிர்களை கண்டறிதல்.
  3. வேளாண் தொழில் நுட்பங்களை நியமனம் செய்வதும், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகளை உருவாக்குவதும்.
  4. தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றிய கணக்கெடுத்து, அவற்றை கண்காணித்தல்.
  5. தென்னையை  தாக்கக்கூடிய கருந்தலைப் புழுவைக் கட்டுபடுத்த, உயிரியல் முறைக் கட்டுப்பாட்டு காரணிகளை  அதிக அளவில் உற்பத்தி செய்தல்.
  6. தென்னை வேர் வாடல் நோய் பரவுவதைத் தடுத்தல்.

அணுக வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்,
தொலைப்பேசி : 04253-2288722, மின் அஞ்சல்: arsaliar@tnau.ac.in

மேலே செல்கமேலே செல்க

மத்திய தேங்காய் நார் தொழிற்நுட்ப நிறுவனம், பெங்களுர்


தேங்காய் நார் வாரியத்தின் ஆராய்ச்சி நிறுவனமாக மத்திய தேங்காய் நார் தொழில்நட்ப நிறுவனம் இயங்கிவருகிறது.  இந்திய அரசின் வேளாண் மற்றும் ஊரகத் தொழில் அமைச்சகத்தின் கீழ் தனியாக இயங்கிவருகிறது.  இந்நிறுவனம் 1979 இல் பெங்களுர் நகரத்தில் துவங்கப்பட்டது.

இதன் முக்கிய செயல்பாடுகள்

  • தேங்காய் நாரில் இருந்து புதிய பொருட்களை உருவாக்குதல்.
  • உற்பத்தி பெருகுவதற்கு, இயந்திரங்களை உருவாக்குதல் மற்றும் தற்பொழுது இருக்கும் இயந்திரங்களை சரிசெய்தல்.
  • பிரெளன் தேங்காய் நார் துறையில், தேங்காய் நார் மற்றும் நார் பொருட்களை சோதனை செய்தல்.
  • தேங்காய் நார் தொழில் முனைவோருக்கு, விரிவாக்க தேவை மற்றும் தொழில்நுட்ப உதவியளித்தல்.

அணுக வேண்டிய முகவரி
தென்னை நார் தொழில்நுட்ப மத்திய நிலையம்,
நம்பர் 3ஏ, பீன்யா தொழில்நுட்ப பகுதி,
பெங்களூர் – 560 058, கர்நாடகா.
தொலைபேசி: 080-8394875 தொலைப்பிரிதி: 080-3722074
மின்னஞ்சல்: coir@bgl.vsnl.net.in

மேலே செல்கமேலே செல்க

தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பகுளம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் 1958 இல் வேப்பங்குள தென்னை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது






குறிக்கோள்கள்

  • தென்னையில் மரபக வேறுபாடு உடைய தாவரங்களை சேகரித்து, பாதுகாத்து, மதிப்பீடு செய்து கருவங்கி அமைத்தல்
  • அதிக மகசூல் தரக்கூடிய இரகங்கள்/ஒட்டுகளை உருவாக்குதல்
  • அதிக மகசூலிற்கான பயிர் நிர்வாக தொழில் நுட்பங்களை தயாரித்து, வெளியிடுதல்
  • நல்ல தரமான தென்னை சார்ந்த பயிர்த் திட்டத்தை உருவாக்குதல்
  • பூச்சி மற்றும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த சரியான பாதுகாப்பு தொழில் நுட்பங்களை உருவாக்குதல்
  • தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்தல்.

அணுக வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
தென்னை ஆராய்ச்சி நிலையம்
வேப்பங்குளம் – 614 906, தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி: 04373-260205, 954373260205 தொலைப்பிரிதி: 04373 52700
மின்னஞ்சல்: arsvpm@tnau.ac.in, crsvpm@yahoo.co.in

மேலே செல்கமேலே செல்க

தென்னை ஆராய்ச்சி நிலையம், பாலராமபுரம், கேரளா

வெள்ளாயினி வேளாண்மைக் கல்லூரிக்கு அருகில் பாச்சலூரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் 1948 இல் தொடங்கப்பட்டது.  இந்திய மத்திய தேங்காய்க் குழு இந்நிறுவனம் துவங்குவதற்கு பாதி நிதியளித்துள்ளது.  செம்மண்ணில் தென்னை சாகுபடி செய்வதற்கேற்ற வேளாண் தொழில் நுட்பங்களை நியமிப்பதும், தென்னை மற்றும் தென்னை சார்ந்த பண்ணைத் திட்டங்களுக்கான வேளாண் தொழில்நட்பங்களை உருவாக்குதல்

அணுக
வேண்டிய முகவரி
தென்னை ஆராய்ச்சி நிலையம்
திருவனந்தபுரம் – 695 509
தொலைபேசி: 0471-2400621
மின்னஞ்சல்: crsbalaram@kau.in
மேலும் விபரங்களுக்கு பார்க்கவும்: www.kau.edu/crsbalaramapuram.htm
www.aciar.gov.au, www.cirad.fr, www.ccri.edu

மேலே செல்கமேலே செல்க

மத்திய தேங்காய் நார் ஆராய்ச்சி நிறுவனம், கலவூர் கேரளா


தேங்காய் நார் தொழில் முன்னேற்றத்திற்கான அனைத்து அறிவியில் தொழில் நுட்பத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் . கேரளாவில் உள்ள கலவூரில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.  முக்கியமாக 4 பிரிவுகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

  • சோதனை மற்றும் சேவை வசதிகள்
  • பொருட்கள் உற்பத்தி மற்றும் தேங்காய் நார்/தேங்காய் நார்க் கழிவை பலவகைப்படுத்துதல்
  • தேங்காய் நார் இயந்திரங்களை உருவாக்குதல்
  • தேங்காய் நார் பிரித்தெடுத்தல் மற்றும் பதப்படுத்துவதை நவீனப்படுத்துதல்

அணுக வேண்டிய முகவரி
தென்னை நார் ஆராய்ச்சி நிலையம், கலவூர்,
ஆலப்புழா – 688 522, கேரளா
தொலைபேசி: 914772258094 தொலைப்பிரிதி: 914772258415
மின்னஞ்சல்: ccri@ccriindia.org

மேலே செல்கமேலே செல்க

தேசிய தேங்காய் நார் பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம், ஆலப்புழா, கேரளா


தேங்காய் நார் பொருட்கள் உற்பத்தியில் பயிற்சி பெற்றவல்லுநர்களை உருவாக்குதல், புதிய வடிவமைப்புகள் மற்றும் புதிய வார்ப்புகளை உருவாக்கி  அவற்றை அறிமுகப்படுத்துதல், முறையாக காலந்தவறாது பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகியன இம்மையத்தின் செயல்பாடுகள் ஆகும்.

அணுக
வேண்டிய முகவரி
தேசிய தென்னை நார் பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம்,
ஆலப்பி, கேரளா
தொலைபேசி: 91-477-2258067

மேலே செல்கமேலே செல்க

மத்திய மலைத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் கேரளா


இது, 1916 இல் துவங்கப்பட்ட பழங்கால ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.  பின்னர் 1970 இல் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.  தேங்காய், பாக்கு, கோகோ ஆகியன இதன் ஆராய்ச்சி பயிர்கள் ஆகும்.  இம்மூன்று பயிர்களுக்குக்கான மரபியல் வேறுபாடுகள் கொண்ட பயிர்களின் கருவூல வங்கி இங்கு உள்ளது.  இங்கு உருவாக்கப்பட்டுள்ள லாபம் தரக்கூடிய ஒராண்டு பயிர்கள், பல்லாண்டு பயிர்களுடன் கூடிய தென்னை சார்ந்த பண்ணை மாதிரி, கலப்பு பண்ணைய மாதிரி ஆகியவற்றை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.  நீர் மற்றும் உரச்சத்து மேலாண்மை, வறட்சி தாங்கக்கூடிய வகைகளைக் கண்டறிதல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற பயனுள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அணுக வேண்டிய முகவரி
சி.பி.சி.ஆர்.ஐ (மண்டல நிலையம்)
காயன்குளம், கிருஷ்ணன்புரம் - 690533
ஆலப்புழா மாவட்டம்,   கேரளா
தொலைபேசி: 04792-442160 தொலைப்பிரிதி: 04792-445733
மின்னஞ்சல்: cpcrirskgm@yahoo.com

மேலே செல்கமேலே செல்க

தேங்காய் வளர்ச்சி வாரியம், கொச்சின், கேரளா


இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இவ்வாரியம் துவங்கப்பட்டது.  தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த  மேலாண்மை முறையைக் கையாண்டு உற்பத்தியை பெருக்குவதும், தென்னைப் பொருட்களை பல்வகைப்படுத்தி லாபம் பெறும் வகையில் செய்வதும் இவ்வாரியத்தின் நோக்கம் ஆகும்.

வாரியத்தின் செயல்பாடுகள்

  • தென்னை சாகுபடியின் பரப்பளவை அதிகரிக்க பொருளுதவியும், ஏனைய பிற வசதிகளையும் செய்து கொடுத்தல்.
  • தேங்காய் மற்றும் அதன் பிற பொருட்கள் பதனிடுவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல்
  • தேங்காய் மற்றும் அதன் பிற பொருட்களின் வேளாண்மை, தொழில்நுட்பம், தொழில், பொருளாதார ஆராய்ச்சிகளுக்கான ஆதரவு, ஊக்கம் மற்றும் நிதியுதவி அளித்தல்.

அணுக வேண்டிய முகவரி
தென்னை மேம்பாட்டு வாரியம், கேராபவன்,
எஸ்.ஆர்.வி.ஹச்.எஸ் ரோடு, கொச்சி, கேரளா – 682 011
தொலைபேசி: 91-484-2376265, 2377267, 2376553
தொலைப்பிரிதி: 91-484-2377902
மின்னஞ்சல்: cdbkochi@dataone.in ,cdbkochi@gmail.com
வலைதளம்: www.coconutboard.nic.in

மேலே செல்கமேலே செல்க

சர்வதேச வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஆஸ்திரேலிய மையம்


(ஆஸ்திரேலியன் சென்டர் பார் இண்டர்நேசனல் அக்ரிகல்சுரல் ரிசர்ச், (ACIAR), ஆஸ்த்திரேலியா)
வட பெசிபிக் பகுதிகளில் உள்ள தென்னை ஆராய்ச்சிக்கும், ஆராய்ச்சித் திட்டங்களுக்கும் ஆதரவு அளித்து வருகிறது.  ஆஸ்திரேலியா, ஓசியானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே கூட்டு ஆராய்ச்சிக்கு உதவுகிறது.

சர்வதேச வேளாண்மை ஆராய்ச்சி முன்னேற்ற
மையம்-பிரான்ஸ் (CIRAD):

இந்நிறுவனம், ஐவரி கோஸ்ட் மற்றும் வனுட்டா நாடுகளில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களுடன் இணைந்து செயல்படுகிறது.  மேலும் பல நாடுகளில், கூட்டாரய்ச்சி திட்டங்களில் பங்கு பெற்றுள்ளது.






கோகோ மற்றும்
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CCRI) , பாப்புவா நியூகினியா:

ஆகஸ்ட் 2003 இல் இந்நிறுவனம் துவங்கப்பட்டது இதன் கீழ், இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.  ஓன்று டவிலோவிலும் (ஈஸ்ட், நியு, பிரிட்டன் புரோவின்ஸ்) மற்றொன்று மதங் பிரோவின்ஸ் உள்ள ஸ்டீவர்ட் ரிசர்ச் ஸ்டேசன் ஆகும்.  மேலும் பொகென்வில்லாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் தற்பொழுது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிறுவனத்தின் கீழ் 3,234 எக்டர் அளவில் 8 மலைத்தோட்டங்கள், 2 ஒட்டு விதைத்  தோட்டங்கள் உள்ளன.  நியு கினியா பகுதிகளில், அனைத்து விரிவாக்க சேவைகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆள்வை பிலிப்பைன்ஸ்

தேங்காய் தொழிலை சர்தேச அளவில் உயர்த்தவும், சர்வதேச அளவில் முதன்மையான பொருட்களை உற்பத்தி செய்யவும் முழு நோக்கத்துடன் இயங்கி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரே அரசு நிறுவனமாகும்.

  • தென்னை மற்றும் பாமாயில் தொழில்களை வளர்க்கவும், மேம்படுத்தவும் திட்டம் தீட்டி செயல்படுத்துதல்
  • தேசிய அளவிலான தென்னை நடவு, மறுநடவு, மகரந்தச் சேர்க்கைத் திட்டங்கள் தீட்டி, வழிநடத்துதல்
  • தேங்காய் மற்றும் பாமாயில் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயம் செய்தல், உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை விற்பனையை விரிவு படுத்துதல்.

அணுக வேண்டிய முகவரி
பிலிப்பைன்ஸ் தென்னை நிர்வாகம்
எலிப்டிகல் ரோடு, டிலிமன், குயிஷான் சிட்டி, பிலிப்பென்ஸ்
தொலைபேசி: 0632-928-4501
மின்னஞ்சல்: pca_cpo@yahoo.co.ph
வலைதளம்: www.pca.da.gov.p

மேலே செல்கமேலே செல்க

தேங்காய் ஆராய்ச்சி மையம், அமெரிக்கா:

மருத்துவ நிபுநர்களுக்கு தென்னை மற்றும் பனை பொருட்களின் ஊட்டச்சத்து நிலை குறித்த கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இம்மையம் துவங்கப்பட்டது.  தென்னை மற்றும் பனை பற்றிய தவறான கருத்துக்களை அகற்றுவதும், அறிவியல் ரீதியான உண்மைகளை வழங்கி, ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதும் இவ்வலை தளத்தில் குறிக்கோள் ஆகும்.


தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை




  • தென்னையை தாக்கக் கூடிய நோய் மற்றம் பூச்சித் தாக்கத்தை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு சேவை அளித்தல்
  • தென்னையை தாக்கக் கூடிய பூச்சிகள், மற்றும் களையைக் கட்டுப்படுத்த பூச்சி ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து இனப்பெருக்கம் செய்ய பூச்சி வளர்ப்பிடம் பராமரித்தல்
  • பூச்சித் தாக்கம்  அதிகமாவதை தடுக்க ஊடுருவும் பூச்சிக் கொல்லிகளையும் கவர்ச்சி ஊக்கிகளையும் வழங்குதல்
  • தேசிய மறுநடவு திட்டத்திற்கான மரக்கன்றுளை வழங்குதல்

அணுக வேண்டிய முகவரி
ஸ்ரீலங்கன் (இலங்ககை) தென்னை ஆராய்ச்சி நிலையம்,
பந்திரிப்பூவா எஸ்டேட், லுன்னுவிலா 61150,
ஸ்ரீலங்கா,
தொலைபேசி: +94 31 2257419, +94 31 2255300, +94 060231993
தொலைப்பிரிதி: +94 31 2257391
மின்னஞ்சல்: director@cri.lk
வலைதளம்: www.cri.lk

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்