தென்னை - தாவரவியல் மற்றும் சாகுபடி புள்ளி விபரங்கள்

தாவரவியல் வகைப்பாடு

பிரிவு
-
பானரோ கேம்ஸ்
துணைப்பிரிவு
-
ஆன்ஜீயோஸ்பர்ம்ஸ்
வகுப்பு  
-
மோனோ     காட்டிலிடன்ஸ்
துணைவகுப்பு     
-
கேவிசியே
வரிசை
-
அரிகேஸ்
குடும்பம்   
-
அரிகேசியே
பேரினம்     
-
கொக்கோஸ்
சிற்றினம்
-
நியுசிபெரா
இரகங்கள்
-
கொக்கோஸ் நியுசிபெரா













  • தென்னை ஒரு மிக முக்கிய பயிராகும். இது உலகெங்கிலும் உள்ள தாழ்நில மண்டல பிரதேசங்களில் வளர்கின்றது. இந்த தென்னயிலிருந்து இயற்கை விளைபொருட்களான உணவு, இளநீர், நார், கட்டுமான பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை நாம் பெறுகின்றோம்.
  • தென்னை ஒரு சிறகு மரம் போன்றது. அதாவது இதன் இலைகள் சிறகு கூட்டிலைகளாகும். இந்த ஓலைகள் அடிக்கடி குடிசை வேய்தலில் பயன்படுத்தப் படுகிறது. இதன் நீண்ட தண்டுப்பகுதியானது கட்டுமானப் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.
  • வெப்பமண்டலப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தென்னை ஒரு மிக முக்கிய உணவுப் பொருளாகும். தென்னையிலியிருந்து கிடைக்கும் சுருளி எனப்படும் நாரானது கயறு திரிக்க மற்றும் பாய்கள் செய்ய உபயோகப் படுத்தப்படுகிறது. தேங்காய் மட்டையை உரித்த பின் கிடைக்கின்ற கடினமான ஓடு போன்ற பகுதி சிரட்டை (அ) கொட்டாங்குச்சி எனப்படும். இதிலிருந்து அகப்பை எனப்படும் கரண்டி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். வல்லுனர்கள் இதைக் கொண்டு ஆபரணம் மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்து பயன்படுத்துகின்றனர்
  • இதன் திட நிலையிலுள்ள  கரு சூழ்தசையானது கொப்பரை என்றழைக்கப்படுகிறது. நன்கு முதிர்ந்த கொப்பரை தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டு பின் காயவைத்த பின்னர், இந்தகரு சூழ்தசையை செக்கிலிட்டு இதிலிருந்து எண்ணெய் பெறப்படுகிறது. இந்த எண்ணெய்யானது தலைமுடி சுத்தம் செய்யும் பொருள் மற்றும் சீர்படுத்தும் பொருளின் மிக முக்கிய பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

வேர்

  • தென்னையின் வேர் சல்லி வேராகும். இவை அடி மரத்திலிருந்து தொடர்ந்து உருவாகும். இதில் ஆணி வேர் மற்றும் வேர்முடிகள் கிடையாது. ஆனால் மிக அதிக அளவு சிறு வேர்களைக் கொண்ட முதன்மை வேர்கள் காணப்படும்.
  • அடிமரத்திலிருந்து வளரும் இதன் முக்கிய வேர்கள் கிடை மட்டத்தில் வளரக் கூடியவை. இந்த வேர்கள் பெரும்பாலும் மேல்மட்ட மண்ணில் காணப்படும். இதன் முக்கிய கிளை வேர்கள் மிக ஆழத்திற்கு செல்லக் கூடியவை.
  • தென்னையின் வேரில் கேம்பியம் திசு கிடையாது. சமச்சீரான இந்த முதன்மை வேரின் விட்டம் சுமார் ஒரு மீட்டராகும். இந்த வேரின்நுனிகள் மிக வேகமாக வளரக் கூடியவை. இவை துடிப்பான உறுஞ்சு வேர்களாகும். மிக மெல்லிய செல்சுவரை உடைய எபிடெர்மிஸ் செல்கள் ஓர் அடுக்கில் காணப்படும். இவை வளர வளர கடினமாகவும் ஊடுருவும் தன்மையற்றும் காணப்படுகிறது.
  • முதிர்ந்த வேரில் உள்ள எபிடெர்மிஸ் பகுதி சிதைந்து சிவப்பு நிறமுள்ள ஹைப்போடெர்மிஸ் பகுதியை தருகிறது.

தண்டு

  • இதன் தண்டு அடிமரம் என அழைக்கப்படும். இது பக்க கிளைகளற்ற உருண்டை (அ) உருளை வடிவ பருத்த தடிமனான நீளமான தண்டு ஆகும்.
  • தென்னை ஓலையின் அடிப்பகுதி  தண்டுப் பகுதியுடன் இணைந்து காணப்படும்.
  • இந்த வடுக்களின் எண்ணிக்கை மூலம் தென்னை மரத்தின் வயதை நாம் அறிய முடியும். ஒரு மரத்தில் சுமார் 12-14 வடுக்கள் இருப்பின் இந்த மரத்தின் வயது சுமார் ஒரு வருடம் என கணக்கிடப்படுகிறது.
  • முதல் ஒரு சில வருடங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் தண்டுப் பகுதி தடிமனாக மாறிவிடும்.
  • வயது முதிர்ந்த மரத்தில் ஒரு சில வருடங்களுக்கு தண்டின் சுற்றளவு மாறுதலில்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும் போது வளர்ச்சி குறைந்து காணப்படும்.
  • இந்த தண்டின் உச்சியில் தென்னங்குலைகள் மற்றும் தென்னை இலைகள் கீரிடம் போன்று கூட்டமாக இருக்கும்.

இலை

  • தென்னை ஓலைகள் தண்டின் உச்சியில் கீரிடம் போன்று கூட்டமாக காணப்படும்.
  • இளம் இலைகள் மரத்தின் உச்சியில் நடுப்பகுதியில் கூர்மையாக காணப்படும். அனைத்து ஓலைகளும் சேர்ந்து (அல்லது) ஒருங்கினணந்து காணப்படும்.
  • இந்த ஓலைக்கீற்று (அ) தென்னங்கீற்று முழுமையாக வளர்வதற்கு சுமார் ஐந்து மாதங்களாகும்.
  • இந்த மரத்தில் பதினைந்து முழுவதும் விரிந்த மட்டைகளும் 15 வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திலுள்ள இளம் மட்டைகளும் காணப்படும்.
  • இந்த இலையானது நிறைய சிற்றிலைகளைக் கொண்டிருக்கும். இந்த சிற்றிலைகள் நடுநரம்பு அல்லது காம்புடன் சாய்வாக இணைந்து காணப்படும்.
  • ஒவ்வொரு சிற்றிலை (அ) ஓலைகள் ஒரு வலிமை வாய்ந்த (அ) பலமான நடுநரம்பையும் குறுகலான இலைப்பரப்பு மற்றும் இணையான இலை மடிப்பையும் கொண்டிருக்கும்.
  • இலைக்காம்பு தட்டையாக அல்லது மட்டமாகவும் மிகப்பருமனாகவும் அகலமாகவும் காணப்படும். நார்களையுடைய உறையானது அடிப்பகுதியில் மரத்தைச் சுற்றிலும் காணப்படும்.

பூங்கொத்து (அ) பூங்குலைகள்

  • இந்த பூங்கொத்து (அ) பூங்குலைகள் உற்பத்தியாகி பாளையாக வளர்வதற்கு சுமார் 34 மாதங்கள் ஆகும். மடற்பூங்கொத்தானது தடிமனாகவும் நிமிர்ந்தும் காணப்படும். தடிமனான பூம் பாளையானது இந்த மடற்பூங்கொத்தை சுற்றி காணப்படும் . பூங்குலைகள் முதிர்ந்த நிலையில் பூம்பாளை வெடித்து விடும்.
  • பூங்குலைகளின் தண்டு (அ) அச்சானது பக்கக்கிளைகளையுடையது. இந்த தண்டில் காம்பற்ற ஆண் மற்றும் பெண் பூக்கள் ஒரே மரத்தில் காணப்படும்.
  • ஆண் பூக்கள் மிகச் சிறியவை. இந்த பூக்கள் மிக அதிகமாகவும் நெருக்கமாகவும் பூங்குலைகளின் பக்க கிளைகளில் காணப்படும்.
  • இதில் ஆறு அல்லி மற்றும் புல்லி வட்டம் என வேறு படுத்த இயலாத இதழ்கள் இரண்டு அடுக்கில் காணப்படும். இதல் வெளிஅடுக்கு சிறியதாகவும் உள் அடுக்கு பெரியதாகவும் காணப்படும்.
  • இப்பூம்பாளையின் அடிப்பாகத்தில் பெண் பூக்களைத் தொடர்ந்து மேல் பாகத்தில் ஆண்பூக்கள் காணப்படும் (அ) அமைந்திருக்கும்.
  • இந்த உருண்டையான (அ) கோள்வடிவ அமைப்பு மொட்டு என்றழைக்கப்படுகிறது.
  • ஒரே மாதிரியான கன அளவு மற்றும் உருவம் கொண்ட இந்த ஆறு  அல்லி மற்றும் மற்றும் புல்லி வட்டம் என வேறுபடுத்த இயலாத இதழ்கள் இரண்டு அடுக்கு இதழமைவாக அமைந்திருக்கும். இந்த இதழ்கள் குழிந்த நிலையில் வெண்மையாகக் காணப்படும்.
  • சூழ்முடியானது  சூலகத்தின் அடிப்பகுதியில் காணப்படும்.

தேங்காய்

  • குட்டை இரகங்களில் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருத்தரிப்பிற்கு பின்னர் கருத்தரித்த பெண் பூவானது முதிர்ந்த தேங்காயாக மாறுவதற்கு சுமார் 12 மாத காலம் அல்லது ஒரு வருட காலம் ஆகிறது. குலைகளின் எண்ணிக்கை மற்றும் காய் பிடிப்பு தன்மையை பொறுத்து மகசூலை கணக்கிட முடியும்.
  • தேங்காய்  ஒரு கொட்டை இனச் சதைச்சாறு கொண்ட பழம். இதில் மூன்று பாகங்களையும் ஒரே ஒரு விதையையும் கொண்டது. இதன் வெளிப்பகுதி உமி அல்லது உரிமட்டை எனப்படும்.
  • தேங்காய் ஒரு மூன்று சூழக இலை கொண்ட சூலகம் ஆகும். கனி உறையின் வெளியடுக்கைச் சற்றி நார்கள் காணப்படும். இது உமி அல்லது உரிமட்டை என்றழைக்கப்படுகிறது. இது இளம் நிலையில் பசுமையாகவும் முதிர்ந்த உடன் வறண்டு பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • இதன் உள்ளோடு அல்லது உள்சுவர் கடினமாகக் காணப்படும். இதுவே சிரட்டையை  உருவாக்கும்.
  • இந்த உள்ளோட்டின் உள்பகுதியில் கரு சூழ் தசை அல்லது முளை சூழ்தசை குழி வடிவில் காணப்படும்.  இந்த குழிப்பகுதியில் இளநீர் காணப்படும். இதுவே தேங்காய்ப்பால் என்றழைக்கப்படுகிறது. விதை உறை மிக மெல்லியதாகும். அதனுள் காணப்படும் வெள்ளை நிறப்பகுதி கொப்பரைத் தேங்காய் ஆகும் இந்த கொப்பரையும் இளநீரும் சேர்ந்து கரு சூழ்தசை (அ) முளை சூழ்தசை என்றழைக்கப்படுகிறது.
  • ஆரம்ப காலத்தில் இளநீர் இனிப்பாகவும் கொப்பரை மிக மெல்லியதாகவும் காணப்படும். இது வழுக்கை என்றழைக்கப்படுகிறது. நாளடைவில் அது முதிர்ந்து சதைப்பற்று கூடி அதிக எண்ணெய் அளவு கொண்ட தடிமனான கரு சூழ்தசை (அ) முழுசூழ் தசையாக மாறுகிறது.
  • இந்த கரு சூழ்தசை (அ) கருப்பில் சுக்ரோஸ், பிரக்டோஸ், கேலக்டோஸ், குளுக்கோஸ் மற்றம் ராபினோஸ் ஆகியவை உள்ளன.
  • 9-10 மாதங்களான முதிர்ந்த தேங்காயில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து எண்ணெய்யின் அளவு அதிகரிக்கிறது.
  • இந்த திரவநிலையில் உள்ள கரு சூழ்தசையில் சைட்டோகைனின் எனப்படும் ஹர்மோன் அதிக அளவு காணப்படும். இது திசு வளர்ப்பில் ஒரு சிறிய செல்லில் இருந்து ஒரு முழுத் தாவரத்தை உருவாக்க, வளர் ஊக்கியாக பயன்படுகிறது. இந்த செல்லில் இருந்தே முளைக்கரு உருவாகும்.

மேலே செல்க

(ஏதேனும்  ஒன்றை "கிளிக்" செய்யவும்)...


தென்னை பயிரிடும் முக்கிய மாநிலங்களில் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன்

மாநிலம் / யூனியன் பிரதேசம்

பரப்பு
(000 ஹெக்)

உற்பத்தி
(மில்லியன் தேங்காய்கள்)

உற்பத்தித்திறன்
(தேங்காய் / ஹெக்)

ஆந்திர பிரதேசம்

104.00

970.00

9327

அசாம்

18.80

147.10

7824

கோவா

25.61

128.18

5005

குஜராத்

15.98

157.42

9851

கர்நாடகா

419.00

2176.00

5193

கேரளா

787.77

5802.00

7365

மஹாரஷ்ட்ரா

21.00

175.10

8338

ஒரிசா

51.00

275.80

5408

தமிழ்நாடு

389.60

5365.00

13771

மேற்கு வங்கம்

28.60

355.50

12430

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

21.69

82.00

3781

லச்சதீவு

2.70

53.00

19630

பாண்டிச்சேரி

2.10

30.70

14619


ஆதாரம்: Directorate of Economics & Statistics, Ministry of Agriculture, Govt. of India.

மேலே செல்க


இந்திய அளவில் தென்னை பரப்பு, உற்பத்தி மற்றும் விளைச்சல் (2000 – 2009 வருடங்களில்)

வருடம்

பரப்பு
(மில்லியன் ஹெக்டரில்)

உற்பத்தி
(00 மில்லியனில்)

விளைச்சல்
(தேங்காய் / ஹெக்டர்)

1999-2000

1.77

121.29

6860

2000-01

1.84

125.97

6847

2001-02

1.93

129.63

6709

2002-03

1.92

125.35

6337

2003-04

1.93

121.78

6310

2004-05

1.94

128.33

6615

2005-06

1.95

148.11

7608

2006-07

1.94

158.40

8165

2007-08

1.90

147.43

7747

2008-09

1.89

157.29

8303


மேலே செல்க

தமிழ்நாடு

தென்னை சாகுபடி பரப்பளவு

மாவட்டம்

இறவை

மானாவாரி

மொத்தம்

% (பயிரிடும் பரப்பில்)

சென்னை

0

0

0

0

காஞ்சிபுரம்

2341

2292

4633

2.7

திருவள்ளூர்

983

501

1484

0.9

கடலூர்

2190

532

2722

1

விழுப்புரம்

1725

506

2231

0.6

வேலுர்

21129

1969

23098

9.7

திருவண்ணாமலை

574

323

897

0.3

சேலம்

12730

4

12734

5.1

நாமக்கல்

4801

318

5119

2.5

தர்மபுரி

9131

0

9131

4.6

கிருஷ்னகிரி

15264

0

15264

7.5

கோயமுத்தூர்

101541

0

101541

30.5

ஈரோடு

18472

0

18472

5.7

திருச்சி

5379

1049

6428

3.2

கரூர்

4704

0

4704

4.1

பெரம்பலுர்

792

56

848

0.4

புதுக்கோட்டை

2206

3832

6038

3.7

தஞ்சாவூர்

9386

16901

26287

10.9

திருவாரூர்

306

5065

5371

2.3

நாகப்பட்டினம்

25

3825

3850

1.6

மதுரை

7149

3498

10647

6.6

தேனி

15339

3

15342

12.8

திண்டுக்கல்

23643

1155

24798

9.5

ராமநாதபுரம்

8526

0

8526

4.6

விருதுநகர்

8500

0

8500

5.7

சிவகங்கை

5666

186

5852

4.9

திருநெல்வேலி

12442

3288

15730

7.8

தூத்துக்குடி

5981

7

5988

3.3

நீலகிரி

1

59

60

0.1

கன்னியாகுமரி

9388

14832

24220

26.4

மாநிலம்

310314

60201

370515

6.1


ஆதாரம்: Season and Crop Report 2005-06

தென்னை உற்பத்தி மற்றும் விளைச்சல்

மாவட்டம்

உற்பத்தி
(லட்சத்தில்)

விளைச்சல்
(தேங்காய் / ஹெக்டர்)

சென்னை

0

--

காஞ்சிபுரம்

500

10802

திருவள்ளூர்

66

4428

கடலூர்

332

12208

விழுப்புரம்

218

9753

வேலுர்

2765

11972

திருவண்ணாமலை

115

12829

சேலம்

1603

12586

நாமக்கல்

832

16246

தர்மபுரி

1686

18459

கிருஷ்னகிரி

1581

10356

கோயமுத்தூர்

10709

10547

ஈரோடு

3128

16933

திருச்சி

656

10200

கரூர்

300

6372

பெரம்பலுர்

63

7398

புதுக்கோட்டை

596

9871

தஞ்சாவூர்

5018

19090

திருவாரூர்

559

10401

நாகப்பட்டினம்

546

14190

மதுரை

1258

11816

தேனி

3949

25742

திண்டுக்கல்

3474

14009

ராமநாதபுரம்

1181

13850

விருதுநகர்

687

8082

சிவகங்கை

456

7788

திருநெல்வேலி

1903

12101

தூத்துக்குடி

392

6542

நீலகிரி

0

--

கன்னியாகுமரி

4098

16921

மாநிலம்

48671

13782


ஆதாரம்: Season and Crop Report 2005-06

மேலே செல்க


கேரளா

மாவட்ட அளவில் பயிரிடும் பரப்பு, விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறன்

மாவட்டம்

பரப்பு
(ஹெக்டரில்)

விளைச்சல்
(மில்லியனில்)

உற்பத்தித்திறன்
(தேங்காய் / ஹெக்டர்)

திருவனந்தபுரம்

84078

665

7909

கொல்லம்

66134

504

7621

பத்தினம்திட்டா

21375

119

5567

ஆலப்புழா

56154

357

6358

கோட்டையம்

39943

217

5433

இடுக்கி

24343

90

3697

எர்ணாகுளம்

58553

369

6302

திருச்சூர்

85366

726

8505

பாலக்காடு

55437

415

7486

மலப்புரம்

113411

863

7609

கோழிக்கோடு

129500

845

6525

வயநாடு

11517

38

3299

கண்ணுர்

93934

692

7367

காசர்கோடு

58088

426

7334

மாநிலம்

897833

6326

7046


ஆதாரம்: Department of Economics & Statistics, Kerala, 2006

மேலே செல்க

கர்நாடகா

தென்னை பயிரிடும்  பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன்

மாவட்டம்

பரப்பு
(ஹெக்)

உற்பத்தி (‘000 தேங்காய்கள்)

உற்பத்தித்திறன்
 (தேங்காய்கள்)

பெங்களூர் (நகரம்)

2385

8546

3583

பெல்காம்

632

2722

430

பெல்லாரி

1251

5973

4775

பிடார்

26

124

4769

பீஜப்பூர்

189

903

4778

சிக்மகளூர்

37921

71705

1891

சித்ரதுர்கா

41821

183580

4390

தக்ஷினகன்னடா

16094

68703

4296

தார்வாடு

445

2125

4775

குல்பர்கா

598

3009

5032

ஹாசன்

61788

256547

4152

குடகு (கூர்க்)

2076

9919

4778

கோலார்

2101

7523

3581

மாண்டியா

18297

65555

3583

மைசூர்

18462

49312

2671

ரெய்சூர்

158

753

4766

ஹிமோகா

6864

18178

2648

தும்கூர்

125511

619416

4935

உத்ரகன்னடா

7479

35570

4756

பெங்களூர் (ஊரகம்)

19357

69333

3582

பாகல்கோட்

236

1128

4780

சாம்ராஜ்நகர்

11257

30068

2671

தாவணிகெரா

11469

50345

4390

கடாங்

592

2827

4775

ஹவேரி

1058

5052

4775

கோபல்

628

2995

4770

உடுப்பி

14976

63931

4269

மாநிலம்

403671

1635839

4052


ஆதாரம்: Directorate of Economics and Statistics, Karnataka

மேலே செல்க


பாண்டிச்சேரி

தென்னை பயிரிடும்  பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன்

மண்டலம்

2005-2006

2007-2008

பரப்பு
(ஹெக்)

உற்பத்தி (‘000 தேங்காய்கள்)

உற்பத்தித்திறன்
 (தேங்காய்கள்)

பரப்பு
(ஹெக்)

உற்பத்தி (‘000 தேங்காய்கள்)

உற்பத்தித்திறன்
 (தேங்காய்கள்)

பாண்டிச்சேரி

1192

19668

16500

1179

17033

14447

காரைக்கால்

212

1272

6000

207

1532

7400

மாஹே

487

4383

9000

481

4040

8400

யானம்

303

4091

13502

297

4010

13500

யூனியன் பிரதேசம்

2194

29414

13407

2164

26615

12299


ஆதாரம்: Directorate of Economics & Statistics, Puducherry







அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்