||| | | | |
தோட்டக்கலை :: வழங்கல்கனை மேலாண்மை
 

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்

சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்

வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

விநியோக சங்கிலி மேலாண்மை

முன்னுரை

விநியோக சங்கிலி மேலாண்மையில் பலவிதமான காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதலில் பொருளின் விலை மற்றும் அதைப் பற்றிய தகவல்கள். இணைப்பை எளிதாக்கி, கால விரியமாவதை விநியோக சங்கிலிவலைப்பின்னலில் தவிர்க்கப்படுகிறது. இரண்டாவதாக உள்ளூர் மற்றும் உலக சந்தை போட்டிக்கு அமைப்புகளின் நிர்வாகம், வேகம், இலாவகம், சந்தையைப் பற்றிய கணிப்பு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவை தேவை. மூன்றாவதாக நுகர்வோரின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் மிகவும் சுருங்கி வருகிறது. தேவைகள் அதிகமாகும் பொழுது அமைப்புகள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சந்தையில் ஏற்படும் சரிவுக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். இன்றைய காலகட்டத்தில் போட்டியானது தனிப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே இல்லை. எந்த நிறுவனம் மிகச்சிறந்த விநியோகத்தை கொடுக்கிறதோ, அதுவே சந்தையை வெல்ல முடியும்.

விநியோக சங்கிலி மற்றும் அதன் மேலாண்மை

விநியோக சங்கிலி என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் நேரடியாக ஒன்று இல்லது அதற்கு மேற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பொருள், சேவை, பணம் மற்றும் தகவல்களை ஒரு மூலதனத்திலிருந்து நுகர்வோருக்கும் கொடுப்பதாகும். விநியோக சங்கிலி மேம்பாடு, விநியோகத் தகவமைப்பை உறுதி செய்கிறது. மேலும் சாதகமான இரு வழி இயக்க நிர்வாகத்தை உள்ளடக்கியது. மூலத்தனப்பொருளிலிருந்து நுகர்வோருக்கு செல்லும் வரை பொருள், சேவை, தகவல் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் விநியோக சங்கிலி மேலாண்மைக்க எல்லை கடந்த ஒருங்கிணைப்பு செயல்கள் தேவை. எந்த நிறுவனங்கள் விநியோக தகவலமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ அவையே விநியோக மேலாண்மையில் நிலைக்க முடியும்.

விநியோக சங்கிலியின் விளக்கம்

விநியோக சங்கிலி நிர்வாகத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் நிறுவனங்களை அதன் கொள்முதல் மற்றும் தேடுதலுக்கான வழிமுறைகள், தொழில் பெருக்கம், விநியோக சங்கிலி நோக்கத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்று மறு பரீசீலனை செய்ய வைக்கிறது.

நாம் மூலதனப் பொருள் விநியோகிஸ்தர்களையும் நுகர்வோர்களையும் நோக்கி செல்வதால் விநியோக சங்கிலி பல தரப்பட்ட நிறுவனங்கள் உள்ளடக்கியது. சாதாரண விநியோக சங்கிலியானது அதன் மூலப்பொருளை வாங்குதல் பக்குவப்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

தானிய உற்பத்தியாளர்கள் சாதாரண விநியோக சங்கிலிக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். ஒரு தானிய கிடங்கானது விவசாயிடமிருந்து தானியத்தை வாங்கி அரிசி ஆக்குகின்றனர். அந்த நிறுவனமானது மேலும் காகித உற்பத்தியாளர்களிடமிருந்து காகித அடட்டையை, வாங்குகிறது. காகித உற்பத்தியாளர்கள் காகிதத்தை உருவாக்க மரத்தை வாங்கிப் பின் அடையாளச்சீட்டை உற்பத்தி செய்வோரின் மூலம் அடையாளச்சீட்டைப் பயன்படுத்துகின்றனர். அடையாளச்சீட்டை தயாரிப்பவர்கள் பாதி முழுமையடைந்தச் சீட்டை மற்றொருவரிடமிருந்து வாங்குகின்றனர். தானிய நிறுவனமானது தானியத்தை அட்டைப் பெட்டியில் அடுக்கி விநியோகிஸ்தர்களுக்கு அனுப்புகிறது. அவ்விநியோகிஸ்தர்கள் நுகர்வோர்களுக்கு விற்கும் மளிகைக் கடைக்காரர்களுக்கு பொருட்களை அனுப்புகின்றனர். இவ்வாறபக ஒரு சாதாரண தானிய விநியோகத்திற்கும் பலவிதமான பரிமாற்றங்கள் தேவைப்படுகிறது.

அட்டைப்பெட்டியில் முறைப்படி அடுக்கிய தானியத்தை நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதில் விநியோக சங்கிலியானது உற்பத்தியாளர்களுக்கு பெரும்பங்காற்றுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு சரக்குகளை அனுப்புவதில் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகிகளே பொறுப்பேற்கிறார்கள். லாஜிஸ்டிக்ஸின் ஒரு முக்கிய பங்கானது போக்குவரத்துகளை தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதாகும். விநியோக நிர்வாகத்திக் பங்கானது அட்டைப் பெட்டியில் அடைத்தல், தேக்கி வைத்தல், கிடங்கு மற்றும் சில்லரை விற்பனையாளர்களை கையாளுதல் ஆகியவையாகும்.

விநியோகச் சங்கிலி

கொள்முதல் மட்டுமல்லாமல் பலவிதமான செயல்களை உள்ளடக்கியது. விநியோகச் சங்கிலி நிர்வாகம் அவைகளில் ஒரு முக்கியமானச் செயல் விநியோகச் சங்கிலிலிளில் பொருள் மற்றும் தகவலை அனுப்புவதாகும். விநியோகச் சங்கிலி நிர்வாகத்தின் செயல்கள் என்னென்ன?

கொள்முதல்

பல நிறுவனங்களும் கொள்முதல் செய்வதையே முக்கியச் செயலாகக் கருதுகின்றன.

உள்ளடங்கிய போக்குவரத்து

பொதுவாக விநியோகிஸ்தர் - நுகர்வோர் தொடர்பை நிர்வகிக்க சிறந்த முறைப் போக்குவரத்தை பெரும்பான்மையான நிறுவனங்கள் கையாளுகின்றன. சில நிறுவனங்கள் போக்குவரத்தை விநியோகச் சங்கிலியில் மிகப் பெரிய பங்காற்ற வைக்கின்றன. எந்தவொரு நிறுவனத்தின் பொதுவான கொள்முதல் தேவை குறைந்தபட்சமாக உள்ளதோ, அந்த நிறுவனம் போக்குவரத்து ஒருங்கிணைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது.

தரக்கட்டுப்பாடு

கடந்த பதினைந்து வருடங்களாக தரக்கட்டுப்பாடு முக்கியத்துவம் பெற்றுவருகிறது. ஏறக்குறைய அனைத்து நுறுவனங்களும் விநியோகித்தரத்தை மேம்படுத்துவதிலும் தரக்குறைவை கண்டறிந்து அகற்றுவதிலும் முனைப்பாக உள்ளன. முன்னேற்ற நிறுவனங்கள் விநியோகிஸ்தரர்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு தரக்கட்டுப்பாட்டினை முறைப்படுத்துகின்றன.

தேவை மற்றும் விநியோகத் திட்டம்

தேவை திட்டமானது உற்பத்திப்பொருளுக்கான தேவைகளை கண்டறிந்துள்ளது. அவைகளாவன எதிர்பார்த்த பொருள்களின் தேவைகளைப் பற்றிய முன்னறிவிப்பு தேவையான பொட்களை ஒழுங்குபடுத்துதல் நிறைவேற்றப்படாத ஆணைகள், உபரிப்பொருட்கள் மற்றும் வியாபாரத்திற்கு பிந்தைய தேவைகள், விநியோகத்திட்டமானது தேவைக்கான விவரங்களைச் சேகரிப்பது. விநியோகம் தயாரிப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவைகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

பொருட்களைப் பெறுதல், கையாளுதல், மற்றும் சேமித்தல்

விநியோகஸ்தரிடமிருந்து நுகர்வோருக்குச் செல்வதால், எல்லா உட்பொருட்களையும் பெறவேண்டும். நான் ஜஸ்ட் இன் டைம் (JIT) சூழலில் பொருட்களைச் சேகரித்து வைக்கவும் வேண்டும். பொருட்களைப் பெறுதல், கையாளுதல் மற்றும் சேமித்தல் என்பன பொருட்களின் நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். பதனிடுதல் மற்றும் தேவையான பொருட்களைக் கையாளுதல் ஆகியவற்றின் தேவையே இதற்கு காரணமாகும்.

பொருட்கள் மற்றும் அதன்பட்டியல் கட்டுப்பாடு

பொருட்களை கையாளுதல் குழுவானது பொருட்களின் விநியோக நிர்வாகத்திற்கு பொறுப்பேற்கிறது. அந்நிர்வாகமானது பொருட்களை வெளியிடுதல் விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பொருட்களை வண்டியிலேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. சில சமயங்களில் சிறு நிறுவனங்களில் பொருள் கட்டுப்பாட்டுச் செயல்களுக்கு கொள்முதல் துறை பொறுப்பேற்றுக் கொள்ளும்.

தேவையான பொருட்களின் கட்டுப்பாட்டுக் குழுவானது முழுமையான பொருட்களின் தேவைப் பட்டியலுக்கு பொறுப்பானது. தங்குதடையற்ற சமூகமான முறையில் நுகர்வோர்களைச் சென்றடைவதற்கும் இக்குழு பொறுப்போற்கிறது.

ஆணைச்செயல்முறை

இக்குழுவானது நுகர்வோரின் தேவைக்கேற்ற இடம் மற்றும் நேரத்தில் பொருட்களைச் சேர்ப்பதில் பொறுப்பேற்கிறது. தேவையான உற்பத்தியை உறுதி செய்வதற்கு முன்னரே ஆணையை ஏற்பது. ஆணைச் செயல்முறை மற்றும் ஆணைத் திட்டம் ஆகிய இரண்டும் ஒத்துச் செயல்படாமை நுகர்வேரின் விருப்பத்திற்கு ஒத்துவராத சில பிரச்சனைகளாகும். உற்பத்தியாளருக்கு வெளிநுகர்வோருக்கும் இடையே ஒரு பாலமாகவும் இவ்வாணைச் செயல்முறை உள்ளது.

உற்பத்தி திட்டம், அட்டவணை மற்றும் கட்டுப்பாடு

இவைகளின் செயல்முறைகள், கால அட்டவணை அல்லது உற்பத்தி குறுகிய கால உற்பத்தி திட்டம், மற்றும் நடைமுறையிலுள்ள உற்பத்தியின் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. உற்பத்தி திட்டமாது பொருட்களின் மதிப்பீட்டிற்கான முன்னறிவிப்பினைச் சார்ந்துள்ளத. ஏனென்றால் உற்பத்தித் திட்ட சார்ந்த இயக்க முறைகள் உள்ளன. நுகர்வோரின் ஆணையை குறிப்பிடத் தேதியில் ஏற்றல். ஆணையைச் செயல்முறைப்படுத்துதல், இயக்கமுறைகள் உற்பத்தித் திட்டம் ஆகிய அனைத்தும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

தேக்கிவைத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல்

ஒரு உற்பத்திப் பொருளானது நுகர்வோரைச் சேருமுன் குறிப்பிட்ட ஒரு கால அளவிற்கு தேக்கிவைக்கும் அல்லது பகிர்ந்து அளிக்கும் மையங்களில் சேமிக்கப்படும் இந்தச் செயலானது எதிர்கால விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும் பொதுவாக நுகர்வோரின் ஆணைக்கேற்பவே பொருட்கள் உற்பத்திச் செய்யப்படுவதால் விநியோகச் சங்கிலியின் இந்தப் பகுதி குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகிறது.

இடமாற்றம்

ஒரு பொருளை விநியோகிஸ்தர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஆவண செய்வதே இந்தச் செயல்முறை சேதமடையாமல் கட்டுதல், பெயர்சீட்டை ஒட்டுதல், போக்குவரத்திற்கான ஏற்பாடு செய்தல் ஆகியன இதிலடங்கும். பல தெளிவான காரணங்களால் இடமாற்றம் மற்றும் போக்குவரத்து ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

வெளிப் போக்குவரத்து

சில வருடங்களுக்கு முன்வரை மிகச் சில நிறுவனங்களே போக்குவரத்து வசதியையும் செய்து கொண்டிருந்தன. தற்போது நுகர்வோரின் வசதிக்கேற்ப அனித்துச் சேவைகளையும் நிறுவனங்கள் செய்ய முன்வருகின்றன.

நுகர்வோர் சேவை

இது பொருட்களின் மற்றும் சேவையின் மீதான மனநிறைவை நுகர்வோருக்கு கொடுப்பதில் பங்கேற்கிறது. பொருட்களின் பரிவர்த்தனை, பரிவர்த்தனைக்கு முன் மற்றும் பிந்தையச் செயல்முறைகள் ஆகியவை நுகர்வோர்ச் சேவையின் முதல் மூன்று அடிப்படைக் கொள்ளைகளாகும்.

விநியோகச் சங்கிலி மேலாண்மையில் வேளாண் பல்கலைக்கழகத்தின் பங்கு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் மிக்சிகன் மாநில பல்கலைக்கழகமும் இணைந்து இந்தியாவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகச் சங்கிலியில் வளர்ச்சி ஏற்படுத்ர்வதற்காக பல்கலைக்கழகத்தினை மேம்படுத்த முனைந்த ஒரு திட்டத்தின் மூலம் பல வெற்றி இலக்குகளை அடைந்துள்ளன.

திட்டத்தின் குறிக்கோள்

நமது நாட்டில் நிலவும் விநியோகச் சங்கிலி மேலாண்மையினை மேம்படுத்துவதற்காக கீழ்வரும் நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டது.

  1. விநியோகச் சங்கிலியில் உற்பத்தி மற்றும் போட்டி திறனை மேம்படுத்துதல்
  2. கற்பித்தல் மற்றும் கற்கும் திட்டங்களை வகுத்தல்
  3. பங்குதாரர்களின் இணைப்பை வலுப்படுத்துதல்

இத்திட்டத்தினால் பல நன்மைகள் அடையப்பெற்றன. குறிப்பிடும்படியாக மாநில அளவில் மா மற்றும் வாழை போன்ற பழப்பயிர்களின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கணினி மூலம் கிருஷ்ணகிரியில் விளையும் மாம்பழங்களை விற்பனை செய்வதற்கான வசதி, ஏற்றுமதிக்கான ‘யூரப்கேப்’ சான்றிதழ் வாழைப்பழங்களை அறுவடைக்குப்பின் கையாளுவதற்கு ஒரு சேமிப்புக் கிடங்கு போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 180 விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்டு துவங்கப்பட்ட “தர்மபுரி துல்லிய பண்ணை விவசாயிகள் அக்ரோ சர்வீசஸ் லிட்”, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட வேளாண் தொழில் வளர்ச்சி இயக்ககம் மற்றும் சாகுபடியாளர்கள் மற்றும் ரிலையன்ஸ், மாக்ரிடா, சஃபல், ஃபீல்டு ஃப்ரெஷ், டோல் போன்ற பெரிய வியாபரிகளுக்கிடையே கலந்தாய்வு கூட்டங்கள் போன்ற பலவும் செயல்படுத்தப்பட்டன. இத்தகைய கூட்டமைப்புகள் விநியோக சங்கிலியை மேம்படுத்துவதற்கான முயற்சியில் வலுப்பெற்றுத் திகழ்கிள்றன.

மா உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு

வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு

திருமதி.ராதாசிங் இஆப-வுடன் கலந்துரையாடல்        

டோல் நிறுவனத்துடன் கலந்துரையாடல்

திருச்சியில் நடைபெற்ற வாழை பயிலரங்கம்

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்

வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa
 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008