||| | | | |
தோட்டக்கலை :: ஒருங்கிணைந்த தோட்டக்கலை மே.திட்டம்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத்திட்டம்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டமானது சென்னை மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து 29 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயர்ந்த மகசூல் / வீரிய காய்கறி விதைகள் அனைத்தும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்துடன் விநியோகிக்கப்படுகிறது. 2007 – 08ம் ஆண்டு இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 266.610 இலட்சமாகவும் 2008 – 09ம் ஆண்டு ரூ. 338 இலட்சமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டை முதலியன வீரிய விதைகளைாகவும் மற்றும் மா, கொய்யா மற்றும் சப்போட்டா முதலியவை செடிகளாகவும் விவசாயிகளுக்கு விநியோகிகக்கப்படுகிறது.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:

  1. விண்ணப்ப படிவம்
  2. சிட்டா மற்றும் அடங்கல்
 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014