||| | | | |
தோட்டக்கலை :: திட்டங்கள் :: தேசிய தோட்டக்கலை வாரியம்

நமது இந்திய அரசாங்கத்தால் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984 ல் பதிவெண் அறிக்கை 1860 நிறுவப்பட்டது. தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைந்த முன்னோக்கு வளர்ச்சியடைந்திட இந்த தேசிய தோட்டக்கலை வாரியம் அமைக்கப்பட்டது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் அதிகரிக்கப்பட்டது. மேலும் உற்பத்தி நிலங்களின் உள் அமைப்பு, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறிப்பாக அறுவடைக்குப் பின் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டது.

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் நோக்கங்கள்:

  1. உயர் தரமுடைய தோட்டக்கலை நிலங்களை உருவாக்குவது
  2. அறுவடை பின்சார் தொழில் நுட்பங்களுக்கான உள் கட்டடைப்புகளை உருவாக்குதல்
  3. சந்தை விலை நிலவரம் மற்றும் தோட்டக்கலைத் துறை புள்ளி விவரங்களை வலுப்படுத்துதல்
  4. தனிச்சிறப்பு வாய்ந்த இரகங்களை மேம்பாட்டான வழிமுறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியடைய உதவுவது
  5. விவசாயிகளுக்கு பதப்படுத்துதல் தொழில் ரீதியான பயிற்சி மற்றும் கல்வி வழங்கி மேம்பாடு அடைந்த வேளாண்மை பயிற்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்குதல்
  6. பழங்கள் / காய்கறிகள் முதலியவை நன்கு தூய்மையான / சிறந்த முறையில் பதப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் வாங்குவதற்கு முன்னோடியாக இருத்தல்

மேலும் விவரங்களுக்கு http://nhb.gov.in/schemes.asp

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014