||| | | | | |
தோட்டக்கலை :: த.வே.ப :: தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை தொழில் நுட்பங்கள்:

  • 2005 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்
  •  2006 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்
  • 2007 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்
  • 2008 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்
  • 2005 ம் ஆண்டு வளர்ந்த தொழில்நுட்பங்கள்:

i. கூடாரங்களில் மிளகாய் மற்றும் தக்காளி சாகுபடி செய்ய உற்பத்தி செய்முறைகள்

தொழில் நுட்ப விபரங்கள்:

மிளகாய்க்காக வளர் ஊடகம், நீர்ப்பாசனம், உரங்கள் பயன்படுத்துதல், மற்றும் தக்காளி (வீரியவகை SH7711) ஆகியவை இயற்கையான காற்றோட்டத்துடன் கூடாரங்களில் வளர்க்கப்படுகின்றன.


பொருள்

மிளகாய்

தக்காளி

வளர் ஊடகம்

மண்: மக்கிய பண்ணை எரு: மக்கிய நார் அட்டை (2:1:1)

நீர்பாசனம்

20 கி பாஸ்கல்

உரம் பயன்பாடு

அடி உரம் – தழை, மணி, சாம்பல் சத்து ஒவ்வொன்றும் 50 கிலோ / ஹெக்டேர் நேரடி உரமாக வழங்கப்பட வேண்டும்

 

உரங்களை நீர் கலந்து கொடுத்தல் – என்.பி.கே ஒவ்வொன்றும் 150 கி / ஹெக்டேர் நீரில் கலக்கக் கூடிய உரங்களின் மூலமாக கொடுத்தல்

என்.பி.கே 250 கி / ஹெக்டேர் நீரில் கலக்கக் கூடிய உரங்களின் மூலமாக கொடுத்தல்

மூடாக்கு

கருப்பு நிற பாலித்தீன் விரிப்புகள் (50 மைக்ரான்)

பயன்கள்:

i. இதனால் நல்ல தரமான உற்பத்தி மற்றும் உயர்ந்த விளைச்சல் மிளகாய் மற்றும் தக்காளியில் கிடைக்கிறது

ii. பூச்சி தாக்கம் மற்றும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துகிறதுiii. நுண்ணிய தட்பவெப்பம் நிலவுவதால் பயிர் சேதம் வெகுவாக குறைக்கப்படுகிறது

iii. இது ஒரு இயற்கைக்கு சாதகமான அமைப்பாகும், இதனால் கெடுதி விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்படுகிறது

பொருளாதாரம்:


பொருள்

மிளகாய்

தக்காளி

மகசூல் டன் / ஹெக்டர்

143

176

இலாப செலவு விகிதம்

3.40

1.76


i. மதிப்பு கூட்டப்பட்ட முட்டைக்கோசு தொழில்நுட்ப விவரங்கள்
  • நன்கு வளர்ந்த தூய்மையான முட்டைக்கோசு
  • 5 மி.மீ அளவிற்கு நன்கு சீவி, 2.5% உப்பு கரைசலில் நன்கு கலக்க வேண்டும்
  • 2/3 உயரமுள்ள பொட்டியில் அடுக்கு அடுக்காக வைக்க வேண்டும்
  • பிறகு இயற்கை முறையில் நன்கு நொதிக்கும் படி செய்ய வேண்டும்
  • 700 செ. வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் நன்கு உலர்த்த வேண்டும் 28 நாட்களுக்குப் பிறகு
  • நன்கு நிழற்பாங்கான தூய்மையான இடத்தில் வைக்க வேண்டும். நான்கு மாதத்திற்குள் இவைகளை பயன்படுத்த வேண்டும்

பயன்கள்:

1. நன்கு நொதிக்கப்பட்ட முட்டைக்கோசானது குளுக்கோசைனோ லேட்டிலிருந்து ஐசோதையோசயனேட் என்னும் வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது ஒரு புற்று நோய் எதிர்ப்பு வேதிப் பொருளாகும்.

2. மதிப்பு கூட்டப்பட்ட முட்டைக்கோசினன உட்கொள்ளுவதால் மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் வெகுவாக குறைக்கப்படுகின்றது.

3. உயர் விளைச்சல் காலங்களில் அறுவடை பின்சார் இழப்புகளை முற்றிலுமாக குறைக்கிறது. ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற ஒன்றாகும்.

பொருளாதாரம்:

  • உற்பத்தி செலவு – ரூ. 50 / கிலோ
  • இறக்குமதி செலவு - ரூ. 350 / கிலோ

2. 2006 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்:

ii. கருவேப்பிலையில் நுண்ணிய தெளிப்பு நீர்பாசனம்.

தொழில் நுட்ப விவரங்கள்:

  • நுண்ணிய தெளிப்பு நீர்பாசனம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 40 சதவீதம் ஆவியாதல் மட்டும் இருவரிசைகளுக்கு இடையில் பயிர்களை 0.75மி அளவும், 1.25 மீ அளவு இடைப்பட்ட இரு வரிசைகளுக்கும் நட வேண்டும்

மணல் கலந்த மண்ணில் நுண்ணிய தெளிப்பு நீர்பாசனம்:

பருவம்

கால அளவு

ஜனவரி – பிப்ரவரி

1 மணி நேரம்

மார்ச் – ஜீன்

1 மணி நேரம். 30 நிமிடங்கள்

ஜீலை – செப்டம்பர்

1 மணி நேரம்

அக்டோபர் - டிசம்பர்

45 நிமிடங்கள்

பயன்கள்:

  • 51 சதவிகித அளவு நீரானது சேமிக்கப்படுகிறது
  • மேற்பரப்பு நீர்பாசனம் – 1134 மி.மீ / ஆண்டு
  • நுண்ணிய தெளிப்பு நீர்பாசனம் – 555 மி.மீ / ஆண்டு
  • நீர்பாசனம் செய்யப்படும் பரப்பளவானது இரட்டிப்பாகிறது
  • ஆற்றல் வேலையாட்கள், இதர உள்ளீடுகள் சேமிக்கப்படுகின்றது.

பொருளாதாரம்:

நுண்ணிய தெளிப்பு நீர்பாசனம் அமைக்க ஆகும் செலவு – ரூ. 49000 / ஹெக்டர்
இந்த அமைப்பின் வாழ்நாள் செலவு 10 வருடத்திற்கு - ரூ. 9800 / ஹெக்டர்
கூடுதல் செலவு ஆண்டுக்கு கூடுதல்  வரவு ஆண்டுக்கு – 2238 / ஹெக்டர்
நுண்ணிய தெளிப்பு நீர் பாசனத்தினால் குறைக்கப்பட்ட செலவு (ஆண்டுக்கு)
தண்ணீர் பாய்ச்சுவதற்கு வேலையாட்களின் செலவு – ரூ. 9000/ ஹெக்டர்
களை எடுப்பதற்கு – ரூ. 9600 / ஹெக்டர்
மொத்த குறைந்த செலவு – ரூ. 18600 / ஹெக்டர்


பொருள்

மேற்பரப்பு நீர்பாசனம்

நுண்ணிய தெளிப்பு நீர் பாசனம்

மொத்த வரவு

73854

76092

மொத்த சாகுபடி செலவு

20854

15250

நிகர இலாபம்

53000

60842


ii. தக்காளி சாகுபடியில் நிழல் கூடாரத்துடன் கூடிய உரப்பாசனம்

தொழில்நுட்ப விவரங்கள்:

இந்த தொழில்நுட்பத்தால் தக்காளியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீரியவகை – ருசி
நிழல் – 35 சதவிகிதம்
இடைவெளி – இரு வரிசை முறை 80 x 40 x 60 செ.மீ (இடைப்பட்ட இரு வரிசைகள், வரிசை மற்றும் பயிர்கள்)

உர அளவு:

அடிஉரம் – தழை, சாம்பல் சத்து ஒவ்வொன்றும் 50 கிலோ / ஹெக்டர் மற்றும் மணிச்சத்து 250 கிலோ / ஹெக்டர் நேரடி உரமாக பயன்படுத்துதல்.

பயன்கள்:

  • சந்தையில் கோடைக்காலங்களில் இந்த தக்காளியின் தேவை அதிகமாகவும் நல்ல விலைக்கும் விற்கப்படும்
  • நிழல் கூடாரங்களில் சாகுபடி செய்யப்படுவதால் சுற்றுப்புற தாக்குதலுக்கு உட்படாமலும், உற்பத்தி திறன் மிகுந்தும் காணப்படுகின்றது
  • நிழல் கூடாரங்களில் சாகுபடி செய்யப்படுவதால் பூச்சி தாக்கம் வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது
  • நுண்ணிய அளவு தட்பவெப்பம் நிலவுவதால் பயிர் சேதம் வெகுவாக குறைக்கப்படுகிறது. மேலும் களைகளின் அளவும் குறைக்கப்படுகிறது
  • மழைக் காலங்களில் இந்த நிழல் கூடார முறையை பயன்படுத்தி காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகள் மிகுந்த அளவு உற்பத்தி மகசூலைக் காணலாம்

பொருளாதாரம்:

மகசூல் டன் / ஹெக்டர் – 96.0
இலாப செலவு விகிதம் – 3.07

iii. பாதுகாக்கப்பட்ட கொய் செவ்வந்தி சாகுபடி தொழில்நுட்பம்

தொழில்நுட்ப விவரங்கள்:

  • வளர் ஊடகம், நீர்பாசனம், உரங்கள் பயன்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாக ஒளிகால அளவு ஆகியவை கூடாரங்களில் வளர்க்கப்படும் செவ்வந்திக்கு ஏற்றனவாகும்

இரகம் – லோ ரேகன்
கூடார பரப்பளவு – 1000 மீ2
வளர் ஊடகம் – மண் + மக்கிய உரம் + தென்னை நார் கழிவு 1:1:2
நீர் பாசனம் – 40 கி பாஸ்கல்
இன்ட்வெளி – 20 x 15 செ.மீ
உரங்கள்: 10 : 20 : 10 கி / மீ2 தழை, மணி, சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும். அதாவது 50 சதவிகிதம் தழைச்சத்து அதாவது 10கி / மீ2 மலர் மொட்டு வெளிவரும் சமயத்தில் மேலாக தூவிவிட வேண்டும்
ஒளிகால அளவு – 10 மணி நேரம் இருள் மற்றும் 10 மணி நேரம் வெளிச்சம்
ஒளி செலவு – 300 லக்ஸ்
வெப்பநிலை – 25 – 350 செ
ஈரப்பதம் – 60 - 70%

பயன்கள்:

  • உயர்ந்த உற்பத்தி திறனுடன் கூடிய நல்ல தரமான மலர்கள்
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைக்கப்படுகிறது
  • மிதமான தட்பவெப்பம் நிலவுவதால் பயிர் இழப்பு குறைக்கப்படுகிறது
  • இயற்கைக்கு ஏதுவான சாகுபடியாகும். கெடுதி விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களை உபயோகிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது

பொருளாதாரம்:

தோராயமாக 240 தெளிப்புகள் / மீ2 இத் தொழில்நுட்பத்தினால் விவசாயிகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். (239.3 கோடை காலங்களிலும் மற்றும் 240.3 குளிர் காலங்களிலும்) இத்துடன் 3.54 மலர்கள் / தெளிப்பு கோடையிலும் மற்றும் 3.56 / தெளிப்பு குளிர் காலங்களிலும்
மொத்த வரவு : ரூ. 1512000
உற்பத்தி செலவு : ரூ. 39200
நிகர இலாபம் : ரூ. 1072800
இலாப செலவு விகிதம் : 1:3.44

iv. வாய் புத்துணர்ச்சி சம்பந்தமான நெல்லி சாகுபடி.

தொழில் நுட்ப விவரங்கள்:

  • நன்கு வளர்ந்த நார் அற்ற நெல்லிப் பழங்களை எடுத்துக் கொண்டு நன்கு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பழத்திலுள்ள கொட்டைகளை கொட்டை அகற்றும் கருவியைக் கொண்டு அகற்ற வேண்டும். பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு வாசனை பொருட்களை அளவிட்டு பிறகு நெல்லி துண்டுகளுடன் நன்கு கலக்க வேண்டும். இதை அப்படியே 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  • நெல்லி + எலுமிச்சை + உப்பு (நெல்லி 100 கி, எலுமிச்சை சாறு 15%, உப்பு 5%)
  • நெல்லி + இஞ்சி + உப்பு (நெல்லி 100 கி, இஞ்சி 5%, உப்பு 5%)
  • நெல்லி + மிளகு + உப்பு (நெல்லி 100 கி, மிளகு 5%, உப்பு 5%)
  • நெல்லி + எலுமிச்சை சாறு + இஞ்சி + உப்பு (நெல்லி 100 கி, எலுமிச்சை சாறு 15%, இஞ்சி 5%, உப்பு 5%)
  • நெல்லி + எலுமிச்சை சாறு + மிளகு + உப்பு (நெல்லி 100 கி, எலுமிச்சை சாறு 15%, மிளகு 5%, உப்பு 5%)
  • நெல்லி + மிளகு + இஞ்சி + உப்பு (நெல்லி 100 கி, மிளகு மற்றும் இஞ்சி 5%, உப்பு 5%)
  • நெல்லி + மிளகு + எலுமிச்சை சாறு + இஞ்சி + உப்பு (நெல்லி 100 கி, மிளகு 3 %, எலுமிச்சை சாறு 15%, இஞ்சி 3%, உப்பு 5%)

இவற்றை எல்லாம் உலர்த்தியில் நன்கு உலர்த்த வேண்டும். 60 முதல் 800 செ ல் 4 முதல் 5 மணி நேரம் உலர்த்த வேண்டும். பிறகு இவற்றை காற்று புகாத ஊடகத்தில் வைக்க வேண்டும்.

பயன்கள்:

  • மதிப்பு கூட்டப்பட்ட நெல்லியானது உற்பத்தி திறன் மற்றும் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துகிறது
  • நீரற்ற நெல்லியானது பாக்கிற்கு பதிலாகவும், புகையிலைக்கு பதிலாகவும் சிறந்த பாக்காக செயல்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது
  • நெல்லியை பதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது

பொருளாதாரம்:
உற்பத்தி செலவு : ரூ. 50 / கிலோ

3. 2007 ல் வளர்ந்த தொழில்நுட்பங்கள்:

i. புரத சத்து நிறைந்த வாசனையான மாம்பழ துண்டு (பட்டை)

தொழில்நுட்ப விவரங்கள்:

  • பதப்படுத்துவதற்கு தேவையான மாம்பழ இரகங்களை தேர்வு செய்ய வேண்டும். அதாவ தரம், அதிக பழக்கூழ், அதிக அளவு மாம்பழ வாசனை நல்ல நிறம், குறைந்த நார்த்தன்மை முதலியனவாகும். நீலம் மற்றும் தோட்டபுரி மாம்பழ இரகங்கள் மா துண்டு (பட்டை) பதப்படுத்துவதற்கு சிறந்த ஒன்றாகும்
  • புரத சத்து நிறைந்த தானிய வகைகளை தேர்ந்தெடுத்தல்:

சோயாபீன் மற்றும் பச்சைப்பயிறு (புரதம் 43.2% மற்றும் 24.5%) ஆகியவை மா துண்டுடன் இணைக்கப்பட ஏற்றதாகும்.

தயாரிக்கும் முறை:

புரத சத்து நிறைந்த தானியங்களை மாம்பழத்துடன் இணைப்பதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள்:

  • பச்சைப் பயிரை நன்கு வறுத்து பிறகு அதன் மேற்பரப்பில் உள்ள மூலப் பொருட்களின் வாசனையை அகற்ற வேண்டும். பிறகு அதனை நன்கு மாவு போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்த வேண்டும். பிறகு பச்சைப் பயிறு மாவினை நன்கு சல்லடையில் சலிக்க வேண்டும்
  • சோயா மாவினை 10 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்த வேண்டும். இதனால் மூலப் பொருட்களின் வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதனால் ட்ரைப்சின் எண்ணும் வேதிப்பொருள் செயலிலக்கச் செய்யப்படுகிறது. வெப்பப்படுத்தப்பட்ட சோயா மாவினை நன்கு உலர்த்தி பிறகு சல்லடையில் நன்கு சலிக்க வேண்டும்
  • சோயா புரதம் வெப்பப்படுத்திய 10 நிமிடத்தில் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது

வாசனை மாம்பழ பட்டை தயாரிக்கும் முறை:

  • மாம்பழக் கூழ் (80கி) எடுத்து 3 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்தி என்சைம்களை செயலிலக்கச் செய்யப்படுகிறது
  • மக்காச்சோள மாவு (4கி) ஐ சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பசை போல ஆக்கிக் கொள்ள வேண்டும்
  • பழக் கூழினை மக்காச்சோள மாவு பசையுடன் நன்கு கலக்க வேண்டும். சர்க்கரை 50கி, மிளகாய் தூள் (0.75கி) பெருங்காயம் (0.1கி) மற்றும் பச்சைப்பயிறு (20 கி) / சோயா பூ (20 கி) பிரித்தெடுக்கப்பட்ட சோயா புரதம். கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் 10 கி
  • செரிவூட்டப்பட்ட பழக்கூழானது அறை வெப்ப நிலையில் குளிரவைக்கப்பட்டு 0.1 சதவிகிதம் கே. எம். எஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு பழக்கூழினை அலுமினியம் தட்டில் அடர்த்தி 0.5 செ.மீ அளவு இருக்குமாறு ஊற்றி பிறகு சிறந்த உலர்த்தியில் 600 செ 6 மணி நேரம் உலர்த்த வேண்டும்
  • உலர்ந்த துண்டுகளை 9 x 3 செ.மீ அளவுள்ள பட்டைகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் பிறகு பையிட்டு அறை வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும்

பயன்கள்:

  • இது ஒரு சிறந்த வளர்ந்து கொண்டிருக்கிற தொழில்நுட்பமாகும் சத்து நிறைந்து மாம்பழ பட்டைகள ஆகும்
  • வளரும் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். சத்துக்குறைபாடான இதில் புரதம் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்

பொருளாதாரம்:

உற்பத்தி செலவு – ரூ. 4 / 100 கி

ii. நிழற்கூடாரத் தொழில் நுட்பத்தில் குடை மிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாய்
சாகுபடி:

தொழில்நுட்ப விவரங்கள்:

இரகம் – குடை மிளகாய் – இந்திரா
பஜ்ஜி மிளகாய் – கே.டி. – பி. எல் – 19
நிழல் - 35%
இடைவெளி – இணையாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் 80 x 40 x 60 செ.மீ

பயன்கள்:

  • நல்ல விலைக்கு விற்கப்படுகிறது
  • பூச்சி மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது
  • திறந்த வெளியில் சாகுபடி செய்வதை விட 50 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கின்றது
  • நிழல் கூடாரங்களில் சாகுபடி செய்யப்படுவதால் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

பொருளாதாரம்:

பொருள்

நிழற்கூடாரம் (35%)

திறந்த வெளி

குடை மிளகாய்

மகசூல் (டன் / ஹெக்டர்)

95.32

15.3

இலாப செலவு விகிதம்

3.85

1.58

பஜ்ஜி மிளகாய்

மகசூல் (டன் / ஹெக்டர்)

9.32

1.35

இலாப செலவு விகிதம்

2.66

1.26


iii. மண் பரிசோதனை அடிப்படையில் காய்கறிப் பயிர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வழங்குதல்

தொழில்நுட்ப விவரங்கள்:

  • மண் பரிசோதனை அடிப்படையில் காய்கறிப் பயிர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் குறிக்கோளால் அதிக மகசூல் சமமான உரங்கள் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியன பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்த்துக்களை வழங்குகின்றன. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து காய்கறிப்பயிர்களை வளப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் வேதி உரங்களின் பயன்பாட்டினை குறைந்து மண்ணின் வளத்தை பெருக்குவதற்காகவும் உதவுகிறது

பயன்கள்:

  • அதிக விலை கொடுத்து வாங்கும் உரங்கள் குறைக்கப்படுகிறது
  • இயற்கைக்கு நல்ல முறையில் உள்ளது ஊட்டச்சத்து வீணாவது குறைக்கப்படுகிறது
  • மண்ணின் உற்பத்தி திறன் காக்கப்படுகிறது. இதனால்அதிக மகசூல கிடைக்கின்றனது
  • பொருளாதாரம்
  • காய்களில் பயிர்களுக்கு  ஒருங்கிணைந்த ஊட்டச்சதது வழங்குவதால் கேரட் பயிரின் நிகர இலாபம் ரூ.1,41,600 உருளைககிழங்கு ரூ.36,000 காலிபிளவர் ரூ.46,000 முட்டைக்கோசு 53,000  பொதுவாக தேவைப்படும்  உர அளவை விட அதிக அளவு மகசூல் கிடைக்கின்றது

2008 ம் ஆண்டு வளர்ந்த தொழில்நுட்பங்கள்

மா வில் உயர் அடர்த்தி நடவுமுறை

விரிவான தொழில்நுட்பம்

பொதுவாக ‘மா’ சாகுபடியில் விவசாயகள் 10 x10 மீ இடைவெளியில் 100 மரங்கள் ஹெக்டேர் சாகுபழ செய்வார்கள். இதனால் குறைவான மரங்கள் பரப்பளவின் உற்பத்தி திறன் குறைகிறது. உயர் அடர்த்தி நடவு முறை அதிக உற்பத்தி திறன் மற்றும் சிறந்த முறையில் நிலத்தை பயன்படுத்துதல் மற்றும் இயற்கை ஆதாயங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 14 வருட ஆராய்ச்சி முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன மாவில் உயர் அடர்த்தி நடவுமுறையின்
இரட்டை வரிசை முறை 10x5x5 செ.மீ ல் 222 பயிர்கள் /ஹெக்டேர் மரபு வழியிலான முறையில் 100 மரங்கள்/ ஹெக்டர் கிடைக்கும். உயர் அடர்த்தி நடவு முறையில். இரட்டை வரிசை முறை பயன்படுத்துவதால் மரங்களின் தொகை 122 சதவிகிதம் உயருகிறது.

இரட்டை வரிசை நடவு முறை

x - 5மீ -                       x - 10 மீ - x                       x - 5மீ – x
5 மீ                                                                  5மீ
x – 5மீ - x                      x - 10 மீ - x                         x - 5மீ – x
5மீ                                                                                    5மீ
x - 5மீ – x                      x - 10 மீ - x                          x - 5மீ – x
இடைவெளி 10 x 5 x 5 மீ

பயன்கள்

  • அதிக மரங்கள் குறைவான நிலத்தில் ஆக்கிரமிக்கப்படுகின்றன
  • அதிக மகசூல் கிடைக்கின்றது (9.45 டன் / ஹெக்டேர்)
  • சாதாரண முறையில் (5.05 டன் / ஹெக்டேர்)

பொருளாதாரம்:

  • வழக்கமான முறையில் சாகுபடி செய்வதை விட உயர் அடர்த்தி இரட்டை வரிசை முறையில் சாகுபடி செய்வதன் மகசூல் 88 சதவிகிதம் கிடைக்கின்றது
  • மகசூல் – 9.45 டன் / ஹெக்டேர்
  • இலாப செலவு விகிதம் – 5.82
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014