தேசிய மூலிகைப்பயிர்கள் வாரியம்் 
          மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப  நலத்துறை அமைச்சகத்தின் கீழ் அரசாணை (No.Z.18020/ 19197-M.P.Cell) யின் படி அறிவிக்கப்பட்டு  கடந்த 24, நவம்பர் 2000ம் ஆண்டு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியம் நிறுவப்பட்டது. தற்சமயம்,  பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் மூலிகைப் பயிர்கள் தொடர்பான பலவித இடுவுகள்,  அக்கறை, சாதனைகள் தனித்தனியாக எண்ணற்ற அமைச்சகத்தினால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  துறை / அமைப்பு (நிறுவனங்கள்) ஆனால் போதுமான அளவு ஒன்று சேர்தல் மற்றும் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினாலும்  தகுந்த ஆக்கமுறை நடைமுறைப்படுத்துதல் கொள்கைகளை மூலிகைப் பயிர்கள் தொடர்பான மத்திய  மாநில அளவிலான துறைகள் பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மூலிகைப் பயிர்களை மேம்படுத்தி, குறைவான முயற்சிகளை அனுமதிக்காமல்  மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 
             
            நோக்கங்கள்: 
             
            வளர்ந்து வரும் வாரியம்  வளர்ந்த அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மூலிகை பயிர்கள் தொடர்பான அனைத்து முயற்சிகளையும்  மேம்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட கொள்கைகள், செயல் திட்டங்கள், முறையான  அறுவடை, பொருளாதாரமான விளைச்சல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, பதப்படுத்துதல்,  சந்தைப்படுத்துதல், முதலியவை இந்த வாரியத்தின் நோக்கங்களாகும். அரசுத் துறையும், மூலிகை  சம்பந்தமான அமைப்புகளும் வாரியத்தின் அறிவுறுத்தலின் படி செயல் படுத்துகின்றன.  தேசிய மூலிகை பயிர்கள் வாரியத்தில் நிர்வாகம் மற்றும் தொழில் நுட்ப ஆதரவு குழுக்கள்  முக்கிய துறைகளின் ஆலோசனையுடன் அமைக்கப்பட்டு பின்வரும் செய்ல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
            அரசு மற்றும் அரசு  சாரா அமைப்புகளில் மூலிகைப் பயிர்கள் சம்பந்தப்பட்ட மேம்பாடு மற்றும் விற்பனை தொடர்பான  திட்டங்களுக்கு வழிமுறைகளும் நிதியுதவி ஆலோசனைகளும், தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியத்தின்  மூலம் வழங்கப்படுகிறது 
            . 
            மூலிகை  மேம்பாட்டுத் திட்டங்கள்: 
             
            இதில் மூலிகை கணக்கெடுப்பு,  பாதுகாப்பு மூலிகை தோட்டங்கள் அமைத்தல், விரிவாக்கத் திட்டங்கள், தேவை மற்றும் விநியோகம்  மேம்பாடு பற்றிய ஆராய்ச்சி மதிப்பு கூட்டுதல் ஆகியன பற்றிய திட்டங்கள் இதன் மூலம் செயல்  படுத்தப்படுகின்றன. 
             
            மூலிகை  விற்பனைத் திட்டங்கள்: 
             
          இத்திட்டத்தின் கீழ்  தரமான மூலிகை விதைப்பொருட்கள் பரந்த அளவு உற்பத்தி, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்  புது வித விற்பனை யுக்திகள் ஆகியன குறித்த திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. 
        மேலும் விவரங்களுக்கு http://nmpb.nic.in  |