||| | | | | |
தோட்டக்கலை :: கேள்வி பதில்கள் :: பழப்பயிர்கள்

பழப்பயிர்கள்

1. மா பழகூழ் மற்றும் பதனப்படுத்தப்படும் பொருள்களை தயாரிக்க எந்த மா இரகங்களை சாகுபடி செய்யலாம்?
அல்போன்சா, பங்கனபள்ளி, தோட்டபூரி

2. ஏற்றுமதிக்கேற்ற மா உற்பத்தி செய்ய எந்தெந்நத இரகங்களை தேர்வு செய்யலாம்?
அல்போன்சா, பங்கனபள்ளி, செந்தூரா

3. வணிரீதியாக மா சாகுபடி செய்ய விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளை பயன்படுத்தலாமா?
நடவுக்கு பயன்படுத்த கூடாது. ஒட்டு கட்டிய நாற்றுகளையே பயன்படுத்த வேண்டும்

4. பூக்காத மா மரங்களை எவ்வாறு பூக்கச் செய்யலாம்?
பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5% யூரியா கரைசல் (அ) 1% பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

5. வருந்தோரும் மா காய்க்க சில வழி முறைகளை கூறவும்.
1.வருடந்தோரும் காய்க்கும் இரகங்களை நடவு செய்யவும்
2.முறையான வழவியல் முறைகளான உர, நீர் நிர்வாகம், கவாத்து முறை மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

6. சமையலுக்கு உகந்த வாழை இரகங்களை குறிப்பிடவும்.
மெந்தன், நேந்திரன், வயல் வாழை, மற்றும் சக்கியா

7.மலை பகுதிகளுக்கேற்ற வாழை இரகங்களை குறிப்பிடவும்.
விருப்பாக்சி, சிறுமலை மற்றும் லாடன்

8. வாழையில் ஏன் கிழங்கு நேர்த்தி செய்ய வேண்டும்?
1.சீரான வளர்ச்சி
2.நூற்புழு நோய் தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

9. வாழையில் பாலித்தீன் தாழ்கள் மூலம் தார்களை கட்டுவதனால் என்ன நன்மை?
1.சீரானா தார் முதிர்ச்சி
2.பூச்சி மற்றும் நோய் தாக்காத வாழைக்காய்கள்
3.கரும்புள்ளி மற்றும் அழுகல் அற்ற காய்கள்

10.திராட்சை கொடிகளை எந்த முறையில் வளர்ப்பு செய்யலாம்?
பந்தல் முறை
திராட்சையில் அதிக மகŸல் மற்றும் தரமான் பழங்களைப் பெற என்ன உத்திகளைக்  
கையாள வேண்டும்.
காய் பிடிக்கும் பொழுது, பழ கொத்துகளை 0.5 பிபிஎம் பிராசினோஸ்டீராய்டு (அ) 25  
பிபிஎம் ஜிப்ரலிக் அமிலம் கொண்டு நனைத்து எடுக்க வேண்டும்

11. திராட்சையில் பழ அளவு /எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
குறிப்பாக தம்சன் சீட்லஸ் இரகங்களில் பழ எடையினை அதிகரிக்க 25 பிபிஎம் (25மிகி/லிட்டர்) என்ற அளவில் கலந்து பூ இதழ்கள் காய்ந்தவுடனும் பின்பு மிளகு அளவு பருமன் உள்ள தருணத்திலும் பழ கொத்தினை நனைத்து எடுக்க வேண்டும்.

12. அன்னாசிப் பழத்தில் எத்தனை முறை மருதாம்பு பயிர் விடலாம்? எந்த இரகம் மருதாம்பு பயிர் சாகுபடிக்கு உகந்ததாகும்?
5 மருதாம்பு பயிர்கள்  வரை அன்னாசிப் பழத்தில் சாகுபடி செய்யலாம். மருதாம்புக்கு சிறந்த இரகமாக மரூசியஸ் இரகத்தினைத்தேர்ந்து எடுக்கலாம்.

13. சப்போட்டாவில் அடர் நடவு முறைக்கு என்ன இடைவெளி அளவு கடைபிடிக்க வேண்டும்.
8 X 4 மீ

14. எனது வீட்டில் பூச்சி/நோய் தாக்காத பிகேஎம்-2 மரம் ஒன்று உள்ளது. இது மிகக்குறைவாக அளவு காய் பிடித்துள்ளது. காரணங்களும் நிவர்த்தி முறையினையும் கூறவும்
இதற்கு மகரந்த சேர்க்கையின்மையே காரணமாகும்.எனவே குறைந்து 4-5 மரங்களை வளர்க்கும் போது சிறந்த மகரந்த சேர்க்கை ஏற்பட்டு காய்பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.

15. உண்பதற்கு உகந்த பப்பாளி இரகங்களை கூறவும்
கோ3, கோ-7

16. உண்பதற்கு மற்றும் பப்பையின் என்னும் நெதி பொருள் எடுக்க உகந்த பப்பாளி இரகங்கள் யாவை?
கோ-2, கோ-5, கோ-6

17. பப்பையின் என்றால் என்ன?
முதிர்ச்சியடையாத பப்பாளி காய்களிலிருந்து (75-90 நாட்கள்) எடுக்கப்படும் நெதிப்பொருளையே பப்பையின் என்று அழைக்கின்றோம்.

18. பப்பையின் பயன்கள் யாவை?
டுட்டி-புட்ரூட்டி என்னும் பொருளை அடுமனைப் (பேக்கரி) பொருட்களில் சேர்க்கவும் மாமிசப் பண்டங்களை எளிதில் வேக வைக்கும் சிறப்பு தன்மையினையும் கொண்டதாகும்.

19. ஒரு எக்டரிலிருந்து எவ்வளவு பப்பையின் கிடைக்கும்?
600-800 கிலோ

20. பப்பையின் எடுத்த காய்களை/பழங்களை சந்தைகளில் விற்பனை செய்ய முடியமா?
விற்பனை செய்யலாம்

21. மாதுளையில் ஏற்படும் காய் துளைப்பானை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
1.காய்களை மெல்லிய ஒளி ஊடுருவக்கூடிய பாலித்தீன் பைகளைக் கொண்டு கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்கள் மீது முட்டை இடுவதனைத் தடுக்கலாம்
2.தாய் அந்தூப்பூச்சி நடமாட்டம் இருக்கும் பொழுது 3% வேப்ப எண்ணை (அ) 5%வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும்.
3.ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்டோசல்பான் (அ) மாலத்தியான் தெளிக்க வேண்டும். தெளித்தபின் 20 நாள் கழித்து பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

22. எனது தோட்டத்திலுள்ள பலா மரத்தில் மாடுகளை கட்டி மேய்ச்சல் செய்கின்றேன். இம்முறை சரியானதுதானா?
அவ்வாறு டிசய்தல் கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் மொட்டுகள் சேதமடைந்து மகŸல் மிகவும் குறைந்து விடும்.

23. விதைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இலந்தை கன்றுகளை நடவு செய்யலாமா?
கூடாது. மொட்டுகட்டிய செடிகள் குறைந்த காலங்களில் மகŸல் தரவல்லமைப் பெற்றதாகும்.

24. இலந்தையில் பழத்துணைப்பானின் சேதம் அதிகமாக உள்ளது அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
1.சேதமடைந்த பழங்களை சேகரித்து அழித்து விடவேண்டும்
2.மரங்களிடையே உள்ள இடத்தை மண்வெட்டி கொண்டோ (அ) உழுதுகூண்டு புழுக்களை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரவேண்டும். பின்பு 1.3% லிண்டேன் தூவ வேண்டும்
3.மாலத்தியான (அ) என்டோசல்பான் 2 மிலி/ லிட்டர் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

25. வறண்ட நிலத்திற்கு எவ்வாறான பழப்பயிர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெருநெல்லி, சப்போட்டா, இலந்தை

26. ஆப்பிள் ஒட்டுகன்றுகளை உற்பத்தி செய்ய எந்த வேர் மூலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
எம் 778
எம்779

27. ஆப்பிள் மரங்களில் ஏற்படும் கம்பளி எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
1.கம்பளி அசுவுணியின் தாக்குதலை தாங்கி வளரும் வேர் மூலங்களான எம்-778,799,எம்எம்-104, 110,112,113,114
2.மீதைல் டெமட்டான் 25ஈசி 4 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

28.ஆப்பிள் மரங்களில் ஏற்படும் மரப்பாசி/மரக்காளான்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
கவாத்து செய்தவுடன் 20 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ சுண்ணாம்பு கலந்து தெளிக்க வேண்டும்

29.பிளம்ஸ் சாகுபடியில் மகரந்த சேர்கைக்கு பயன்படுத்தப்படும் இரகங்கள் யாவை?
ஹேல்

30.எந்தமுறையில் பேசன் பழம் சாகுபடி செய்ய வேண்டும்?
பந்தல் முறையில் சாகுபடி செய்ய வேண்டும்

31.பழமரங்கள் சாகுபடியில் ஏற்படும் சந்தேகங்களை எங்குதெரிந்து கொள்ளலாம்?
1.பேராசிரியர் மற்றும் தலைவர்
பழத்துறை
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோயமுத்தூர்
போன்:0422-6611270
2.பேராசிரியர் மற்றும் தலைவர்
பழத்துறை
தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
பெரியகுளம் - 625 604
போன்: 04546-231726

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014