||| | | | |
தோட்டக்கலை :: திட்டங்கள் :: நபார்டு
நபார்டு

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டம்:

நபார்டு வங்கியானது வேளாண்மையை வளர்ச்சிப்படுத்த / வளப்படுத்த தொடங்கப்பட்ட வங்கியாகும். சிறுதொழில், குடிசைத் தொழில் கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற தொழில்களுக்காக தொடங்கப்படட வங்கியாகும். இது மேலும் கிராமங்களில் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான, வளமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

கிராமப்புறங்களில் நபார்டு வங்கியின் நோக்கங்கள்:

  1. கிராமங்களின் கடன் திட்டங்களும், மறுகடன் திட்டங்களும்
  2. வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல் மற்றும்
  3. வாடிக்கையாளர் வங்கிகளை மதிப்பிடுதல், கண்காணித்தல் மேற்பார்வையிடுதல்

இதர நோக்கங்கள்:

  1. கடன் தரும் வங்கிகளை ஒருங்கிணைத்தல்
  2. அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் விரிவான உதவிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு கிடைத்திட உதவுகிறது
  3. வங்கிகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் கிராம மேம்பாட்டினைப் பற்றி பயிற்சி அளித்தல்
  4. தமிழக அரசு அறிமுகப்படுத்தும் கொள்கைகளை சரியான முறையில் வேளாண்மைத்துறைக்கும், கிராம வளர்ச்சிக்கும் கிடைத்திட உதவுகிறது
  5. கூட்டுறவு வங்கிகளுக்காக சீரான முறையில் செயல்படுவது

மேலும் விவரங்களுக்கு http://www.nabard.org/

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014