|   | 
        பண்ணைகூறு  
            
           
            எங்களைப்  பற்றி 
             
            மத்திய பண்ணை 1911  ஆம் ஆண்டு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நிருவப்பட்டது.பின் சென்னை  பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 13.02.2003 வரை மத்திய பண்ணை  மண் மற்றும் பயிர் மேலாண்மை மையத்தின் கீழ் உள்ள உழவியல் துறையின் ஒரு பாகமாக இருந்துவந்தது.  14.02.2003 ல் இருந்து மத்திய பண்ணை மண் மற்றும் பயிர் மேலாண்மை மைய இயக்கத்தின் கீழ்  தனி பிரிவாக மாற்றப்பட்டது.இப்பிரிவு மூன்று பண்ணை பகுதிகளை கொண்டது. அவை முற்றம்,  கிழக்குத் தொகுதி,ஊறணி, நீர்வழங்கீடு திட்டம் (lWSS) மற்றும் கால்நடை மருத்துவம்  மற்றும் அறிவியல் பல்வேறு திட்டங்கள் / துறைகள் / இயக்கங்களுக்கு வேலையாட்களை வழங்குதல்,தரவுகள் மற்றும் எந்திரங்கள் ஊறணி மற்றும் கீழக்குத் தொகுதிக்கு வழங்குதல் போன்றவற்றிற்கு  மத்திய பண்ணை பிரிவு ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவாக விளங்குகின்றது. 
              
            கால்நடை மருத்துவம்  மற்றும் அறிவியல் பிரிவு ஐந்து உட்பிரிவுகளை கொண்டது. அவை பால் பண்ணை,கோழி வளர்ப்பு,ஆடு,பன்றிப் பண்ணை மற்றும் கால்நடை மருத்துவமனை.இப்பிரிவு இளநிலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு  ஐந்து பயிற்சிகள் மற்றும் உழவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் தகவல்கள் மூலம்  விரிவாக்க திட்டங்கள் வழங்கப்படுகின்றது.இப்பிரிவு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  பண்ணை நிகழ்வுகளை தகவல்களாகவும் வழங்குகின்றது. 
             
            குறிக்கோள்கள்: 
          
            
              - கோழிப் பராமரிப்பு,கால்நடை மற்றும்  கற்றளின் போது ஈட்டல் திட்டம் போன்றவை மூலம் இளநிலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு பயிற்சி  புகட்டல்.
 
              - இளைய வேளாண் அதிகாரி பதவி உயர்வுக்காக  வேளாண் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி நடத்துதல்
 
              - நீர் வழக்கீடு திட்டத்தின் மூலம் நீர்ப்பாசனத்  தேவைகளை நிறைவேற்றல்.
 
              - லாபம் ஈட்டக் கூடிய பால் பண்ணை,கோழி  வளர்ப்பு,ஆடு வளர்ப்பு,பன்றி வளர்ப்பு போன்ற பண்ணையத்தை பற்றி உழவர்கள் மற்றும்  தொழில் முனைவோர்களுக்கு வெளிப்படுத்தல்.
 
              - கால்நடை மருத்துவம் மூலம் பொது மக்களுக்கு  கால்நடை உதவிகளை வழங்குதல்.
 
             
                     தொடர்பு  கொள்ள: 
            பேராசிரியர் மற்றும்  தலைவர் 
            மத்திய பண்ணை பிரிவு 
            தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
            கோயமுத்தூர் –  641 003, இந்தியா 
            தொலைபேசி: 91-422-6611203/6611403  (அலுவலகம்)  
        மின் அஞ்சல்: centralfarm@tnau.ac.in   | 
          |