|   | 
        கல்வி  ஊடக மையம் 
           
          கல்வி ஊடக மையம் தூர்தர்ஸ்சன்  கேந்திரா,சென்னை தயாரிப்பு பொறுப்புடன் தொடங்கப்பட்டது. வேளாண்மை தகவலுடன் ஐம்பதுக்கும்  மேற்பட்ட காணொலி குறுந்தகடுகள் உழவர்கள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளின் பயனுக்காக  இப்பிரிவு தயாரித்துள்ளது.  
           
          குறிக்கோள்கள் 
          
            
              - தொலைக்காட்சி அலைவரிசை மூலம் ஒலிபரப்ப  வேளாண்மை மற்றும் சார்புப் பிரிவின் காணொலி திட்டம் செய்தல்
 
              - உழவர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின்  பயனுக்காக வேளாண் சார்ந்த காணொலி பாடம் மற்றும் காணொலி குறுந்தகடு தயாரித்தல்
 
              - அரசு துறை,வெளி நிறுவனங்கள் மற்றும்  பலனுக்காக காணொலி திரைப்படம் தயாரித்தல்
 
              - வேளாண் மற்றும் சார்பு பிரிவின் வானொலி  நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வானொலி நிலையத்தின் மூலம் ஒலிபரப்பல்
 
              - வேளாண் மற்றும் சார்பு பிரிவை பற்றிய  ஒலிநாடா தயாரித்தல்
 
             
           
          வினைகள் 
          
            
              - வேளாண் மற்றும் சார்பு பிரிவின் காணொலி  மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு
 
              - காணொலி திரைப்படம்,காணொலி பாடங்கள்,காணொலி குறுந்தகடு பாடங்கள் மற்றும் ஒலிநாடா உருத்துலக்கல்
 
              - மற்ற துறைகள் மற்றும் வெளி நிருவனங்களுக்காக  காணொலி திரைப்படம் தயாரிப்பு
 
              - பல்கலைக்கழக வினைகளின் காணொலி திரைப்படமாக்கல்
 
             
           
          வசதிகள் 
             
            அனைத்திந்தியா வானொலிக்காக  கல்வி ஊடக வானொலி பதிவு கூடத்தில் ஆராய்ச்சியாளர் உரை உழவர்கள் வெற்றிக் கதைகள் முதலியன  பதிவு செய்யப்பட்டது. கியான் வாணி மற்றும் எஃப்.இ.பி.ஏ வானொலி திரைப்படத் தயாரிப்புக்கான  பாடங்கள் மற்றும் விளக்க உரை ஒலிநாடா தயாரிப்பு ஆகியவை இங்கு நடைபெறுகின்றது.  
            ஒலி பதிவுக்கான தொழில்  நெறிஞர் ஒலி தேற்று நாடா மற்றும் என்முறை கூடக் கருவிகளுடன் கலைக்கூடம் உடனமைக்கப்பட்டுள்ளது.காணொலி திரைப்படத்  தயாரிப்புக்கான அச்சு திருத்த கருவி மற்றும் நேரிலா திருத்த அமைப்பு. 
             
            காணொலி  குறுந்தகடு பாடப் பட்டியலுக்கு அழுத்தவும்...             | 
          |