பூச்சியியல்  துறை 
            
           
            வேளாண் பூச்சியியல் துறைக்கான விதை 1906 ல் விதைக்கப்பெற்றது.  இத்துறை சென்னை மாநிலத்தின் வேளாண் பூச்சியியல் துறைக்கான ஆராய்ச்சியுடன் கூடிய பொருளாதார  நோக்கத்துடன் துவங்கபெற்றது. 1912 பூச்சியில் பிரிவு சுதந்திரப் பறவையாக தொடங்கப்பட்டது.  முதல் அரசு பூச்சியியல் நிபுணர், Dr.T.B.ஃபிலச்சர் திட்டத்தை கோயமுத்தூரில் முன் எடுத்துச்  சென்றார். 1920 ல் இளநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. பட்டதாரி மாணவர்களுக்கு வேளாண்  பூச்சியியல் அதாவது வேளாண் பூச்சியியலின் அடிப்படை, பொருளியல் சார்ந்த பூச்சியியல்,  நோய்ப்பூச்சிக் கட்டுப்பாட்டு கொள்கைகள், மற்றும் கழனி மேலாண்மை மற்றும் தோட்டக்கலைப்  பயிர்கள் ஆகிய பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த பூச்சியியல் வல்லுநரான  Dr.T.V. இராமகிருஷ்ண ஐயர் பட்டப்படிப்புக்கான கற்பித்தலுக்கு அடித்தளமிட்டார்.  1959ல் இத்துறை வேளாண் பூச்சியியலில் அறிமுக (வேளாண்) பாடத்திட்டத்தை தொடங்கியது.  எதிர்காலக் கல்வி முயற்ச்சிக்காக முனைவர் பட்டப்படிப்பு 1961 ல் இருந்து வழங்கப்பட்டது. 
             
            இத்துறை கீழ்காணும் சிறந்த துறைகளை கொண்டது 
          
            
              - மென்னுண்ணியியல்
 
              - தேனீ வளர்த்தல்
 
              - உயிரிய  பூச்சி அடக்கு முறை
 
              - ஓம்பு தாவர எதிர்ப்பு
 
              - ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
 
              - பூச்சிக்கொல்லி நச்சியல் மற்றும் வண்டல்  பகுப்பாய்வு 
 
              - பூச்சி இரசாயன சூழலியல்
 
              - கிடங்கு பூச்சியியல்
 
             
           
          தொடர்புக்கொள்ள 
            பேராசிரியர் மற்றும் தலைவர் 
            வேளாண் பூச்சியியல் துறை 
            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 
            கோயமுத்தூர் – 641 003 
            தொலைபேசி : +91 422 661214, +91 422 6611414 
            தொலைநகலி : + 91 422 – 66611437 
            மின்அஞ்சல் :   entomology@tnau.ac.in 
           |