விதை  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 
          பணியாளர்குளுமம்  மற்றும் வளர்ச்சி 
             
            விதை தொழில்நுட்பத்  துறை நாட்டிலேயே இதன் வகையில் முதல்முறையாக 1972 ஆம் ஆண்டு நிருவப்பட்டது. பின்பு  1999 ஆம் ஆண்டு இத்துறை விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்பது பெயர் மாற்றம்  செய்யப்பட்டது. ஆராய்ச்சி, பயிற்சியளிப்பு விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம்  மற்றும் மற்ற வளாகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் விதை ஆராய்ச்சி திட்டத்தை ஒருங்கிணைத்தல்  போன்ற அனைத்து பொறுப்புக்களையும் இத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. 
             
            குறிக்கோள்கள் 
             
          கீழ்க்காணும் குறிக்கோள்களுடன்  துறை இயங்கி வருகின்றது 
          
            
              - பல்வேறு பயிர்களுக்கான விதை உற்பத்தி  தொழில்நுட்பத்தை தர நிர்ணயத்தை ஒருங்கிணைத்தல்
 
              - விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில்  அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
 
              - விதைகளை தரம் மற்றும் உயர் தரப்படுத்தலுக்காக  ஏற்ற அறுவடை பின்சார் தொழில்நுட்பத்தை புனை உருவாகுதல்
 
              - சேமிப்பின் போது வீரியம் முளைக்கும்  தன்மை கொண்ட விதைகளை பராமரிப்பு,விதை தரம் சீற்கேடுகளை தடுக்க முன் சேமிப்பு மற்றும்  இடை சேமிப்பு விதை சிகிச்சை போன்ற அனைத்தையும் புளை உருவாகுதல்
 
              - விதை முளைப்புத்தன்மையை நீட்டிக்க விதை  சேமிப்பு களங்களை புனை உருவாக்கல்
 
              - தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மரபியல்  வல்லுநரின் விதைகளை சோதனை செய்தல்
 
              - விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான  வேளாண்மை தோட்டக்கலை வனவியல் இளநிலைப் பட்ட படிப்பு மற்றும் விதை அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்காக வழங்குதல்
 
              - விதை சான்றளிப்பு அதிகாரிகள் விதைச்  சோதனை அதிகாரிகள்,விதை உற்பத்தியாளர் மற்றும் விதை விற்பணையாளர் இவையனைவருக்கும்  பயிற்சி வழங்குதல்
 
              - விதை ஆராய்ச்சி தொடர்புடைய தேசிய மற்றும்  சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டுவைத்தல்
 
             
           
          தொடர்பு  கொள்ள: 
            பேராசிரியர் மற்றும்  தலைவர் 
            விதை அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத் துறை 
            தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
            கோயமுத்தூர் –  641003 
            மின்னஞ்சல்: seed  @tnau.ac.in 
           |