|   | 
        சிறுதானியங்களுக்கான  துறை 
            
          பணியாளர்குழுமம்  மற்றும் வளர்ச்சி 
               
              சிறு தானிய இனப்பெருக்க  நிலையிம், கோயமுத்தூர். தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 2 கி.மீ தொலைவில் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.  இதுவே தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆய்வு நிலையம் ஆகும். 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்நிலையில் 411.98மீ உயர்நிலை மற்றும் 110 வடக்கு அட்சரேகை மற்றும் 770 கிழக்கு தீர்க்காம்ச  ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 69 ஏக்கர் ஆகும். இப்பகுதி  8.5 அமில நிலை கொண்ட செம்மண் மற்றும் கரிசல் மண் உள்ள பகுதியாகும். ஆண்டுக்கு சரராசரியாக  730மிமீ மழைப் பொழிவு கொண்ட நிலையாகும். 
             
              சோளம் (சோர்கம் பைக்கலர்  எல்), கம்பு (கபனிசெட்டம் ஆமெரிக்கானா எல்), மக்காச்சோளம் (சி.ஏ.மேஸ் எல்) மற்றும்  ஆறு சிறுதானியம் அவை கேழ்வரகு (ஈழுசின் கொரக்கேனா எல்), வரகு (பசுப்பலம் ஸ்கோரோபிகு  லேட்டம் எல்), தினை (செட்டாரிய இட்டாலிகா எல்), சாமை (பேனிக்கம் மில்லியர் எல்), மற்றும்  குதிரை வாலி இவையனைத்தும் சிறு தானியத்தை சார்ந்த பலவகைப்பட்ட தானியங்கள் ஆகும். 
               
              பல்கலைக்கழகத்தின்  தொடக்கத்திற்கு பின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான செயல்கள் மிக சிறந்த முறையில் உருதிப்படுத்தப்பட்டன.  வயல் இடற்பாடுகள் மற்றும் இடைப்பட்ட ஒழுங்கு அனுகுமுறைகளை கூர்ந்த குவிமையப் படுத்த  ஆராய்ச்சியின் விளைவுகள் மறுசீரமைக்கப்பட்டது. 
               
            குறிக்கோள்கள்: 
          
            
              - காறிப்பு பருவத்திற்கு ஏற்ற பூசண நோய்  தடுப்பாற்றலுடைய சோளரகத்தை வளர்த்தல்
 
              - மானாவாரி / நீர்ப்பாசன நிலைக்கேற்ற இரட்டை  பயன்தரும் =. பின் பருவ நிறைவை தரும் கம்பு மற்றும் சோள ரகங்கள் அல்லது கலப்பினங்களை  உருவாக்குதல்
 
              - மானாவாரி / நீர்ப்பாசன நிலைக்கேற்ற உயர்  விளைச்சல் தரும் ஒற்றைக் கலப்பு கலப்பி / ரகங்களை மக்காச்சோளத்திற்கு வளர்த்தல்
 
              - தமிழ் நாட்டைச் சார்ந்த மலை பகுதிகளுக்கு  ஏற்ற சிறு தானிய ரகங்களை வளர்த்தல்
 
              - தமிழ்நாட்டில் உள்ள சமவெளிக்கேற்ற கோதுமை  ரகங்கைள வளர்த்தல்
 
             
           
          சிறு  தானியத் துறையால் வெளியிடப்பட்ட ரகங்கள் / கலப்பினங்கள்: 
          
            
              
                |                    சோளம்   | 
                C026,    CO(s)28, COH4  | 
               
              
                கம்பு  | 
                COH(cu)8  | 
               
              
                மக்காச்சோளம்  | 
                COH(M)4,    CO1  | 
               
              
                கேள்விரகு  | 
                CO13  | 
               
              
                தினை  | 
                CO6  | 
               
              
                சாமை  | 
                CO3  | 
               
              
                பனிவரகு  | 
                CO4  | 
               
              
                குதிரைவாலி  | 
                CO1  | 
               
              
                வரகு  | 
                CO3  | 
               
                       
           
          எதிர்கால  தேவைகள்: 
          
            
              - பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான தடுப்பாற்றலுடன்  இரட்டை பயன் எதிர்ப்பாற்றல் மற்றும் குறுகியக்கால கட்டத்தில் விளையும் ரகங்களை வளர்த்தல்
 
              - ஆண் மலட்டு உயிரணுத் திரவத்தை திருப்பமைவுதல்,  புதிய ஆண் மலட்டு நேரியலை வளர்த்தல் மற்றும் முன்னிலை மீட்பாற்றலை கண்டறிதல்
 
              - மதிப்பேற்றல் மற்றும் வேளாண் பதனிடுதலுக்கு  ஏற்ற மற்ற தானியங்களின் தரம் மற்றும் தரம் அளபுறு மேலாண்மையுடன் கூடிய ரகங்களை வளர்த்தல்
 
              - தமிழ்நாட்டில் உள்ள சமவெளிக்கேற்ற கோதுமை  ரகங்களை புனை உருவாக்கல்
 
              - தமிழ்நாட்டில் உள்ள வறண்ட மற்றும் மலை  பகுதிகளில் தற்போது இருக்கும் ரகங்களுக்கு பதிலாக வறட்சியை சகிக்கக்கூடிய சிறுதானிய  ரகங்களை வளர்த்தல்
 
              - கோழித் தீவனத்திற்காக கீழ்ச்சாம்பல்  நோய் தடுப்பாற்றல் கொண்ட ஒற்றைக் கலப்பு கலப்பி மற்றும் வடு மாதிரி மஞ்சள் நிற தடித்த  தானிய வகைகளை வளர்த்தல் 
 
              - மறுசேர்க்கை பெருக்க வரிசைகளின் உற்பத்தி  மூலம் நல்ல தரமான இயல்புகளுக்கான மரபணுக்களை அட்டையிடுதல்.
 
             
           
          தொடர்பு  கொள்ள: 
             
            போராசிரியர் மற்றும்  தலைவர் 
            சிறு தானியங்கள் துறை 
            தாவரயின இனப்பெருக்கம்  மற்றும் மரபியல் மையம் 
            தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
            கோயமுத்தூர் –  641 003 
            தமிழ்நாடு,
            இந்தியா  
            மின்அஞ்சல்: millets@tnau.ac.in  
           | 
          |