|   | 
        வேளாண்  விரிவாக்க இயல் மற்றும் ஊரக சமூகவியல் 
            
           
            மைல்கல்கள் 
          
            
              - 1959 – வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையம்,கோவையின் விரிவாக்க இயல் பிரிவு உருவாக்கப்பட்டது.
 
              - 1962 – வேளாண் விரிவாக்க இயல் பற்றி  தெரிந்துகொள்ள Bsc(Ag) பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
 
              - 1968 – M.sc (Ag) பட்டபடிப்புடன் முதுநிலை  பட்டபடிப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
 
              - 1971 – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின்  கீழ் உள்ள விரிவாக்க இயல் பிரிவின் இணைப்பாக வேளாண் விரிவாக்க இயல் துறை உருவாக்கப்பட்டது.
 
              - 1978 – வேளாண் விரிவாக்க இயலில் முனைவர்  பட்டபடிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
              - 1979 – ஊரக சமூக இயல் துறையின் இணைப்பாக  வேளாண் விரிவாக்க இயல்  மற்றும் ஊரக சமூக இயல்  என்ற பெயர் மாற்றப்பட்டு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தின் ஒரு பிரிவாக திகழ்ந்தது.
 
             
           
           தன்னேற்புத்  திட்டம் 
          
            
              - மத்திய அரசு,மாநில அரசு,பொது துறை  மற்றும் வணிகர்தியான நிறுவனங்கள் அளவிற்கு தொழில் அறிஞர் பணியாளர்கள் வழங்கு வகையில்,வேளாண் விரிவாக்க இயல் பயிற்ச்சியை ஒருங்கிணைத்தல்.
 
              - துறை ஆற்றலின் வளர்ச்சியை ஊக்குவிப்பு,சமுதாய கொள்கைகளின் பங்கேற்பு மற்றும் வளர்ச்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டல் வழங்குதல்  ஆகியவற்றிற்கு வேளாண் விரிவாக்க இயல் ஆராய்ச்சி பொறுப்பேற்றல்
 
              - கல்வி சார்ந்த மற்றும் விரிவாக்க இயல்  செயல்பாடுகள் பயன்பாடுகளுக்காக பருவ வெளியீடுகள், தனிவரை நூல்கள் மற்றும் தாள்கள் வெளியிடுதல்
 
              - மாணவர்கள்,ஆசிரியர்கள்,விரிவாக்க பணியாளர்கள்  மற்றும் நிர்வாகிகள் பயன்களுக்காக விரிவுரை மற்றும் பயிலரங்கம் ஒருங்கிணைத்தல்.
 
              - விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் பல்கலைகழக  துறைகளின் பரஸ்பர நன்மைகளுக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
 
             
                     கற்பித்தல் 
             
            இத்துறை வேளாண் விரிவாக்க இயலில் Msc(Ag)மற்றும்  முனைவர் பட்டபடிப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.இது தவிர வேளாண்,தோட்டக்கலை,வேளாண்மை  பொறியியல்,பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வனவியல் பயிற்சி வகுப்பில் வேளாண் விரிவாக்க  இயல் ஒரு பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. 
             
  முதுநிலை  பட்டபடிப்பு சேர்க்கைக்கான  தகுதிகள் 
   
            வேளாண் விரிவாக்க இயலில் Msc(Ag) மாணவர் சேர்க்கைக்கு  வேளாண்மை /  தோட்டக்கலை /கால்நடை  பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் / மனையியல் அல்லது வேளாண் பொறியியல்  இளநிலை பாடப்பிரிவில் முதல் அல்லது இரண்டாம் நிலையிலி தோச்சி பொற்றிருக்க வேண்டும்.முனைவர் பட்டபடிப்பு சேர்க்கைக்கு முதுநிலை பாட பிரிவில் குறைந்தது இரண்டாம் நிலையில்  தோச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வேளாண் விரிவாக்க கல்வியில் பரிந்துரைக்கப்பட்ட  பல்கலைகழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
            மூன்றாம் நிலையில் தோச்சி பெற்றிருக்கும் மாணவர்கள்  Msc(Ag) மற்றும் Ph.D சேர 5 வருடம் தொழில் அறிஞர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 
             
  பயிற்சி  வகுப்புகள் 
   
            சமூக நல வளர்ச்சி,விரிவாக்க முறைகள்,ஒலி-ஒளி துணைக்  கலகங்கள்,திட்டவரைவு,கருத்துப் பரிமாற்றம் மற்றும் வேளாண் இதழியல்,பொதுத் தகவல்  சாதனங்கள்,ஆராய்ச்சி முறைகள்,ஊரக சமூக இயல்,கல்வி உளவியல், நிர்வாகம் மற்றும் மேற்பார்வை,தலைமை,புதுமை மற்றும் புள்ளியில் ஊடுபரவல் போன்ற பிரிவுகளின் பயிற்சி வகுப்புகள்  வழங்கப்படுகின்றன. 
             
  கற்பித்தல்  முறைகள்  
   
            ஒவ்வொரு மாணவர்களின் ஈடுபாட்டை கொண்டு வரும் வகையில்  கற்ப்பித்தலில் பல்வேறு முறைகள் உள்ளன. ஆசிரியர் மற்றும் விருந்தினரின் உரையாடல், செயல்முறை  விளக்கம், நூலக வேலை, செயல்திட்டங்கள், தேர்வு, பயில்லரங்கம், கூட்டாய்வு, மற்றும்  கல்வி சுற்றுலா போன்றவை கற்பித்தல் முறைகளாகும். 
             
  ஆராய்ச்சி 
   
            இத்துறையில் ஆராய்ச்சி வலிமையாக வலியுருத்தப்படுகின்றது.வேளாண் கல்வி,நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில்,கருத்து பரிமாற்றம்,புதுமைக்கய்  ஊடுபரவல் மற்றும் ஏற்புகள்,விரிவாக்க கற்பித்தல் முறை, தலைமை,செயல்திட்ட சுழற்சி,ஊரக இறைஞர்,உழவர்களுக்கான பயிற்சி மற்றும் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் உட்பொருள்  வழங்கு நிறுவனங்கள் ஆகியவைகளில் உள்ள பிரச்சினைக்கான ஆய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல். 
             
            ஆராய்ச்சிகள் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால்  ஒருங்கிணைக்கப்படுகின்றது.இத்தகைய ஆராய்ச்சிகளின் முடிவுகளை விரிவாக்க பணியாளர்கள்,நிர்வாகிகள்,கொள்கை பங்காளர்க்ள மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வழிமுறையாக பயன்படுத்தி  கொள்கின்றனர். 
             
  மேலும்  தகவல்வகளுக்கு தொடர்புகொள்ள 
            பேராசிரியர் மற்றும் தலைவர்  
            வேளாண் விரிவாக்க இயல் மற்றும் ஊரக சமூக இயல், 
            வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மையம், 
            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
        கோயமுத்தூர் – 641 003.  | 
          |