|   | 
        வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
              மதுரை 
        தமிழ் நூல்கள் மற்றும் பண்பாட்டில்  சிறந்து விளங்கும், மதுரையானது தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மதுரையில்  பிரசித்திப் பெற்ற மீனாட்சிஅம்மன் கோயில் மற்றும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்  முருகன் கோயில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட பெயர் வாய்ந்த மதுரையில் வேளாண் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கமாக  ஆரம்பிக்கப்பட்டது. மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 12 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மிக பெரிய  கல்லூரியாகும். இங்கு 650 மாணவர்களான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பயிலுபவர்கள்  கற்கின்றனர். இக்கல்லூரியின் மேற்கு திசையில், வரலாற்று புகழ்பெற்ற ஆனைமலை அமைந்துள்ளது.  இக்கல்லூரி 154.14 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பசுமையான மற்றும் அழகான சூழ்நிலையான  இது சுற்றுலா பகுதியாக, மாணவர்களுக்கும் மதுரையைச் சுற்றி உள்ளவர்களும் விளங்குகிறது.  2000 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு நல்ல பல்கலைக்கழகமாக தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்ககழகம்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் மதுரை, வேளாண்  கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சிறந்த கல்லூரியாக 2002 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
          
        தோற்றமும்  வளர்ச்சியும் 
          1965 ஆம் ஆண்டு, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோற்றுவிக்கப்பட்டு,  தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தினருக்கு வேளாண் கல்வியை கற்பிக்கும் நிலையமாக விளங்குகிறது.  மேலும் விவசாயிகள் பயனடையும் வண்ணம், தேவையான ஆராய்ச்சி திட்டங்களை நடத்துகிறது. இந்த  கல்லூரியின் சிறப்பு அம்சம் இங்குள்ள அனைத்து ஆசிரியர்களும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.  தமிழ்நாடு வோளாண்பல்கலைக்கழகத்தின் கல்வி கொள்கைப்படி, மாணவர்களுக்கு தெரிந்து கொள்வது  எப்படி என்பதை விட செய்வது எப்படி என்பதற்கான திறமை மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய  அளவுக்கு கற்பிக்கப்படுகிறது. இக்கல்லூரியானது, முதன் முதலில், மேற்கு பகுதியில் சிறிய  கட்டடத்தில் இயங்கியது. பின் இந்த நிலையானது, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தற்சமயம்,  முதன்மை கூட்டம், ஆய்வகங்கள், கருத்தரங்கு அறை, இயந்திர அறை, ஆடிட்டோரியம், உள்கட்டமைப்பு,  இளங்கலை மற்றும் முதுநிலை மாணவ விடுதி பெண்களுக்கு தனி விடுதி, நவீன கருவிகள், நவீன  வகுப்பறை எல்லா வசதியும் கொண்ட நூலகம் கணினி மையம், விளையாட்டு அரங்கம், விளையாட்டுத்  திடல், நீச்சல் குளம், சிற்றுண்டி, அஞ்சல் நிலையம், உள் விளையாட்டு அரங்கம்  மற்றும் மருந்தகத்துடன் புது பொலிவுடன் விளங்குகிறது.  இக்கல்லூரியின் அலுவலர்களும், மாணவர்களும் பயனடையும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின்  கிளை செயல்படுகிறது. இக்கல்லூரியானது 1971 ஆம் ஆண்டு தோன்றிய போதே தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தால்  அங்கீகரிக்கப்பட்டது. பின் இது வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 
        நோக்கங்கள் 
        
          - இளங்கலை,  முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வேளாண் பாடங்களை கற்பித்தல்
 
          - வேளாண்  கல்வி வழங்க சிறப்பு மையமாக செயல்படுகிறது.
 
          - வேளாண்  ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருதல்
 
          - வேளாண்  சமூகத்தினர்கள் பயன் அடையும் வகையில் ஆராய்ச்சி திட்டங்களை நடத்துதல்.
 
          -  புதிய இரகங்கள் மற்றும் தத்துவங்களை கொணர்தல்
 
          - விவசாயிகளுக்கு  பயிற்சிகள், தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி மற்றும் வேளாண் துறை அலுவலர்களுக்கு பயிற்சிகள்  போன்ற விரிவாக்க செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
 
         
        இக்கல்லூரி ஆரம்பிக்க காரணமானவரும்  வடிவமைப்பாளரும் டாக்டர் ஏ. மாரியக்குழந்தை ஆவார். அவர் காலத்தில் முதல்வர் ‘பிரின்சிப்பால்’  என்று அழைக்கப்பட்டார். 
          இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள்  கற்பிக்கப்படுகிறது.  
          இங்கு பயின்ற மாணவர்கள் இந்திய  ஆட்சித் துறை, இந்திய காவல் துறை மற்றும் இந்திய வனத்துறை போன்ற உயர் பதவிகளில் வகிக்கின்றனர். 
        துறைகள் 
          இக்கல்லூரியிலுள்ள பல்வேறு துறைகளில் நடத்த முக்கிய செயல்பாடுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
        பயிர்கலப்பு  மரபியல் 
                      (பயிர் வினையியல், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்  துறைகள் சேர்ந்தது). 
        
          - நெல்  இரகங்களில், குளிர் தாங்கக்கூடிய தன்மையின் ஆராய்ச்சி
 
          - மதுரை  மாவட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை அடையாளம் கண்டறிதல் 
 
          - வறட்சி  தாங்கக்கூடியதாக இருக்க விதை கடினப்படுத்தல்
 
          - தரம்  வாய்ந்த நெல் விதைகளை உற்பத்தி செய்தல்
 
         
        உழவியல்: 
        
          - நெல்லில்  நேரடி விதைப்பு
 
          - ஒருங்கிணைந்த  பண்ணை முறை ஆராய்ச்சி 
 
          - தண்ணீர்  மேலாண்மை தொழில்நுட்பம்
 
         
        மண்ணியல்  மற்றும் வேளாண் வேதியியல் 
        
          - மண்  வளம் மேலாண்மை 
 
          - அங்கக  உரங்களை தயாரிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள்/ வழிமுறைகள்
 
          - வேளாண்மை/கிராமப்புற  கழிவு மறுசுழற்சி
 
         
        வேளாண்  பூச்சியியல்  
        
          - பூச்சிகளைக்  கட்டுப்படுத்த உயிரிக்கட்டுப்பாடு முறைகள் மற்றும் உயிரி கட்டுப்பாடு காரணிகளை தயாரித்தல்.
 
          - பூச்சிகளைக்  கட்டுப்படுத்த தாவரங்களை பயன்படுத்துதல்.
 
         
        வேளாண்  நோயியல் 
        
          - நோய்களை  உயிரி கட்டுப்பாடு முறைகள் மூலம் கட்டுப்படுத்துதல் 
 
          - நோய்களை  தாவரங்களைக் கொண்டு கட்டுப்படுத்துதல்
 
          - குறைந்த  நாள் வயதுடைய அதிக மகசூல் தரக்கூடிய காளாண் இரகங்களை உருவாக்குதல்.
 
         
        வேளாண்  நுண்ணியியல் 
        
          - உயிர்  உரங்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்தல்
 
          - உயிர்  உரங்களில் ஆராய்ச்சி செய்தல்
 
         
        தோட்டக்கலை 
        
          - அதிக  மகசூல் தரக்கூடிய காய்கறிப் பயிர்கள் மற்றும் பழப்பயிர்களில் இரகங்களை உருவாக்குதல்.
 
          - ஊட்டச்சத்து  தோட்டத்தை உருவாக்கும் வழிமுறைகளை காணுதல்.
 
         
        வேளாண்  விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் 
        
          - ஊரக  பிரச்சினைகளை கண்டறிதல், நிர்வாக மேம்பாடு முறைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப பரிமாற்றம்  மற்றும் விரிவாக்க முறைகளை கல்வி மூலம் அறிதல்.
 
          - இளங்கலை  மாணவர்களுக்கு கிராமப்புற வேளாண் வேலை திட்டத்தின் மூலமும்.. அனுபவ கல்வியை பெறும்  வாய்ப்பை உருவாக்குதல்.
 
          - மேம்பாட்டு  நிறுவனங்களான அரசு சாராத நிறுவனங்களுடன் இணைப்பை உருவாக்கி, மேலும் விரிவாக்கத்தை உருவாக்குதல்.
 
         
        வேளாண்  பொருளியல்: 
        
          - புதிய  கண்டுபிடிப்புகளுக்கு செலவு - அதன் விளைவுகள் இடையேயுள்ள தொடர்பை பயிலுதல்
 
          - வேளாண்  பொருள்களை சந்தைப்படுத்த வழிகளை மேம்படுத்துதல்.
 
         
        வேளாண்  பொருளியல்: 
        
          - சாதாரண  விவசாயிகளுக்கு ஏற்ற பண்ணை இயந்திரங்கள்/கருவிகள் வடிவமைத்தல்
 
          - கட்டடங்கள்,  நீர் விநியோகம், மின் இணைப்பு மற்றும் வாகனங்கள் போன்றவற்றைப் பாதுகாத்தல்.
 
         
        இயல்  அறிவியல் 
          இயற்பியல், உயிரி வேதியியல்,  கணிதவியல் மற்றும் வேளாண் புள்ளியில் துறைகள் சேர்ந்தது. 
        
          - உயிரி  - வேதியியல் ஆய்வு
 
          - இயற்பியல்  கணிதம், புள்ளியியல், உயிரி வேதியியல் மற்றும் கணிணி போன்ற பாடங்களை கற்பித்தல்
 
          - கணிணி  மையத்தை காத்தல்
 
         
        கால்நடைத்  துறை 
          கறவை மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகள் வளர்த்தல் போன்றவற்றை  இளங்கலை மாணவர்கள் மேலாண்மை செய்ய, தொழில்நுட்பத்தை அறிதல். 
        மாணவர்நல  மன்றம் 
          கல்லூரி முதல்வரின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்கள் வேலை  வாய்ப்பைப் பெற உதவுகிறது. மாணவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் ஆட்சிப்பணிகளுக்கு  தேர்வு எழுத, வகுப்புகள் நடத்தப் பெறுகிறது. 
          இங்கு பயின்ற மாணவர்கள் ‘தான் பவுண்டேஷன்’, ‘ஷின்ஜெண்டா’ போன்ற  நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்று உள்ளனர். 
             
        நூலகம் 
          நல்ல வசதிக் கொண்ட நூலகம் செயல்படுகிறது. அங்கு 51000க்கும்  மேலான புத்தகங்கள், 220 இந்திய இதழ்கள் மற்றும் 85 வெளிநாட்டு இதழ்கள் நூலகத்தில் உள்ளது.  மேலும்.. மற்றும் இணையதள வசதிகள் கொண்டுள்ளதால் மாணவர்களுக்கு, துறை அலுவலர்களுக்கு  உதவி செய்கிறது. 
             
        ஆராய்ச்சி 
        எல்லா துறையை சார்ந்த அறிஞர்களுக்கு, ஆராய்ச்சி திட்டங்களில்  முழு ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்கள். ராக் பேல்லர் உயிரி தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு  அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், ஜெனிவா, அஸ்பீ, மான்சான்டோ, சைனமைட், மார்கோ  மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் போன்ற தேசிய மற்றும் உலகளாவிய நிறுவனங்களின்  நிதியுதவியுடன் 13 ஆராய்ச்சி திட்டங்கள் நடைபெறுகிறது. மொத்தமாக 47 பல்கலைக்கழக துணைத்திட்டங்களும்  8 வரை முறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு இக்கல்லூரியில் நடைபெறுகிறது. 
        
          - 105  நாள் வயதுடைய குறுகிய கால நெல் இரகமான எம்சியு - 5 வெளியிடப்பட்டது. இதன் அதிக உற்பத்தி  திறன் 5.5 டன் / எக்டர். இது ஆண்டு முழுவதும் பயிரிட ஏற்றது. பருவமழை பின்தங்கி வந்தாலும்  விவசாயிகள் பயிரிட ஏற்றது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும் குளத்து பாசனத்திற்கு  ஏற்றது ஆகும்.
 
          - தென்  மாவட்டத்திற்கு வெளியிட ஐ.ஈ.டி 153577 என்ற நடுத்தர வயதுடைய பாசுமதி கல்சர் கண்டறியப்பட்டுள்ளது.
 
          - அதிக  மகசூல் தரக்கூடியதும், சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு உள்ளதுமான டி.சி.ஹெச் 140-1 எள்  இரகம் கண்டறியப்பட்டுள்ளது.
 
          - உளுந்து  பயிரில் 5% மெத்தனால், பூக்கும் பருவத்தில் தெளிப்பதால் 18% மகசூல் அதிகரிக்கிறது.
 
          - 150:  75 : 75 கிலோ தழை: மணி: சாம்பல் சத்துக்களை இடுவதால் நடுத்தர வீரிய விதையானது, அதிக  வீரிய விதைப்போன்று அதிக மகசூல் தருகிறது.
 
          - ஒவ்வொரு  ஆண்டும் 1300 கிலோ, எம்டியு5 வல்லுநர் விதை உற்பத்தி செய்யப்பட்டு 1.66 இலட்ச எக்டர்  நடவு செய்ய விதையை விநியோகம் செய்கிறது.
 
          - ஏடிடி  36, ஏடிடி43, எம்சியு 5, கோ 43, ஏடிடி 39 நவீன வெள்ளை பொன்னி போன்ற ரகங்களில் ஆதார  விதை மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகள், விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும்  விதை விநியோகிப்பாளர்கள் மூலம் 250 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வாளிப்பான  விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
 
          - நிலக்கடலைக்கு  100% ஈ டி சி, நுண் - தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு, வி ஆர் ஐ 2ல் 3156 கிலோ கடலை  மகசூல் கிடைக்கிறது. நிகர வருமானமாக 20,143 åபாய் கிடைக்கிறது.
 
          - தற்போதைய  புதிய பரிந்துரை முறையான நாள் கடந்த நாற்றுக்களை, தூக்கி எறி நடவு முறை மூலம் 4199  கிலோ மகசூலும், மொத்த வருமானம் 20,995 å/ஹெக்டர் என்ற அளவில் கிடைக்கிறது. அங்கக  உரம் மற்றும் அனங்க உரம் கலந்து பயன்படுத்தினால் அதன் மகசூல் 4.4 டன்/எக்டருக்கும்,  வரவு செலவு விகிதம் 2.88 என்ற அளவில் கிடைக்கிறது.
 
          - 25  கிலோ/எக்டர் என்ற அளவில் சிங்க் சல்பேட் உரத்தை கம்பம் பள்ளதாக்கு பகுத நெல் பயிருக்கு  இடுவதால், குளிர் தாக்கும் சக்தி கிடைக்கிறது.
 
          - 1%  சோடியம் மாலிப்பிடேட் கரைசலை தழைச்சத்து மேலுரமாக இட்டபின்பும் 30 நாள் கழித்தும்  தெளிப்பதால், குளிர் பருவத்தில் வளரும் நெல்லும் அதிக மகசூல் தரும்.
 
          - 21  நெல் வகைகளில் வெள்ளை பின்புற தத்துப்பூச்சிக்கு, தடுக்கும் சக்தி கிடைப்பதாக கண்டறியப்பட்டு,  அவை கலப்பில் ரக - வெளியீட்டில் பயன்படுத்தப்படுகிறது.
 
          - 0.1  பால்மோரோசா எண்ணெயை, வெங்காயத்தின் இலை வெளிர்தல் நோய்க்கு அடிக்கலாம். மேலும் நெல்லுக்கு  கதிர்உறை அழுகலுக்கு ஜிப்சம் கொண்ட சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டேருக்கு 1 கிலோ  என்ற அளவில் தெளிக்கலாம்.
 
          - மதுரை  மற்றும் தேனி மாவட்டத்தை சார்ந்த பூ விவசாயிகள், பூக்காத காலங்களில் பூக்க வைக்க ‘மிளகோபூயூடரால்’  மருந்தை 20 மற்றும் 30 பிபிஎம் அளவில் அடிப்பதால் பூ மகசூல் அதிகரிக்கும் என அறியப்பட்டது.
 
          - மதுரை,  திருமங்கலம் தாலுகாவில் இதர கால்நடை வளர்ப்பை விட கறி வெள்ளாட்டு வளர்ப்பதால் வரவு  செலவு விகிதம் 1:17 என அளவில் கிடைக்கும்.
 
          - ரைசோபியம்  மற்றும் அசோஸ்பைரில்லம் உயிர் உரங்கள் சிலிகா கரைக்கும் பாக்டீரியாவுடன் தயாரித்து  இடுவதால் வேர் முடிச்சு அதிகமாக வளரவும், அனங்கக உரமான யூரியா செலவை குறைக்கவும், நெல்லில்  பாஸ்பேட் மற்றும் சிலிகா எடுத்துக் கொள்ளும் அளவு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது.
 
          - ஹிலிகோவேர்பா  மற்றும் ஸ்போடாப்டீரா போன்ற காய்ப்புழுக்களுக்கு என்.பி.வி கரைசலும் டிரைகோகிரமா  சைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியும் தயாரிக்கப்படுகிறது. இதுவரைநெல், கரும்பு, பருத்தி  மற்றும் நிலக்கடலை போன்ற பயிருக்கு 270 எக்டர் நிலப்பரப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
          - எம்  சி யூ 10/சுப்ரியா பருத்தி ரகங்களில், காய்ப்புழு தாக்கப்பட்டதற்கு ஸ்பிநோசாடு 48  எஸ் சி என்ற உயிரி பூச்சிக்கொல்லியை 10 கிராம் எக்டருக்கு பயன்படுத்துவதால் பருத்தி  மகசூல் அதிகரிக்கும்.
 
          - மதுரை  மாவட்ட விவசாயிகள் மத்தியில் வெளியிடப்பட்ட எம் சி யு மற்றும் எம் சி யு 2 காளான் ரகங்கள்  மிகவும் பிரபலமானது.
 
          - நஞ்சை  விவசாயிகள், விவசாயத்துடன் ஆடு அல்லது மாடு வளர்ப்பில் ஈடுபட்டால், அதிக வருமானத்தை  ஈட்டமுடியும்.
 
          - பயிர்  கலப்பியல் மற்றும் மரபியல் துறையில் கீழ் வரும் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  பரிவில், மத்திய அரசின் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில், மத்திய அரசின் விவசாயம்  மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் åபாய் 4 இலட்சம் நிதியுதவியுடன் 1 எக்டேர் நிலப்பரப்பில்  மூலிகை தோட்டம் அமைக்கபட்டு 30 வகையான மூலிகை பயிர்கள் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.  அதை திட்டத்தின் கீழ் மேலும் 17.50 இலட்ச åபாய் நிதியுதவியும் மண்டல ஆய்வகம் தொடங்கப்பட்டு,  அதில் மூலிகை தாவரங்களின் கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது.
 
         
                    மேற்கூறிய அனைத்தும் ஆராய்ச்சியின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. 
            மத்திய  பண்ணை 
          உழவியியல் துறையின் கீழ் செயல்படும், மத்திய பண்ணை இந்த நிலையத்தின்  முதுகெலும்பாக செயல்படுகிறது. மத்திய பண்ணையின் பரப்பளவு 78.16 எக்டர் ஆகும். நெல்  ஒரு முதன்மை பயிரானதால் அதில் நேரடி விதைப்பு பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு வருடமும் 200டன் சான்றளிக்கப்பட்ட விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு  விற்பனைச் செய்யப்படுகிறது. 
          இளங்கலை மாணவர்களுக்கு ‘கற்பிக்கும்போதே சம்பாதித்தல்’ என்ற  கல்வி முறைக்கு 5 செண்ட் நிலம் வழங்கப்பட்டு, அதில் நெல் விதைப்பு முதல் நெல் அறுவடை  வரை மாணவர்களாலே செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வருமானம், அவர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 
        பயிற்சிகள் 
          இங்கு கொடுக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 
        உயிரி  கட்டுப்பாட்டு பொருள்கள் தயாரிக்கும் மையம்: 
          பூச்சியியல் துறையினால், ஒரு பூச்சியகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இங்கு புரோடீனியா, சிவப்பு கம்பளிப் புழு, மற்றும் பருத்தி காய்ப்புழுவை கட்டுப்படுத்த  என்பிவி கரைசல் உற்பத்தி செய்யப்பட்டு 200 மிலி 80 åபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனைச்  செய்யப்படுகிறது. 
          நெல் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு  மற்றும் பருத்தி காய்ப்பு முறை கட்டுப்படுத்த டிரைகோடெர்மா முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி  செய்யப்பட்டு 1 சி.சி åபாய் 18க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. 
          பருத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்த கிரைசோபா உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 
          வேளாண் பூச்சியியல் துறையை சார்ந்த அறிஞர்கள், உற்பத்தியுடன்  அதன் உற்பத்தி தொழில்நுட்பத்தை விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சியும்,  செயல்முறை செய்து காட்டி வருகிறது. 
        காளான் 
          ஒவ்வொரு மாதம் 15 ஆம் தேதி, பயிர் நோயியல் துறை மூலம் காளான்  வளர்ப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை எம் டி யு1, எம் டி யு2 என்ற  காளான் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விதைப் புட்டி உற்பத்தி செய்யப்பட்டு,  å 10 க்கு ஒரு புட்டி என்ற விலைக்கு விற்கப்படுகிறது. 
             
        ஊரக  கழிவு மேலாண்மை: 
          மண்ணியியல் துறையின் மூலம் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல்  மண்புழு உரம் தயாரித்தல், கரும்பு தோகை உரம் மற்றும் தென்னை நார் கழிவு உரம் போன்றவற்றை  ஊரக மற்றும் வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு,  அதை விரிவாக்க பணியாளருக்கும் விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. 
             
        விரிவாக்க  பணிகள்: 
            வோளாண்  அறிவியல் மையம் 
          விவசாயிகள், இளைஞர்கள் பண்ணை மகளிர் மற்றும் விரிவாக்க பணியாளருக்கு,  உள்ளேயே அல்லது வெளியேயோ பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களுடன்  இணைந்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க எப்போதும் தயாராக உள்ளது. 
             
        தொலை  தொடர்பு மையம் 
          இது விவசாயிகளுக்கும் மற்றும் இதர பார்வையாளர்களுக்கு தகவல்களை  வழங்க திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பார்வையிடும் விவசாயிகள்,  அறிஞர்களின் உதவியுடன் தங்களின் சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ள முடியும். மேலும்,  முதன்மை வாயிலின் அருகில் உள்ள தொலைபேசியை உபயோகித்து, நிலையத்தின் இதர அறிஞர்களுடன்  தொடர்புக் கொள்ள முடியும். இம்மையத்தில் விவசாயிகள் கல்வி மையம் செயல்படுகிறது. மேலும்  வேளாண்மை மற்றும் அதை சார்ந்த பாடத்தின் புதிய வெளியீட்டு புத்தகங்கள் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள், வேளாண் அறிவியல் மையத்தினால் கண்காணிக்கப்படுகிறது. 
             
        ஈடுபொருள்  விநியோகம் 
          சான்றிக்கப்பட்ட நெல் விதை, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா,  நீல பசும் பாசி மற்றும் அசோலா போன்ற உயிர் உரங்கள், என்பிவி, டிரைகோடெர்மா, டிரைகோகிரைமா  மற்றும் கிரைசோபா போன்ற உயிரி கட்டுப்பாடு பொருட்கள், போன்ற ஈடுபொருட்கள் உற்பத்தி  செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் தமிழ்நாடு விவசாயத் துறைக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. 
             
        விவசாயி  நாள்: 
          ஒவ்வொரு ஆண்டும் அல்லது பிப்ரவரி மாதத்தில், வேளாண் விழா கொண்டாடப்பட்டு,  விவசாயிகள், அறிஞர்களுடனும் விரிவாக்க பணியாளர்களுடனும் தொடர்பு கொள்ள செய்யப்படுகிறது. 
           | 
          |