|   | 
        வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையம்,
            கோயமுத்தூர் 
            
                      இந்தியாவில் வேளாண் கல்வி அளிப்பதற்காக  1868 ஆம் ஆண்டு, சென்னை சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிலையம் பின் 1906  ஆம் ஆண்டு, கோயமுத்தூரில் வேளாண் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி நிலையமாகச் செயல்படத் துவங்கியது.  1908 ஆம் ஆண்டில் கோமுத்தூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 8 மாணவர்கள்  முதன் முதலாக சேர்த்து விவசாய கல்வி கற்றனர். ஜ¤லை 1909 ஆம் ஆண்டு சர் அர்தூர் வா அவர்களால்  திறக்கப்பட்ட இக்கல்லூரியானது பிரிட்டிஷ் கட்டடகலை அமைப்பில் கட்டப்பட்டது. 
            சென்னை பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம்  வழங்கப்பட்ட இளங்கலைப் பட்டப்படிப்பு 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இங்கு  ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கமும் கல்வியோடு கொண்டு வரப்பட்டது. ஜ¤ன் 1971 ஆம் ஆண்டு  தமிழ்நாடு வேளாண் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டவுடன், இங்கு கல்லூரியானது,  முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியானது, இங்கு கல்லூரியானது 535 ஹெக்டர் பரப்பளவில்  கோயமுத்தூரின் மேற்கு எல்லையில்  மருதமலை போகும்  அழகான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் வேளாண்மை கல்வி வழங்க அமைக்கப்பட்டது. 
             
            இளங்கலை கல்வி திட்டம் 
            இங்கு 5 இளங்கலை கல்விப்படிப்பு, 8 செமஸ்டரில்  கல்வி கற்பிக்கப்படுகிறது. 
          
            
              - பி.எஸ்.சி  (வேளாண்மை)
 
              - பி.டெக்  (உயிர் தொழில்நுட்பம்)
 
              - பி.டெக்  (உயிர் – Bioinformatics)
 
              - பி.எஸ்  (வேளாண்தொழில் மேலாண்மை)
 
              - பி.டெக்  (வேளாண் தகவல் தொழில்நுட்பம்)
 
             
           
          கல்வி  முறை: 
            1991 - 92 ஆம் ஆண்டிலிருந்து  செமஸ்டர்  கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. 
          
            
              - 105  வேலை நாட்கள்  ஒவ்வொரு செமஸ்டர் உண்டு.
 
              - ஆங்கில  வழி கல்வி.
 
              - பி.  எஸ்.சி (வேளாண்மை) யில் 8 செமஸ்டர்கள்
 
              - உடற்கல்வி,  நாட்டு நலப்பணி மற்றும் தேசிய மாணவர் படை இவையெல்லாம் கல்வியின்  ஒரு பகுதி.
 
             
           
          தனிச்சிறப்பு  - கல்வி கற்பித்தல் 
             
            இந்த கல்லூரியில், கற்பிப்பதற்கு, கற்றுக்கொள்வதற்கும் ஏற்ற  சுற்றுச்சூழலுடன், தனிச்சிறப்பு மையமாக மலர்ந்துள்ளது. மாணவர்கள் கல்வி அறிவை பெறவும்,  தனித்திறமையை வளர்க்கவும், வேளாண் பிரிவில் மாறி வரும் மாற்றங்களை எதிர்க் கொள்ளவும்  கூடிய வகையில், கல்வி கற்க எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறது. தனிச் சிறப்போடு  கல்வி கற்பிப்பதால், இங்கு படித்த மாணவர்கள், இந்திய அளவில் அதிக போட்டியிருந்தாலும்,  புதுடெல்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையை  ஒவ்வொருவரும் அதிக மாணவர்கள் வாங்குகிறார்கள். மேலும் இங்கு பயின்ற மாணவர்கள், இந்திய  ஆட்சி பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளிநாட்டு பணி, இந்திய வருவாய் பணி மற்றும் பல்வேறு  மாநிலங்களில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தினரால் வேளாண் அறிஞர்களாக உள்ளனர். வெளிநாடுகளில்  வேலைவாய்ப்பு, முனைவர் பட்டம் முனைவர் பின் படிப்பு (Post Doctoral) - க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 
            பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கொள்கை  விளக்கத்திற்கு உட்பட்டு, அடிக்கடி, பாடத்திட்டமும் பாடமும், வேளாண்மைக்கான கல்வி வாரியத்தால்  மாற்றம் கொண்டு வரப்படுகிறது. வேளாண்மைக்கான கல்வி வாரியத்தின் தலைவராக முதல்வரும்,  மற்ற நபர்களாக பேராசிரியர் மற்றும் தலைவரும் விளங்குகிறார்கள். தேசிய மற்றும் உலக அளவில்  எழும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம், புதிய பாடங்களும் ஆரம்பிக்கப்பட்டது.
            ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம்  கொண்டு வரப்படுகிறது. இந்த மாற்றம் கொண்டு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, பாடத்திட்டம்  மாற்றப்பட்டு அது குறித்து பல்வேறு நிலைகளில் கருத்து பரிமாற்றம் செய்வதும், பாடத்திட்டம்  மாற்றம் பணிமனைக் கூடம் நடத்தப்படுகிறது. இது குறித்து துறை நபர்களோடு அல்லது, முதுநிலைபடிக்கும்  மாணவர்களிடம் கலந்து ஆலோசித்தும், குழு விவாதம் மூலம் முடிவு தெரிந்து, அவர்களில்  கருத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்படுகிறது. 
             
            புதிய  அறிமுகங்கள்: 
             
            எப்போது நடக்கும் வகுப்புகளோடு, மாணவர்களுக்கு, உண்மை உலக  நிலவரத்திற்கு ஏற்றவாறு அவர்களை வலுப்படுத்தி, அதில் ஈடுப்பட்ட சில புதிய வகுப்புகள்  ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி மூலம் அனுபவ கல்வி பெறுதல், கிராம வேளாண் வேலை அனுபவம்,  வணிக வேளாண் வகுப்புகள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் கணினி வழி கல்வி சுற்றுச்சூழல்  அறிவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், அங்கக வேளாண்மை, வேளாண் முறை மற்றும் இயற்கை  வள வேலாண்மை, உயிர் உரங்கள், உயிர் - பூச்சிக்கொல்லிகள். ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை  மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவையும் பாடத்தில்  சேர்க்கப்பட்டு, மேலும் அதை பற்றி அறிவு மற்றும் செயல்முறைக் குறித்து அடிப்படை கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. தற்போதைய கல்வி முறையானது,  அதிக படிப்புடனும், ஒவ்வொரு மாணவர்களில் தேவை மற்றும் ஆவலை பொறுத்து பரந்தது. ஆனால்,  அதிக பிடிப்பு இல்லாத இதில் சில நழுவல் உண்டு. 2003 -04 ஆம் ஆண்டிலிருந்து 20 மணி நேரம்  கல்வி அவரவர் விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் முறை உருவாகி உள்ளது. 
             
            கிராம  வேளாண் வேலை அனுபவத் திட்டம் (RAWE) 
             
            இளங்கலை அறிவியல் (வேளாண்மை) பாடத்திட்டத்தில் ‘RAWE’ ஒரு முக்கிய  பகுதியாகும். விவசாயத்தில் நடக்கும் உண்மை நிலையை அறிந்து கொள்ள, விவசாய மாணவர்களுக்கு  குறிப்பாக நகர்புறத்திலிருந்து வந்தவர்களுக்கு, இந்த பாடம் பட்டத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  விவசாய நிலத்தில் ஏற்படும் நிலைகள் மற்றும் பிரச்சினைகள் எல்லாம் நன்கு அறிந்து அதில்  ஒருங்கிணைந்து செயல்பட மாணவர்களுக்கு உதவுகிறது. மாணவர்கள் ஏழு பேர் கொண்ட குழுவாக  கிராமத்தில் ஒரு நன்கு தெரிந்த விவசாயியோடு இணைந்து செயல்படுவார்கள். மாணவர்கள், கிராம  சூழ்நிலையில், அவர்கள் கற்றுக் கொள்ளும் திறனை அதிகப்படுத்த, அனைத்து துறையைச் சார்ந்த  ஆசிரியர்களும் ஒரு முழு செமஸ்டருக்கு பாடத்தை அங்கு நடத்துவார்கள். 
             
            வணிக  வேளாண்மை: 
             
            இந்த திட்டத்தில், மாணவர்கள் சுய வேலைவாய்ப்பும்  தொழில் முனைவோராக வர கல்வி வழங்கப்படுகிறது. 
          
            
              - விதை  உற்பத்தி மற்றும் காளான் உற்பத்தி
 
              - உயிரி  – பூச்சிக்கொல்லி மற்றும் உயிர் உரம் உற்பத்தி 
 
              - கறிக்கோழி  உற்பத்தி
 
              - நாற்றுப்  பண்ணை தொழில்நுட்பம்
 
              - மதிப்பூட்டப்பட்ட  பொருள் தயாரிப்பு
 
             
           
          மாணவர்கள், ஏதாவது ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு மாணவரும், அந்தந்த பகுதியில் செய்முறையும் அனுபவமும் பெற்று, பட்டம் முடிந்தவுடன்,  அவர்களே தனியான ஒரு தொழிலாக தொடங்க தன்னம்பிக்கை கொடுத்து உதவுகிறது. 
             
            அனுபவத்தில்  கற்றல் 
             
            இந்த பாடத்திட்டம், மாணவர்கள், செய்முறை வேளாண்மைக்கு  ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு மாணவர்களுக்கு ஒரு சிறிய அளவு நிலம் ஒதுக்கப்படுகிறது.  (200 மீட்டருக்கு அதிகமாக). அந்த நிலத்தில் நன்செய் மற்றும் புன்செய் நில பயிர்கள்  சாகுபடி செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மாணவர்கள் விதை முதல் விதை வரை, சாகுபடி  முறை அறிந்துகொள்ள உதவுகிறது. அவர்களாக அதை செய்யும் போது, அதன் செய்முறை மற்றும்  பிரச்சனை அறிந்துகொள்ள உதவுகிறது. 
             
            வசதிகள் 
             
            கற்பிக்கும் திறனை அதிகரித்தல், வாழ்க்கைத் தரத்தை  அதிகரித்தல் மற்றும் நல்ல வேலை கிடைக்க, கீழ்க்கண்ட கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிகப்படியான  கல்விப்பாட வசதிகளைச் செய்து கொடுக்கிறது. 
          
            
              - நூலகம்
 
              - கணிணி  மையம்
 
              - இணையதள  வசதி 
 
              - திசு  வளர்ப்பு ஆய்வுக்கூடம்
 
              - பாலித்தீன்  அறையில் கடினப்படுத்துதல்
 
              - உடற்கல்வி,  தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி
 
              - விளையாட்டு  திடல் மற்றும உள் விளையாட்டு அரங்கம்
 
              - நீச்சல்  குளம் மற்றும் மாணவர் கேண்டீன்
 
              - மாணவர்  ஆலோசனை மையம்
 
              - கணிணி  மற்றும் இணையதள வசதியுடன் கூடிய மாணவர் மற்றும் மாணவியர் விடுதி.
 
             
                      | 
          |