விதை நேர்த்தி 
      விதை  நேர்த்தி என்பது பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றைத் தனித்தோ (அ) ஒருங்கிணைத்து  விதைகளின் மேல் இடுதல் மூலம், அவற்றை மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சேமிப்பில்  விதைகளைத் தாக்கும் பூச்சிகள் போன்றவற்றில் இருந்து காத்து தொற்று நீக்குதலே ஆகும்.  விதை நேர்த்தி செய்வதன் பலன்கள் கீழ்க்கண்டவையாகும். 
      விதை நேர்த்தியின்  பயன்கள் 
      
        
          - பயிர்  நோய்களை பரவாமல் தடுக்கிறது.
 
          - விதை  அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.
 
          - முளைப்புத்  திறனை மேம்படுத்துகிறது.
 
          - சேமிப்பில்  தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
 
          - மண்ணில்  உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
 
         
       
      விதை நேர்த்தி  வகைகள் 
           
      விதைக் கிருமிகளை  நீக்குதல் 
      
        
          - இம்முறையானது விதையுறையினுள் (அ) விதைகளின்  திசுக்களின் ஆழப் பரவி இருக்கும். பூஞ்சாண வித்துக்களை நீக்குதல் ஆகும். திறனுள்ள முறையில்  பூஞ்சான் தொற்றுதலை நீக்குவதற்கு பூஞ்சாணக்கொல்லி விதையினுள் ஊடுருவிச் செல்லவேண்டும்.
 
         
       
      விதைக் கிருமிகளை  அழித்தல் 
      
        
          - விதையின் உட்புறத்தை தாக்காமல், விதையின்  மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே இம்முறை ஆகும். இராசயன கலவையில் விதைகளைப்  பதனம் செய்வது, நனைத்து எடுப்பது, பூஞ்சாணக் கொல்லி பொடிகள், கலவைகள் மற்றும் திரவம்  போன்றவை பயனளிக்கும்.
 
         
       
      விதைகளைக் காத்தல் 
      
        
          - விதைகளை முளைக்கும் முன்னரே மண் மூலம்  பரவும் கிருமிகளின் தாக்குதலிருந்து விதைகள் மற்றும் இளநாற்றுக்களை பாதுகாப்பது இதன்  நோக்கமாகும்.
 
         
       
      விதைகளை நேர்த்தி  செய்யவேண்டிய நிலைமைகள் 
           
      காயமடைந்த விதைகள் 
      
        
          - விதையுறையில் ஏற்படக்கூடிய விரிசல் முதலியவை  பூஞ்சாண் தாக்குதல் ஏற்படவும் அவற்ிறல் இருந்து முளைக்கும் நாற்றை தாக்கியும் சேதம்  விளைவிக்கிறது. கதிரடித்தல் மற்றும் விதை சேமித்தல்  போன்ற செயல்பாடுகளாலும் விதைகள் காயமடைய வாய்ப்புண்டு.  சுற்றுப்புறச் சூழல் தாக்குதல் மற்றும் தவறான சேமிப்பு முறைகள் போன்றவையும் விதைகளை  காயப்படுத்துகின்றன.
 
         
       
      நோயுற்ற விதைகள் 
      
        
          - அறுவையின் போது ஏற்படும் நோய்க் கிருமி  தாக்குதல் (அ) சுத்திகரிப்பின் போது ஏற்படும் தொற்றுதல் (அ) சுத்திகரிப்பு சாதனங்கள்  மூலம் பரவும் கிருமிகள் (அ) கிருமி தாக்கியுள்ள கிடங்குகள், கொள்கலன்கள், போன்றவற்றில்  சேமித்தல் ஆகியவை விதைகளில் நோயினைப் பரப்புகின்றது.
 
         
       
      சாதகமில்லாத  மண்ணின் தன்மைகள் 
      
        
          - விதைகள் சில சமயம் சாதகமில்லாத மண் தன்மைகளான,  குளிர்ந்த மற்றும் ஈரமான மண் (அ) மிகவும் வறண்ட மண் போன்றவற்றில் விதைக்கப்படும்.  அச்சமயம் சில பூஞ்சாண் வித்துக்களின் வளர்ச்சிக்கு இவ்வகை மண்ணின் தன்மைகள் சாதகமாக  இருப்பதால் அவை விதைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.
 
         
       
      நோயற்ற விதைகள் 
      
        
          - விதைகள் குறைந்த பட்ச சேதம் முதல் பலத்த  சேதம் விளைவிக்கக்கூடிய கிருமிகளால் தாக்கப்படுகின்றன. விதை நேர்த்தி செய்வது நோய்களிடமிருந்து  பாதுகாத்தும், மண் மூலம் பரவும் கிருமிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தியும், நலிந்த  விதைகளை முளைக்கச் செய்யவும் பயன்படுகிறது.
 
         
       
      விதை நேர்த்தி  செய்யப் பயன்படும் சாதனங்கள் 
      
        
          
            - கலவை நேர்த்தி  செய்யும் கருவி
 
            - நேரிடை நேர்த்தி செய்யும் கருவி
 
            - பண்ணையில் தயாரிக்கக்கூடிய பேரிகை கலப்பான்
 
            - தானியத் துளைக் கருவி
 
            - கொழு
 
           
         
       
      விதை நேர்த்தியின்  போது தேவையான முன்னெச்சரிக்கை 
         
        விதை  நேர்த்தி முறைகள் மனிதர்கள் மற்றும் விதைகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை ஆகும்.  நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயவாக பயன்படுத்தக்கூடாது  என்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இதைத் தடுப்பதற்காக, நேர்த்தி செய்யப்பட்ட  விதைகளின் மேல், இதனை உட்கொண்டால் ஆபத்தானது என்ற விவரச் சீட்டை பொருத்தவேண்டும்.  விற்கப்படாத நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உண்ணும் உந்துதலைத்  தடுக்க விற்பதற்குத் தேவையான அளவ விதைகளையே நேர்த்தி  செய்யவேண்டும். 
      நேர்த்தி  செய்யப் பயன்படுத்தும் முறைகளில் சரியான அளவு உபயோகிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் அதிகமாகவோ  / குறைவாகவோ உபயோகிக்கும் அளவு, நேர்த்தி செய்யாத விதைகளில் ஏற்படும் பாதிப்பை விட  அதிகமாகும். அதிக ஈரப்பதம் உள்ள விதைகளை திடமான திரவ இராசயனங்களில் நேர்த்தி செய்யும்  போது விதைகள் பாதிப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது. 
      நுண்ணுயிர்  கலவைகளில் விதைகளை நேர்த்தி செய்யும் போது கீழ்க்கண்ட முறையில் செய்ய வேண்டும். 
      
        
          - இராசயன  நேர்த்தி
 
          - பூச்சிக்கொல்லி  மற்றும் பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி
 
          - சிறப்பு  விதை நேர்த்தி
 
         
       
      விதைகளின்  முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை மேம்படுத்தும் இரசாயன நேர்த்தி முறைகள் 
      
        
          
            - விதைகளை உரங்கள், வைட்டமின்கள் மற்றும்  நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவற்றில் நனைத்து / நேர்த்தி செய்வது.
 
           
         
       
      எடுத்துக்காட்டு 
      நெல் 
      விதைகளை  1 சதவிகிதம் கேசிஎல் (பொட்டாசியம் குளோரைடு) கரைசலில் 12 மணி நேரம் ஊறவைப்பது முளைப்புத்  திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும். 
      மக்காச்சோளம் 
      விதைகளை  சோடியம் குளோரைடு (1 சதவிகிதம்) அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட்  (1 சதவிகிதம்) கலவையில் 12 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். 
      பயறு வகைகள் 
         
        விதைகள்  துத்தநாக சல்பேட்,  மக்னீசியம் சல்பேட் மற்றும்  மாங்கனீசு சல்பேட் 100 பிபிஎம் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.                |