Seed Certification
விதைச்சான்று :: பதிவு முறை

விதைச் சான்றளிப்பின் பல்வேறு நிலைகள்

  1. விண்ணப்பம் பெறுதல் மற்றும் பரிசோதித்தல்
  2. விதை ஆதாரம் சரிபார்த்தல்
  3. வயல் ஆய்வு
  4. விதை சுத்திகரிப்பு பணி
  5. விதை மாதிரி மற்றும் விதை பரிசோதனை
  6. குறியிடுதல், முத்திரை இடுதல் மற்றும் சான்றட்டை வழங்குதல்

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பரிசோதித்தல்
சான்றுவிதை உற்பத்தி செய்ய விரும்புவோர் தங்களின் பெயரை உரிய விதைசான்று உதவி இயக்குனரிடம் å 25/பயிர்/பருவம் பதிவு செய்ய வேண்டும். சான்றளிப்பு மூன்று பருவகாலங்களில் வழங்கப்படுகிறது. அவை குறுவை, சம்பா மற்றும் தாளடி.

விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பப் படிவத்தின் இரண்டு நகல்களை விதைச்சான்று உதவி இயக்குனரிடம் விதைப்புக்கு 10 நாட்களுக்கு முன்பு அல்லது விதைப்பு அறிக்கை பதிவு செய்யும் பொழுது ஒப்படைத்தல் வேண்டும். விதைச்சான்று உதவி இயக்குனர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு, ரகம், தகுதி, ஆதாரம் விதை நிலை மற்றும் கட்டணம் செலுத்திய விபரம் ஆகியவற்றை பரிசோதனை மேற்கொள்வார். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அந்த விண்ணப்பத்திற்கு தனி விண்ணப்ப எண் கொடுக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் ஒன்றினை அலுவலக பணிக்கும் மற்றொன்றை விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படும்.

விதைப்பு அறிக்கை
சான்று விதை உற்பத்தி செய்ய முனைவோர் தங்களது விதைப்பு அறிக்கையை உரிய படிவத்தில் விதைச் சான்று உதவி இயக்குநரிடம் நான்கு நகல்களாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையுடன் உரிய விதைச் சான்று கட்டணம் மற்றும் விதை ஆதாரநிலை சான்றட்டை போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.

விதை நிலைகள் ஆதாரம்
1.ஆதார நிலை வல்லுநர் விதை
2.சான்று நிலை ஆதார நிலை விதை
3.ஆதார நிலை இரண்டு ஆதார நிலை ஒன்று
4.சான்று நிலை இரண்டு சான்று நிலை ஒன்று

விதைப்பு அறிக்கையை வெவ்வேறு ரகங்கள், நிலைகள் மற்றும் வெவ்வேறு காலக்கட்டங்களுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும். விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தாலோ, தனித்தனி விதைப்பண்ணை 25 ஏக்கருக்கு அதிகமாக இருந்தாலோ விதைப்பு அறிக்கைகளாக பதிவு செய்ய வேண்டும். விதைத்த 35 நாட்கள் முன்பு வரை பதிவு செய்யலாம். விதைப்பு பண்ணையின் துல்லியமான இருப்பிடத்தை ஏதாவது ஒரு நில எல்லைக் குறி (மைல் கல்,கட்டிடம்,பாலம்,சாலை,பண்ணை பெயர், விதைப்பண்ணையைச் சுற்றி நான்கு பக்கமும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் பெயர்) முலம் குறியிட்ட மாதிரி வரைபடத்தை விதைப்பு அறிக்கையின் பின்புறம் உள்ளவாறு சமர்பிக்க வேண்டும். இந்த வரைபடம் வயலாய்வு மேற்கொள்ளும் விதைச்சான்று அலுவலர்களுக்கும் விதைப்பண்ணையை மிகவும் அடையாளம் காண மிகவும் உதவியாக இருக்கும்.

விதைச்சான்று உதவி இயக்குனர் விதைப்பு அறிக்கையை பரிசோதித்த பிறகு ஒவ்வொரு விதைப்பு அறிக்கையை பரிசோதித்த பிறகு ஒவ்வொரு விதைப்பு அறிக்கைக்கும் தனித்தனி விதைச்சான்று எண் கொடுக்கப்பட்டு விதைப்பு அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. விதைப்பு அறிக்கை பதிவு செய்த பின் அறிக்கையின் நான்கு நகல்களில் ஒரு நகலை விதைச் சான்று அலுவலரிடமும், மற்றொரு நகலை விதைச்சான்று துணை இயக்குநரிடமும், மூன்றாவது நகலை உற்பத்தியாளரிடமும், இறுதியாக உள்ள நகலை அலுவலக பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது

விதை ஆதாரம் சரிபார்த்தல்: 
விதைச்சான்று அலுவலர் தனது முதல் ஆய்வின் போது விதைப் பண்ணையில் விதைக்கப்பட்ட விதை அங்கீகரிக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதா என்பதை பரிசோதனை மேற்கொள்வார்.

 

Updated on: Feb , 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam