| 
     
      ஊட்டச்சத்து மேலாண்மை 
       
      தாவரங்களின் வேர் பகுதி மண்ணில்  உள்ள நுண்ணுயிர்களுடனும் ஊட்டச்சத்துகளுடனும் இணைந்து இருக்கும். வேரிலிருந்து வரும்  திரவத்தை உட்கொண்டு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள் அங்கக  ஊட்டச் சத்துக்களை, எளியனவாக மாற்றி, தாவரங்கள் கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே  நுண்ணுயிர்களும் தாவரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து  வாழ்பவை. பயிர் வளர்ப்பதினால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைகின்றன. மண்ணில் வளம் காப்பது  மிகவும் அவசியமானதாகிறது. அங்கக வேளாண்மை மண்ணில் ஊட்டச்சத்து வளத்தை பெருக்க உதவுகிறது.  ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கிய அங்கங்கள் இதோ,  
      
       | 
     | 
     |