தேநீரில் உயிர் உரம் மற்றும் ஹ்யூமிக் அமில பயன்பாடு   
   
    உயிர்  உர தொழில்நுட்பம்:  
      
        
          - உயிர் உரங்கள்
 
          - உயிர் உரங்களின் பல்வேறு வகைகள்
 
          - உயிர் உரங்களின் பேரளவு உற்பத்தி
 
          - உயிர் உரங்கள் இடுதல்
 
          - கால்நடைத் தீவனமாக அசோலா
 
          - தமிழ்நாட்டில் உள்ள உயிர் உர உற்பத்தி  மையங்களின் பட்டியல்
 
          - உயிர் உர தொழில் நுட்பத்தில் உள்ள சிக்கல்கள் 
 
          - வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து  உருவாக்கப்பட்ட உயிர் உர ஆய்வு வகைகள்
 
          - தயாரிப்பு பொருளாதாரம்
 
          - உயிர்  உரத்தின் விலை மற்றும் இருப்பு
 
           
         
       
      1.  உயிர் உரங்கள்: 
         
        ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள  உயிரை அல்லது செயலற்ற உயரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை  அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான  ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி  முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது. 
         
      இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல்  இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை  அதிகப் படுத்தலாம். 
         
      ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின்  பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில்,  இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக  இருக்கிறது. பல நுண்ணுயிரிகள் மற்றும் பயிர்களுடன் உள்ள தொடர்பால் உயிர் உரங்கள் தயாரிப்பு  பயனுள்ளதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளின் தன்மை மற்றும் செயலைப் பொறுத்து இது பலவழிகளில்  வகைப்படுத்தப்படுகிறது. 
      
        
          
            | வகைகள் | 
            உதாரணங்கள் | 
             
          
            | தழைச்சத்தை    நிலைப்படுத்தும் உயிர் உரங்கள் | 
             
          
            | தன்னிச்சையாக    வாழ்தல் | 
            அசட்டோபேக்டர்,    பெய்ஜரிங்க்யா, க்ளாஸ்ட்ரிடியம், க்ளப்சில்லா, அனபீனா, நாஸ்டாக் | 
             
          
            | இணை    வாழ் தன்மை | 
            ரைசோபியம்,    ப்ரேங்கியா, அனபீனா, அசோலா | 
             
          
            | கூடிசேரும்    இயல்புடைய இணை வாழ் தன்மை | 
            அசோஸ்பைரில்லம் | 
             
          
            | மணிச்சத்தை    கரைக்கும் உயிர் உரங்கள் | 
             
          
            | நுண்ணுயிரி | 
            பேசில்லஸ்    மெகாடிரியம் வகை பாஸ்போடிக்கம், பேசில்லஸ் சப்டிலிஸ், பேசில்லஸ் சர்குலன்ஸ், சூடோமோனாஸ்    ஸ்டெய்ரிட்டா | 
             
          
            | பூஞ்சை | 
            பெனிசிலியம்    வகைகள், அஸ்பெர்ஜிலல்லஸ் அவாமோரி | 
             
          
            | மணிச்சத்தை    இடம் பெயரச் செய்யும் உயிர் உரங்கள்: | 
             
          
            குமிழியுடைய    மரம் போன்ற  
              வேர்சூழ்    பூசணம் | 
            குலோமஸ்    வகை, கிகாஸ் போரா வகை, அகேலூஸ்போரா வகை, ஸ்கூட்டலோஸ்போரா வகை, ஸ்கிளிரோ ஸிஸ்டிஸ்    வகை | 
             
          
            | வெளி    வேர் உட்பூசணம் | 
            லேக்கேரியா    வகை, பிஸியோலித்திஸ் வகை, போலிடஸ் வகை, அமெனிட்டா வகை | 
             
          
            | எரிகாய்டு    வேர் உட்பூசணம் | 
            பெஜிஜில்லா    எரிக்கே | 
             
          
            | ஆர்கிட்    வேர் உட்பூசணம் | 
            ரைசோக்டோனியா    சொலானி | 
             
          
            | நுண்ணூட்டச்    சத்துக்கான உயிர் உரங்கள்: | 
             
          
            | சிலிக்கேட்    மற்றும் துத்தநாக கரைதிறன்கள் | 
            பேசில்லஸ்    வகை | 
             
          
            | பயிர்    வளர்ச்சி ஊக்குவிக்கும் வேர் நுண்ணுயிரி | 
             
          
            | சூடோமோனாஸ் | 
            சூடோமோனாஸ்    ஃப்ளோரஸன்ஸ் | 
             
           
         
      2.  வேறுபட்ட வகை உயிர் உரங்கள்: 
      
        
          1.  ரைசோபியம்:
             
            ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது  பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன்  நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து  ரைசோபியத்துடைய வெளித் தோற்றம், இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில்  இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். இது ஏழு பேரினங்களைக் கொண்டது. பயிறு வகைகளில்  வேர் முடிச்சு உருவாவதற்கு தனிப்பட்ட காரணியாக உள்ளதால், இதை குறுக்கே உட்புகுத்தல்  வகை எனக் குறிப்பிடுகிறோம். முதன் முதலில் அமெரிக்காவில் ரைசோபியம் உட்புகுத்தல்  செய்யப்பட்டு, தனியார் துறையில் 1930 ம் வருடம் வணிகப் பண்பு ஊட்டப்பட்டது. 1932 ம்  வருடம் ப்ரெட் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. முதலில், மண்ணில் சக்தி மிகுந்த ஆய்வு வகைகள் இல்லாதபோது,  சோயாபீன் உட்புகுத்தல் சாதாரணமாக அதிகம் இல்லாத பயிர்களில் நல்ல விளைவை ஏற்படுத்தியது.  கடந்த 4 நூறு வருடங்களில் அமெரிக்கா விவசாயிகளால் செயலற்ற உட்புகுத்தலால் செயலற்ற ஆய்வு  வகைகள் மண்ணில் உண்டாகின. அப்பொழுது சக்திமிகுந்த ப்ரேடிரைசோபியா ஆய்வு வகைகள் மாற்றாக  இருந்தது பிரச்சனையாக இருந்தது.
  
                | 
            | 
         
        
          அசட்டோபாக்டர் 
            அசட்டோபாக்டரின் பலதரப்பட்ட வகைகளில் அசட்டோபாக்டர்  க’ரோகாக்கம் காற்றோட்டமுள்ள மண்ணில் அதிகமாக வளரக்கூடியது. இது தழைச்சத்தை (2 –  15 மி.கி தழைச்சத்து நிலைப்படுத்துதல் / கி. கார்பன் மூலம்) வளர்ச்சி ஊடகத்தில் நிலைப்படுத்தக்  கூடியதாக இருக்கும். நுண்ணுயிரி உற்பத்தி செய்யக் கூடிய எண்ணற்ற பசை மண் ஒருங்குபடுவதற்கு  உதவுகிறது. இந்திய மண்களில் உள்ள அசட்டோபாக்டர் க்ரோகாக்கம் 105 / கி. மண் அளவு அரிதாக  அதிகமாகும். மண்ணில் எதிர்ப்பான நுண்ணுயிர்கள் இருப்பதாலும், அங்ககப்பொருள் குறைபாட்டினாலும்  அசட்டோபாக்டர் க்ரோகாக்கம் அதிகமாகிறது.   | 
            | 
         
        
          அசோஸ்பைரில்லம் 
            அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம்.  ப்ரேஸிலென்ஸ் (முன்பு ஸ்பெரில்லம் லிபோபெரம்) மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை  பயிர்களில் வேர்த்தண்டுப் பகுதி மற்றும் வேர்தக்கைப் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில்  உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில்  உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் பிரித்தெடுக்கப்பட்டது.  விப்ரியோ அல்லது ஸ்பெரில்லம் என்ற கிராம் ஒப்பா, உயிரணுத் திரவித்தல் எண்ணற்ற அளவில்  குவிக்கப்பட்டிருக்கும். 
 
            அசோஸ்பைரில்லத்துடைய 5 வகைகள் அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ்,  அசோஸ்பைரில்லம் லிப்போபெரம், அசோஸ்பைரில்லம் அமெசோஎன்னஸ், அசோஸ்பைரில்லம் ஹேலோப்ரேபிசன்ஸ்  மற்றும் அசோஸ்பைரில்லம் இராகென்ஸ். இது காற்றோட்டம் உள்ள மற்றும் காற்றோட்டம் இல்லாத  நிலையிலும் வளரும். வளர்ச்சித் திரவத்தில் இருக்கக்கூடிய அல்லது இல்லாத நிலையிலும்  இது வளரும். தழைச்சத்து நிலைப்படுத்துவது மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி (ஐ.  ஏ. ஏ), நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் வறட்சி சகிப்பு போன்றவை அசோஸ்பைரில்லம் உட்புகுத்தலால்  பெறக்கூடிய நன்மைகளாகும்.  | 
            | 
         
        
            | 
         
        
          சைனோபாக்டீரியா 
            தன்னிச்சையாக உயிர்வாழும் மற்றும் இணைவாழ் தன்மையுடைய  சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடிமுறை சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கிறது.  கூட்டு வளர்ச்சி மாறுபட்டு கூடுடைய நீலப்பச்சைப் பாசிகளான நாஸ்டாக், அனபீனா, ஆலுசீரியா  மற்றும் பல ஆரம்ப உட்புகுத்தலாக தட்டுக்கள் நெகிழி உறையிடப்பட்ட பானைகளில் வளர்க்கப்படுகிறது.  பின் வயலில் இது பலமடங்காக பெருக்கப்படுகிறது. நெல் வயல்களில் ஒரு எக்டர்க்கு 10 கிலோ  என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது. முடிவில் இருக்கக்கூடியப் பொருள்  வெளியில் உள்ள பொருள்களால் மாசுபடுகிறது மற்றும் அடிக்கடி பாசியின் வளர்ச்சி இருக்கிறதா  என்றும் கண்காணிக்க முடிவதில்லை.
              | 
            | 
         
        
          நெல் பயிருக்கு அளிக்கக்கூடிய பிரபலமான உயிர் உரமாக  இருந்தாலும், தற்போது இந்தியாவில் உள்ள விவசாயிகள் (தென் மாநிலங்களைத் தவிர குறிப்பாக  தமிழ்நாடு) பயன்படுத்துவது இல்லை. பாசியை வயலில் வளர்ப்பதால், சாதகமான சூழ்நிலையில்  தழைச்சத்து ஒரு எக்டர்க்கு 20 – 30கிலோ அளவு நிலைப்படுத்தப்படுகிறது. ஆனால் நீலப்பச்சைப்  பாசி உயிர் உரத்தை தயாரிப்பதற்கான பணியாட்கள் அமைவது தான் இதில் பிரச்சனையாக உள்ளது.  தரமான கட்டுப்பாட்டு முறைகளை பின் தொடர்வதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவைப்பட்ட  வகைகள் இருக்கின்றனவா என்பது மட்டும் சரிபார்க்கப்படுகிறது.  | 
           
        
          அசோலா 
             அசோலா தண்ணீரில் தன்னிச்சையாக மிதக்கக்கூடிய பெரணியாகும்.  இது காற்றிலுள்ள தழைச்சத்தை நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைப்படுத்துகிறது.  அசோலா ஓலைத் தொகுதியானது மிதக்கும் வேர்த்தண்டு பூசண வித்துப்பையுடன் இருக்கும் மற்றும்  சிறிய ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள இலைகள் மற்றும் வேர்களுடன் இருக்கும். தென்னிந்திய  கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இதர உலக நாடுகுளின் நெல் விளையும் பகுதிகளில், அசோலா  நீர் பெரணியைப் பயன்படுத்தி தழைச்சத்தை நிலைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.  நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இது  ஒரு எக்டர்க்கு 40 – 60 கிலோ தழைச்சத்தை நெல்பயிருக்கு தருகிறது.  | 
           
        
          மணிச்சத்தை  கரைக்கும் நுண்ணுயிரிகள் 
            மண்ணிலுள்ள நுண்ணுயிர் மற்றும் பூஞ்சான், குறிப்பாக  சூடோமோனாஸ், பேசில்லஸ், பெனிசிலியம், அஸ்பர்ஜில்லஸ் அங்கக அமிலங்களை சுரக்கும். இதனால்  மண்ணில் உள்ள மணிச்சத்து குறைகிறது. கோதுமை மற்றும் உருளைக்கிழங்கின் விளைச்சல் அதிகமாவதை  – சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பேசில்லஸ் பாலிமிக்சா மற்றும் சூடோமோனாஸ்  ஸ்டெரய்ட்டாவினுடைய வளர்ச்சியை உட்புகுத்தலால் விளைச்சல் அதிகமாவது செயல்முறை விளக்கம்  செய்யப்பட்டுள்ளது. தற்போது, வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள்  உற்பத்தி செய்த மணிச்சத்தைக் கரைப்பவை, விவசாயிகளுக்கு அரசாங்க முகமைகள் மூலம் விற்கப்படுகிறது.  இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இதனுடைய தரம் அல்லது வேர்த்தண்டுகளில் இந்த உயிரிகளின்  வளர்ச்சி கண்காணிக்கப்படுவதில்லை.  | 
            | 
         
        
            | 
         
        
          ஏ.  எம். பூஞ்சான் 
            ஊட்டச்சத்துக்களை சேமித்து வைத்துக் கொள்ள குமிழிகளையும்,  வேரில் ஊட்டச்சத்துக்களை பிரிப்பதையும் கொண்ட போரினங்களான குளோமஸ், அக்லூஸ்போரா,  ஸ்கிளிரோ சிஸ்ட், என்டோகோன் ஆகியவற்றின் உடைய உயிரணுக்குள்ளே இருக்கும் கட்டுப்பட்ட  பூஞ்சான் உள்ளுறைக் கூட்டுயிரினால் ஊட்டச்சத்துக்கள் முக்கியமாக மணிச்சத்து, துத்தநாகம்,  கந்தகம் போன்றவை மண்ணிலிருந்து வேர்த்தக்கையின் உயிரணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.  பொதுவான பேரினமான குளோமஸின் பலதரப்பட்ட வகைகள் மண்ணில் பரவி இருக்கின்றன. தழைச்சத்தை  நிலைநிறுத்துவதில் ஏ. எம். பூஞ்சானின் பங்களிப்பு பயிருக்கு அதிகளவில் இருந்தாலும்,  இதை பெரிய அளவில் உற்பத்தி செய்வது தடையாக உள்ளது.  | 
            | 
         
         
     
        சிலிக்கேட்  அல்லது மணிச்சியம் கரைக்கும் நுண்ணுயிரி: 
           
        நுண்ணுயிரிகள் சிலிக்கேட் மற்றும் அலுமினியம் சிலிக்கேட்டின்  தரத்தைக் குறைக்கவல்லது. நுண்ணுயிரிகளுடைய வளர்சிதை மாற்றத்தின் போது பல அங்கக அமிலங்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன மற்றும் சிலிக்கேட் சிதைவில் இரண்டு விதமாக செயல்படுகிறது.  இவை ஹைட்ரஜன் அயனிகளை வளர்ச்சி ஊடகத்திற்கு அனுப்புகிறது. நீர்ப்பகுப்பினால் அங்கக  அமிலங்களான சிட்ரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், கீட்டோ அமிலம் மற்றும் ஹைட்ராக்ஸி  கார்பாலிக் அமிலங்கள் உருவாகின்றன. இதனால் எளிதாக அமிலங்கள் கரைந்த நிலையில் ஊடகத்திற்கு  கிடைக்கிறது. 
           
        மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பேசில்லஸ் வகையுடன்  நடத்தப்பட்ட சோதனையில், நுண்ணுயிரி வளர்ச்சி ஊடகத்தில் வளரும் நிலையில் பல சிலிக்கேட்  தாதுக்களை எளிதாகக் கரைக்கக்கூடிய திறன் பெற்றது. சீமைக் காரை (சிமெண்ட்) வேளாண் இடுபொருள்களான  சூப்பர் பாஸ்பேட், ராக் பாஸ்பேட் போன்றவற்றில் அதிகளவில் சிலிக்கேட் கரைக்கும் நுண்ணுயிரிகள்  உள்ளதை காட்டுகின்றன. பலதரப்பட்ட இடங்களிலிருந்து பெறப்பட்ட தனிப்படுத்தப்பட்ட நுண்ணுயிரிகள்  வேறுபட்ட அளவில் சிலிக்கேட் கரைக்கும் திறன் கொண்டவை. செம்மண், களிமண், மணல், குன்றில்  உள்ள மண்ணில் நடத்தப்பட்ட மண் உட்புகுத்தல் சோதனைகள் எல்லா வகையான மண்ணிலும் பெருக்கமாகும்  மற்றும் மண் நீரில் அதிகளவு சிலிக்காவை வெளிவிடும். அங்கக சிலிக்கான் எச்சங்களான வைக்கோல்,  நெல் உமி, சாம்பல் ஒரு எக்டர்க்கு 5 டன் என்ற அளவு அளிப்பதற்கு நெல் நல்ல முறையில்  பிரதிபலிப்பு செய்கிறது. சிலிக்கேட் கரைக்கும் நுண்ணுயிரி இந்த எச்சங்களுடன் இணைந்து,  பயிரின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகப்படுத்துகிறது. மண்ணிலிருந்து சிலிக்கா மற்றும்  ஊட்டச்சத்துக்களின் கரைசலால் வளர்ச்சி அதிகப்படுகிறது. 
           
          பயிர்  வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேர்சூழ் நுண்ணுயிரி: 
           
        மண்ணில் உள்ள வேர்கள் அல்லது வேர்சூழ் மண்டலத்தில்  இந்த வேர்நுண்ணுயிரிகள் குடியேறுகின்றன. இவை பயிர்களுக்கு நன்மை அளிக்கக் கூடியவை. 
          இந்த வேர் நுண்ணுயிரி தற்போது வாணிகத் துறையாக்கப்பட்டுள்ளது.  பயிர் நோய்களை கட்டுப்படுத்துதல் (உயிர் பாதுகாப்பான்கள்), மேம்பட்ட ஊட்டச்சத்து இருப்பு  (உயிர் உரங்கள்), அல்லது பயிர் ஹார்மோன் உற்பத்தி (உயிர் ஊக்கிகள்) ஆகியவற்றுள் ஏதாவது  ஒரு காரணத்திற்காக இது வாணிபமாக ஆக்கப்பட்டுள்ளது. சூடோமோனாஸ், பேசில்லஸ் வகைகள்  பயிர் ஹார்மோன்கள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்யும். இதனால் அதிகளவில்  வேர்களை உற்பத்தி செய்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் சக்தியை அதிகப்படுத்துகிறது.  இந்த பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் வேர்சூழ் நுண்ணுயிரியை உயிர் ஊக்கிகள் என்று அழைக்கப்படுகிறது.  பயிர் ஹார்மோன்கள் இன்டோல் – அசிட்டிக் அமிலம், சைட்டோகைனின், ஜிப்ரலின் போன்றவற்றை  உற்பத்தி செய்யும் மற்றும் எத்தலீன் உற்பத்தியாவதை தடுக்கும்.
          மூலக்கூற்று தொழில்நுட்பத்தில் தற்போது உள்ள முன்னேற்றங்கள்  இதை ஊக்குவிக்கின்றன. இதனால் மண் மற்றும் வேரில் உள்ள பயிர் ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளினுடைய  செயல் வாழ்வு மேம்படுவதால், பயிர்களின் வளர்ச்சியும் மேம்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.  மரபியல் மாற்றம் செய்த பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளையும் உற்பத்தி செய்ய  முடியும்.
          உயிர் எதிர்ப்புப் பொருள், பயிர் ஹார்மோன், ஸிடிரோபோர்  உற்பத்தி பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் நுண்ணுயிரியுடன் தயாரிக்க முடியும். 
           
        நுண்ணுயிரி ஆய்வு வகை பயன்பாட்டை பொறுத்து பயிர்  இனங்கள் அல்லது மரபு வகைகளின் உட்புகுத்தலினால் ஏற்படுவதால் உயிர் உரங்கள் வேளாண்மையில்  பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுடைய வேறுபட்ட வேர்சூழ் மண்டலத்தின் விளைவால்  குறிப்பிட்ட ஆய்வு வகையை தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது நுண்ணுயிரி தழைச்சத்து நிலைப்படுத்துவதில்  மாற்றம் மற்றும் குறிப்பிட்ட வேர் கசிவுகளால் மணிச்சத்தை கரைக்கும் திறன் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. 
          நுண்ணுயிரிகளின் போட்டியிடக்கூடிய திறன் மற்றும்  அதிகளவு போட்டியிடக்கூடிய சாறுண்ணி ஆகிய காரணிகள் நுண்ணுயிரீ ஆய்வு வகையை உட்புகுத்துவதில்  முக்கிய பங்கேற்கிறது. இதைப்பற்றிய படிப்புக்கள் ஒத்திசைவு செயல்களைத் தெரிந்து கொள்வதற்கும்  சிக்கலான சூழ்நிலையில் நுண்ணுயிரி குடியேற்றம் நிலைத்தல் (குறிப்பாக வேர்சூழ் மண்டலத்தில்)  ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளன. இது சம்பந்தமாக மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடத்தப்பட்ட  சோதனையில் தழைச்சத்தை நிலைப்படுத்துவதற்கான நுண்ணுயிரி உட்புகுத்தலின் முறையான தயாரிப்பு  மணிச்சத்து மற்றும் சிலிக்கேட்டை கரைக்கும் நுண்ணுயிரி மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும்  நுண்ணுயிரியால் நிலையான வேளாண்மைக்கு உதவக்கூடிய பயனுள்ள நுண்ணுயிரிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
        நீர்ம  உயிர் உரங்கள்: 
        
          
            உயிர் உரங்களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா  தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மணிச்சத்தை  கரைக்கும் முறைகளின் மூலம் தருகிறது. நெல், பயிறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி,  கரும்பு, காய்கறி மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கு இந்த உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.  அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் ஒரு முக்கியமான இடுபொருளாகும். பயிர் வளர்ச்சி மற்றும்  விளைச்சலை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், மண் நலத்தை மேம்படுத்துகிறது மற்றும் மண்  வளத்தை காக்கிறது. தற்போது கடத்தும் அடிப்படையிலான உட்புகுத்தலாக உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு  வழங்கப்படுகிறது. மாற்றாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் நுண்ணுயிர்  துறை உற்பத்தி செய்த நீர்ம உயிர் உரங்களின் தயாரிப்பு தொழில்நுட்பம் அதிக நன்மைகளைத்  தருகிறது.  | 
              | 
           
       
      
      
        
        நன்மைகள்:
        கடத்தக்கூடிய உயிர் உரங்களை விட நீர்ம உயிர் உரங்களின்  நன்மைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. 
      
        
          - அதிகமான வீரிய ஆயுட்காலம் – 12 – 14  மாதங்கள் 
 
          - கலப்படமாதல் இல்லை
 
          - 450 செல்சியஸ் வெப்ப நிலையில்  சேமிக்கும் பொழுது குணங்கள் எதுவும் மாறுவதில்லை
 
          - பிறப்பிட குடியேற்றத்துடன் போட்டியிடத்  தேவையான அதிக திறன் இருக்கிறது
 
          - அதிக எண்ணிக்கையை 109 உயிரணு / மில்லி  லிட்டர்க்கும் அதிகமான அளவு, 12 லிருந்து 24 மாதம் வரை வைத்துக் கொள்ள முடிகிறது
 
          - தனிப்பட்ட நொதிக்கப்பட்ட வாசனையை வைத்து  எளிதாக அடையாளம் காண முடிகிறது
 
          - தயாரிப்பு செலவுகளான கடத்தும் பொருள்,  பொடித்தல், சமப்படுத்துதல், கிருமிகளை அகற்றுதல், மூட்டை கட்டுதல் மற்றும் போக்குவரத்து  செலவுகள் குறைவாக இருக்கின்றன
 
          - தரக்கட்டுப்பாடு ப்ரோட்டோகால் எளிதாக  மற்றும் விரைவாக உள்ளது
 
          - விதை மற்றும் மண் மீது நன்றாக உயிர்  வாழக்கூடியது
 
          - உயிர் உர உற்பத்தி மையங்களை வருடம் முழுவதும்  இயக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை
 
          - விவசாயிகளால் எளிதாகப் பயன்படுத்தப்படுகிறது
 
          - தெளிக்கும் அளவு – கடத்தும் அடிப்படை  உயிர் உரங்களைக் காட்டிலும் 10 மடங்கு குறைவு
 
          - அதிக வாணிப லாபம்
 
          - அதிகளவில் ஏற்றுமதி
 
          - மாசுபடுதல் மிக அதிகளவு எதுவும் இல்லாததால்  நொதிக்கும் செயல்
 
           
         
      வேறுபட்ட  நீர்ம உயிர் உரங்களின் இயல்புகள்: 
         
      ரைசோபியம்: 
         
      இது நுண்ணுயிரி வகையைச் சார்ந்தது. இணை வாழ் தன்மையில்  தழைச்சத்தை நிலைநிறுத்தலுக்கு ஒரு தகுந்த உதாரணம். நுண்ணுயிரி பயிறு வகை பயிர்களின்  வேர்களைத் தாக்கி, வேர் முடிச்சுகளை உற்பத்தி செய்யும். வேர் முடிச்சின் உள்ளே மூலக்கூற்று  தழைச்சத்தை அம்மோனியாவாக மாற்றி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதமாக தருகிறது. இதனால்  பயிர்கள் பயனுள்ள புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் இதர தழைச்சத்தைக் கொண்ட கூட்டுப்  பொருள்களை உற்பத்தி செய்யும். இணைவாழ் தன்மை வேர் முடிச்சின் உள்ளே நடைபெறும். வேர்  முடிச்சின் உள்ளே இருக்கும் இடம், வேர் முடிச்சின் உலர் எடைஅளவு, பயிரின் உலர் எடை,  மற்றும் விளைச்சல் சதவீதங்கள் அதிக அளவு உள்ளன. அட்டவணை 2–ல் ரைசோபியம் வகைகள் மற்றும்  தழைச்சத்து நிலைநிறுத்துதல் அளவு பட்டியலிடப்பட்டு உள்ளது.  
         
      வேறுபட்ட  பயிர்களில் நீர்ம ரைசோபியத்தால் உயிரியல் வழி தழைச்சத்து நிலைநிறுத்துதலின் அளவு: 
      
        
          
            | ஒம்புயிரி    வகை | 
            ரைசோபியம்    வகை | 
            பயிர்கள் | 
            தழைச்சத்தை    நிலைப்படுத்துதல்  
              (கி / எக்டர்) | 
             
          
            | பட்டாணி    வகை | 
            ரைசோபியம்    லெகுமினோஸ்யேரம் | 
            பட்டாணி,    மைசூர் பருப்பு | 
            62    – 132 | 
             
          
            | சோயாபீன்    வகை | 
            ரைசோபியம்    ஜப்பானிக்கம் | 
            சோயாபீன் | 
            57    – 105 | 
             
          
            | லுப்பினி    வகை | 
            ரைசோபியம்    லுப்பின் அரின்தோபஸ் | 
            லுப்பினஸ்  | 
            70    – 90 | 
             
          
            | குதிரை    மசால் வகை | 
            ரைசோபியம்    மெலிலோட்டி, மெபுகாஹோ டிரைக்கோநெல்லி | 
            மெலிலோட்டஸ் | 
            100    – 150 | 
             
          
            | அவரை    வகை | 
            ரைசோபியம்    பேசோலி | 
            பேசோலி | 
            80    – 110 | 
             
          
            | க்ளோவர்    வகை | 
            ரைசோபியம்    டிரைஃபோலி | 
            டிரைஃபோலியம் | 
            130 | 
             
          
            | காராமணி    வகை | 
            ரைசோபியம்    வகைகள் | 
            உளுந்து,    துவரம் பருப்பு, காராமணி, நிலக்கடலை | 
            57    – 105 | 
             
          
            | கொண்டைக்    கடலை வகை | 
            ரைசோபியம்    வகைகள் | 
            கொண்டைக்    கடலை | 
            75    - 117 | 
             
           
         
      நீர்ம  ரைசோபியத்தின் இயல்புகள்: 
      
        
          - வெள்ளை நிறத்தில் இருக்கும்
 
          - கெட்ட வாசனை இருக்காது
 
          - கார அமில நிலை 6.8 – 7.5 அளவு இருப்பதால்,  நுரை உண்டாவது இல்லை
 
           
         
      அசோஸ்பைரில்லம்: 
         
      நுண்ணுயிரி வகையைச் சார்ந்தது மற்றும் ஒரு எக்டருக்கு  20 – 30 கிலோ தழைச்சத்தை வேர்சூழ் மண்டலத்தில் பயிறுவகை அல்லாத பயிர்களான நெல், எண்எணய்  வித்துக்கள், பருத்தி மற்றும் பலவற்றில் நிலை நிறுத்துகிறது. அசோஸ்பைரில்லம் உயிர்  உரமாகப் பயன்படுத்துவதன் திறம் உயர்ந்துள்ளது. பல பயிர்களில் முக்கியமாக நெல், சிறு  தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து ஆகியவற்றில் அதிகளவில் வேர்கள் உருவாக ஊக்குவிக்கின்றன.  அசோஸ்பைரில்லம் உட்புகுத்தலால் 25–30 சதவீத அளவு தழைச்சத்து பயன்பாட்டைக் குறைக்கலாம்.  அசோஸ்பைரில்லம் பேரினம், அசோஸ்பைரில்லம் லிப்போபெரம், அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ்,  அசோஸ்பைரில்லம் அமேசோஎனன்ஸ் என்ற மூன்று வகைகளைக் கொண்டது. இந்த வகைகள் தழைச்சத்தை  வழங்கக்கூடிய உயிர் உரங்களாக வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. 
         
      அசோஸ்பைரில்லம் நைட்ரஜனை ஆக்ஸிஜனேற்றம், ஆக்ஸிஜன்  ஒடுக்கம் செய்யும் திறன் கொண்டது. அசோஸ்பைரில்லம் லிப்போஃபெரம், அசோஸ்பைரில்லம்  ப்ரேஸிலென்ஸ் ஆய்வு வகைகள் நைட்ரேட்டை நைட்ரைட்டாக ஒடுக்கும் திறன் கொண்டது. இதனால்  ஆய்வு வகைகள் இந்த குணங்கள் இல்லாததாக தேர்ந்தெடுக்க வேண்டும். தீவனப் புற்களான அரிசிப்புல்,  இஞ்சிப்புல், எருமைப்புல், மக்காச்சோளம், சோளம், கோதுமை மற்றும் ரைப் பயிர்களின்  வேர்களின் அசோஸ்பைரில்லம் லிப்போஃபெரம் இருக்கிறது. 
         
        நீர்ம  அசோஸ்பைரில்லத்தின் இயல்புகள்: 
      
      
        
          - நீலம் அல்லது மங்கிய வெள்ளை நிறம்
 
          - முறையற்ற தயாரிப்பால் கெட்ட வாடையும்,  நுரையும் தோன்றும்
 
          - மஞ்சள் பசையுள்ள பொருள்களின் உற்பத்தியால்  இதன் தரத்தை உணரலாம்
 
          - அமிலத் தன்மை கரைசலில் இருந்தால் அசோஸ்பைரில்லம்  நுண்ணுயிரி அங்கே இருக்காது
 
           
         
      பல  பயிர்களின் வேர்களில் தழைச்சத்தை நிலைப்படுத்தும் திறன் மற்றும் நிலைப்படுத்தும் தழைச்சத்தின்  அளவு: 
      
        
          
            | பயிர் | 
            தழைச்சத்து    நிலைப்படுத்துதல் கி / எக்டர் | 
             
          
            | நெல்    (ஒரைசா சட்டைவா) | 
            28 | 
             
          
            | சோளம்    (சொர்கம் பைகாலர்) | 
            20 | 
             
          
            | மக்காச்சோளம்    (ஜியா மெய்ஸ்) | 
            20 | 
             
          
            | புல்    வகைகள் (பேனிக்கம்) | 
            24 | 
             
          
            | அருகம்புல்    (சைனாடான் டேக்டிலான்) | 
            36 | 
             
          
            | தினை    (சிட்டேரியா) | 
            12 | 
             
          
            | முள்ளுக்கீரை    (அமெரான்தஸ் ஸ்பைனோசா) | 
            16 | 
             
           
         
      வளர்ச்சி  ஊக்கிகளின் உற்பத்தி: 
         
      விட்டமின்கள், நிகோடினிக் அமிலம், இன்டோல் அசிட்டிக்  அமிலம், ஜிப்ரலின் போன்ற பொருட்களை உயிரியல் வழியில் தொகுப்பு செய்கிறது. இந்த வளர்ச்சி  ஊக்கிகள் நல்ல முளைப்புத்திறன், முன்பே முளைப்பது, நல்ல வேர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு  உதவுகிறது. 
         
        வயல்  நிலைகளில் நீர்ம அசோஸ்பைரில்லத்தின் பங்கு: 
      
        
          - வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பயிருக்கு  பச்சை நிறத்தைத் தருகிறது
 
          - சாம்பல், மணிச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்களின்  பயன்படுத்துவதில் உதவுகிறது
 
          - பழங்களுடைய சதைப்பான பகுதியை அதிகப்படுத்துகிறது  மற்றும் புரோட்டீன் சதவீதத்தை அதிகப்படுத்துகிறது
 
           
         
      வயலில்  அசோஸ்பைரில்லம் செயலற்ற நிலையில் அறிகுறிகள்: 
      
        
          - வளர்ச்சி ஊக்குவிக்கும் செயல்கள் இருக்காது
 
          - மஞ்சள் கலந்த பச்சை நிற இலைகள்
 
           
         
      அசட்டோபாக்டர்: 
         
      இது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை  நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயிறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல்,  பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோபாக்டர் உயிரணுக்கள்  வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும். மண்ணில் குறைவாக உள்ள அங்ககப் பொருளால்  அசட்டோபாக்டர் குறைவாக உள்ள அங்ககப் பொருளால் அசட்டோபாக்டர் வளர்ச்சி மண்ணில் பாதிக்கும். 
         
      1992, 1993, 1994 – ம் வருடத்தில், காரீப் பருவத்திற்கு  முந்தைய பருவத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தழைச்சத்தை நிலைப்படுத்தும் உயிரிகள் மற்றும்  கனிம அங்கக உரங்கள் இணைந்து பயன்பாட்டால் நெல் விளைச்சல் அதிகமானது. 
         
        நீர்ம  அசட்டோபாக்டரின் இயல்புகள்: 
         
      அசட்டோபாக்டரால் உற்பத்தி செய்யப்படும் மெலனின்  என்ற நிறமி திரவ வடிவில் இருக்கும். இது தைரோசின் ஆக்ஸிஜனேற்றத்தால் தைரோசைனேஸ் நொதியாக  மாற்றப்படும். சில நிறமாக்கலைப் பற்றிய விவரம் பின்வருமாறு –  
      
        
          - அ. க்ரோகாக்கம் – பழுப்பு கலந்த கருப்பு  நிறமாக்கம் திரவ உட்புகுத்தலில் உற்பத்தி ஆதல்
 
          - அ. பெய்ரின்க்கி – திரவ உட்புகுத்தலில்  மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் உற்பத்தி ஆதல் 
 
          - அ. வினிலேன்டி – திரவ உட்புகுத்தலில்  பச்சை உடனொளிர் நிறமாக்கம் எற்பத்தி ஆதல்
 
          - அ. பாஸ்பாலி – திரவ உட்புகுத்தலில் பச்சை  உடனொளிர் நிறமாக்கம் உற்பத்தி ஆதல்
 
          - அ. மேக்ரோஸிஸ்டோஸீன்ஸ் – திரவ உட்புகுத்தலில்  இளஞ்சிவப்பு நிறமாக்கம் உற்பத்தி ஆதல் 
 
          - இன்சைனிஸ்: திரவ உட்புகுத்தலில் குறைவான,  பசைஇல்லாத, சாம்பல் கலந்த நீல நிறமாக்கம் உற்பத்தி ஆதல்
 
          - அ. அஜிலிஸ் – திரவ உட்புகுத்தலில் பச்சை  உடனெளிர் நிறமாக்கம் உற்பத்தி ஆதல்
 
           
         
      திசு  வளர்ப்பில் நீர்ம செட்டோபாக்டரின் பங்கு: 
         
      தேனி, வரதராஜ் நகரில் உள்ள ராஜ்சிரீ தகர்ஸ் அண்ட்  கெமிக்கல்ஸ் லிமிடெட் கம்பெனியினுடைய திசு வளர்ப்பு ஆய்வுக்கூடத்தில் முனைவர். செந்தில்  என்பவரால் 2004 – ம் வருடம் கரும்பு இரகமான கோ 86032 – வில் சோதனை நடத்தப்பட்டது.  பெங்களூரில் உள்ள ஆர். சி. ஓ. எப் மண்டல இயக்குநர் முனைவர். கிருஷ்ணன் சந்திரா, இந்த  திரவ உட்புகுத்தலால் கரும்பு நுண்பெருக்கத்தின் மீது உள்ள வளர்ச்சி ஊக்குவிக்கும் விளைவுகளை  ஆய்வு செய்துள்ளார். உயிர்கணித இயல் காட்சியளவீடுகளான பயிரின் உயரம், இலை நீளம், அகலம்,  வேரின் நீளம், வேர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளார். வேதி அளவீடுகளான  புரோட்டீன், கார்போஹைட்ரேட், தழை, மணி, சாம்பல் மொத்த அங்கக உயிர் பொருள்களையும்  பதிவு செய்துள்ளார். 
      
        
          - அசட்டோபாக்டர் திரவ உட்புகுத்தல் செயல்பட்டு  10 சதவீதம் உயிர்ப்பொருள் ஊடகத்தில் மற்ற எல்லா வேதிமுறை செயல்பாடுகளை விட இதில் அதிகமாக  இருக்கிறது
 
          - பாலித்தீன் பைகளில் உள்ள கரும்பு நாற்றுக்களின்  வளர்ச்சி மற்ற எல்லா வேதிமுறை செயல்பாடுகளை விட அசட்டோபாக்டர் திரவ உட்புகுத்தலின்  செயல்பட்டு நன்றாக உள்ளது
 
           
         
      உயிர்  கட்டுப்பாடு முகவரான நீர்ம அசட்டோபாக்டரின் பங்கு: 
         
      சில பூஞ்சான் எதிர்ப்பு பொருள்களை அசட்டோபாக்டர்  உற்பத்தி செய்யும். இது மண் பூஞ்சான்களான அஸ்பெர்ஜில்லஸ், புசேரியம், கர்வேலேரியா,  அல்டர்னேரியா, ஹெல்மின்தோஸ்போரியம், புசேரியம் மற்றும் பலவற்றின் வளர்ச்சியை தடுக்கும். 
         
        அசட்டோபாக்டர்: 
         
      இது கரும்பு சர்க்கரை வள்ளிக் கிழங்கு, இனிப்பு சோளம்  உடன் இணைந்திருக்கும் நுண்ணுயிரி. ஒரு வருடத்திற்கு ஒரு எக்டர்க்கு 30 கிலோ தழைச்சத்தை  நிலைநிறுத்துகிறது. இது குறிப்பாக கரும்பு பயிருக்காக வாணிபமாக்கப்பட்டுள்ளது. விளைச்சல்  ஒரு எக்டர்க்கு 10 – 20 கிலோ அளவும், 10 – 15 சதவீத அளவு சர்க்கரை அளவையும் அதிகப்படுத்துகிறது. 
         
        கரும்பின்  மீது நீர்ம அசிட்டோபாக்டர் டையசோடிரோபிக்கஸின் விளைவு 
         
      கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அசோஸ்பைரில்லம்  மற்றும் பாஸ்போபேக்டிரியம் உயிர் உரங்களை கரும்பில் பயன்படுத்துவது சாதாரணமாக நடைமுறையாக  உள்ளது. இதனால் 20 சதவீத அளவு செயற்கை உரங்களான தழைச்சத்து, மணிச்சத்து பயிருக்கு அளிப்பது  குறைக்கப்படுகிறது. தற்பொழுது, அசிட்டோபாக்டர் டைசோடிரோபிக்கஸ் கரும்பின் தண்டு,  இலைகள் மற்றும் மண்ணில் இருக்கிறது. இது 300 கிலோ அளவு தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது.  பிரேசிலில் தரம் குறைந்த மண்ணில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட கரும்பில், தழைச்சத்து  உரம் இல்லாமல், மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்டச்சத்துக்களை மட்டுமே அளித்து,  தொடர்ந்து மூன்று அறுவடைகளில் விளைச்சல் அதிகமானது இந்த நுண்ணுயிரியால் தான் என்று  அறியப்பட்டுள்ளது. ஒரு எக்டர்க்கு 182 – 244 டன் அளவு விளைச்சல் உற்பத்தியானது என்று  பதிவு செய்துள்ளார்கள். தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் பயிரின் உள்ளே  இணைந்து இதை சாத்தியமாக்கியுள்ளது என்று கருதப்படுகிறது. 
         
        தொழில்  முனைவோர், விற்பகர், விவசாயிகளுக்கான செய்யத் தகுந்தவை மற்றும் செய்யத் தகாதவை 
      
        
          
            | செய்யத்    தகுந்தவை | 
            செய்யத்    தகாதவை | 
             
          
            | உயிர்    உரப் புட்டிகளை சூரிய வெளிச்சம் மற்றும் ஒளி படாதவாறு வைக்க வேண்டும். குளிர்ந்த,    உலர்நிலையில் சேமிக்க வேண்டும் | 
            உயிர்    உரப் புட்டிகளை சூரிய வெளிச்சம் மற்றும் ஒளி படும்படி சேமித்து வைக்கக் கூடாது | 
             
          
            | தொகுதி    எண், பயன்படுத்தப்பட்ட பயிரின் பெயர், தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி நாள் குறிப்பிடப்பட்ட    உயிர் உரப்புட்டிகளை விற்க வேண்டும் | 
            காலாவதியான    உயிர் உரப் புட்டிகளை விற்கக் கூடாது | 
             
          
            | காலாவதியான    புட்டிகளை அகற்றி விட வேண்டும் | 
            புட்டியில்    ஓட்டைப் போடுவதோ அல்லது குத்துவதோ கூடாது | 
             
          
            | உரம்    மற்றும் பூச்சுக் கொல்லி கலங்களிலிருந்து உயிர் உரப் புட்டிகளை தள்ளி வைக்க வேண்டும்.    நேரிடையாக இதைக் கலக்கக் கூடாது | 
            உயிர்    உரங்களை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள், மற்றும் பூஞ்சான் கொல்லிகளுடன்    கலக்கக் கூடாது | 
             
           
         
      நீர்ம  உயிர் உரம் அளிப்பு முறை 
        மூன்று  வழிகளில் உயிர் உரத்தை அளிக்கலாம் 
      
        
          - விதை நேர்த்தி
 
          - வேர் குளியல்
 
          - மண் அளிப்பு 
 
           
         
      விதை  நேர்த்தி 
         
      விதை நேர்த்தி தான் பொதுவாக பயன்படுத்தப்படும் முறையாகும்.  இது பயனுள்ளது மற்றும் சிக்கனமானது. சிறிய எடை அளவு உடைய விதைகள் (5 கிலோ எடை வரை)  நெகிழி பையில் வைத்து பூசப்படுகிறது. இதற்காக, நெகிழிப்பை 21” x 10” அளவு அல்லது பெரிய  அளவு பை பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பையை 2 கிலோ விதை அல்லது அதிக விதைகளை கொண்டு  நிரப்ப வேண்டும். பையை காற்றுப் புகாதவாறு அடைக்க வேண்டும். பையை 2 நிமிடத்திற்கு அழுத்தி,  விதை முழுவதும் ஈரமாகுமாறு செய்ய வேண்டும். பின் பையைத் திறந்து, ஊதி, மெதுவாகக் குலுக்க  வேண்டும். விதைகள் முழுவதும் ஒரே மாதிரியாக பூச்சு ஆனவுடன் குலுக்குவதை நிறுத்த வேண்டும்.  பின் பையைத் திறந்து, விதைகளை 20 – 30 நிமிடங்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். அதிகளவு  எடையைக் கொண்ட விதைகளை, வாலியில் வைத்து உயிர் உரத்தை கையால் கலக்க வேண்டும். ரைசோபியம்,  அசட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்யலாம். 
         
      2 அல்லது அதிக நுண்ணுயிரிகளுடன் கலந்து விதை நேர்த்தி  செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. விதைகள் ரைசோபியம், அசட்டோபாக்டர்  அல்லது அசோஸ்பைரில்லம் உடன் முதலில் பூச்சு செய்ய வேண்டும். ஒவ்வொரு விதையும் நுண்ணுயிரியால்  பூசப்பட்ட பின்பு பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகளுடன் வெளியில் ஒரு தரம் பூச வேண்டும்.  இந்த முறையால் அதிகளவு நுண்ணுயிரிகளை உற்பத்தி பண்ண முடியும். 
        ஏதாவது இரண்டு நுண்ணுயிரிகளுடன் விதை நேர்த்தி செய்தால்,  அதிகளவு நுண்ணுயிரிகளை தராது. 
      வேர்  குளியல் 
         
      அசோஸ்பைரில்லம் / பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகள்  நெல் நாற்றுக்கள் நடும் போது / காய்கறி பயிர்களில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.  தேவையான அசோஸ்பைரில்லம் / பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகள் 5 – 10 லிட்டர் அளவுத்  தண்ணீரில் வயலின் ஒரு மூலையில் வைத்து கலந்து நாற்றுக்களை குறைந்தது அரை மணி நேரத்திற்கு  நடுவதற்கு முன்பு இந்த கரைசலில் மூழ்க வைக்க வேண்டும். 
         
        மண்  மூலம் அளிப்பு 
         
      ஒரு ஏக்கருக்கு 200 மி. லிட்டர் அளவு பாஸ்பேட் கரைக்கும்  நுண்ணுயிரியை பயன்படுத்த வேண்டும். 400 முதல் 600 கிலோ அளவு மாட்டுச்சாணத்தை பாஸ்பேட்  கரைக்கும் நுண்ணுயிரியுடன் அரை மூட்டை ராக் பாஸ்பேட்டுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை  மரத்தின் அடியில் வைத்து நிழலில் இரவு முழுவதும் 50 சதவீத அளவு ஈரப்பதம் இருக்குமாறு  உலர்த்த வேண்டும். இந்த கலவையை வரிசையில் அல்லது மண் சமம்படுத்தும் போது அளிக்க வேண்டும். 
         
      வேறுபட்ட  பயிர்களின் நீர்ம உயிர் உரத்தின் அளவு 
         
      பரிந்துரைக்கப்பட்ட  நீர்ம உயிர் உரம் மற்றும் அதன் அளிப்பு பல பயிர்களுக்கான அளவு பின்வருமாறு 
      
        
          
            பயிர்கள்    | 
            பரிந்துரைக்கப்பட்ட    உயிர் உரம்  | 
            அளிப்பு    முறை  | 
            பயன்படுத்தப்படும்    அளவு  | 
             
          
            விளைநிலப்    பயிர்கள் பயிறு வகைகள் கொண்டைக் கடலை, பட்டாணி, நிலக்கடலை, சோயாபீன், அவரை, மைசூர்    பருப்பு, குதிரைமசால், பெர்சீம், காராமணி, துவரை  | 
            ரைசோபியம்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            தானியங்கள்,    கோதுமை, ஓட்ஸ், பார்லி  | 
            அசட்டோபாக்டர்/    அசோஸ்பைரில்லம்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            நெல்  | 
            அசோஸ்பைரில்லம்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            எண்ணெய்    வித்துக்கள் கடுகு, எள், லின்விதை, சூரியகாந்தி, ஆமணக்கு  | 
            அசட்டோபாக்டர்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            சிறு    தானியங்கள் கம்பு, ராகி, வரகு  | 
            அசட்டோபாக்டர்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            மக்காச்சோளம்,    சோளம்  | 
            அசோஸ்பைரில்லம்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            தீவனப்பயிர்கள்    மற்றும் புற்கள் அருகம்புல், சோளப்புல், யானைப்புல், எருமைப்புல் மற்றும் இதரப்    புற்கள்  | 
            அசட்டோபாக்டர்  | 
            விதை    நேர்த்தி  | 
            200    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            இதர    தோட்டப்பயிர்கள் புகையிலை  | 
            அசட்டோபாக்டர்  | 
            நாற்றுக்கள்    நேர்த்தி  | 
            500    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            தேயிலை,    காபி  | 
            அசட்டோபாக்டர்  | 
            மண்    நேர்த்தி  | 
            400    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            ரப்பர்,    தென்னை  | 
            அசட்டோபாக்டர்  | 
            மண்    நேர்த்தி  | 
            2.3    மி. லிட்டர் / ஏக்கர்  | 
             
          
            வேளாண்    காடு / பழப்பயிர்கள் அனைத்து பழங்கள் / வேளாண் காட்டு பயிர்கள் (செடி, புதர்செடிகள்,    ஓராண்டுப்பயிர்கள், பல்லாண்டுப் பயிர்கள் (எரிசக்தி, தீவனம், பழங்கள், பசை, நறுமணப்    பொருட்கள், இலைகள், பூக்கள், கொட்டைகள், விதைகள்)  | 
            அசட்டோபாக்டர்  | 
            மண்    நேர்த்தி  | 
            2.3    மி. லி / செடி நாற்றங்காலில் இருக்கும்போது  | 
             
          
            பயிறு    வகை பயிர்கள்  | 
            ரைசோபியம்  | 
            மண்    நேர்த்தி  | 
            1.2    மி. லி / செடி  | 
             
           
         
      குறிப்பு 
         
      உட்புகுத்தலின் எண்ணிக்கை 1 x 108 உயிரணுக்கள் /  மில்லி லிட்டர் அளவு இருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகள் மேற்குறிப்பிட்ட  தழைச்சத்து நிலை நிறுத்துபவைகள், மணிச்சத்து கரைப்பான்கள், சாம்பல் சத்து கரைப்பான்கள்  10 மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 200 மி. லிட்டர் என்ற அளவில் பயிர்களுக்கு  அளிக்கப்படுகிறது. 
         
        உயிர்  உரங்களின் உற்பத்திக்கான உபகரணங்கள் 
         
      உயிர் உரங்களின் உற்பத்தி தொழிற்சாலையில், உபகரணங்கள்  தான் முக்கியமான கட்டமைப்பாகும். மொத்த முதலீட்டில் 70 சதவீதம் உபகரணங்களுக்கு ஒதுக்கப்படும்.  அனைத்து உபகரணங்களின் பயன்பாட்டிற்கு பின் உள்ள அடிப்படையை படித்து விட்டு, சில உபகரணங்களை  மாற்றி அமைக்கலாம். வளர்ச்சி ஊடக அறையில் புற ஊதாக்கதிர் விளக்கு பெருத்தலாம். அழுத்தக்  கொப்பரை, கணப்பு அடுப்பு, அடைகாக்கும் கருவி, மூடியிடும் கருவிகள் முறையான தொழில்நுட்பக்  குறியீடுகளுடன் தயாரிக்கப்பட வேண்டும். உபகரணங்களை சரியாகப் பயன்படுத்தினால் உயிர்  உரங்களின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. 
         
        முக்கியமான  உபகரணங்கள் 
      
        
            | 
            | 
          
            - இதில் 1000 செ. வெப்ப நிலையில் காற்றில்லாத  ஆவியால் பொருள்கள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. 
 
            - அழுத்தக் கொப்பரையின் உள்ளே  15 பி. எஸ். ஐ ஆவி அழுத்தம் இருந்தால் வெப்பநிலை 1210 செல்சியஸ் அளவுக்கு  உயர்த்த வேண்டும். 
 
            - இந்த வெப்பநிலை அனைத்து விதையில்லா உயிரணுக்கள் அழிக்கப்படுவதற்கு  போதுமானது. 
 
            - பொதுவாக அனைத்து வளர்ச்சி இடையீட்டுப் பொருள்கள் இந்த அழுத்தக் கொப்பரையில்  கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
 
            | 
         
       
      
      
        
          அடுக்குப்  பாய்வு அறை 
            அடுக்குப் பாய்வு அறை ஒரே மாதிரியாக காற்றை பரவச் செய்கிறது. தொடர்ச்சியாக காற்றை பரவச் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் படியும் துகள்களை தடுக்க முடியும். காற்று வழியாக மாசுபடுதல் இதன் வழியாக தடுக்கப்படுகிறது. செயற்கை முறை வளர்ப்பு இடமாற்றம் மற்றும் உட்புகுத்தல் இதில் செய்ய முடியும்.  | 
            | 
          பி.  ஓ. டி. அடைகாக்கும் கருவி 
            அடைகாக்கும் கருவி கட்டுப்படுத்தக்கூடிய நிலைகளான  ஒளி, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பல நிலைகளை நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தித்  தருகிறது. கிளப்பி வளர்ச்சியை பல மடங்கு ஆக்குவதும் இந்த கருவியில் செய்ய முடியும்.  | 
            | 
         
       
      சுழல் குலுக்கும்  கருவி 
         
      செயற்கை முறை வளர்ப்பை பலதரப்பட்ட விசைகளில் வட்டமாக  சுழலச் செய்வதற்கு இந்த கருவி பயன்படுகிறது. செயற்கை முறை வளர்ப்புகள் வளர்வதற்கு தேவையான  காற்றோட்டத்தை குலுக்கும் கருவி ஏற்படுத்தித் தருகிறது. இதில் 20 – 50 குடுவைகள் பயன்படுத்த  முடியும். குலுக்கும் கருவியில் அளவை இரண்டடுக்கு கொண்ட வகையாக இருந்தால் அதிகப்படுத்தலாம். 
         
        கணப்பு  அடுப்பு 
         
      அனைத்து கண்ணாடியாலான பொருட்களை கிருமி நீக்கம்  செய்வதற்கு கணப்பு அடுப்பு பயன்படுகிறது. உலர் வெப்பத்தைப் பயன்படுத்தி இந்த கருவியில்  கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக 1800 செல்சியஸ் வெப்பநிலையில்  2 மணி நேரத்திற்கு கண்ணாடிப் பொருட்கள் கிருமி நீக்கம் வெய்யப்படுகிறது. 
         
        கார  அமிலத்தன்மையை அளக்கும் கருவி 
         
      கரைசலின் கார அமிலத் தன்மையை அளப்பதற்கு இது பயன்படுகிறது.  0 – 14 அளவுகோலில் 7 என்ற அளவு நடுநிலைப் புள்ளி, 7 க்கு கீழே இருந்தால் அமிலத் தன்மை  உள்ளதாகவும் 7க்கு மேலே இருந்தால் காரத் தன்மையாகவும் இருக்கும். இந்த அளவுகளை மாற்றி  அமைத்து செயற்கை முறையில் வளர்க்கலாம். 
         
        குளிர்சாதனப்  பெட்டி 
         
      இதனைப் பயன்படுத்தி அனைத்து தாய் வளர்ச்சி அணுக்களை  உயிர் உர உற்பத்திக்காக பதப்படுத்த முடியும். இந்த தாய் வளர்ச்சி அணுக்கள் தொடர்ந்து  இடைவெளி விட்டு மறுபடியும் வளர்க்கப்படுகிறது. பின் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட  காலத்திற்கு சேமித்து வைக்கப்படுகிறது. 
         
        நொதிக்கச்  செய்யும் கருவி 
      
        
            | 
          குறிப்பிட்ட உயிரி வளர்வதற்கு தேவையான சூழ்நிலையை  நொதிக்கச் செய்யும் கருவி ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரு பெரிய கலனில் இந்த உயிரிகள்  வளர்வதற்கு தேவையான வெப்பநிலை கார அமிலத் தன்மை, கரை நிலை ஆக்ஸிஜன் அடர்த்தி மற்றும்  பொருளின் அடர்த்திக்கேற்ப வைக்கப்படுகிறது. பல தோற்றமுடைய நொதிக்கச் செய்யும் கருவிகள்  தேவைக்கேற்ப உள்ளன. ஆவி உற்பத்தி செய்யும் கருவி, கிருமி நீக்கம் செய்யும் பகுதிகள்  மற்றும் குலுக்கி இந்த கருவியில் இருக்கின்றன. செயற்கையாக செய்யக்கூடிய நொதிக்கச்  செய்யும் கருவியில் கார அமிலத்தன்மை சமப்படுத்தும் கருவி, ஆக்ஸிஜன் மட்டம் சமப்படுத்தும்  கருவி, நுரையில்லாமல் செய்யும் கருவி, வெப்பநிலை கட்டுப்படுத்தும் கருவி, மற்றும் பல  பகுதிகள் உள்ளன.  | 
         
       
       
      3. நுண்ணுயிரி  உயிர் உரங்களின் பேரளவு உற்பத்தி: 
      
        
            
            அசோஸ்பைரில்லம் | 
            
            ரைசோபியம் | 
            
            பாஸ்போபாக்டீரியா | 
            
            அஸோடோபாக்டர் | 
         
       
     
      
        உயிர் உரங்கள் என்பது தழைச்சத்து நிலை நிறுத்தக்கூடிய  அல்லது மணிச்சத்து கரைக்கக்கூடிய நுண்ணுயிரிகளை கொண்ட வீரிய மிக்க ஆய்வு வகைகளின்  கடத்தக்கூடிய அடிப்படையிலான தயாரிப்புக்களே உயிர் உரங்கள் என்பதாகும். பொதுவாக உயிர்  உரங்கள் கடத்தும் அடிப்படையிலான உட்புகுத்தலை தயாரித்தலே ஆகும். அங்கக கடத்தும் பொருட்கள்  தான் நுண்ணுயிரி உட்புகுத்துவைகளின் தயாரிப்புகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நுண்ணுயிரி  உயிரணுவை கடத்துபவை மற்றும் இவை உயிரணுக்கள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ உதவியாக இருக்கிறது. 
      
        
          - கடத்தும் அடிப்படையிலான நுண்ணுயிரி உயிர்  உரங்களின் பேரளவு உற்பத்தி மூன்று நிலைகளைக் கொண்டது
 
          - நுண்ணுயிரிகளை வளர்த்தல்
 
          - கடத்தும் பொருள்களை தயாரித்தல்
 
          - கடத்தி மற்றும் வளர்ச்சி பொருளை கலக்குதல்  மற்றும் மூட்டை கட்டுதல்
 
           
         
      நுண்ணுயிரிகளை  வளர்த்தல்: 
        பல நுண்ணுயிரிகள் பயன் தரக் கூடிய உயிர் உரங்களாக  ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசட்டோபாக்டர், பாஸ்போபாக்டீரியா போன்றவை உயிர் உரங்களின்  போரளவு உற்பத்திக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. 
         
        பேரளவு  வளர்ச்சிக்கான ஊடகம் பின் வருமாறு: 
        ரைசோபியம்: 
        புளித்தமாவின் நுரையிலிருந்து எடுக்கப்பட்ட மானிட்டால்  சாறு 
        காங்கோ சிவப்பு நிறமுடைய புளித்தமாவின் நுரையிலிருந்து  எடுக்கப்பட்ட மானிட்டால் அகார் வளர்ச்சி ஊடகம். 
      
        
          
            |              மானிட்டால்   | 
            : | 
            10.0    கிராம்  | 
             
          
            பொட்டாசியம்    ஹைட்ரஜன் பாஸ்பேட்  | 
            : | 
            0.5    கிராம்  | 
             
          
            மெக்னீசியம்    சல்பேட்  | 
            : | 
            0.2    கிராம்  | 
             
          
            சோடியம்    குளோரைடு (உப்பு)  | 
            : | 
            0.1    கிராம்  | 
             
          
            புளித்த    மாவின் நுரைச் சாறு  | 
            : | 
            0.5    கிராம்  | 
             
          
            அகார்    (கூழ் போன்ற பொருள்)  | 
            : | 
            20.0    கிராம்  | 
             
          
            கனிம    நீர் (Distilled Water)  | 
            : | 
            1000.0    மி. லிட்டர் | 
             
           
         
      காங்கோ சிவப்பு பொதுக்கரைசல் (250 மி. கி காங்கோ  சிவப்பை 100 மி. லி தண்ணீரில் கரைக்கவும்) 10 மி. லிட்டரிலிருந்து 1 லிட்டர் அளவு சேர்க்க  வேண்டும். கார அமிலத் தன்மை 6.8 அளவுக்கு சரிசெய்து அகார் பொருளை சேர்ப்பதற்கு முன்  இதைச் சேர்க்க வேண்டும். ரைசோபியம் வளர்ச்சி ஊடகத்தில் வெள்ளை நிறத்தில், ஒளி ஊடுருவும்,  பிரகாசிக்கக்கூடிய, மேலெழும்பிய சிறிய கூட்டமாக உருவாகும். மேலும், ரைசோபியம் இனக்  கூட்டம் வளர்ச்சி ஊடகத்தில் சேர்க்கப்பட்ட காங்கோ சிவப்பு நிறத்தை எடுத்துக் கொள்ளாது.  காங்கோ சிவப்பு நிறத்தை எடுத்துக் கொள்ளும் இனக்கூட்டம் ரைசோபியமாக இருக்காது. ஆனால்  அக்ரோபேக்டீரியம் என்ற மண் நுண்ணுயிரி (ரைசோபியத்துடன் தொடர்புடையது) காங்கோ சிவப்பு  நிறத்தை எடுத்துக் கொள்ளும். 
         
      நைட்ரஜனற்ற  சற்றே திட நிலையில் உள்ள மாலிக் அமில ஊடகத்தின் கலவை: 
      
        
          
            |                                  மாலிக்    அமிலம்              | 
            : | 
            5.0    கிராம் | 
             
          
            | பொட்டாசியம்    ஹைட்ராக்ஸைடு | 
            : | 
            4.0    கிராம் | 
             
          
            | டைபொட்டாசியம்    ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் | 
            : | 
            0.5    கிராம் | 
             
          
            | மெக்னீசியம்    சல்பேட் | 
            : | 
            0.2    கிராம் | 
             
          
            | சோடியம்    குளோரைடு (உப்பு) | 
            : | 
            0.1    கிராம் | 
             
          
            | கால்சியம்    குளோரைடு | 
            : | 
            0.2    கிராம் | 
             
          
            | இரும்பு  - ஈ. டி. டி. ஏ (1.64% டபிள்யூ / திரவம்) | 
            : | 
            4.0    மி. லிட்டர் | 
             
          
            | நுண்ணூட்டக்    கரைசல் | 
              | 
            2.0    மி. லிட்டர் | 
             
          
            | பி.    டி. பி )0.5 % ஆல்கஹால் கரைசல்) | 
            : | 
            2.0    மி. லிட்டர் | 
             
          
            | அகார்    (கூழ் போன்ற பொருள்) | 
            : | 
            1.75    கிராம் | 
             
          
            | கனிம    நீர் (Distilled Water) | 
            : | 
            1000    மி. லிட்டர் | 
             
          
            | கார    அமிலத் தன்மை (PH) | 
            : | 
            6.8 | 
             
          
            | நுண்ணூட்டக்    கரைசல் | 
             
          
            | சோடியம்    மாலிபிடேட் | 
            : | 
            200    மி. கிராம் | 
             
          
            | மேங்கனஸ்    சல்பேட் | 
            : | 
            235    மி. கிராம் | 
             
          
            | போரிக்    அமிலம் | 
            : | 
            280    மி. கிராம் | 
             
          
            | காப்பர்    சல்பேட் | 
            : | 
            8    மி. கிராம் | 
             
          
            | துத்தநாக    சல்பேட் | 
            : | 
            24    மி. கிராம் | 
             
          
            | கனிம    நீர் (Distilled Water) | 
            : | 
            200    மி. லிட்டர் | 
             
           
         
      வாக்ஸ்பேன்  ஊடகம் எண். 77 (நைட்ரஜனற்ற மானிட்டால் அகார் ஊடகம் – அசட்டோபாக்டருக்காக) 
      
        
          
            | மானிட்டால்  | 
            : | 
            10.00    கிராம் | 
             
          
            | கால்சியம்    கார்பனேட் | 
            : | 
            5.0    கிராம் | 
             
          
            | பொட்டாசியம்    ஹைட்ரஜன் பாஸ்பேட் | 
            : | 
            0.5    கிராம் | 
             
          
            | மக்னீசியம்    சல்பேட் | 
            : | 
            0.2    கிராம் | 
             
          
            | சோடியம்    குளோரைடு (உப்பு) | 
            : | 
            0.2    கிராம் | 
             
          
            | பெரிக்    குளோரைடு | 
            : | 
            மிகச்    சிறிய அளவு | 
             
          
            | மங்கனீசு    சல்பேட் | 
            : | 
            மிகச்    சிறிய அளவு | 
             
          
            | நைட்ரஜனற்ற    கழுவப்பட்ட அகார் | 
            : | 
            15.0    கிராம் | 
             
          
            | கார    அமிலத் தன்மை | 
            : | 
            7.0 | 
             
          
            | கனிம    நீர் | 
            : | 
            1000    மி. லிட்டர் | 
             
          
            | பாஸ்போ    பாக்டீரியா பிக்கோவ்ஸ்கயாவின் சாறு | 
             
          
            | குளுக்கோஸ் | 
            : | 
            10.0    கிராம் | 
             
          
            | கால்சியம்    பாஸ்பேட் | 
            : | 
            5.0    கிராம் | 
             
          
            | அம்மோனியம்    சல்பேட் | 
            : | 
            0.5    கிராம் | 
             
          
            | பொட்டாசியம்    குளோரைடு | 
            : | 
            0.2    கிராம் | 
             
          
            | மக்னீசியம்    சல்பேட் | 
            : | 
            மிகச்    சிறிய அளவு | 
             
          
            | பெரஸ்    சல்பேட் | 
            : | 
            மிகச்    சிறிய அளவு | 
             
          
            | புளித்தமாவின்    நுரைச்சாறு | 
            : | 
            0.5    கிராம் | 
             
          
            | கனிம    நீர் | 
            : | 
            1000    மி. லிட்டர் | 
             
           
         
      குடுவையில் இதன் சாறு தயாரிக்கப்படுகிறது. தாய் வளர்ச்சியிலிருந்து  எடுக்கப்பட்ட உட்புகுத்தல் குடுவைகளில் மாற்றப்படுகிறது. இந்த வளர்ச்சியை 30 +/- 20  செல்சியஸ் வெப்ப நிலையில் மூழ்கியிருக்குமாறு வைத்து வளர்க்கவேண்டும். 1010  – 1011 cfu / மில்லி லிட்டர் அளவு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் வரை இந்த வளர்ச்சிக்  கலவையை ஊடகத்தில் வைத்து உற்பத்தி செய்ய வேண்டும். தகுந்த சூழ்நிலையில் இந்த எண்ணிக்கையை  அடையும். ரைசோபியத்துக்கு 4 – 5 நாட்கள், அசோஸ்பைரில்லத்துக்கு 5 – 7 நாட்கள், பாஸ்போபாக்டீரியத்திற்கு  6 – 7 நாட்கள், அசட்டோபாக்டருக்கு 6 – 7 நாட்கள் குடுவையில் கிடைக்கக்கூடிய வளர்ச்சிக்  கலவைக்கு கிளப்பி வளர்ச்சி என்று பெயர். பேரளவு உற்பத்திக்கு கிளப்பி வளர்ச்சியிலிருந்து  காரணிப் பொருளை பெரிய குடுவைகளில் அல்லது விதை கல நொதிப்பவைகளுக்கு மாற்றம் செய்ய  வேண்டும். தேவையான உயிரணுக்களின் எண்ணிக்கையை அடையும் வரை வளர்க்க வேண்டும். 
       
       காரணிப்  பொருள் தயாரிப்பு முறை: 
      
        
          - நுண்ணுயிரி காரணிப் பொருளுக்கான பொருத்தமான  ஊடகத்தை தயாரித்து 250 மி. லி, 500 மி. லி, 3 லி, 5 லி குடுவைகளில் எடுத்து, கிருமி  நீக்கம் செய்ய வேண்டும்
 
          - 250 மி. லி குடுவையில் வளர்ச்சி ஊடகத்தை  வீரியமாக்க நுண்ணுயிரி ஆய்வு வகையை அழுகல் இல்லாத நிலையில் உட்புகுத்த வேண்டும்
 
          - குடுவையை சுழல் கலக்கியில் 5 – 7 நாட்கள்  வரை அறை வெப்ப நிலைக்கு வைக்க வேண்டும்
 
          - குடுவையில் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.  வளர்ச்சி எண்ணிக்கையை அளவிட வேண்டும்
 
          - கிளப்பி வளர்ச்சியை பயன்படுத்தி, பெரிய  குடுவைகளில் (500 மி. லி, 3 லி, 5 லி) ஊடகத்தை மாற்ற வேண்டும்
 
          - நொதிக்கும் கருவியில் அதிகளவு ஊடகத்தை  வைத்து, கிருமி நீக்கம் செய்து, குளிர வைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்
 
          - நொதிக்கும் கருவியில் உள்ள ஊடகத்தை  அடுக்கேற்ற பருவத்துடன் 5 லிட்டர் குடுவையில் உட்புகுத்த வேண்டும். பொதுவாக 1 – 2  % காரணிப் பொருள் போதுமானது. இருந்தாலும் 5 சதவீதம் வரை பெரிய குடுவையில் உள்ள வளர்ச்சியைப்  பொறுத்து உட்புகுத்தலாம்
 
          - நொதிக்கும் கருவியில் வளர்க்கப்பட்ட  உயிரணுக்கள் காற்றோட்டத்துடன் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்க வேண்டும் (கிருமி  நீக்கம் செய்யப்பட்ட காற்றை அழுத்தக் கருவியாக செலுத்துதல் மற்றும் கண்ணாடி நூல், பருத்தி  நூல், அமிலம் கொண்டு கிருமி நீக்கம் செய்தல்)
 
          - உட்புகுத்திய உயிரிகளின் எண்ணிக்கையையும்,  வளர்ச்சியின் போது ஏதும் மாசுபடுதல் இருக்கிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்
 
          - அடைகாக்கும் காலம் முடிந்த பின்னர் உயிரணுக்களின்  எண்ணிக்கை 109 உயிரணுக்கள் / மீட்டர் அளவு ஆன பின்னர் அறுவடை செய்ய வேண்டும்
 
          - எந்த விதமான பூஞ்சான் அல்லது நுண்ணுயிரி  மாசுபடுதல் 10 – 6 கரைசல் அளவில் இருக்கக்கூடாது
 
          - 24 மணி நேரத்திற்கு பிறகு நொதிக்கச்  செய்த சாற்றை சேமித்து வைக்கக்கூடாது. 40 செல்சியஸ் வெப்ப நிலையில் கூட  எண்ணிக்கை வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்
 
           
         
      கடத்தும்  பொருள் செய்முறை: 
         
      நல்ல தரமான உயிர் உரத்தை உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான  கடத்தும் பொருளை பயன்படுத்துவது மிக முக்கியமானது. இலைமக்கு மண், நிலக்கரி, வெர்மிகுலைட்,  கட்டைக்கரி, சர்க்கரை ஆலைக் கழிவு, பண்ணை எரு மற்றும் மண் கலவை கடத்தும் பொருள்களாக  பயன்படுத்தப்படுகிறது. நடுநிலையான இலைமக்கு மண் / நிலக்கரி உயிர் உரங்களின் உற்பத்திக்கு  தகுந்த கடத்தும் பொருளாகும். கடத்தும் பொருளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகள் பின்வருமாறு: 
      
        
          
            - விலை குறைவான கடத்தும் பொருட்கள்
 
            - எளிதாகக் கிடைக்கக்கூடியது
 
            - அதிக அங்கக பொருள்
 
            - வேதி நச்சுப் பொருள்கள் இல்லை
 
            - 50 சதவீதத்துக்கும் மேலான நீர் கொள்ளும்  திறன் 
 
          
              - தயாரிப்பது எளிது, பொற பொறப்பாகி,  புண்ணாற்றும்மையுடன் இருக்கும்
 
              - கடத்தும் பொருளை (இலை மக்கு அல்லது  நிலக்கரி) 212 மைக்ரான் சல்லடை வழியே போகுமாறு பொடி செய்ய வேண்டும்
 
              - கடத்தும் பொருளின் கார அமிலத் தன்மையை  கால்சியம் கார்பனேட்டுடன் (1:10 விகிதத்தில்) நடுநிலைப் படுத்த வேண்டும்.
 
              | 
            | 
           
       
      வேர்சூழ் பூசண உயிர் உரத்தின் பேரளவு  உற்பத்தி 
      
        
          கட்டாய  அல்லது நிலைமாறா இணைவாழ் தன்மை மற்றும் ஆய்வகங்களில் வேர்சூழ் பூசணத்தை வளர்க்க முடியாததாலும்,  வேர்சூழ் பூசணத்தின் வர்த்தக பயன்பாடு கடினமாக உள்ளது. கிருமிநீக்கம் செய்யப்பட்ட வளர்ப்பு  ஊடகத்தில் ஓம்புயிரியின் மீது வளர்ந்த வேர்சூழ் பூசணத்தின் வித்துக்களின் மேற்பரப்பிலிருந்து  பெறப்பட்ட பானை வளர்ப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட மண்ணிலிருந்து வேர்சூழ் பூசண  காரணிப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட பலதரப்பட்ட  உற்பத்தி மண்அடிப்படையிலான வளர்ப்பு மற்றும் கடத்தும் பொருள் அடிப்படையிலான காரணிப்பொருளாக  பெறப்பட்டது. வேர் உறுப்பு வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து மெல்லிய படல தொழில்நுட்பம்  ஆகியவற்றால் மண்ணில்லாத வளர்ப்பு உற்பத்திக்கான நோக்கத்தை நமக்குத் தருகிறது. கடத்தும்  அடிப்படையிலான காரணிப் பொருளில், பானை வளர்ப்பு உற்பத்தி பரவலாக செயல்படுத்தப்படும்  முறையாகும், வேர்சூழ் பூசண காரணிப்பொருள் கிருமிநீக்கம் செய்யப்பட்ட மண்ணை பயன்படுத்தி  தயாரிக்கப்படுகிறது. பல தரப்பட்ட ஓம்புயிரி பயிர்கள் ஓம்புயிரிகளாகப் பயன்படுத்தி வேர்சூழ்  பூசண காரணிப் பொருள் தயாரிக்கப்படுகிறது. கிருமிநீக்கம் செய்யும் முறை சிக்கலான ஒன்று  மற்றும் விஞ்ஞானிகள் செயலற்ற பொருள்களைப் பயன்படுத்தி வேர்சூழ் பூசண உற்பத்தி செய்ய  ஆரம்பித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் பெர்லைட், மான்ட்மோரிலைட் களிமண் ஆகியவற்றை  பயன்படுத்தி முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில்,  வெர்மிகுலைட்   மண் கிருமி நீக்கம் செய்யப்படுவதற்கு மாற்றான பொருளாக பயன்படுத்த முயற்சி செய்துக்  கொண்டிருக்கிறார்கள். வெர்மிகுலைட் காரணிப் பொருள் உற்பத்தியில் நல்ல விளைவைத் தருவதால்  இதைப் பயன்படுத்த முயற்சி பண்ணுகிறார்கள்.  | 
            | 
         
       
      
      தயாரிக்கும்  முறை 
      
        
            1. வேர்சூழ்  பூசண பேரளவு உற்பத்திக்கான தொட்டி | 
           
             தொட்டியில் வெர்மிகுலைட்டுடன் தண்ணீர் தெளித்தல்  | 
           
             மக்காச்சோள விதைகளை விதைப்பதற்கு உழுசால் தோண்டுதல்  | 
         
        
           
             விதைகளை  உழுசாலில் விதைத்தல்  | 
           
             மக்காசோள  விதைகளை வேர்சூழ் பூசண குழியில் விதைக்கப்பட்ட காட்சி | 
            
            வெர்மிகுலைட்  சேர்க்கப்பட்டு வளர்த்தி வேர்சூழ் பூசண மக்காசோள பயிர்கள் | 
         
         
         
        1  மீ  x    1மீ x   0.3 அளவுள்ள குழி தோண்ட வேண்டும்,  அதில் கருப்பு நிற பாலித்தீன் விரிப்பை சுற்றி பயிர் வளரக்கூடிய தொட்டியாக செய்ய வேண்டும். 
        50  கிலோ வெர்மிகுலைட் மற்றும் 5 கிலோ கிருமி நீக்கம் செய்த மண் சேர்த்து கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை குழியில் 20 செ.மீ. உயரத்துக்கு நிரப்ப வேண்டும். 
        1  கிலோ வேர்கீழ் பூசண காரணிப் பொருள் 2.5 செ.மீ.        மக்காச்சோள  விதைகளின் மேற்பரப்பை 5 சதவீத சோடியம் ஹைட்ரோ குளோரைட்டைக் கொண்டு 2 நிமிடங்களுக்கு  கிருமி நீக்கம் செய்து, பின் விதைக்க வேண்டும்.
        2  கிராம் யூரியா, 2 கிராம் சூப்பர் பாஸ்பேட், 1 கிராம் முரேட் ஆப் பொட்டாஷ் ஒவ்வொரு  குழியிலும் விதைக்கும் சமயத்தில் அளிக்கவேண்டும். மேலும், 10 கிராம் யூரியா விதைத்து  30 மற்றும் 45 நாள் கழித்து 2 முறை ஒவ்வொரு குழியிலும் போட வேண்டும் 
      
        
          - வேர்சூழ பூசண தொகுதிக்கான தரப்       பரிசோதனை வேர் மாதிரிகளில் 30 மற்றும் 45வது நாள் செய்ய வேண்டும். 
 
          - கையிருப்பு பயிர்கள் 60 நாட்களுக்கு       வளர்க்கவேண்டும் (அதாவது 8 வாரங்கள்), காரணிப் பொருள் கையிருப்பு பயிர்களின்       அனைத்து வேர்த்துண்டுகளிலிருந்து பெறப்படுகின்றது. உற்பத்தி செய்யப்பட்ட காரணிப்       பொருள், வெர்மிகுலைட், வித்துக்கள், பூசண இழைத் துண்டுகள், பூசணத்தால் தாக்கப்பட்ட       வேர்த்துண்டுகளின் கலவையாகும்.
 
          - 1 சதுர அடி பகுதியிலிரந்து 55 கிலோ       வேர்சூழ் பூசண காரணிப் பொருள் 60 நாட்களுக்குள் உற்பத்தி செய்யமுடியும். இந்த       காரணிப் பொருள் 11,000 நாற்றுக்களைக் கொண்ட 550 மீ2 நாற்றங்கால்       பகுதிக்கு போதுமானது
 
           
         
      வேர்சூழ் பூசணம் 
        
        நாற்றங்கால் அளிப்புமுறை:  100 கிராம் காரணிப்பொருள் மீ2அளவு நாற்றாங்காலுக்குப் போதுமானது. விதைக்கும்  சமயத்தில், காரணிப் பொருளை 2.3 செ.மீ. அளவு மண்ணிற்கு கீழே அளிக்க வேண்டும், விதைகள்  துண்டுகள் வி.ஏ.எம். (NAM) காரணிப் பொருளுக்கு மேலே விதைக்கவேண்டும். 
         
       பாலித்தீன்  பையில் வளர்க்கப்பட்ட பயிர்களுக்கு் 5 முதல் 10 கிராம் மொத்த காரணிப்பொருள் ஒரு பொதிக்குப்போதுமானது.  10 கிலோ அளவு காரணிப்பொருள் 1000 கிலோ மண்ணுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை பாலித்தீன்  பைகளில் விதைப்பதற்கு முன் வைக்க வேண்டும் 
          
       வெளி  வளர்ப்புக்காக: 20 கிராம் வி.ஏ.எம். (VAM) காரணிப்பொருள் ஒரு நாற்றுக்குப் போதுமானது.  பயிரிடும் சமயத்தில் காரணிப்பொருளை இடவேண்டும். 
          
       ஏற்கனவே  உள்ள மரங்களுக்கு: 200 கிராம் வி.ஏ.எம்.(VAM) காரணிப்பொருள் ஒரு மரத்திற்கு போதுமானது.  உரங்களை இடும் சமயத்தில் வேர் பரப்பிற்கு  அருகில்  காரணிப் பொருளை இடவேண்டும். 
          
         சைனோபாக்டீரியாவின் பேரளவு உற்பத்தி  மற்றும் வயல் அளிப்பு 
        
         
              நீலப்பச்சைப்  பாசி காரணிப்பொருள் பல சேர்ந்தமைந்த வளர்ப்புகளுடன் இருப்பது அதிக விளைவுகளைத் தருகிறது.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட பல சேர்ந்தமைந்த வளர்ப்பு நீலப்  பச்சைப் பாசியினுடைய பேரளவு உற்பத்திக்கான தொழில்நட்பம் மற்றும் மண் சார்ந்த நீலப்பச்சைப்  பாசி காரணிப்பொருள் 2 வருடங்களுக்கு எங்கெல்லாம் பாசி காரணிப்பொருள் நன்றாக வளர்ச்சி  அடைந்துள்ளது. மற்றும் அடுத்த பருவ நெல் பயிரின் மேலேயும் விளைவை ஏற்படுத்தும். நஞ்சை  நிலத்தில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் உயிரிகளுக்கான தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டின்  நெல் விளையும் நிலங்களில் நீலப்பச்சைப்பாசி காரணிப்பொருளின் உட்புகுத்தலுக்குப்பயனுள்ளதாக  இருக்கிறது. 
        நீலப்  பச்சை பாசி காரணிப்பொருள் பல முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. முறையே தொட்டிகள்,  தட்டுக்கள், சிறிய குழிகள் மற்றும் வயல் நிலைகளில் கூட உற்பத்தி செய்யப்படுகிறது இருந்தாலும்,  பெரிய அளவில் உற்பத்தி செய்வது தான் விவசாயிகளால் எளிதாக செயல்படுத்தக்கூடிய வயல் நிலைகளுக்கு  தகுந்தது. 
         
        தட்டுக்களில் பெருக்கம் 
      
        
          - பெரிய உலோகத்தலான தட்டுக்கள்       ( 6’ x  3’ x  6’ நீளம், அகலம், உயரம்) சிறிய அளவு உற்பத்திக்கு       பயன்படுத்தப்படுகிறது.
 
          - 10 கிலோ நெல் வயல் மண் எடுத்து,       உலர வைத்து, பொடி செய்து பரப்பவும்
 
          - 3” அளவு உயரத்தறிகு நீரை நிரப்பவும்
 
          - 250 கிராம் உலர் பாசி கட்டிகள்       ( மண் சார்ந்த) காரணிப் பொருளாக சேர்க்கவும்
 
          - 150 கிராம் சூப்பர்பாஸ்பேட் மற்றும்       30 கிராம் சுண்ணாம்புடன் சேர்த்து, மண்ணுடன்        நன்றாகக் கலக்கவும்
 
          - 25 கிராம் கார்போப்யூரான் பூச்சிகளைக்       கட்டுப்படுத்துவதற்கு தெளிக்க வேண்டும்
 
          - தட்டுக்களில் நீரின் அளவை பராமரிக்கவும்
 
          - 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு,       நீலப்பச்சைப்பாசி முளைத்து, நீரின் மேலே மிதக்கும், 
 
          - இந்த சமயத்தில், நீர்ப்பாய்ச்சுதலை       நிறுத்தி, நீரை வடிக்க வேண்டும். மண் முழுவதும் உலர விடவும்
 
          - உலர் மண் சார்ந்த காரணிப்பொருளை       கட்டிகளாக சேகரிக்க வேண்டும்
 
          - உலர்நிலையில் சேமிக்க வேண்டும்.       இந்த முறையால், 5 முதல் 7 கிலோ மண்சார்ந்த காரணிப்பொருளைப் பெற முடியும்
 
           
         
      வயல் நிலைகளில் பெருக்கம் 
        தேவையான பொருட்கள் 
      
        
          - நெல் வயல்
 
          - சூப்பர் பாஸ்பேட்
 
          - கார்போப்யூரான்
 
          - பல சேர்ந்தமைந்த நீலப்பச்சைப் பாசி       கிளப்பி வளர்ப்பு
 
           
         
      செய்முறை 
         
      40  மீ2 நிலப்பகுதியை தண்ணீருக்கு அருகில், சூரிய ஒளி படும் இடத்தில் இருக்குமாறு  தேர்ந்தெடுக்க வேண்டும். நிலத்தைச் சுற்றி 15 செ.மீ. உயரத்திற்கு வரப்பு உருவாக்கி  அதன்மீது சேறு பூசுவும். இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம். 
        நிலத்தை  தயார் செய்து, சமநிலைப்படுத்தவும். நீர் 5-7.5 செ.மீ. ஆழத்திற்கு இருக்குமாறு செய்யவம்.  அதை அப்படியே 12 மணி நேரத்திற்கு விட்டுவிடவும்.
        2  கிலோ சூப்பர் பாஸ்பேட், 200 கிராம் சுண்ணாம்பு ஒவ்வொரு பகுதி நிலத்திலும் இடவேண்டும். 
        மண்  சார்ந்த பலகூட்டமைப்பான கிளப்பி வளர்ப்பான நீலப்பச்சைப் பாசியை (8-10 துண்டுகள் இருக்குமாறு)  ஒரு பகுதி நிலத்திற்கு 5 கிலோ என்ற அளவில் பொடி செய்து தூவவும்.
        கார்போப்யூரான்  200 கிராம் பூச்சிகளைக் கட்டுபடுத்துவதற்காக இடவேண்டும். 
        நீரை  இடைவெளி விட்டு பாய்ச்ச வேண்டும். இதனால் நீர்மட்டம் 5 செ.மீ. அளவுக்கு இருக்குமாறு  வைத்துக் கொள்ள முடியும்.
        காரணிப்  பொருளை உட்புகுத்திய 15 நாட்களுக்குப் பிறகு, இந்தப் பகுதியை சூரிய ஒளியில் காயவிடவும்,  பாசிக்கட்டிகளை ஒன்று சேர்த்து, சேமிக்கவும். 
         
        காட்சியளவீடு 
         
      மிதிக்கக்கூடிய  பாசிக்கட்டிகள் பச்சை அல்லது நீலப்பச்சை நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு அறுவடையிலிருந்தும்,  30 முதல் 40 கிலோ உலர் பாசிக் கட்டிகளைப்பெறலாம். 
         
        நெல் வயலில் நீலப்பச்சைப் பாசி  உட்புகுத்தல் முறை 
         
      நீலப்பச்சைப்  பாசி மண்சார்ந்த காரணிப் பொருளாக நெல் வயலில் பின்வரும் முறைியல் அளிக்கப்படுகிறது. 
        மண்சார்ந்த  பாசிக்கட்டிகளை பொடி செய்யவும்.
        10  கிலோ மண் அல்லது மணலுடன் கலக்கவும். 
        10  கிலோ பாசிக்கட்டிகளுடன் 10 கிலோ மண் மணல் 
        நெல்  நடவுக்குப்பின் 7 முதல் 10 நாட்களில் நீலப்பச்சைப் பாசியை உட்புகுத்த வேண்டும். 
        நீலப்பச்சைபாசி  உட்புகுத்தலின் போது, நீர்மட்டம் 3-4 அளவ இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இது  மாதிரி ஒருமாதத்திற்கு, நீலப்பச்சைப் பாசி வளரும் வரை வைக்கவும். 
         
        காட்சியளவீடு 
         
      நீலப்பச்சைப்  பாசி உட்புகுத்தி ஒரு வாரத்திற்கு பிறகு, பாசி வளர்ச்சியைப் பார்க்கலாம். 2-3 வாரம்  கழித்து பாசி மிதப்பதைக் காணலாம். இந்த பாசி படலம் பச்சை அல்லது பழுப்பு அல்லது மஞ்சள்  கலந்த பச்சையாக இருக்கும். 
         
        அசோலாவின் பேரளவு உற்பத்தி மற்றும்  வயல் அளிப்பு 
         
      அசோலா  ஒரு நீரில் மிதக்கக்கூடிய நீர்ப்பெரணி இது நீரில் மிதந்து, காற்றில் உள்ள நைட்ரஜனை  தழைச்சத்தை நிலை நிறுத்தக்கூடிய நீலப்பச்சைப் பாசி அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைநிறுத்துகிறது.  அசோலா ஒலைகள் மிதக்கும் ஸ்போரோபைட் மற்றும் சிறிய ஒன்றின் மேலு் ஒன்றாக உள்ள இரண்டு  பிளவுபட்ட இலைகள், வேர்களைக் கொண்டது. கிழக்கிந்திய ஆசிய நாடுகள் மற்றும் இதர மூன்றாவது  உலக நாடுகளின் நெல் விளையும் பகுதியில் இணைவாழ்தன்மையுடன் தழைச்சத்தை நிலைநிறுத்தக்கூடிய  நீர்ப்பெரணியை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. 
      அசோலா நன்செய் நிலத்தில்  பயன்படுத்தப்படும் ஒரு உயிர் உரமாகும். நெல் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 40 – 60 கிலோ  தழைச்சத்தை தருகிறது. நெல் பயிரில் அசோலாவின் பயன்பாடு முக்கிமானது மற்றும் நெல் விளைச்சலை  அதிகப்படுத்துவதற்கு உயிர் உரமாக பரலவாகப் பயன்படுத்தப்படுகிறது. சைனா, வியட்நாம் நாடுகளில்  நெல் பயிரில் அசோலா பயன்பாடு பற்றிய ஆராய்ச்சிகள் நல்ல விளைவை ஏற்படுத்தி உள்ளன. அசோலா  மண்ணுடன் பசுந்தாள் உர பயிராக பரவச் செய்வது நெல்லுக்கு தேவையான தழைச்சத்தை தருகின்ற  ஒரு மூலமாக விளங்குகிறது. 
        பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,  ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் அசோலா நஞ்சை நில் நெல் பயிருடன் இரு பயிராக வளர்ப்பதில்  நல்ல விளைவைத் தருகிறது. அசோலா எளிதாக மண்ணில் சிதைவுறுவதாலும், நெல்லுக்குத் தேவையான  தழைச்சத்தை அளிப்பதால் நெற்பயிருக்கு தகுந்த உயிர் உரமாக அசோலா இருக்கிறது. மிகக்  குறுகிய காலத்தில் அசோலா சிதைவுற்று தழைச்சத்தை நெற்பயிருக்கு அளிக்கிறது. அசோலாவின்  பொதுவான வகைகள்: அ. மைக்ரோபில்லா, அ. பிலிக்குலாய்டிஸ், அ. பின்னேட்டா, அ. கரோலினியா,  அ. நிலோடிகா, அ. ரூப்ரா, அ. மெக்ஸிகானா. 
         
        வயல்  வெளி நிலைகளில் அசோலாவின் பேரளவு உற்பத்தி: 
        அசோலாவின் எளிய நாற்றங்கால்  வளர்ப்பு முறை பேரளவு உற்பத்திக்காக விவசாயிகளால் எளிதாக பின்பற்றப்படுகிறது. 
         
        தேவையான  பொருட்கள்: 
      
        
          - ஒரு செண்ட் நிலம் (40 சதுர மீட்டர்)
 
          - மாட்டுச் சாணம்
 
          - சூப்பர் பாஸ்பேட்
 
          - ப்யூராடன்
 
          - புதிய அசோலா காரணிப் பொருள்
 
           
         
      செயல்முறை: 
      
        
          - நஞ்சை நிலத்தை தேர்ந்தெடுத்து சரிசமமாக  தயார் செய்ய வேண்டும்
 
          - ஒரு செண்ட் பகுதிகளாக (20 x 2 மீட்டர்)  வரப்பு மற்றும் நீர்ப்பாசன கால்வாய்களுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்
 
          - 10 செ.மீ அளவு உயரத்திற்கு நீர் இருக்குமாறு  வைக்க வேண்டும்
 
          - 10 கிலோ மாட்டு சாணத்தை 20 லிட்டர்  தண்ணீரில் கலக்கி வயலில் தெளிக்க வேண்டும்
 
          - 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் அடி உரமாக  இட வேண்டும்
 
          - புத்தம்புதிய அசோலா உயிர்ப்பொருளை  ஒரு பகுதிக்கு 8 கிலோ என்ற விகிதத்தில் உட்புகுத்த வேண்டும்
 
          - 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மேல் உரமாக  அசோலாவை உட்புகுத்திய 4 மற்றும் 8 வது நாளுக்குப் பிறகு இட வேண்டும்
 
          - கார்போப்புயூரான் துகள்கள் ஒரு பகுதிக்கு  100 கிராம் என்ற அளவில் அசோலா உட்செலுத்திய 7 வது நாளுக்குப் பிறகு இடவேண்டும்
 
          - 10 செ. மீ உயரத்திற்கு நீர் அளவை 2 அல்லது  3 வாரத்திற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
 
          - காட்சியளவீடு
 
          - நிலத்தில் அசோலா இழைகள் மிதப்பதைக்  காணலாம். அசோலாவை அறுவடை செய்து, நிரை வடித்துவிட்டு, உயிர்ப் பொருளின் அளவை பதிவு  செய்ய வேண்டும்
 
           
         
       
      உயிர்  உரங்களின் அளிப்பு முறைகள்: 
        1. விதை நேர்த்தி அல்லது விதை நோய் தடுப்பு 
        2. நாற்றுக்களின் வேர் குளியல் 
        3. நடவு வயல் அளிப்பு 
         
        விதை  நேர்த்தி: 
         
      200 மி. லி. அரிசி கஞ்சியுடன் ஒரு பொட்டலம் நோய்  தடுப்பு காரணிப் பொருளை சேர்த்து கலவையாக செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான  விதைகளை இந்த கலவையில் சேர்த்து, விதைகள் முழுவதும் ஒரே மாதிரியாக பூச்சு வருமாறு செய்ய  வேண்டும். பின் 30 நிமிடங்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். 24 மணி நேரத்திற்குள்  உலர்த்திய விதைகளை விதைக்க வேண்டும். 10 கிலோ விதைக்கு ஒரு பொட்டலம் (250 கிராம்)  நோய் தடுப்பு காரணிப் பொருள் போதுமானது. 
         
        நாற்றுக்கள்  வேர் குளியல்: 
         
      இந்த முறை நடவு நட்ட பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  2 பொட்டலம் நோய் தடுப்பு காரணிப் பொருளை 40 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். நாற்றுக்களின்  வேர்ப்பகுதியை இந்த கரைசலில் 5 – 10 நிமிடத்திற்கு மூழ்க வைத்து பின் நடவு செய்ய வேண்டும். 
         
        நடவு  வயல் அளிப்பு: 
         
      4 பொட்டலம் நோய் தடுப்பு காரணிப் பொருளை 20 கிலோ  உலர்ந்த, பொடி செய்த பண்ணை எருவுடன் சேர்த்து கலக்கி, பின் நடவு நடுவதற்கு முன் நடவு  வயலில் தூவ வேண்டும். 
         
        ரைசோபியம்: 
         
      அனைத்துவகை பயிறு வகைகளுக்கும் ரைசோபியம் விதை நோய்  தடுப்பு காரணிப் பொருளாக பயன்படுத்தலாம். 
         
        அசோஸ்பைரில்லம்  / அசட்டோபாக்டர்: 
         
      நடவு நட்ட பயிர்களில் அசோஸ்பைரில்லம் விதை, நாற்றுக்களின்  வேர்க்குளியல், மண் அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம். நேரடியாக விதைக்கும் பயிர்களில்  அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி மற்றும் மண் அளிப்பு முறை வழியே அளிக்கப்படுகிறது. 
         
        பாஸ்போபாக்டீரியா: 
      
        
          - விதை, நாற்றுக்களின் வேர் குளியல், மண்  அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம்
 
          - நுண்ணுயிரி உயிர் உரங்களை கலந்து அளித்தல்
 
          - பாஸ்போபாக்டீரியாவை அசோஸ்பைரில்லம்  மற்றும் ரைசோபியத்துடன் கலக்கலாம். நோய் தடுப்பு காரணிப் பொருள் சரி அளவில் கலந்து  மேற்குறிப்பிட்ட முறைகள் மூலமாக பயிர்களுக்கு அளிக்கலாம்
 
           
         
      நினைவில்  கொள்பவை: 
      
        
          - நுண்ணுயிரி நோய் தடுப்பு காரணிப் பொருள்களை  பூச்சிக்கொல்லி, பூஞ்சான் கொல்லி, களைக் கொல்லி, உரங்களுடன் கலக்கக் கூடாது
 
          - பூஞ்சான் கொல்லியுடன் விதை நேர்த்தி  செய்த பின்னர் தான் நுண்ணுயிரி நோய் தடுப்பு காரணிப் பொருளுடன் விதை நேர்த்தி செய்ய  வேண்டும்
 
           
         
      உயிர்  உரங்களின் பரிந்துரை (ஒரு பொட்டலம் – 200 கிராம்): 
      
        
          
            | பயிர்கள் | 
            விதை | 
            நாற்றங்கால் | 
            நாற்றுக்    குளியல் | 
            நடவு    வயல் | 
            ஒரு    எக்டருக்கு தேவையான மொத்த பொட்டலங்கள் | 
             
          
            | நெல் | 
            5 | 
            10 | 
            5 | 
            10 | 
            30 | 
             
          
            | சோளம் | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | கம்பு | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | ராகி | 
            3 | 
            - | 
            5 | 
            10 | 
            18 | 
             
          
            | மக்காச்சோளம் | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | பருத்தி | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | சூரியகாந்தி | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | ஆமணக்கு | 
            3 | 
            - | 
            - | 
            10 | 
            13 | 
             
          
            | கரும்பு | 
            10 | 
            - | 
            - | 
            36
              (3பகுதிகள்) | 
            46 | 
             
          
            | மஞ்சள் | 
            - | 
            - | 
            - | 
            24    (2 பகுதிகள்) | 
            24 | 
             
          
            | புகையிலை | 
            1 | 
            3 | 
            - | 
            10    கிராம் / குழி | 
            14 | 
             
          
            | பப்பாளி | 
            1 | 
            3 | 
            - | 
            10 | 
            - | 
             
          
            | ஆரஞ்சு | 
            2 | 
            - | 
            - | 
            10    கிராம் / குழி | 
            - | 
             
          
            | தக்காளி | 
            1 | 
            - | 
            - | 
            10 | 
            14 | 
             
          
            | வாழை | 
            - | 
            - | 
            5 | 
            10    கிராம் / குழி | 
            - | 
             
           
         
      ரைசோபியம்  (விதை அளிப்பு மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது): 
      
        
          
            | பயிர்கள் | 
            ஒரு    எக்டருக்கு தேவைப்படும் மொத்த பொட்டலங்கள் | 
             
          
            | சோயாபீன்  | 
            5 | 
             
          
            | நிலக்கடலை | 
            5 | 
             
          
            | கொண்டைக்கடலை | 
            5 | 
             
          
            | உளுந்து | 
            3 | 
             
          
            | பாசிப்பயிறு | 
            3 | 
             
          
            | துவரை | 
            3 | 
             
          
            | காராமணி | 
            3 | 
             
           
         
      பாஸ்போபாக்டீரியா: 
         
      அசோஸ்பைரில்லத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவே பாஸ்போபாக்டீரியா  நோய் தடுப்பு காரணிப் பொருள் உட்புகுத்தலிலும் பயன்படுத்தப்படுகிறது. கலவையான உட்புகுத்தலுக்கு,  இரண்டு உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்கு முன் கலக்க வேண்டும். 
         
        முன்னுரை 
       
      அசோலா நீரில்  மிதக்கக்கூடிய பெரணி (Water Fern) வகையினைச் சார்ந்த் தாவரம். இதை விவசாயிகள் உயிர்  உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை  மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு  வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள்,  வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகரோட்டின் நிறமியானது  வைட்டமின் A உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் நோய் எதிர்ப்புச்  சக்தி கோழிகளுக்கு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை  நாம் உண்பதால் கண்பார்வைக்கு நல்லது. 
      நெல்லைப் பொறுத்தவரை,  அசோலா ஒரு பயனுள்ள உயிர் உரமாகக் கருதப்படுகிறது. பசுந்தாள் உரமாகப் பயன்படுத்துவதற்கு  முன், அசோலா, பன்றிகள் மற்றும் வாத்துக்கள் போன்ற வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளுக்கு  தீவனமாகப் பயன்படுத்தப்பட்டது. அண்மைக் காலங்களில் அசோலா கால்நடைகளுக்கு, முக்கியமாக  கறவை மாடுகள், கோழிப்பண்ணைகள், பன்றி பண்ணைகள், மீன்களுக்கு முக்கியமான மாற்று தீவனமாகப்  பயன்படுத்தப்படுகிறது. அதிக ஊட்டச்சத்து மதிப்புடைய, அதிவேகமாக உயிர் பொருளை உற்பத்தி  செய்யும் கலவை கொண்ட அசோலா பயன்படக்கூடிய மாற்று தீவனமாக கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 
         
       
      எளிய முறை அசோலா உற்பத்தி  
        
      தேவையான  பொருட்கள்: 
        அசோலா இழைகள், பாலீத்தீன்  விரிப்பு, சூப்பர் பாஸ்பேட் மற்றும் மாட்டுச் சானம். 
         
        செய்முறை: 
         
      அசோலா நீரில் மிதக்கக்கூடிய  ஒரு நீர்ப் பெரணியாகும். அனபீனா அசோலா என்ற நீலப்பச்சை பாசியுடன் இணைந்து தழைச்சத்தை  நிலை நிறுத்துகிறது.  
        நிழற்பாங்கான  இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின்  அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலித்தின் காகிதத்தின் மேல்  2 செ.மீ அளவிற்க மண் இட்டு சமன் செய்யவும். இதன் மேல் 2 செ.மீ அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.  பின் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து  இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும். தினமும்  காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள்  தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாட்களில் ஒரு பாத்தியில்  (10X2X1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை  பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு 1 முறை 5 கிலோ  பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித் தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர்  தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது  குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகளில்  அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த  சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம். 
         
      அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ  கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப்  பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்குத் தயக்கம் (Feed Shyness) காட்டலாம்.  ஆகையால் ஆரம்ப கட்டத்தில் அசோலாவைத் தவிடு அல்லது புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன்  கலந்து தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். 
      
        
          
            | கால்நடை    ஒன்றிற்கு | 
            அசோலாவின்    அளவு               (நாள்    ஒன்றிற்கு) | 
             
          
            | பால்மாடு, உழவு மாடு | 
            1-1.5 கிலோ | 
             
          
            முட்டை     மற்றும்  
              இறைச்சி கோழி, 
              வான்கோழி | 
            20-30 கிராம் | 
             
          
            | ஆடு | 
            300-500 கிராம் | 
             
          
            | வெண்பன்றி | 
            1.5-2.0 கிலோ | 
             
          
            | முயல் | 
            100 கிராம் | 
             
           
         
      அசோலா தீவனத்தால்  முட்டைக் கோழிகளில் முட்டை விளைச்சல் அதிகமாகின்றது. அசோலா உணவிட்ட பறவைகள் 89 சதவீத  முட்டை உற்பத்தியை தருகிறது. இதுவே அடர் தீவனமிட்ட பறவைகளில் 83. 7 சதவீத முட்டை உற்பத்தியே  வருகிறது. அசோலா தீவனம் (122.0 கிராம்) தருவதால், அடர்தீவனம் எடுத்துக் கொள்ளும்  அளவு (106.0 கிராம்) செலவு குறைகிறது. முக்கியமாக அசோலா தீவனமிடுவதால் அடர்தீவனத்தின்  விலை ஒரு கிலோவுக்கு 17 ரூபாய், ஊட்டமளிப்பதில் 13 சதவீதம் சேமிக்கப்படுவதால், ஊட்டச்  செலவு ஒரு நாளைக்கு ஒரு பறவைக்கு 10 பைசா என்ற அளவு குறையும். இதனால் 10000 முட்டைக்கோழிக்கான  தீவனச் செலவு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என்ற அளவு குறையும். 
                  அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால்  பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.  பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின்  (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது. மேலும் அசோலாவை வான்கோழி, மீன் மற்றும் முயல்களுக்கும்  அளிக்கலாம். 
         
      அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து  கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாக வழங்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் உடல் எடையில்  முன்னேற்றம் காணலாம். மேலும் கோழி வளர்ப்பில் இடையூறாக விளங்கும் இராணிகெட் நோயினை  ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். 
         
        இதர  பலன்கள் 
         
      அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின்  எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட  கோழியின் முட்டையின் சத்து அளவை விட அதிகமாக உள்ளது. 
        அசோலாவினால்  முட்டையின் சத்துப்பொருட்களில் ஏற்படும் முன்னேற்றம் 
      
        
          
                          சத்துப்பொருள்              | 
            அசோலா    தீவனம் | 
            அசோலா    இல்லாத தீவனம் | 
            சத்துப்பொருள்    அதிகரிப்பு  | 
             
          
            | முட்டையின்    எடை | 
            61.20 | 
            57.40 | 
            6.62 | 
             
          
            | ஆல்புமின்    (கிராம்/100கி உண்ணும் பகுதி) | 
            3.9 | 
            3.4 | 
            14.70 | 
             
          
            குளோபுலின்  
              (கிராம்/100கி    உண்ணும் பகுதி) | 
            10.1 | 
            9.5 | 
            6.13 | 
             
          
            | புரதம் | 
            14.0 | 
            12.9 | 
            8.52 | 
             
          
            | கரோட்டீன்    (மைக்ரோகிராம்/100 கி உண்ணும் பகுதி) | 
            440 | 
            405 | 
            8.64 | 
             
           
         
                   
        இந்தியாவில்  வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த  செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும் நெல் விளைச்சலில் இயற்கை  உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில்  மிக முக்கியமான இடுபொருள். 
         
        வரையறை: 
         
      பெரணி தாவரமான  அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-380 தேவைப்படுகிறது. ஆகையால்  உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. எனவே மிகவும்  வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவது கடினம். 
         
        சாதனைகள்: 
         
      அசோலா கலப்பினம் ராங்  பிங் மலை ஜாதி மக்களுக்கு தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது. அசோலா தாய் காரணிப்பொருள்  நாற்றங்கால் கிராமங்களில் கோயமுத்தூர் வேளாண் அறிவியல் நிலையம், உதவியுடன் அமைக்கப்படுகிறது.  காரமடை பெண் தொழில் முனைவோருக்கு 10 கிலோ அசோலா என்ற அளவில் பயிற்சியின் போது  இலவசமாக தரப்படுகிறது. இதனால் வர்த்தக ரீதியாக அசோலா வளர்ப்பு தங்களுடைய வீட்டின்  பின்புறமாக கூட வளர்க்க வகை செய்ய முடிகிறது. 
         
      நரசிபுரத்தில் அசோலா  உற்பத்தி நிலப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அசோலா பேரளவு உற்பத்தி பயிற்சிகள் நரசிபுரத்தில்  உள்ள சுய உதவிக் குழுக்கு நரசிபுரம் கலைமகள் அறிவியல் கலைக் கல்லுரி, சப்பானிமடை (மலை  ஜாதி கிராமம்) மற்றும் காரமடையில் உள்ள அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம், ஆகியவற்றின்  உதவியுடன் அளிக்கப்படுகின்றன. காரமடையில் உள்ள அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம்  பெண் தொண்டூழியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன மற்றும் காரமடையில் அசோலா  கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
        கோயமுத்தூரில் உள்ள  ஆவிள் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் கழகமும்,  இணைந்து கிராமங்களில் தொடர்பு கொண்டு, அசோலா மாற்று தீவனமாக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை  விளக்குகிறார்கள். 
         
      மேலும் பால், உற்பத்தியாளர்  ஒன்றியம் அசோலா பயிற்சி மற்றும் சந்தைபடுத்துவதில் ஈடுபடுகிறது. ஈரம் மற்றும் உலர்நிலையில்  உள்ள அசோலா இழைகளை கிராமங்களில் உள்ள அசோலா உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குகிறார்கள்.  இந்த திட்டத்தின் மூலம் 400 கிராம பெண்கள், 370 மலை ஜாதி மக்களுக்கு அசோலா வளர்ப்பு  பற்றிய பயிற்சி தரப்படுகிறது. கோயமுத்தூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  மையத்தில் அமைந்துள்ள அசோலா ஆய்வகம் மற்றும் அசோலா பண்பகப் பண்ணை தாய் காரணிப்பொருளைத்  தரக்கூடிய பண்பகப் பண்ணையை பராமரிக்கிறது. கோயமுத்தூர் வேளாண்மை பல்கலைக் கழகத்தில்  உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள கால்நடை துறைப்பிரிவு  அசோலா தரம் உயர்த்துவதிலும், அடர்தீவன கலப்பு விகிதத்திற்கும் உதவி செய்கிறது. 
      
        
            | 
            | 
         
        
          | குழிகளில் பேரளவு உற்பத்தி | 
          முயலுக்கு அசோலா தீவனமிடுதல் | 
         
        
            | 
            | 
         
        
          | கோழிகளுக்கு அசோலா தீவனமிடுதல்   | 
          கால்நடைகளுக்கு அசோலா தீவனமிடுதல்   | 
         
        
            | 
         
        
          | அசோலா குழியில் சூப்பர் பாஸ்பேட் மற்றும் மாட்டு சாணம் இடுதல்  | 
         
       
        
 
      6.  தமிழ்நாட்டில் உள்ள  
      
      
        
          வேளாண் நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நிலையம், 
            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 
            முனைவர். எஸ். அந்தோணிராஜ் 
            மதுரை – 625 104 
            (0452 – 422956 தொலைப்பிரதி: 422185 
            மின்னஞ்சல்: s_anthoniraj@yahoo.com | 
          உயிர் உர உற்பத்தி மையம், வேளாண் துறை,  
            தமிழ்நாடு அரசு 
            குண்டு சாலை வழி, சோமண்டலம், 
            கடலூர் – 607001 (தமிழ்நாடு) 
            உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை, தமிழ்நாடு அரசு 
            வேளாண் வேதியியலர், 
            சாக்கோட்டை, 
            தஞ்சாவூர் – 612 401 (தமிழ்நாடு) | 
         
        
          உயிர் உர உற்பத்தி மையம்,  
            வேளாண்துறை,  
            தமிழ்நாடு அரசு 
            ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், காஜாமலை, 
            திருச்சி – 620 020 (தமிழ்நாடு) | 
          கிரிபிகோ 
            சிட்கோ கார்மெண்ட் வளாகம், திரு. வி. க. தொழிற்சாலை பகுதி, 
            கிண்டி, சென்னை – 32 | 
         
        
          மண்டல ஆராய்ச்சி நிலையம் 
            தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 
            பையூர் – 635 112 
            காவேரிப்பட்டிணம் வழி, 
            தர்மபுரி மாவட்டம் (04343 – 50043) | 
          மோனார்க் உயிர் உரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம், 
            12, சிட்கோ தொழிற்சாலை பகுதி, திருமாழிசை, 
            சென்னை – 602 107 (தமிழ்நாடு) 
            (6272780) | 
         
        
          லட்சுமி உயிர் தொழில் நுட்பம் 
            திரு. வி. சித்தானந்தம், 
            நெல்லிக்குப்பம் சாலை, தொட்டபட்டு, 
            கடலூர் – 607 109 (தமிழ்நாடு) 
            (04142 – 210136) | 
          மேரிக்ரீன் அப்போடெக் பிரைவேட் லிமிடெட் 
            முனைவர். Y. ஜோ 
            5 / 302, ஸ்ரீ சாய்பாபா தெரு, சந்தோஷ் நகர், கண்டன்சாவடி, பெருங்குடி அஞ்சல், 
            சென்னை – 600 096 (தமிழ்நாடு) 
            4964202, 3735957 
            மின்னஞ்சல்: marygreen45@hotmail.com | 
         
        
          தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 
            பேராசிரியர் மற்றும் தலைவர் 
            வேளாண் நுண்ணுயிரியல் துறை, 
            கோயமுத்தூர் – 3 (தமிழ்நாடு) 
            431222 விரிவு, 294  
            தொலைப்பிரதி: 0422 – 431672 
            மின்னஞ்சல்: vctnau@vsnl.com | 
          டி. ஸ்டேன்ஸ் & கம்பெனி லிமிடெட் 
            முனைவர். எஸ். ராமரத்தினம் 
            8 / 23 – 24, ரேஸ்கோர்ஸ் சாலை, 
            கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு) 
            (0422 – 211514, 213545) 
            தொலைபிரதி: 217432 
            மின்னஞ்சல்: tsstanes@vsnl.com  | 
         
        
          எஸ்வின் உயர்தர தொழில்நுட்பங்கள் லிமிடெட், 
            திரு. டி. எஸ். வெங்கட்ராமன் 
            “எஸ்வின் இல்லம்” பெருங்குடி, 
            சென்னை – 600096 (தமிழ்நாடு) 
            (4961056, 460690, தொலைப்பிரதி: 4961002) 
            மின்னஞ்சல்: tsv@vsnl.com | 
          சதா்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்டிரிஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், 
            திரு. கே. ராஜீ  
            ஸ்பிக் லிமிடெட் உயிர் தொழில்நுட்ப பிரிவு, செட்டியார் அகரம் சாலை, காந்தி நகர், போரூர், 
            சென்னை – 600 116 (தமிழ்நாடு) 
            44 – 4768064 
            தொலைப்பிரதி: 044 – 4767347 
            மின்னஞ்சல்: biotech.por@spic.co.in | 
         
        
          உயிர் உரப்பிரிவு, மணலி, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், 
            திரு. பி. மல்லிகார்ஜீனா ரெட்டி, 
            முதன்மை மேலாளர் உயிர் பொருட்கள்  
            வர்த்தகக் குழு, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், மணலி, 
            சென்னை – 600068 (தமிழ்நாடு) 
            044 – 5941001 விரிவு, 2750  
            தொலைப்பிரதி: 5741010 
            மின்னஞ்சல்: edcomm@mfi.tn.nic.in | 
          உயிர் உர உற்பத்தி மையம், 
            திரு. எஸ். முருகன், 
            வேளாண் வேதியியலர், உயிர் உர உற்பத்தி பிரிவு, சீலநாயக்கன்பட்டி, 
            சேலம் – 636 201 (தமிழ்நாடு) | 
         
        
          உயிர் உர உற்பத்தி மையம், 
            திரு. பி. ராமன், 
            வேளாண் வேதியியலர், 
            உயிர் உர உற்பத்தி பிரிவு, 
            குடுமியான் மலை – 622 104 
            புதுக்கோட்டை மாவட்டம் | 
          முக்கிய உயிர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம், 
            (தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை பேரவையின் பிரிவு) 
            2ஈ / 1, ராஜேஸ்வரி வேதாச்சலம் தெரு, 
            செங்கல்பட்டு – 603001 (தமிழ்நாடு) 
            (04114 – 431393) | 
         
        
          சையா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம், 
            முனைவர். எம். ஏ. சண்முகம், 
            “சண்முக மன்றம்”, அஞ்சல் பெட்டி எண்: 3871,  
            ரேஸ்கோர்ஸ், 
            கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு) 
            (0422 – 211391, தொலைப்பிரதி: 0422 – 216798) | 
            | 
         
       
     
       
      உயிர்  உர தொழில்நுட்பத்தில் உள்ள தடைகள்: 
         
      உயிர் உர தொழில்நுட்பம்  விலை குறைவு, சூழ்நிலைக்குச் சாதகமான தொழில் நுட்பமாக இருந்தாலும், பல தடைகள் இந்த  தொழில்நுட்பத்தை அளிக்கவோ அல்லது அமல்படுத்துவதிலோ சிக்கல் ஏற்படுகிறது. சூழ்நிலை  சம்பந்தமாகவோ, தொழில்நுட்பமோ, கட்டமைப்போ, நிதி நிலைமை, மனித வளம், விழிப்புணர்வு  இல்லாதது, தரம், சந்தைப் படுத்துவதிலோ சிக்கல் ஏற்படலாம். மாறுபட்ட தடைகள் ஒரு வழியிலோ  அல்லது உற்பத்தி அல்லது சந்தைப்படுத்துதல் பயன்பாட்டின் போது உள்ள தொழில்நுட்பத்தில்  சிக்கல் ஏற்படுத்தும். 
         
        தொழில்நுட்ப  தடைகள்: 
      
        
          - முறையில்லாத வீரியம் குறைந்த ஆய்வு வகைகளை  உற்பத்திக்காகப் பயன்படுத்துதல்
 
          - தகுதியுள்ள தொழில் தெரிந்த ஆட்கள் உற்பத்திப்பிரிவில்  குறைதல்
 
          - நல்ல தரமுள்ள கடத்தும் பொருள் கிடைக்காமை  அல்லது மாறுபட்ட பொருட்களின் தரம் தெரியாமல் பயன்படுத்துதல்
 
          - அடிப்படை நுண்ணுயிர் தொழில் நுட்பத்தைப்  புரிந்து கொள்ளாமல் உற்பத்தி செய்தல் 
 
          - மோசமான தரமுள்ள நோய் தடுப்பு காரணிப்  பொருள்களை குறைந்த ஆயுள் காலமுடைய நோய் தடுப்பு காரணிப் பொருள்
 
           
         
      கட்டமைப்பு  தடைகள்: 
      
        
          - உற்பத்திக்கான தகுதியுள்ள வசதிகள் இல்லாமை
 
          - தேவையான கருவிகள், மின்சாரம் போதுமான  அளவு இல்லாதிருத்தல்
 
          - ஆய்வுக் கூடங்கள், உற்பத்திக்கான இடங்கள்,  சேமிப்பு மற்றும் இதர தேவைகளுக்கான போதுமான இடம் இல்லாதிருத்தல்
 
          - நோய் தடுப்பு காரணிப் பொருளுடைய பொட்டலங்களை  குளிர் சேமிப்பு முறையில் வைக்கும் வசதி இல்லாதிருத்தல் 
 
           
         
      நிதித்  தடைகள்: 
      
        
          - போதுமான நிதி இல்லாமை மற்றும் வங்கிக்  கடன் பெறுவதில் உள்ள பிரச்சனைகள்
 
          - ஒரே மாதிரியான பயிர் சாகுபடி முறைகள்  மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விதைத்தல் / பயிர் செய்தலினுடைய குறைந்த காலம்
 
          - மண்ணின் தன்மைகளான உப்புத் தன்மை, அமிலத்தன்மை,  வறட்சி, நீர் தேங்கி இருத்தல் மற்றும் பல
 
           
         
      மனித  வளம் மற்றும் தர தடைகள்: 
      
        
          - உற்பத்தி பிரிவுகளில் தொழில் நுட்பம்  தெரிந்த பணியாளர்கள் பற்றாக்குறை
 
          - உற்பத்தி தொழில்நுட்பத்தின் மீதான தகுந்த  பயிற்சி இல்லாமை
 
          - உற்பத்தி செய்பவர்களால் பொருளின் தரம்  அறியாமை
 
          - தரக் குறியீடுகள் இல்லாமை மற்றும் துரத  தரக் கட்டுப்பாட்டு முறைகள்
 
          - பொருட்களின் தரம் பற்றிய ஒழுங்கு நடவடிக்கை  இல்லாமை
 
          - தொழிற் நுட்பத்தைப் பற்றிய அறியாமை
 
          - பல்வேறு விதமான உட்புகுத்தல் முறைகளால்  விவசாயிகள் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்
 
          - பயிர் வளர்ச்சியில் உடனடியாக எந்த விதமான  மாற்றம் இல்லாதிருத்தல்
 
           
         
      தொழில்நுட்பம்  பற்றிய விழிப்புணர்வு: 
      
        
          - தொழில் நுட்பத்தின் பயன்கள் பற்றிய  அறியாமை
 
          - பல்வேறு விதமான உட்புகுத்தல் முறைகளால்  விவசாயிகளால் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் 
 
          - பயிர் வளர்ச்சியில் உடனடியாக எந்த விதமான  மாற்றம் இல்லாதிருத்தல்
 
          - செயற்கை உரங்களை தொடர்ந்து தெளிப்பதால்  சுற்றுப்புற சூழலில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறியாமை
 
           
         
      சந்தைப்  படுத்துவதில் உள்ள தடைகள்: 
      
      தகுந்த தடுப்புக் காரணிப் பொருள் தகுந்த  நேரத்தில், தகுந்த இடத்தில் கிடைக்காமலிருத்தல்        
         
      சில்லறை விற்பனை நிலையங்கள் அல்லது உற்பத்தியாளர்களுக்கான  சந்தை நிலவரம் தெரியதமலிருத்தல்  
       
      8.  கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்த உயிர் உர ஆய்வு வகைகள்: 
      
        
          
            | அசோஸ்பைரில்லம்  | 
            ஆய்வு    வகைகள் | 
             
          
            | இயல்பான    மண் | 
            அசோ.    204 | 
             
          
            | அமில    மண்கள் | 
            அசோ.    ஓய் 2 | 
             
          
            | உலர்    நிலங்கள் | 
            அசோ.    11 | 
             
          
            | ரைசோபியம் | 
              | 
             
          
            | நிலக்கடலை | 
            டி.    என். ஏ. யூ. 14 | 
             
          
            | சோயாபீன் | 
            கோ    எஸ். 1 | 
             
          
            | காராமணி | 
            கோ    சி. 10 | 
             
          
            | துவரை | 
            கோ.    சி. 1 | 
             
          
            | பாசிப்பயிறு    மற்றும் உளுந்து | 
            கோ.    ஜி. 15
              ஜி.    எம். பி. எஸ். 1 | 
             
          
            | கொண்டைக்கடலை | 
            கோ.    பி. இ. 13 | 
             
          
            | பாஸ்போபாக்டீரியா | 
            பி.    பி. 1 | 
             
           
         
       
      9.  பொருளாதாரம்: 
         உயிர் உரங்களுக்கான  தேவை அதிகரித்து வருவது மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு பற்றிய விவசாயிகளின் விழிப்புணர்வு  உயிர் உர உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உயிர் உர உற்பத்தி செய்வதற்கு  வழி வகை செய்கிறது. நம்முடைய நாட்டின் தென் மாநிலங்களில் பல உயிர் உர உற்பத்தி மையங்கள்  தற்போது நிறுவப்பட்டுள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உயர்தர வேளாண் திட்டங்களை  தொடங்குவதற்கு கடன் வழங்குகின்றன. புதிதாக தொழில் முனைவோர்களை உற்பத்தி மையங்களை  ஏற்படுத்தவும் ஊக்குவிக்கிறது. இந்திய அரசும் விலை குறைந்த இந்த தொழில்நுட்பத்தை  20 லட்சம் வரை மானியத்துடன் ரு வருடத்திற்கு 150 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்யக்  கூடிய உற்பத்தி மையத்தைத் தொடங்க ஊக்குவிக்கிறது. இருந்தாலும், இந்த திட்டத்தின் வெற்றி  பொருளாதார நிலைமையைப் பொறுத்தே உள்ளது. உயிர் உர உற்பத்திக்கான மொத்த நிதி மற்றும்  விற்பனை செய்வதற்கான தோராய மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.  
         
        150  மெட்ரிக் டன் / வருடத்திற்கு உற்பத்தி செய்யக் கூடிய உயிர் உர உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான  மொத்த மதிப்பீடு: 
      
        
          
                          வ.எண்              | 
            விபரங்கள் | 
            தொகை (லட்சத்தில்) | 
             
          
            | I. | 
            செலவுகள் | 
              | 
             
          
            | அ. | 
            முதலீட்டுக்    கணக்கு (மாறாத விலை) | 
              | 
             
          
            | I. | 
            கட்டிடம்    இடத்தின் விலையையும் சேர்த்து தோராயமாக 1200 ச. அடி | 
            12.00 | 
             
          
            | II. | 
            கருவிகள்    மற்றும் உாகரணங்கள் | 
            41.00 | 
             
          
            | ஆ. | 
            செயல்பாட்டு    கணக்கு (மாறும் விலை) | 
              | 
             
          
            1  | 
            தொழிற்பாட்டு    மூலதனம் (மூலப் பொருட்கள்) | 
            10.00 | 
             
          
            2  | 
            ஊழியர்களின்    ஊதியம் | 
            2.04 | 
             
          
            3  | 
            தொழிலாளி | 
            2.50 | 
             
          
            4  | 
            மின்சாரம் | 
            0.50 | 
             
          
            5  | 
            பயண    செலவுகள் | 
            0.50 | 
             
          
            6  | 
            நிர்வாகச்    செலவுகள் | 
            0.50 | 
             
          
            7  | 
            வட்டிக்கடன்    மற்றும் தேய்மானம் | 
            0.70 | 
             
          
            8  | 
            இதரச்    செலவுகள் | 
            0.26 | 
             
          
            |   | 
            மொத்தம் (மாறும்    விலை) | 
            17.00 | 
             
          
            |   | 
            மொத்த முதலீடு | 
            70.00 | 
             
          
            |   | 
            உள்ளபடியான முதல்    முதலீடு | 
            50.00 | 
             
           
         
      சந்தைப்  படுத்துதலுக்கான செலவுகள் இதில் சேர்க்கப்பட வில்லை. 
        செலவு  விபரங்கள் (லட்சத்தில்): 
      
        
          
            | வ. எண்  | 
            கருவிகள் மற்றும்    உபகரணங்கள் | 
            எண்ணிக்கை (நம்பரில்) | 
            தொகை (லட்சத்தில்) | 
             
          
                          1              | 
            நொதிக்கச்    செய்யும் கருவி (200 லி. கொள்ளளவு) | 
            4 | 
            26.00 | 
             
          
                          2              | 
            கலக்கி | 
            2 | 
            1.50 | 
             
          
                          3              | 
            அடுக்குப்    பாய்வு அறை | 
            1 | 
            0.60 | 
             
          
                          4              | 
            அழுத்தக்    கொப்பரை | 
            2 | 
            0.30 | 
             
          
                          5              | 
            சணப்பு    அடுப்பு | 
            1 | 
            0.10 | 
             
          
                          6              | 
            அடைகாக்கும்    கருவி | 
            1 | 
            0.10 | 
             
          
                          7              | 
            குளிர்    சாதனப் பெட்டி | 
            1 | 
            0.30 | 
             
          
                          8              | 
            நுண்ணோக்கி | 
            1 | 
            0.75 | 
             
          
                          9              | 
            கார    அமிலத்தன்மை அளக்கும் கருவி | 
            1 | 
            0.15 | 
             
          
                          10              | 
            இயல்    எடைக் கருவி | 
            1 | 
            0.10 | 
             
          
                          11              | 
            மின்    எடைக் கருவி | 
            1 | 
            0.75 | 
             
          
                          12              | 
            சமண்    செய் தராசு | 
            5 | 
            0.25 | 
             
          
                          13              | 
            முத்திரையிடும்    கருவி | 
            5 | 
            0.25 | 
             
          
                          14              | 
            பணியாட்கள்    அமரும் நாற்காலிகள் | 
            4 | 
            0.30 | 
             
          
                          15              | 
            நெகிழித்    தட்டுக்கள் | 
            50 | 
            0.25 | 
             
          
                          16              | 
            தட்டுக்கள்    (துத்தநாகம் / அலுமினியம்) | 
            10 | 
            0.20 | 
             
          
                          17              | 
            தள்ளு    வண்டி / மேடை | 
            1 | 
            0.10 | 
             
          
                          18              | 
            தானியங்கி    பொதி கட்டும் கருவி (விருப்பப்பட்டால்) | 
            1 | 
            9.00 | 
             
          
            |   | 
            மொத்தம் | 
              | 
            41.00 | 
             
           
         
      நடப்பு  மூலதனம்: 
      
        
          
                          1              | 
            தாய்    வளர்ப்புக்கான செலவு | 
            0.05 | 
             
          
                          2              | 
            கண்ணாடிப்    பொருட்கள் | 
            0.70 | 
             
          
                          3              | 
            வேதிப்    பொருட்கள் | 
            2.50 | 
             
          
                          4              | 
            பாலித்தீன்    பைகள் | 
            3.50 | 
             
          
                          5              | 
            கடத்தும்    பொருட்கள் | 
            3.00 | 
             
          
                          6              | 
            இதரப்    பொருட்கள் | 
            0.25 | 
             
          
            |   | 
            மொத்தம் | 
            10.00 | 
             
           
         
      ஊழியர்களின்  ஊதியம்: 
      
        
          
            |                              தொழில்நுட்ப பணியாளர்    (1 நபர்)              | 
            9000 x 12 | 
            1,08,000 | 
             
          
            | ஆய்வகப் பணியாளர்    (2 நபர்கள்) | 
            4000 x 2 x 12 | 
            96,000 | 
             
          
            |   | 
            மொத்தம் | 
            2,04,000 | 
             
           
         
       
      11.  உற்பத்தி: 
      
        
          
            | 60    சதவிகித கொள்ளளவு  | 
            ஒரு    வருடத்திற்கு | 
            90    மி. டன் | 
             
          
            | 75    சதவிகித கொள்ளளவு | 
            ஒரு    வருடத்திற்கு | 
            112.5    மி. டன் | 
             
          
            | 100    சதவிகித கொள்ளளவு | 
            ஒரு    வருடத்திற்கு | 
            150    மி. டன் | 
             
           
         
      பற்றுச்  சீட்டுகள்: 
      
        
          
            | 1    கிலோ உயிர் உரத்தின் விலை (தற்போதுள்ள அரசு / பல்கலைக்கழக விலை)  | 
            25    ரூபாய் | 
             
          
            | 90    மி. டன் (60 சதவிகித கொள்ளளவு) உற்பத்தி விலை | 
            22,500    லட்ச ரூபாய் | 
             
          
            | 112.மி.    டன் (75 சதவிகித கொள்ளளவு) உற்பத்தி விலை | 
            28.125    லட்ச ரூபாய் | 
             
          
            | 135    மி. டன் (90 சதவிகித கொள்ளளவு) உற்பத்தி விலை | 
            33.750    லட்ச ரூபாய் | 
             
          
            | 150    மி. டன் (100 சதவிகித கொள்ளளவு) உற்பத்தி விலை | 
            37.500    லட்ச ரூபாய் | 
             
           
         
      IV.  இலாபம்: 
      
        
          
                          வருடம்              | 
            உற்பத்தி | 
            வரவு (லட்ச ரூபாய்) | 
            செலவு (லட்ச ரூபாய்) | 
            லாபம் (லட்ச ரூபாய்) | 
             
          
                          1              | 
            60% | 
            22.500 | 
            50,000 | 
            -27.500 | 
             
          
                          2              | 
            75% | 
            28.125 | 
            18.700* | 
            9.425 | 
             
          
                          3              | 
            90% | 
            33.750 | 
            20.570* | 
            13.180 | 
             
          
                          4              | 
            100% | 
            37.500 | 
            22.630* | 
            14.870 | 
             
          
            | 4 வருடங்களுக்குப்    பிறகு எதிர்பார்க்கப்படும் லாபம் | 
            9.975 | 
             
           
         
      *  விலை ஏற்ற இறக்க நிலையை சமன் செய்ய ஒவ்வொரு வருடமும்  10 சதவீத அளவு அசலவு அதிகப்படுத்துதல் 
      
        
          
               | 
            வேர்ப்பூசண உயிர்    உர பொருளாதாரம் – பேரளவு   | 
            உற்பத்தி  | 
             
          
            1.   | 
            முதலீட்டு    செலவு (4 x 3 x 1.5 அடி குழிகள் அமைப்பதற்கான பொருட்கள், ஆள் கூலி சேர்த்து)  | 
            அமைப்பது,    மணல் ரூ. 3000  | 
             
          
            2.   | 
            நோய்    தடுப்புக் காரணிப் பொருளுக்கான செலவு (வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து) 20 கிலோ    ஒரு கிலோ 20 ரூபாய் என்ற அளவில்  | 
            ரூ.    400  | 
             
          
            3.  | 
            வெர்மிக்குலைட்    விலை (போக்குவரத்து செலவு சேர்த்து) 500 கிலோ, 6.50 ரூபாய் என்ற விலையில்  | 
            ரூ.    3250  | 
             
          
            4.  | 
            ஆவலையாட்கள்    கூலி ஒரே குழியாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களே பார்த்துக் கொள்ளுதல்)  | 
            -  | 
             
          
            5.  | 
            விதை    பொருட்கள் மற்றும் குழிகளை மூடுவதற்கான  | 
            ரூ.    100 + 100  | 
             
          
            6.  | 
            கோவை    வேளாண்மை விலை பல்கலைக்கழகத்தில் ஆகும் தரக்கட்டுப்பாடு செலவுகள் (இது ஒரு வருடத்திற்கு    பிறகு செய்யப்படுகிறது மற்றும் பொருட்களை விற்பதற்கு முன், ஒவ்வொரு அறுவடைக்குப்    பிறகு தொடர வேண்டியதில்லை)  | 
            ரூ.    1000  | 
             
          
            7.  | 
            பை    – பொருட்களை பொதி கட்டுவதற்கான செலவுகள் – 30, ஒவ்வொரு பொதிக்கும் 10 ரூபாய்    அறுவடை மற்றும் பொதி கட்டுதலுக்கான வேலையாட்களின் கூலி  | 
            ரூ.    300 
              ரூ.    200  | 
             
          
            மொத்தம்  | 
            ரூ. 8350  | 
             
          
            8.  | 
            உற்பத்தி    செய்த நோய் தடுப்பு காரணிப் பொருளை விற்பதால் பெறும் நன்மைகள் 500 கிலோ ஒரு கிலோவுக்கு    20 ரூபாய் (கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில்) ஒரு கிலோவிற்கு 35 ரூபாய் (தனியார்    நிறுவனங்களில்)  | 
            ரூ.    10000 
                
                
              ரூ.    17500  | 
             
          
            9.  | 
            நிகர    வருமானம் (முதல் அறுவடை ரூ.10000 – 8350 (வ.எண்.8 – வ.எண்.1 முதல் 7 வரை) 
              ரூ.    17500 - 8350  | 
            ரூ.    1197 
              ரூ.    9150  | 
             
          
            10.   | 
            இரண்டாவது    அறுவடைக்கான செலவு  | 
            ரூ.    4950  | 
             
          
            11.  | 
            இரண்டாவது    அறுவடையிலிருந்து பெறும் பயன் 
              ரூ.    10000 – ரூ. 4950 
              ரூ.    17500 – ரூ. 4950  | 
            ரூ.    5050 
              ரூ.    12550  | 
             
          
            12.  | 
            ஒரு    வருடத்துக்கான நிகர வருமானம் 
              ரூ.    50000 – ரூ. 24,750 
              ரூ.    87500 – ரூ. 24750  | 
            ரூ.    25250 
              ரூ.    62750  | 
             
           
         
      10.  உயிர் உரங்களின் விலை மற்றும் கிடைக்கும் இடம் உயிர் உரங்களின் பெயர்கள் உயிர் உரங்களின்  விலை கிடைக்கும் இடம் 
      
        
          
            | அசோஸ்பைரில்லம்  | 
            ரூ.    40 / கிலோ | 
            பேராசிரியர்    மற்றும் தலைவர் வேளாண் நுண்ணுயிரியல் துறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  
              கோயமுத்தூர்    – 641003, 
              தொலைபேசி:    91 – 422 – 6611294 
              தொலைபிரதி:    91 – 422 – 2431672 
              மின்னஞ்சல்:    microbiology@tnau.ac.in   | 
             
          
            | பாஸ்போபாக்டீரியா | 
            ரூ.    40 / கிலோ | 
             
          
            | ரைசோபியம் | 
            ரூ.    40 / கிலோ | 
             
          
            அசிட்டோபாக்டர் 
              வி.    ஏ. எம் | 
            ரூ.    40 / கிலோ 
              ரூ.    30 / கிலோ | 
             
           
         
      தகவல்: 
        தொழில் முனைவோர்  பயிற்சி ஏடு 
        பேராசிரியர் மற்றும்  தலைவர் 
        வேளாண் நுண்ணுயிரியல்  துறை, 
        தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம், 
        கோயமுத்தூர் - 3        |