| 
    ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       அங்கக வேளாண்மை :: அங்கக பயிர் பாதுகாப்பு  | 
    ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அங்கக வேளாண்மையில் களை மேலாண்மை அங்கக களை மேலாண்மை  பற்றி : களை இடையூரு என்பது வேளாண்மை ஆரம்பித்த நாள் முதல் இருக்கிறது. பயிர்களுக்கு கிடைக்கும் நீர் , ஊட்டச்சத்து , சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு , பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. இராசயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இராசயனஙடகளை சுற்றிச் சூழலை பெரிதும் மாசு படுத்துகின்றன. அங்கக வேளாண் முறையில் , சுற்றுச் சூழலை பாதிக்காமல் , களைச் செடிகளை நீக்க முடியும். களைச் செடிகளை முற்றிலும் நீக்குவது சாத்தியமற்றது. மாறாக களை செடி எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வருவது எளிது. களை கட்டுபாடு  கொண்டுவர வேண்டிய முக்கிய தருணம்: தோட்டக்கலை பயிர்களுக்கு களை கட்டுப்படுத்த வேண்டிய தருணங்கள் : 
 சாகுபடி முறை : பயிர் சுழற்சி : மூடு பயிர்: சில பயிர்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் தன்மையுடையன. இவை நிலத்தை மூடுவது போல வளர்ந்து களை வளர்ச்சியை தடுக்க வல்லது. சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள் , தீவனப் பயிர்கள் , முள்ளங்கி போன்றவை களை வளர்ப்பைக் கட்டுபடுத்தலாம். ஊடு பயிர்கள்  : பயிர் வரிசைக்கு இடையில் , களைச் செடிகளை கட்டுப்படுத்த வளர்த்தப்படும் பயிர் , ஊடு பயிர் எனப்படும். நிலத்தை மேற்  பார்வையிடுதல் : களைச் செடி பற்றின விவரங்களை (களைச் செடி அடர்த்தி , வளர்ச்சி வேகம் , பருவம்) சேகரித்து அதை களை மேலாண்மை திட்டமிடுதலுக்கு பயன்படுத்துவது மிக அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் பயிரிழப்பையும் , மகசூல் பாதிப்பையும் தவிர்க்க உதவும். நிலப் போர்வை : நிலர்போர்வை , நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முலைப்பதை தவிர்க்க வல்லது. ஒளி ஊடுருவதை தடுப்பதால். களைச் செடிகள் கட்டுப்படுகின்றன. அவற்றின் வகைகள் : 
 நிலததின்  மட்டதிற்கு அருகில் அடர்த்தியாக வளரும் தாவர வகைகள் இவை. எ.டு. கிராம்பு. இவை முக்கிய  பயிருடன் போட்டியிடுவதி்லை. இவை களை , பூச்சி தொல்லைகளைக் கட்டுப்படுத்தும். மண்  வளத்தையும் பெருக்கும். 
 அங்கக நிலப்போர்வைகள்: 
      வைக்கோல் புல், மரப்பட்டை , மட்கிய  குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நிலப்போாவையாக பயப்படுத்தலாம். இரண்டு அடுக்கு  செய்தித்தாளை பயிர் வரிசையின் இடையில் விரிந்து அதன் மேல் ஒரு அடுக்கு புல் பரப்புதல்  ஒரு வகை வழக்கம். வைக்கோல் புல் , களை விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.  இவை மட்கக் கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்தூர மரங்களின் இலை , பணை ஒலைகள்  போன்றவற்றை பயன்படுத்தலாம். 
 பயிர்  வகை தேர்ந்தெடுதல் களைக்  கட்டுப்படுத்துவதில் பயிர் வகையும் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும்  பயிர் , சறறு அடர்த்தியாக வளர்ந்து , பயிர் வரிசைக்கு உள்ள இடைவெளியை தனது நிழலால்  நிரப்பக் கூடியது, அதனால் அவை நிச்சயமாக களை வளர்ப்பை கட்டுப்படுத்தும’். களைச் செடிகள்  நிழலின்றி வளர இயலாது. களை வித்துக்கள் உழவு முறைக்குத் தகுந்தாற்  போல் பரவிக்கிடக்கும். பொதுவபக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்ட 5 செ.மீ ஆழம்  வரை ஊடுருவியிக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துகள் சீராக பரவியிருக்கும்.  இவ்வாறு உழவு  முறையின் அடிப்படையில் களை வித்துகளின்  பரவுத்தன்மை   விநியோகம் , வளர்ச்சி ஆகியவற்றை தீர்மானம் செய்யலாம். சுகாதாரமாக இருத்தல் புதிய களைச் செடிகள்  பரவாமலிருக்க உதவும். சுத்தமான பயிர் வித்துகளை உபயோகித்தல், புல் வெட்டுதல் , முழுவதுமாக  மட்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல் , வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல்  , இது போன்ற முறைகளை பின் பற்றினால் , களைத் தொல்லையை தவிர்க்கலாம்.சுத்தமான கலப்பைகள்  மற்றும் இயந்திரங்களை இபயோகித்தலும் அவசியம். சுத்தமான , தரம் வாய்ந்த வித்துகளை பயிரிடுவது  நல்ல பலளைத் தரும். இராசயன தழைச்சத்து உரம், பயிர் மற்றும்  களை வளர்ச்சியை பாகுபாடின்றி ஊக்குவிக்கும் களைச் செடிகள் , பயிர் செடிகளைக் காட்டிலும்  வேகமாக வளர்ந்து விடும். ஆனால் பசுந் தலை உரம் களைச் செடி வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.  அவை மண்ணில் மெதுவாக தழைச் சத்தினை வெளியிடுதல் , வேண்டாத களைச் செடிகளின் வளர்ச்சியை  கட்டுப்படுத்துகிறது. பயிர் நடுவதற்கு முன்பாக நிலத்திற்கு கரையும் வகை உரம் / ஊட்டச்சத்துக் களை அளித்தல் தவறு. அவை களை வளர்ச்சியை வெகுவாக தூண்டக் கூடியது. 
 நீர் மேலாண்மை : களைச் கட்டுப்படுத்துதலில் , நீர் மேலாண்மை  முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர் விதைதலுக்கு ஒரு சில நாட்களுக்கும்  முன்பாக நீர் பாய்ச்சி , களை வித்துகளை முளைக்கச் செய்தல் , களை மேலாண்மையில் ஒரு வளையாகும்.  அவ்வாறு முளைத்த களைச் செடிகளை அகற்றிவிட்டு, விரைவாக பயிர் செடிகளை நடுதல் வேண்டும்.  இது தட்ப வெப்ப நிலை மாற்றத்தினால் முளைக்கும் களைத் தொல்லையை தவிர்க்க உதவும். இம்முறையஜல் மேல் கூறியது போல, களைச்  செடிகளை அகற்றி நிலத்தை காய விட வேண்டும். அவை நிலப் போர்வை போல் அமைந்துவிடும்.  பயிர் விதைக்கும் பொழுது , விதைக்குமிடத்தில் , காய்ந்த மண்ணை  அகற்றி விட்டு ஈரப்பதமான மண்ணில் விதைக்க வேண்டும்.  பெரிய விதை கொண்ட காய்களை , சோனம், பீன்ஸ் போன்றவற்றை இவ்வாறு விதைக்கலாம். இவை  முளைத்த , அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நிழல் தந்து, களை வளர்ச்சியைக் கட்டுபடுத்தும். சொட்டு நீர் பாசன முறையில் , நீர் பயிர்  செடிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது. இந்த முறை அதிக நேரம் பிடிக்கும் மற்றும்  விலையுயர்ந்த முறையாகும். பயிர் வகை , களைச் செடி   எண்ணிக்கை , வகை இவற்றின் அடிப் படையில் இயந்திர முறை மாறுபடும். களைச் செடி  எண்ணிக்கை , மண்ணில் உள்ள களை வித்து எண்ணிக்கையின் அடிப்படியில் மாறுபடும். ஆகவே மண்ணில்  உள்ள வித்துகளை ஆராய்ந்து அறிதலின் மூலம் நாம் களைச் செடி எண்ணிக்கையை ஊகித்து அவற்றைக்  கட்டுப் படுத்த முடியும். இயந்திர களையெடுக்கும் கருவிகள் சில -களைச்  கொத்து, கொத்துக் கலப்பை / கிளறி , புல்வெட்டி , நெருஞ்சில் களை எடுப்பான் போன்றவையாகும்.  தூரிகை களையெடுப்பான் கருவி காய் பயிர்களுக்கு உகந்தது. களைச் கொத்து , தனிச் செடிகளுக்கு  இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது. இயந்திர களை யெடுக்கும் கருவிகளை பயன் படுத்திய பிறகு,  களைச் கொத்து கொண்டும் களை அகற்றலாம். தீ மூட்டிகள் களை தடுப்பிற்கு பயனளிக்கும்.  பயிர் விதை முளைக்கும் முன்பு இதை பயன்படுத்தலாம். நெருப்பு ஏற்படுத்தும் வெப்பம்  , உயிரணுக்களை விரிவடையச் செய்து அவற்றை முற்றிலும் அழித்துவிடுகிறது. ப்ரோபேனை எரி பொருளாகக் கொண்டு தீமூட்டிகள்,  களைச் செடிகளை எரித்துச்  சாம்பலாக மாற்றாது.  அதற்கு மாறாக செல்களின் வெப்பநிலை அதிகரிக்கபட்டு அவை விரிவடையச் செய’கிறது.இதனால்  உயிரணுக்களின் (செல்களின்) சுவர் கிழிக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. இயந்திர களையெடுக்கும் கருவிகளை அதிக ஈரப்பதமுள்ள நிலத்தில் பயன்படுத்த முடியாது. அது போன்ற இடங்களில் தீ மூட்டிகளைப் பயன்படுத்தலாம். முட்டைகோஸ் நாத்து உள்ள வயல்களிலும் வழக்கத்தை பின்பற்றலாம். அவை வெப்பத்தை சற்று தாங்கக் கூடியவை. காற்று குறைவாக உள்ள இடங்களில் வெப்பம் களைச் செடிகளை நன்றாக சென்றடையும். மாலை இதற்கு உகந்த நேரங்களாகும். மண் வெப்பமூட்டல்: வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது  , அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் சுத்தீகரிக்கிறார்கள்.  இதில் , பிளாஸ்டிக் விரிப்புகளை, உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை  இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் , களை விதைகளை அழித்து விடும். இவை தீமூட்டியை போன்று செயல் படுகிறது.  அகச் சிவப்புக் கதிர்கள் சுலபமாக வெப்பத்தை அதிகரிக்கக் கூடியவை. சில களையெடுக்கும்  கருவிகள்  இக்கதிருடன் சேர்ந்து தீயையும் களை  அகற்றத்திற்குப் பயன்படுத்துகிறது. திரவ நிலை நைட்ரோஜன் மற்றும் உறைப்  பனிக்கட்டிகள் களை கட்டுப்பாட்டிற்கு உபயோகப் படுத்துகின்றனர். 
 ஒரு வித்து முளைக்கும் பொழுதோ , வளரும்பொழுதோ  சில திரவியங்களை வெளியிடும். அவை அருகிலிருக்கும் தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது  மறைமுகமாகவோ திரவியம் வெளியிடும் செடியின் நிலையை உணர்த்தும். இவ்வாறு திரவம் வெளியிடும் செடிகள் அருகிலிருக்கும் செடிகளை தொடர்புகொள்ளும் என்பது ஆச்சர்யமான உண்மை. பார்லி , ரை, ஓட்ஸ், சோளம் , குதிரைமசால், சிவப்பு கிராம்பு , சூரியகாந்தி, கோதுமை மற்றும் தோட்டக்கலை பயிர்களான முள்ளங்கி, கேரட், முருங்கை ஆகியவை திரவ சுரப்பிகளால் அருகில் உள்ள தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. நலம் பயக்கிற நுண்ணுயிர்கள் : களைச் செடிகளும் நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையுடையவை யாகும். இவ்வாறு களைச் செடிகளில் நோய் உண்டாகும் நுண்ணுயிரிகளை பயிர் மேலாண்மைக்கு பயன்படுத்தலாம். இயற்கை எதிரிகளைக் கொண்டும் களைச் செடிகளுக்கு பாதிப்பு உண்டபக்கலாம். பூஞ்சை களைச் கொல்லிகள் கொண்டு களை அகற்றல் முறையை மேம்படுத்த உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை களைச் செடிகளை மட்டுமே அழிக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், களைச் செடிகளை அழிக்க முடியும். 
 களை கட்டுபாட்டில் மீன்களின் பங்கு 
 
 களைச் செடிகளை கட்டுபடுத்த சில “தொடர்புடைய களைகள்” எனும் போட்டிச் செடிகளை வளர்க்கலாம். அவை களைகளுக்கு போட்டியாக அமைந்து ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு விடும். 
 
 
 
  | 
  ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் |சார்புத் தகவல்கள்  | புகைப்படங்கள்  | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு  © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16  |