| 
    பசுந்தழை  உரம் 
       
        பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின்  கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும். காட்டு மரங்களின் இலைகள்  தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு  மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம்  ஆகும். பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் - வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி,  சிலோன் வாகை, புங்கம் (புங்காமியா க்ளாபரா) எருக்கு, அகத்தி (செஸ்பேனியா க்ரேன்டி  ப்ளோரா), சுபாபுல் மற்றும் மற்ற புதர் செடிகள். 
         
        
            பசுந்தழை  உரத்தின் ஊட்ட அளவு: 
      
        
          தாவரம்    / செடி  | 
          அறிவியல்    பெயர்  | 
          உலர்    நிலையில் ஊட்ட அளவு (சதவீதத்தில்)  | 
         
        
             | 
          தழைச்    சத்து   | 
          மணிச்    சத்து  | 
          சாம்பல்    சத்து  | 
         
        
          வாகை  | 
          கிளைசிடியா    செபியம்  | 
          2.76  | 
          0.28  | 
          4.60  | 
         
        
          புங்கம்  | 
          புங்காமியா    க்ளாபரா  | 
          3.31  | 
          0.44  | 
          2.39  | 
         
        
          வேம்பு  | 
          அசோராடிக்கா    இண்டிகா  | 
          2.83  | 
          0.28  | 
          0.35  | 
         
        
          மயில்    கொன்றை  | 
          டிலோனிக்ஸ்    ரெஜியா   | 
          2.76  | 
          0.46  | 
          0.50  | 
         
        
          பெல்டோபோரம்  | 
          பெல்டோபோரம்    பெருஜினம்  | 
          2.63  | 
          0.37  | 
          0.50  | 
         
        
          களைச்    செடிகள்  | 
         
        
          பார்த்தினியம்  | 
          பார்த்தினியம்    ஹிஸ்டிரோபோரஸ்  | 
          2.68  | 
          0.68  | 
          1.45  | 
         
        
          வெங்காயத்    தாமரை  | 
          எக்கோரினியா    கிரேஸிப்ஸ்  | 
          3.01  | 
          0.90  | 
          0.15  | 
         
        
          சாரணை  | 
          டிரையாந்திமா    போர்ட்லோ - கேஸ்ட்ரம்  | 
          2.64  | 
          0.43  | 
          1.30  | 
         
        
          சர்க்கரை    வள்ளிக் கிழங்கு  | 
          ஐபோமியா  | 
          2.01  | 
          0.33  | 
          0.40  | 
         
        
          எருக்கு  | 
          கலோடிராபிஸ்    ஜெஜான்டியா  | 
          2.06  | 
          0.54  | 
          0.31  | 
         
        
          சரக்கொன்றை  | 
          கேசியா    பிஸ்டுலா  | 
          1.60  | 
          0.24  | 
          1.20  | 
         
       
      நன்மைகள்: 
      
        - பசுந்தழை உரமிடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம்.  நீர் பிடிப்பு திறனை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.
 
        - பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத பருவத்தில்  வளர்க்கப்படும். பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்
 
        - காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு  உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
 
         
       | 
     | 
     |