| 
    நுண்ணுயிர்  உரம் / நுண்ணுரம்  
      நுண்ணுயிர்  உரம் என்பது செயல்திறனுள்ள நுண்ணுயிர்கள் அடங்கிய ஒரு கலவையாகும். இவற்றை மண்ணில் இடும்  பொழுதோ, அல்லது விதை நேர்த்திக்குப் பயன்படுத்தும் பொழுதோ, கலவையில் உள்ள நுண்ணுயிர்கள்  மண்ணிலுள்ள கனிமங்களோடு (பயிர் ஊட்டச்சத்துக்கள்) வினைபுரிந்து, அவற்றை பயிர்கள் எளிதில்  எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறது. 
      ஊட்டச்சத்து  மேலாண்மையில், நுண்ணுயிர் உரம் முக்கியப் பங்குவகிக்கின்றது. இதன் விலை மலிவானது மட்டுமல்லாது  இயற்கை மண் வளத்தை பாதுகாக்க வல்லது. இதோ சில நுண்ணுயிர் வகைகள். 
      
        
          வ.எண்  | 
          நுண்ணுயிரி    வகைகள்  | 
          எடுத்தக்காட்டு  | 
         
        
          தழைச்சத்து    நிலைப்படுத்தும் உயிர் உரங்கள்  | 
         
        
          | 1. | 
          தனித்து    வாழ்பவை  | 
          அசட்டோபேக்டர்,கிலோஸ்ட்டிரியடியம்    , அனபீனா , நாஸ்டாக்  | 
         
        
          | 2. | 
          இணைந்து    வாழ்பவை  | 
          ரைஸோபியம்    ,  பிராங்கியா , அனபீனா அசோலே  | 
         
        
          | 3. | 
          கூடி    சேரும் இயல்புடையவை  | 
          அசோஸ்பைரில்லம்  | 
         
        
          மணிச்சத்து    கரைக்கும் தன்மையடைய நுண்ணுயிரிகள் :  | 
         
        
          1.  | 
          பாக்டிரியா  | 
          பேசில்லஸ்    மெகாடிரியம், பேசில்லஸ் சப்டிலிஸ், சூடோமோனஸ் ஸ்ட்ரையேட்டா.  | 
         
        
          2.  | 
          பூஞ்சான்  | 
          பெனிசீலியம்    , ஆஸ்பர்ஜில்லஸ் அவார்மி.  | 
         
        
          மணிச்சத்தை    பெயர்ச்சி செய்யும் நுண்ணியிர்  | 
         
        
          1.  | 
          வாம்    (வளர் பூசனம்)  | 
          கிலோமஸ்    . கிகாஸ்போரா, ஸ்கூட்டெல்லாஸ்போரா, அக்குலோஸ்போரா, ஸ்கிலிரோசைட்டோசிஸ்  | 
         
        
          2.  | 
          வெளிவளர்    பூசனம் (மைக்கோரைஸா)  | 
          லக்காரியா,    பிசோலித்தன், பேலீட்டஸ், அமானிட்டா  | 
         
        
             | 
          ஆர்கிட்    பூசனம் (மைக்கோரைஸா)  | 
          ரைசாக்டோனியா    சோலானி  | 
         
        
          நுண்ணூட்டச்    சத்து தரும் நுண்ணுயிர்கள்  | 
         
        
             | 
          துத்தநாகம்    கரைக்கும்  நுண்ணுயிர்கள்.  | 
          பேசில்லஸ்  | 
         
        
          பயிர்    வளர்ச்சி  | 
         
        
             | 
          சூடோமோனாஸ்  | 
          சூடேபமோனாஸ்    பிளாரசன்ஸ்  | 
         
                | 
     | 
     |