நாற்றங்கால் நிர்வாகம்

நாற்றங்கால் தயார் செய்தல்

நன்கு தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் பாத்திகளில், மே-ஜுன் மாதங்களில், நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  நாற்றுகள் 3-4 வாரங்களில், நடவிற்கு தயார் ஆகிவிடுகிறது.

 

நிலம் தயாரித்தல்


  • ஒரு எக்டர் வயலில் நடவு செய்யத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ) நாற்றங்கால் பரப்பு தேவை. 

  • நீர் தேங்காத, நீர் ஆதாரத்திற்கு அருகில் உள்ள இடமாக இருக்க வேண்டும்.

  • நாற்றங்கால் பாத்திகளை நல்ல புழுதி வருமாறு தயார் செய்து, இயற்கை உரங்கள் கலந்து ஊட்டமளிக்க வேண்டும்.

  • 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழு உரம் கலந்து, நாற்றங்கால் பாத்திகளில் சீராக பரப்பிவிடவும்.

  • இறக்கை கலப்பைக் கொண்டு 2-3 முறை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு 5 முறை உழ வேண்டும்.

Plough with mould board plough

மேலே செல்க

 

மேட்டுப்பாத்தி தயாரித்தல்

  • 3 மீ x 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்கவும்.  ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ இடைவெளி விடவும்.

  • இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ ஆழத்திற்கு தோண்டி வாய்க்கால் ஆக்கவும்.  தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்தி விடவும்.

Formation of raised beds

மேலே செல்க

 

விதைகளைத் தேர்வு செய்தல்


  • விதையளவு:  4-5 கிலோ/எக்டர்

  • விதைகள் நல்ல இரகமாக இருக்க வேண்டும். 
    விதைகளை சுத்தமாகவும், மற்ற விதைக் கலப்படமில்லாமலும் இருக்க வேண்டும்.

  • முதிர்ந்த, நன்கு உருவாகிய குண்டு விதைகளாக இருக்க வேண்டும்.

  • தரமில்லாமல் சேமிக்கப்பட்ட, வயதான விதைகளாக இருக்கக் கூடாது.

  • விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாக இருக்க வேண்டும்.

Selection of seeds

மேலே செல்க


விதை நேர்த்தி

i. இரசாயண விதை நேர்த்தி

  • விதைகளை பாலீத்தின் பைகளில் போட்டு, திரம் 4 கிராம்/கிலோ (அ) கேப்டான் 4 கிராம்/கிலோ (அ) கார்பன்டசீம் 2 கிராம்/கிலோ மருந்துகளுடன் சீராக கலக்கவும்.

  • விதைகளின் மேல் இரசாயணப் பொருள்கள் கலக்க வேண்டியிருந்தால், முதலில் அதைச் செய்துவிட்டு, பிறகு விதைப்பதற்கு முன் உயிர் உரங்கள் இடவும்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

 

ii. உயிர் உர விதை நேர்த்தி

  • அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.  அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

விதைகளுக்கு உயிர் உரங்கள் உட்செலுத்தும் செயல்முறை

  1. பயிருக்கான உயிர் உர ஊடகத்தை @ 25 கிராம்/கிலோ விதை என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

  2. நல்ல விதை நுன்ணுயிரேற்றலுக்கு, ஒட்டும் திரவம் தேவை. 25 கிராம் வெல்லம் அல்லது சக்கரையை 250 மில்லி தண்ணீரில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.  பிறகு இந்த கரைசலை குளிர வைக்கவும்.

  3. தயார் செய்யப்பட்ட ஒட்டும் திரவத்தை விதையுடன் நன்கு பூசவும். பிறகு,  நுண்ணுயிர்  ஊடகம் படியுமாறு நன்றாக கலக்கவும்.

  4. நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை கட்டியாகாமல் இருக்கும் நிழலில் உலர்த்தவும்.
    நுண்ணுயிர் ஏற்றப்பட்ட விதைகளை விதைக்கவும்.

மேலே செல்க

 


iii. மாட்டுக்கோமயம் விதை நேர்த்தி

  • விதைகளை மாட்டுக் கோமியம், உப்புத் தண்ணீர் மற்றும் பெருங்காயத்துடன் கலந்து விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

  • 1 பகுதி மாட்டுக் கோமியத்தை 10 பகுதி தண்ணீருடன் கலக்கவும்.

  • கேழ்வரகு விதைகளை இந்த கரைசலில் போட்டு 15 நிமிடம் காத்திருக்கவும்.

  • பிறகு பதரான மிதக்கும் விதைகளை அகற்றவும்.

  • கடினமான விதைகளை பிரிக்க தண்ணீரை கீழே ஊற்றவும்.

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க


விதை விதைத்தல்


  • வரிசை விதைப்பாகவோ (அ) கை விதைப்பாகவோ  5 கிலோ விதைகளை பாத்திகளில் சீராக விதைக்கவும்.  திருந்திய கேழ்வரகு சாகுபடியில், ஒரு எக்டருக்கு 1.5 கிலோ நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் பயன்படுத்தவும்.

  • மண்ணின் மேல் லேசாக கிளறிவிட்டு மண்ணை மூடவும்.        

  • 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் துாவிவிட்டு விதைகளை மூடிவிட்டு மேற்பரப்பை சிறிது இறுக்கமாக்கவும். (விதைகளை ஆழமாக உழுதால், முளைப்பு பாதிக்கும்)

Sowing of seeds

மேலே செல்க


நீர் மேலாண்மை


ஒவ்வொரு நாற்றங்கால் பகுதிக்கும், ஒரு உள்வாயில் அமைக்கவும்.  உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும்.  மேட்டுப் பாத்திகள் ஈரமடையும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிடவும்.  மண்ணின் வகையைப் பொருத்து, நீர் பாசன இடைவெளி வேறுபடும்.

பாசன எண்ணிக்கை
செம்மண்
கடின மண்
முதல் முறை
விதைத்தவுடன்
விதைத்தவுடன்
இரண்டாவது
விதைத்த பின் 3 ஆம் நாள்
விதைத்த பின் 4 ஆம் நாள்
மூன்றாவது
விதைத்த பின் 7 வது நாள்
விதைத்த பின் 9 வது நாள்
நான்காவது
விதைத்த பின் 12 வது நாள்
விதைத்த பின் 16 வது நாள்
ஐந்தாவது
விதைத்த பின் 17 வது நாள்
-----
  • செம்மண்ணிற்கு, மூன்றாவது நாள் நீர் பாய்ச்சி, கடின மேற்பரப்பு இலகுவாக்கப்படுகிறது.  இதனால் நாற்றுகள் எளிதாக முளைத்து விடும்.

  • முறையாக, சீரான நீர் பாய்ச்சி, நாற்றங்கால் பாத்தியில் பிளவுகள் ஏற்படாவாறு பார்த்துக் கொள்ளவும்.

water management

மேலே செல்க


பயிர் பாதுகாப்பு


i. வெட்டுப்புழு

புழு பொதுவாக நாற்றங்காலில் உண்கிறது.  புழு, பகலில் மண்ணில் மறைந்து கொண்டு, இரவில் இலைகளை உண்ணும்.  இளம் புழுக்கள், நாற்றுக்களின் அடிப்பாகத்தை வெட்டும்.  இறுதியாக செடி முழுவதையும் உண்டுவிடும்.

எண்டோசல்பான் 35 EC @  0.75 லிட்டர்/எக்டர் (அ) கார்பரில் 50 WP 2.5 கிலோ/எக்டர் (அ) குளோர்பைரிபாஸ் 20 EC 2 லிட்டர்/எக்டர் (அ) பேசலோன் 35 EC @ 1.25 லிட்டர்/எக்டர் தெளித்து பூச்சியைக் கட்டுப்படுத்தவும்.  களை மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவும்.  கோதுமைத் தவிடு 1 கிலோ + மோனோகுரோட்டோபாஸ் (10 மில்லி)  100 கிராம் வெல்லம்   ஈரப்படுத்த தண்ணீர் கலந்து நச்சுப் பொறி வைக்கவும்.

Cut Worm

மேலே செல்க

 


ii. வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி பல தாவர உண்ணும் பூச்சியாகும்.  இது கேழ்வரகின் இளம் இலை மற்றும் தண்டுகளை உண்கிறது.  இளம் குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் இலை உண்டு, இலைகளின் ஓரத்தில் உண்ட குறிகளை ஏற்படுத்தும்.  கைவினை முறைகளான, உழுதல், சுத்தமாக வைத்தல், கவர்ச்சி பயிரிடுதல், முன் விதைப்பு, முன் அறுவடை போன்றவற்றை பின்பற்றி நீண்ட கால அளவில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.  எண்டோசல்பான் 35 EC 400 மில்லி/லிட்டர் (அ) கார்பரில் WP 400 கிராம்/லிட்டர் தண்ணீர் தெளிக்கவும்.

Grasshopper

மேலே செல்க

 


iii. குலைநோய்

முளைத்த இரண்டாம் வாரத்தில் இருந்து குலைநோய் தாக்கம் நாற்றங்காலில் தோன்றும்.  துவக்க நிலையில், இலைகளில், நீள் உருண்டை வடிவப்புள்ளிகள், மஞ்சள் விளிம்புகளுடன் சாம்பல் நிற மைத்துடன் காணப்படும்.  பின்னர் புள்ளி சாம்பல் வெள்ளை நிறத்தில் மாறி, இறுதியாக இளம் இலைகள், நாற்றங்காலிலேயே காய்ந்து விடும்.

பூஞ்சாணக் கொல்லிகளை, கார்பன்டசீம் 0.1% (அ) எடிபென்பாஸ் (10 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, 3 சென்ட் நாற்றங்கால் பரப்பை கவரக்கூடிய, அதிக அளவு தெளிப்பான் பயன்படுத்தி, விதைத்த 10-12 நாட்களுக்கு பின் தெளிக்கவும்.  கார்பன்டசீம் 1 கிராம்/ 1 கிலோ விதை உபயோகப்படுத்தி விதை நேர்த்தி செய்யவும்.  சூடோமோனாஸ் (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) உயிர் பூஞ்சாணக் கொல்லியை நோய் அறிகுறி கண்டவுடன் தெளிக்கவும்.  நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கோ (ஆர்.ஏ) 14, பையூர் (ஆர்,ஏ) -2, ஜி.பி.யு- 28, ஜி.பி.யு- 45, ஜி.பி.யு- 48, எல்-5, இரகங்களை பயிர் செய்யவும்.  வளமான விதைகளை பயன்படுத்தி குலைநோயை தவிர்க்கவும்.

Blast

மேலே செல்க

 


iv. நாற்று கருகல்

நோய்க் கிருமி, நாற்றுகளையும், பெரிய செடிகளையும் தாக்குகிறது.  முதல் அறிகுறி இளம் இலைகளில், லேசான காப்பி நிற புள்ளிகளாகத் தோன்றி பின்னர் அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும்.  நாற்றுகள் வளர வளர, இப்புள்ளிகள் நீண்டு  1 செ.மீ நீளம் , 1-2 மி.மீ அகலத்திற்கு மாறி அடர் காப்பி நிறத்திற்கு மாறிவிடும்.  இவ்வாறு உள்ள புள்ளிகள் இணைந்து இலைகளில் தழும்புகளாகத் தோன்றும்.  பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து, நாற்றுகள் செத்துவிடும்.

மான்கோசெப் 1.2 கிலோ/எக்டர் (அ) டைத்தேன் Z -78 (2கிராம்/லிட்டர் தண்ணீர்) (அ) 1% போர்டோ கலவை (அ) காப்பர் ஆக்சிகுளோரைடு தெளிக்கவும்.  நோய்வாய்ப்பட்ட செடிகளை கண்டவுடன், பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

Seedling blight

மேலே செல்க

 

நாற்றுகளை நடவுக்காக பிடுங்குதல்


விதைத்த 17-20 ஆம் நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம்.  இரகம் மற்றும் வயதைப் பொருத்து, நடவு நாற்றுக்களுக்கான வயது நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஈரமான, இலகிய மண்ணில், நாற்றின் வேர்களை கட்டை விரலால் அழுத்தி நடவு செய்யவும்.

நடவு நாற்றின் வயது பயிரின் வளர்ச்சியையும், மகசூலையும் நிர்ணயிக்கிறது.  மிகக் குறைந்த வயதான (அ) அதிக வயதான நாற்றுகளை நடும் போது மகசூல் பாதிக்கிறது.  வயதான நாற்றுகள் நடுவதைத் தவிர்க்கவும்.

மேலே செல்க

 

நாற்று நேர்த்தி


நடுவதற்கு முன் நாற்றுகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து மகசூலை அதிகரிக்கலாம்.  அதன் செய்முறை.

  • ஒரு வாளி தண்ணீர் எடுக்கவும்.

  • பரிந்துரை செய்யப்பட்ட உயிர் உரத்தை, அசோஸ்பைரில்லம் (1000 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா (1000 கிராம்/எக்டர்) எடுத்து தண்ணீரில் கலக்கவும்.

  • நாற்றுகளின் வேர்கள் கரைசலில் படுமாறு 20-30 நிமிடங்கள் நனைக்கவும்.

  • நாற்றுகளை எடுத்து உடனடியாக நடவு செய்யவும்.

 

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மேலே செல்க

காட்சியகம்