ராகி - எல்லுாசின கோரகானா

 

வட்டாரப் பெயர்கள்

ஆங்கிலம்: பிங்கர் மில்லட், ஆப்பிரிக்கன் மில்லட்
ஹிந்தி:  ராகி, மண்டிகா, மரவா, மட்டுவா
தெலுங்கு: ராகி, சோடி
தமிழ்: கேப்பை, ராகி, கேழ்வரகு
மலையாளம்: முத்தாரி, ராகி
கன்னடம்: ராகி

மேலே செல்க

 

கேழ்வரகு வகைப்பாடு

தொகுப்பு: பிளேன்டே
பிரிவு: மேக்னோலியோபைட்டா
வகை: லில்லியோப்சிடா
வகுப்பு: போயேல்ஸ்
குடும்பம்: கிரமினே
துணைக்குடும்பம்: குளோரிடோய்டே
பேரினம்: எல்லுாசின
சிற்றினம்: கோரகானா

மேலே செல்க

 

கேழ்வரகு செடியின் பாகங்கள்


வேர்

  • ராகி சல்லி வேர் அமைப்பை பெற்றிருக்கும்.

  • வேர் ஆழமில்லாமல், கிளைகளுடன் இருக்கும். கீழ்க்கணுக்களில் இருந்து வேர் மண்ணிற்கு போகும்.

  • விதை முளை விட ஆரம்பித்தவுடன், முளை வேர் வெளியே துளைத்து கொண்டு வந்து சல்லி வேராக மாறும்.

  • சல்லி வேரில் இருந்து பக்க வேர்கள் தோன்றும்.

  • நாற்று வளர வளர, அடிக் கணுவில் இருந்து, சல்லி வேர்கள் தோன்றும்.

  • நாற்றுகளை பிடுங்கும்போது வேர்கள் எளிதாக அறுந்துவிடும். இருப்பினும், புதிய வேர்கள் சீக்கிரமே தோன்றும்.

மேலே செல்க

 

தண்டு

  • மெலிதான, நேரான, உள்ளடங்கிய நிலையில், மென்மையான தண்டுடன் காணப்படும்.  சில நேரங்களில் கிளைகள் இருக்கும்.

  • தண்டு, உள்ளடங்கிய நிலையில், நீள்வட்டமாக, பச்சை நிறத்தில் இருக்கும்.

  • செடி, பருமனாக அதிக துார்களுடன், ஒரு பருவ புல்லாக, 170 செ.மீ உயரம் வரை வளரும்.

  • தண்டின் இடைக்கணுப் பகுதியில் வெற்றிடமாகவும், கணுப்பகுதியில் கெட்டியாகவும் இருக்கும்.

  • அடிக்கணுக்கள், சிறியதாகவும், நீளமாக உள்ள நுனிக்கனு பூங்கொத்தைத் தாங்கியிருக்கும்.

மேலே செல்க

 

இலை

  • சிறிய  மெல்லிய  தண்டின் மீது  அதிகமான இலைகளைக் கொண்டிருக்கும். 

  • நீள் வட்ட தண்டின் இரு புறமும், மாற்றிலை அமைவுடன் இலைகள் அமைந்திருக்கும். பச்சைநிறத்தில் காணப்படும்.இலைகள் வரிசையாக, முழுமையாக வளரும்.

  • இலையுறை பட்டையாக, ஒன்றின்மேல் ஒன்றாக தண்டைச் சுற்றி காணப்படும். சில இடைக்கணுக்கள் வெளியே தெரியும்.

  • இலை பரப்பு தெளிவான நடு நரம்புடன், நுனியில் முடிக்கற்றைகளுடன் காணப்படும். இலைப்பரப்பு, நீண்டு, கூர்மையான நுனியுடன், மடிந்து கோடுகளுடன் காணப்படும்.

  • இலையின் வெளிப்புற வளர்ச்சி 1-2 மிமீ நீளத்துடன் புற நுண்ணிழைகளுடன் இருக்கும்.

  • நன்கு வளர்ந்த இலைகள், மேல் பாதிப் பகுதியில் இருந்து மடிந்து காணப்படும்.  எனவே, “மடிந்த இலைகள்” என்று அழைக்கப்படும்.

  • தண்டின் இடைக்கணுக்கள் ஒரே மாதிரியான  நீளத்துடன் இருக்காது.

  • தண்டின் அடிப்பாகத்தில் கணுக்கள் கூட்டமாக காணப்படுவதை ‘நெருக்கமான கணுக்கள்’ என அழைக்கப்படுகிறது.

  • தண்டுப்பகுதயில் 2-4 கணுக்கள் கூட்டமாக அமைந்திருக்கும்.

மேலே செல்க

 

கதிர்

  • தண்டின் நுனியில் மஞ்சரி (அ) கதிர் உருவாகும்.  முக்கிய கொத்திற்கு கீழே ஒன்று அல்லது அதற்க மேற்பட்ட 4-19 கிளைகளை உடைய இலைகளுடன் காணப்படும்.

  • செடியின் நீளமான காம்புப் பகுதியில் பூங்கொத்து தோன்றும். 3-20 எண்ணிக்கையிலான கதிர்கள் பறவையின் கால் அமைப்பு போன்று கதிர்க் கொத்தில் அமைந்திருக்கும். இது பார்ப்பதற்கு கையில் விரல்கள் அமைப்பு போன்று தோன்றுவதால் ‘பிங்கர் மில்லட்’ என்றழைக்கப்படுகிறது.

  • மலர்க் காம்புகள் தட்டையாக காணப்படும்.

  • கிளைகள், மெலிதாகவும், பருமனாகவும் காணப்படும். நீட்டமாகவும், நீள் உருண்டையாகவும், 24 செ.மீ நீளம் வரை கிளைகள்  இருக்கும்.  ஒவ்வொரு கிளையிலும் 60-80 கதிர்க் கிளைகள் தோன்றும்.

  • நான்கு வகையான கதிர்கள் உள்ளன. அவை  (1) மேல்புறம் வளைந்தவை (2) உட்புறம் வளைந்தவை (3) திறந்த நிலை கதிர் (4) மூடிய கதிர் ஆகும்.

  • உட்புறம் வளைந்த கதிரில், கதிர் கிளைகள் குட்டையாக, உள்நோக்கி வளைந்து,  கதிருக்கு தலைகீழ் முட்டை வடிவத்தை அளிக்கும்.

  • மேற்பகுதி வளைந்த கதிரில், கதிர் கிளைகள் நீட்டமாக இருக்கும்.  மத்தியில்  வெற்றிடமாகக் காணப்படும்.

  • திறந்தநிலைக் கதிரில், கதிர்கிளைகள் அதிக நீட்டத்துடன், புனல் போன்ற வடிவத்தில் காணப்படும்.

  • மூடிய  கதிரில், கதிர் கிளைகள் முழுமையாக உள்நோக்கி வளைந்து, உருண்டை வடிவத்தில் தெரியும்.

மேலே செல்க

 

கதிர்க்கிளைகள்

  • கதிரின் நுனிக் கிளைகளில் சிறிய கதிர் காம்பின் மீது கதிர்கிளைகள் காணப்படும்.

  • கதிர் கிளைகள், வளைந்து, கொத்தாக, 2-4 பூக்களுடன் காணப்படும்.

  • முட்டை அல்லது நீள்வட்ட வடிவத்திவ் 10 மிமீ வரை இருக்கும்.

  • கதிர் கிளைகள், காம்பில்லாமல் கதிர்காம்பின் ஒரு பக்கத்தில் இரண்டு வரிசைகளில் கதிர்காம்பின் மீது மாறி மாறி அமைந்திருக்கும்.  

  • சுமார் 70 கதிர்கள் ஒன்று விட்டு ஒன்றாக மாற்றமைப்புடன் காணப்படும்.  4-7 விதைகள் வரை ஒவ்வொரு கதிர் கிளையிலும் இருக்கும்.

  • ஒவ்வொரு கதிர் கிளையிலும் 3-7 பூக்கள், பூக்காம்புச் செதில் மற்றும் பூச்செதிலால் மூடப்பட்டிருக்கும்.

  • கீழ்க் கொம்பை, அகன்று, படகு போன்று, பக்க நரம்புடன் காணப்படும்.

  • மேல்க்கொம்பை, கீழ்க்கொம்பை போன்றே இருக்கும்.  ஆனால் சற்று நீளமாக இருக்கும்.
    கீழ் இரண்டு கொம்பைகள் 1-4 மிமீ  நீளத்துடன் மற்றும் 5-7 நரம்புகளுடன், கதிரில்லாமல் காணப்படும்.

  • இருபால் பூக்களை கொண்டிருக்கும்.  நுனிப்பூ சில சமயம் மலட்டுப்பூவாகவோ அல்லது ஆண் பூவாக   இரண்டு  வரிசையில் எதிர் எதிராக  சிவிரிதழ்களோடு அமைந்திருக்கும்.

  • பூக்கும் பூக்காம்புச்செதில் முட்டை வடிவத்தில் கூர்மையாக, 3 நரம்புகளுடன் 2-5 மிமீ நீளத்துடன் இருக்கும்.

  • பூச்செதில், பூக்காம்புச் செதிலைவிட சிறிதாக, இரண்டு படகு போன்று, இரு இறக்கைகளுடன் தோன்றும்.

  • இரண்டு அகன்ற சிவரிதழ்கள் இருக்கும். 3 மகரந்த கேசரம், மேல் சூலகம், இரண்டு தனி சூழ் தண்டுடன், சூழ் முடியுடன் பூக்கள் காணப்படும்.   

  • நான்கு வகையான கதிர் வகைகளிலும், கதிர்க்கிளை நீளம் வேறுபட்டிருந்தாலும், கதிர்க்கிளைப் பூக்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை.  ஒரு கதிர்க் கொத்தில் 67-73 கதிர்க் கிளைகள் காணப்படும்.

  • ஒவ்வொரு கதிர்கிளையிலும், கீழிருந்து மேல் நோக்கி பூக்கள் மலர்கின்றன.  ஒரு நாளைக்கு ஒரு பூ மலர்கிறது.  பூக்கும் காலம் முடிய  7-8 நாட்கள் ஆகும்.

மேலே செல்க

 

கதிர் மணி

  • கதிர் மணி உருண்டையாக, மென் தோலுடன், நிறமற்று நெருக்கமாக இல்லாமல் காணப்படும்.

  • தோல் நீக்கப்பட்ட தானியம், உருண்டை வடிவத்தில், பழுப்பு நிறம், சிவப்பு கலந்த பழுப்பு நிறம், கருப்பு, ஆரஞ்சு சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

  • மணியின் அடிப்பகுதி தட்டையாக, சிறு குழி போன்ற விதைத் தழும்புடன் காணப்படும்.

  • தானியத்தில் தோன்றும் சிறிய தட்டையான பகுதி, முளைக் கருவின் இருப்பிடத்தைக் காட்டும்.
    சூலகத்தின், இரண்டு சூல் உறைகளில் இருந்தும் விதை உறை உருவாகும்.  இது அடிப்பகுதியைத் தவிர, மற்றப் பகுதிகளுடன் ஒட்டாமல் காணப்படும்.

  • முதல் நிலைகளில், வெளிப்பகுதியை விட உட்பகுதிகளில், இரண்டு மடங்கு அதிகமான செல்கள் இருக்கும்.

  • வெளிப்புறத்தில் செல்கள் சுருங்குவதால், பல்வேறு சமமில்லாத மேடுகள் தோன்றும்.  முதிர்ந்த தானியத்தில் எண்ணற்ற அடர் அமைப்புகள் காணப்படும்.

மேலே செல்க

காட்சியகம்