காலநிலை

ராகி பயிர், ஓர் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல  பயிராகும். இது,  கடல் மட்டத்திலிருந்து, 2100 மீ உயரம் வரை மலை சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில்  சாகுபடி செய்யலாம்.  அதிக உயரம் உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய முடியும். இமலாயப் பகுதிகளில் 2300 மீ  உயரம் வரை நன்றாக வளர்கிறது.  மானாவாரியாகவும், பாசன வசதியிடனும்  பயிர் செய்யலாம்.  ஈரப்பதம் உள்ள காலநிலைகளிலும் நன்றாக வளரும்.  மழையளவு 100 செ.மீ வரை உள்ள பகுதிகளிரலும் வளரும்.  அதிக மழையளவும், நீர் பாசனமும் உள்ள இடங்களில், நடவுப் பயிராக சாகுபடி செய்யலாம்.  தென்னிந்தியாவில், கோடை மற்றும்  ராபி பருவப் பயிராகவும், வட இந்தியாவில், காரிப் பருவத்திலும் பயிர் செய்யப்படுகிறது.

 

காலநிலைக் காரணிகள்

 

அட்சரேகை மற்றும் கடல் மட்ட உயரம்

  • மத்திய ரேகையிலிருந்து, 45° வடக்கு வரை உள்ள பகுதிகளில் ராகி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

  • இந்தியாவில் உள்ள வேறுபட்ட கடல்மட்ட உயரம் மற்றும் காலநிலைகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

  • இந்தியாவில், 8-45° வடக்கு அட்சரேகைப் பகுதிகளில், 3000 மீ கடல்மட்ட உயரம் வரை  உள்ள சாகுபடி பகுதிகளில் செய்யப்படுகிறது.  எனினும், 1000-2000 மீக்கு அதிகமான  கடல்  மட்டப் பகுதிகளில், ராகி நன்றாக வளர்கிறது.

மேலே செல்க

 

வெப்பநிலை

  • ராகி ஒரு வெப்ப மண்டல  மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு சற்று அதிகமான வெப்பநிலை தேவை. (20-40º செல்சியஸ்)

  • ராகி பயிரின் வளர்ச்சிக்கு பகலில் 32° சி செல்சியஸ் மற்றும் இரவில் 25° சி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.

வளர்ச்சிப் பருவங்களும் அனுகூலமான வெப்ப நிலைகளும்

பருவம்

அனுகூலமான வெப்பம்  °சி (செல்சியஸ்)

முளைப்பு

25-32°

நாற்று வளர்ச்சி

25-30°

வேர் விடுதல்

25-28°

இலை நீளுதல்

31°

துார் பிடித்தல்

25-31°

கதிர் பிடிப்பு பருவம்

15-30°

மகரந்தக் காலம்

30-33°

முதிர்தல்

20-25°


மேலே செல்க

 

சூரிய ஒளி

  • பயிரின் வளர்ச்சிக்கு, சூரிய ஒளி மிகவும் அவசியமாகும்.

  • கதிர் முதிர்ச்சி அடையும் கடைசி 35-45 நாட்களுக்கு கிடைக்கப்பெறும் சூரிய ஒளியைப் பொறுத்து கேழ்வரகு மகசூல் அமையும்.

  • பயிர் முதிர்வு காலத்தில் குறைந்த வெப்பநிலையுடன் கூடிய, நல்ல சூரிய வெளிச்சம், கதிர் மணியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • குறைந்த பட்சம் 300 கலோரி/செ.மீ/நாள் சூரிய ஒளி தேவைப்படுகிறது.

  • சூரிய ஒளிகதிர் வீச்சு, 500-700 கலோரி/செ.மீ/நாள் க்குள் இருக்கும் பொழுது, நல்ல மகசூல் கிடைக்கிறது.

மேலே செல்க

 

மழை

  • சுற்றுச் சூழலை நிர்ணயிப்பதில் மழை முக்கிய பங்கு வகிக்கிறது. 

  • ஆண்டு சராசரி மழையளவு 700-1200 மீ இருக்கும் பகுதிகளில், கேழ்வரகு சாகுபடி நன்றாக செய்யலாம்.

  • அதிகமான மழையைத் தாங்ககூடிய சக்தி கேழ்வரகிற்கு இல்லை.  கதிர் முதிர்ச்சி அடையும் காலங்களில், மழையில்லாமல் இருக்கவேண்டும்.

  • மகரந்தக் காலங்களில் அதிக மழை பெய்தால், மலட்டுத் தன்மை வந்துவிடும்.

  • தேவையான மழையளவு இல்லாமல் போனால், மகசூல் குறைந்து விடும்.

மேலே செல்க

 

ஈரப்பதம்

  • மழைக் காலத்தில் அதிகமான ஈரப்பதமும், மழையில்லா காலத்தில், வறண்ட வானிலையும் நிலவுகிறது.

  • காற்றின் ஈரப்பதம் செடியின் நீர் சம்பந்தப்பட்ட செயல்களை நேரடியாக பாதிப்பதோடு இலை வளர்ச்சி, ஒளிச்சேர்க்கை, நோய் தாக்கம் மற்றும் மகசூல் ஆகியவற்றை மறைமுகமாக பாதிக்கிறது.

  • அதிகமான ஈரப்பதத்தில் செடியின் இலைகளில் பூஞ்சாண வித்துக்கள் நன்றாக முளைக்கிறது.

  • அதிகப்படியான நோய்களும், பூச்சிகளும் மழைக் காலத்தில் தாக்குகிறது.  அசுவுணி, செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள் கோடை காலத்தில் அதிகமாகத் தாக்கும்.

  • குளிர்காலத்தில்  குலைநோய் பொதுவாக பயிரைத் தாக்கும்.

மேலே செல்க

 

காற்று

  • பொதுவாக ராகி சாகுபடி மற்றும் உற்பத்தியை காற்று பெரிதாக பாதிப்பதில்லை.

  • லேசான காற்று, காற்றை கிளறிவிட்டு, கார்பன் டை ஆக்ஸைடு இலைப் பரப்பிற்கு கிடைக்கச் செய்கிறது.

  • புயல் காலங்களில் தோன்றும் வேகமான காற்று, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

  • மகரந்த சேர்க்கை காலத்தில் பலமான காற்று வீசினால் மலட்டுத் தன்மை ஏற்படுதோடு, கருச் சூழ்தசையும் சிதைந்து விடும்.

  • பூக்கும் பருவத்தில் பலமான காற்று வீசுவது பயிருக்கு நல்லதல்ல.

  • பூப்பு காலத்தில் வேகமாக காற்று வீசினால் மகரந்தம் உலர்வதால், கதிர் கிளைகள் மலடாகின்றன.

மேலே செல்க

காட்சியகம்