சாகுபடி நுட்பங்கள்

மண்


  • வளமான வண்டல் மண் முதல் ஆழமில்லாத மேட்டுநிலங்கள் வரை பல வகைப்பட்ட நிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

  • காற்றிடைவெளியுடைய, வடிகால் வசதியுடைய வண்டல் முதல் மிதமான செம் வண்டல் மண் மற்றும் நல்ல வளமுடைய மணல் கலந்த வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. எனினும் போதுமான அளவு நீர் பிடிப்புத் திறன் உள்ளமண் தேவை.

  • ராகி பயிர், நீர் தேங்கி நிற்பதை ஒரளவிற்கு தாங்கக் கூடியது.  நல்ல வடிகால்வசதியுடைய கரிசல் மண்ணில் சாகுபடி செய்யலாம்.

  • தென் இந்தியாவில் வளமுள்ள மண் வகைகள் முதல் செம்பொறை மண் மற்றும் கலந்த வண்டல் மண்ணில், ராகி சாகுபடி செய்யப்படுகிறது.

  • காரத்தன்மை சற்று அதிகமுள்ள மண்ணிலும் கேழ்வரகு நன்றாக வளர்கிறது.  மற்ற தானியங்களைப் போல், ராகிற்கும் ராக் பாஸ்பேட் உட்கொள்ளும் திறனுள்ளது.

  • அதிக இயற்கை வளம் மண்ணில்  இருக்க வேண்டும். ஆழமான மண் மற்றும் பாறை மண்ணில்வடிகால் வசதியிருக்காது. மேலும் மண்ணில் வளமும் குறைவாகவே இருக்கும். இதனால், ராகிசாகுபடிக்கு இம்மண் பொருந்தாது.

  • காரத்தன்மை 4.5 - 7.5 இருக்கும் மண்ணில், ராகி சாகுபடி செய்யலாம்.
    மழை வருவதற்கு முன் ஏரி வண்டல் மண், மண்ணிற்கு இடப்படுகிறது. பின்னர் நிலம், மூன்று முறை உழப்பட்டு, களைகள் மண்ணில் சேர்க்கப்படுகிறது.

  • வடிகால் வசதியுள்ள கடினமான களிமண் ராகி சாகுபடிக்கு பொருந்தாது.

மேலே செல்க

 

நிலத்தைத் தயார் செய்தல்


பாசனப்பயிர் மற்றும் மானாவாரி பயிருக்கு ஏற்றவாறு தனித்தனியாக நிலம் தயார் செய்ய வேண்டும்.  மழையளவு   60-70 செ.மீ உள்ள பகுதிகளில், கேழ்வரகு மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.  எனவே ஈரப்பதத்தை சேமிக்க நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.  பாசனப்பயிர் சாகுபடிக்கு, பருவ மழை துவங்கியவுடன் மண் நன்றாக புழுதி ஆகும் வரை உழ வேண்டும்.

நடவு வயலைத் தயார் செய்தல்

i. உழவு

பாசனப் பயிர் மானாவாரிப் பயிர்
  • இறக்கை கலப்பை கொண்டு, நிலத்தை இரண்டு முறையோ, நாட்டுக்  கலப்பை கொண்டு, முந்தைய பயிர் அறுவடை செய்தவுடனோ, பருவ மழை வந்தவுடனோ உழ வேண்டும்.

  •  பலுகுகள் அல்லது மரகட்டைகள் கொண்டு மண் கட்டிகளை உடைத்து, சமம்படுத்த வேண்டும்

  • பின்னர் பலுகுகள் கொண்டு மண்ணின் மேற்பரப்பை  சமமாக்கவும்

  • சட்டிப் பலுகு கொண்டு மண் புழுதியாகும் வரை நிலத்தை உழவேண்டும்.

  • சாகுபடிக்குரிய நிலத்தை பயிரிடுவதற்கு முன்பே, கோடை உழவு செய்து, ஈரப்பதத்தை சேமிக்க வேண்டும்

  •  ஏப்ரல் அல்லது  மே மாதத்தில் இறக்கை கலப்பை கொண்டு ஒரு முறை ஆழமாக உழுது, இரண்டு முறை  நாட்டு மரக்கலப்பை கொண்டும் உழவு செய்வதும் அவசியம்

  •  கொத்துக் கலப்பை அல்லது பலபல் கொண்ட கொத்து கொண்டு, நல்ல மென்மையான விதைப் பாத்திகள் விதைப்பிற்கு முன் தயார் செய்யவும்.

Irrigated Rainfed

மேலே செல்க

 


ii தொழு உரம் மற்றும் மக்கிய தொழு உரம் இடுதல்

பாசனப் பயிர்
  • 12.5 டன்/எக்டர் தொழு உரம், அல்லது மக்கிய தென்னை நார்க் கழிவை (கேரளா-5 டன்/எக்டர் தொழுஉரம் (அ) மக்கிய குப்பை) உழுகாத நிலத்தில் சமமாக இட்டு, பிறகு நிலத்தை  உழுது மண்ணில் சேர்க்க வேண்டும். (தொழு உரத்தை பரப்ப வேண்டாம், மூடாமல் அப்படியே விட்டு விடவும், ஏன் எனில் சத்துக்கள் குறைந்து விடும்.)

  •  உயிர் உரமிட்டு மண் வளத்தை உயர்த்துதல்: அசோஸ்பைரில்லம் 2 கிலோ/எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா (2 கிலோ/எக்டர்) போன்ற பரிந்துரை செய்யப்பட்ட உயிர் உரங்களை, 20-25 கிலோ தொழு எருவுடன் கலந்து, ஒரு இரவு வைக்க வேண்டும்.  இந்த கலவையை விதைப்பு அல்லது நடவின் போது இட வேண்டும்.

மேலே செல்க


iii. உரமிடுதல்

பாசனப் பயிர் மானாவாரிப் பயிர்
  • தமிழ்நாடு: விதைப்பின் போது, தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து 30:30:30 கிலோ/எக்டர் இட வேண்டும்.

  • கர்நாடகா: விதைப்பின் போது, தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து 50:50:50 கிலோ/எக்டர் இட வேண்டும்.

  • நடவிற்கு முன், 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் 10 பாக்கெட்/எக்டர்(2 கிலோ) அசோஸ்பைரில்லம் கலந்து இட வேண்டும்.

  • மற்றொரு முறை:  கோயமுத்தூரில் 2 டன் செறிவூட்டப்பட்ட தொழு உரத்துடன் 100 % சாம்பல் சத்து மற்றும் மணிச்சத்து இட்டு அதிக மகசூல் பெற்றுள்ளனர்.

  • தமிழ்நாடு: விதைப்பின் போது, 20:20:20 கிலோ/எக்டர் தழை, சாம்பல் மற்றும் மணிச்சத்து இட வேண்டும்

  • கர்நாடகா: விதைப்பின் போது, 30:37 கிலோ/எக்டர் தழை மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.
     நடவிற்கு முன், 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன்  10 பாக்கெட்/எக்டர் (2 கிலோ) அசாஸ்பைரில்லம் கலந்து இட வேண்டும்.

  • மற்றொரு முறை:  கோயமுத்தூரில்,  2 டன் செறிவூட்டப்பட்ட தொழு உரத்துடன், 100% சாம்பல் சத்து மற்றும் மணிச்சத்து இட்டு அதிக மகசூல் பெற்றுள்ளனர்.

மேலே செல்க


iv. பாத்திகள் மற்றும் வாய்க்கால் அமைத்தல்

  • வயலின் நில அமைப்பைப் பொருத்து 10மி2 -20மி2 அளவுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும்.

மேலே செல்க

 


v. நுண்ணூட்டக் கலவை இடுதல்

  • ஒரு எக்டருக்கு, வேளாண் துறை உருவகப்படுத்தியுள்ள 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 50 கிலோ மணலுடன் கலக்க வேண்டும்

  • நுண்ணூட்டக் கலவையை, பாத்திகளில் சமமாக இட வேண்டும்

  • கலவையை மண்ணில் இட்டு கலக்க வேண்டாம்

மேலே செல்க


விதைத்தல் & நடவு செய்தல்


நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு எக்டருக்கு 4-5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பயிர் எண்ணிக்கை இருந்தால், மகசூல் குறையும். கேழ்வரகு சாகுபடியில் பல முறைகள் உள்ளன. 

  • மானாவாரி ராகி சாகுபடி முறையில், தானிய வகையல்லாத பயிர்களும் ஊடுபயிர் செய்யப்படுகிறது.

  • பாசனப்பயிர் முறையில் தனிப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

கீழ் வரும் முறைகள், பாசனப்பயிர் மற்றும் மானாவாரிப் பயிர்களில் பின்ப்பற்றப்படுகிறது.

மேலே செல்க

 

நேரடி விதைப்பு


நாற்றுகள் வளர்த்தல் மற்றும் நடவு செய்தல் இல்லாமல், விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.  பருவமழை துவக்கத்திற்கு முன் அல்லது மழையின் போது, தயார் செய்யப்பட்ட நிலத்தில் விதைகள் விதைக்கப்படுகிறது.  கீழ் வரும் முறைகளில், ராகி மண்ணில் விதைக்கப்படுகிறது.

i. விதைகளைத் தூவும் முறை

  • விவசாயிகள் இம்முறையே அதிகம் பின்பற்றுகின்றனர்.

  • விதையளவு - 10-15 கிலோ/எக்டர்

  • விதைகளைத் தூவும் முறையில்,விதைகள் நேரடியாக வயலில் விதைக்கப்படுகிறது. 

  • நிலம் முழுவதும் பரவும் வகையில் தூவ வேண்டும்.

  • விதைகளை ஏதாவது கலவைப் பொருளுடன் கலந்து, சுலபமாக கையால் விதைக்க வேண்டும்.

  • விதைத்து  24 மணி நேரத்திற்குள், விதைகளில்  ஈரம் இருக்க வேண்டும்.

  • 10-20 கிராம் அளவு உள்ளவாறு கையளவில் விதைகளை எடுத்து 7-15 மீட்டர் வரை தூவலாம்

மேலே செல்க

 


ii. வரிசை விதைப்பு முறை

  • விதைகளைத் தூவும் முறையை  விட இம்முறை நல்ல முறையாகும்
    வயலில் வரிசையாக விதைகள் விதைக்கப்படுகிறது.

  • வரிசைக்கு வரிசை  22.5-30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 8-10 செ. மீ இடைவெளியும் விட வேண்டும்

  • 3 - 4 செ. மீ  ஆழத்திற்கு குறைவாக விதைகளை விதைக்கக் கூடாது.

  • வரிசை விதைப்பு, அதிக முளைப்பிற்கு வழி செய்வதோடு, குறைவான விதையளவே தேவை.  விதைகளைத் தூவும் முறையை விட, வரிசை விதைப்பில், இடை உழவிற்கான இட வசதி நன்றாக இருக்கும்.

மேலே செல்க

 


iii. வரிசைகளில் விதைகளை ஊன்றுதல்

  • ராகி விதைகள் மிகவும் சிறியதாக உள்ளதால் (400 விதைகள்/கிராம்) ஒரு எக்டருக்கு 10-15 கிலோ விதைகள் (4 மில்லியன் விதைகள்) போதும். விதையிடும் கருவியைப்  பயன்படுத்தி, செடிக்கு செடி 7.5-10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.

  • வரிசை விதைப்பில் விதை மற்றும் உரம் இடும் கருவி மூலம் விதை, உரம் மண்ணில் இடப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிக்குக் கிடைக்கப் பெறுகிறது.

  • வேலையாட்கள் மூலம் எருதுகளை கொண்டு விதையிடும் கருவி மூலம் விதைகள் வரிசைகளில் விதைக்கப்படுகிறது.

மேலே செல்க

 


நடவுப் பயிர்


நாற்றுகளை நாற்றங்காலில் பராமரித்து, பின்னர் நடவு வயலில் நடவு செய்யப்படுகிறது.

அ. நாற்றுகளை நடவு செய்தல்

  • நடவின் போது  பாத்தி சமமாக இல்லையெனில் சமப்படுத்த வேண்டும். பின்பாத்திகளில் நீர் பாய்ச்ச வேண்டும்.

  • 3-4 வார வயது நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும் சாதாரண நடவில், ஒரு குத்துக்கு 2-3 நாற்றுகள் நட வேண்டும்.

  • நடவு தாமதிக்கப்படும் போது, குத்துக்கு 4-6 நாற்றுகள் பயன்படுத்த வேண்டும்முன்காரீப் மற்றும் ராபி பருவங்களில், 21-25 நாட்கள் வயதுடைய நாற்றுகளை 25 செ. மீ x 10 செ. மீ இடைவெளியில் நட வேண்டும்

  • பின் காரீப் பருவத்திற்கு, 25-28 நாட்கள் வயதுடைய நாற்றுகளை 30 x 10 செ. மீ இடைவெளியில் நட வேண்டும்நாற்றுகளை 2-3 செ. மீ ஆழத்தில் நட வேண்டும். 
    இதனால் ஆழமாக நடும் போது, தூர்கள் பிடிக்கவும், வேர் மறு உயிர் பிடிக்கவும் தாமதமாகிறது.  மேலும் பூப்புப் காலமும் பயிர் முதிர்வு காலமும் பின்னடைகிறது.

  • வரிசைகளில் சரியான இடைவெளியில் நடவு செய்து, 1 மீட்டரில் சீரான அளவு கதிர்களை பராமரிக்க வேண்டும் .  இது  பின் செய்யக்கூடிய இடையுழவு முறைகளை எளிதாக்குகிறது.  ஆங்காங்கே முறையற்ற நடவு செய்வதன் மூலம், தூர்கள் சீராக வளராததோடு, கதிர்களின் எண்ணிக்கை குறைகிறது.

  •  ஒரு எக்டருக்கு 5 பாக்கெட் (1000 கிராம்) அசோஸ்பைரில்லத்தை எடுத்து, 40 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.  செடியின் வேர்ப் பகுதியை கரைசலில் 15-30 நிமிடம் ஊற வைத்து, பின் நாற்றுகளை நட வேண்டும்

  • நடவிற்கு முன், 0.1% கார்பன்டெசிம் கரைசலில், இலைப் பகுதிகளை நனைத்து, நடவு வயலில் நடவு செய்து, குலை நோயைத் தவிர்க்க வேண்டும்.

  • நடவு செய்த 3 ஆம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். மடிந்த, நாற்றுகளுக்கு பதிலாக புதிய நாற்றுகளைக்  கொண்டு ஒரு வாரத்திற்குள் நட வேண்டும்

ஆ.வயதான நாற்றுகளை பராமரித்தல்

  • 21 நாட்களுக்கு அதிகமான வயதுடைய நாற்றுகளை நடவு செய்யும் போது, ஒரு குத்துக்கு 3 நாற்றுகள் எனவும், 25% அதிகமான தழைச்சத்து இட்டு நட்டால் , மகசூல் இழப்பை தவிர்க்கலாம்

  • மானாவாரி பயிரில் அதிக மகசூல் பெற சரியான அளவு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். குறைவான மழையளவு உள்ள பகுதிகளில், விதைப்பிற்கு பின் தேவையான அளவு ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத்திறன் பாதிக்கும்.  இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றுகளுக்கு, வீரியம் உண்டாவதுடன், வறட்சியைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது.

விதை கடினமாக்குதலின் செய்முறை:

படிநிலை 1: விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.  1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் பயன்படுத்த  வேண்டும்

படிநிலை 2: தண்ணீரை வடித்துவிட்டு, விதைகளை ஈரத்துணியில், 2 நாட்கள் கட்டி வைக்க வேண்டும்

படிநிலை 3: இந்நிலையில், விதைகள் முளைக்கத் துவங்கிவிடும்

படிநிலை 4: ஈரத் துணியில் இருந்து விதைகளை அகற்றி, பின் வறண்ட துணியில் போட்டு, 2 நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும்

படிநிலை 5: இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

மேலே செல்க


பயிர்த்திட்டம்


எந்தவொரு பண்ணைத் திட்டத்திற்கும், பயிர்த்திட்டம், அதாவது பயிரிடும் முறை, ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.  ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் பயிரிடப்படும் பல பயிர்களின் விகிதப் பரப்பை பயிர்த்திட்டம் என்கிறோம்.  இயற்கையைப் போன்றே,  பண்ணைத் திட்டத்திலும் வேறுபாட்டை கொண்டு வருவதற்கு பயிர்த்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.  பொதுவாக பின்பற்றப்படும் பயிர்த்திட்ட முறைகள் யாதெனில்,

மேலே செல்க

 

பயிர் சுழற்சி


  • ஒரு வருடத்திற்குள்  ஒவ்வொரு பருவத்திற்கோ (அ) ஒவ்வொரு வருடத்திற்கோ ஏற்றவாறு பயிர்களை ஒரு திட்டமிட்ட தொடர்படி சகுபடி செய்வதே பயிர் சுழற்சி முறையாகும்.  பாசனப்பயிர் சாகுபடியில், மிளகாய், காய்கறிகள், மஞ்சள், புகையிலை, கடுகு, வால் கோதுமை, ஆளிவித்து போன்ற பயிர்களுடன் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.  பயிர் சுழற்சி முறையில், இராசயன உரங்கள் இடுவதைக் குறைக்கப்படுவதோடு, நிலையான மகசூலுக்கும் வழி செய்கிறது.

  • கேழ்வரகு- மக்காச்சோளம் (2 வருட பயிர்சுழற்சி) முறை கேழ்வரகு-கேழ்வரகு முறையை விட அதிக மகசூல் கொடுக்கிறது.


வட மற்றும் தென்னிந்தியாவில் பின்பற்றப்படும் சில பொதுவான பயிர் சுழற்சி முறைகள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது,

வட இந்தியா

தென் இந்தியா

ராகி-கடுகு

ராகி -புகையிலை

ராகி- பயிர்கள்

ராகி -நிலக்கடலை

ராகி-வால் கோதுமை

ராகி -உருளைக்கிழங்கு-மக்காச்சோளம்

ராகி-ஆளிவித்து

ராகி -உருளைக்கிழங்கு-கேழ்வரகு

ராகி-புகையிலை

ராகி -கரும்பு

 

தென் கர்நாடகாவில் ஆமணக்கு, கொள்ளு, துவரை, பச்சைப்பயிர், ஊளுந்து மற்றும் காராமணி போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யப்படுகிறது,

வருடம்

பருவம்

பயிர் சுழற்சி

நன்மைகள்

முதல் வருடம்

காரீப்

ஆமணக்கு மற்றும் கொள்ளு

குறைவான சாகுபடி செலவு, மண் வளமாகுதல் மற்றும் வறட்சியை தாங்கும் திறன் பெறுதல்

இரண்டாம் வருடம்

காரீப் - ராபி

துவரை

பல அறுவடை, சாகுபடி செலவு அதிகமில்லை. நிலம் திறம்பட பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாம் வருடம்

காரீப்

பச்சைப்பயிர், உளுந்து, காராமணி

மண்ணில் தழைச்சத்தை  நிலைப்படுத்துகிறது. கால்நடைத் தீவனம் கிடைக்கிறது. மானாவாரி நிலங்களில் இருபோக சாகுபடி முறை மேற்கொள்ள முடிகிறது.

 

மேலே செல்க

 

ஊடு பயிரிடுதல்


ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இரண்டு பயிரையோ அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களையோ சாகுபடி செய்யும் முறை ஊடுபயிரிடுதல் எனப்படும்.  விரைவில் வளரக்கூடிய பயிரை மெதுவாக வளரக்கூடிய பயிருடன் இணைந்து சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி சூழலில் சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிறு வகைகளுடன் ராகி கலப்புப் பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்யப்படுகிறது.  பொதுவாக ராகி பயிருடன் அவரை, துவரை, காராமணி மற்றும் பேய் எள்ளு போன்றவை சார்பு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.  நிலக்கடலையுடன் ராகி  சார்பு பயிராக பயிரிடப்படுகிறது.  மலைப்பகுதிகளில்  சோயாபீன்சுடன் கலப்புப் பயிரிடப்படுகிறது.  பொதுவாக பின்பற்றபடும் சில பயிர் சுழற்சி முறைகளை கீழ் வருமாறு தரப்பட்டுள்ளது:

  • ராகி+துவரை கலவை 8:2 அல்லது 6:2 விகிதத்தில் அதிக  மகசூல் தருகிறது

  • ராகி +அவரை, 8:1 விகிதத்தில் அதிக உற்பத்தி திறனை கொடுத்துள்ளது

  • ராகி +தீவனச் சோளம் 8:1 விகிதத்தில், கர்நாடகாவில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியுள்ளது

  • ராகி +உளுந்து (அ) பச்சைப்யிர் 8:2 விகிதத்தில், அதிக லாபம் தரக்கூடிய கலவையாகும்.

மக்காச்சோளம் மற்றும் தானிய ஊடுபயிர் முறை அதிக மகசூல் தருகிறது.  இந்த ஊடுபயிர் முறை தானியத்தில் நோய் தாக்கத்தை குறைப்பதோடு, பயிர் சாய்வதையும் குறைக்கிறது.  தனிப்பயிரை விட இவ்வாறு கலப்புப்பயிர் செய்வதன் மூலம் 5-25% அதிக மகசூல் கிடைக்கிறது.  ராகி (நடவு) மற்றும் துவரையை 4:1 என்ற வரிசை விகிதத்தில் ஊடுபயிர் செய்தால், ராகி பயிரின் நிகர மகசூல் (66 குவின்டால்/எக்டர்) மற்றும் நிகர லாபம் (ரூ. 20,000/எக்டர்) மானாவாரி சூழலில் நன்றாக உள்ளது.  ராகி பயிருடன் கடுகு ஊடு பயிர் செய்யப்படுகிறது.  ஏன்னெனில், கடுகுபயிர், ராகியின் முதன்மை பருவத்திலேயே பூப்பிற்கு வந்து பொறி வண்டுகளை கவர்கிறது.  இதனால் அசுவுனி பூச்சித்தாக்கம் ராகியில் கட்டுப்படுத்தப்படுகிறது.  மழை பொய்க்கும் பொழுது, கடுகு காப்பீட்டு பயிராக ஆதாரமளிக்கிறது.

மேலே செல்க

 

கலப்புப் பயிர்


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே நிலத்தில் பயிர் செய்வது கலப்பு பயிரிடும் முறையாகும்.  இப்பயிரிடும் முறையால் மண் வளம் அதிகரிக்கிறது.  பயிரின் மகசூல் அதிகரிப்பதோடு, இரண்டு பயிர்களை கவனமாக தேர்வு செய்து, சாகுபடி செய்யும் பொழுது ஒரு பயிர் மற்றொரு பயிரின் வளர்ச்சிக்கும், மற்றொரு பயிர் அடுத்த பயிர் வளர்ச்சிக்கும் உதவி என கூட்டாக வளர்கின்றன.  எதிர்பாராத வானிலை காரணிகளால் பயிர் பொய்க்கும் பொழுது, கலப்பு பயிர் காப்பீடாக விளங்குகிறது.  கலப்புப் பயிர் முறையில் பயிர்களிடையே  ஒளி நுண்ணூட்டம் மற்றும் தண்ணீருக்காக ஏற்படும் போட்டி குறைகிறது.  நீர் பற்றாக்குறை அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஒரு பயிர் பொய்த்தால் கூட மற்றொரு பயிர் அதன் பாதிப்பை ஈடு செய்து விடும். விவசாயிகளின் குடும்பத் தேவைகளுக்காகவும், சுய தேவைக்காகவும் கலப்புப்பயிர் முறை பின்பற்றப்படுகிறது.  எனவே, குடும்பத் தேவைகளைப் பொருத்து கலப்புப்பயிரில் சேர்க்கப்படும் பயிர் வகைகளின் எண்ணிக்கை வேறுபடும்.


கம்பு, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, பயிர்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களுடன் ராகி கலப்புப் பயிராக பயிரிடப்படுகிறது.

மேலே செல்க

 

வரிசை வரிசையான பயிரிடும் முறை


இம்முறையில் ஊடுபயிர் செய்யப்படும் பயிர் வயலின் தலைப்பயிருடன் சேர்த்து வரிசை     வரிசையாக, தலைப்பயிர் மற்றும் ஊடுபயிர் என மாறி மாறி பயிர் செய்யப்படுகிறது.  நிலத்தின் சாய்விற்கு குறுக்கே பயிர் செய்யப்படுகிறது.  நீர் வழிந்தோடுவதை தடுக்கிறது.  வரிசை     வரிசையாக பயிரிடும் முறைகள் சிலவற்றை கீழே காணலாம்.

        நிலக்கடலை + ராகி 9:6 விகிதம்


மைசூர் பகுதிகளில் கரும்புப் பயிருடன் ராகி 4:2 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யப்படுகிறது.


ராகி+அவரை/துவரை பயிர்களை 3:1 என்ற விகிதத்தில் வரிசைகளில் பயிர் செய்கிற பொழுது, அதன் உற்பத்தி திறன் அதிகரித்தது.

மேலே செல்க

 

இடையுழவு முறைகள்


இடையுழவு செயல்பாடுகளினால் மண் மென்மையாகி, எளிதாக உதிரக்கூடிய நிலைய அடைகிறது.  மண்ணின் ஈரம் சேமிப்பிற்கு உதவுவதுடன், இயற்கை உரத்தை மண்ணுடன் கலக்கிறது.  வயலில் தேவையற்ற செடிகளை கையால் பிடுங்கியோ, கைகொத்து  கொண்டோ, களைக் கொல்லி தெளித்தோ அகற்றப்படுகின்றன.  களையெடுப்பதால் இடம்,  ஊட்டச்சத்து மற்றும் தண்ணீருக்காக பயிருடன் ஏற்படும் போட்டி தவிர்க்கப்பட்டு, பயிர்கள் செழிப்பாக வளர்க்கின்றன.  ராகி பயிருக்கு களையெடுத்தல் என்பது மிகவும் அவசியமான இடையுழவு முறையாகும்.

 

i. கர்நாடகாவில்  இடையுழவு முறைகள்


நடவு செய்யப்பட்ட ராகி சாகுபடி முறையில் இடையுழவும், கை களையெடுத்தலும் எளிது.

  1. நடவு செய்த 30 நாட்களுக்கு பிறகு கைக்கொத்து கொண்டு இடையுழவு (குடலி) செய்யவேண்டும்.

  2. இடையுழவு செய்த 10 நாட்கள் கழித்து, கைக் களையெடுக்கும் கருவி (கர்நாடகா-களகுடுலு) கொண்டு முதல் களையெடுக்கவேண்டும்.

  3. அதே கருவியைக்  கொண்டு  ஐந்து நாட்கள் கழித்து இரண்டாம் களை யெடுக்கவேண்டும்

ராகி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் எருதுகள் கொண்டு இடையுழவும் களையெடுப்பதும் செய்யப்படுவதில்லை.  ராகி தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது நான்கு   இடையுழவு முறைகள் பின்பற்றப்படுகிறது.  அவை அடர்வான இடங்களில் நாற்றுகளைக் களைத்தெடுத்தல் மற்றும் இடையுழவு, எருதுகள் இழுக்கும் கருவி கொண்டு களையெடுத்தல், கை களையெடுத்தல் போன்றவை ஆகும்.



அளவுக்கு அதிகமான நாற்றுகளை களைத்தெடுத்தல் மற்றும் இடையுழவு:-

அ. விதைத்து 15 நாட்கள் கழித்து மாடுகள் கொண்டு கொழுமுனைப் பலுகுகள் மூலம், முதல் முறையாக நாற்றுகளை களைத்தெடுத்து இடையுழவு செய்யவேண்டும்.  இந்த சமயத்தில் ராகி முளைத்து வளர்ச்சியின் முதல் நிலையில் இருக்கும்.  மிக அடர்த்தியாக விதைக்கப்பட்டதால், ராகியில் களைத்தெடுத்தல் அவசியம்.  இதனை இரண்டு பலுகுகள் உடைய, ஒவ்வொரு பலுகிலும் நான்கு கொழுமுனைகள் கொண்ட கருவியை எருதுகள் பயன்படுத்தி விதைத்த வரிசையின் குறுக்காக இழுத்து களைத்தெடுக்கப்படுகிறது.

ஆ. முதல் முறை களைத்தெடுத்த 4-5 நாட்கள் கழித்து, இரண்டாம் முறை நாற்றுகளை களைத்தெடுக்கவேண்டும்.  முதன் முறையில் பயன்படுத்திய அதே கருவிகளும், முறைகளும் பயன்படுத்தப்படுகிறது.  களைத்தெடுத்த இளம் நாற்றுகள் வரிசைகளில் உள்ள முளைக்காத இடங்களில் நட பயன்படுத்தப்படுகிறது



களைக்கருவி கொண்டு களையெடுத்தல்:-

அ. இரண்டாம் முறை நாற்றுகளை களைத்தெடுத்த 10 நாட்களுக்கு பிறகு, எருதுகள் கொண்டு முதல் களை எடுக்கவேண்டும். கர்நாடகாவில் இரண்டு கத்திகளும், 4 கொழு முனைகளும் கொண்ட “தர்லே” என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.  முதல் மற்றும் இரண்டாம் கொழு பயன்படுத்தப்படுகிறது.  முதல் மற்றும் இரண்டாம் கொழு முனைகளுக்கு இடையில் முதல் கத்தியும், மூன்றாம் மற்றும் நான்காம் கொழு முறைகளுக்கிடையில் இரண்டாம் கத்தியும் பொருத்தப்பட்டுள்ளது.  இக்கருவி வரிசைகளுக்கு இடையில் உள்ள களையை அகற்றுகிறது.  “தர்லே” மண்ணைக் கிளறிவிடுவதில்லை,  களைகளை மட்டும் அகற்ற பயன்படுகிறது.

ஆ. முதல் கைக்களையெடுத்த 10-12 நாட்களுக்கு பிறகு  கைக்களையெடுக்கும்  கருவி “கிளைகுடுலு” கொண்டு, வரிசைகளுக்கு இடையில் உள்ள களைகள் அகற்றப்படுகிறது.  களைகள் அதிகமாகக் காணப்பட்டால் ஒரு வாரத்திற்கு முன்னரே களையெடுக்கத் தொடங்குகின்றனர். இந்த வேலையை பெரும்பாலும் பெண் வேலையாட்களே செய்கின்றனர்.


கை களையெடுத்தல்:-

அ. முதல் களையெடுத்தவுடன், 4-5 நாட்கள் கழித்து எருதுகள் கொண்டு  “தர்லே” கருவியை பயன்படுத்தி களையெடுக்கப்படுகிறது.

ஆ. அதன் பின் ஒரு வாரம் கழித்து இரண்டாம் கைக்களை எடுக்கப்படுகிறது.  கிளைகுடுலு கொண்டு வரிசைகளுக்கு இடையில் உள்ள களைகள் அகற்றப்படுகிறது


இடையுழவு

  • இரண்டாம் கைக்களை எடுத்த 10-12 நாட்களுக்கு பிறகு, ஒரு ஜோடி எருதுகள் கொண்டு குண்டே கருவியை பயன்படுத்தி இடையுழவு செய்யப்படுகிறது.  இரண்டு கொழு முனைகள் கொண்ட குண்டே பயன்படுத்தப்படுகிறது.

  • இரண்டு கொழு முனைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தி, ராகியின் இரு வரிசைகளுக்கு  இடையிலும் வேலை செய்து கொள்கின்றனர்.

  •  ராகிப் பயிரின் வரிசைகளுக்கு இடையில் “குண்டே” கருவியை இழுத்து, வரிசைகளுக்கு இடையில் உள்ள மண்ணைக் கிளறி விடுகின்றனர்.

  •  விதைத்த இரண்டு மாதங்கள் கழித்து அல்லது செப்டம்பர் மாத பாதியில் இடையுழவு செய்யப்படுகிறது.  அச்சமயத்தில், சாதாரணமாக தென் மேற்கு பருவமழை இருக்கும்

  •  மழைக்கு பின்னர், இடையுழவு செய்யப்படுகிறது.  இதனால் அடி மண்ணில் ஈரம் சேமிக்கப்பட்டு வரிசைகளுக்கு இடையே உள்ள களைகள் அகற்றப்படும்.

மேலே செல்க

 

ii. தமிழ் நாட்டில் இடையுழவு முறைகள்


களையைக்  கட்டுப்படுத்தவும், மண்ணை காற்றோட்டமாக வைக்கவும் இடையுழவு முறை தேவை.  கைக்களை கொண்டு களையை அகற்றி மண்கட்டிகளை உடைத்து, வேரக அடுக்கு பகுதிகளைக் காற்றோட்டமாக்கலாம்.  பயிரின் துவக்க கால வளர்ச்சிப் பருவங்களில் களைக்  கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  விதைத்த 25 நாட்களில், கைக் கொத்து கொண்டு களையெடுத்து இடையுழவு செய்யவும்.  இரண்டு அல்லது மூன்று முறை களையெடுத்தால் போதும்.  பாசனபயிர் மற்றும் மானாவாரிப் பயிருக்கு வெவ்வேறு இடையுழவு முறைகள் பின்பற்றப்படுகிறது.

மேலே செல்க

 

a.பாசன கேழ்வரகு பயிர்


a.களைத்தெடுத்தல்

ராகியை அடர்த்தியாக விதைத்துள்ளதால் விதைத்த 15 நாட்களுக்கு பிறகு களைத்தெடுப்பது மிகவும் அவசியம்.  பொதுவாக கையால் அடர்த்தியான நாற்றுகளை களைத்தெடுக்கலாம்.  அகற்றப்பட்ட இளம் நாற்றுகளை வரிசைகளில் முளைக்காத இடத்தில் நட வேண்டும்.

b. களை மேலாண்மை

  • நடவு செய்த 10 ஆம் நாள் மற்றும் 20 ஆம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.  விதைத்த 25 நாட்களில் கைக்கொத்து கொண்டு இடையுழவு செய்து களை எடுக்கவேண்டும்.  இரண்டு அல்லது மூன்று முறை களையெடுத்தால் போதும்.

  • இளகிய மண்ணில், நடவு செய்த 15 ஆம் நாளிலும் கடினமான மண்ணில் 17 ஆம் நாளிலும், கொத்து கொண்டு மண்ணை கிளறி விட்டு கைக்களை யெடுக்கவேண்டும்.  பிறகு 30 மற்றும் 32 ஆம் நாளில் இளகிய மற்றும் கடினமான மண்ணில் மறுமுறை செய்யவேண்டும்.

  • களைகளை 2-3 நாட்கள் காயவிட்டு, பிறகு நீர் பாய்ச்சவேண்டும்.

  •  பியூட்டாகுளோர் 2.5லி/எக்டர் (அ) புளுகுளோரலின்2லி/எக்டர்(அ) பென்டிமெத்லின் 2.5லி/எக்டர் களைக் கொல்லியை 900 லிட்டர் தண்ணீர்/எக்டர் என்ற அளவில், காற்றழுத்த முறையில் இயங்கும் முதுகில் சுமக்கும் தெளிப்பான்/கையால் அசைத்து இயக்கும் தெளிப்பான் (தட்டை விசிறி தெளிப்புமுனை) கொண்டு தெளிக்கவேண்டும்.

  •  மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும் போதும் களைக் கொல்லி தெளிக்கவேண்டும்  அல்லது களைக் கொல்லியிட்டவுடன் உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.

  • முளை முன் களைக் கொல்லி பயன்படுத்தவில்லையெனில், நடவு செய்த 10 மற்றும் 20 ஆம் நாளில் இரண்டு முறை கைக்களையெடுக்கவேண்டும்.

மேலே செல்க

 

b. மானாவாரி ராகி


  • வரிசை விதைப்பு பயிருக்கு 2-3 இடையுழவு அவசியம்

  • மழை உத்திரவாதமுள்ள இடங்கள் மற்றும் பாசன வசதி உள்ள இடங்களில், 2,4 D சோடியம் உப்பு @ 1.25 கிலோ/எக்டர் (அ) அட்ரசின் 2.5 கிலோ/எக்டர் போன்ற முளைத்த பின் களைக்  கொல்லி பயன்படுத்தி, களையைக்  கட்டுப்படுத்தவேண்டும்.

  • ஐசோபுரோடியுரான் @ 0.5 a.i /எக்டர் (அ) 1 கிலோ/எக்டர் என்ற முளை முன் களைக்கொல்லி தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம்.

  • கைவிதைப்பு பயிரில் இரண்டு முறை கைக்களை எடுத்து களையைக் கட்டுப்படுத்தவேண்டும்.  ஏன்னெனில் இதில் இடையுழவு செய்ய முடியாது.

  • மண்ணில் ஈரத்தைப் பொறுத்து, விதைத்த 10 ஆம் நாள் கழித்து, 2,4 DEE (அ) 2,4 டி சோடியம் உப்பு போன்ற முளைத்த பின் களைக்  கொல்லி பயன்படுத்தவேண்டும்.

மேலே செல்க

காட்சியகம்