| 
        நிறுவனங்கள்              
             
             
             
          
            
              | மாநில அளவிலான நிறுவனங்கள்  | 
                | 
             
            
              தமிழ்நாடு: 
                 
                நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர் 
                
                - நெல் பரிசோதனை நிலையம் ஆக 1942 ல் உருவாக்கப்பட்டது.
 
                - 1982 ல் நெல் ஆராய்ச்சி நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
                - இதுவரை வெளியிடப்பட்ட இரகங்கள் - டி.கே.எம் 1 முதல் டி.கே.எம் (ஆர்) 12.
  
                  | 
                | 
             
            
              முக்கியச் செயல்பாடுகள்: 
                - மேட்டு நிலம், மானாவாரி மற்றும் பாசன நிலங்களுக்கேற்ற அதிக மகசூல் தரும், தரமான நெல் இரகங்களை உருவாக்குதல்.
 
                - களர்,உவர் மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்ற இரகங்களை உருவாக்குதல்.
 
                - டி.கே.எம் 9, டி.கே.எம் 11 மற்றும் டி.கே.எம் (ஆர்) 12, ஏ.டி.ட்டி, 43, ஏ.டி.ட்டி (ஆர்) 45. ஆகிய ரகங்களுக்கு கரு மற்றும் வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்தல்.
 
                - குலைநோய்,துங்ரோநோய்,இலைகீறல்நோய்,இலைமடக்குப்புழு,மற்றும்கரு வண்டு எதிர்ப்பு இரகங்களை உருவாக்குதல்.
 
                - ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை உருவாக்குதல்.
 
                - திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்த்த விவசாயிகளுக்கும், விரிவாக்க அலுவலர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்தல்.
 
  
                  தொடர்புக்கு: 
                  நெல்  ஆராய்ச்சி நிலையம், திரூர் - 602 025.  
சேவாபேட்டை ரோடு, திருவள்ளூர்மாவட்டம்.               | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை. 
               
                  
                  - 1912 ல் மங்காநல்லுாரில் முதல் ஆராய்ச்சி  நிலையம்.
 
                  - 1922 ல் வேளாண் ஆராய்ச்சி நிலையமாக, ஆடுதுறைக்கு மாற்றப்பட்டது.
 
                    - 1962 ல் மண்டல ஆராய்ச்சி நிலையமாகப் பெயர்  மாற்றம் செய்யப்பட்டது.
 
                    - 1973 ல்  பல்கலைக்கழக ஆராய்ச்சி  நிலையம்,  மாநில மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்  துவக்கப்பட்டது.
 
                    - 1981 ல் ஆராய்ச்சி மையங்கள் இணைக்கப்பட்டு  தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் எனப் பெயரிடப்பட்டது.
 
                    - 1985 ல் இயக்குநரகமாக உயர்த்தப்பட்டது (நெல்  தலைமை நிலையம்).
 
                    - இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரகங்கள் ஏ.டி.டீ-1 முதல் ஏ.டி.டீ 49 மற்றும் கலப்பின இரகம் ஏ.டி.டீ.ஆர்.ஹச்-1,2
 
                    | 
                | 
             
            
               
                முக்கிய செயல்பாடுகள்: 
                
                  - 	வேளாண் கல்லுாரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் துணையோடு ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல்.
 
                  - 	நெல் மற்றும் அதைச் சார்ந்த சாகுபடி முறைகள் பற்றிய ஆராய்ச்சியை முன்னின்று நடத்துதல்.                    
 
                  - 	மாநிலத்தின் அனைத்து நெல் ஆராய்ச்சி நிலையங்களிலும் நடைபெறும்  நெல்  ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.                    
 
                  -  பிற ஆராய்ச்சி நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்களை சோதித்துப் பார்த்து, அப்பகுதிக்கு ஏற்றவையா எனக் கண்டறிதல்.
 
                 
                நெல் பயிருக்கான ஆராய்ச்சித் திட்டங்கள்:  
                
                  - 	நெல்லில் வல்லுநர் விதைஉற்பத்தி திட்டம்.
 
                  -  வணிக ரீதியான பயன்பாட்டிற்குரிய கலப்பின இரகங்கள் உற்பத்தி திட்டம்.
 
                  - 	நெல்லில், அனைத்து இந்திய ஒருங்கிணைப்பு நெல் வளர்ச்சித் திட்டத்தினை-(AICRIP) மேற்கொள்ளுதல்
 
                  -  IRRI-மெகா திட்டம்.தீவிர சாகுபடியால் ஏற்படும் உற்பத்தி குறைவை தடுக்கும் திட்டம்.                    
 
                  -  ஏ.டி.டீ.ஆர்.ஹச்-1 மற்றும் கோ.ஆர்.ஹச் 2 போன்ற வீரிய கலப்பு இரகங்களின் விதைகளை உற்பத்தி செய்தல்.                    
 
                  -  சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா போன்ற உயிர் கட்டுப்பாட்டுக் காரணிகளை தயாரித்தல்.
 
                 
                 
                தொடர்புக்கு:  
                   
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம்,  
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை, தமிழ்நாடு- 612  101.  
தொலைபேசி: 0435  -2472098 
தொலைநகலி:  0435 - 2472881 
மின்னஞ்சல்: dirtrri  @tnau.ac.in   | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்:  
                
                  - 	ஈரோடு மாவட்டத்தில் சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் பவானி சாகர் அணைக்கு அடுத்தாற் போல் அமைந்துள்ளது இந்நிலையம்.
 
                  -  இது 1955-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.                    
 
                  -  இந்த நிலையமே, வேளாண் ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் எனப்படுகிறது. 
 
                  | 
                | 
             
            
               
                நோக்கம்: 
                
                  -  இந்த ஆராய்ச்சி நிலையம், தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து ஈரோடு மற்றும் அருகிலுள்ள மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
	இதைத் தவிர விவசாயிகளுக்கு கலப்பின நெல் விதை உற்பத்திக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  மேலும் பல விவசாயிகள் விதை உற்பத்தி திட்டங்களில் பங்கேற்க வழி வகுக்கிறது.
•	இந்த ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம், விவசாயிகள் பல்வேறு நீர் மேலாண்மைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்பான சிக்கன முறையில் நீரைப் பயன்படுத்துவது பற்றிய பயிற்சி பெறுகின்றனர்.
 
                 
                                  விவசாயிகளால் கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள்:  
                நெல்: 4 நாட்களுக்கு ஒரு முறை 5 செ.மீ ஆழம் இருக்குமாறு  நீர்ப் பாசனம் செய்ய வேண்டும் (அல்லது) நீர் மறைய நீர் பாய்ச்சுதல் முறை மூலம் 1-2  நாட்கள் பாசனம் செய்வதினால் 30 சதவிகிதம் நீரை  சேமிக்க முடிகிறது.                  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                நெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்துார்:  
                
                  - 	இந்நிலையம், 1912 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது.  மேலும் இது இந்தியாவின் மிகவும் பழமையான நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.
 
                  -  இம்மையம், ஆங்கிலேய விஞ்ஞானிகளான ஃப்.ஆர்.பர்நெல், பி.ஓ.லிபீ, மேலும், இந்தியாவின் முதல் நெல் ஆராய்ச்சியாளர்  டாக்டர்.கே.ராமைய்யா ஆகியவர்களால் தலைமை ஏற்று செயல்படுத்தப்பட்ட,  பன்னாட்டு  பெருமையும் ,நெல் வரலாற்றில் பல பதிவுகளும் கொண்டது.                    
 
                  -  மேலும் இந்நிலையம், 426.72 மீட்டர் உயர்நிலையிலும் 11 டிகிரி வடக்கு கிடைக்கோடு மற்றும் 77 டிகிரி கிழக்கு குத்துக்கோடுக்கும் இடையே அமைந்துள்ளது.  இதன் மொத்த பரப்பு 12.96 எக்டர் அளவு ஆகும்.  களிமண் நயம் மண்ணில் 7.8 கார அமில நிலையுடன் விளங்குகிறது.  ஒரு வருடத்தில் சராசரி மழையாக 900 மி.மீ அளவு கொண்டு காணப்படும்.
 
                  -  இதுவரை வெளியிட்ட இரகங்கள் கோ 1- கோ 50 மற்றும் கலப்பு இன வகைகள்  கோ ஆர் ஹச்- 1,2,3.
   | 
                | 
             
            
               
                குறிக்கோள்கள்:  
                
                  - 	வேறுபட்ட கால அளவு வகைகளுடைய அதிக மகசூல் ஈட்டும் இரகங்களை, உள் கட்டுப்பாட்டு வழி மூலம்உருவாக்குதல்.
 
                  -  அனைத்து இந்திய ஒருங்கிணைப்பு நெல் வளர்ச்சித் திட்டத்தின்  மூலம் நெல் ஆராய்ச்சி இயக்ககம், ஹைதராபாத் இதனுடன் ஒருங்கிணைந்த நெல் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகிறது.                    
 
                  -  பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்ஸ் மற்றும் நெல் ஆராய்ச்சி இயக்ககத்துடன் (கூட்டு) ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மேற்கொள்வது.                    
 
                  -  தேசிய மற்றும் பன்னாட்டு வலையமைவு திட்டத்தின்  மூலம் கலப்பின நெல் ஆராய்ச்சி.                    
 
                  -  புதிய வழிமுறைகளான அகன்ற பண்பகக் கலப்பு, மகரந்த வளர்ச்சி மற்றும் மூலக்கூற்று முறைகள் ஆகியவற்றின் மூலம் மரபியல் மேம்பாடு செய்யப்படுகிறது.                    
 
                  -  பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியை செயல்படுத்துவது.                    
 
                  -  தொழில் நுட்பத்தை பரிமாறி, பயிற்சி நிகழ்ச்சிகளை செயல்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  செயல் விளக்கத்திடல்கள் மற்றும் கல்வி சுற்றுலா ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து வேளாண் சமூகத்திற்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.
 
                     தொடர்பு கொள்ள முகவரி:  
பேராசிரியர் மற்றும் தலைவர், 
நெல் ஆராய்ச்சித்  துறை, 
பயிர் இனப்பெருக்கம்  மற்றும் மரபியல் மையம், 
தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக் கழகம், 
கோயமுத்துார் - 641  003, 
தமிழ்நாடு, இந்தியா, 
மின் அஞ்சல்:  rice@tnau.ac.in  
                                  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி 
                
                  - 	இந்த பகுதியில் மிகவும் தனிப்பட்டு விளங்கும் இந்நிலையத்தை,  களர், உவர்  மண்ணில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக “உவர் மண் ஆராய்ச்சி நிலையம்” எனத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
                  -  இந்தியாவில் பிரச்சனைக்குரிய மண்ணுக்கு, குறிப்பாக உப்பு (களர்,உவர்) மண்ணுக்கு தீர்வுகாண இந்நிலையம் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.                    
 
                  -  இதுவரை வெளியிட்ட இரங்கள் – டீ.ஆர்.ஒய் 1,2,3
 
                 
                                   | 
                | 
             
            
              ஆராய்ச்சி: 
                
                  - 	உப்பு தாக்கப்பட்ட மண்ணுக்கு ஏற்ற பயிர் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை உருவாக்குதல்.
 
                  -  அதிக மகசூல் ஈட்டும், உப்புத் தன்மையைத் தாங்கும் ஆற்றல் கொண்ட மற்றும் மத்திய கால (135-140 நாட்கள்) நெல் இரகமான டீ.ஆர்.ஒய் 1 இரகத்தினை வெளியிட்டுள்ளது.                    
 
                  -  உவர்ப்புத் தன்மையுடைய மண்ணைத் தாங்கிக் கொள்ளும் நெல் ரகம், தமிழ்நாட்டின் “குறுவை மற்றும் நவரை” பருவங்களுக்கு ஏற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும்,115-120 நாட்கள் கால அளவுகொண்ட  இந்த நெல் டீ.ஆர்.ஒய் (ஆர்) 2 என்ற இரகப் பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது.                    
 
                  -  உவர் மண்ணில்லாத சுண்ணாம்பு களர் மண்ணை சீர்திருத்துவதற்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு,வேளாண் பயிர் ஆராய்ச்சி சீர்த்திருத்தத் திட்டத்தின் மூலமாக அதிக பரப்பில் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.                    
 
                  -  இயற்கை உரப் பொருட்களான கரும்பாலைக்கழிவு அல்லது தொழு உரம் 50 கிலோ/சென்ட் நிலம், இதனுடன் தக்கைப்பூண்டு 25 கிலோ/சென்ட் கலந்தோ அல்லது தக்கைப்பூண்டு இல்லாமலோ களர் மண்ணில் களர் நீர்ப் பாசனம் கொண்டு நெல் நாற்றுக்களை வளர்க்க வேண்டும்.                    
 
                  -  கரையோரப் பரப்புகளில், உப்பு மண் மற்றும் களர் மண்ணில், “டெர்ரிஸ் இண்டிகா” –புங்கம் @ 5 டன்/எக்டர் அளவில் அளித்து, மீதமுள்ள தழைச்சத்தை யூரியாவாக 3 பிரிவுகளில் அசோஸ்பைரில்லத்துடன் கலந்து அளிக்க வேண்டும்.  டீ.ஆர். ஒய் 1 இரகம் அதிக மகசூல் ஈட்டுவதாகவும், பிரச்சனைக்குரிய மண்ணுக்கு ஏற்றதான இரகமாகவும் கருதப்படுகிறது. 
 
                 
                
                  தொடர்பு கொள்ள முகவரி: 
                  அன்பில் தர்மலிங்கம்  வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
நாவலுார்  குட்டப்பட்டு, 
திருச்சி - 620  009. 
இணையதளம் www.tnau.ac.in  
மின் அஞ்சல்:  deanagritry@tnau.ac.in  
தொலைபேசி  எண்: 0431-2906100 
                தொலைநகல்  எண்: 0431- 2690693
                  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை  
                 
 
                •	இதுவரை வெளியிடப்பட்டுள்ள நெல் இரகங்கள் எம்.டீ.யூ  1-5  
                 
                முக்கியமான ஆராய்ச்சி சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 
                
                  - 	தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்வது,
 
                  -  எம்.டீ.யூ 5 குறுகிய கால நெல் இரகம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த இரகம் வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது.  மேலும் ஏரி நீர் பாயும் பரப்புக்கு ஏற்ற இரகமாகும்.                    
 
                  -  தென் மாவட்டங்களில் வெளியிடுவதற்காக ஐஈடீ 153577 எனும் மத்திய கால பாஸ்மதி இரகம் கண்டறியப்பட்டுள்ளது.                    
 
                  -  நாற்று வீசி நடுதல் முறையில் நெல் நாற்றுக்களின் வயது 25 நாட்கள் எனவும், அதன் மொத்த மகசூல் 4199 கிலோவுடன் மொத்த வருமானம் ரூ.20,995/- எக்டர் என்ற அளவிலும் இருப்பது கண்டறியப்பட்டு, அண்மைகாலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
                  - கம்பம் பள்ளத்தாக்கில் வளரும் குளிர் தாங்கும் நெல் வகைக்கு 25 கிலோ/எக்டர் துத்தநாக சல்பேட் அளிப்பதால் வளர்ச்சி துாண்டிவிடப்படுகிறது. 
 
                  -  தழைச்சத்து மேலுரமிட்டபின், 1 சதவிகிதம் சோடியம் மாலிப்டேட் தெளிப்பு அளிக்க வேண்டும்.   பிறகு 30 வது நாளில் ஒரு முறை அளிப்பதால் குளிர் அழுத்த நிலையில் அதிகளவு நெல் தானிய மகசூல் கிடைக்கும். 
 
                  -  வெண் முதுகுத் தத்துப் பூச்சிக்கு எதிரான நெல் வகைகளை பிரிப்பதன் மூலம்,வெண்முதுகுப் பூச்சிக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட 21 பயிரிடும் மரபுவழி வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.  இவற்றை எதிர்ப்புத்திறன் கொண்ட  ரகங்கள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
                  -  சிலிகேட்டை கரைக்கும் பாக்டீரியாநுண்ணுயிருடன் கலந்த “ரைசோபியம் மற்றும் அசோஸ்பைரில்லம்” உற்பத்தி செய்யப்படுகிறது.இது இரசாயன யூரியா உரம் பயன்படுத்துவதைக் குறைத்து, பாஸ்பேட் மற்றும் சிலிக்கா உரங்களை நெல் எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. 
 
                    தொடர்பு கொள்ள முகவரி:  
  முதல்வர், 
    வேளாண் கல்லுாரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
    மதுரை- 625  104, 
    இந்தியா.  
    மின் அஞ்சல்: deanagrimdu@tnau.ac.in  
    தொலைபேசி  எண்: 91-452-2422956 
                   
                | 
                | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                 
                மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம்  
                   
                
                    -  1972 ஆம் ஆண்டு மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூரில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 
                 
              குறிக்கோள்கள்:  
              
                - 	காவேரி ஆற்றின் கழிமுக மண்டலத்தில் உள்ள நெல் மற்றும் மற்ற பயிர்களுக்கு, நீர் எடுத்துச் செல்வதற்கான சில முறைகளின் மேல் ஆராய்ச்சி நடத்துதல்.
 
                -  நெற்பயிருக்கான உகந்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நீர்த்தேவையை கணக்கிடுதல், இதனைப் பயன்படுத்துதல் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளுவது.                  
 
                -  பயிர்களின் வளர்ச்சி மற்றும் அதன் மகசூலுடன் தொடர்புள்ள மண், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு நடத்துதல்.
 
                              | 
                | 
             
            
                               
                தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்:  
                
                  - 	நெல்:  நவீனமாக்கப்பட்ட, விதை உருளை விதைப்பான் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டது.
 
                  -  நன்கு சேற்றுழவிட்டு சமன்படுத்திய மண்ணில். நாற்றுக்களை அதன் 15-20 நாட்களில் வயலில் வீசி நடுவதன் மூலம், எவ்வித தானிய மகசூல் குறைவின்றி,குறைவான வேலையாட்கள் கொண்டு, வரவு-செலவு விகிதம் அதிக அளவிலும் இருப்பது கண்டறியப்பட்டு, அண்மைகாலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.                    
 
                  -  தனி இட பரிந்துரை ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் விவசாயிகள் சிறப்பான  முறையில் ஊட்டச்சத்து அளிப்பு மேலாண்மை மேற்கொள்ள முடிகிறது. 
 
                  -  வேம்பு கலந்த யூரியா அளிப்பதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது.                    
 
                  -  பசுந்தாள் உரம் மற்றும் பாஸ்போபேக்டீரியா அளிப்பதன் மூலம் நெல் மகசூல் அதிகரிக்கிறது.
 
                  -  டை அம்மோனியம் பாஸ்பேட்-DAP 2 சதவிகிதம் அளவை பொட்டாசியம் குளோரைடு 1 சதவிகிதத்துடன் கலந்து இலைவழி அளிப்பாகத் தருவதன் மூலம், விதையின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.	வளைபலகைக் கலப்பையைக் கொண்டு கோடை உழவு மேற்கொள்வதன் மூலம், நீர்த் தேவையைக் குறைத்து, களை வளர்ச்சியினையும் கட்டுப்படுத்த முடிகிறது.
 
                     
                   
                 
                
                  தொடர்பு கொள்ள முகவரி: 
                  பேராசிரியர்  மற்றும் தலைவர், 
                    மண் மற்றும்  நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், 
                    காட்டுத்  தோட்டம், தஞ்சாவூர் - 613 501. 
                    தொலைபேசி  எண்: 04362 - 267680 
                    தொலை நகல்:  04362 - 267619 
                  மின் அஞ்சல்: arsswmri@tnau.ac.in   | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம் 
                
                  - 	அம்பா சமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம், 1937 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
 
                  -  இந்நிலையம் இரட்டைப்பயிர் நன்செய் நிலம் 9.49 ஏக்கர் மற்றும் புன்செய் (புழுதி நிலம்)  நிலம் 2.18 ஏக்கர் ஆகிய பரப்பளவுகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
                    	இதுவரை வெளியிடப்பட்ட இரகங்கள்-  ஏ.எஸ்.டி 1 முதல் ஏ.எஸ். டி 20 வரை
 
                  
                    
               | 
                | 
             
            
               
                குறிக்கோள்கள்: 
                
                  - 	உள்ளூர் நெல்  இரகங்களை துாய வரிசைத் தேர்வு மற்றும் பண்பகக் கலப்பு ஆகியவற்றின் மூலம்  மேம்படுத்தவும், மற்ற இடங்களிலிருந்து வெளியிடப்பட்ட புதிய நெல் இரக வகைகளை சோதிப்பததற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், உரப் பரிந்துரை மற்றும் ரகச் சோதனைகளை நடத்துவதற்கும், பொதுவான இரகங்களை மேம்படுத்தவும் ஆராய்ச்சி செய்தல்.
 
                  -  வேறுபட்ட (வானிலை) கால நிலைகளுக்கும், பெரும்பாலான பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறனும் கொண்ட அதிக மகசூல் ஈட்டும் இரகங்களை வெளியிடுகின்றன.                    
 
                  -  மேம்பட்ட நெல் இரகங்களுக்கான விதை மற்றும் நடவு வயல் நேர்த்தி ஆகிய செய்முறைகளை வழங்குகிறது.                    
 
                  -  நெல் இரகங்களுக்கு ஏற்ற உரப்பரிந்துரையை வழங்குவதோடு, முன் வெளியீடு இரகங்களுக்கு,இருக்கின்றமண்வளத்தோடு,உயிர்உரம்சேர்த்துவளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்துகிறது.                    
 
                  -  வானிலை (கால நிலை) மூலம் பூச்சிகள் அல்லது நோய்களை முன்னரே அறிந்து தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை வழங்குவதும் இந்நிலையத்தின் மற்ற செயல்களாகும்.                    
 
                  -  மேலும் இந்த ஆராய்ச்சி நிலையம், நெல்லில் பல புதிய திருத்திய ஆய்வு வகைகளை வெளியிட்டுள்ளது.  அதில் 1994-95 ஆம் ஆண்டில் ஏ.எஸ்.டி 16 மற்றும் ஏ.எஸ்.டி 18 ஆகிய ஆய்வு வகைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
 
                 
                
                தொடர்பு  கொள்ள முகவரி:  
                நெல் ஆராய்ச்சி  நிலையம், 
                  அம்பாசமுத்திரம்  - 627 401, 
                  தொலைபேசி  எண்: 04634 - 250215 
                  தொலை நகல்  எண்: 04634 - 255424 
                  மின் அஞ்சல்: arsasd@tnau.ac.in  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                வேளாண் ஆராய்ச்சி நிலையம், திருப்பதி சாரம்: 
                வேளாண் ஆராய்ச்சி நிலையம், திருப்பதி சாரம், 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 
               
              குறிக்கோள்கள்:  
                
                  - 	கன்னியாகுமரி மாவட்டத்திற்கான தகுந்த  நெல் இரகங்களை உருவாக்குகிறது.
•	நெல் இரகங்களுக்கு ஏற்ற சிறந்த சாகுபடி முறைகளைப் பரிந்துரைக்கிறது.
 
                  -  பயிர் சாகுபடியில் விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைத்தல்.                    
 
                  -  வெளியிடப்பட்டுள்ள இரகங்கள் - டிபிஎஸ் 1, டிபிஎஸ் 2, டிபிஎஸ் 3, டிபிஎஸ் (ஆர்) 4
 
                     
                   
                 
               | 
                | 
             
            
                              தொடர்பு  கொள்ள முகவரி:  
வேளாண் ஆராய்ச்சி  நிலையம், 
திருப்பதி  சாரம்- 629 901, 
கன்னியாகுமரி  மாவட்டம், 
தமிழ்நாடு, 
தொலைபேசி  எண்: (04652) 278728 
தொலை நகல்  : 04652 275357 
மின் அஞ்சல்: arstps@tnau.ac.in  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி 
                
                  - 	பரமக்குடி- வேளாண் ஆராய்ச்சி நிலையம், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், “வைகை” ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது,.
 
                  -  மாநில வேளாண் துறையின் கீழ், 1952 ஆம் ஆண்டில் இந்நிலையம் “ஆராய்ச்சி நிலையமாக” நிறுவப்பட்டது.                    
 
                  -  பின்பு 1952-1958 ஆம் ஆண்டு இந்நிலையம் “நெல் ஆராய்ச்சி துணை மையம்” ஆக செயல்பட்டது.                    
 
                  -  பிறகு 1958-1978 ஆம் ஆண்டுகளில் “மாநில விதைப்பண்ணை” யாக மாற்றப்பட்டது. மீண்டும் 1978-1981 ஆம் ஆண்டில் “பலபயிர் ஆராய்ச்சி துணை நிலையமாக” பெயர் மாற்றப்பட்டு செயல்பட்டது.
 
                  -  1981 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் “வேளாண் ஆராய்ச்சி நிலையமாக” செயல்பட்டு வருகிறது.                    
 
                  -  இதுவரை வெளியிட்டுள்ள இரகங்கள் - பிகேஎம்-1, பிகேஎம் 2 மற்றும் பிகேஎம் 3
 
                              | 
                | 
             
            
               
                குறிக்கோள்கள்:   
                
                  - 	ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலவும் வறண்ட மற்றும் பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற அதிக மகசூல் ஈட்டும் மிகவும் குறுகிய கால மற்றும் வறட்சியைத் தாங்கும் ஆற்றல் கொண்ட இரகங்களை உற்பத்தி செய்து மதிப்பிடுகின்றன.
 
                  -  மானாவாரி நெல்லுக்கு ஏற்ற மேம்பட்ட உழவியல் தொழில் நுட்பங்களை உருவாக்குகிறது.                    
 
                  -  மிகவும் மோசமான வானிலை சூழ்நிலைகளில் நெற்பயிருக்கு மாறாக அதிகலாபம்தரும் மற்ற பயிர்களை கண்டுபிடித்தல்.
 
                 
                                  தற்போதைய ஆராய்ச்சி செயல்முறைகள்: 
                
                  - 	அதிக மகசூல் ஈட்டும் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்                          கொண்ட நெல் வகைகளை இனப்பெருக்கம் செய்தல்.
                  
 -  வறண்ட மற்றும் பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற நெல்லுக்கான களை மற்றும் அழுத்த மேலாண்மை முறைகளை கண்டுபிடிக்கின்றன.
                  
 -  வறண்ட மற்றும் பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற நெல்லுக்கான உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கண்டுபிடிக்கின்றன.
   | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர் 
                
                  - 	தருமபுரி மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டில் மண்டல ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது.
 
                  -  இந்நிலையம், பெங்களூரிலிருந்து 108 கி.மீ தொலைவில் என்ஹச் 7 (பெங்களூர்-சேலம்) வழியிலும், தருமபுரி மாவட்டத்திலிருந்து 29 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.                    
 
                  -  வெளியிடப்பட்ட இரகங்கள் -பையூர் 1
 
                     
                    நோக்கம் 
                      
                        - 	தமிழ்நாட்டின் வடமேற்கு மண்டலத்தில் வளரும் நெற்பயிருக்கு ஆய்வு மையமாக விளங்குகிறது.
 
                        -  மானாவாரி மற்றும் பாசன பயிர் வளர்ப்பு முறைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
 
                                      | 
                | 
             
            
              
                
                  - 	பிரச்சினைக்குரிய மண்பரப்புகளைக் குறிப்பிடும் மண் ஆராய்ச்சி மற்றும் அதன் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு செய்தல்.
 
                  -  பெரும்பாலான முக்கிய பயிர்களில் வரும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்கத்தினை ஆய்வு செய்தல் மற்றும் தகுந்த மேலாண்மை தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுதல்.                    
 
                  -  சிறு தானியம் மற்றும் பயறு வகைகள் உற்பத்தித் தொழில்நுட்பத்தில் விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சியை அளிக்கும் மையமாக விளங்குகிறது.                    
 
                  -  ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்துக்காக சில கிராமங்களை தேர்வு செய்து,திட்டத்தைசெயல்படுத்துகிறது.                    
 
                  -  ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டுப் பரப்புவதில் பெரும்பங்கு வகிக்கிறது.                    
 
                  -  முக்கிய பயிர்களுக்கு குறைந்த விலை பண்ணைக் கருவிகளை வடிவமைத்து உருவாக்குவது. 
 
                | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                கலப்பின நெல் மதிப்பீடு மையம், கூடலுார் 
                     
                  ஆராய்ச்சி:                
                
                  - 	நெல்லின் வெப்ப உணர்வு பண்பக ஆண் மலட்டுவரிசைகளில் ஏற்படும் கருவள மாற்ற நிலைகள் மற்றும் மாறுநிலை வெப்பம் ஆகியவற்றின் மேல் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
 
                  -  ஆறு டிஜிஎம்எஸ்  கோடுகளின் கருவள தன்மை மற்றும் இருவரிசை நெல் கலப்பினத்தை உருவாக்குவதற்காக இந்த 6 வரிசைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை வெப்ப மண்டல உணவு பாதுகாப்புக்காக வளரும் திறன் மரபியல் முறையாகக் கருதப்படுகிறது.                    
 
                  -  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்துார், இந்தியா, இங்கு கண்டறியப்பட்ட 17 இணையான டிஜிஎம்எஸ் வரிசைகள் மற்றும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், நெல் ஆராய்ச்சி இயக்ககம், ஹைதராபாத்திலிருந்து பெறப்பட்ட இனப்பெருக்கவரிசைகள் ஆகியவை மகரந்தத்துாள் மற்றும் பூங்கிளை வளத்துக்காக மதிப்பிடப்படுகிறது.
 
                     
                   
                | 
                | 
             
            
              தொடர்பு கொள்ள முகவரி: 
                பேராசிரியர்  மற்றும் தலைவர், 
கலப்பின நெல்  மதிப்பீடு மையம், 
தமிழ்நாடு  வேளாண்மைப் பல்லைக் கழகம், 
18, புது  முனிசிபல் காம்ப்ளக்ஸ், ஊட்டி மெயின் சாலை, நீலகிரி மாவட்டம், 
கூடலுார் - 643  212, தமிழ்நாடு, இந்தியா. 
தொலைபேசி  எண்: 9443222373 
தொலை நகல்:  04262 - 264945 
மின் அஞ்சல்: : rmdmahal@yahoo.co.in  | 
             
            
              
                
                  
  | 
                   
                
                  | மேலே செல்க | 
                   
                
                    | 
                   
                     
                    கேரளா:   
                     
                    நெல் ஆராய்ச்சி நிலையம், மான்கொம்பு  
                     
                  
                    - 	“நெல் ஆராய்ச்சி நிலையம், மான்கொம்பு” ஆலப்புழா மாவட்டத்தின், குட்டநாடு தாலுக்காவில் சம்பக்குளம் பஞ்சாயத்தில் மான்கொம்பு, தெக்கிக்கரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
 
                    -  1940 ஆம் ஆண்டில் இந்நிலையம் துவங்கப்பட்டது. 
 
                                       
                    செயல்முறைகள்:  
                      •	குட்டநாடு சூழ்நிலையில், நெல் ஆராய்ச்சிக்காக மட்டுமே தனியாக இம்மையம் செயல்பட்டு வருகிறது.  அனைத்து இந்திய ஒருங்கிணைந்த நெல் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அமைப்பும் இங்கு செயல்பட்டு வருகிறது. 
                       
                                          |  
                
                  வெற்றி அம்சங்கள்: 
                    
                        - 	குட்டநாடு போன்ற ஆழ்நீர் பரப்புகளில் ஏற்படும் சில பிரச்சினைகளை இம்மையம் சரி செய்கிறது.
 
                        -  இந்நிலையம் இதுவரை 12 நெல் இரகங்களை வெளியிட்டுள்ளது. மோ 1, மோ 2, மோ 3 பத்ரா, ஆஷா, பவிழம், கார்த்திகா, அருணா, மக்கோம், ரெம்யா, கனக்கம் மற்றும் ரஞ்சனி ஆகிய 12 இரகங்களும் விவசாயிகளால் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.                          
 
                        -  மற்ற ஏழு முன் வெளியீடு ரகங்களை வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன.  அவை, பவித்ரா, பஞ்சமி, ரெமானிக்கா, உமா, ரேவதி, கரிஷ்மா, மற்றும் கிருஷ்னாஞ்சனா ஆகியவை ஆகும்.                          
 
                        -  வரிநெல்லுக்கு (காட்டு நெல்) எதிராக, நெல் விதைகளில் “கேல்சியம் பெராக்ஸைடு” பூச்சிடப்பட்டு  முறையான மேலாண்மை முறையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தழைச்சத்து மேலாண்மை, களைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுபடுத்தும் முறை, ராக்பாஸ்பேட்டை அமில மண்ணில் பயன்படுத்துவது ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது.	நெற்பயிரில் பழுப்பு இலைத்தத்துப்பூச்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை சிறப்பாக வழங்கியுள்ளது.  மேலும் நெல்லின் பழுப்புப்புள்ளி மற்றும் இலையுறை அழுகல் நோய்களுக்கும் கட்டுப்பாட்டு முறைகளை வழங்கியுள்ளது.                          
 
                        -  நெல் வயலில் எலிகளைப் பிடிப்பதற்காக “மான்கொம்புப் பொறி” என்னும் மலிவான மற்றும் நாட்டுக்குரிய சிறப்பான எலிப் பொறியை வடிவமைத்துள்ளது.
 
                      | 
                   
                
                  
  | 
                 
                
                  | மேலே செல்க | 
                   
                
                    | 
                   
                    நெல் ஆராய்ச்சி நிலையம், வைட்டிலா 
                    
                      - 	நெல் ஆராய்ச்சி நிலையம், வைட்டிலா பொக்காலி நிலப்பகுதியின் குறிப்பிட்ட மையப் பகுதியில் அமைந்திருக்கிறது.
 
                      -  1958 ஆம் ஆண்டில் குன்னரா என்னும் இடத்தில் குத்தகை நிலமாகப் பெற்று, இந்நிலையம் அங்கு செயல்படத் துவங்கியது.  பின்பு தற்போதுள்ள இடத்தில் 1963 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
 
                      -  பின் 1974 ஆம் ஆண்டில் கேரளா வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் எடுத்து நடத்தப்பட்டது.                        
 
                      -  உவர் மண்ணில் மீன்-இறால் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி ஆராயவும், 1976 ஆம் ஆண்டு மீன் ஆராய்ச்சிக்காக ஒரு அமைப்பு துவங்கப்பட்டது.                        
 
                      -  தற்பொழுது, இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மொத்த பரப்பு 8.91 எக்டர் ஆகும்.  4.25 எக்டர் நன்செய் நிலம்.
 
                     
                     
                    
  | 
                 
                
                  நோக்கம்: 
                    பொக்காலி (உவர் நில) பரப்புகளில் நெல் வளர்ப்பு மற்றும் நெல்-மீன் பயிர் வளர்ப்பு முறை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிதான் இந்நிலையத்தின் முக்கிய செயல்பாடு. 
                                          சிறப்பு அம்சங்கள்: 
                    
                      - 	பொக்காலி சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உப்புத் தன்மையைத் தாங்கும் மற்றும் அதிக மகசூல் ஈட்டும் ஐந்து இரகங்களை வெளியிட்டுள்ளது.  அவை, வைட்டிலா-1, வைட்டிலா-2, வைட்டிலா-3, வைட்டிலா-4, மற்றும் வைட்டில்லா-5 ஆகியவை ஆகும்.
 
                      -  நெல்லினைத் தொடர்ந்து, இறால் வளர்ப்பதற்கான தொழிற்நுட்பத்தை ஏற்படுத்தியுள்ளது.                        
 
                      -  நெல் மற்றும் மீன் இரண்டையும் ஒன்றாக வளர்ப்பதற்கான தொழிற்நுட்பமும் செயல்படுத்தியுள்ளது.
 
                      | 
                   
                
                  
  | 
                 
                
                  | மேலே செல்க | 
                   
                
                    
                  
  | 
                    
                    வேளாண் ஆராய்ச்சி நிலையம், மன்னுத்தி 
                    
                      - 	1957 ஆம் ஆண்டில் இந்நிலையம் ஒல்லுக்கராவிலுள்ள மன்னுத்தியில், துவங்கப்பட்டு நெல் ஆராய்ச்சி நிலையமாகச் செயல்படத் துவங்கியது.
 
                      -  1972-ல் கேரளா வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அமைப்புடன், மன்னுத்தி நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மன்னுத்தி வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை மாநில வேளாண்மைத் துறையிடமிருந்து பிரித்து வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.                        
 
                      -  1976 ஆம் ஆண்டில், நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு, “வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்” மன்னுத்தி எனப் பெயரிடப்பட்டு 01.01.1988-லிருந்து செயல்பட்டு வருகிறது.
 
                                          | 
                 
                
                   
                    நோக்கம்:  
     கோல் நில மேலாண்மை திட்டம் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் மேல் இதன்  ஆராய்ச்சி  செயல்பாடுகள் உள்ளன.  காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றில்  சரிபார்க்கும்  ஆராய்ச்சி  செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது. 
   
    சிறப்பு அம்சங்கள்: 
                    
                      - 	மிகவும் குறுகிய கால சிவப்பு நிற மேலோடு கொண்ட 75-80  நாட்களில் முதிர்ச்சியடையும் “ஹ்ரஸ்வா” என்னும் பயிர்வகையை இந்நிலையம் உருவாக்கியுள்ளது.                        
 
                      -  பயிரிடுவதற்கான மற்றொரு இரகமான “அகல்யா” என்னும் இரகத்தையும் வெளியிட்டுள்ளது.
 
                      | 
                   
                
                  
  | 
                   
                
                  | மேலே செல்க | 
                   
                
                   
  | 
                   
                    மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கயம்குளம்:  
                    
                      - 	கயம்குளம்-புனலுார் சாலையின் வட பக்கத்தில், கயம் குளம் மாநகராட்சியின் ஒரு கி.மீ கிழக்கில், ஆலப்புழா மாவட்டத்திலுள்ள கயம்குளம் என்னும் நகராட்சியில் அமைந்துள்ளது தான் “மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், கயம்குளம்” ஆகும்.
 
                      -  இந்நிலையம் 1937 ஆம் ஆண்டு “டிரவன்கோர் எர்ஸ்ட்வைல் பல்கலைக்கழகத்தின்” கீழ் துவங்கப்பட்டது.
 
                      -  பின்பு 1958 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டு பின் 07.02.72 ஆம் ஆண்டில் கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறும் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.                        
 
                      -  ஏப்ரல் 2000 ஆம் ஆண்டில் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (ஒனட்டுக்கரா மண்டலம்) என்னும் தகுதியாக தரம் உயர்த்தப்பட்டது.
 
                     
                       | 
                 
                
                  நோக்கம்:  
                    •	ஒன்னட்டுக்கராப் பகுதியில் உள்ள நெற்பயிரின் மீதே இதன் முதன்மை  ஆராய்ச்சி செயல்பாடுகள் உள்ளன. 
                     
                    தனிச்சிறப்புகள்: 
                    
                      - 	குறிப்பாக கேரளா மாநிலத்தின் ஒன்னட்டுக்கரா பகுதியில் பயிரிடுவதற்காக எட்டு நெல் இரகங்களை வெளியிட்டுள்ளது.  அவை யூ 19, யூ ஆர் 110, கொட்டரக்கரா-1, லக்ஷ்மி, பாக்யா, ஓனம், தன்யா மற்றும் சகாரா ஆகியவை ஆகும்.
 
                      -  நெல்லின் இரு பயிர் வகைகள்-மகரம் மற்றும் கும்பம் ஆகும்.                        
 
                      -  ஒன்னட்டுக்கரா பகுதிக்கு ஏற்றவாறு நெல் மேலாண்மை முறைகள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உருவாக்கி பரிந்துரைத்துள்ளது.
 
                      | 
                   
                
                  
  | 
                 
                
                  | மேலே செல்க | 
                   
                
                    | 
                  மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி  
                     
                  நோக்கம்:  
•	நெல் மற்றும் நெல் சார்ந்த பயிர் சாகுபடித் திட்டம், பயிர் வகைகள், காய்கறிகள், இயற்கை வேளாண்மை மற்றும் விதை தொழிற்நுட்பவியல் ஆகியவற்றிற்கு ஏற்ற தொழில் நுட்பங்களை உருவாக்கி அதனை பரப்பச்செய்வது.   | 
                 
                
                   
                    செயல்பாடுகள்:   
                    நெல் ஆராய்ச்சி:  
                    
                      -  பண்பகப் பண்ணைப் பாதுகாப்பு மற்றும் தனிச் சிறப்புகள் பாதுகாப்பு.
 
                      -  மகசூல் உயர்வு மற்றும் நுகர்வோர் ஏற்ப்புக்காக இனப்பெருக்க முறை.
 
                      -  இனப்பெருக்க எதிர்ப்புத்திறன்.                        
 
                      -  கலப்பு இன நெல் வளர்ச்சி
 
                      -  வேறுபட்ட நிலைகளில், மகசூல் அதிகரிப்புக்கான ஆராய்ச்சி.                        
 
                      -  ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் களைக் கட்டுப்பாடு பற்றிய ஆய்வுகள்.                        
 
                      -  கோடைக்கால தரிசு நெல் உபயோகத்திற்கான ஆராய்ச்சி.                        
 
                      -  நீண்ட கால உர ஆராய்ச்சிகள்.                        
 
                      -  பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் இரகங்களை பிரித்தல்.
                        •	புதிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூசணக்கொல்லிகளை மதிப்பிடுதல்.                        
 
                      -  பூச்சி மேலாண்மைக்கான இனக் கவர்ச்சிப் பொருளின் மேல் ஆராய்ச்சி.                        
 
                      -  நோய் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான, தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி. 
 
                     
                    சிறப்பு அம்சங்கள்:  
                    
                      - 	54 அதிக மகசூல் ஈட்டு இரகங்கள் - ஆர்யன் (பிடிபீ 1) முதல் கருணா (பிடிபீ 54)
 
                      -  அன்னப்பூர்ணா:   நாட்டிலேயே, முதல் அதிக மகசூல் ஈட்டும், மற்றும் முன்னரே முதிர்ச்சியடையும் குட்டையான நெல் இரகம் ஆகும்.                        
 
                      -  ஜோதி: மாநிலத்திலுள்ள விவசாயிகளிடையே மிகவும் பிரபலமான இரகமாகும்.
 
                      - கைராலி, காஞ்சனா, ஆத்திரா, ஐஸ்வரியா, மங்களா, மசூரி மற்றும் கருணா ஆகியவை புதிய இரகங்களாகும்.
 
                      - 	வேறுபட்ட பருவங்களுக்கு ஏற்ற பயிரிடும் முறைகளை வெளியிட்டுள்ளது.                        
 
                      -  வேறுபட்ட நிலைகளிலுள்ள நெல் பயிருக்கு ஏற்ற நவீன உரத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
                      - 	களைக்கொல்லிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறைகளை வழங்குகிறது.                        
 
                      -  நெற்பயிரில் சிறப்பான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை.                        
 
                      -  முக்கிய பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களை வெளியிடுகிறது.
 
                       
                      | 
                   
                
                  
  | 
                 
                
                  | மேலே செல்க | 
                 
               
                
                
                   
                    கர்நாடகா: 
                    மண்டல ஆராய்ச்சி நிலையம், வி.சி பண்ணை, மாண்டியா 
                    
                      - 	மாண்டியா - மெல்கோடே ரோடில், கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா மாநகராட்சியிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில், மாண்டியா வேளாண்மைக் கல்லுாரி அமைந்துள்ளது.  இவ்விடத்தை “விஷ்வேஸ்வரய்யா கால்வாய்” (வி.சி) பண்ணை என பிரபலமாக அழைக்கப்படுகிறது.
 
                      -  சராசரி கடல் அளவிற்கு மேலே 695 மீட்டர் குத்துயரத்தில் 19 வடக்கு கடைக் கோட்டிலும், 78 கிழக்கு குத்துக்கோட்டிலும் இந்த கல்லுாரி அமைந்துள்ளது.                        
 
                      -  1991-92 ஆம் ஆண்டில் மாண்டியா வேளாண்மைக் கல்லுாரி செயல்படத் துவங்கி, வெற்றிகரமாக 15 ஆண்டுகள் நிறைவேறிவிட்டன.                        
 
                      -  கர்நாடகா அரசால் செயல்படும் வேளாண் கல்வி கிராமப்புறப் பண்பாக்கத்தின் ஒரு பகுதியாக துவங்கப்பட்டது.
 
                      | 
                    | 
                 
                
                   
                    வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஜிகேவிகே, பெங்களூர்:    
                    
                      - விவசாய சமுதாயத்திற்கு நன்மை ஏற்படுவதற்காக நெற்பயிரில் கலப்பின வகை மற்றும் அதிக மகசூல் ஈட்டும் இரகங்களை வெளியிடுவது ஆகியவை ஆராய்ச்சியின் ஈர்க்கும் பதிவேடுகளாக விளங்குகின்றன.
 
                      -  பல்கலைக்கழகம் 143 மேம்பட்ட இரகங்களை வெளியிட்டுள்ளது.  இதில் 9 கலப்பின வகைகள் இன்னும் சேர்க்கப்பட உள்ளன.                        
 
                      -  நெல்லில் 44 நெல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  (இதில் 42 இரகங்கள் மற்றும் 2 கலப்பினங்கள்) 
 
                       
                                          தொடர்பு கொள்ள முகவரி: 
                      வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், 
                      ஜி.கே.வி.கே, பெங்களூர் - 560 065. 
                      தொலைபேசி  எண்: 080-23330984 
                      கைப்பேசி  எண்: 9448966901 
                    மின் அஞ்சல்: registrar@uasbangalore.edu.in   | 
                    | 
                 
                | 
             
            
                              | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          
            
              |   | 
              தேசிய நிறுவனங்கள்: | 
             
            
               
  | 
              மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டாக்:  
                
                  - 	1945 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, நெல் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தை துவக்குவதற்கு திட்டமிட்டது.
 
                  -  இதன் பயனாக, மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரிசாவின், கட்டாக்கில், பித்யாதர்பூர் பகுதியில் ஏப்ரல் 22, 1946 ஆண்டில் துவங்கப்பட்டது.  இதில் ஒரிசா அரசால் அளிக்கப்பட்ட 60 எக்டர்கள் சோதனைப் பண்ணை நிலமும் உள்ளடங்கும்.                    
 
                  -  தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் நிர்வாகப் கட்டுப்பாடு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.
 
                            | 
             
            
               
                நோக்கம்: 
                இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து 25 வருடங்களில், உணவு தானியம் வழங்குவதில் தன்னிறைவை ஏற்படுத்தும்  பசுமைப் புரட்சியை நாட்டில் நடத்துவதற்காக முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்நிறுவனம்.  மேலும், தற்போதைய  காலத்தில் உலகின் மிகப் பெரிய 2-வது நெல் ஏற்றுமதியாளராக  இந்தியா வருவதற்கு ஆராய்ச்சிகளில்  துணை  புரிந்து, தேசத்திற்கு புகழை ஏற்படுத்துகிறது.
                     
                     
                      தொடர்பு கொள்ள முகவரி: 
                      மத்திய நெல்  ஆராய்ச்சி நிறுவனம், 
கட்டாக் (ஒரிசா)- 753 006, இந்தியா, 
தொலைபேசி  எண்: +91-671-2367757 
PABX:+91-671-2367768-783 
தொலை நகல்:  +91-671-2367663 
மின் அஞ்சல்: : directorcrri@satyam.net.in | crrictc@ori.nic.in 
                 
               | 
             
            
              
  | 
             
            
                | 
               
                 
                நெல் ஆராய்ச்சி இயக்ககம், ஹைதராபாத்: 
                 
                முக்கியமான சாதனைகள்:  
                
                  - 	பயிர் தரநிலைகள், அறிவிப்பு மற்றும் இரகங்கள் ஆகியவற்றை வெளியிடும் மத்திய துணை சங்கம், 5 கலப்பின நெல் வகைகளை வெளியிட்டுள்ளது.  அவை, டீஆர்ஆர்ஹச் 3, டீஆர்ஹச்-775, பிஏசி 835, பிஏசி 837, மற்றும் ஹச்ஆர்ஐ 157 ஆகியவை ஆகும்.  மேலும் 4 நெல் இரகங்களான கோ (ஆர்) 50, நரேந்திரா உசார் தான், டீஆர்ஆர் தான் 38 மற்றும் டீஆர்ஆர் தான் 39, ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.  11 மாநிலங்களில் வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு 32 இரகங்களை மாநில இரக வெளியீடு சங்கம் பரிந்துரைத்துள்ளது.
 
                  | 
             
            
              
                - 	பாசன பரப்புகள் உள்ள மத்திய பிரதேசம், ஒரிசா, உத்திரபிரதேசம், குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் வணிக சாகுபடி மேற்கொள்வதற்காக, அதிக மகசூல் ஈட்டும் நடுத்தர ஒல்லியான தானியம் மற்றும் மற்ற சிறப்பு அம்சங்களை உடைய கலப்பின வகை ஐஈடி 19543 (டீஆர்ஆர்ஹச் 44) என்ற வகையை வெளியிட்டுள்ளது.
 
                -  நாட்டில் வெளியிடப்பட்ட நெல் வகையில், டீஆர்ஆர்ஹச் 3 என்ற இரகம் தான் நடுத்தர ஒல்லியான தானியத்தை கொண்ட முதல் கலப்பின இரகமாகும். முக்கிய அகன்ற இணையும் பண்பக அமைப்புப் புள்ளியை இலக்காகக் கொண்ட, மூன்று குறிகளையுடைய பலகூட்டு உருவாக்கும் அமைப்பு, WCG - S5 என்ற பண்பகத்தை உருவாக்கி உள்ளது.                  
 
                -  இந்த பண்பகம் S5 ல் உள்ள மூன்று எதிர்ப்பண்பி நிலைகளை துல்லியமாக வேறுபடுத்துகிறது.  மேலும் பலகூட்டு உருவாக்கும் பண்பகம் மூலமாக முக்கிய அகன்ற இணையும் பண்பகத்திலுள்ள நடுநிலை எதிர்ப்பண்பியை இலக்காக அடைய உதவுகிறது.
                  •	பலவகை வளங்கள் பாதுகாப்புத் தொழிற் நுட்பங்களில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையே தானிய மகசூலுக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
 
                | 
             
            
               
                 | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          
            
              | பன்னாட்டு நிறுவனங்கள்: | 
                | 
             
            
              பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ் 
                  - 	பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஒரு லாபனோக்கமற்ற தனித்தியங்கும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும்.
 
                  -  ஃபோர்டு மற்றும் ராக்கிஃபெல்லர்” அறக்கட்டளையின் நிதியுதவி மூலமாக 1960 ஆம் ஆண்டில் “லாஸ் பனோஸ்” லகுனா என்ற இடத்தில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது.                    
 
                  -  சுற்றுச்சூழலின் நிலையான வழியில், நெல் விவசாயிகள் தங்களின் நெற்பயிர் மகசூல் மற்றும் நெல் தரத்தினை உயர்த்துவதற்காக, பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் புதிய நெல் இரகங்கள் மற்றும் பயிர் பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை வழங்கியுள்ளது.
 
 
               | 
                | 
             
            
              
                - 	நெல் சாகுபடி செய்யும்  முக்கிய நாடுகளில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் அறிவு பரிமாற்றத்தை நடத்துவதற்காக, பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது, தேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளின் பொதுநல மற்றும் தனியார் பிரிவுகளுடன் சேர்ந்து செயல்படுகின்றது.
 
                -  தங்களின் சமுதாய மற்றும் பொருளாதார ஆராய்ச்சிகளின் மூலம், அரசுக்குத்  தேவையான கருத்துக்களைத்தெரிவித்து, நேர்மையான அரிசி வழங்குதலை திருத்துவதற்கான கொள்கையை (திட்டம்) ஏற்படுத்தி உதவுமாறு வலியுறுத்துகின்றன.
 
                              | 
             
            
              நிறுவனத்தின் பணித்திட்டம்:
                •	நெல் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் ஆரோக்கியத்தை உயர்த்துவதும், வறுமை மற்றும் பசியைக் குறைத்தல், கூட்டு ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழல் நிலைப்பை உறுதி செய்தல், தொழில் கூட்டு மற்றும் தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை வலிமைப்படுத்துதல் ஆகியவை முக்கிய குறிக்கோள்கள் ஆகும். 
                இலக்குகள்:
                
                  - 	மேம்படுத்திய மற்றும் மாறுபடுத்திய நெல் சார்ந்த சாகுபடி அமைப்புகள் மூலம் வறுமையைக் குறைத்தல்.                  
 
                  -  குறைந்த சுற்றுச்சூழல் விளைவு மட்டும் உடைய, காலநிலை மாறுதலைத் தாங்கிக் கொள்ளும் தன்மையுடைய நிலையான நெல் உற்பத்தி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.                    
 
                  -  ஏழ்மை நிலை நெல் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்துதல்.                    
 
                  -  நெல் பற்றிய நேர்மையான தகவல் மற்றும் அறிவுத்திறனை அளிப்பதோடு அடுத்த தலைமுறை நெல் விஞ்ஞானிகளுக்கு வளர்ச்சியடைய உதவுகிறது.                    
 
                  -  நெல் விஞ்ஞானிகள் மற்றும் உற்பத்தியாளர்கள், திருத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி மற்றும் நெல் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு மரபியல் தகவல் மற்றும் பொருட்களை வழங்குதல் ஆகியவை முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
 
                 
                தொடர்பு கொள்ள முகவரி:
  
லோஸ் பனோஸ்  பிலிப்பைன்ஸ், 
தொலைபேசி  எண்: +63 2580 5600, 845 0563 
தொலை நகல்:  +63 2580-5699, 845 0606 
மின் அஞ்சல்: :    irri@cgiar.org  | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                பன்னாட்டு வெப்ப மண்டல வேளாண்மை ஆராய்ச்சி மையம்: 
                 
                
                  - 	பன்னாட்டு வெப்ப மண்டல வேளாண்மை மையம் ஒரு வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமாகும்.  வெப்பமண்டலப் பகுதிகளில் நிலவும் பசியைப் போக்குவதற்கான அறிவியல் தீர்வுகளை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
 
                  -  சுற்றுப்புற திறனுள்ள வேளாண்மையை நம்புகின்றது.அதாவது உணவு உற்பத்திக்கான நிலைக்கும் முறைகளை வளர்ச்சியடையச் செய்வதுதான் வெப்ப மண்டலத்தில் பசியைப் போக்கி, வாழ்க்கைத் திறனை உயர்த்துவதற்கான சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
 
                | 
                | 
             
            
               
                குறிக்கோள்: 
                 
                
	வேளாண்மை சுற்றுப்புறத் திறனை உயர்த்துவதற்கான ஆராய்ச்சியின் மூலம் வெப்ப மண்டலப் பகுதியில் நிலவும் வறுமை மற்றும் பசியைக் குறைத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை உயர்த்துவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். 
	 
    நோக்கம்: 
    
                  - 	வெப்ப மண்டலத்திலுள்ள ஏழைகளின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு வெப்பமண்டல ஆராய்ச்சி மையம் அறிவியல் தொழிற்நுட்பங்களை வழங்குகிறது.
 
                  -  தேசியத் திட்டங்கள், பொது நல சமூக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொழிற்கூட்டுகள் வைப்பதன் மூலம் பலதுறை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளை நடத்துகின்றனர்.  இதனால் பன்னாட்டுப் பொது நலப் பொருட்களை உற்பத்தி செய்து பயன்பட முடிகிறது.                    
 
                  -  திருத்திய விதைக்கருவூலம், தொழிற்நுட்பவியல்கள், செயல்முறைகள் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தொழிற்நுட்பங்களை வழங்குகிறது.
 
                 
                தொடர்பு கொள்ள முகவரி: 
                  கேஎம் 17, ரெக்டா கலி-பல்மிரா 
அபர்டடோ ஏரியோ  6713, 
கலி, கொலம்பியா, 
தொலைப்பேசி  எண்:  +57 244 50000 (நேரடி) அல்லது 
                                    +  1650 8336625 (அமெரிக்கா வழியாக) 
தொலை நகல்:  + 57 244 50073 (நேரடி) அல்லது 
                          +650 8336626 (அமெரிக்கா வழியாக) 
மின் அஞ்சல் : ciat@cgiar.org 
இணையதளம்  : www.ciat.cgiar.org   | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                பங்களாதேஷ்  நெல் ஆராய்ச்சி நிறுவனம்:  
                 
                  குறிக்கோள்:   
                  பங்களாதேஷ் நெல் ஆராய்ச்சி நிறுவனம் மொத்தம் பத்து ஆய்வு நிலையங்களைக் கொண்டுள்ளது.  அதில் அதன் தலைநகரம் கஜிபூர் என்ற இடமும் ஒன்று. மற்ற சோதனை நிலையங்களை “பங்களாதேஷ் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல நிலையங்கள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.  அவை அமைந்துள்ள இடங்கள், “கோமில்லா, ஹோபிகனி, ஃபெனியின் சோனாகஜி, பரியாசல், பரித்பூரின் பங்கா, ராஜ்ஷாகி, ரங்கபூர், சட்கிரா, மற்றும் குஷ்தியா ஆகிய மாவட்டங்கள் ஆகும்.                 
                நோக்கம்: 
                
                  -        மரபியல் திருத்தம் மூலம் குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் தரமான நெல்லை உற்பத்தி செய்தல்.
 
                  -  நிலையான, பல்வகைமை, தரம் மற்றும், நோய் மேலாண்மை, பூச்சி, உரம், நீர் மேலாண்மை, நிகழ்கால மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான நில மேலாண்மை. 
 
                | 
                | 
             
            
              
                - மேம்பட்ட  ஆராய்ச்சி மற்றும் நாட்டில் நிலவும் வறுமை மற்றும் பசியைக் குறைப்பதற்கான புதிய  கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், நிறுவனத்திறனை செம்மைப்படுத்தவும் உதவுதல்.
 
                   
                  தொடர்பு கொள்ள முகவரி: 
                  பங்களாதேஷ்  நெல் ஆராய்ச்சி நிறுவனம், 
                    கஜிபூர் 1701, பங்களாதேஷ், 
                    தொலைபேசி  எண்: (880-2) 9252736, 9257401-05 
                    தொலை நகல்:  (880-2) 9261110 
                    மின்அஞ்சல்: brrihq@yahoo.com, 
                    dg@brri.gov.bd                       
                 
               | 
             
            
              
  | 
             
            
              | மேலே செல்க | 
             
            
               
                நெல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இலங்கை  
                நோக்கம்:   
National Prosperity through Excellence in Rice  Production.  
குறிக்கோள்:  
நெல் சாகுபடியில், அதன் உற்பத்தி, தரம் மற்றும் லாபத்தை அதிகரிப்பதற்காக தொழிற்நுட்பங்களை உருவாக்கி, அதனை விரிவாக்கம் செய்வதில்முதன்மை பரப்புதலை மேற்கொள்வதற்காக தேசிய மையமாக விளங்குதல். 
 
  | 
                | 
             
            
              ஆராய்ச்சி: 
                
                  - 	அதிக மகசூலை ஈட்டும் புதிய நெல் இரகங்களை வெளியிடுதல் மற்றும் திருத்திய நெல் உற்பத்தி மற்றும் பயிர்பாதுகாப்புத் தொழிற்நுட்பங்களை புதுப்பித்தல் ஆகியவற்றில், நெல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
                  -  பண்ணை உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்தி செலவைக் குறைத்தல் மற்றும் நெல் தானியத் தரத்தினை உயர்த்துதல் ஆகியவை இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களின் முக்கிய நோக்காகும்.                    
 
                  -  வளங்களை நெற்பயிர் பயன்படுத்திக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்கான தொழிற்நுட்பங்களை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேவை அறிந்து உரம் அளிக்கும் முறையை உருவாக்கி உள்ளது. 
 
                 
                தொடர்பு கொள்ள முகவரி: 
                  வேளாண்மைத்  துறை, 
25, பழைய  கலாஹா சாலை, 
பெரடெனியா, இலங்கை, 
தொலைபேசி  எண்: 0812 388331, 0812 388332, 0812 38833  | 
             
            
               
                 | 
             
            
              | மேலே செல்க | 
             
           
     |