| 
        அறுவடை பின்சார் தொழில் நுட்பம் 
           
           
 
        
          
            
              | அறுவடை | 
                | 
             
            
              
                  - நெற்பயிரில், தண்டுடன் சேர்ந்திருக்கும் நெற்கதிர்களை வெட்டி, சேகரிப்பதே அறுவடை எனப்படுகிறது. 
 
                     - சரியான நேரத்திலும், சரியான வழியிலும், அறுவடை மேற்கொண்டால் தானிய மகசூலை அதிகரித்து, தானிய மணி இழப்பு மற்றும் தரம் குறைதலைக் குறைக்க முடியும்.
 
                     - பயிர்ச் செடிகள் முழு வளர்ச்சி அடைந்துவிடுதல், (ஏறக்குறைய நடவு செய்து 3 மாதங்களில்) நெல் மணிகள் பழுக்க  முதிர்ச்சி தொடங்கி, மேல்பகுதி உதிருதல் மற்றும் செடியின் தண்டு மஞ்சளாகுதல் மற்றும் வயலில் இருக்கும் நீர் வடிந்து விடுதல் ஆகியவை நெல் அறுவடை மேற்கொள்வதற்கான அறிகுறிகள் ஆகும். 
 
                     - வயல்கள் வறண்ட  பின், நெல்மணிகள் நன்கு முதிர்ச்சி அடைந்து விடும். பிறகு அறுவடையை ஆரம்பிக்கலாம்.
 
               
              
  | 
              
                 
               
  | 
             
            
               
                அறுவடையின் நிலைகள் 
                
                  - உகந்த நெல் அறுவடைக்கு பல காரணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
                  - நெல் மணி நன்கு வளர்ச்சி பெற்று தரம் உயர்ந்தும் முறையான ஈரத்தன்மை அளவும் கொண்டிருக்க வேண்டும். 
 
                  - அறுவடை மற்றும் ஊர்தி போக்குவரத்து ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வயல் போதுமான அளவு உலர்ந்து இருக்க வேண்டும். 
 
                  - தகுந்த நேரத்தில் அறுவடை செய்வதால், சிறந்த தானியத் தரம், அதிக அங்காடி மதிப்பு மற்றும் சிறந்த நுகர்வோரின் விருப்புத் தேர்வு ஆகியவற்றைப் பெற முடிகிறது. 
 
                  - 80 சதவிகிதம் பூங்கொத்துக்களில் 80 சதவிகிதம் பூங்கிளைகள் (கதிர்க்கிளைகள்) இருத்தல் மற்றும் மேற்பகுதி வைக்கோல் நிறமாக மாற்றம் அடைதல் ஆகியவையே அறுவடை செய்வதற்கான உகந்த நிலை எனப்படுகிறது.  நெல்மணி 20 சதவிகிதம் ஈரப்பதம் கொண்டிருக்கும். 
 
                  - பூங்கொத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தானியமணிகள் நன்கு கடினமான மாவு பத  நிலையில் இருக்கும் போது நெல் அறுவடை செய்ய வேண்டும். 
 
                  - நெற்பயிர் முதிர்ச்சியை 3-4 நாட்கள் முன்னரே ஏற்படச் செய்வதற்கு, அறுவடை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே 20 சதவிகிதம் "சோடியம் குலோரைடு"  தெளித்தல் வேண்டும்.  இதனால் பருவமழைப் பொழிவிலிருந்து நெற்பயிர் சேதத்தைத் தடுக்கலாம் 
 
                | 
              
                 
               
  | 
             
            
                               அறுவடை செய்யும் முறைகள் 
                அறுவடை பரப்பு அளவு மற்றும் அதன் எந்திரமயமாக்கலின் அளவு ஆகியவற்றைப் பொருத்து நெற் பயிரை கை அறுவடை அல்லது இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யலாம்:               
                 
                  - கைவினை அறுவடை
 
                   இம்முறை அறுவடையில் பல்வேறு பாரம்பரிய கதிரடிக்குங்கருவிகளான, கதிரடிக்கும் மரச்சட்டங்கள், எளிதாக கால்களால் இயக்கப்படும் கதிரடிப்பான் மற்றும் நெற்பயிரை மிதிப்பதற்காக விலங்குகள் அல்லது கூர்மையான கத்திகள்/கறுக்கரிவாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.  இதில் 55-60 சதவிகிதம் நெல் மீட்பு  கிடைக்கும்.  
                  - கைவினை அறுவடை மற்றும் இயந்திரக் கதிரடிக்கும் முறை
 
நெற்பயிரை மனித ஆற்றலால் கதிரடித்து, பின் இயந்திர கதிரடிக்குங்கருவி மூலம் அதனை சுத்தப்படுத்தி நெல்லைப் பிரித்து எடுத்தல்.  
                  - அறுவடை இயந்திரம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரம்
 
பயிரை அறுக்கும் கருவி நெற்பயிரை வெட்டி வரிசையில் வைக்கிறது.  பின் கதிரடித்தல் மற்றும் சுத்தம் செய்தல் ஆகியவை மனித ஆற்றலாலோ (கைவினை) அல்லது இயந்திரம் மூலமோ மேற்கொள்ளலாம்.  
                  - கூட்டு அறுவடை இயந்திரம்
 
கூட்டு அறுவடை இயந்திரமானது பயிர் அறுவடை முதல் நெல் பிரித்தெடுத்தல் வரை அனைத்து செயல்முறைகளையும் செய்யக் கூடிய இயந்திரமாகும்.  அதாவது, பயிர்  அறுத்தல், எடுத்துச் செல்லுதல், கதிரடித்தல் மற்றும் சுத்தம் செய்தல்.  இது 50 சதவிகிதம் நெல் மீட்பை அளிக்கிறது.  
                  | 
                
               
  | 
             
            
              சராசரி மகசூல்  
              
                
                  - நன்கு மேலாண்மைசெய்த  மத்திய-பின் பருவ இரகங்கள் 60-70 குவின்டால்/எக்டர் மகசூலைத் தருகிறது.
 
                  - குறுகிய கால இரகப் பயிர்கள் 45-55 குவிண்டால்கள்/எக்டர்  மகசூலைத் தருகிறது. 
 
                  - ஒரு பருவத்தில் 40-60 குவிண்டால்கள் /எக்டர் தீவனமும் கிடைக்கிறது.
 
                 
               | 
                
               
  | 
             
            
                                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
                 | 
              அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் | 
             
            
                | 
              கதிரடித்தல் 
                 
                
                  - நெற்பயிர்ச் செடியை நன்கு அடித்து, விதைகள் (அல்லது) தானிய 
 
                  மணிகளை வைக்கோலிலிருந்து பிரித்தெடுக்கும் முறையே  
                  கதிரடித்தல் எனப்படுகிறது.  
                  - அறுவடை செய்த நெல்மணிகளின் உயர்ந்த தரத்தைப் 
 
                  பராமரிப்பதற்கு, அறுவடை  செய்த உடனே நெற்பயிர்ச் செடியை  
                  கதிரடித்தல் வேண்டும்.  
                  - வயல் உலர்ந்து போதல் (வறட்சி) ஏற்படுதல் மற்றம் சில 
 
                  நாட்களுக்கு நெற்பயிரை வயலிலேயே அடுக்கி வைத்தல்  
                  ஆகியவற்றைத் தடுக்க வேண்டும்.  இல்லையெனில் மிகுதியான  
                  உலர்தல் ஏற்படுவதினால் தானியமணியின் தரம் குறைய  
                  வாய்ப்புள்ளது.  அதிக ஈரத்தன்மை கொண்ட அடுக்கி  
                  வைக்கப்பட்ட தானியமணிகளில் நிறமாற்றம் அடைதல் (அ) மஞ்சள்  
                  நிறமாக மாறுதல் ஆகியவை ஏற்படும். 
                | 
             
            
               
                   
 
  | 
               
                கதிரடித்தல் மனித ஆற்றலாலோ அல்லது இயந்திரம்  
                மூலமாகவோ மேற்கொள்ளலாம் 
               
                கைவினைக் கதிரடித்தல் முறை 
                
                  - பாதங்களால் (காலால்) மிதித்தல், கம்பு முறை, தண்டுகளை 
 
                  தொட்டிகள், மரத்தட்டிகள் அல்லது மரச்சட்டங்களுக்கு எதிராக  
                  அடித்தல் ஆகியவை மனித ஆற்றலால் கதிரடிக்கும் முறைகள் ஆகும்.  
                  - மேலும் எருதுகளால் மிதிக்கச் செய்தல், மனிதக் காலால் நன்கு 
 
                  மிதித்துத் தேய்த்தல் (அல்லது) கதிர் கட்டுக்களைத் துாக்கி  
                  உயரமான மரமேடையில் அடித்தல் ஆகிய முறைகளைப்  
                  பயன்படுத்தியும் கதிரடிக்கலாம்.  
                  - காலால் இயக்கப்படும் கதிரடிக்குங் கருவியையும் பயன்படுத்தலாம். 
 
                  - கதிரடித்த உடனே, நெல்மணிகளை சூரிய ஒளியில் நன்கு உலர்த்த 
 
                    வேண்டும். 
                   
                | 
             
            
                | 
               
                இயந்திரக் கதிரடிக்கும் முறை 
                
                  - கதிரடிக்கும் இயந்திரமானது, நெல் மணிகளை 
 
                  நெற்பயிரிலிருந்து அகற்றுகிறது.  மேலும் கதிரடிப்பதை  
                  விரைவாகச் செயல்படுத்தி இழப்பைக் குறைக்கிறது,  
                  வேலையாட்கள் தேவையைக் குறைக்கிறது.  
                  - இயந்திர சக்தியால் மாறா நிலையுடன் இயங்கும் 
 
                  கதிரடிப்பான்களைப் பயன்படுத்தலாம்.  
                  - கதிரடித்த உடனே நெல்மணிகளை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும்
 
                | 
             
            
              | மேலே செல்க | 
             
            
                               
  
    உலர்த்தல் 
       
      
        - நெல்மணிகளிலிருக்கும் மிகுதியான ஈரத்தன்மையை அகற்றுவதே 
 
          உலர்த்தல் முறையாகும்.  
        - ஒருமுறை நன்கு உலர்த்திவிட்டால், பின் அதனை 
 
          பதப்படுத்துதலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.  
        -  முறையான உலர்த்தல் முறையால், தானிய மணிகளின் சேமிப்புக் 
 
          காலத்தை அதிகரிக்க முடிகிறது.  மேலும் தானியத்  தரம்  குறைவு  
          ஏற்படுத்தலைத் தடுத்தல், உயிரியல் சுவாசத்தால் தானிய மணிகள்  
          தரம் குறைதலைத் தடுத்தல் மற்றும் உகந்த ஆலை நெல் மீட்பு  
          ஆகியவற்றையும் முறையாக  உலர்த்தல் முறையின் மூலம் பெற முடிகிறது. 
       
      உலர்த்தல் முறைகள் 
      
        - வெயிலில் உலர்த்துதல்
 
        - இயந்திர வழி உலர்த்துதல் முறை
 
        - வேதியியல் உலர்த்துதல் முறை
 
        | 
                 | 
     
  
     
      வெயிலில் உலர்த்துதல் 
      
        - இம்முறையானது, நெல்மணிகளை பாரம்பரிய முறையில் உலர்த்துதல் 
 
          ஆகும். தானிய உலர்த்தல் முறையில் வெயிலில் உலர்த்துவதே சிறந்த பொருளாதார சிக்கன முறையாகக் கருதப்படுகிறது.  
        - உலர்த்தல் பரப்புகளான கற்காரைத்தளம், பாய்கள், பிளாஸ்டிக் தாள்கள் 
 
          அல்லது வயல்கள் ஆகிய ஏதாவது ஒன்றில் தானியமணிகளைப் பரப்பிவிட்டு இயற்கையான முறையில் உலர்த்தல் வேண்டும்.  
        | 
     
  | 
     
  
     
      இயந்திர வழி உலர்த்தல் 
     
      
        - இயற்கையான காற்று அல்லது வெப்பமான  (சூடான) காற்றை நெல் திரள்கள் வழியே அளித்து காற்றுாட்டம் ஏற்படுத்துவதால், நெல்மணிகளில் உள்ள ஈரத்தன்மை ஆவியாக வெளியேறுகிறது.  இதுவே இயந்திர வழி உலர்த்தல் முறையாகும்.
 
        - வருடத்தின் எந்த நேரத்திலும் இயந்திர முறை உலர்த்துதல் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளதால், இயந்திர வழி உலர்த்துதல் முறை நம்பிக்கைக்குரியதாகவும், ஏற்றதாகவும் உள்ளது. 
 
        | 
     
  | 
     
  
     
      வேதியியல் முறை உலர்த்தல் 
     
      
        - 1.1 முதல் 1.2 ஒப்பு அடர்த்தி கொண்ட சாதாரண உப்புக் கரைசலை முதிர்ச்சியடைந்த நெற்பயிரின் கதிர்களில் தெளிப்பதே வேதியியல் உலர்த்தல் முறையாகும். 
 
        - இம்முறை 29 சதவிகிதம் ஈரத்தன்மையை 14.5 சதவிகிதமாக நான்கு நாட்களுக்குப் பிறகு குறைக்கிறது.
 
        | 
     
  | 
     
                 | 
             
            
                               மேலே செல்க | 
             
            
                | 
              நெல் புழுங்க வைத்தல் 
                 
                
                  - நெல் ஆலைக்கு எடுத்துச் செல்லும் முன்னர் உமி நீக்கப்படாத 
 
                  நெல்லின், ஆலைத்தரத்தை உயர்த்துவதற்கும் அதன்  
                  ஊட்டச்சத்து மதிப்பு, சமைக்கும் தரம் மற்றும் சேமிப்புத்  
                  தன்மை ஆகியவற்றை உயர்த்துவதற்கும் நெல்லுக்கு நீர் வெப்ப  
                  சிகிச்சை அளிக்கும் முறையே நெல் புழுங்க வைத்தல் எனப்படுகிறது.  
                  - இம்முறையை மூன்று வரிசைகளில் மேற்கொள்ளலாம். ஊற 
 
                  வைத்தல்,   ஆவியில் வேகவைத்தல்,   உலர்த்துதல்.  
                  - பாரம்பரிய முறையில் புழுங்க வைத்தல் ஒன்று அல்லது 
 
                  இரட்டை வேக்காடு முறையில் செய்யப்படுகிறது.  
                  - ஒற்றை வேகவைத்தல் முறையில், உமி நீக்கப்படாத நெல்லை 
 
                  முதலில் நீரில் ஊறவைத்து அறை வெப்பநிலையில் வைத்தல்  
                  வேண்டும்.  அதனைத் தொடர்ந்து, திறந்த வெளியில் 20-30  
                  நிமிடங்கள் இரும்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி ஆவியில் வேக  
                  வைத்து பின் வெயிலில் உலர்த்த வேண்டும்.  
                  - இரு வேக்காடு முறையில், உமி நீக்கப்படாத நெல்லை 
 
                  நீராவியில் வேகவைத்து அதன் வெப்பநிலையை அதிகரிக்கச்  
                  செய்ய வேண்டும்.  பின் குளிர் நீரில் 24-36 மணி நேரத்திற்கு நன்கு  
                  ஊற விடுதல் வேண்டும்.  அதனைத் தொடர்ந்து மீண்டும்  
                  இரண்டாவது முறையாக 20-30 நிமிடங்கள் ஆவியில் வேக  
                  வைத்து பின் வெயிலில் உலர்த்த வேண்டும்.  
                | 
             
            
                              
                  
                      
                         
                          நெல் ஆலையில் பக்குவப்படுத்தும் முறை: (நெல் அரைத்தல்)  
                          
                            - வேகவைக்கப்பட்ட நெல்லை மனிதன் உணவாக எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற வடிவில் மாற்றித் தருவதே ஆலையில் பக்குவப்படுத்துதல் முறை ஆகும்.  எனவே அரிசி உடைதலைத் தடுப்பதற்கும், 
 
                            அரிசி மீட்புத் திறனை அதிகரிக்கச் செய்வதற்கும், மிகவும் கவனத்துடன் இம்முறையை மேற்கொள்ள வேண்டும்.  
                            - பழுப்பு நிற நெல்லை நன்கு வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு, மீண்டும் ஆலை ப் பக்குவப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும். 
 
                            - அறுவடை மற்றும் உலர்த்தலுக்குப் பிறகு, நெல்லை முதன்மை ஆலை பண்படுத்தல் முறையைச் 
 
                            செய்ய வேண்டும்.  அதாவது, உமி நீக்குதல் மற்றும் தவிட்டுப் படலத்தை அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.  இம்முறையில் நெல் பக்குவப்படுத்தியதற்குப் பின் கிடைக்கும் அரிசியே "பச்சரிசி" எனப்படுகிறது.  
                            - மற்றொரு முறை மூலம் நெல் பக்குவப்படுத்தலுக்குப் பின் கிடைக்கும் அரிசியை "புழுங்கல் அரிசி" எனப்படுகிறது.  பெரும்பாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 60 சதவிகிதம் நெல்லில்  
 
                            "புழுங்க வைத்தல்" முறையே மேற்கொள்ளப்படுகி. 
                            - நெல்லை  ஆலை பக்குவப்படுத்துவதால், அரிசி பண்பு இழப்பு மற்றும் அளவீட்டுப் பண்பு 
 
                            இழப்புகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.  அளவீட்டுப் பண்பு இழப்புக்கள் ஆலை நெல் பக்குவப்படுத்தலின் மீட்பு குறைவின் மூலம் தெரிகிறது.  அதேபோன்று கதிர் நெல் மீட்புக்  
                            குறைவாக இருத்தல் அல்லது அதிக சதவிகிதம் உடைந்த அரிசிகள் காணப்படுதல் ஆகியவை  
                            நெல் தரம் இழப்பினை உணர்த்துகிறது.  
                          | 
                       
                      
                         
                        நெல் ஆலையில் பக்குவப்படுத்தும் முறைகள் 
                          பாரம்பரிய முறை 
    
                              இயந்திர வழி நெல் பக்குவப்படுத்துதலுக்கு முன்னர், நெல்லை கைமூலம்  
                          இடித்து (கைக்குத்தல் அரிசி) பக்குவப்படுத்துதலே, வழக்கத்தில் இருந்தது.   
                          மேலும் இயந்திர வழி நெல் பக்குவப்படுத்துதல் முறையோடு ஒப்பிடும்  
                          போது கைக்குத்தல் அரிசியில் தான் அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது  
                          எனக் கண்டறியப்பட்டுள்ளது.  கைக்குத்தல் முறையில், பலவகை  
                          கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.  அவை கீழ்வருமாறு:  
                          
                            - சாந்து காரை மற்றும் குழவி (சாந்து குழவி)
 
                            - உரல்
 
                            - கைக்கல் (சக்கி)
 
                          | 
                         
  | 
                       
                      
                         
                        இயந்திர முறை 
                            எந்திர ஆலைகள் தொடங்கப்பட்டபின், கைக்குத்தல் முறை கொஞ்சம்  
                          கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.  ஏனெனில் இயந்திர ஆலைகளுடன் இம்முறை போட்டியிடமுடியாது.  வழக்கத்திலுள்ள நெல் ஆலைகளை மூன்று முக்கிய  
                          வகைகளாகப் பிரிக்கலாம்:  
                          
                            - உமி நீக்கும் இயந்திர ஆலைகள்
 
                            - மேல்தோல் - உமி நீக்கும் ஆலைகள்
 
                            - மேல்தோல் நீக்கி பளபளப்பாக்கும் ஆலைகள்
 
                          | 
                         
  | 
                       
                 
                   | 
             
            
                               மேலே செல்க | 
             
            
                
                
                | 
              சுத்தப்படுத்துதல் மற்றும் உமி நீக்குதல்
                
                  - நெல் பதனஞ்செய்யும் உலையில், நெல்லை சுத்தப்படுத்தி உமியை 
 
                  நீக்க வேண்டும்.  
                  - இவ்விடத்தில், பழுப்பு நெல்லை மீண்டும் 
 
                  பக்குவப்படுத்தத் தேவையில்லை. 
                  - வெள்ளை நிறஅரிசி தேவைப்பட்டால், பழுப்பு நிற அரிசியை 
 
                  மீண்டும் பக்குவப்படுத்தி வெளிப்புற தவிட்டு உறை  
                  (அடுக்குக்களை) நீக்கிட வேண்டும். அரிசியிலிருந்து வெளிப்புற  
                  உமியை அகற்றும் முறையே உமி நீக்குதல் எனப்படுகிறது. 
                 
                மனித ஆற்றலால் (கைவினை) உமி நீக்கும் முறை: 
                
                  - கையினால் சொரசொரப்பான அரிசியை கற்களுக்கு இடையே 
 
                  வைத்து உருட்டுதல் அல்லது அரைத்தல் ஆகியவற்றின் மூலம்  
                  உமியை நீக்கலாம். 
                 
                இயந்திர வழி உமி நீக்குதல்: 
                
                  - சொரசொரப்பான அரிசியை முதலில் பலமுறை சல்லடை மூலம் 
 
                  சுத்தம் செய்து, சிதைக் கூளங்களை அகற்றிவிட வேண்டும்.  பின்  
                  காற்று மூலம் மேற்பரப்பு குப்பைகளை அகற்றி விட வேண்டும்.  
                  - சுத்தம் செய்த அரிசியை இயந்திரம் மூலம் உமி நீக்கம் 
 
                  செய்தல்.  இதனால் கைகள் மூலம் கற்களைப் பயன்படுத்தும்  
                  செயலைக் குறைக்க முடிகிறது.  
                  - மேலோடு இயந்திரமானது, அரிசியிலிருந்து உமிகளை 
 
                  தளர்த்துகிறது.  இம்முறையின் மூலம் 80-90 சதவிகிதம்  
                  அரிசி உமி நீக்கப்படுகிறது.  
                  - மேலோடு நீக்கும் இயந்திரத்தில், நெல்மணிகள் மற்றும் 
 
                  உமிகள் அதிலிருக்கும் கல் உருளையில் விழுகின்றது.  அது  
                  தேவையற்ற உமிகளை இழுத்துக் கொண்டு,  
                  அரிசிகளை (நெல்மணிகளை) இயந்திரத்துக்குள் அனுப்புகிறது.   
                  அங்கு உமியுடனுள்ள தானியங்களிலிருந்து உமிகளை  
                  நீக்கப்பட்ட தானியங்களைப் பிரிக்கிறது.  
                  - தானியங்களை அசைத்து விடுதலின் மூலமாக, நெல் இயந்திரம் 
 
                  கனமான உமி நீக்கப்படாத நெல் மணிகளை ஒரு பக்கமும்,  
                  மெல்லிய எடையுடைய உமி நீக்கப்பட்ட அரிசிகளை  
                  மறுபுறமும் தள்ளுகின்றது.  
                  - உமி நீக்கப்படாத நெல்மணிகளை மேலோடு நீக்கும் 
 
                  இயந்திரத்தின் மற்றொரு பிரிவுடன் சேர்த்து இயக்கினால்,  
                  உமியை நீக்கி சுத்தமான அரிசியைப் பெறலாம்.  
                | 
             
            
              
                  
                     
                      அரிசியை பளபளப்பாக்குதல்
                      
                        - பழுப்பு அரிசியிலிருக்கும் தவிட்டு அடுக்கை அகற்றுவதே 
 
                        பளபளப்பாக்குதல்  முறையாகும்.  
                        - நெல் அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, அதனை முதன்மை நிலை
 
ஆலைப் பக்குவப்படுத்துதல் முறையை மேற்கொள்ள வேண்டும்.  
                        - இதனால், உமி மற்றும் தவிட்டு அடுக்குகள் நீக்கப்பட்டு சுத்தமான 
 
                        அரிசி கிடைக்கிறது.  இதுவே "பச்சரிசி" எனப்படுகிறது. 
                      | 
                      | 
                   
                | 
             
            
              
                
                    | 
                   
                    அரிசியின் தரம் மற்றும் தரம் பிரித்தல்
                    
                      - அரிசியின் தரத்தை எளிதாக விளக்க இயலாது.  ஏனெனில் அதன் தரம், நுகர்வோரின் எதிர்பார்ப்பு மற்றும் அதனைப் பயன்படுத்தும் காலம் ஆகியவற்றைப் பொருத்துத்தான் அமைகிறது. 
 
                      - நெல்லின் தரம் அதன் இரகத்தைப் பொருத்து மட்டுமே அமைவதில்லை. 
 
                        மேலும் பயிர் உற்பத்தி சுற்றுச்சூழல், பயிர் அறுவடை, நெல் பதனப்படுத்துதல் மற்றும் ஆலைப் பண்படுத்தல் முறை ஆகியவற்றைப் பொருத்தும் அதன் தரம் அமைகிறது. 
                         
                       
                     
                       | 
                 
                
                   
                    ஆலையில்  பதப்படுத்தப்பட்ட நெல்லினைத் தரம் பிரிப்பதற்கு கருத்தில் எடுத்துக்  
                    கொள்ளப்படும் சிறப்பியல்புகள் 
                    
                      - உயிரற்ற அரிசி, உடைந்த அரிசிகள் மற்றும் வடிப்புகளின் சதவிகிதம்
 
                      - குறைபாடுகள்
 
                      - அயல் வகை பொருட்கள்
 
                      - நெல் கலந்து இருத்தல்
 
                      - வெண்மையான நிறம்
 
                      - சுண்ணம் நிறைந்த, வெளிறிய அரிசிகள்
 
                      - ஈரப்பதம் தன்மை
                        
 
                         
                     
                    தரப்பிரிவுகள் மற்றும் தரநிலைகளை நிலைநாட்டுவதற்கான குறிக்கோள்கள் 
                    
                      - நுகர்வோரைச் சென்றடையக் கூடிய உண்ணத்தக்க வகை அரிசியை உறுதிப்படுத்துதல்/பாதுகாத்தல். 
 
                      - கழிவுகள்/தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக அறுவடைக்குப்பின் மேற்கொள்ளப்படும் செயல் முறைகளை உயர்த்துதல். 
 
                      - பண்ணை மகசூலை அதிகரிப்பதற்காக வேளாண் (உழவியல்) செயல்முறைகளை செம்மைப்படுத்துதல். 
 
                      - சிறந்த ஆலை நெல் மீட்புகளுக்கு பதப்படுத்துதல் செயல் முறைகளை செம்மைப்படுத்தல் மற்றும் அங்காடி விரிவாக்கத்துக்கும் உதவுகிறது. 
 
                      - நுகர்வோர்கள் அரிசி விலை மற்றும் அதன் தரம் மூலமாக ஏமாற்றம் அடைவதிலிருந்து பாதுகாக்க முடிகிறது. 
 
                     
                    இந்திய அரிசியின் தரப்பிரிவுகள் 
                    
                      - பொதுவான இரகம்: குட்டையான பருமனான அரிசி மற்றும் நீண்ட பருமனான அரிசி
 
                      - சன்ன ரக அரிசி: மெலிந்த அரிசி
 
                      - மிகவும் சன்ன ரக அரிசி: நீண்டு மெலிந்த அரிசி மற்றும் குட்டையான மெலிந்த அரிசி 
 
                      | 
                   
                
                                       மேலே செல்க | 
                 
                | 
             
            
              
                
                  சேமிப்பு 
                         அரிசிகளை பைகளிலோ அல்லது மிகுந்த அளவில்  ஒரு சேமிப்புக் கூடத்தை வடிவமைத்து அதில் பாதுகாக்கும் முறையே சேமிப்பு எனப்படுகிறது.  இம்முறையால் தீங்கு விளைவிக்கும் வானிலை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்டக்காலப் பூச்சிகள் ஆகிய இடையூறுகளிலிருந்து அரிசியைப் பாதுகாக்க முடிகிறது.
                     
                    
  | 
                    | 
                 
                
                  கீழ்வரும் காரணங்களுக்காக தானியங்களை பாதுகாத்தல் (சேமித்தல்) தேவை :  
                    
                      - வருடம் முழுவதும் சீராக உணவு வழங்குவதற்காக சேமிக்கபடுகிறது. ஏனெனில் நெற்பயிர்களை பருவங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.  ஆனால் உணவு உட்கொள்ளுதல் வருடம் முழுவதும் சீராக நடந்துக்கொண்டிருக்கும். 
 
                      - தற்செயல்களாக நிகழும் வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் மற்ற பேரிடையூறுகளுக்காக சேமித்து வைத்தல். 
 
                      - உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் சிறந்த மதிப்புக்காக (விலை) ஊகம் செய்து சேமித்து வைத்தல்.
 
                       
                     
                      மூன்று வேறுபட்ட நிலைகளில் நெல்மணிகளை சேமிக்க முடிகிறது.  அவை பின்வருமாறு: 
                    
                      - உற்பத்தியாளர்களின் நிலை
 
                      - 	வணிகர்களின் நிலை
 
                      - நகர்ப்புற கட்டமைப்பில் சேமித்து வைத்தல் 
 
                       
                     
                      நெல்மணிகளை சேமித்து வைக்கப் பின்பற்றப்படும் முறைகள்: 
                    
                      - பைகளில் சேமித்தல் 
 
                      - குவித்து வைத்து சேமித்தல்
                        
                          - குறுகிய கால சேமிப்புக்கு, பைகளில் சேமித்து வைத்தல் ஏற்ற முறையாகும்.  இதில் தானியங்கள் மிக விரைவாக முன்நோக்கிச் செல்லும். 
 
                          - குறுகிய கால சேமிப்புக்கு, எவ்வித பூச்சிக்கட்டுப்பாட்டு முறைகளும் தேவையில்லை. 
 
                          - அதிக அளவு/குவியல் சேமிப்பு முறையில், ஒரு அலகுக்கனம் இடைவெளியில் அதிக அளவிலான நெல்மணிகளை சேமித்து வைக்க முடிகிறது.  மேலும் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகவே காணப்படும்er.
 
                          - சிறந்த சேமிப்பு செயல்முறைக்குத் தேவையான முதன்மை தேவைகள்: நெல்மணிகள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், சீராக உலர்ந்த தானியங்கள் மற்றும் தகுந்த சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்கான சேமிப்பு கூடம் மற்றும் பூச்சிகள் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கும் சேமிப்புக்கூடம் ஆகியவை இன்றியமையாத தேவைகளாக விளங்குகின்றன.
 
                           
                         
                      | 
                   
                | 
             
            
              
  | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
              | நெல் உற்பத்திப் பொருட்கள் | 
                | 
             
            
              நெல் உப பொருள்கள்
  
    - நெல் பக்குவப்படுத்தும் ஆலைத் தொழிற்துறையை நவீனமாக்குதலால், தரமான உப பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது.  அதாவது, உடைந்த விதை, உமி மற்றும் அரிசித் தவிடு ஆகியவை உப பொருட்களாகக் கிடைக்கின்றன. 
 
    - இந்தத் துணைப் பொருட்களில் இருந்து மதிப்பேற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களும் நவீன தொழில் நுட்ப இயல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 
    | 
             
            
               
                உடைந்த அரிசி 
                  - உடைந்த அரிசி அதிகமாக, உணவு தயாரிப்பதற்கும், தொழிற்சாலைகளில் அரிசி மாவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 
 
                  - உடைந்த அரிசியிலிருந்து எடுக்கப்படும் மாவுப் பொருளானது, மருந்தாக்கம், நெசவு மற்றும் பல தொழிற்சாலைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. 
 
                 
                 | 
                | 
             
            
               
                அரிசி உமி   
                
                  - அரிசி உமியில் 38 சதவிகிதம் நார்மப்பொருள் மற்றும் 32 சதவிகிதம் கரிமப் பொருள்கள் (லிக்னின்) இருக்கிறது.  மேலும் இயல்பு நிலையைத் திரும்பப்பெறும் தன்மையுடைய வேளாண்மை சார்ந்த எரிபொருளாகக் கருதப்படுகிறது. 
 
                  - ஒரு வருடத்தில் அரிசி உமி உற்பத்தி 80 மில்லியன் டன்களாக உள்ளது.  இது 170 மில்லியன் பேரல் எண்ணெய் சக்திக்குச் சமமாகக் கருதப்படுகிறது. 
 
                  - நெல் உமியில் 22 சசதவிகிதம் சாம்பல் உள்ளது.  இதில் (சாம்பலில்) 95 சதவிகிதம்  சிலிகா சத்தே உள்ளது. 
 
                  - அதிக சிலிகாத் தன்மையுள்ளதால் நெல் உமியை உராய்வுப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.  அதிக அளவிலான உமியை இந்தியாவில் கொதிகலன்களுக்கு எரிபொருளாகவும், சூளைகளிலும் மற்ற வீட்டுமனை சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
                | 
                | 
             
            
               
                நெல் வைக்கோல் 
                
                  - ஒவ்வொரு டன் நெல்லும், அதற்குச் சமமான அளவு வைக்கோலை துணைப்பொருளாகக் கொடுக்கின்றன. 
 
                  - வைக்கோலை அசைபோடும் விலங்குத் தீவனமாகவும், நிலையான படுக்கைப் பொருளாகவும், காளான் வளர்ப்புக்கு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 
 
                  - மேலும் இதனை சமையலுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றனர். 
 
                  - படுக்கை தயாரிப்பு:ஒரு அடுக்குக்கு 500 கிராம் வைக்கோல் பயன்படுத்த வேண்டும்.  வைக்கோலை 3-5 செ.மீ அளவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதனை குளிர்ந்த  நீரில் 6-8 மணி நேரங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.  பின் அதனை வெளியில் எடுத்து  சுடுநீரில் 15-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.  பின்னர் மிகுதியான நீரை  வடித்துவிட்டு, வைக்கோலை நிழலில் 2 மணி  நேரங்கள் உலர்த்தி பின் பயன்படுத்த வேண்டும்
 
                | 
                | 
             
            
               
                அரிசித் தவிடு 
                
                  - பொதுவாக அரிசித் தவிடு, மிகவும் மதிப்புமிக்க ஒரு துணைபொருளாக விளங்குகின்றது.  அதில் இருக்கும் அதிக கொழுப்புத்தன்மை (15-20 சதவிகிதம்) மற்றும் புரதச்சத்து (12 சதவிகிதம்) ஆகியவையே அதன் தனிச்சிறப்பாகும். 
 
                  - அதிலிருக்கும் அதிக ஊட்டச்சத்து மதிப்பினால், தவிட்டை பறவைகள் வளர்ப்பு (கோழி இனம்) மற்றும் கால்நடைகளுக்குத் தீவனமாய் பயன்படுத்தப்படுகிறது. 
 
                  - அதிக நிலையான கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட தவிடில் அதிக அளவிலான புரதச்சத்து, ஊட்டச்சத்து (வைட்டமின்) மற்றும் தாதுப்பொருள்கள் உள்ளதால் உணவு மற்றும் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகவும் பயன்படுகின்றது. 
 
                  - பொதுவாக, தவிடு உமியுடன் சேர்ந்து கலப்படமாகியுள்ளதால் அதன் ஊட்ட மதிப்பினைக் குறைக்கிறது. 
 
                | 
                | 
             
            
               
                நெல் தவிட்டு எண்ணெய் 
                
                  - அரிசி உமித் தவிட்டை கரைப்பான்களுடன் சேர்ந்து பிரித்தெடுத்தல் மூலமாகக் கிடைப்பதே, "தவிட்டு எண்ணெய்". 
 
                  - இந்த எண்ணெயில், அடைபடாக் கொழுப்பு அமிலத்தின் சதவிகிதம் அதிகமாக உள்ளது.  இதில் இயற்கையான உயிரியமாக்கி எதிர்ப்புப்பொருள்கள் உள்ளதால் தவிட்டு எண்ணெய் முழுவதுமாக நிலையான தன்மையில் இருக்கும். 
 
                  - எண்ணெயை மாசு நீக்கி, நிறம் நீக்கி, வாசனை நீக்கப்பட்டு உண்ண நேர்த்தியாகவும், சமையல் எண்ணெயாகவும் பயன்படுகிறது. 
 
                  - கரைப்பானுடன் பிரித்தெடுத்த பிறகு, தவிட்டு எண்ணெயில் அதிக சதவிகிதம் புரதம் இருக்கும்.  கொழுப்புத் தன்மை குறைவாக உள்ளதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 
 
                | 
                | 
             
            
               
                அரிசித் தவிட்டு எண்ணெயின் முக்கியத்துவம் 
                
                  - அரிசித் தவிட்டு எண்ணெயில் ஊட்டச்சத்து ஈ கூறுகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு 
 
                  நன்மை ஏற்படுத்துகிறது.  
                  - இதிலுள்ள தனிச்சிறப்புக் கூறுகளான "டோகோட்ரினால்" போன்றவை மக்களின் கவனத்தை 
 
                  ஈர்க்கிறது.  
                  - "ஒரைசனால்" நன்மை விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்காமல், தீமை ஏற்படுத்தும் 
 
                  கொழுப்பைக் குறைக்கிறது.  
                  - "டோக்கோட்ரினால்" என்ற சிறந்த தனிச்சிறப்பு வாய்ந்த கூறை மிகவும் மதிப்புமிக்க மற்றும் 
 
                  வலிமை பெற்ற ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளதாகவும், இதில் புற்றுநோய் எதிர்ப்புத்திறன் கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
                | 
             
            
                                | 
             
            
              | மேலே செல்க | 
             
            
              
                
                  மதிப்புகூட்டப்பட்ட உற்பத்திப் பொருள்கள்
                    
                      - பதப்படுத்தப்பட்ட பொருள்கள்
 
                      - அரிசி சார்ந்த நொதித்த பொருட்கள்
 
                      - முறுக்கிப் பிழியப்பட்ட பொருட்கள்
 
                      | 
                   
                
                    | 
                   
                    அரிசி - பதப்படுத்தப்பட்ட  பொருட்கள் 
                    பொரித்த அரிசி                   
                    
                      - மணலை இரும்பு அல்லது மண்சட்டியில் போட்டு மிக அதிக வெப்பநிலை 
 
                        வரை நன்கு சூடுபடுத்த வேண்டும்.  பின் அம்மண்ணில் அரிசியைப் போட்டு பொரிக்க வேண்டும்.  
                      - பின் மணலை நன்கு கலப்பதினால், அரிசி வெடித்து பின் உப்பல் ஏற்படும்.  
 
                        பின் சட்டியிலிருக்கும் அடக்கப்பொருளை அகற்றி சல்லடை கொண்டு சலித்து, மணலிலிருந்து பொரியைப் பிரித்தெடுக்க வேண்டும்.  
                      - வேகவைத்த (புழுங்கல் அரிசி) அரிசியைக் கொண்டு நன்கு சாம்பல் 
 
                        நிறத்திலிருந்து சுத்தமான வெள்ளைநிறப் பொரியாக மாற்றி அதனை உப்புத் துாவியோ அல்லது உப்புப் போடாமலோ விற்பனை செய்யலாம்.  
                    | 
                 
                
                    | 
                   
                    ஊறவைத்து  பொரித்த அரிசி  
                    
                      - (முர்முரா, பொரி, முரி) ஆகியவை இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருளாகும். 
 
                      - பாரம்பரிய முறையில், நெல்லை நீரில் ஊறவைத்து அவை நன்கு செறிவுநிலை அடையும்வரை முழு இரவும், ஊறவைத்து, பின் நீரை வடிகட்டி அதனை 
 
                        ஆவியில் வேகவைத்தல் அல்லது மணலுடன் சேர்த்து அதனை வறுத்து வேகவைத்தல் வேண்டும்.  
                      - இம்முறை மேற்கொண்டு வேக வைத்த நெல்லை, ஆலையில் இட்டு பதப்படுத்தி, உப்பு சேர்த்து, பின் மறுபடியும் மணலில் சேர்த்து வறுக்க வேண்டும். 
 
                      | 
                 
                
                    | 
                   
                    அரிசிப் பொரி:-  
                    
                      - இது ஒரு பிரபலமான உண்ணத் தயாரான சிற்றுண்டிப் பொருள்.  முன்னரே வேகவைத்து பதப்படுத்திய அரிசியை உப்ப வைத்தல்/ஊத வைத்துத் 
 
                        தயாரிப்பதே இப்பொருள்.  
                      - பாரம்பரிய முறையில், அரிசியை மணல் இல்லாமல் சூளையில் மெதுவாக வெப்பமூட்டி அதன் ஈரத்தன்மையை அகற்றுவர். 
 
                      - பின் அதனை உப்புக்கரைசலில் போட்டு கலந்து, மீண்டும் மணலுடன் 
 
                        சேர்த்து சூளையில் அதிக நெருப்பு கொண்டு சில நொடிகள் நன்கு வறுக்க வேண்டும்.  இம்முறை மூலம் பொரியைத் தயாரிக்க வேண்டும்.  
                      - அரிசி எட்டு மடங்கு ஊதப்பட்டு நீளமாகவும், அதன் வடிவம் மாறாமலும் 
 
                        மிகவும் புரையான, மொறுமொறுப்புத் தன்மையுடனும் இருக்கும்.  
                      | 
                 
                
                    | 
                   
                    நெல் பொரி 
                    
                      - வெயிலில் உலர்ந்த நெல்லை மண் சாடி (குவளை) யில் நிரப்பி பின் சுடுநீர் கொண்டு அதனை ஈரப்படுத்த வேண்டும். 
 
                      - 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, நீரை வடிகட்டி, சாடியை தலைகீழாக திருப்பி 
 
                        8-10 மணி நேரங்கள் வைக்க வேண்டும்.  
                      - பின் நெல்லை வெயிலில் கொஞ்ச நேரம் வெளிப்படுத்தி பின் அரிசிப்பொரி தயாரித்ததைப் போன்று சுடுமணலில் வறுத்தெடுக்க வேண்டும்.
 
                      - பொரிக்கப்பட்ட நெல்லை சல்லடையில் சலித்து மணலிலிருந்து பொரியைப் பிரித்தெடுத்து பின் அதனைக் காற்றில் துாற்றி உமியை நீக்க வேண்டும். 
 
                      | 
                 
                
                    | 
                   
                    புழுங்கல்அரிசியிலிருந்து அரிசிப்பொரி 
                    
                      - அரிசியை உப்பு நீரில் நன்கு ஊற வைத்து அதன் ஈரத்தன்மை அளவை 20 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
 
                      - ஈரமான அரிசியை 250-275 செ வெப்ப அளவு கொண்ட சூடான பாத்திரத்தில் போட்டு 30-40 நொடிகள் வைக்க வேண்டும். 
 
                      - பின் இவ்வரிசி தானாகவே ஊதிப்போய் பொரித்துவிடும். 
 
                      | 
                 
                
                    | 
                   
                    பச்சரிசிப்பொரி 
                    இதனை பச்சைநெல்லிலிருந்து தயாரிக்க வேண்டும்.  12-14 சதவிகிதம் ஈரத்தன்மை கொண்ட நெல்லை இரும்புச் சட்டியில் மணலுடன் சேர்த்து நடுநிலை வெப்பமாக  
                    150-200 செஅளவில் நன்கு வறுக்க வேண்டும்.
  | 
                 
                
                    | 
                   
                    அவல்  
                    இது நெல்லிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மதிப்பூட்டப்பட்ட பொருள்.  
                    பாரம்பரிய முறையில், இதனை ஊறவைத்திருந்து தான் தயாரிப்பர்.  ஊற வைத்தநெல்லை, வெப்ப சிகிச்சை அளித்து உடனடியாக செதில்களாக்கும்  
                    இயந்திரம் மூலம் இதனை தட்டையாக, சன்னமாக்குவர்.சன்ன அரிசி மிகவும்  
                    மெலிந்து, காகிதம் போன்று மென்மையாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
  | 
                 
                
                  |   | 
                   
                    விரைவாக சமைக்கபயன்படும் அரிசி பளபளப்பாக்கப்பட்ட (மென்மையான) அரிசியை 35 சதவிகிதம் ஈரத்தன்மை கிடைக்கும் வரை நீரில் ஊறவைத்து அழுத்தச் சமையற்கலம் மூலம் வேகவைத்து பின் உலரவைக்கவும். 
  | 
                 
                
                    | 
                   
                    சிற்றுண்டி தயார்நிலை   பொருட்கள் 
                   
                    பளபளப்பாக்கப்பட்ட   மென்மையான அரிசியை முன்னரே வேகவைத்து உணவுப்  பொருட்கள் தயாரிப்பதற்காக ஒரு சாடியில் இதனை அடைத்து வைக்க வேண்டும்.   
                      பின் இதனை உலர்ந்த சிற்றுண்டி  தானியங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
                    .   | 
                 
                
                  
  | 
                   
                
                  |   | 
                  மேலே செல்க | 
                 
               
               
              
                
                  அரிசி-நொதித்த பொருட்கள் 
                    இட்லி 
                    
                      - இட்லி என்பது, ஆவியில் வேகவைக்கப்பட்டு கெட்டியாகி கிடைக்கும் 
 
                        அப்பம் ஆகும். இது நுண்ணுயிர் புளித்தல் (நொதிக்க வைத்தல்) மூலம் தயார் செய்யப்படுகிறது (12-18 மணி நேரங்கள்).  அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட உளுந்துப்பயிரை அரைத்து கெட்டியான பசை போன்று கிடைக்கும் மாவை நுண்ணுயிர் புளிப்பேற்றி ஆவியில் வேகவைத்து தயார் செய்வதே இட்லி  
                        ஆகும்.  
                      - இட்லிகள் மென்மையாகவும், ஈரத்தன்மையுடனும் பஞ்சு போன்று மென்மையாகவும் தேவையான புளித்த (நறுமணம்) சுவையுடனும் இருக்கும். 
 
                      - இட்லி தயாரிப்பதற்கு, அரிசியை சற்று பெரு நயமுடனும், உளுந்தை நன்கு மென்மையாகவும் அரைக்க வேண்டும். 
 
                      | 
                    | 
                 
                
                   
                    தோசை          
                    
                      - இந்தியாவில் பயன்படுத்தும் மற்றொரு பொதுவான நொதித்த (புளித்த) பொருளாக விளங்குவது தோசை. 
 
                      - அரிசி மற்றும் உளுந்தை 6:1 முதல் 10:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து தயாரித்த மாவு புளித்த பின் தோசை தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
                      - இரண்டு கலவைக் கூறுகளையும் இட்லி மாவைப் போல் அல்லாமல் நன்கு மென்மையாக மாவு போன்று அரைத்துக் கொள்ளவும்.  ஆனால் இட்லி தயாரிக்கும் மாவில் அரிசியை சற்று பெறுநயமுடன் அரைக்க வேண்டும். 
 
                      - தோசை மிகவும் மெலிந்து இருக்கும்.  இதனை சூடான கைப்பிடியுள்ள தோசை தயாரிக்கும் தட்டில் தயாரிக்க வேண்டும். 
 
                      | 
                    | 
                 
                
                   
                    இதர நொதித்த பொருட்கள் 
அரிசி சார்ந்த சில மற்ற நொதித்த உணவுகள் இந்தியாவில் பயன்படுத்துபவை 
சில பின்வருமாறு, அம்பலி - கெட்டியான பசை போன்ற ராகி மாவு மற்றும் அரிசியிலிருந்து தயரிக்கப்படுபவை, 
                    "கஞ்சி"- சமைக்கப்பட்ட அரிசி யிலிருந்து கிடைக்கும் குறைந்த அளவு நீர்  
                    மற்றும் நொதித்த மீத சாப்பாடு சேர்த்து கிடைக்கும் கலவையை இரவு  
                    முழுவதும் நன்கு நொதிக்க விட வேண்டும்.  இதுவே "களி" எனப்படும்  
                    உணவு வகையாகும்.   | 
                    | 
                 
                
                                        | 
                   
                
                  |   | 
                  மேலே செல்க | 
                 
               
               
              
                
                    | 
                  அரிசி - முறுக்கிப் பிழியப்பட்ட பொருட்கள் 
                    
                      - சில செயல்களின் கலவையே "முறுக்கிப் பிழிதல் முறையாகும்",  அதாவது 
 
                        கலத்தல், மாவாகப் பிசைதல், வெட்டுதல், சூடுபடுத்துதல், குளிரச்செய்தல், வடிவமாக்குதல் மற்றும் உருவாக்குதல் ஆகிய அனைத்து செயல்களும் உள்ளடங்கும்.  
                      - மூலப்பொருள்களான (எ.கா) மாவு வகைகள், மாவுப் பொருட்கள், புரதங்கள், உப்பு, சர்க்கரை, மற்றும் மற்ற சிறிய கலவைக் கூறுகள் ஆகியவற்றை நன்கு அரைத்து அமுக்கிப் பிசைந்து (பகுதி) அரைத் திண்ம நிலையாக மாற்றுதல்.  இதனை பல்வேறு கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளில் தயாரித்து பின் வடிவமைக்கப்பட்ட துளை அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவு துளையில் வேகம் கொண்டு நன்கு முறுக்கிப் பிழிந்து விட வேண்டும். 
 
                      - பின் நேரடியாக நீர் ஆவி உட்செலுத்தல் மூலமாகவோ சூடாக்கப்பட்ட 
 
                        பீப்பாய் வழியாக மறைமுகமாகவோ வெப்பமூட்ட வேண்டும். 
                      - இறுதி செயல் முறையில் அதன் வெப்பம் அதிகமாக 200 செ அளவு வரை இருத்தல்.  ஆனால் வெப்ப மூட்டப்படும் காலம் மிகவும் குறைவானது (10-60 நொடிகள்). 
 
                      - இம்முறையான சமையலை (முறுக்கிப் பிழிந்து சமைத்தல்) "அதிக வெப்ப 
 
                        அளவு கொண்ட குறைந்த கால" முறை எனவும் வழங்கப்படுகிறது.  
                    | 
                 
                
                    | 
                   
                    முறுக்கிப்பிழியப்பட்ட பொருட்கள் 
                    
                      - அரிசி சார்ந்த பொருட்களான சேவை, இடியாப்பம், முறுக்கு, அரிசி வடகம் ஆகியவவை முறுக்கிப் பிழியப்பட்டு செய்யப்படும் உணவுப் பொருட்கள். 
 
                      - அரிசி சார்ந்த நுாடில்ஸ் மற்றும் புளித்த அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படும் நுாடில்ஸ்  மிகவும் சிறப்பு வாய்ந்தவை.  
 
                      | 
                 
                
                    | 
                   
                    இடி ஆப்பம் 
வேகவைத்த அரிசி மற்றும் பச்சரிசி ஆகிய கலவையிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவே "இடியாப்பம்".  குறிப்பாக தென் இந்தியர்கள் இதனை காலை உணவாகவோ/இரவு உணவாகவோ எடுத்துக் கொள்கின்றனர்.  இது ஆவியில் வேகவைக்கும் பொருள். இடியாப்பத்தை இனிப்பாகவோ அல்லது காரமான வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம்.
  | 
                 
                
                    | 
                   
                    முறுக்கு 
பச்சரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் தனித்தனியாக ஆலையில்  
அரைத்துப் பொடியாக்கி, பின் 80 BS சல்லடை வழியாக சலித்து முறுக்கு செய்வதற்கான உடனடிக் கலவையைத் தயாரித்துக் கொள்ளலாம்.
  | 
                 
                
                    | 
                  வடகம் 
கலவைப் பொருட்களை நன்கு கலந்து, 250 மிலி நீர் கலந்து 10 நிமிடங்கள்  
நன்கு வேக வைத்து, திடமான முறுக்கிப் பிழிவதற்கேற்ற பசை போன்ற தன்மை  
வரும் வரை வேகவிடவும்.  சூடான மாவுப் பசையை கைமுறுக்குப் பிழியும்  
கட்டையைக் கொண்டு (5 மிமீ குறுக்களவு) பிழிந்து வெயிலில் 5 மணி நேரங்கள்  
உலர வைக்க வேண்டும்.  காய்ந்த வடகத்தை பாலிதீன் பைகளில் அடைத்துக்கட்டி  
விட வேண்டும்.  | 
                 
                
                                        | 
                   
                
                  | மேலே செல்க | 
                   
                | 
             
           
           
          
            
                 | 
              நெல் பதனப்படுத்தும் இயந்திர விற்பனையாளர்கள் | 
             
            
              
                                1. ஆரோசிமன் 
                நிறுவனம் 
                   தானியப்  பயிர்களை சுத்தம் செய்யும் இயந்திரம் மற்றும் ஆலை இயந்திரங்கள் போன்ற உணவு பதனிடும் இயந்திரங்களை உற்பத்தி செய்பவர்கள். 
                  
                  
              தொடர்பு கொள்ள முகவரி 
              எம்.எம். படேல் 
விழுப்புரம் மாவட்டம், (வழி) பாண்டிச்சேரி, டிசி பாலம், 
விழுப்புரம்    605111 
தமிழ்நாடு 
இந்தியா 
போன்: 91-413-2671341/2332017 
தொலைநகல்: 91-413-2267629   | 
                              2. பஹ்லெர் (இந்தியா) வரையறுக்கப்பட்ட குழுமம். 
                நிறுவனம் 
                  உணவு தானியங்கள் மற்றும் உணவு பதனிடும் தொழிற்துறைக்கான அனைத்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்தியாளர்கள். 
                   
                  தொழில் வகை : உற்பத்தியாளர்கள் 
                 முக்கிய சந்தைகள்   : ஆஸ்த்ரேலியா, கிழக்கு யூரோப், மேற்கு யூரோப், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்கா  
                  
    தொடர்புக்கு 
      தீபக் மேன் 
                  13-டீ, (கேஐஏடீபீ) KIADB தொழில் பகுதி, அட்டீபீல் 
                  பெங்களூர்   562107 
                 கர்நாடகா 
                  இந்தியா 
                 போன்: 91-80-27820000, 27820315 
              தொலைநகல்: 91-80-27820001   | 
             
            
                              3. ஃபெளலெர் வெஸ்ட்ரப் (இந்தியா) தனியார் குழுமம்                 
                  நிறுவனம்                
                      "நிர்மல் வடிகட்டிகள்" உற்பத்தியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 200-12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட "நிர்மல் வடிகட்டிகள்" உள்ளன.  மேலும் இந்நிறுவனம் முன் சுத்தம் செய்பவை, நுண் சுத்தம் செய்யும் கருவி, புவி ஈர்ப்பு பிரிப்பான்கள், கற்களை அகற்றும் கருவி, கொண்டு செலுத்தும் பாகங்கள், கலப்பு விதைகளை பதனபடுத்துவதற்கு வாளி உயர்த்தும் கருவி ஆகிய கருவிகளை உற்பத்தி செய்கின்றனர். 
                
               தொழில் வகை : உற்பத்தியாளர்கள் 
முக்கிய அங்காடிகள்/சந்தைகள்   : ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு யூராப், மேற்கு யூரோப், மத்திய கிழக்கு, வட அமெரிக்க, தென் அமெரிக்கா  
 
                 
                தொடர்புக்கு 
                  கிலார் பீ.விஜயகுமார் 
                  249-250, பொம்மாசான்ட்ரா தொழிற் பகுதி, 3 ஆம் நிலை 
                  பெங்களூர்   560099 
                  கர்நாடகா 
                  இந்தியா 
                  போன்: 91-80-7832991 
                தொலைநகல்: 91-80-7832990 
               | 
                              4. ஸ்ரீ மஞ்சுனாதா தொழிற்சாலைகள் 
                 
              நிறுவனம் 
              ஸ்ரீ மஞ்சுநாதா தொழிற்சாலைகள் (ஸ்ரீமி)/என்டெல் மின்னணு பொருட்கள் உற்பத்தி தனியார் நிறுவனம், பல்வேறு வகைகளான உணவு பதனிடும் ஆலைஇயந்திரங்கள், கல் நீக்குங்கருவி, மேற்படலமிடும் இயந்திரம் மற்றும் புறஊதா சரி  செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், வடிவமைப்பதிலும் முன்னணி நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகத் திகழ்கிறது.  
                 
                தொழில் வகை    :  உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் 
                நிறுவப்பட்ட ஆண்டு : 1990 
                முக்கிய சந்தைகள்   : ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு யூரோப். மேற்கு யூரோப், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா  
               
              பொருட்கள் 
              உணவு பதனிடும் இயந்திரங்கள் 
             பல்வேறு வகைகளான உணவு பதனிடும் ஆலைஇயந்திரங்கள், கல்நீக்குங்கருவி, மேற்படலமிடும் இயந்திரம் மற்றும் புற ஊதாகதிர்நீக்கும்  இயந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைக்கவும், உற்பத்தியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. 
               
              தொடர்புக்கு 
                லோகநாத் ரெட்டி
                 
                # 1-2, மிமி மெயின், கருடாச்சார் பால்யா (எதிர்புறம்). 
பெங்களூர்   560048 
கர்நாடகா,
இந்தியா 
போன்: 91-80-51157678,
Fax: 91-80-51157678               
    | 
             
            
                              5. எம்ப்பீ கூட்டமைப்பு 
                நிறுவனம் 
                நெல் ஆலை இயந்திரங்களை இறக்குமதி செய்பவர்கள். 
                 
               தொழில் வகை : இறக்குமதியாளர்கள்   
முக்கிய சந்தைகள்   : ஆசியா  
 
 
தொடர்புக்கு 
எ.மகேஷ் குமார் 
                  2/368-ஏ, இருகூர் ரோடு, சின்னியம் பாளையம் 
                  கோயமுத்துார்   641001 
                  தமிழ்நாடு 
                  இந்தியா 
                  போன்: 91-422-2629655 
                தொலைநகல்: 91-422-2629930   | 
              6. கிரோரிமல் காஷிராம் 
                
                நிறுவனம் 
              நெல் ஆலை இயந்திரங்கள் இறக்குமதியாளர்கள் 
               
               
              தொழில் வகை : இறக்குமதி  
முக்கிய சந்தைகள்   : ஆசியா  
 
           
              தொடர்புக்கு
                 
                அருண்குமார் அகர்வால் 
                60, ஏன்டர்சன் வீதி 
                சென்னை   600001 
                தமிழ்நாடு 
                இந்தியா 
                போன்: 91-44-25383646/25386785 
              தொலைநகல்: 91-44-25364711  | 
             
            
                              ஆர்.ஆர்.என்ஜினியர்ஸ் 
              
                நிறுவனம் 
                மாவு ஆலை இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள் 
                 
                தொழில் வகை : உற்பத்தி 
முக்கிய சந்தைகள்   : ஆசியா  
 
                 
                தொடர்புக்கு
                 
                ஏ.ரெமீஜியஸ் 
11/74, ஸ்ரீதேவி நகர், கவுண்டம்பாளையம் 
கோயமுத்துார்    
தமிழ்நாடு 
இந்தியா 
போன்: 91-422-6524389
                 
                               | 
                              8. ஜி.ஜி டன்டெகர் இயந்திர தொழில் நிறுவனம். 
              நிறுவனம் 
                தானியங்களை சுத்தம் செய்வதற்கான நெல் உலர்த்தி சுத்தம் செய்யும் இயந்திரத்தின் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு, காற்று இயக்க இரப்பர் சுற்றி உமி நீக்கும் இயந்திரம் (தானியக்க நெல் உமி நீக்கும் இயந்திரம்), நெல் வேக வைக்கும் மற்றும் உலர்த்தும் இயந்திரம், உமி பிரிப்பான் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்கள். 
              தொழில் வகை : உற்பத்தி, ஏற்றுமதி   
முக்கிய சந்தைகள்   : ஆசியா  
 
 
தொடர்புக்கு               
அடுல் கிர்லோஷ்கர் 
டதேகர் வாடி, பிவன்டி 
தான்   421302 
மகராஷ்டிரா, 
இந்தியா 
போன்: 91-252-2229870, 2229871, 
Fax: 91-252-2229873   | 
             
            
                              9. குரு நானக் பொறியியல் தொழில் நிறுவனம் 
              நிறுவனம் 
                நெல் ஆலை இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி. 
                 
                தொழில் வகை : உற்பத்தியாளர்கள் ஏற்றமதி  
முக்கிய சந்தைகள்   : ஏசியா  
 
 
தொடர்புக்கு               
ஷாரஞ்சித் சிங் 
166, தொழிற் பகுதி, ஃபோகல்பாயின்ட் 
மெஹ்தா ரோடு   143001 
அம்ரிட்சா 
இந்தியா 
போன்: 91-183-2587943, 2583542  
தொலைநகல்: 91-183-2587944                 
               | 
                              10. ஆர்.சண்முகம் பிள்ளை மற்றும் சன்ஸ் - இந்தியா 
                 
நிறுவனம்
                               
                அனைத்து வகையான நெல் பதனிடும் இயந்திரங்கள், மாவு ஆலை இயந்திரம், மற்றும் மாவு  ஆலைத் துணைக் கருவிகள் ஆகியவற்றின் மொத்த வணிகர்கள். 
                 
                தொழில் வகை : உற்பத்தியாளர்கள் /வணிகர்கள் 
                                 முகவரி                 
                7, எடுகா மசூதி வீதி/செல்லாண்டியம்மன் கோவில் வீதி), 
பழனி ரோடு, 
                திண்டுக்கல், 
                தமிழ்நாடு, இந்தியா 
   
                  | 
             
            
              | மேலே செல்க | 
             
           
     |