| | | நில பண்படுத்தல் |  |  |  |  | பயிர் சாகுபடி செலவு |
 
தாவர ஊட்டச்சத்து :: தாவர வளர்ச்சி ஊக்கிகள்
   

வளர்ச்சி அடக்கிகள்

தாவரத்தில் உண்டாகும் சில கரிம சேர்மங்கள், அந்தத் தாவரத்தின் வளர்ச்சியைத் தடைசெய்கின்றன. இத்தகைய சேர்மங்கள் தடைச் வளர்ச்சி அல்லது அடக்கிகள் எனப்படும். வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகள் ஆகியவற்றின் நீட்சி முதலிய வளர்ச்சிகளைத் தடைசெய்கின்றன. எடுத்துக்காட்டாக எத்திலின் என்பது மொட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் பெற்ற ஓர் அடக்கியாகும் எனப்படும் அப்சிசிக் அமிலம், தக்காளியில் பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியைத தடுத்துவிடுகிறது.

அப்சிசிக் அமிலம்

தாவர பாகங்கள் உதிர்தல் மற்றும் மொட்டு வளர்வடக்கம் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தவதில் பங்குபெறுகிறது. என்பதன் தொடர்பாகஅப்சிசிக் அமிலம் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற தாவர ஹார்மோன்களைப் போன்றே, தாவர வளர்ச்சியில் இது பன்முக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

அப்சிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகள்

  • பலவகைத் தாவரங்களின் வளர்ச்சியை தடைசெய்வதாகவும், மொட்டு உறக்கத்தை àண்டுவதாகவும் அப்சிக் அமிலம் செயல்படுகிறது.
  • இது ஒரு வீரியமான வளர்ச்சி அடக்கிப்பொருளாகும், ஒட்ஸ் நாற்றுக்களில் 50 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியை தடைசெய்கிறது.
  • இதன் பெயர் கட்டுவது போன்றே, தாவரங்கள் உதிர்வதை இது àண்டுகிறது.
  • வேர்களின் புவி நாட்டத்தை இது கட்டுப்படுத்துகிறது. இது வேர்களின் நேர்புவி நாட்டத்தைத் àண்டுகிறது.
  • அப்சிக் அமிலம் இலைத்துளையை மூடச்செய்கிறது.


 
 
 
 
 
 
 

Crop Protection

©தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam