Agriculture
வேளாண் வானிலை :: ஈர பதம்

காற்றின் ஈரப்பதமும், பயிரின் வளர்ச்சியும்:
காற்றின் ஈரப்பதம், பயிரின் நீர் உபயோகத்தில் நேரடியாகவும் இலை வளர்ச்சி, ஒளிச்சேர்க்கை மகரந்தச் சேர்க்கை, பூச்சி நோய்த்தாக்குதல், விளைச்சல் ஆகியவற்றில் மறைமுகமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். காற்றின் ஈரப்பதம் மிகக்குறைவாகி இருந்தால் அது பயிரின் உலர் பொருள் உற்பத்தித்திறன் பாதிக்கும்.

இலை வளர்ச்சியில் ஈரப்பதத்தின் பங்கு:
இலை வளர்ச்சிக்குத் தேவையான உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், செல்களின் பெருக்கத்திற்கும், உயர் ஈரப்பதம் துணைபுரிகிறது. செல்களில் பெருக்கம் அதிகமாகி, ஆவிப்போக்கும் குறையும் போது, ஈரப்பதம் மிகுந்த பகுதிகளில் நல்ல இலை வளர்ச்சி காணப்படுகிறது.


ஒளிச் சேர்க்கை:
ஒளிச் சேர்க்கையில் காற்றின் ஈரப்பதம் நேரடியாக விளைகளை ஏற்படுத்தும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், ஒளிச்சேர்க்கை அதிகப்படும் வறண்ட காற்று நிலவும் போது, அது இலைகளில் நடைபெறும் ஒளிச் சேர்க்கையை பாதிக்கும்.


மகரந்தச் சேர்க்கை:
காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தால் அது மகரந்தச் சேர்க்கைக்கு சாதகமாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்நதால் சேர்க்கையை பாதிக்கும்.

பூச்சி, நோய் தாக்குதல்:
காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது பூச்சி மற்றும் நோய்க்காரணிகளின் பெருக்கத்திற்கு சாதகமாகி, விளைச்சலை பாதிக்கும்.


தானிய உற்பத்தியில் ஈரப்பதத்தின் பங்கு:
மிகக் குறைந்த காற்று ஈரப்பதமும் மிக அதிகமான காற்று ஈரப்பதம் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். மிக அதிக ஈரப்பதம் பூச்சி நோய் தாக்குதலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும் கதிர் வெளிவரும் சமயத்தில் இருக்கும் அதிக ஈரப்பதம் கதிர் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

 
Fodder Cholam