1.	காாபன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்  
      இவை உண்மையில் கனிமப் பொருட்கள் இல்லை, ஆனால் இவை தாவரங்களில் உள்ள (கரிம) பொருட்களில் கூறுகளாக இருப்பதால் இப்பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை கார்போஹட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் ஆகியவற்றின் பகுதிகளாக உள்ளன. எனவே தாவரங்களின் பொது வளர்சிதை மாற்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றன. 
      இந்தக் தனிமங்களின் பற்றாக்குறை மிக அரிதாக உள்ளது. நீர் மற்றும் வாயு பரிமாற்றத்தின் மூலம் இந்த தனிமங்கள் சீரான முறையில் வழங்கப்படுவதால் பெரும்பாலும் பற்றாக்கறை ஏற்படுவதில்லை இவற்றின் குறைபட்டால் தாவரங்களின் சாதாரண வளர்ச்சி மற்றும் உருவாக்கம் பாதிக்கப்படுகிறது. 
      2.ஹைட்ரஜன் 
        புரதங்கள், நியுக்ளிக் அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் பச்சையம் உள்ளிட்ட கரிமப் பொருட்களில் நைட்ரஜன் காணப்படுகிறது. பல்வேறு ஹார்மோன்கள், துணை நொதிகள் மற்றும் --- யின் கூறாக நைட்ரஜன் உள்ளது. 
      பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவுகள் 
        1.	குன்றிய வளர்ச்சி 
        2.	பச்சைய சோகை 
        3.	மலர்கள் உருவாதல் குறைக்கப்படுகின்றனது 
        4.	ஆப்பிள், பீச் ஆகிய தாவரங்களில் அதிக நிறம் உண்டாகி கினகளின் அளவு குன்றிவிடுதல் 
        5.	புரதப் பொருட்கள் குறைதல் 
        6.	நிறமேற்ற அமைப்பில் மாறுபாடு தோன்றுதல் 
      3.பாஸ்பரஸ் 
        பிளாஸ்மா படலம், நியுக்ளிக் அமிலம், நியுக்ளியோடைடுகள், பல துணை நொதிகள் மற்றும் கரிம மூலக்கூறுகளில் காணப்படுகிறது. ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான வேர் வளர்ச்சியையும், பழங்கள் கனிவதையும் ஊக்குவிக்கும். 
      பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள் 
        1.	முதிர்ந்த இலைகளின் இழப்பு 
        2.	வளர்ச்சி குன்றுதல் 
        3.	பாஸ்பட்டேஸ் நொதியில் செயல்பாடு அதிகரித்தல் 
        4.	சோயாபீனிஸ் கார்பொஹைட்ரேட்டுகள் சேகரம் அடைதல் 
      4.பொட்டாசியம் 
        ஆக்குத் திசுக்களில், செல் வேறுபாடு பகுதிகளில்பொட்டாசியம் தேவைப்படுகிறது. முதிர்ந்த இலைகளில் சேகரம் அடைகிறது. அமைப்பில் முக்கிய பங்கு வகிக்க வில்லை என்றாலும் இலைத்துளை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நொதிகளன் ஊக்கியாகவும், புரம் மற்றும் கர்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
      பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவுகள் 
        1.	இலைநுனிகள் கீழ் நோக்கி வளைகின்றன. 
        2.	அடை திரள் வண்ணமுடைய (ஆடிவவடநன)பச்சைய சோகை ஏற்படுதல் 
        3.	இலை நுனிகளிலும், இலை விளிம்புகளிலும் பச்சைய சோகை ஏற்படுதல்  
        4.	கணுவிடைப் பகுதிகள் குட்டையாகிவ வளர்ச்சி குன்றுதல் 
      5.சல்பர்  
        தையமின். பையோட்டின் போன்ற வைட்டமின்களில் கூறாக சல்பர் உள்ளது. துணை நொதியின் கூறாக இருப்பதால் சுவாசித்தலில் பங்கு வகிக்கிறது. பல நொதிகளில் சல்பைட்ரைல் தொகுதியை உண்டாக்கி, பல சல்பர் காண்ட அமினோ அமிலங்களான சிஸ்டீன், சிஸ்டீன் மற்றும் மித்தியோனின் ஆகியவற்றில் காணப்படுகிறது. 
      பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள் 
        1.	புரதச் சேர்க்கை தடை செய்யப்படுகிறது. 
        2.	இளம் இலைகளில் முதலில் பச்சைய சோகை ஏற்படுகிறது. 
        3.	இலையிடைத் திசுவில் ஸ்ட்ரோமா லாமெல்லா குறைந்து கிரானா அதிகரிக்கிறது. 
       
      6.	மக்னீசியம் 
        பச்சைய மூலக்கூறின் முக்கிய கூறாக மக்னீசயம் இல்லாவிடின் பச்சையம் உருவாக முடியாது. கார்போஹட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்திலும், ரைபோசோமின் துணை அலகுகள் இணைவதிலும் முக்கிய பங்கு வகிக்கும். மற்றும் உருவாக்கத்துக்கு உதவும் பல நதிகளின் ஊக்கியாக செயல்படுகிறது. பாஸ்பரஸின் கடத்தியாக செயல்பட்டு பாஸ்பாக்ஸிலேஸ் மற்றும் கார்பாக்ஸிலேஸ் போன்ற நொதிகளை ஊக்குவிக்கும். 
         
      பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள் 
        1.	நரம்பிடைய பச்சய சோகை ஏற்படும் 
        2.	பச்சைய சோகையை அடுத்து ஆந்தோசையனின் நிறமியின் பழவு ஏற்படும் 
        3.	முற்றிய் நிலையில் இறந்த புள்ளிகள் தோன்றும் 
      7.கால்சியம் 
        கால்சியம் என்பது கால்சியம் பெக்டேட் என்ற நிலையில் செல் சுவரின் கூறாக செல்லின் இடையடுக்கில் காணப்படுகிறது. பிளாஸ்மா படலத்தின உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மறைமுக செல் பகுப்பான மைட்டாடிக் பகுப்பில் பங்கு டிபற்று. பாஸ்போலைப்பேஸ், அடினைல் கைனேஸ் ஆகிய நொதிகளின் ஊக்கியாக உள்ளது. 
         
      பற்றகாகுறையினால் ஏற்படும் விளைவுகள் 
  கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்ததை பாதிக்கும் 
  மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்க குறைவதால் சுவாசித்தல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. 
  ஆக்குத் திசுக்களின் பாதிக்கப்படுவதால் இலை நுனிகளும் வேர் நுனிகளும் அழிந்து விடுகின்றன. 
  செல்சுவர் கடினமாகவும், நொறுங்கக் கூடியதாகவும் மாறுகிறது. 
      சிறு மூலங்கள் 
      8.இரும்பு  
        பொதுவாக மண்ணில் இரும்பு பற்றாக்குறை காணப்படுவதில்லை. பலவித ப்ளேவோ புரதங்களின் கூறாகவும் பலவிதமான நொதிகளான கேட்டலேஸ், பெராக்ஸிடேஸ் மற்றம் சைட்டோகுரோம்களின் பகுதியாகவும் உள்ளது. இதனால் ஒளிச்சேர்கையின் எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
         
      பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவுகள் 
  நரம்பிடை பச்சைய சோகை ஏற்படுவதால் இலைகள் மஞ்சள் வெள்ளை நிறமுடையதாக மாறுகிறது. 
  காற்று சுவாசத்ததையும் அதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் பாதிக்கிறது. 
  கனிமரங்கள் இரும்பு பற்றாக்குறையை நுட்பமாக உணரக் கூடியவையாக உள்ளன. 
      9.போரான் 
        இலைகளுக்கும், விதைகளுக்கும் போரான் தேவைப்படுகிறது. அயனிகளின் உள்ளெடுப்பு மற்றும் பயன்பாட்டிற்கும், மகரந்தத்துகள் முளைத்தலுக்கும், செல் வேறுபாடு அடைதலக்கும், கர்போஹைட்ரேட் கடத்தலுக்கம் போரான் தேவைப்படும். மேலும் இது நைட்ரஜன், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கும். 
      பற்றாக்குறையினால் ஏற்படும் விளைவுகள் 
        1.	பீட்ரூட்டில் பழுப்பு இருதய அழுகல் ஏற்படுத்தும் 
        2.	ஆப்பிளின் உள் திசுக்கள் தக்கையாக மாறும் 
        3.	இலைகள் சுருண்டு நொறுங்கும் தன்மையை அடையும் 
        4.	இலைகள் மற்றும் கனிகள் முதிரும் முன்னேயே உதிர்ந்து விடும் 
       
        
         |