ஊட்டச்சத்து மேலாண்மை

ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய தகவல்கள்


முன்னுரை


  • கரும்பு உற்பத்தியில் கரும்பு மகசூலை அதிகரிப்பதில் ஊட்டச்சத்துக்கள் அதிக பங்கு வகிக்கின்றன.

  • கரும்பு, வளர்ச்சிப் பருவத்தின் போது அதிக சத்துக்களை உட்கொள்கிறது.

  • கரும்பிற்கு அதிக சத்துக்கள் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. கரும்பு, அதன் ஆரம்ப கட்ட வளர்ச்சியின் போது அதிக அளவில் சத்துக்களை எடுத்துக் கொள்கிறது அதாவது துார்விடும் போது. (நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை)

  • கரும்பின் ஊட்டச்சத்து தேவையை மண் பரிசோதனை, தாவர திசு பரிசோதனை அல்லது குறைபாடு அறிகுறிகள் மூலம் அறியலாம். இந்த மூன்று முறையை சேர்த்து பார்ப்பது பயிரின் சத்து நிலையை முழுவதும் பட்டியலிட்டு காட்டும்.

ஊட்டச்சத்துக்களின் பங்கு


ஒவ்வொரு பயிருக்கும், பதினாறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை வளிமண்டலம் மற்றும் மண் நீரிலிருந்து பெறப்படுகின்றன. மீதமுள்ள பதிமூன்று ஊட்டச்சத்துக்கள் (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, ஜிங்க், மாங்கனீசு, தாமிரம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின்) மண்ணின் தாதுக்கள் மற்றும் மண்ணின் அங்கக பொருட்கள் அல்லது இராசாயன அல்லது இயற்கை உரங்களின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். ஒவ்வொன்றும் சம அளவில் இன்றியமையாததாகும்.

மேலே செல்க

பேரூட்டச்சத்துக்கள்


தழைச்சத்து

  • கரும்பின் மகசூல் மற்றும் தரத்தை நிர்ணயிக்கிறது.

  • பயிரின் தண்டு மற்றும் வேரின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.  (தூர்விடுதல், சோகை உருவாதல், குருத்து உருவாதல் மற்றும் வளர்ச்சி)

  • பயிரின் வளர்ச்சி கரும்பின் மகசூலுடன் நேரடித் தொடர்புடையது.

  • அதிகப்படியான தழைச்சத்து:

    • பயிரிற்கு தீங்கு விளைவிக்கும்.

    • பயிரின் வளர்ச்சியை நீடிக்கிறது.

    • முதிர்ச்சியடைவது மற்றும் பக்குவமடைவதை தாமதமாக்குகிறது.

    • கரும்பு சாறில் ஒடுக்கப்பட்ட சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

    • கரும்பு சாறின் தரத்தை குறைக்கிறது.

    • சாறில் கரையும் தழைச்சத்து அதிகரிப்பதால் சாறு தெளிய வைத்தலை பாதிக்கப்படுகிறது.

    • பூச்சி மற்றும் நோய் தாக்குதல், சாய்வதற்கு எளிதில் உள்ளாகிறது.


மணிச்சத்து

  • மணிச்சத்தினை தாவரம் எடுத்துக்கொள்வது, மணிச்சத்து கரையும் மற்றும் தாவரம் உறிஞ்சக் கூடிய வடிவத்தில் இருப்பதை பொறுத்தது.

  • மணிச்சத்தின் தேவை, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தை விட குறைவானது.

  • புரதச்சத்து உருவாவதற்கு அவசியம் ஆகும். அதனால் மகசூல் அதிகரிக்கிறது.

  • செல் பகுப்பிற்கு முக்கியமாகையால் பயிர் வளர்ச்சி அளிக்கிறது.

  • வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

  • பயிரின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படுகிறது.

  • போதுமான துார்கள்விட தேவைப்படுகிறது.

  • தழைச்சத்துடன் இணைந்து, கரும்பு பக்குவமடைவதை ஊக்குவிக்கிறது.

  • அதிகப்படியான மணிச்சத்து, மண்ணில் நிலை நிறுத்தப்படுவதால் வீணாகிறது.


சாம்பல் சத்து

  • சாம்பல் சத்து, தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது.

  • கரிமம் தன்மயமாதல், ஒளிச்சேர்க்கை, கார்போஹைட்ரேட் இடமாற்றம் ஆகியவற்றிற்கு தேவைப்படுகிறது.

  • பல்வேறு நொதிகளின் செயல்பாட்டில் பங்கு கொள்கிறது.

  • சர்க்கரை உற்பத்தி மற்றும் சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றுதலுக்கு அவசியம் ஆகும்.

  • பூச்சி, நோய் மற்றும் சாய்வதற்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

  • நீர் வறட்சி உள்ள சமயங்களில் செல் விரைப்புத் தன்மையை பராமரிக்கிறது.

  • தழை மற்றும் மணிச்சத்தின் விளைவுகளை சமன்செய்கிறது.

  • பொட்டாசியம் அதிக அளவில் கிடைப்பது “தேவைக்கு அதிகமாக” உட்கொள்ளுவதற்கு வழி வகுக்கும்.

மேலே செல்க

நுண்ணுாட்டச்சத்துக்கள்


சல்பர்:

  • இது கரும்பில் அமினோ அமிலங்கள், புரதம் மற்றும் விட்டமின்களின் உற்பத்திக்கு அவசியம் ஆகும்.

           


ஜிங்க்:

  • இது தாவர வளர்ச்சி சீறுாக்கிகளின் உயிர்முறை உற்பத்திக்கு அவசியம் ஆகும். பல்வேறு நொதிகளின் செயல்பாடு, ஜிங்க் இருப்பதை பொறுத்தது ஆகும்.


மாங்கனீசு:

  • கரும்பின் புரத உற்பத்தியில் பங்கு கொள்ளும் நொதிகளின் செயலாக்கி ஆகும்.


போரான்:

  • போரான் முக்கிய செயல், செல் சுவர் வலிமை மற்றும் வளர்ச்சி, செல்பகுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

  • கரும்பின் வளர்ச்சி, சர்க்கரையை கடத்துதல், மற்றும் ஹார்மோன் உருவாவதற்கு தேவைப்படுகிறது.

 


மெக்னீசியம்:

  • மெக்னீசியம், பச்சையத்தின் மைய மூலப்பொருள் ஆகும்.

  • மணிச்சத்தினை பயிரினுள் எடுத்துச் செல்கிறது.

  • இது நொதிகளின் செயலாக்கி மற்றும் பல்வேறு நொதிகளின் ஒரு அங்கம் ஆகும்.

  • சர்க்கரை உற்பத்திக்கு உதவுகிறது.


தாமிரம்:

  • இது அமினோ அமிலங்களை புரதங்களாக மாற்றும் மற்றும் வளர்க்கும் பல்வேறு நொதிகளின் ஒரு அங்கம் ஆகும்.

  • தாமிரம், கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம் ஆகும்.

  • தாவர செல்சுவரில் உள்ள லிக்னின் உருவாவதற்கு இது அவசியம் ஆகும். லிக்னின் செல்லின் வடிவ வலிமைக்கும் மற்றும் கரும்பின் வலிமைக்கும் முக்கிய காரணி ஆகும்.

மேலே செல்க

உரமிடுதல்

அடி உரமிடுதல்


இயற்கை உரங்களை அடி உரமிடுதல்:
• எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 25 டன் மட்கு அல்லது 37.5 டன் சர்க்கரை ஆலைக்கழிவை நிலத்தில் கடைசி உழவுக்கு முன்பு இடலாம்.
• நன்செய் நிலங்களில் இதனை சாலில் இட்டு மண்ணில் கலந்து விடவேண்டும்.


வேதி உரத்தினை அடி உரமிடுதல்

  • மண்ணை பரிசோதித்து அதற்கேற்றவாறு மணிச்சத்து உரங்களை இட வேண்டும். இல்லையெனில் எக்டருக்கு 375 கி.கி சூப்பர் பாஸ்பேட்டினை சாலில் போட்டு களைக்கொத்தினால் மண்ணில் கலந்து விட வேண்டும்.

  • 37.5 கி.கி ஜிங்க் சல்பேட் மற்றும் 100 கி.கி பெர்ரஸ் சல்பேட்டினை ஜிங்க் மற்றும் இரும்பு குறைபாடுள்ள மண்ணில் இடவேண்டும்.

  • நடவுக்கு முன் மணிச்சத்தினை சாலில் இட்டு அதனை லேசாக மண்ணில் கலந்து விட வேண்டும்.

  • தழை மற்றும் சாம்பல் சத்து உரங்கள் பகுதிகளாக பிரித்து கரும்பு வரிசைக்கு இருபுறங்களிலும் தொடராக இடப்படுகின்றன.

மேலே செல்க

மேலுரமிடுதல்

மண்வழி உர


மிடுதல்

  • எக்டருக்கு 275 கி.கி தழைச்சத்து மற்றும் 112.5 கி.கி சாம்பல் சத்து என்ற அளவில் மூன்று சம பாகங்களாக பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இடுதல் வேண்டும். இவ்வாறு கடற்கரை மற்றும் பாசன வசதியுள்ள (தண்ணீர் பற்றாக்குறை இல்லாத) பகுதிகளில் இட வேண்டும்.

  • கிணற்றுப் பாசனமுறை பகுதிகளில் 225 கி.கி தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் மூன்று சம பாகங்களாக பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90 வது நாளில் (தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில்) இட வேண்டும். வெல்லம் தயாரிக்கும் பகுதிகளில் 175 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் மூன்று சம பாகங்களாக பிரித்து 30, 60 மற்றும் 90 ம் நாளில் இடுதல் வேண்டும்.

  • உரங்கள் ஆவியாகி விரையமாவதை குறைக்க உரமிட்டவுடன் மண்ணினால் மூட வேண்டும். இது முதல் மேலுரமிட்ட பின், பகுதி மண் அணைப்பின் மூலமும், இரண்டாவது மேலுரமிட்டபின் முழு அணைப்பின் மூலமும் செய்யப்படுகிறது.

இலைகள் மேல் தெளித்தல்


  • இலைகள் மேல், யூரியா (1-2.5%) மற்றும் பொட்டாசியம் (2.5) தெளிப்பது, நீர் வறட்சி சமயத்தில் கரும்பின் மகசூலையும், தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

  • டி.ஏ.பி இலைவழி செலுத்துவது, மகசூலையும், தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

  • இலைகள் நன்கு நனைவது அவசியம் ஆகும். டீப்பால்-ஐ நனையாக்கியாக பயன்படுத்தலாம்.

  • காலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

  • வளர்ந்த பயிருக்கு மரத் தெளிப்பான் பயன்படுத்தலாம்.

மேலே செல்க

தழைச்சத்து விரையமாவதை தவிர்க்க


  • வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா: 67.5 கிலோ தழைச்சத்து/எக்டர் 27.5 கிலோ வேப்பம் புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 ம் நாள் இடுதல் வேண்டும்.
    குறிப்பு:குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல்: தேவையான அளவு வேப்பம் புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து, பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து மிச்சமாகிறது.

அசோஸ்பைரில்லம்: : 12 பொட்டலம் (2400 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கலவை-1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30 வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதேபோல் கரும்பு நட்ட 90 வது நாள் கரும்பு வரிசையில் அடுத்த பகுதியில் இதே அளவில் இடுதல் வேண்டும்.(கிணற்று நீர்ப்பாசனமுறைய இடங்களுக்கு).

தொடராக இடுதல்: களைக்கொத்தினால் 15 செ.மீ ஆழ சால் அமைத்து, அதில் உரங்களை தொடராக இட்டு பின் மண் கொண்டு மூட வேண்டும்.

ஆழ்துளை முறையில் இடுதல்: 255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து 15 செ.மீ ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கும் அருகே இடுவதன் மூலம் தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்.


நுண்ணுாட்டக் கலவை :கரும்பிற்கு அனைத்து நுண்ணுாட்டத்தையும் அளிப்பதற்கு, 20 கிலோ பெர்ரஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ ஜிங்க் சல்பேட், 5 கிலோ காப்பர் சல்பேட், 5 கிலோ போராக்ஸ் ஆகியவை உள்ள நுண்ணுாட்ட கலவையை எக்டருக்கு 50 கிலோ வீதத்தில் 100 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் மண்ணில் இடுவது பரிந்துரைக்கப்படுகிறது.


மேலே செல்க

இயற்கை உரங்கள்


தொழுஉரம்:

  • கரும்பிற்கு, கடைசி உழவிற்கு முன் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் தொழு உரத்தினை இடலாம்.

  • நன்கு மட்கிய தொழு உரத்தில் சுமாராக 0.5 சதம் தழைச்சத்து, 0.2 சதம் மணிச்சத்து மற்றும் 0.5 சதம் சாம்பல் சத்து இருக்கும்.

  • சாணத்தையும், மூத்திரத்தையும் கலந்தால், ஒரு சரிவிகித சத்துக்கள் கரும்பின் வளர்ச்சிக்கு கிடைக்கின்றது.

    


பசுந்தாள் உரம்:

  • கரும்பு நடவு செய்த 3 வது அல்லது 4 வது நாளில் பாரிற்கு ஒரு புறத்தில் பசுந்தாள் உரங்களான டெய்ன்சா அல்லது சணப்பையை விதைத்து ஊடுபயிராக வளர்க்கலாம்.  இந்த ஊடுபயிரை 45 நாளில் அறுவடை செய்து வயலிலேயே மண்ணுடன் கலந்து விட வேண்டும். .

  • இந்த பசுந்தாள் உரம் 7.5 கிலோ 25 டன் அங்ககப் பொருளை அதாவது எக்டருக்கு 10-30 கிலோ தழைச்சத்தினை தருகிறது.  தக்கைபூண்டுல் 0.62 சதம் தழைச்சத்து மற்றும் சணப்பையில் 0.75% தழைச்சத்து, 0.12% மணிச்சத்து, மற்றும் 0.51% சாம்பல் சத்தும் உள்ளது.


சர்க்கரை ஆலைக்கழிவு:

  • இது சர்க்கரை ஆலையின் உபபொருள் ஆகும். ஒவ்வொரு 100 டன் கரும்பினை பிழியும் போது 3 டன் சக்கையான உப பொருளாக கிடைக்கிறது.

  • நடவிற்கு முன்பு எக்டருக்கு 37.5 டன் ஆலைக்கழிவு இடுதல் வேண்டும்.  இதில் 1.2%  தழை, 2.1-2.4% மணி மற்றும் 2% சாம்பல் சத்துக்கள் உள்ளன.

  • இது மிகச்சிறய அளவில் நுண்ணுாட்டசத்துக்கள் உள்ளன. மண் அரிப்பு, கடினமாதல் மற்றும் வெடிப்புக்களை தடுக்கிறது.  மண்ணின் அமில-கார நிலையை சரி செய்கிறது. வடிகால் வசதியை மேம்படுத்துகிறது மற்றும் மண்ணில் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.


கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவிலிருந்து மட்கு:
                   7 X 3 மீ அளவுள்ள பரப்பின் மீது கரும்பு தோகையை 15 செ.மீ உயரத்திற்கு பரப்ப வேண்டும். பிறகு அதன்மீது 5 செ.மீ உயரத்திற்கு ஆலைக்கழிவினை பரப்ப வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம், யூரியா ஆகியவற்றை 2:2:1 என்ற விகிதத்தில் கலந்த உரக்கலவையை இந்த அடுக்குகளின் மீது 100 கிலோ சோகைக்கு 5 கிலோ வீதம் தெளிக்க வேண்டும்.  போதுமான தண்ணீர் தெளித்து சோகை மற்றும் ஆலைக்கழிவினை ஈரப்படுத்த வேண்டும்.
         இதனை குவியல் 1.5 மீ உயரம் ஆகும் வரை செய்ய வேண்டும். நனைப்பதற்கு தண்ணீருக்கு பதில் சாணக் கரைசலை கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.  குவியலின் மீது மண் மற்றும் ஆலைக்கழிவை 1:1 என்ற விகிதத்தில் கலந்து 15.செ.மீ உயரத்திற்கு மூட வேண்டும்.
        இதனை அவ்வாறே மூன்று மாதத்திற்கு மட்க விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை குவியலை நனைக்க வேண்டும். மழைக்காலங்களில் நனைப்பதை தவிர்க்கவும். மூன்று மாதத்திற்கு பிறகு குவியலை திருப்பி, நன்றாக கலந்து ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத இறுதியில் குவியலை கிளறி நன்றாக கலக்க வேண்டும்.  4 மற்றும் 5 மாதத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குவியலை நனைக்க வேண்டும். இந்த முறை சோகை மட்கில் உள்ள தழை, மணிச்சத்து மற்றும் கால்சியத்தின் அளவை கூட்டுகிறது.  சோகை மட்கினை ஒப்பிடும்போது இந்த முறையில் கார்பன்: நைட்ரஜன் விகிதம் 10 மடங்கு குறைக்கப்படுகிறது.

 


உயிர் உரங்கள்:

  • அசோஸ்பைரில்லத்தினை இடுவது வளிமண்டல நைட்ரஜனை கரும்பிற்கு அளிக்கிறது. பாஸ்போபாக்டீரியாவை அளிப்பதன் மூலம் மண்ணிலிருந்து கரையாத பாஸ்பரஸை விரையமாகாமல் பெற இயலும்.

  • அசோஸ்பைரில்லம் எக்டருக்கு 5 கிலோ, பாஸ்போபாக்டீரியா 5 கிலோ மற்றும் தொழு உரம் 500 கிலோ கலந்து நடவுக்கு பிறகு 30 ம் நாளில் சாலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.  இதையே 60 வது நாளிலும் செய்ய வேண்டும்.

  • உயிர் உரங்களை பாசன நீர் மூலமும் இடலாம்.

  • உயிர் உரங்களை வேதி உரங்களுடன் கலந்து இடக்கூடாது.

  • வேதி உரங்கள் இடுவதற்கு 10-15 நாள் முன்பு அல்லது இட்ட 10-15 நாட்களுக்கு பின் உயிர் உரங்களை இட வேண்டும்.


வேப்பம்புண்ணாக்கு:

  • வேப்ப விதையிலிருந்து எண்ணெய் எடுத்த பின்பு எஞ்சியிருக்கும் சக்கை வேப்பம்புண்ணாக்கு ஆகும்.

  • இது இரு வித செயல் புரிகிறது,  உயிர்உரமாகவும் உயிர் கொல்லியாகவும்.

  • இதில் தழைச்சத்து 2-5%, மணிச்சத்து 0.5%-1% மற்றும் சாம்பல் சத்து 1-2% உள்ளது.

  • எக்டருக்கு 27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை 30, 60 மற்றும் 90 வது நாளில் இடலாம்.

மேலே செல்க

ஊட்டச்சத்து குறைபாடுகள்


தழைச்சத்து:

  • கரும்பின் எல்லா இலைகளிலும் மஞ்சள்-பச்சை நிறம் வெளிப்படுகிறது.

  • வளர்ச்சி தடைப்படுகிறது.

  • கரும்பு தண்டின் விட்டம் சிறியதாக காணப்படும்.

  • வயதான இலைகள் முதிரும் முன்பே காய்ந்துவிடும்.

  • வேர்கள் மிக நீளமாக வளர்கின்றன.  ஆனால் அதன் விட்ட அளவு சிறியதாகிறது.

நிவர்த்தி:

  • தழைச்சத்தினை மண்மூலம் இடுதல் அல்லது யூரியா 1-2% ஐ இருமுறை ஒரு வார இடைவெளியில் இலைவழி தெளித்தல் வேண்டும்.

  • டி.ஏ.பி அடி உரம் இட்டபின் யூரியா இடவேண்டும்.

  • மண்ணின் அமில காரத் தன்மை அதிகமாக இருக்கும்போது அம்மோனியன் நைட்ரஜன் அதிகமாக இடலாம்.

 


 

மணிச்சத்து:

  • கரும்புத் தண்டின் நீளம் குறைகிறது.  விட்ட அளவும் குறைந்து வளர் முனை வேகமாக சாய்கிறது.

  • இலைகளின் நிறம் பசுமை கலந்த நீல நிறமாகவும், குறுகியும் காணப்படும்.

  • துார் விடுதல் குறைகிறது.

  • தண்டு/வேர் விகிதம் குறைந்து, வேரின் வளர்ச்சியும் தடைச்செய்யப்படுகிறது.

நிவர்த்தி:
                   2% டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) ஐ 15 நாள் இடைவெளியில் இலைமேல் தெளிக்க வேண்டும்.


சாம்பல்சத்து:

  • மந்தமான வளர்ச்சி

  • வயதான இலைகள் மஞ்சளடைந்து, ஓரங்கள் காய்ந்து விடும்.

  • ஒல்லியான தண்டுகள் வளர்கின்றன.

  • ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள் வயதான கீழ்தட்டு இலைகளில் தோன்றுகின்றன, அவை எண்ணற்ற வெளிர்பச்சை புள்ளிகளாகி பின்பு அவை பழுப்பாகி காய்ந்து தீப்பிடித்ததை போன்று தோன்றும்.

  • இலைகளின் நடுவில் மேல்புற செல்லின் மேற்பகுதியில் சிவப்பு நிறமடைகிறது. நுனிக் கொத்து போன்று தோன்றுகிறது.

  • மோசமான வேர் வளர்ச்சி, மிகக் குறைந்து வேர் முடியுடன் காணப்படுகிறது.

நிவர்த்தி:
                  1% பொட்டாசியம் குளோரைடு 15 நாள் இடைவெளியில் இலைமேல் தெளிக்க வேண்டும்.


ஜிங்க்:

  • இலைகளில் ஆந்தோசையனின் நிறமிகள் முன்கூட்டியே உருவாகின்றன.

  • முக்கிய நரம்புகளின் பசுமை நிறம் வெளுக்கப்படுகிறது.

  • நரம்புகளின் பச்சையங்கள் வீணாவதால் கோடு போன்று தோன்றுகிறது.

  • தீவிர நிலையில் வளரும் முனை (நுனி ஆக்கு திசு) வளர்ச்சி தடைப்பட்டு காய்ந்து விடுகிறது.

நிவர்த்தி:
எக்டருக்கு 37.5 கிலோ ஜிங்க் சல்பேட்டை கடைசி உழவிற்கு முன்பு மண்ணில் இட வேண்டும்.


இரும்பு:

  • இளம் இலைகளில் வெளிர்ந்த கோடுகளுடன், சொற்ப பச்சையம் இலையின் இணைகோடுகளுக்கு இடையிலும் காணப்படும்.

  • இலைகளில் நரம்புகள் மற்றும் நடு நரம்புகள் முழுதும் வெள்ளையாகின்றது.

  • தடைப்பட்ட வேர் வளர்ச்சி.

நிவர்த்தி:
                எக்டருக்கு 25 கிலோ பெர்ரஸ் சல்பேட்டை மண்வழி இடலாம்  அல்லது 0.5% பெர்ரஸ் சல்பேட்டை 90, 105 மற்றும் 120 நாட்களுக்கு பிறகு இலைமூலம் செலுத்தலாம்.


கால்சியம்:

  • வயதான இலைகளில் பல வர்ணமடைதல் மற்றும் வெளிர்பச்சையடையது தோன்றும்.

  • குருத்துக்கள் இலை நுனி மற்றும் ஓரங்களில் காய்ந்து விடும்.

  • வயதான இலைகளில் துரு போன்று தோன்றும் மற்றும் அவை முதிர்ச்சி அடையும் முன்பே மடிந்து விடும்.

நிவர்த்தி:
                   எக்டருக்கு 100 கிலோ ஜிப்சத்தை மண்வழி இடலாம்.

மெக்னீசியம்:

  • ஓரங்கள் மற்றும் நுனியில் பல வர்ணம் அல்லது வெளிர்ந்து காணப்படும்.

  • சிவப்பான காய்ந்த புள்ளிகள் துரு போன்ற தோற்றத்தை அளிக்கும்.

  • உள்ளே பழுப்பு நிறமடைகிறது.

நிவர்த்தி:
           எக்டருக்கு 25 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை மண்ணிலும் அல்லது  2% மெக்னீசியம் சல்பேட்டை 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை இடலாம்.

சல்பர்:

  • இளம் இலைகள் வெளிர்ந்து காணப்படும்.

  • குறுகிய சிறிய இலைகள் லேசான ஊதா நிறத்துடன் காணப்படும்.

  • மெல்லிய கரும்பு தோன்றும்.

நிவர்த்தி:
        சல்பர் உள்ள உரங்களை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

அம்மோனியம் சல்பேட்                 -   24% சல்பர்
சூப்பர் பாஸ்பேட்                            -     12% சல்பர்
பொட்டாசியம் சல்பேட்                   -   18% சல்பர்
ஜிப்சம்                                        - 13-18% சல்பர்


மேற்கூறிய ஏதேனும் ஒரு உரத்தினை எக்டருக்கு 10-20 கிலோ வீதம் இட வேண்டும்.

மாங்கனீசு:

  • நரம்பிடையில் தோன்றிய மஞ்சள் நிறமானது நுனி இலைகளில் ஆரம்பித்து நடு இலை நோக்கி வளரும்.

  • தீவிர பற்றாக்குறை சமயத்தில் இலைகள் வெளிர்ந்து விடுகின்றன.

 

நிவர்த்தி:


        0.5-1% மாங்கனீசு சல்பேட் கரைசலை (எக்டருக்கு 7.5-15 கிலோ மாங்கனீசு) 3-4 முறை இலைமூலம் தெளிப்பது 25-75 கிலோ மாங்கனீசை மண்மூலம் இடுவதை விட சிறந்தது.

போரான்

  • ஒழுங்கற்ற இலைகள்

  • ஒளி ஊடுருவும் புள்ளிகள் அல்லது தண்ணீர் பைகள் இலை ஓரங்களில் தோன்றும்.

  • எளிதில் உடையக் கூடிய மற்றும் கொத்தாக பல துார்கள் தோன்றும்.

  • நுனி ஆக்கு திசு மடிகிறது.

 

நிவர்த்தி:
எக்டருக்கு 1.5-2 கிலோ போரான் அல்லது போராக்ஸ் அளிப்பது.

மாலிப்டினம்:

  • சிறிய நீள்வாக்கில் வெளிர்ந்த கோடுகள் இலையின் நுனியில் தோன்றும்.

  • சிறிய மற்றும் மெல்லிய கரும்புத் தண்டு

  • மெதுவான வளர்ச்சி காணப்படும்.

நிவர்த்தி:
அம்மோனியம் மாலிப்டேட் (54% மாலிப்டினம்), சோடியம் மாலிப்டேட் (39% மாலிப்டினம்) ஆகியவை பொதுவாக மாலிப்டேட் குறைபாடுள்ள மண் மற்றும் பயிர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.


ஊட்டச்சத்து தேவை: தமிழ்நாடு

கரும்பு பயிர் (கரும்பு ஆலைகளுக்கு உகந்தது):
எக்டருக்கு 275:62.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து

பயிருக்கான பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

62.5

 -

-

390

 -

30-45 நாட்கள்

90

-

37.5

200

-

62.5

75-90 நாட்கள்

92.5

-

37.5

205

-

62.5

120-135 நாட்களுக்கு பிறகு

92.5

-

37.5

205

-

62.5

மொத்தம்

275

62.5

112.5

610

390

187.5

எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 25 டன் மட்கு அல்லது 37.5 டன் கடைசி உழவுக்கு முன்பு தோட்ட நிலத்தில் இட வேண்டும்.


கரும்பு -கட்டை பயிர் (கரும்பு ஆலைகளுக்கு உகந்தது):
               எக்டருக்கு 275 + 25% அதிக தழைச்சத்து: 62.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து


கட்டை கரும்பிற்கான பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 68.5

62.5

 -

148

390

 -

30-45 நாட்கள்

90

-

37.5

200

-

62.5

75-90 நாட்கள்

92.5

-

37.5

205

-

62.5

120-135 நாட்களுக்கு பிறகு

92.5

-

37.5

205

-

62.5

மொத்தம்

343.5

62.5

112.5

758

390

187.5


வெல்லம் தயாரிப்புக்கான கரும்பு (பயிர் மற்றும் கட்டை கரும்பு):
                எக்டருக்கு 225:625.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து


வெல்லம் தயாரிப்புக்கான கரும்பிற்கு உர பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

62.5

 -

-

390

 -

30-45 நாட்கள்

75

-

37.5

162

-

62.5

75-90 நாட்கள்

75

-

37.5

162

-

62.5

120-135 நாட்களுக்கு பிறகு

75

-

37.5

162

-

62.5

மொத்தம்

225

62.5

112.5

486

390

187.5


மேலே செல்க

கரும்பிற்கான உர பரிந்துரை –கேரளா

பந்தளம் மற்றும் திருவல்லா பகுதிகள்:

          எக்டருக்கு 165:82.5:82.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து

பந்தளம் மற்றும் திருவல்லா பகுதிகளுக்கான பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

82.5

 -

-

515

 -

45 நாட்கள்

82.5

-

41.5

179

-

69

90 நாட்கள்

82.5

-

41

179

-

68

மொத்தம்

165

82.5

82.5

358

515

137


  • மட்கு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 10 டன் அல்லது ஆலைக்கழிவு 5 டன் அல்லது டோலமைட் 500 கிலோ அல்லது கால்சியம் கார்பனேட் 750 கிலோ இடுதல் வேண்டும்.

  • தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை இரு பகுதிகளாக பிரித்து நடவு செய்த பின் 45 நாட்கள் கழித்து முதல் பகுதியையும், இரண்டாவது பகுதியை 90 நாட்கள் கழித்தும் மண் அணைப்புடன் சேர்த்து இடுதல் வேண்டும்.  100 நாட்களுக்கு பிறகு தழைச்சத்திடுதல் கூடாது.மணிச்சத்து முழுவதையும் அடி உரமாக இட வேண்டும்.

சித்துார் பகுதிக்கு

எக்டருக்கு 225:75:75 தழை, மணி மற்றும் சாம்பல் சத்து

சித்துார் பகுதிக்கான உர பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

75

 -

-

468

 -

45 நாட்கள்

112.5

-

37.5

244

-

62

90 நாட்கள்

112.5

-

37.5

244

-

62

மொத்தம்

225

75

75

488

468

124


புதிதாக அகற்றப்பட்ட வனப்பகுதிக்கு
           எக்டருக்கு 115:75:90 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து

புதிதாக அகற்றப்பட்ட பகுதிக்கான பரிந்துரை

மொத்த உரத்திற்கான பரிந்துரை கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

75

 -

-

468

 -

45 நாட்கள்

57.5

-

45

124

-

74

90 நாட்கள்

57.5

-

45

124

-

74

மொத்தம்

115

75

90

248

468

148


கரும்பிற்கான உர பரிந்துரை – கர்நாடகா

 பரிந்துரைக்கப்பட்ட உர அளவு  i)250:75:150 கிலோ/எக்டர் (பயிருக்கு)

                                                               ii)315:75:190 கிலோ/எக்டர் (கட்டை பயிர்)

கரும்பு பயிருக்கான பரிந்துரை

மொத்த உர பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

75

 -

-

468

 -

60 நாட்கள்

125

-

75

271

-

124.5

90 நாட்கள்

125

-

75

271

-

124.5

மொத்தம்

250

75

150

542

468

249


கட்டை பயிருக்கான உரப் பரிந்துரை

மொத்த உர பரிந்துரை
கிலோ/எக்டர்

நேரடி ரசாயன உரம்
கிலோ/எக்டர்

 

தழைசத்து

மணி சத்து

சாம்பல் சத்து

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

அடி உரம்

 -

75

 -

-

468

 -

60 நாட்கள்

157.5

-

95

341

-

157

90 நாட்கள்

157.5

-

95

341

-

157

மொத்தம்

315

75

190

682

468

314


மேலே செல்க

மற்ற வேதி உரங்கள்

10:26:26 காம்ளக்ஸ், யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்

வேதி உரம்

நடவிற்கு முன்

45 வது நாள்

90 வது நாள்

10:26:26 காம்ளக்ஸ்

250

-

-

யூரியா

-

280

280

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

-

50

50


17:17:17 காம்பளக்ஸ், யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்

வேதி உரம்

நடவிற்கு முன்

45 வது நாள்

90 வது நாள்

17:17:17 காம்ளக்ஸ்

375

-

-

யூரியா

-

235

235

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

-

50

50

 


டிஏபி (டை அம்மோனியம் பாஸ்பேட்), யூரியா, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்

வேதி உரம்

நடவிற்கு முன்

45 வது நாள்

90 வது நாள்

டிஏபி

135

-

-

யூரியா

-

280

280

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

-

100

100


20:20 காம்ளக்ஸ், யூரியா, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்

வேதி உரம்

நடவிற்கு முன்

45 வது நாள்

90 வது நாள்

20:20 காம்ளக்ஸ்

315

-

-

யூரியா

-

240

240

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

-

100

100


மேலே செல்க

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்