கரும்பு நிலையங்கள்

கரும்பு நிலையங்கள பற்றிய தகவல்கள்


  • சர்வதேச நிலையங்கள்

  • தேசிய கரும்பு நிறுவனம்

  • கரும்பு ஆராய்ச்சி நிலையம்

  • திட்டங்கள்

சர்வதேச நிலையங்கள்


தென் ஆப்பிரிக்கக் கரும்பு ஆராய்ச்சி நிலையம்


செயல்பாடுகள்

  • தென் ஆப்பிரிக்காவில் கரும்பு ஆலைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வரும்  ஒரு முக்கிய வேளாண் ஆராய்ச்சி நிலையம் இது .

  • இந்நிலையம் இரக மேம்பாடு, பயிர்பாதுகாப்பு, பயிர்  சாகுபடி மற்றும் மேலாண்மை மற்றும் அமைப்பு முறைச் செயல்பாடு எனும் நான்கு முக்கியப் பகுதிகளில் செயல்புரிந்து வருகின்றது .

  • கரும்பு விவசாயிகளுக்கும் ஆராய்ச்சியாளார்களின் கண்டுபிடிப்புகளை விரிவு படுத்தும் பணியையும், உரப் பரிந்துரை, நோய் கண்டறிதல் மற்றும் சில பயிற்சிக் கல்வி வகுப்புகளையும் வழங்கி வருகின்றன .

தொடர்புக்கு :

தென் ஆப்பிரிக்க கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
170 பிளான்டர்ஸ் டிரைவ், மவுன்ட் எட்ஜ்கோம்ப், பிரைவேட் பேக் X 02, மவுன்ட் எட்ஜ்கோம்ப், 4300,
தொலைபேசி: (031) 508 7400
                     (031) 508 7597
மின்னஞ்சல்: sasri@sugar.org.za

மேலே செல்க

யூ.எஸ்.டி.ஏ-ஏ.ஆர்.எஸ் கரும்பு ஆராய்ச்சி அமைப்பு


    கரும்பிலிருந்து சர்க்கரை மற்றும் பயோடீசல்(எரிபொருள்) தயாரிப்பது பற்றிய ஆராய்ச்சியை முழுவீச்சில் இந்நிறுவனம் நடத்தி வருகின்றது.  அதோடு இவர்கள் பல ஆராய்ச்சிக் குழுக்களை அமைத்து சுற்றுப்புறத்திற்கு பாதிப்பற்ற இரகங்களையும், மேம்படுத்தப்பட்ட புதிய சாகுபடி முறைகளையும் உருவாக்கப் பாடுபட்டு வருகின்றனர்.
            மேலும் ஆலைக் கரும்பின் இலாபம் அதிகரிக்கவும், பயிர்ப் பரப்பளவை அதிகரிக்கவும், ஒருங்கிணைந்த  களை, நோய், பூச்சிக் கட்டுப்பாட்டிற்கென புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புக்கு
யூ.எஸ்.டி.ஏ-ஏ.ஆர்.எஸ் கரும்பு ஆராய்ச்சி அமைப்பு,
5883 யூ.எஸ்.டி.ஏ சாலை,
ஹெளமா, எல்.ஏ.70360,
தொலைபேசி (985) 872-5042
                        (985) 868 - 8369

பங்களாதேஷ் கரும்பு ஆராய்ச்சி நிலையம்


கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் புதிய தேவைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப நவீன தொழில் நுட்பங்களை வழங்கும் பங்களாதேஷின் ஒரே கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் இதுவாகும். இது ஆலைக் கரும்பு மற்றும் பிறதேவைகளுக்கென கரும்பு பயிரிடும் மண்டலங்களில் கரும்பு சாகுபடியை மேம்படுத்திப் பரப்பளவை விரிவுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    இதன் இரு அடிப்படைச் செயல்பாடுகள் (அ) புதிய இரகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்குதல் (ஆ) புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கரும்பு சாகுபடியாளர்களுக்கு எடுத்துச் செல்லுதல் போன்றவை ஆகும்.

தொடர்புக்கு :
பங்களாதேஷ் கரும்பு ஆராய்ச்சி நிலையம்,

வோளாண் அமைச்சகம், பங்காளதேச மக்கள் குடியரசுக் கட்சி அரசு,
இசூர்டி-6620, பாப்னா, பங்காளதேஷ்,
தொலைபேசி:  +88 07326 63414(எக்ஸ்சேஞ்ச்),+ 88 07326 6368 (டி.ஜி), 8807326 63888

மேலே செல்க

தேசிய சர்க்கரைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்


நோக்கங்கள்

  • கரும்பு முழங்கு முடிகளை சேகரித்து சோதனை செய்தல்

  • புதிய கரும்பு இரகங்களை உருவாக்குதல்

  • தேசிய மற்றும் சர்வதேச இரகங்களைச் சோதித்தல்

  • கரும்பு இரகங்களின் பூக்கும் பருவத்தினைப் பற்றி ஆராய்தல்

தொடர்புக்கு :

தேசிய சர்க்கரைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்,
தேசிய சர்க்கரைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்,
கரும்பு ஆராய்ச்சி நிலையம், தட்டா,
பி.ஏ.ஆர்.சி (PARC) - மாக்ஸி, தட்டா, சிந்து, பாகிஸ்தான்
தொலைபேசி: (92-29)-0770524, 770267,
தொலைநகலி       : (92-29) 770524
மின்னஞ்சல்: keerio10@hotmail.com

யுன்னன் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்

செயல்பாடுகள்

  • கரும்பின் விதைக் கருவூலத்தினை (புதிய இரகங்கள் உட்பட) அறிமுகப்படுத்துதல் மற்றும் மாற்றிக் கொள்ளுதல்

  • மாலிக்குலார் உயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் மரபுப் பொறியியல் முறைகளில் கரும்பினை ஆராய்ச்சி செய்தல்

  • கரும்பு இனக்கலப்பு /இனப்பெருக்கம் மூலம் புதிய இரகங்களை உருவாக்குதல்

  • கரும்பில் வறட்சி தாங்கும் மற்றும் நீர் சேமிக்கும் தொழில் நுட்பங்களை  உருவாக்குதல்

  • புதிய கண்டுபிடிப்புகளை வல்லுநர்கள் பரிமாறிக் கொண்டு மேம்படுத்துதல்

தொடர்புக்கு
இயக்குநர்,
கரும்பு ஆராய்ச்சி நிலையம்
யுன்னன் வேளாண்மை அறிவியல் அகாடமி,
363, கிழக்கு லிங்குவான் ரோடு,
கையூன்,
யுன்னன் புரவின்ஸ், ஈ .ஆர் (ER), சீனா
தொலைபேசி : 86-87347227014

மேலே செல்க

மிட்டர் போல் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், தாய்லாந்து:


இந்நிறுவனம் மூன்றடுக்கு முறையினைக் கொண்டது. முதல் ஒன்று கரும்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, பல்வேறு இனப்பெருக்க ஆராய்ச்சிகள் மூலம் தரத்தினை உயர்த்துவது, உரம், களை மற்றும் நீர் மேளாண்மை மூலம் மகசூல் அதிகரிக்கும் சாகுபடி முறைகளைக் கண்டறிதல் போன்றவையாகும் . இரண்டாவது சரியான முறைகளில் தொழில் நுட்பங்களை கரும்பு சாகுபடியாளர்களுக்கு எடுத்துச் செல்லுதல் . கடைசியாக கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரையின் தரம், மகசூல் மற்றும் உபரிப் பொருட்களினை மேம்படுத்துதல் ஆகியவை ஆகும் .

தொடர்புக்கு
மிட்டர் போல் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், தாய்லாந்து
399, மூ சுன்பே,
புகியோ ரோடு,
கோக்சா -அர்கு ,புகியோ,
சைய்யாபும் - 36110.

மேற்கிந்திய மத்திய கரும்பு இனப்பெருக்க நிலையம்


செயல்பாடுகள்

  • தரமான இனப்பெருக்க முறைகள்

  • மரபியல் அடிப்படையை விரிவுபடுத்தல்

  • அதிக எடை மற்றும் பல் பயன்பாடு கொண்ட கரும்பு இரகங்களை உருவாக்குதல்

  • முக்கிய சாகுபடி முறைகள் மற்றும் மரபியல் காரணிக்களைப் பயன் படுத்தி இனப்பெருக்கம் செய்தல்

தொடர்புக்கு
மேற்கிந்திய மத்திய கரும்பு இனப்பெருக்க நிலையம்
குரூவ்ஸ், செயின்ட் . ஜார்ஜ் , பார்படாஸ், பி .பி 19073

மேலே செல்க

இந்திய நிறுவனங்கள்


இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம்


நோக்கங்கள் :

  • கரும்பினைப் பாதிக்கும் நோய்கள், பூச்சிகள், எலி மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டு முறைகள் போன்றவற்றை ஆராய்தல்

  • பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் உயிரிகளை இனப்பெருக்கம் செய்யவும், வளர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிதல்

  • மண்வளப் பாதுகாப்பு, இடுபொருள் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பு, குறைந்த செலவு கொண்ட வேளாண் தொழில் நுட்பங்களை உருவாக்குதல் .

  • மிதவெப்ப மண்டலப் பகுதிகளுக்கேற்ப சிறப்புப் பண்புகள் கொண்ட புதிய உயர்தர இரகங்களை உருவாக்குதல்

  • கரும்புப் பயிர் மேம்பாட்டிற்காக உயிர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துதல்

  • அறுவடைப் பின்சார் இழப்பைக் குறைக்க தொழில்நுட்பங்களை உருவாக்குதல்

(1)   நிலையத்தின் கரும்பு வயலில் நீர் சேமித்தல்
(2) டிராக்டர் மற்றும் பிற கருவிகளை அடிக்கடி உபயோகப்படுத்தாமல் மண்வளம் கெடாமல் பாதுகாத்தல்
(3) இயந்திர மயமாக்கலை ஊக்குவித்தல் போன்றவற்றிற்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்

தொடர்புக்கு
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
ராய்பார்லி ரோடு, (P.O) அஞ்சல் நிலையம்
தில்குஷா, லக்னோ-226 002
தொலைபேசி: (இயக்குநர்) 0522-2480726, (ஈபிஏபிக்ஸ்) 0522-2480735/6/7,
தொலைநகலி: 0522-2480738
மின்னஞ்சல்: iisrlko@sancharnet.in

கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்


     1912 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் பழமையான நிறுவனமான இது நாட்டின் பல்வேறு வேளாண் தட்பவெட்ப மண்டலங்களுக்கு ஏற்ப உயர்வகை இரகங்களை உருவாக்கி வருகின்றது. இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்டு வரும் இரகங்களால், சர்க்கரை இறக்குமதி செய்துவந்த நமது நாடு தற்போது மிகப்பெரும் சர்க்கரை உற்பத்தியாளராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய இரகங்கள் உலகெங்கிலுமுள்ள 26 நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது நமது நாடு 4.229 மில்லியன் ஹெக்டரில் (கரும்பு பயிரிடும்) அனைத்து மண் வகைகள், தட்பவெப்பநிலைகளிலும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட மிகப்பெரும் கரும்பு சாகுபடி செய்யும் நாடாகத் திகழ்கின்றது.  அதோடு பல புதிய இரகங்களின் உலகிலேயே சிறந்த விதைக் கருவூலத்தினைக்  கொண்டுள்ளது. எதிர்காலத்திற்குத்தேவையான இரகம் மற்றும் தொழில்நுட்பங்களைச்  சேமித்து வைப்பதோடு, கரும்பு சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பிலும் பல புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தொடர்புக்கு

இயக்குநர்,
கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்,
கோயம்பத்தூர் - 641 007,
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 91-422-2472621,
ஃபேக்ஸ்:      0422-2472923
மின்னஞ்சல்;  sugaris@vsnl.com, sugaris@md3.vsnl.net.in

மேலே செல்க

உத்திரப்பிரதேச கரும்பு ஆராய்ச்சி (ஆலோசனை) மையம்:


செயல்பாடுகள் :
    இந்த நிறுவனம் கரும்பு சாகுபடி மற்றும் இனப்பெருக்கம் பற்றிய பல்வேறு முறைகள், மாநிலத்தின் பல்வேறு வேளாண் வெட்பநிலைகளுக்கு ஏற்ற இரகங்களை உருவாக்குதல் மேம்படுத்தப்பட்ட இரகங்களில் விதைகளை உற்பத்தி செய்தல் மற்றும் பெருக்குதல், ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு ஊடகங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பரப்புதல் ஆகிய செயல்பாடுகளில் புரிந்து வருகிறது.


தொடர்புக்கு :
உத்திரப்பிரதேச கரும்பு ஆராய்ச்சி மையம

ஷாஜகான் பூர்(உ.பி)
இந்தியா

ஜென்டாசிங் கரும்பு இனப்பெருக்கு மற்றும் ஆராய்ச்சி நிலையம்


இந்நிலையம் தொடங்கிய நாளிலிருந்தே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கான புதிய கரும்பு இரகங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது வரை 24 இரகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ளது.  இதன் முக்கிய நோக்கம் பூச்சியல், உழவியல், வேளாண்மை, உயிர்வேதியியல், மரபியல், விரிவாக்கம், மண் மற்றும் பூச்சிக் கொல்லி வேதியியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்வது ஆகும்.
            வரலாற்றிலேயே முதன்முறையாக “மாடிபைடு லேன்டர்ன் தொழில்நுட்பம்” எனும்முறை சியோ ரகியில் உருவாக்கப்பட்டு அதிக சர்க்கரை கொண்டு, அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் பெற்ற இரகங்களை இனக்கலப்பு முறை மூலம் உத்தரப்பிரதேசத்தில்  உருவாக்கிப் பயிரிட்டு வருகின்றனர்.

தொடர்புக்கு
ஜென்டா சிங் கரும்பு இனப்பெருக்கு மற்றும் ஆராய்ச்சி நிலையம்

சியோரகி (P.O), தும்குகி ராஜ்,
குஷி நகர் மாவட்டம்- 274407, உத்தரப்பிரதேசம்,
தொலைபேசி-05564-26024 

மேலே செல்க

கரும்பு ஆராய்ச்சி நிலையம்-குஜராத்


நோக்கங்கள்

  • குறிப்பிட்ட இரகங்களுக்கு உரிய சாகுபடித் தொழில்நுட்பங்களை கண்டறிதல்

  • பூச்சி மற்றும்  நோய்த்தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற புதிய ஜீனோடைப்புகளை உருவாக்குதல்

  • வெல்லக் கட்டி தயாரிப்பதற்கான இரகங்களை உருவாக்குதல், மட்டுமின்றி வெல்லத்தினை சேமித்து வைத்தல், தயாரித்தல் போன்றவை பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன .

  • பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டறியும் இலக்குகளை நிர்ணயித்து ஆராய்தல்

  • கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைகளின் உபபொருட்களை உரிய முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல்

  • கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனை, பயிற்சி, செய்திகள், விரிவாக்க முறைகளை வழங்குதல்  மேலும் கரும்பு ஆலைகளுக்கு தேவையான தொழில்நுட்ப  ஆலோசனைகளை வழங்குதல் .

தொடர்புக்கு :
கரும்பு ஆராய்ச்சி நிலையம்

நாவ்சரி(நவசரி) வேளாண் பல்கலைக் கழகம்
நாவ்சரி-396 450, குஜராத்

கரும்பு ஆராய்ச்சி நிலையம்-பஞ்சாப்

 


செயல்பாடுகள்

  • கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் அதிகரிக்க ஆராய்ச்சி செய்தல்

  • பல்வேறு மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ற இரகங்களை உருவாக்குதல்

  • மறுதாம்புப் பயிருக்கான சாகுபடித் தொழில்நுட்பங்களைக் கண்டறிதல்,

  • வறட்சி, காரத்தன்மை தாங்கி வளரும் மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைத்தல்

  • பயிர்த்திட்ட முறையினை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளல்

  • கரும்பு பயிரிடுதலை இயந்திரமயமாக்குதல்

  • கரும்பின் உபபொருட்களை சரியான முறையில் பயன்படுத்துதல்

 

மேலே செல்க

முதன்மை கரும்பு ஆராய்ச்சி நிலையம் குஜராத்

தொடர்புக்கு
கரும்பு பயிரிடும் மாதிரி நிலையம்
பார்பாலி,
சாம்பல் பூர் மாவட்டம்,
பஞ்சாப்


நோக்கங்கள்

  • கோயம்புத்தூரில் கண்டுபிடிக்கும் புதிய இரகங்களை பல்வேறு வேளாண் சூழ்நிலைகளில் பயிரிட்டு செயல்பாட்டினை அறிதல்

  • வேறுப்பட்ட பயிர்த்திட்ட முறைகளை பயிரிடும் பகுதிகளுக்கேற்ப உருவாக்குதல்

  •  வறட்சி, காரத்தன்மை, நீர் தேங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கேற்ற எதிர்ப்பு இரகங்களைப் பயிரிடல்

  • குறைந்த நீர் இருப்பு, தரம் குறைந்த பாசனநீர் காரத்தன்மை கொண்ட கடற்பகுதி மண் போன்றவைகளுக்கு ஏற்ற  சாகுபடித் தொழில் நுட்பங்களைக் கண்டறிதல்

  • பூச்சி, நோய்த் தாக்கத்தின் தன்மையை அறிந்து, அதற்குரிய கட்டுப்பாட்டு முறைகளைக் கண்டறிதல்

  • குஜராத்தின் தெற்கு செளராஷ்டிரா மண்டல வேளாண் சூழ்நிலைக்கேற்ப சிறந்த இரகத்தினைத் தேர்வு செய்தல்

  • நவீன இரகங்களுக்குரிய  ஊட்டச்சத்து மற்றும் நீர்ப்பாசன மேலாண்மை  செய்தல்

  • கரும்புப் பயிருக்கு குறைந்த செலவு சாகுபடி முறைகளை உருவாக்குதல்

தொடர்புக்கு
முதன்மை, கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
கோடினார், ஜுனாகத் மாவட்டம்
ஜுனாகத் வேளாண் பல்கலைக் கழகம்,
குஜராத்

கரும்பு ஆராய்ச்சி நிலையம் - மேற்கு வங்காளம்


செயல்பாடுகள்

  • நல்ல மகசூல் தரும் இரகங்களுக்கான சாகுபடி முறைகளை மேம்படுத்துதல்

  • செவ்வழுகல், வாடல், கரிப்பூட்டை போன்ற நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகங்களை மண்டல இரகங்கள், ஜீனோடைப் இரகங்களில் சோதித்துப் பார்த்தல்

  • முக்கிய இரகங்கள் பயிரிடும் பகுதிகள், அவற்றை பாதிக்கும் நோய்கள் பற்றி கருத்துக் கணிப்பு செய்தல்

  • முக்கிய பூச்சிகளின் தாக்கம் பற்றி மண்டல இரகங்களில் ஜீன்களை சோதித்துப் பார்த்தல்

  • கரும்பு பூச்சித் தாக்கம் பற்றி கருத்துக்  கணிப்பு செய்தல்

தொடர்புக்கு
கரும்பு ஆராய்ச்சி நிலையம்,

கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
பெத்து ஆடாஹரி, நாடியா தொலைபேசி- 741126
மேற்கு வங்காள அரசு (வேளாண் அமைச்சகம்)
இணையதளம்: www.srswb.org
மின்னஞ்சல்: info@srswb.org.
தொலைபேசி: (03474) 255353.

மேலே செல்க

வசந்தவாடா கரும்பு நிறுவனம்


1986 ஆம் ஆண்டிலிருந்தே இந்நிறுவனம் அனைத்திந்திய  ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கரும்பு பற்றி ஆராய்வதில் நன்கறியப்பட்ட ஒன்றாகும் .   இதன் கீழ் பல்வேறு இரகங்கள் அதன் செயல்பாடு மற்றும் நிலைத்தன்மையைத் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயிரிடப்பட்டு வருகின்றது . புதிதாக வெளியிடப்பட்ட இரகங்கள், மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு ஆலைகளில் பயிரிடப்பட்டு அதிக மகசூல் பெறப்பட்டுள்ளது . அதோடு இத்திட்டத்தில் மூலம் இனக்கலப்பில் கண்டறியப்பட்ட வீரிய இரகங்கள் மற்றும் பல அறிய இரகங்களின் விதைகள் சேகரிக்கப்படுகின்றன .
        அதோடு மகாராஷ்டிராவில் பூக்கும் கரும்பு இரகங்கள்  பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இறுதியில் சிந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்போலி பகுதி கரும்பு இனப்பெருக்கு நிலையம் தொடங்க சிறந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

தொடர்புக்கு
வசந்தவாடா கரும்பு நிறுவனம்
மஞ்சரி பி .கே , தாலுகாஹாவேலி,
புனே - 412 307,
உத்தரப்பிரதேசம், இந்தியா,
தொலைபேசி : 091-20-26993988, 26993989
தொலைபிரதி : 091-20-26992735
மின்னஞ்சல் : vsilib@giaspn01.vsnl.net.in

தேசிய கரும்பு நிறுவனம்


இதன் முக்கியச் செயல்பாடுகளாவன

  • சர்க்கரை வேதியியல், சர்க்கரைத் தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் சில தொடர்புடைய துறைகள் பற்றிய தொழில்நுட்பக்  கல்வி மற்றும் பயிற்சி அளித்தல்

  • மேற்கண்ட துறைகளிலும், கரும்பு ஆலைகளிலும் எழும் முக்கிய பிரச்சினைகள்,

  • கரும்பு ஆலைகளின் உப பொருட்களை  உரிய முறையில் பயன்படுத்துதல் போன்ற ஆராய்ச்சிகள் செய்தல் மற்றும்

  • கரும்பு ஆலைகளின் திறனை மேம்படுத்த ஆலோசனைகள் கூறுதல் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளில் உதவிபுரிதல் . சர்க்கரை மற்றும் அது தொடர்பான துறைகளில் தேவைப்படும் போது மாநில, மத்திய அரசுகளின் உதவி கோருதல் போன்ற செயல்களைப் புரிகின்றது .

தொடர்புக்கு :
தேசிய சர்க்கரை நிலையம் :
கல்யான்பூர் - 208017,
கான்பூர், உத்தரப்பிரதேசம், இந்தியா,
தொலைபேசி : 091- 512- 2570541/542/543/730
தொலைபிரதி : 091- 512- 2570247
மின்னஞ்சல் :  nsiknp@sancharnet.in.

 

மேலே செல்க

கரும்பு ஆராய்ச்சி நிலையம்


 

கரும்பு ஆராய்ச்சி நிலையம்

  • இந்த ஆராய்ச்சி நிலையம் கடலூரில் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

  • தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான கரும்பு ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது.

  • இந்த ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 22 கரும்பு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 


நோக்கங்கள் :

  • பல்வேறு பருவங்களுக்கேற்ற அதிக தரம் கொண்ட நல்ல மகசூல் தரும் இரகங்களை உருவாக்குதல்

  • கடற்கரைப் பகுதிகளில் கரும்பு சாகுபடியை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல்

  • செலவு குறைந்த, எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாகுபடித் தொழில் நுட்பங்களை உருவாக்குதல்

  • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு முறைகளை உருவாக்குதல்

தொடர்புக்கு :
கரும்பு ஆராய்ச்சி மையம்,
செம்மண்டலம், கடலுார் - 607 001.
தமிழ்நாடு, இந்தியா,
தொலைபேசி : +91-4142-220630
ஃபேக்ஸ் :         +91-4142-212630
மின்னஞ்சல் : phsrscud@hotmail.com

கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி

  1. 1959 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது.

  2. காவிரி பாசன பகுதிகளில் விளையும் பயிர்களான கரும்பு, வாழை, வெற்றிலை மற்றும் பாமாயில் பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றது.

  3. ஐந்து (கோ.சி. 86071, கோ.சி. 95071, கோ.சி.96071, கோ.சி. 776, கோ.சி.98071) இரகங்கள் இந்நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

 


செயல்பாடுகள் :

  • நன்செய் நிலங்களில் வெள்ளநீர்ப் பாய்ச்சல் முறையில் கரும்பு பயிரிடும்போது ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து ஆராய்தல் .

  • அதிக மகசூல் தரும், முன் வறட்சி, நீர்த் தேக்கம், காரத்தன்மை செவ்வழுகல், கரிப்பூட்டை போன்ற நோய்கள், தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சித் தாக்குதல் ஆகியவற்றைத் தாங்கி வளரக் கூடியவை .

  • மண் வளப் பாதுகாப்புடன் கூடிய ஒருங்கிணைந்த, ஊட்டச் சத்து மேலாண்மையை கண்டறிதல் .

தொடர்புக்கு :
கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
சிறுகமணி - 639 115, திருச்சி,
தமிழ் நாடு, இந்தியா,
மின்னஞ்சல் : arssgm @tnau.ac.in

மேலே செல்க

கரும்பு ஆராய்ச்சி நிலையம் குடியாத்தம்

  1. கரும்பு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் 1935 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது.

  2. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு இனப்பெருக்கம் மற்றும் விதை உருவாக்குதல் என செயல்பட்டு வருகிறது.

  3. மூன்று இரகங்கள் இந்நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளன கோ.கு. 93076, கோ.கு. 95077, கோ.கு. 95076.

நோக்கங்கள் :

    • வெல்லக்கட்டி தயாரிப்புக் கேற்ற இரகங்களின் பயிர்பாக வழிக்  கன்றுச் செடிகளை உருவாக்குதல்

    • முன், நடு, பின் பட்ட சாறு பிழிவதற்கு ஏற்ற அதிக மகசூல் மற்றும் தரமான இரகங்களை உருவாக்குதல்

    • தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மண்ணிலும் வளர்ந்து நல்ல மகசூல் தரக் கூடிய (இரகங்களை) பயிர்பாக வழிக்கன்றுச் செடிகளை உருவாக்குதல்

    • வறட்சி தாங்க வளரும் பயிர்பாக வழிக்கன்றுச் செடி

    •  தென்னந்தோப்பின் நிழலில் வளரக் கூடிய கரும்பின் பயிர்பாக வழிக்கன்றுச் செடி

    • உற்பத்தித் திறனை அதிகரிக்கும் சாகுபடித் தொழில் நுட்பங்கள்

    •  நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு இரகங்கள் போன்றவற்றை உருவாக்குதல்

தொடர்புக்கு :
கரும்பு ஆராய்ச்சி நிலையம் :
குடியாத்தம், மேலாலத்துார் - 635 806.
வடக்கு ஏற்காடு மாவட்டம்,
தொலைபேசி : 04171 - 220 275.

கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருவல்லா

  1. 1976 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது.

  2. கரும்பு மற்றும் காய்கறிகளில் இந்நிலையம் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது.

  3. மாதுரி, திருமாதிரம், மாதிரிமா போன்ற மூன்று இரகங்கள் இந்த நிலையத்திலிருந்து பயிரிடுவதற்காக வெளியிடப்பட்டுள்ளன.

செயல்பாடுகள் :

  • மாதுரி, திருமாதிரம், மாதுரிமா போன்ற மூன்று இரகங்கள் இந்த நிலையத்திலிருந்து பயிரிடுவதற்காக வெளியிடப்பட்டுள்ளன .

  • அப்பகுதிகளில் மகசூல் குறைபாட்டிற்கான காரணிகளைக் கண்டறிந்துள்ளனர் .

  • கரும்பு சாகுபடி நுட்பங்கள் தரப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன .

  • கேரளாவில் கரும்பினைத் தாக்கும் நோய்களைப் பற்றி தனி ஆராய்ச்சி செய்துள்ளனர் .

  • கோ 7704 செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகம் எனக் கண்டறிந்து, அப்பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்டது .

  • மேலும் இந்நிலையத்தில் கெளட்டி எனும் புடலை இரகமும், பிரியங்கா எனும் பாகற்காய் இரகமும் வெளியிடப்பட்டுள்ளன

தொடர்புக்கு :
கரும்பு ஆராய்ச்சி நிலையம்,
கல்லுனக்கல் (p.o)
திருவல்லா,
பத்தனம் திட்டா மாவட்டம் - 689 102.
தொலைபேசி : 0469 - 264181

மேலே செல்க

கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம், கண்ணூர்

  1. இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1961 ஆம் ஆண்டு கண்ணூரில் தொடங்கப்பட்டது.

  2. அதிகமான கரும்பு விதைக்கருவூல சேமிப்புக்களைக் கொண்ட நிறுவனம்.

  3. சர்வதேச விதைக்கருவூல சேமிப்பு 1806 ம் மற்றும் தேசிய விதைக்கருவூல செமிப்பு 1562 ம் இந்நிறுவனம் சேமித்து வைத்துள்ளது.


செயல்பாடுகள் :

  • சர்வதேச அளவில் கரும்பின் விதைகளடங்கிய கருவூல நிர்வாகம்

  • நீர்த்தேக்கத்தினைத் தாங்கி வாழும் இரகங்களை உருவாக்குதல்

  • புதிய மரபியல் பண்புகளை உருவாக்க விதைக்கருவூல சேமிப்புக்களை பயன்படுத்துதல்

  • விதைக் கருவூல சேகரிப்பு, பராமரிப்பு, மேம்படுத்துதல், பதிவு செய்தல் மற்றும் பயன்பாடு

தொடர்புக்கு :

சிவில் நிலைய அஞ்சல், கண்ணுார் - 670 002, கேரளா
தொலைபேசி : 0497 - 2705054

கரும்பு இனப்பெருக்க நிலையம், உள்ளூர் நிலையம், கர்னால்

  1. 1932 ஆம் ஆண்டு இந்நிலையம் நிறுவப்பட்டது.

  2. மித வெப்ப பகுதிகளுக்கான விதைக் கருவூலங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

  3. இந்த நிலையம் 3340 விதைக் கருவூலங்கள் இந்த நிலையத்தி இருந்து வெளியிடப்பட்டது.

  4. 12 கரும்பு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது, 27 இரகங்கள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது.


நோக்கங்கள் :

  • உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் பாதிப்புகள், மித வெப்பப் பகுதி மகசூல் பெருக்கும் உத்திகளைக் கண்டறிதல்

  • கரும்பு ஆலைகளுக்கும், விவசாயிகளுக்கும் அளிப்பதற்கான இனப்பெருக்கு துாய விதைகளை உற்பத்தி செய்தல்

 

தொடர்புக்கு :

அகர்ஸின் மார்க், பி .டபிள்யூ. டி காலனிக்கு எதிரில் ,
அஞ்சல் பெட்டி எண் . 52, கர்னல் - 132 001,
தொலைபேசி : 0184 - 2268096, 2265567,
தொலைநகலி : 0184 - 2265723,
மின்னஞ்சல் : bksahi.@Yahoo.co.in

கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையம், கர்நாடகா


நோக்கங்கள்

  • பிற்படுத்தப்பட்டோரின் மாவட்டமான பிஜப்பூரில், இந் நிறுவனம் கரும்பு சாகுபடி முறையினை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ள, ஊக்குவித்து, உதவி வருகின்றது .

  • வட கர்நாடகாவின் பல இடங்களில் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் கரும்பு சாகுபடியினைச் சோதித்தல், விதைப் பெருக்கத்திற்கு ஏற்ற இரகங்களைக் கண்டறிதல் நோயற்ற ஆரோக்கியமான விதை கரணை இரகங்களை விவசாயிகளுக்கு அளித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது .

  • நல்ல நீர் மற்றும் மண் வள முறைகளை உருவாக்கி, விவசாயிகளுக்கு அளித்தல் .

  • வேளாண் அறிவியலில் சாகுபடியாளர்களுக்குப் பயிற்சியளித்து பல்வேறு நவீன முறைகளைக் கற்பித்தல்

  • அப்பகுதிகளுக்கு உரிய ஆட் தேவைகளை மிச்சப்படுத்தும், வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்நிறுவனம் புரிந்து வருகின்றது .

தொடர்புக்கு :
கரும்பு இனப்பெருக்க நிறுவனம், ஆராய்ச்சி மையம்
கிரிஸ்நகர்,
ஜம்காந்தி - 587 302,
பிஜப்பூர் மாவட்டம், கர்நாடகா,
தொலைபேசி : 0853 -40482

மேலே செல்க

கரும்பு திட்டங்கள்


கரும்பு மேம்பாட்டுத் திட்டம் :


தமிழ்நாட்டிலுள்ள துாத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும், கரும்புப்பயிரின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனைப் பெருகுவதற்காக கரும்பு வளர்ச்சிக்கான மாநிலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது .

ஆக்கக் கூறுகள்

மதிப்பிலக்கு
1999-2000

பிப்ரவரி 2000
வரை எய்த அளவு

2000-2001 ஆம்
ஆண்டிற்கான
நிகழ்ச்சி நிரல்

பரப்பு செயல் எல்லை (இலட்சம் ஹெக்டேர்)

2.75

2.90

2.75

கருப்பட்டி உற்பத்தி (இலட்சம் மில்லியன் டன்கள்)

37.00

37.00

37.00

ஒட்டுயிரிவெளியீடு - இயல் நிலை (எக்டர்)

10500

1000

10500

ஒட்டுயிரி வெளியீடு - நிதி (ரூபாய்    லட்சத்தில்)

3.13

3.50

3.75

செயல்விளக்க பாத்தி(எண்கள்)

575

575

575


வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டம் :


திட்டத்தின் பெயர்   

:

வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டம்

திட்டம் செயல்படும் இடம்

:

அனைத்து மாவட்டங்கள் (சென்னை தவிர)

வேலைகளின் விவரம்

:

விவசாயிகள் வோளண் எந்திரம் மற்றும் வேளாண் கருவிகளான இழுவை இயந்திரம், விசை உழவு இயந்திரம், தன்னியக்க நெல் நடவுக்கருவி, தன்னியக்க நெல் கதிரருக்குங்கருவி, சுழல் கலப்பை, கொத்துக்கலப்பை, சட்டிக்கலப்பை, உழிக்கலப்பை போன்ற இயந்திரங்களை வாங்குவதற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது .

அணுகூலம் அளித்தது (உதவித்தொகை)

:

ஒவ்வொரு இயந்திரம்/கருவிகளுக்கும் மொத்த தொகையில் 25 சதவிகிதம் மானியம் (உதவித் தொகை) இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுதி

:

அனைத்து விவசாயிகளும்

செயல்படுத்தலின் கால அளவு

:

நிதி ஆண்டிற்குள் திட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் .

உலக வங்கி உதவிய தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்: (ஐயம்வார்ம்) திட்டம்


திட்டத்தின் பெயர்   

 

உலக வங்கி உதவிய தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் (ஐயம் வார்ம் திட்டம்)

 

வேலைகளின் விவரம்

 

  • சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் நுண்துளித் தெளிப்புநீர்ப் பாசனத்திட்டங்களை நிறுவுதல்

  • நிலத்தடி பிவிசி குழாய் மற்றும் சமுதாய குழாய்க் கிணறு அமைத்தல்

  • பண்ணை எந்திரயமாக்குதல்

  • பண்ணைக்குட்டை தயாரித்தல்

  • நீர் சேகரிப்பு அமைப்புகளான தடுப்பனை மற்றும் கழிவு நீர்க்குட்டைகள் அமைத்தல்

  • செய்தி, கல்வி, தகவல் அளிப்பு, மற்றும் செயலாற்றல் அமைப்பு.

அணுகூலம் அளித்தது (உதவித் தொகை)

 

 

சொட்டு நீர்ப் பாசனம் மற்றும்
நுண்துளித்தெளிப்பு நீர் பாசனத் திட்டங்கள்    

 

இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு 50 சதவிகிதம் உதவித் தொகையை  விவசாயிகளுக்கு அளித்தல்

பிவிசி குழாய் மற்றும் சமுதாயக் குழாய்  கிணறு அமைத்தல்

 

விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், பராமரிப்பிற்காக 10 சதவிகிதம் மானியதாரர் பங்களிப்பு பெறப்படுகிறது.

பண்ணை எந்திரமயமாக்குதல்    

 

நீர் பயன்பாட்டுக் கூட்டமைப்பிற்கு 100   சதவிகிதம் மானியம், வழங்கப்படுகிறது.

பண்ணைக் குட்டைகள் கட்டுமானம்   

 

பொது விவசாயிகளுக்கு 90    சதவிகிதம் மானியம் மற்றும் தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தவருக்கு 95 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது

நீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டுமானம்    

 

விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம்               அளிக்கப்படுகிறது. இருப்பினும் பராமரிப்பிற்காக 10 சதவிகிதம்             மானியதாரர் பங்களிப்பு பெறப்படுகிறது

தகுதி     

 

தேர்ந்தெடுக்கப்பட்ட துணைக்கிண்ணப் பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும்.

செயல்படுத்துதலின் கால அளவு 

 

ஆண்டு முடிவிற்குள்

மேலே செல்க

துல்லியப் பண்ணையம் - கரும்பு


  • துல்லியப் பண்ணையத் தொழில்நுட்பத்தால் தற்போதைய உற்பத்தித்திறன் அளவை விட 2-3 மடங்கு அதிக பயிர் உற்பத்தித்திறனைப் பெற முடிகிறது. வேளாண்மை பயிர்களான கரும்பு, பருத்தி மற்றும் மக்கச்சோளம் போன்ற பயிர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் செயல்படுகிறது.  இம்முறையில் அனைத்து அறிவியல் பயிர் வளர்ப்பு முறைகளுடன், நீர்வழி உரமிடுதலோடு சொட்டு நீர்ப்பாசன முறையும் அளிக்கப்படுகிறது.

  • தொழில் நுட்ப நோக்குகளின் அடிப்படையில் பயிர்ச்சிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்குகின்றது.

  • வங்கிக்கடன் கிடைப்பதற்கும், விளைச்சலை விற்பனை செய்வதற்கும், விவசாய சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இதனால் இம்முறை 20 எக்டர் திரளில் செயல்படுத்தப்படுகிறது. 

  • 2009-10 ஆம் ஆண்டில் விவசாயப் பயிர்களைக் கொண்டு 4000 எக்டர் 10.88 கோடி ரூபாய் செலவில், அறிவியல் பயிர் வளர்ச்சி முறைகளைச் செயல்படுத்தி, கிட்டிய நீரைக் கொண்டு அதிக பரப்பு மற்றும் அதிக உற்பத்தியை கொண்டு வருதல்.

  • சொட்டு நீர்ப் பாசனத்திற்கு அதிகப்படுத்தப்பட்ட 50 சதவிகிதம் மானியம் 65 சதவிகித மானியமாக உயர்ந்துள்ளது.  இதில் மத்திய அரசு உதவி 40 சதவிகிதம் மற்றும் மாநில அரசு உதவி 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்ந்தும் மொத்தம் 65 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டம் – தமிழ்நாடு


  • தமிழ்நாட்டில் 2000 ஆம் ஆண்டு காரீப் பருவம் முதல் தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டம் செயல்பட்டு வருகிறது.

  • வேளாண்மை காப்புறுதி நிறுவனங்கள் மூலம், மாநில அரசு தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தியுள்ளது. அதன் குறிக்கோள்கள் பின்வருமாறு:   

  • இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு காப்புறுதி மற்றும் நிதி உதவி கொடுத்தல், இச்சலுகைகள் இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு வழங்கப்படுகிறது.

  • படிப்படியான பயிர் வளர்ச்சி செயல்கள், அதிக மதிப்புடைய இடுபொருள்கள் மற்றும் உயர்ந்த தொழில்நுட்பங்களை வேளாண்மையில் பயன்படுத்துமாறு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

  • பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் குறிப்பாக பாதிப்புக்குள்ளான வருடங்களில் மேற்கொள்ளுதல்

  • இத்திட்டத்தின் கீழ் உணவுப் பயிர்கள் (தானியப்பயிர், சிறுதானியம் மற்றும் பயரினங்கள்), எண்ணெய் வித்துப் பயிர்கள், கரும்பு, பருத்தி, வருட வணிகப்பயிர்/வருட தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவை உள்ளடங்கும்.

  • 2005-06 ஆம் ஆண்டு வரை பதிவு செய்த கடன் தொகை பெற்ற விவசாயிகள் மட்டும் சலுகைகளைப் பெறுவர்.

  • கடன் பெறாத விவசாயிகளும் இத்திட்டத்தின் சலுகைகளைப் பெறுவதற்கு மாநில அரசு 8 கோடி ரூபாயை அளித்துள்ளது.  மேலும் இந்த விவசாயிகளுக்கு 2006-07 ஆம் ஆண்டில் 50 சதவிகிதம் மானியத்தை அதிகரித்து, அவர்களையும் பயிர் காப்புறுதி திட்டத்தில் பதிவு செய்ய துாண்டுகிறது.

  • மேலும் இந்திய அரசுத் திட்டத்தின் படி, சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு, கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத இனத்தவருக்கும் 5 சதவிகிதம் மானியத்தை இந்திய அரசு வழங்குகின்றது.

மேலே செல்க

சிறு பாசனத் திட்டம்


திட்டத்தின் பெயர் : சிறு பாசனத் திட்டம்
செயல்படும் இடம் : அனைத்து மாவட்டங்கள் (நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர)
வேலைகளின் விவரம்:

  • குழாய்க் கிணறு மற்றும் திறந்த கிணறு கட்டுமானத்திற்கு இடத்தை தேர்ந்தெடுத்தல்

  • வண்டல் மண்ணில் குழாய்க்கிணறு அமைத்தல்

  • கடினமான பாறையுள்ள இடங்களில் பக்க துளையீடு மற்றும் வெடிமருந்து வைத்து தகர்த்து கிணறுகளை உருவாக்குதல்

  • கடினமான பாறையுள்ள இடங்களில் குழாய்க்கிணறு அமைத்தல்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (என் ஏ டீ பி)


திட்டத்தின் பெயர்

:

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (என்ஏடீபி)

திட்டம் செயல்படும் இடம்

:

அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)

வேலைகளின் விவரம்

:

 

ஆக்கக் கூறு

வேலைகளின் விவரம்

 

வேளாண்மை எந்திரமயமாக்குதல்

  • புதிதாக உருவாக்கிய வேளாண் இயந்திரம்/கருவிகளை புதுப்பித்தல்

  • மரபுவழி இயந்திரம்/கருவிகளை மக்கள் அறியம்படி பரப்புதல்

 

மானாவாரி நிலம் வளர்ச்சித் திட்டம்

  • எடுத்துச் செல்லக் கூடிய நுண்துளி தெளிப்புக் கருவியைக் கொண்ட குழைமைப் பூச்சிட்ட பண்ணைக் குட்டை அமைத்தல்

  • உள்பூச்சிடாத பண்ணைக்குட்டை

  • தடுக்கப்பட்ட கரையிடுதல்

பூமி வளம் மற்றும் (GIS) பொதுத் தகவல் பணி பதிவேடுகளை நிறுவப்படுதல்

  • ஆற்றல் மிக்க பயிர் வளரும் கிராமங்களின் வரைபடங்களை கணிப்பொறி முறைப்படுத்துதல்

அணுகூலம் அளித்தது: 

(மானியம்)             

  • புதிதாக உருவாக்கிய வேளாண் இயந்திரம்/ கருவிகளான சிறு கூட்டு அறுவடை இயந்திரம், பல பயிர் கதிரடிக்குங்கருவி, நெல் நாற்று நடும் கருவி, குழி எடுக்குங்கருவி ஆகியவற்றை வாங்குவதற்கு, விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. மரபுவழி இயந்திரம்/கருவிகளான விசைக்கலப்பை, சுழல் கலப்பை கொத்துக் கலப்பை, மையவிலக்கு சட்டி பலுகு, சட்டிக் கலப்பை ஆகியவற்றை வாங்குவதற்கு இந்திய அரசு 25 சதவிகிதம் மானிய உதவியை வழங்குகிறது.  மானாவாரி நில வளர்ச்சி செயல்களுக்கு 90 சதவிகிதம் மானியமும் மீதமுள்ள 10 சதவிகிதம் விவசாயிகளின் பங்களிப்பும் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

மேலே செல்க

கர்நாடகா


எம்எம்எம்ஏ - வின் கீழ் கரும்பு வளர்ச்சித் திட்டம்


திட்டத்தின் விவரங்கள்

  • மாநிலங்களால் தயாரிக்கப்பட்ட பணித் திட்டங்கள் மூலம் வேளாண்மையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

  • மண்டல முன்னுரிமையின் அடிப்படையில், செயல்களின் வளர்ச்சிக்கும், தொடர்ந்து செயல்படுத்தவும், மாநிலத்திற்கு போதுமான நெளிமையை இத்திட்டம் வழங்குகிறது.

  • கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டில் மொத்தமுள்ள 27 திட்டங்களில் விருப்பமான  திட்டங்களையும் அதன் கூறுகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள போதுமான நெளிமையை மாநிலங்கள் பெற்றுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை பணித்திட்டத்தில் சேர்க்கின்றது.

  • மத்திய அரசின் எந்த ஒரு திட்டங்கள் மற்றும் செயல்முறையிலுள்ள எந்த மாநில அரசு திட்டங்களின் பகுதிகளாலும் அடையமுடியாததை மாநில அரசு நடத்துகிறது.  “புது கண்டுபிடிப்புக்களை” பணித் திட்டத்தில் எளிதில் மாநில அரசு சேர்க்க முடிகின்றது.

  • பெருவாரி மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த ஒதுக்கீட்டில் 10 சதவிகிதத்திற்கு மேல், “புதிய தொடக்கத் திட்டத்திற்கு” செலவினம் செய்யகூடாது.

  • இத்திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவி அமைப்பு விகிதிம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு 90:10 விகிதம் ஆகும். 

  • மத்திய அரசு உதவியில் 80 சதவிகிதம் நன்கொடையாகவும் 20 சதவிகிதம் கடன் தொகையாகவும் வெளியிடுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது
கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

கரும்பு விலை பாக்கித்தொகையை நீக்க கடன் தொகை


திட்டத்தின் விவரங்கள்

        2006-07 மற்றும் 2007-08 ஆம் ஆண்டில் செலுத்திய செலுத்திக் கொண்டிருந்த சுங்கவரியின் அடிப்படையில் வங்கிகள் மூலமாக கடன் தொகையை கரும்பு ஆலயங்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாண்டுகளில் கரும்பு விளையும் பருவங்களில் சர்க்கரை உற்பத்தியில் முழு மானிய வட்டி அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 சதவிகிதம் வரை இருந்தது.  இதில் 5 சதவிகிதம் மானிய வட்டியை மத்திய அரசின் வரவு செலவு திட்ட உதவியின் மூலம் வழங்கப்பட்டது.  மீதமுள்ள 7 சதவிகிதம் மானிய வட்டியை கரும்பு வளர்ச்சி நிதித் திட்டம் மூலம் அளிக்கப்பட்டது.  இத்திட்டத்தால் 2006-07 மற்றும் 2007-08 ஆம் ஆண்டின் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு விலை பாக்கியை கடன் தொகையைப் பயன்படுத்தி செலுத்துவதற்கு உதவியது.


எவ்வாறு விண்ணப்பிப்பது

கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

வற்றாத ஆற்றல் மூலத் திட்டங்கள் அடிப்படையில், மத்திய நிதியுதவித் திட்டம் வழங்கப்படுதல்


திட்டத்தின் விவரங்கள்

வற்றாத ஆற்றல் மூலத்திட்டங்களைப் பயன்படுத்தத் துாண்டி பல்வேறு நிதியுதவிகளை அரசு வழங்குகின்றது.  இவற்றுள் மூலதனம்/மானிய வட்டி, விரைவான விலையிறக்கம் சலுகையுடைய சுங்கம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வரிகள் ஆகியவை உள்ளடங்கும்.  மேலும், புதிய உள்ளமைப்புத் திட்டங்கள், புதுப்பிக்கும் ஆற்றலின் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபம் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.  இவை இரண்டும் முதல் 15 வருட திட்ட செயல்பாட்டில் ஏதாவது 10 வருடங்களுக்கு, செலுத்திய வருமான வரிகள் தனி விலக்காகும்.

எவ்வாறு விண்ணப்பித்தல்

கர்நாடகா செயற்புதுப்பிக்கும் ஆற்றல் வளர்ச்சி வரையறுக்கப்பட்ட குழுமம்,
எண்,19, குயின்ஸ் சாலை,
மேஜர் ஜெனரல், எ.டி லோகநாதன், ஐஎன்ஏ கிராஸ்,
பெங்களூரு - 560 052.
போன்: 080 22282220/21, 22208109, 22207851
தொலை நகல்: 080 22257399.

மேலே செல்க

சர்க்கரை வளர்ச்சி நிதிகளிலிருந்து கடன் தொகை



சர்க்கரை வளர்ச்சி நிதிசட்டம், 1982 நிதிகளை உருவாக்குவதற்கு அளித்ததே சர்க்கரை வளர்ச்சி நிதிச் சட்டம் எனப்படுகிறது.  சர்க்கரை வரி விதி சட்டம் 1982 -ன் கீழ் வசூலித்த சுங்க வரிகளே நிதியின் பிறப்பிடம்.  வசூல் செலவு மற்றும் மத்திய அரசால் பெறப்பட்ட தொகைகளை இச்சட்டத்திற்கு நோக்கமாக விளங்குகிறது.  இப்பண முதலீட்டிலிருந்து கிடைக்கும் அனைத்து வகை வருமானங்களும் இதில் உள்ளடங்கும்.  வழங்கப்பட்ட நிதியில், மற்ற நோக்கங்களுக்கிடையே, நிதி தொகையிலிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு கீழ்வரும் கடன்கள் கொடுக்க முடிகிறது.

  • அனைத்து சர்க்கரை ஆலை அல்லது அலகுகளை நவீன மயமாக்குதலுக்கும், மீண்டும் புதுப்பித்தலுக்கும் கடன் வழங்கப்படுகிறது.  இவ்வாலையத்தில் கரும்பு பிழிதல் செயல் ஆற்றல் 10,000 TCD அளவு வரை விரிவடைவதே நவீனமயமாக்குதலின் பகுதியாகும்.

  • கரும்பு ஆலை இருக்கும் இடத்தில், கரும்பு வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் எல்லாவித திட்டத்திற்கும் கடன் வழங்குதல்

  • வாழ்வுத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு கரும்புச்சக்கை சார்ந்த கூட்டு விசைத் திட்டங்களுக்காக அனைத்து சர்க்கரை ஆலயத்திற்கும் கடன் வழங்கப்படுகிறது.

  • அதன் வாழ்வுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நீரற்ற சாராயம் உற்பத்திக்காக அனைத்து சர்க்கரை ஆலைக்கும் கடன் வழங்கப்படுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

கரும்பு வாங்கும் வரியை வட்டியில்லாத கடனாக மாற்றுதல்


திட்டத்தின் விவரங்கள்:

        உடன் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சாராயம் உற்பத்தி கொண்ட புதிய சர்க்கரை ஆலைகள் மற்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கரும்பு ஆலைகள், வாங்கும் வரியை  தள்ளிப் போடுதலை பயன்படுத்திக் கொள்ளாத ஆலைகளில், கரும்பு வாங்கிய வரியை வட்டியில்லாத கடனாக மாற்றிக் கொள்ளப்படுகிறது.  இம்மாற்றம் வழக்கு முதல் வழக்கு அடிப்படையில் ஆலையின் நிதி நிலையைப் பொருத்து செயல்படுகிறது.  செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்க்கரை ஆலைகளில், உடன் தயாரிப்பு உற்பத்தி உலை, சாராய உற்பத்தி உலைகளை நிருவுகின்றது.  இந்த முதலீட்டை ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளை விரிவுப்படுத்துவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  ஆனால் கூடுதல் திட்டங்களுக்கு செய்த முதலீடூ வரையறுக்கப்பட்டவை.

எவ்வாறு விண்ணப்பிப்பது

கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

அடைப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நீண்ட கால குத்தகை


திட்டத்தின் விவரம்:

பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தனியார் தொழில் முனைவோருக்கு  30 வருட குத்தகைக்காக விடப்படுகிறது.  இதனால் கரும்பு பிழிதல் செயல்திறன் அதிகமாகிறது.


எவ்வாறு விண்ணப்பிப்பது

கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

மேலே செல்க

கரும்பு தொழிற்சாலை சிறப்பு மண்டலங்கள் நிறுவுதல்


திட்டத்தின் விவரங்கள்:
கரும்பு தொழிற்சாலை குறிப்பிட்ட மண்டலங்கள் பிதர், பெல்ஜியம், பகல் காட், ஸிமோகா மற்றும் மன்ட்யா ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

கரும்பு வளர்ச்சி ஆணையாளர் மற்றும் சர்க்கரை உற்பத்தி இயக்குநர்,
கர்நாடகா அரசு,
எண்.32, 6வது தளம், செளகிலி ஹவுஸ்,
கிரசன்ட் ரோடு, பெங்களூரு - 560 001.
போன்: 080 22250248/22262148
தொலை நகல்: 080- 22250248

அடகு வைப்பு கடனுதவித் திட்டம்


அடகு வைப்பு கடனுதவித் திட்டம்:

        மாநிலத்தின் 132 சந்தைகளிலும் 1994-95 ல் இத்திட்டம் பெருமளவு இருந்தது.  வேளாண் பொருட்களை அடகு வைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை அதாவது வேளாண் பொருளின் மதிப்பில் 60 சதவிகிதம் தொகை வரை கடனாக வழங்கப்படுகிறது.  முதல் 30 நாட்களுக்கு வட்டி எதுவும் கிடையாது.  தொடர்ந்து அடுத்த 2 மாதங்களுக்கும் 8 சதவிகிதம் மற்றும் 12.5 சதவிகிதம் வட்டி சாட்டப்படுகிறது.  இத்திட்டம் குறுகிய காலமாக 90 நாட்களுக்கு மட்டுமே செயல்படுகின்றது.

எவ்வாறு விண்ணப்பிப்பது

http://maratavahini.kar.nic.in/apmc_eng/
e_schemes.htm

திட்டத்தின் விவரங்கள்


திட்டத்தின் விவரங்கள்

செயல்முறைக் காட்சி நடத்துவதற்கும், கருவி விதைக் குழுமங்கள் வழங்குவதற்கும் ரூ.4.45 லட்சங்களில் அளிக்கப்படுகிறது.

சுவர்னமித்ரா திட்டம்


இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வறுமாறு

  • உடன் வேளாண் தேவைகளைச் சந்திக்க எளிதாக கடன்தொகை வழங்குதல் திட்டம்.

  • அடகு வைத்தத் தங்க நகைகளுக்காக கடன் உதவி வழங்குதல்

  • வேளாண் ரொக்க நாணயத்திற்கு ஏற்ற வட்டி வீதம்

  • அறுவடை பருவத்தில் திரும்ப செலுத்துவது இணங்குதல்

  • முன்பணமாக ஒரு கிராமிற்கு ரூ.650/- என்ற கணக்கில் கடன் வாங்கும்  1 நபருக்கு அதிகப்பட்சமாக ரூ 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

மேலே செல்க

கேரளா


பயிர் காப்புறுதித் திட்டம்


வழங்குபவர்கள்

மாநில அரசு

நிதி அளிக்கும் அமைப்பு  

100 சதவிகிதம் மாநில அரசால் மட்டும்

துறை 

வேளாண் துறை

விளக்கவுரை

மாநிலங்களிலுள்ள விவசாயிகள், பல்வேறு இயற்கை சீற்றங்களான வறட்சி, வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் உற்பத்திக் குறைவினை சந்திக்கின்றனர்.  கலந்துகொள்ளும் விவசாயிகளிடமிருந்து மாநிலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பயிர் காப்புறுத்தி திட்டத்துடன் பங்களிப்பு ஏற்பட்டு, 1995 ஆம் ஆண்டு வரை பயிரிட்ட முதன்மையான 25 பயிர்களையும் உள்ளடக்குகிறது. தற்போதைய திட்டம் பயிர் காப்புறுதித் திட்டத்தினை மறுமலர்ச்சியடைச் செய்து வாழ்வுத் திறனை மேம்படுத்துவதே நோக்கமாய்க் கொண்டுள்ளது.  மேலும் சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகளின் பிரச்சினைகளை சரி செய்யவும் இத்திட்டம் உதவுகிறது.  இத்திட்டத்தின் முதலீடு ரூ.100 லட்சம் ஆகும்.

நலன் அடைவோர்

இந்த காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளும்

தகுதி

அனைத்து விவசாயிகளும்.

எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது

வேளாண் துறை மற்றும் உள்ளூர் தன்னரசு நிறுவனங்களை தொடர்பு கொள்ளுதல்

தொடங்கப்பட்டது

01 / 04 / 1995

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டங்கள்


வழங்குபவர்கள்

மாநில அரசு

நிதியளிக்கும் அமைப்பு  

100 சதவிகிதம் மாநில அரசால் மட்டும்

துறை  

வேளாண் துறை

விளக்கவுரை

மாநிலத்தில் உணவுப் பயிர்கள் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் மொத்தமுள்ள தரமான விதைகளில், அதிக மகசூல் தரும் இரகங்களின் விதைகள் பெருகியுள்ளன.  இந்த அதிக மகசூல் ஈட்டும் இரகங்கள் பல்வேறு பூச்சிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றன.  இதற்காக கேரள அரசின் வேளாண்மைத் துறை  ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தின் முதன்மையான பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை முழு முயற்சியுடன் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.  இத்திட்டத்தின் முக்கிய பலமானது, நீண்ட கால உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள்.  இத்திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு.

  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளின் மூலம் பயிர்களைத் தாங்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை பொருளாதார மாறுநிலை அளவிற்குக் கீழ் வைத்தல்

  • பூச்சி உயிர்த் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு இடைவிடாத பூச்சி கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுதலை மேற்கொள்ள வேண்டும்.

  • பயிர்களுக்கு தீவிர (கொடிய) தீமைகளை விளைவிக்கும் முதன்மையான பூச்சிகள் மற்றும் நோய்களைப் பற்றி  விவசாயிகளிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது.  மேலும் தடுப்பதற்கான முறைகளை எடுத்துரைப்பதும் இத்திட்டத்தின் நோக்கம்.  இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.50.00 லட்சம் ஆகும்.

சிறு பண்ணை எந்திரமயமாக்குதல்


திட்டத்தின் பெயர்

சிறுபண்ணை எந்திரமயமாக்குதல்

வழங்குவது

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை

விளக்கவுரை 

50 லட்சம் மொத்த மதிப்பீடு கொண்ட இத்திட்டத்தின் முதன்மை குறிக்கோளானது இறைவை நில வேளாண்மைக் கேற்ற இயந்திரங்களை உருவாக்குவதற்கு சிறப்பு பங்களிப்பதேயாகும். மேலும் ஏற்ற இறக்கமான சரிவு நிலத்திற்கு ஏற்ற சாதனங்களை இறக்குமதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர இத்திட்டத்தின் முதன்மை குறிக்கோளானது மாநிலத்தில் எந்திரமயமாக்குதல் திட்டத்தினை துவங்குவதேயாகும்.

விளக்கம்

புது டிராக்டர் வாங்குதல்/2வது முறை புது டிராக்டர் வாங்குதல்/டிராக்டர் மறுபுதுபித்தல்/சரிசெய்தல்/துணைப் பொருட்களை மாற்றி பொருத்துதல்/சிறு டிராக்டர் திட்டம்/பவர் டில்லர்/கதிரடிக்குங்கருவி விசைத்தெளிப்பான் ஆகியவற்றைப் பெறுவதற்காக நன்மதிப்பிணை வழங்கவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

தகுதி

அனைத்து விவசாயிகளும்

எவ்வாறு நலனைப் பெறுவது

வேளாண்மைத்துறை மற்றும் உள்ளாட்சி தனி அரசு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுதல்

துவங்கியது

01.04.2009

மஹிளா கிசான் யோஜனா


தாழ்த்தப்பட்ட இனவகையைச் சார்ந்த பெண்கள், வேளாண்மை மற்றும் துணைச் செயல்களில் ஈடுபட்டு தங்களின் குடும்பத் தேவைக் கேற்ற வருமானத்தை பெறுவதற்காக இத்திட்டம் மஹிலா கிசான் யோஜனா பெரிதும் உதவுகின்றது. இந்த உதவியானது சொந்தமாக குறைந்த அளவு அல்லது இறுதிநிலை நிலம் உடையவர்களுக்கும் அதில் அனைத்து வகையான வேளாண்மை செயல்களை மேற்கொள்வதற்கான தகுதியுடைய நிலங்களுக்கும் இவ்வுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் அதிகபட்ச மதிப்பு ரூ.50,000/- மற்றும் அதன் வட்டி 5 சதவிகிதமாகும். இந்தக் கடன் 5 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

மேலே செல்க

வேளாண்மைத் துறையின் கீழ் வேளாண்மைப் பண்ணைகளை நவீனமயமாக்குதல் திட்டம்


திட்டத்தின் பெயர்

: வேளாண்மைத் துறையின் கீழ் வேளாண்மைப் பண்ணைகளை நவீனமயமாக்குதல் திட்டம்.

வழங்குவது

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை

விளக்கவுரை 

வேளாண்மைத்துறையின் கீழ் உள்ள அரசு பண்ணைகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இந்த அரசு பண்ணைகள் தான் விவசாயிகளுக்கான பல்வேறு பயிர்களின் நடவுப் பொருட்களை செய்து வழங்குவதில் முதன்மை முகமையாகும். மேலும் அரசுகள் பண்ணைத் துறைகளின் மூலம் நடவுப்பொருட்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. வேளாண்மைத்துறையின் கீழ் உள்ள பண்ணைத் துறைகளை நவீனப்படுத்துதல் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். எனவே தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு மட்டுமில்லாமல், நவீன வேளாண்மைத் தொழிற்நுட்பங்களை செயல்முறை விளக்கமாக அளிக்கும் மையங்களாகவும் செயல்படுகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பண்ணைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் செளகரியமான உள்ளமைப்பு வசதிகளுடைய பசுமையகம், பாசனவசதி, திசு வளர்ப்பு, விதைப்பண்படுத்துதல் மற்றும் சேமிப்பு வசதிகளையும் அளிக்கின்றது. இதன் முதலீடானது, புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட நடவு/விதைப்பொருட்களை உற்பத்தி செய்து மேலும் அதன் உள்ளமைப்பு வசதிகளின் கீழ் அதன் பரப்பளவை அதிகப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகின்றது, அத்திட்டத்தின் மொத்த முதலீடு ரு.1,25,000லட்சங்கள் ஆகும்.

எவ்வாறு நலனைப் பெறுவது

வேளாண்மைத்துறை மற்றும் தகுந்த ஊராட்சிகளையும் தொடர்பு கொள்ளுதல்

மாநில அரசின் கரும்புத் திட்டம்


திருத்தப்பட்ட கரும்பு விதை உற்பத்தி மற்றும் வழங்கும் திட்டம்


இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வயலில், ஆதார விதை மற்றும் முதன்மை விதை நாற்றங்கால்களை விதைத்தல்.
குறிக்கோள் ;

  • விவசாயிகளுக்கு திருத்திய  விதைகளை வழங்குதல்

  • ஆதார நாற்றங்கால் இத்திட்டத்தின் கீழ் கரும்பு ஆராய்ச்சி மையங்களிலிருந்து கரும்பு கரு விதைகளை பெற்ற விவசாயிகளுக்கு வழங்குதல்

    மானியம் ; பொது இனத்தவருக்கு ரூ.500/- தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ரூ.1000/.

                   

மண் மற்றும் கரணை நேர்த்தித் திட்டம்


இத்திட்டத்தின் கீழ் மண் மற்றும் கரணை நேர்த்தி செய்யும் பூச்சிக் கொல்லிகளை விவசாயிகளுக்கு மானிய விலைகளில் வழங்குதல்
மானியம் : அரசிடமிருந்து 12.50 சதவிகிதம்
கரும்பு ஆலையிடமிருந்து 27.50 சதவிகிதம்
கரும்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து 10.00 சதவிகிதம்

கட்டைப்பயிர் மேலாண்மைத்திட்டம்


இத்திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு  இரசாயணங்கள்/யூரியாவை விவசாயிகளின் கரும்பு வயல்களில் தெளிக்கின்றன. கீழ்வரும் மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன
மானியம் : அரசிடமிருந்து 12.50 சதவிகிதம் கரும்பு ஆலையிடமிடருந்து 27.50 சதவிகிதம்
மொத்தம் 50.00 சதவிகிதம்

மேலே செல்க

மத்திய திட்டங்கள்


கரும்பு சார்ந்த பயிர்த்திட்டத்திற்கான நீடித்த வளர்ச்சித் திட்டம்


திட்டத்தின் பெயர்

கரும்பு சார்ந்த பயிர்த் திட்டத்திற்கான நிலைக்கும் வளர்ச்சித் திட்டம்

வழங்குவது

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

நன்மையுடையவர்கள்

தனிநபர், குடும்பம், சமுதாயம், பெண்கள், மற்றவர்கள்

விளக்கவுரை 

இத்திட்டத்தின் கீழ் செயல்படும் முக்கிய வளர்ச்சித் திட்டக்கூறுகள் பின்வருமாறு 1. வயல் செயல்முறை விளக்கம், 2. பயிற்சி, 3. விவசாயிகள் வயல் வகுப்பு, 4. பண்ணை கருவிகள், 5 விதைப் பெருக்கம், 6. சொட்டு நீர் உள்ளமைப்பு

விளக்கம்

அத்திட்டத்தின் கீழ் பல்வேறு கூறுகளுக்கான அதாவது வேளாண்மைக் கருவிகளான பயிர்பாதுகாப்புப் கருவிகள், திருந்திய பண்ணை சாதனங்கள் ஆகியவற்றிற்காக மானியம் வாங்கப்படுகின்றது. மேலம் தரமான சான்று விதைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கத்திற்காகவும் மானியம் வழங்கப்படுகின்றது. ஒரு விவசாயிக்கு ஒரு செயலுக்கான மானியம் மொத்த மதிப்பில் 25 சதவிகிதத்திற்கு மிகாமலும் அல்லது திட்டங்களுக்கு கீழ் உள்ள தற்போதைய மானிய அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதி

அனைத்து இனவகை விவசாயிகளும்

எவ்வாறு நலனைப் பெறுவது

மாவட்ட விவசாய அதிகாரியின் பரிந்துரையின் மூலம் நலன் பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன

கரும்பு சார்ந்த பயிர் சாகுபடித் திட்டத்தின் நிலைக்கும் வளர்ச்சி திட்டம், வேளாண்மையின் பெரு மேலாண்மைத் திட்டம்


திட்டத்தின் பெயர்

கரும்பு சார்ந்த பயிர் சாகுபடித் திட்டத்தின் நிலைக்கும் வளர்ச்சித் திட்டம் வேளாண்மையின் பெரு மேலாண்மைத திட்டம்.

வழங்குவது

மத்திய மற்றும் மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேணாண்மைத்துறை, ஹரியானா

விளக்கவுரை 

சர்க்கரை ஆலைகளின் (மாநிலத்தின் 15 சர்க்கரை ஆலைகளில்) திட்டமிட்ட பரப்புகளில் கரும்பு வளர்ச்சியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். கரும்புப்பயிரின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்காக திருத்தப்பட்ட இரகத்தை பாரம்பரிய இரகங்களைக் கொண்டு மாற்றுதல். மாநிலத்தின் கரும்பு வளர்ச்சியில் தளர்த்தியான நிலை இருப்பின், கரும்பு ஆலைகளில் கரும்பு சாறு எடுக்கும் திறன் குறைவாகப் பயன்படுத்தப்பட்டு இதனால் சர்க்கரை உற்பத்தியின் விலை அதிகரிக்கிறது.

தகுதி

அனைத்து விவசாயிகளும் திட்டத்தின் வரம்புக் காலம்

துவங்கியது

30.09.2000

கரும்பு வளர்ச்சித் திட்டம்


திட்டத்தின் பெயர்

கரும்பு வளர்ச்சித் திட்டம்

வழங்குவது

மத்திய அரசு

நிதி அமைப்பு

90 சதவிகிதம் மத்திய அரசும், 10 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பு உள்ளது. வேளாண்மை துறையின் கீழ் 2006-07 ஆம் ஆண்டிற்கான வேலை திட்டம் ரூ.13311.00 லட்சத்திற்கு செலுத்தப்பட்டது. இதில் 25 சதவிகிதம் கே.பி.கே மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. இது தவிர, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடி இன மக்கள் மற்றும் பெண் விவசாயிகள் ஆகியவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை

விளக்கம்

விவசாயிகள் வயல் வகுப்பில் முன்பே பயிற்சியடைந்த சிறந்த விவசாயிகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் பயிற்சியாளர்கள் உருவாக்குவதற்காகவே இந்த பயிற்சியாகும். முன்பே புதிய தொழிற்நுட்பங்களை செயல்படுத்தும் விவசாயிகளின் ஒழுங்குணர்வு செம்மைபடுத்துவது மட்டும் அல்லாமல் மற்ற விவசாயிகளின் நம்பிக்கை அளவை உயர்த்துவதும் இதன் அர்த்தமுள்ள மற்றும் நிலையான பொது நலன் மற்றும் தனியார் கூட்டமைப்புகளுக்கும் உதவுகின்றது.

துவங்கியது

24.07.2007

மேலே செல்க

தேசிய வேளாண்மை காப்புறுதி திட்டம்


நலன் பெறுபவர்கள்

விவசாயிகள் தங்களின்  இருப்புகளைப் பொறுத்து அல்லாமல், கடன் பெற்று மற்றும் கடன்பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பயன்படுகிறது.

நோக்கங்கள்/வசதிகள்

  • இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலால், ஏதேனும் குறிப்பிட்ட பயிர்த் தோல்வி ஏற்படும் தருணத்தில் விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டம் மற்றும் நிதியுதவியை இத்திட்டம் வழங்குகிறது.

  • முன்னேற்றமுள்ள விவசாய செயல் முறைகளைப் புதுப்பிக்கவும், அதிக மதிப்புள்ள இடுபொருட்கள் மற்றும் வேளாண்மையில் அதிக தொழிற்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் விவசாயிகளை உற்சாகப்படுத்துகின்றன.

  • குறிப்பாக அழிவு (ஆபத்து) காலங்களில் பண்ணை வருமானத்தை நிலையாகப் பெறுவதற்கு உதவுகின்றது.

  • இந்திய அரசு பொதுக்காப்பீட்டுக் கழகம்  ஒரு செயல்படுத்தும் முகமையாகும்.

  • காப்புறுதி செய்யப்பட்ட பரப்பின் மாறுநிலை மகசூலின் மதிப்பளவிற்கு, காப்புறுதி செய்யப்பட்ட தொகை அதிகமாகும்.

  • சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் மதிப்பு விளிம்பில் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகின்றது. இந்த மானியம் 5 வருட காலத்திற்கு வரையறுக்கப்பட்டவை.

கரும்பு சாகுபடிக்கான பொதுவான திட்டங்கள்


வயல் செய்முறை விளக்கம்


(75: 25) இலக்கைப் பொருத்து, விவசாயிகளின் வயலில் வயல் செயல்முறை விளக்கங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு செயல்முறை விளக்கமும் 0.5 ஏக்டர் வயல் அளவில் செய்யப்படும்.
மானியம்  : ஒரு செயல்முறை விளக்கத்திற்கு ரூ.5000/.
நோக்கம் : அறிவியல் பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் மிகவும் ஏற்ற வேளாண்மை குறித்த தகவல்களை செயல்படுத்தி பிரபலமாக்குதல். அதாவது இரகம் தேர்வு செய்தல் உர மேலாண்மை பாசனம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றின் தகவல்கள் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தல்.

விதைப் பெருக்கம்


விதைப் பெருக்கம்: முன்னேற்றமுள்ள விவசாயிகளின் வயலில் கரும்பு இரகங்களை பெருக்குதல்
மானியம்:   பயிர்சாகுபடி செலவில் 10 சதவிகிதம் (அ) எக்டருக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது.
முன் இன்றியமையா நபர்கள்

  • கரும்பு கூட்டுறவு சங்கம்/கரும்பு விதை கூட்டுறவுக் குழு ஆகியவற்றின் நபர்களாக நாற்றங்கால் வளர்ப்பாளர்கள் இருப்பது அவசியம்.

  • உள்ளகக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட இரகங்களை விதைப் பெருக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.

  • நவீன வேளாண்மை செயல்முறைகள் பற்றிய போதுமான அறிவுத்திறன் கொண்ட முன்னேற்றமுள்ள விவசாயிகள் தான் நாற்றங்காள் வளர்ப்பாளராக இருக்க வேண்டும்.

மேலே செல்க

ஈரம் மற்றம் வெப்பக் காற்று சிகிச்சை


கரும்பு/ஆலைகள்/விதை மாநகராட்சிகள்/கரும்பு ஆராய்ச்சி மையங்களில், ஈரக்காற்று மற்றும் வெப்பக்காற்று சிகிச்சை உற்பத்தி உலை அமைத்தல்
மானியம்: ஒரு ஈரம் மற்றும் வெப்பக் காற்று சிகிச்சை உற்பத்தி உலை அமைப்பதற்கு ரூ.2.00 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
பயன்பாடு: சிகிச்சை செய்யப்பட்ட விதைகள் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் சிறப்பாக மற்றும் விரைவான முளைப்பினை ஏற்படுத்துகிறது.

வேளாண்மைக் கருவிகளை வழங்குதல்


மானிய/சலுகை விலைகளில் வேளாண்க் கருவிகளை கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன

மானியம் :

  • மனித ஆற்றலால் இயக்கப்படும் கருவிகள். கருவியின் மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.600/-

  • மாடுகளால் இயங்கப்படும் கருவிகள். கருவிகளின் மொத்த மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.1500/-

  • டிராக்டரால் இயக்கப்படும் கருவிகள். கருவிகளின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ.10,000/-

இத்திட்டத்தில் இந்திய தர நிர்ணயித்தல் நிறுவனத்தின் முத்திரையுடன் மட்டுமே வேளாண்மைக் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலே செல்க

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்