முதல் பக்கம் தொடர்புக்கு  


வேர்ப்புழு

தாக்குதலின் அறிகுறிகள் :

  • புழுக்கள் வேர்களை உண்ணும்.
  • பயிர் முழுவதும் மஞ்சள் நிறமாகி சிறிது சிறிதாக வாடி விடும்.
  • வளர்ச்சி குன்றிய பயிர்கள்.
  • வேர் இழப்பு ஏற்படுதல்.
வேர்ப்புழு ஏற்படுத்திய சேதம் வேர்ப்புழு ஏற்படுத்திய சேதம்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

      அறிவியல் பெயர் - லியூகோபோலிஸ் இர்ரோரேடா

  • முட்டை :
    முட்டைகள் முத்து போன்று வெள்ளை நிறத்தில், நீளமாக (அ) முட்டை வடிவமாகக் காணப்படும்.

  • புழு :
    புழு பாலாடை போன்ற வெள்ளை நிறத்தில், ஒரு ஜோடி கெட்டியான கீழ்தாடைகளைக் கொண்டிருக்கும். அதன் மார்புப்பகுதியில் மூன்று இணையான தெளிவான கால்களைக் கொண்டுள்ளது. அதன் உடல் சுருண்டு ‘சி’ வடிவமாக இருக்கும்.

  • கூட்டுப்புழு :
    கூட்டுப்புழு அடர்பழுப்பு நிறமாக இருக்கும்.

  • முதிர்பூச்சி :
    வண்டுகள் கருப்பாகவோ அல்லது கரும்பழுப்பு நிறத்திலோ காணப்படும். அதன் முன்னோட்டம் பக்கவாட்டில் உள்ள ஓரங்களைத் தவிர மற்ற பகுதிகள் விளம்புகள் இல்லாமல் காணப்படும். ஆண் பூச்சிகள் நீளமான உணர்கொம்புகளைக் கொண்டிருக்கும். ஆனால் பெண் பூச்சியில் அவை சிறியதாகக் காணப்படும். மேலும் பெண் பூச்சிகள் அகன்ற குதிமுள்களுடன் உருண்டை முனையையும், ஆண் பூச்சி மெலிந்த மற்றும் கூர்மையான குதிமுள்களையும் கொண்டிருக்கும்.
   
வேர்ப்புழு வேர்ப்புழுவின் வண்டு
 
வேர்ப்புழுவின் வண்டு  

மேலே செல்க

மேலாண்மை :

  • குளவிகள் புழு ஒட்டுண்ணியாக செயல்பட்டு புழுக்களை அழிக்கின்றன.
  • தரைவண்டுகள், பறவைகள், சூரினத் தேரை, வெளவால்கள் மற்றும் நாரைகள் புழுக்கள் மற்றும் முதிர் பூச்சிகளை (வண்டுகள்) உட்கொள்கின்றன.
  • புழுக்கள் பூசண நோய்க்காரணிகளாலும் தாக்கப்படுகின்றன.
தரை வண்டுகள் குளவிகள்
மேலே செல்க