முதல் பக்கம் தொடர்புக்கு  

நெல் முள் வண்டு

தாக்குதலின் அறிகுறிகள் :

  • புழுக்கள் இலைகளைத் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காணலாம்.
  • இலைகளின் மேற்புறத்தில் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்.
  • இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளைநிறத் திட்டுக்கள் தோன்றும்.
  • சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி உதிர்ந்துவிடும்.
  • தீவிரத் தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சிதரும்.

தாக்குதலின் தன்மை :
  • புழுக்கள் இலைத் தாள்களை துளையிட்டுச் சென்று இலை நரம்புக்களுக்கிடைய இருக்கும் இலைத் திசுக்களை உட்கொள்கிறது.
  • முதிர் பூச்சிகள் இளம் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்கின்றன.
  • பொதுவாக இளம் பருவத்தில் உள்ள பயிர்கள் அதிகமாய் தாக்கப்படுகின்றன.

   
வண்டு புழுக்களால் சுரண்டப்பட்ட இலைகள் இலைகளின் மீது வண்டுகள் சுரண்டி கொண்டிருக்கும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

         அறிவியல் பெயர் - டைகிளாடிஸ்பா ஆர்மிஜிரா

  • முட்டை :
    பொதுவாக இலையின் நுனியை நோக்கி இளம் இலைகளின் சிறு பிளவு/வெடிப்புகளுக்குள் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.

  • புழு :
    புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில், தட்டையாகக் காணப்படும். இலைகளை துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப்புழுவாகிறது.

  • முதிர்பூச்சி :
    வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீல நிறம் அல்லது கருப்பு நிறமான உடலுடன், உடல் முழுவதும் முள்ளுடன் 1/6” நீளமும், 1/8” அகலத்துடனும் காணப்படும்.
புழு நெல் முள் வண்டு
நெல் முள் வண்டு நெல் முள் வண்டு

மேலே செல்க

மேலாண்மை:

  • வயலில் அதிக உரமளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • நெருக்கமாக நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்.
  • கொப்புளம் போன்ற துளைத்த இலை நுனிகளை அழிக்க வேண்டும்.
  • வண்டுகளை கையால்(அ)கைவலைகள் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும்.
  • பூச்சிகள் முட்டையிடுதலைத் தடுப்பதற்காக, தண்டின் நுனிப்பகுதியினை வெட்டிவிட வேண்டும்.
  • தண்டுகளை கத்தரித்து, மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும். இதனால் புழுக்களின் எண்ணிக்கையை 75-92% குறைக்கலாம்.
  • கூர்மூக்கு நாவாய்ப்பூச்சிகள் வளர்ச்சியடைந்த வண்டுகளை உண்ணும்.
  • மீத்தைல் பாரத்தியான் 0.05 % (அ) குயினைல்பாஸ் 0.05 % (அ) @ 1000 மிலி/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
கை வலை கொண்டு வண்டுகளை சேகரித்து அழிக்கவும் தாக்கப்பட்ட இலைநுனிகளை அகற்றி அழிக்கவும்
முதிர்வண்டை தின்னும் கூர்மூக்கு நாவாய்ப்பூச்சி மீத்தைல் பாரத்தியான் தெளிக்கவும்
மேலே செல்க