கல்வி ஊடக மையமானது  சென்னை தூர்தசனுக்காக செய்தி வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் விரிவாக்க  பணியாளர்கள் பயனடையும் வகையில், வேளாண்மையின் வெவ்வேறு பாடங்களில் 50க்கும் மேற்பட்ட  வீடியோக்களை தயாரித்துள்ளது. 
               நோக்கங்கள்: 
               
                 - தொலைக்காட்சி அலை வரிசைகளில்       ஒளிபரப்ப வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளில் வீடியோக்கள் தயாரித்தல்.
 
                 - விவசாயிகள் மற்றும் விரிவாக்க       பணியாளர்களின் பயனூக்க வேளாண் வீடியோ பாடங்கள் மற்றும் வீடியோ சிடி பாடங்கள்       தயாரித்தல்
 
                 - அரசு துறைகள் இதர நிறுவனங்கள்       மற்றவர்களுக்காக வீடியோ படக்காட்சிகள் தயாரித்தல்
 
                 - தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி,       அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஒளிபரப்ப வேளாண்மை மற்றும் அதை சார்ந்த       பகுதிகளில் வானொலி பாடங்களை தயாரித்தல்.
 
                 - வேளாண்மை மற்றும் அதை சார்ந்த       துறைகளில் ஒலிநாடாக்களை தயாரித்தல்.
 
                               செயல்பாடுகள் 
               
                 - வேளாண்மை மற்றும் அதை சார்ந்த       துறைகளில் வீடியோ மற்றும் வானொலி ஒலிபரப்பிற்கான ஒளி - ஒலி நாடாக்களை தயாரித்தல்.
 
                 - வீடியோ படக்காட்சி, வீடியோ       பாடங்கள், வீடியோ சிடி பாடங்கள் மற்றும் ஒலி நாடாக்கள் பாடங்கள் போன்றவற்றை       தயாரித்தல்.
 
                 - இதர துறைகள் மற்றும் வெளி       நிறுவனங்களுக்காக வீடியோ படக்காட்சி தயாரித்தல்
 
                 - பல்கலைக்கழகத்தின் முக்கிய       செயல்பாடுகளை வீடியோ படம் எடுத்தல்.
 
                
               வசதிகள்: 
            கியான் வாணி வானொலி, ப்பா வானொலி மற்றும்  வானொலி பதிவு நிலையத்தின் வாயிலாக, அறிஞர்கள் பேச்சுக்கள், விவசாயின் வெற்றிக் கதை  போன்றவற்றை பதிவு செய்தல். ஒலி நாடா பாடங்கள் மற்றும் வீடியோ பாடத்திற்கான ஒலிபதிவு  அனைத்தும் இங்கு தயாரிக்கப்படுகிறது. 
            இங்குள்ள நிலையத்தில் நவீன ஒளி ஒலிப்பதிவு  கருவிகள் உள்ளன. 
               வீடியோ சி.டி பாடத்தொகுப்பு  விவரங்கள்  |