| நீர்த்தேக்க மீன்வளம்
 இந்தியாவில் ஆறு, நீர்த்தேக்கம், ஏரி மற்றும் குளங்கள் மூலம் நன்னீர் வளம் பரவியுள்ளது. இந்திய நீர்த்தேக்கங்கள் வெப்ப மண்டலத்தில் இருந்தாலும் மீன்களை உற்பத்தி செய்ய அதிக உற்பத்தித்திறன் மற்றும் கொள்ளளவு கொண்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மூலம் ஒரு வருடத்திற்கு 29.7கி/ஹெ. மீன் உற்பத்தியாகிறது. நீர்தேக்க மீன்வளத்தில் முதலில் மீன்களை இருப்புச் செய்து அதன்பின் மீன்களை பிடிப்பார்கள். நம் நாட்டில் 975 நீர்தேக்கங்கள் உள்ளன. அவைகளின் மொத்த பரப்பளவு 3.15 கோடி ஹெக்டர்.
 
 ஆற்று நீர் எப்போதும் ஒடிக்கொண்டே இருக்கும். இதற்கு நடுவில் அணைகளை கட்டுவதால் நீர்த்தேக்கங்களாக மாறுகின்றன. நீரோட்டம் மற்றும் மழை நீரினால் நீர்த்தேக்கங்களில் நீர் ஆதிகரிக்கிறது. நீரைத் தேக்கி வைப்பதன் மூலம் அடிமட்டத்திலுள்ள சிறிய மற்றும் பெரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீன்களுக்கு உணவாக பயன்படுகிறது.
 | 
        
          | நீர்த்தேக்க சூழ்நிலை
 
 ஆற்று சூழ்நிலை இப்போது நீர்த்தேக்க சூழ்நிலையாக மாறியுள்ளது. நீர்த்தேக்கங்களில், ஓடும் நீர் அணைக்கு வந்தடைந்து தேங்கும் நீராக மாறுகிறது. இது பல்வேறு வகையான மீன்வளத்துக்கு உதவுகிறது. அதில் முக்கியமான ஒன்று நீர்த்தேக்க மீன்வளம். நீர்த்தேக்கத்திற்கு  தனி சிறப்பு உண்டு. இது ஏரிகளில் வேறுபட்டு காணப்படும். ஆற்று நீர் மாறி தேக்க நீராக மாறும் போது அதில் வருக்கின்ற மிதவை தாவரங்களும் இடம் மாறுகிறது. கலங்கிய நிலையில் உள்ள நீரைத் தேக்கி வைக்கும் போது அடிமட்டத்தில் அனைத்து கலங்களும் படிந்துவிடுகிறது. இது மீன்களுக்கு உபயோகமாக அமைந்துள்ளது.
 
 இடம் மாறும் மீன்கள் அதிகமாக நீரின் மேல் மட்டத்தில் காணப்படும். இரையை தேடி உண்பதற்காக மீன்கள் மேலே வரும். நீரைத் தேக்கி வைப்பதினால் அழுக்கு மற்றும் சேறு அடிமட்டத்தில் படிந்துவிடுகிறது. இதனால் அடிமட்டத்தில் உள்ள உயிரினங்களுக்கு பின் விளைவுகள் ஏற்படுகிறது.
 | 
        
          | இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள்
 
              
                
                  | அணையின் பெயர்  
 | மாநிலம்  | நதி/ஆறு  |  
                  | ரிஹன்ட்  | உத்திரபிரதேசம்  | ரின்ட்(கங்கை) |  
                  | தன்ராவுள்  | உத்திரபிரதேசம்  | பாகர்  |  
                  | சர்தசாகர்  | உத்திரபிரதேசம்  | சுக்கசந்தா(கங்கை) |  
                  | தோரா  | உத்திரபிரதேசம்  | தோரா  |  
                  | மட்டில்லா  | உத்திரபிரதேசம்  | கங்கை  |  
                  | கோவிந்    சாகர்  | பஞ்சரப்    மற்றும் ஹிமாச்சலம்  | சட்லஜ்  |  
                  | பியிஸ்  | பஞ்சரப்    மற்றும் ஹிமாச்சலம்  | பியிஸ்  |  
                  | ஹிராக்கும்  | ஒரிசா  | மஹாநதி  |  
                  | ரானா    பிரதாப் சாகர்  | ராஜஸ்தான்  | - |  
                  | மைதூன்  | பீகார்  | பரகர் (கங்கை) |  
                  | பஞ்சட்  | பீகார்  | தாமோதர் (கங்கை) |  
                  | காந்தி    சாகர்  | மத்திய    பிரதேசம்  | சாம்பல்(கங்கை) |  
                  | மேட்டூர்  | தமிழ்நாடு  | காவேரி  |  
                  | பவானி    சாகர்  | தமிழ்நாடு  | பவானி  |  
                  | நாகார்ஜன    சாகர்  | ஆந்திரா  | கிருஷ்ணா  |  
                  | நிசாம்    சாகர்  | ஆந்திரா  | மெளனிகா  |  
                  | துங்கபத்திரா  | கர்நாடகா  | துங்கபத்திரா (கிருஷ்ணா) |  
                  | கிருஷ்ணராஜ    சாகர்  | கர்நாடகா  | காவேரி  |  
                  | நெய்யாறு  | கேரளா  | நெய்யாறு  |  
                  | உகை  | குஜராத்  | - |  | 
        
          | தற்போதுள்ள மீன் வளர்ப்புக்கு ஏற்ற நீர்த்தேக்கங்கள் (ஆந்திரா)
 
              
                
                  | நாகார்ஜின சாகர் | - | குண்டூர் மற்றும் நால்கோண்டா மாவட்டம் |  
                  | தன்டவா | - | விசாகப்பட்டினம் |  
                  | தம்மீலி | - | மேற்கு கோதாவரி |  
                  | அறனியார் மற்றும் பகுடா | - | சித்தூர் |  
                  | மொபட் | - | பிரகாசம் |  
                  | கனிகிரி மற்றும் துவுரு | - | நெல்லூர் |  
                  | சோமசில்லா | - | நெல்லூர் மற்றும் குடப்பா |  
                  | சைலம் | - | கர்தூல் |  
                  | மூசி மற்றும் தின்டி | - | நல்குண்டா |  
                  | மஞ்சிரா மற்றும் சிங்கர் | - | மிதக் |  
                  | வைரா,  கின்னிராசனி, பலையர் | - | காம்மம் |  
                  | ராம சாகர் | - | அதிலாபாத் மற்றும் நிசாபாத் |  
                  | கதம் மற்றும் சத்னலா | - | அதிலாபாத் |  
                  | கீழ்மன மற்றும் மேல்மனயார் | - | கரிம்நகர் |  
                  | நிசாம் சாகர் | - | நிசாமாபாத் |  
                  | பாகல் | - | வாராங்கல் |    | 
        
          | நீர்த்தேக்கங்களின் வகைகள்
 சில வல்லுனர்கள் நீர்த்தேக்கங்களை நிறைய வகைகளாக நீர்த்தேக்க பரப்பளவை பொருத்து பிரித்துள்ளனர்.
 
 | 
        
          | மெளஹந்தி (1984)
 
 மூன்று வகையான நீர்த்தேக்கங்கள்:
 | 
        
          | 
            
              
                | சிறிய வகை நீர்த்தேக்கங்கள் | - | நீரின் பரப்பளவு 40ஹெ வரை இருக்கும். |  
                | நடுத்தரமான நீர்த்தேக்கங்கள் | - | நீரின் பரப்பளவு 400ஹெ வரை இருக்க வேண்டும். |  
                | பெரிய வகை நீர்த்தேக்கங்கள் | - | நீரின் பரப்பளவு அதிகமாக 400ஹெ இருக்க வேண்டும். |  | 
        
          | பதக் (1990) அவர் நீர்த்தேக்கங்களை மூன்று வகையாக பிரித்துள்ளார்.
 
              
                
                  | பெரிய நீர்த்தேக்கங்கள் | - | இதனுடைய பரப்பளவு 5000ஹெ. மற்றும் அதர்க்கு மேல் |  
                  | நடுத்தரமான நீர்த்தேக்கங்கள் | - | பரப்பளவு 1000-5000ஹெ உள் இருக்க வேண்டும். |  
                  | சிறிய நீர்த்தேக்கங்கள் | - | 1000ஹெக்கு குறைவான பரப்பளவு இருக்க வேண்டும். |  
                  | நீர்த்தேக்கங்களை நான்கு வகைளாக பிரிக்கலாம் என்று அகர்வால் (1990) கூறியுள்ளார். |  
                  | பெரிய நீர்த்தேக்கங்கள் | - | பரப்பளவு 1000-5000ஹெ. இருக்க வேண்டும். |  
                  | நடுத்தரமான நீர்த்தேக்கங்கள் | - | பரப்பளவு 100-1000ஹெ. இருக்க வேண்டும். |  
                  | சிறிய நீர்த்தேக்கங்கள் | - | பரப்பளவு 10-100ஹெ.க்குள் இருக்க வேண்டும் |  
                  | மிகவும் சிறிய நீர்த்தேக்கங்கள் | - | பரப்பளவு 10ஹெ.க்கு குறைவாக இருக்க வேண்டும் |    | 
        
          | ஜிங்ரான் மற்றும் சுகுனன் (1990) மூன்று வகையான நீர்த்தேக்கங்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர். | 
        
          | 
            
              | பெரிய நீர்த்தேக்கங்கள் | - | நீரின் பரப்பளவு 1000ஹெ.க்குள் இருக்க வேண்டும். |  
              | நடுத்தரமான நீர்த்தேக்கங்கள்  | - | பரப்பளவு 500-1000ஹெ.க்குள் இருக்க வேண்டும். |  
              | சிறிய நீர்த்தேக்கங்கள்  | - | பரப்பளவு 500ஹெ.க்குள் இருக்க வேண்டும்  |  |