மீன் வளம் :: இடம்பெயர்தல்

மீன்களின் இடம்பெயர்தல்

நிறைய வகையான மீன்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கும். மீன்களின் நெடுந்தூர பயணம் ஒரு மீட்டர் முதல் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும். மீன்கள் எப்பொழுதும் உணவுக்காகவும் மற்றும் இனப்பொருக்கத் தேவைக்காக இடம் மாறும்.

வகைபடுதல்

  1. போடாமொட்ரொமயுஸ்: (ஓடும் ஆறு / நதி) மீன்கள் நன்னீரில் மட்டும் இடம்பெயர்தல்
  2. ஓசன்ட்ரொமயுஸ்: (கடல்) மீன்கள் உவர்நீரில் மட்டும் இடம்மாறுதல்
  3. டையாட்ஹாமயுஸ்: (நடுநிலை) மீன்கள் நன்னீர் மற்றும் உவர்நீரில் இடம்மாறுதல்
  • அனாட்ரொமயுஸ்: மீன்கள் கடலில் வாழும் ஆனால் நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும்
  • கட்டாட்ரொமயுஸ்: மீன்கள் நன்னீரில் வாழும், ஆனால் உவர்நீரில் இனப்பெருக்கம் செய்யும்
  • ஏம்பிட்ரொமயுஸ்: மீன்கள் நன்னீர் மற்றும் உவர் நீரில் மாறி வாமும். ஆனால் இனப்பெருக்கம் செய்யாது
உணவு தேடும் மீன்கள்

மீன்கள் பெரும்பாலும் உணவு, முட்டையிட மற்றும் மீன் குஞ்சுகள் வளர இடம் மாற்றம் செய்யும். மீன் கூட்டங்க்ள எப்பொழுதும் இந்த மூன்று தேவைக்காக மட்டும் இடம் மாற்றிக்கொள்ளும். இந்த மூன்று தேவைகளை மூன்று திசைகளில் அமைத்துக் கொள்ளும். உதாரணத்திற்கு தென் திசையில் முட்டையிட்டால் வடக்கு திசையில் குஞ்சுகளை வளர்க்கும் இதற்கு உணவு முக்கோணத்தீவில் அமைத்துக்கொள்ளும். உணவுத் தேடும் மீன்களுக்கு இந்த முக்கோன பயணம் மிகவும் முக்கியம் ஏனென்றால் அதற்கே அதனுடைய குஞ்சுகளை அடையாளம் தெரியாமல் உண்ணுவிடும்.

கேப்லின் ஒருவகை உணவுத் தேடும் மீன் வகை, இது ஸ்மெல்ட் குடும்பத்தை சாரந்தது அட்லான்டிக் மற்றும் ஆர்டிக் கடலில் காணப்படும். கோடையில் உணவு உண்ண பணிபகுதிக்கு செல்லும் மிதவை உணவுகளை கூட்டமாக தேடிச் செல்லும். செப்டம்பர் - நவம்பர் வரை உணவை தேடும். டிசம்பர் - ஜனவரியில் முட்டையிடும். அதன்பின் கூட்டமாக குஞ்சுகளை இடம்மாற்றம் செய்யும். கேப்லின், உணவை தேடும் போது பச்சை நிறமாக தோற்றம் தரும். இனப்பெருக்கம் செய்யும் போது சிவப்பு நிறத்திலும் மற்றும் திரும்பச்செல்லும் போது நீல நிறத்தில் தோற்றும் அழிக்கும்.

அதிகளவில் இடம்பெயர்க்கும் இனங்கள்

அதிகளவில் இடம்பெயர்க்கும் இனங்கள், கடல் சட்டத்தின் ஐக்கிய தேசிய கூட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள இனங்கள்: சூரைமீன் இனங்கள், வாவல் / வவ்வல் மீன், மார்லின், மயில்மீன், ஸ்பார்ட் மீன் மற்றும் டால்பின் இனங்களாகும். இந்த வகையான மீன்கள் நெடுந்தூரம் பயணம் செய்யும். மீன்கள் 200 மயில் தூரத்திற்குள்ளும் அல்லது தூரத்திற்கு வெளியவும் பயணம் செய்யும். மிதவை இனங்கள் பெரும்பாலும் கடற்கரை பகுதியில் பயணம் செய்யும்

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/fish-migration

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014