மீன் வளம் :: மீன்பிடிப்பு முறைகள்

 

மீன்பிடிப்பு முறைகள்

கழி அல்லது தூண்டில் மீன்பிடிப்பில் முக்கயிமானது உயிருடன் பொறி வைத்தல். இது ஒரு முக்கியமான காரணியாக மீன்பிடிப்பு முறையில் உள்ளது. இரைமீன் தெளிக்க மற்றும் மீன்களை கவர உயிருடன் மீன் பொறி தேவைப்படுகிறது. நீரடித்திட்டு மற்றும் உப்பு நீர்த்தேக்கங்களில் மீன்களை பிடிக்க கப்பலில் குறிப்பிட்ட இடத்தில் மீன் பொறிகளை வைத்திருப்பார்கள் மீன்களை பிடிக்கும் போது மட்டும் எடுத்து பயன்படுத்துவார்கள். உயிருள்ள பொறிகள் 21 இனங்களில் உள்ளது. இதில் 12 இனங்கலை மட்டும் எப்பொழுதும் மீன்பிடிக்க பயன்படுத்துவார்கள். ஸ்பார்டெல்லாயிட்ஸ் டெலிகேட்டுலஸ், ஸ்.ஜபோனிகஸ், அப்போகான் சங்கின்சஸ், அ.சவர்ன்சிஸ் மற்றும் க்ரோமிஸ் டெமாடென்சிஸ் ஆகியவை சில மீன் பொறி இனங்களாகும்.

மீன்களை இறங்கும் முக்கியமான இடங்கள், அகட்டிர சுஹிலி, மினிகோய், பிட்ரா மற்றும் அன்டோர்த் ஆகிய தீவுகள் இயந்திரம் மூலம் மீன்பிடிப்பு கலன்களின் தொடக்கம் மற்றும் முன்னேற்றத்தினால் வருடத்திற்கு மீன் உற்பத்தி 10,000 டன் அதிகரித்துள்ளது. மற்ற இடங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அகட்டி தீவில் மட்டும் அதிகமாக மீன் உற்பத்தியாகிறது. இங்கு சூரைமீனின் உற்பத்தி மட்டும் 50,000 டன், இது மாலத்தீவு (148,000) மற்றும் இலங்கையின் மீன் (27,000 டன்) உற்பத்தியை விட குறைவானது.

அதிகபடியான மீன் இறங்கும் தீவு கே.பெலாமிஸ், கழி (97%) மற்றும் தூண்டில் (86%) மூலம் மீன்களை பிடிக்கின்றனர். 15 வருடங்களாக 300 படகுகளில் கழி அல்லது தூண்டில் இணைத்து மீன்களை பிடிக்கின்றனர். இந்த வகை படகுகள் 25 முதல் 35 அடி உள்ளவை. ஒன்று அல்லது இரண்டு முறை சென்று மீன்களை பிடிக்கலாம்.
அதிக கொள்ளளவுடைய பெரிய படகுகளை உப்புநீர்த்தேக்கத்தில் பயன்படுத்த முடியாது. 2002ல் மீன்களைக் கவரும் சாதனங்கள் வெளியிடப்பட்டது உப்புநீருக்கு ஏற்றவாரு இதன் மூலம் அதிக அளவில் சூரை மீன்கள் பிடிப்பட்டன.

ஆதாரம்: மீன்வளம் மற்றும் கடல் வளக்கையேடு 2006.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014