மீன் வளம் :: மீன்களீன் வகைகள்
மீன்களீன் வகைகள்

மீன் வளத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
1. துடுப்பு மீன் வளம்.
2. துடுப்பில்லாத மீன் வளம்.

துடுப்புடைய மீன் வளர்ப்பில் இயற்கை மீன்களும், துடுப்பில்லாத மீன் வளர்ப்பில் இயற்கை மீன்கள் அல்லாத மீன் வகைகளான, இறால், நண்டு, சிங்கிறால், ஆளி, கடலட்டை, தவளை, கடற்பாசி ஆகியவை அடங்கும்.

மேலும் துடுப்புடைய மீன் வளர்ப்பில் இரண்டு வகை உண்டு அவை
1.பிடிப்பு மீன் வளம்
2.வளர்ப்பு மீன் வளம்

பிடிப்பு மீன் வளர்ப்பில் மீன்குஞ்சுகளை சேகரிக்காமல் அனைத்து மீன்களையும் பிடித்துவிடுவார்கள். கடல், ஆறு, நீர்தேக்கம் ஆகிய இடங்களில் இருந்து மீன் இனங்களை கொண்டு வந்து வளர்ப்பார்கள் பிடிப்பு மீன் வளர்ப்பில், ஒரடைக்குஞ்சுகள், இளம் குஞ்சுகள் என அனைத்து மீன்களையும் பிடிப்பதினால் மீன் உற்பத்தி மிகவும் குறைகிறது. இதனால் மீனிருப்புகளும் இல்லாமல் அழிந்துவருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் காரணிகளாளும் மீன் உற்பத்தி குறைகிறது. மீன்பிடிப்பில் தேவையுள்ள மற்றும் தேவையில்லாத மீன்கள் போன்ற இரண்டு வகை மீன்களையும் பிடிக்கின்றன.

வளர்ப்பு மீன்வளம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்களை மட்டும் கவனமாக வளர்த்தல். இதனால் அதிக மகசூல் கிடைக்கும். இதில் மீன்குஞ்சுகளை குறிப்பிட்ட தண்ணீரில் பாதுக்காத்து, வளர்த்து அதை அறுவடை செய்கின்றனர்.

அதிக மகசூல் பெற தகுந்த உரம் மற்றும் ஏற்ற உணவு கலந்த குளத்தில் மட்டும் மீன்களை வளர்க்க வேண்டும். வளர்ப்பு மீன் வளத்தில் தக்க பாதுகாப்பு மற்றும் கவனிப்பு இருந்து வந்தால் பிடிப்பு மீன் வளர்ப்பை அதிகரிக்கலாம். நன்னீர், உவர் நீர் மற்றும் கடல் நீரில் மீன்களை வளர்க்கலாம். புதிய வளர்ப்பு முறைகள் மற்றும் விரிவாக்கத்தினால் கடல் உயிரினங்கள், இறால், நண்டு, மெல்லுடலிகள், தவளை, கடல் பாசி ஆகிய அனைத்தும் வளர்ப்பு மீன் வளத்தில் அதிகரிக்கிறது. இதனால் கடல் உயிரினங்கள் அதிக உற்பத்தியாகிறது எனவே வளர்ப்பு மீன் வளம் மாறி மீன்வளர்ப்பு என்று மாறிவிட்டது.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014