மீன் வளம் :: உவர்நீர் மீன் வளர்ப்பு
உவர்நீர் மீன் வளம்

நம் நாட்டில் உவர் நீரில் அதிகமாக இறால் உற்பத்தியாகிறது. 1.23 கோடி ஹெக்டர் கடலோர மீன் வளர்ப்பிற்கு ஏற்றது. இதில் 80% பாரம்பரியமாக இறால் வளர்க்கின்றனர். தமிழ்நாடு மற்றம் ஆந்திராவில் வணிகரீதியாக இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. வணிக இறால் வளர்ப்பு இந்தியாவில் பழமைவாய்ந்தது. தென்-கிழக்கு ஆசிய நாடுகளின் தொழில்நுட்பங்களை வைத்து இந்தியாவில் இறால் உற்பத்தி மற்றும் பண்ணை வளர்ச்சிகளை செய்கின்றனர் .

உவர்
நீரின் உர மேலாண்மை

உவர் நீர் மீன் வளத்தில் உப்புத்தன்மையை தவிர, நீர் மற்றும் மண்ணின் தன்மைகள் நன்னீர் மீன் வளத்தை போன்றே இருக்கும். உப்புத்தன்மை என்பது, நீர் அளவில் கரையாமல் உள்ள உப்பாகும். இது கிராம்/கிலோகிராம் நீரினால் குறிப்பிடப்படும். பொதுவாக உவர் குளத்தில் 0.5% - 30% உப்புத்தன்மை இருக்கும். இந்த உப்புத்தன்மை குளத்திலிருந்து கடல் தூரம் மற்றும் பருவகாலத்திற்கு தகுந்தவாறு இருக்கும்.

உப்புத்தன்மைக்கு ஏற்றவாறு தாவர மற்றும் விலங்கினங்கள் மாறுபடும். வினையியல் முறையினால் உப்புத்தன்மையில் உள்ள உணவை மாற்றி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது.பெரும்பாலும் உவர் நீர் மீன் இனங்கள் இயற்கையிலே அதிக உப்பைத் தாங்கக்கூடிய திறன் உள்ளவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால் அதிகமாக உவர் நீரில் வளரக்கூடியது. உலகளாவிய சந்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது அதிக உப்பைத் தாங்கக்கூடியதாக இருந்தாலும் அதிகமாக இறப்புகள் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும். அதாவது உப்புத்தன்மை 10% குறைவாக இருந்தால் 15-30% உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான் நன்றாக வளரும். இது குறைவான உப்புத்தன்மையிலும் வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

நன்னீரைவிட உவர்நீரில்தான் அதிகமாக மீன்களை வளர்க்கின்றார்கள், ஆனால் உவர்நீர் உற்பத்தியைவிட நன்னீரின் உற்பத்திதான் அதிகம். இதற்கு முக்கிய காரணம் மீனுக்கு தேவையான உணவு, உயிரினங்கள் இல்லாததே ஆகும். ஆதலால் நிறைய உரங்கள் மற்றும் எருக்கள் இட வேண்டும். உவர்நீர், ஊனுண்ணிகளற்ற மீன்கள் மற்றும் இறால்களுக்கு கடலடி பாசி அடிப்படை உணவாகும். இந்த பாசி மணல் மேல் அல்லது கடலடியில் இருக்கும். இது தேவையான இரும்புச்சத்துக்களை அடிமட்ட மண்ணிலிருந்து எடுத்துத்தரும். உவர்நீர் உரமிடுதல் முற்றிலும் மற்ற மீன் வளத்தைவிட வேறுபட்டது. உவர்நீர் மீன் வளத்தில் நீர் உப்புத்தன்மை நிலைக்கேற்ப ஊட்டச்சத்து கிடைக்கும்.

(ஆதாரம்: மீன் மற்றம் கடல்வள கையேடு - 2006.)
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014